பின்பற்றுபவர்கள்

28 ஜூலை, 2009

வீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !

சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.

இதனால் எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் வீரமணி.


இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:

கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுளளார் நீதிபதி.

நன்றி: தட்ஸ் தமிழ்

***

பெரியாரின் தொண்டராக இல்லாமல் ஒரு நீதிமன்றத்தின் நீதியரசராக அமர்ந்திருக்கும் நீதியரசருக்கு பெரியாரின் கருத்துக்கள் முடக்கப்படாமல் அனைவரையும் சென்று சேர்வதின் தேவையும் பலனும் தெரிந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்தை நடத்தி வரும் திரு வீரமணி ஐயாவுக்கு அது தெரியவில்லை. பெரியாரின் எழுத்துக்களை காப்புரிமை என்ற பெயரில் பூட்டி வைப்பதால் யாருக்கு பயன் ? பெரியார் திராவிடக் கழகத்தினர் பெரியாரை இழிவு படுத்துவதற்காக பெரியாரின் கருத்துகளை வெளி இடவில்லை. பிறகு ஏன் திரு வீரமணி ஐயா ஏகபோக உரிமை தமக்கே என்று கேட்க வேண்டும் ? பெரியாரின் எழுத்துகளை விற்பனை யாக்குவதைவிட, உரிமை கோருவதைவிட அதை பரவலாக்குவதன் தேவையை உணராமல் தடுக்கும் அவரது பகுத்தறிவு எத்தன்மையது ?

நீதிபதியின் தீர்ப்பை உண்மையான பெரியார் தொண்டர்கள் வரவேற்பார்கள்.

***

இதையெல்லாம் விட்டுவிட்டு எப்போதோ அறுந்து போன அனுமார் வாலையும், எங்கேயோ உள்ள செனகல் பற்றியும் எழுதும், தமிழ் ஓவியா ஐயா அவர்களுக்கு, 'தலைமையை கேள்வி கேட்காமல் தலைமைக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்பவர்களின் பெயர்கள் அன்புத் "தொண்டர்கள்" இல்லை, அடகு வைக்கப்பட்ட அடிமைகள். துடிப்பான உங்கள் பணியும், பெரியார் பற்றும் உங்களை பெரியார் தொண்டராக நினைக்கும் படி இருக்க வேண்டும் என்றே வாழ்த்துகிறேன்.

47 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மந்திரம் சொல்லுரத்துக்கு குருக்கள் ஐயா(அய்யா) இருக்குற மாதிரி...!

பெரியார் கொள்கைகளை எல்லோரும் பரப்பமுடியுமா?

அதத யார் யார் செய்யனும்னு சொல்லப்பட்டுருக்கோ அவங்கதான் செய்யனும்.

நான் சொன்னது…

அருமை .......இரண்டுபக்கமும் யோசிக்க தெரியாத இவர்கள் (?)பகுத்தறிவாளர்கள் தான்....

ttpian சொன்னது…

பெரியார் மடாலயம்:வீரமணி சாமிகள்:
சிறப்பு பரிகார பூசை:
பெரிய குருக்கல்:மஞ்ஜல் துண்டு:
சிஷ்யன்:வீரமணி.
பக்தகேடிகல் அனைவரும் வருக!

Unknown சொன்னது…

சும்மா இருமய்யா... தமிழ் ஓவியாவின் தமிழினத் தலைவர் (அதாங்க கி. வீரமணி) கோச்சுக்கப் போறார்... பெரியார் கொள்கைகளுக்கு தான் தான் உரிமையாளர்னு இந்தாள் சொன்னது இன்னிக்குதான் எனக்கு தெரியவருதுங்க... அதுக்கு நன்றிங்க

Chellamuthu Kuppusamy சொன்னது…

அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்.

நையாண்டி நைனா சொன்னது…

அட விடுங்கண்ணே.... அவங்களை...
நானு இருபத்தி எட்டு வயசிலேயே பெரியாரை பற்றி தெரிஞ்சிகிட்டேன். எல்லாம் அவர்களின் சேவை தான். நீங்க தடுக்காதீங்க, அவங்க கைலே கொடுத்தா எதிர் வரும் சமுதாயம் அறுபது வயசு என்று சொல்லப்படுகிற பிள்ளை பிராயத்திலேயே தெரிய வைப்பாங்க.

வாழ்க அவர்கள் சேவை.

வால்பையன் சொன்னது…

பதிவுக்கு ஒரு சபாஷ்!

மணிகண்டன் சொன்னது…

கோவி, அவங்க தரப்பு நியாயம் பலமுறை எழுதிட்டாங்க. சொல்லிட்டாங்க. அப்படி இருக்கும் பொது மறுபடியும் அதே கேள்வி தான் கேட்டு இருக்கீங்க ? பெரியாரின் வார்த்தைகளை தொகுத்து அவரை பற்றி ஒரு மாற்று பிம்பம் கொண்டுவர முடியும் என்று தி க நம்புகிறார்கள். அதனாலயே தடைகள். (அவங்க வெர்ஷன் இது தான். தமிழ் ஓவியா பதிவுகளிலும் இருக்கு)

வால்பையன் சொன்னது…

//பெரியாரின் வார்த்தைகளை தொகுத்து அவரை பற்றி ஒரு மாற்று பிம்பம் கொண்டுவர முடியும் என்று தி க நம்புகிறார்கள். //

உள்ள நடக்குற கோஷ்டி தகராறுக்கு இப்படி ஒரு சாக்கா!?

Suresh Kumar சொன்னது…

பெரியாரின் சொத்துக்களை உரிமை கொண்டாடி சுக போகம் அன்பவித்து வருகிற வீர மணிக்கு வார்த்தையை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் .

தமிழ் ஓவியா இடைக்கால தடை விதித்த போது வரவேற்று எழுதுதினார்கள்

அப்பாவி முரு சொன்னது…

கொஞ்சம் அவகாசம் குடுங்க...


கூட்டத்தோட உக்காந்து அறிக்கை தயாரிக்கணுமில்ல.

அப்புறம் அதை வலையேத்தி, திரட்டிகளில் இணைச்ச பின் வந்து பதில் சொல்வார் தமிழ் ஓவியா!!

அப்பாவி முரு சொன்னது…

பெரியாரின் எழுத்துகளுக்கு நீதிமன்றம் விடுதலை கொடுத்துவிட்டது. பெரியாரின் படங்கள் ஏதும் காப்புரிமையில் சிக்கியுள்ளதா?

(கோவியார் கூட பெரியாரின் படத்தை பயன்படுத்தியுள்ளார், காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டதா? என தமிழ் ஓவியாவிடம் தெரிந்து கொள்ளவும்)

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
மந்திரம் சொல்லுரத்துக்கு குருக்கள் ஐயா(அய்யா) இருக்குற மாதிரி...!

பெரியார் கொள்கைகளை எல்லோரும் பரப்பமுடியுமா?

அதத யார் யார் செய்யனும்னு சொல்லப்பட்டுருக்கோ அவங்கதான் செய்யனும்.
//

உள்குத்துப்பாங்க உடம்பு முழுவதும் குத்தமுடியும்னு தெரியுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிறுக்கன் said...
அருமை .......இரண்டுபக்கமும் யோசிக்க தெரியாத இவர்கள் (?)பகுத்தறிவாளர்கள் தான்....

11:16 AM, July 28, 2009
//

நன்றிங்கண்ணா !

நிகழ்காலத்தில்... சொன்னது…

மனிதன் புகழுக்கும், அதிகாரத்திற்கும் அடிமை,

வீரமணி இதற்கு விதிவிலக்கு அல்ல

கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம்
புகழைப் பெற்றுவிட்டால் தன் நிலை??

தற்போதய அதிகாரம்..???

இந்த பயம்தான்..!!!

இதற்கு முன்னர் பெரியாராவது..வெங்காயமாவது:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ttpian said...
பெரியார் மடாலயம்:வீரமணி சாமிகள்:
சிறப்பு பரிகார பூசை:
பெரிய குருக்கல்:மஞ்ஜல் துண்டு:
சிஷ்யன்:வீரமணி.
பக்தகேடிகல் அனைவரும் வருக!
//

தீர்த்த யாத்திரை சீசன் எதும் உண்டா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கீத் குமாரசாமி said...
சும்மா இருமய்யா... தமிழ் ஓவியாவின் தமிழினத் தலைவர் (அதாங்க கி. வீரமணி) கோச்சுக்கப் போறார்... பெரியார் கொள்கைகளுக்கு தான் தான் உரிமையாளர்னு இந்தாள் சொன்னது இன்னிக்குதான் எனக்கு தெரியவருதுங்க... அதுக்கு நன்றிங்க

11:57 AM, July 28, 2009
//

நன்றிங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//Chellamuthu Kuppusamy said...
அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்.

12:08 PM, July 28, 2009
//

பெரியார் ட்ரஸ்ட் மட்டும் விட்டுடலாம்னு சொல்றிங்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அட விடுங்கண்ணே.... அவங்களை...
நானு இருபத்தி எட்டு வயசிலேயே பெரியாரை பற்றி தெரிஞ்சிகிட்டேன். எல்லாம் அவர்களின் சேவை தான். நீங்க தடுக்காதீங்க, அவங்க கைலே கொடுத்தா எதிர் வரும் சமுதாயம் அறுபது வயசு என்று சொல்லப்படுகிற பிள்ளை பிராயத்திலேயே தெரிய வைப்பாங்க.

வாழ்க அவர்கள் சேவை.

1:18 PM, July 28, 2009
//

தமிழன் ஒருவன் சாகும் முன் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
பதிவுக்கு ஒரு சபாஷ்!

2:42 PM, July 28, 2009
//

பின்னூட்டத்திற்கு ஒரு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவி, அவங்க தரப்பு நியாயம் பலமுறை எழுதிட்டாங்க. சொல்லிட்டாங்க. அப்படி இருக்கும் பொது மறுபடியும் அதே கேள்வி தான் கேட்டு இருக்கீங்க ? பெரியாரின் வார்த்தைகளை தொகுத்து அவரை பற்றி ஒரு மாற்று பிம்பம் கொண்டுவர முடியும் என்று தி க நம்புகிறார்கள். அதனாலயே தடைகள். (அவங்க வெர்ஷன் இது தான். தமிழ் ஓவியா பதிவுகளிலும் இருக்கு)
//

தமிழ் ஓவியா ஐயா பதிவு போட்டாரா ? எப்போள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//பெரியாரின் வார்த்தைகளை தொகுத்து அவரை பற்றி ஒரு மாற்று பிம்பம் கொண்டுவர முடியும் என்று தி க நம்புகிறார்கள். //

உள்ள நடக்குற கோஷ்டி தகராறுக்கு இப்படி ஒரு சாக்கா!?

3:23 PM, July 28, 2009
//

மணி வாலு வாதம் இங்கும் தொடரும்னு எதிர்பார்த்தேன் ரெண்டு பேரும் பிசியோ. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Suresh Kumar said...
பெரியாரின் சொத்துக்களை உரிமை கொண்டாடி சுக போகம் அன்பவித்து வருகிற வீர மணிக்கு வார்த்தையை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் .

தமிழ் ஓவியா இடைக்கால தடை விதித்த போது வரவேற்று எழுதுதினார்கள்
//

இப்ப நீதிமன்றத்தை விமர்சித்து எழுதுறாரான்னு பார்க்கனும் !:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
கொஞ்சம் அவகாசம் குடுங்க...


கூட்டத்தோட உக்காந்து அறிக்கை தயாரிக்கணுமில்ல.

அப்புறம் அதை வலையேத்தி, திரட்டிகளில் இணைச்ச பின் வந்து பதில் சொல்வார் தமிழ் ஓவியா!!
//

:))

பார்பனர் என்று எழுதி இருந்தால் வருவார். இப்ப டீ குடிச்சிட்டு வருவார்னு நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
பெரியாரின் எழுத்துகளுக்கு நீதிமன்றம் விடுதலை கொடுத்துவிட்டது. பெரியாரின் படங்கள் ஏதும் காப்புரிமையில் சிக்கியுள்ளதா?

(கோவியார் கூட பெரியாரின் படத்தை பயன்படுத்தியுள்ளார், காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டதா? என தமிழ் ஓவியாவிடம் தெரிந்து கொள்ளவும்)
//

என்ன இப்படி பயமுறுத்தி வைக்கிறிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
மனிதன் புகழுக்கும், அதிகாரத்திற்கும் அடிமை,

வீரமணி இதற்கு விதிவிலக்கு அல்ல

கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம்
புகழைப் பெற்றுவிட்டால் தன் நிலை??

தற்போதய அதிகாரம்..???

இந்த பயம்தான்..!!!

இதற்கு முன்னர் பெரியாராவது..வெங்காயமாவது:))
//

உண்மையில் இயக்கம் பிரிந்தால் மகிழ்ச்சி தான் அடையுனும், ஏனென்றால் ஒற்றை தலைமை என்பது பல தலைமை என்றாகி அடிப்படைக் கொள்கைகள் இருந்து கொண்டே இருக்கும்.

மணிகண்டன் சொன்னது…

***
தமிழ் ஓவியா ஐயா பதிவு போட்டாரா ? எப்போள் ?
***

ஞாபகம் இல்ல கோவி. ஆனா, பெரியார் பாப்பான்னு சொன்னதை பார்ப்பனர்கள்ன்னு எழுதிடுவாங்க. அதே மாதிரி, அவர் சொன்ன பல வார்த்தைகளை மாடரேட் பண்ணுவாங்கன்னு எழுதி இருந்ததை தமிழ் ப்ளாக்ல தான் படிச்சேன்.

thiru சொன்னது…

கோவி,

அனைவரும் வரவேற்கும் தீர்ப்பு இது. செல்லமுத்து குப்புசாமி குறிப்பிட்டுள்ளதைப் போல பெரியாரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். 'பெரியாரின் விரல் பிடித்து வந்தவர்கள்' செய்வார்களா?

தமிழ் ஓவியா சொன்னது…

//வீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !//

என்ற தலைப்பில் உள்ள பதிவைப் படித்தேன். பின்னூட்டங்களையும் படித்தேன் கோவி.கண்ணன் அய்யா.

நீங்கள் கேட்ட விளக்கத்திற்கும் ,பின்னூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கும் ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப்பூவில் விடையளித்துள்ளேன். அதற்கான சுட்டிகளை கீழே தந்துள்ளேன். நேரம் இருப்பின் பொறுமையாகப் படித்துப் பாருங்கள்

http://thamizhoviya.blogspot.com/2008/10/blog-post_06.html

http://thamizhoviya.blogspot.com/2008/10/2.html

http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_29.html

இந்தப் பதிவுகளில் நீங்கள் கூட பின்னூட்டம் அளித்துள்ளீர்கள்.

படியுங்கள் உண்மை புரியும்.

மேலும் கீழே ஒரு சுட்டியின் இணைப்பை தந்துள்ளேன்.


http://thoughtsintamil.blogspot.com/2009/07/blog-post_28.html

இதையும் படியுங்கள். மேலும் உண்மை புரியும்.

-----------விவாதிப்போம்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல தேவையான பதிவு.

திரு வீரமணி என்ன செய்கிறார் பார்ப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழ் ஓவியா ஐயா,

வழக்கு வாய்தாவெல்லாம் இருக்கட்டும். பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடமை ஆக்க வீரமணி ஐயா இதுவரை முன்மொழியவில்லை ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா


//வீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !//

என்ற தலைப்பில் உள்ள பதிவைப் படித்தேன். பின்னூட்டங்களையும் படித்தேன் கோவி.கண்ணன் அய்யா.//

தமிழ் ஓவியா ஐயா தற்போதைக்கு நன்றி, அதையெல்லாம் படித்துப் பார்க்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

பெரியாரின் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை

குப்பன்.யாஹூ சொன்னது…

actually instead of veeramani, if Vaiko or suba veerapandian be the leader of DK, DK would have grown much better.

அறிவிலி சொன்னது…

//குப்பன்_யாஹூ


actually instead of veeramani, if Vaiko or suba veerapandian be the leader of DK, DK would have grown much better.//

நல்ல வேளை...அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்காகவே வீரமணியை பாராட்டலாம்.

தமிழ் ஓவியா சொன்னது…

//தமிழ் ஓவியா ஐயா,

வழக்கு வாய்தாவெல்லாம் இருக்கட்டும். பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடமை ஆக்க வீரமணி ஐயா இதுவரை முன்மொழியவில்லை ?//

இது குறித்தும் ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப்பதிவில் விவாதிப்பட்டுள்ளது. அதற்குறிய சுட்டி இதோ:-

http://thamizhoviya.blogspot.com/2009/03/blog-post_3169.html



http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_5211.html

Unknown சொன்னது…

//நீதிபதியின் தீர்ப்பை உண்மையான பெரியார் தொண்டர்கள் வரவேற்பார்கள்.//

கண்டிப்பாக

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

அய்யா! தவறுக்கு மன்னிக்கவும் தாங்கள் பிரபல பதிவராக இருப்பதால்தான் என்னுடைய கருத்தினை பதிந்தேன்..நாலு பேருக்கு சொரணை வரவேண்டும் என்பதற்காக.. நான் அத்தனை பிரபல பதிவர் இல்லை.. இதை ஒப்புகொள்ள எனக்கு தயக்கமில்லை.. நான் இணைத்தால் தமிழ் மணத்தில் வருவதில்லை.. என்னுடைய தளம்

http://siruthai.wordpress.com

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///பெரியாரின் எழுத்துகளை விற்பனை யாக்குவதைவிட, உரிமை கோருவதைவிட அதை பரவலாக்குவதன் தேவையை உணராமல் தடுக்கும் அவரது பகுத்தறிவு எத்தன்மையது ?///

நல்ல கேள்வி

அருண்மொழிவர்மன் சொன்னது…

வணக்கம் கோவி

//பெரியாரின் தொண்டராக இல்லாமல் ஒரு நீதிமன்றத்தின் நீதியரசராக அமர்ந்திருக்கும் நீதியரசருக்கு பெரியாரின் கருத்துக்கள் முடக்கப்படாமல் அனைவரையும் சென்று சேர்வதின் தேவையும் பலனும் தெரிந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்தை நடத்தி வரும் திரு வீரமணி ஐயாவுக்கு அது தெரியவில்லை//

வீரமணியும் அவர் சார்ந்த திராவிட கழகமும் எப்போதோ பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்துவிட்டு இப்போது அந்த லேபிளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு பேருக்கும் ஆதரவாக எடுத்த நிலைப்பாடுகளில் இருந்தே இதை அறியமுடியும்... இந்த தீர்ப்பு உண்மையான, பெரியாரை ஒரு சிந்தனையாளாராக போற்றும் ஒவ்வொருவருக்கும் பெரு மகிழ்வைக் கொடுக்கும்.

பெரியாரின் கொள்கைகளை திரித்து விடுவார்கள் என்றே பிறரை நூல் வெளியட தாம் அனுமதிக்கவில்லை என்று ஒரு கருத்து முன்னர் இவர்கள் சார்பில் கூறப்பட்டது. அது உண்மையானல், இவர்கள் இன்றூ பெரியாரின் பெயரால் செய்யும், அனுமதிக்கும் மூடத்தனங்களை என்ன சொல்வது???

Thamizhan சொன்னது…

பெரியார் கருத்துக்களைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.
உண்மையிலேயே இதில் எத்துனை பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ,அவர்களது பதிப்புக்களைப் பற்றியோ தெரியும்.திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது,நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படி செயல் பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா?
இருட்டடிக்கப் பட்டப் பெரியாருக்கு,
அவரது நன்றி எதிர் பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து,பட்டங்கள் பெற்று பயன் பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துக்கள் அருமை,அருமை.
இருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்கட்டளை போல வளர்ந்து,கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.
வரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.
ஆசிரியர் வீரமணி மேல் கல் வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.
கடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்படிப் பெற்றார்கள்,எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடு பட்டவர்களின் கருத்துக்கள்,குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.
பெரும் பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிடமிருந்து கிடைக்கின்றன,நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
பெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
பெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.
//

போன தலைமுறைக்குத்தான் தந்தை பெரியார், தற்போதைய தலைமுறைக்கு தாத்தா பெரியார். தாத்தா சொத்து பேரனுக்கு அது யார் வைத்திருந்தாலும். அதனால் திருட்டுதனம் அது இதுன்னு கொச்சைப் படுத்துவது தனக்கு தானே எச்சில் உமிழ்ந்து கொள்வது போல். திரித்துவிடுவார்கள் என்று பூட்டி வைப்பதும் யாருக்கும் பயன் தராது. பார்பனர்கள் கோவில் சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்று குற்றம் சொல்லும் நாம், பெரியாரின் எழுத்துக்கு ஏகபோக உரிமை இருப்பதாகக் கூறுவது முரண் நகையாக இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.
வரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.
//

:)

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. இது எப்படி இருக்கு என்றால் அரசு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நடக்குது, அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு எனவே, மக்கள் அனைவரும் அரசு ஊழல் அற்ற அரசு என்று நம்பவேண்டும் என்று சொல்வதைப் போல் இருக்கு.

அவரே தலைமையில் இருக்கிறார், விடுதலை இதழ் முதல் அனைத்து டிரஸ்டுகளும் அவருக்கு கீழ் இயங்குகிறது, அதில் தகவல் வெளி இடுவது செயற்கரிய செயலா ?

வால்பையன் சொன்னது…

மிஸ்டர் தமிழன்!

நசுங்கி போன சொம்புக்கே இவ்வளவு பாதுகாப்பு தர்றிங்க!

நீங்க தி.மு.கவுல சேர்ந்தா நல்ல பதவி கிடைக்கும்!

ulagaperiyar சொன்னது…

விவரமா? விஷமமா?

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நூல்கள் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதை 'கண்ணன்'கள் கண்கொண்டு பார்க்க வேண்டாமா? புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றுவிடாமல் பங்கேற்றும், தாங்களே புத்தகக் கண்காட்சிகள் நடத்தியும், பேருந்துகளில் நூல்களை ஏற்றிக் கொண்டு நகரம், நகரமாக, ஒன்றியம், ஒன்றியமாக, கிராமம், கிராமமாகப் போய் ஆண்டு முழுதும் விற்பனை செய்து வருவதைக் காணாமல் கண் இருந்தும் குருடராகக் 'கண்ணன்'கள் இருக்கலாமா? ஓராண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தந்தை பெரியாரின் நூல்களை விற்று வருவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதாவது 'கண்ணன்'களுக்குத் தெரியுமா?

இரண்டு ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மிகவும் மலிவாக நூல்களை வெளியிட்டு, சாமான்ய மக்களும் வாங்கிப் பயன் அடையுமாறு பாடுபடுவது பெரியார் அறக்கட்டளை நிறுவனம் என்பதாவது தெரியுமா?

இந்த மாதத்தில் நெய்வேலி புத்தகச் சந்தையில் சிறந்த பதிப்பக விருது நீதியரசர் வெங்கட்ராமன் அளித்தார் என்பதாவது தெரியுமா?

குற்றம் காணும் முன், குறைகூறும் முன், அனைத்தையும் அறிந்து செய்வது நல்லது. 'அரங்கின்றி வட்டாடிய' வகையில் இருக்கக் கூடாது. "கல்லாதான் சொற்காமுறுதல்" எப்படிப்பட்டது என்பதை வள்ளுவர் தெரிவித்திருக்கிறார்.

பெரியாரின் கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என போதி மரத்தடியில் அமர்ந்து ஞானோதயம் பெற்றுக் கூற வேண்டியதேயில்லை. அப்பணி ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவரையும் சென்றடையச் செய்யப் போகிறேன் எனக் கூறிக்கொண்டு அய்யாயிரம் ரூபாயை எனக்கு அனுப்புங்கள் எனக் கடிதம் எழுதித் தூண்டுவது, அதற்கான வழி என எப்படிக் 'கண்ணன்'களால் பார்க்க முடிகிறது?

ulagaperiyar சொன்னது…

'கண்ணன்'களால் சிலாகித்துப் பேசப்படும் 'புதிய வெளியீட்டாளர்கள்' தயாரித்திருப்பதாகச் சொல்லப்படும் நூலுக்கே, அடிப்படையும், ஆதாரமும் ஆனவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட குறுந்தகடுகளே! அதை அப்படியே படி எடுத்துப் பரப்பும் நபர்கள், தாங்கள் ஏதோ "உ.வே.சா.வேலை" செய்ததைப் போலக் காட்டிக் கொண்டால், 'கண்ணன்'கள் நம்பலாம். தமிழ்நாட்டில் கண் திறந்திருப்பவர்கள் நம்பமாட்டார்கள்.
ஏடுகள் மட்டுமல்ல, எல்லாருமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிறுவனத்திற்காக நிறுவனமே வழக்குப் போட முடியாது. பொறுப்பாளர் வழக்குப் போடவேண்டும். அப்படி வழக்கு தாக்கல் செய்த நிறுவனத்தின் செயலாளர், கி.வீரமணி அவர்கள். நிறுவனத்தையும் அதன் செயலையும், வருவாயையும், வழக்கையும் கவனிக்க வேண்டும் என்பதற்காகவென்றே நியமிக்கப்பட்டிருக்கும் அதன் செயலாளர். ஆகவே, அவர் கையெழுத்துப் போட்டு வழக்கு மனுதாக்கல் செய்திருக்கிறார்.

இந்த உண்மை 'விவரமானவர்களுக்கு'த் தெரியும். ஆனால் 'விவகாரம்' செய்பவர்களக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தும் மறைக்கிறார்கள். இதற்கென்ன காரணம்? வீரமணி என்பவர் மீதான காழ்ப்பும் கோபமும்தானே காரணம்?

ஏன் இந்தக் காழ்ப்பு? பெரியார் இயற்கையெய்திய போதே, இயக்கம் போய்விடும் என எதிர்பார்த்தார்கள்; விரும்பினார்கள். "இயக்கம் இருக்கும்; எப்போதும்போல் இயங்கும்" என்று பிரகடனப்படுத்தியதோடு, தந்தை பெரியாரை, அவர்தம் தத்துவங்களை, இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பரப்பிக் கொண்டிருக்கிற பணியைச் செய்வதால்தானே, அவரைப் பாதகர் என்கிறார்கள்?

பரப்பாமல் பாதுகாத்து வைக்கிறார் என்பது விவரம் தெரியாமல் அல்லது விஷம எண்ணத்தோடு சொல்லப்படுவது என்றே உறுதியாகிறது. இதில், நீங்கள் எந்தப் பக்கம் கண்ணன்? 'விவரம்' பக்கமா? 'விஷமம்' பக்கமா? 'விவரம்' என்றால் மன்னிக்கலாம் 'விஷமம்' என்றால்.....?

அப்படி, இப்படி, அப்பாவிபோல, அறியாமையை வெளிக்காட்டி எழுதி, வந்து 'சுயரூப'த்தைக் காட்டிவிட்டீர்களே, கண்ணன்? பகுத்தறிவையே பகுத்துப் பார்க்கத் துணிந்து விட்டீர்களே! பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே! நீங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு எதிரிகள் - அதனால் திரு.வீரமணியை வெறுப்பவர்கள்! அறிவு நாணயத்தோடு ஒத்துக்கொள்வீர்களா?

உண்மையையும் போலியையும் உலகம் புரிந்தே வைத்துள்ளது. காமாலைக் 'கண்ணன்'களுக்குத்தான் புரியவில்லை. "திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள்" தெரியுமா?

இடைக்காலத் தீர்ப்பு 24 மணிநேரத்தில் வேறு உரு எடுத்துள்ளது. அதற்குள்ளாகவே அல்ப சந்தோஷத்தில் அனந்த சயனம் செய்தவர்கள் 'அம்போ' ஆகிவிட்டார்கள். வழக்கும் முடியவில்லை, வாதமும் முடியவில்லை. முழுமையாக முடிந்த பின்னர் பேசலாம்.
அதற்குள்ளாகவே, பகுத்தறிவு, பரப்புரை, காப்பு; பூட்டு என்றெல்லாம் விமர்சனங்கள் வேண்டாமே! அதிலும் கடல் கடந்து இருந்து, கதையே தெரியாமல் எதையும் கூற வேண்டாமே! வெளி உலகமே தெரியாமல் வளர்ந்தவன், அரிச்சந்திர நாடகத்தின் மயான காண்ட நடிப்பைப் பார்த்துவிட்டு வெட்டியான் அரிச்சந்திரனைத் தாக்கிய கதையாகக் 'கண்ணன்கள்' இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறோம்!

எங்களைப் "பெரியாரின் முன் முட்டாள்கள்" எனக் கூறிக் கொள்வதைப் போலவே அவரின் இயக்கத்தில் எங்களை ஒப்படைத்துக் கொண்ட போர் வீரர்கள்! செயல் மறவர்கள்.

எங்களுக்கு எந்தப் பெயரைச் சூட்டினாலும் நாங்கள் மயிரளவுகூடக் கவலைப்பட மாட்டோம்!

http://ulagaperiyar.blogspot.com/2009/07/blog-post.html

அருண்சங்கர் சொன்னது…

இவனுகளுக்கெல்லாம் "ஐயா" ஒரு கேடா? வீரமணி ஒரு மஹா கொள்ளை கூடத்தின் தலைவன். இதைப்பற்றி பெயரில் மட்டும் தமிழை வைத்திருக்கும் தமிழ் ஓவியா விளக்க வேண்டுமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்