பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2009

சீனா விற்பனை செய்யும் திருநெல்வேலி அல்வா !

வேறு எதாவது ஊரில் அல்வா செய்து 'திருநெல்வேலி அல்வா ங்கிற பெயரில் விற்பது வேறு. ஆனால் அதை திருநெல்வேலியிலேயே விற்க முயற்சிக்க அங்கே ஏமாந்த சோனகிரிகள் இருக்கிறார்கள் என்று அறிந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ஆப்ரிக்க நாடுகளில் 'இந்திய தயாரிப்பு' என்ற வில்லைகளுடன் (லேபிள்) என்று தரமற்ற பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு மூக்குடைப்பட்ட சீனா, அதே போன்று 'மேட் இன் இந்தியா' என்ற வில்லைகளுடன் அழகு சாதனப்பொருள்களை சென்னைக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்து இருக்கிறதாம்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் எங்களுக்கு எல்லாப் பக்கமும் எரியுது, இந்தியா அமெரிக்க கைப்பாவையாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற கம்யூனிஸ்டுகள், சீனாவின் அத்துமீரல்களை இதுவரை ஒரு சிறிய அளவிலான கண்டன அறிக்கையின் வழி கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்டுகள் தேசிய வியாதிகளா ? சீனாவின் கைக்கூலிகளா ? தெரிஞ்சவங்க சொல்லுங்க. கேட்டுக் கொள்கிறேன்.

போகின்ற போக்கைப் பார்த்தால், அரசியல்வாதிகளின் கரை வேட்டிகள் கூட சீனாவில் இருந்து இறங்கும் போல இருக்கு. இது தொடர்பில் முன்பு எழுதியது.

கம்யூனிஸ்டுகள் கட்டிக் கொள்ளும் சீனக் கோவணம் !



படமும் செய்தியும் : கம்யூனிஸ்டின் மீது காழ்புணர்வு அற்ற, தேசிய நலம் விரும்பி :தினமலர்
(நன்றி)

5 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

நீங்க சொல்வது நம்ம மதுரை சீனா ஐய்யாவை இல்லையே???

அருண்மொழிவர்மன் சொன்னது…

உலகமயமாக்கலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சீனா செய்யும் அட்டூழியங்களில் சாதிக்கும் கள்ள மௌனம் நிச்சயம் விமர்ச்னத்துக்குரியது. உண்மையில் சீனா கம்யூனிசம் என்ற பெயரை ஒரு லேபிளாக மட்டும்தான் பாவிக்கின்றது. இதை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

அண்மையில் கனடாவில் ஒரு நிகழ்வொன்றில் உரையாற்றிய மார்க்ஸியவாதி ஒருவர் கூட இலங்கைப் பிரச்சனையில் இந்திய, அமெரிக்க நிலப்பாடுகள் பற்றி கடும் விமர்சனங்களை சொன்னபோதும், சீனா பற்றி ஒரு பேச்சுக்குக் கூட வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் சீனா இந்த விடயத்தில் வெளிப்படையாக இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்தது...

//போகின்ற போக்கைப் பார்த்தால், அரசியல்வாதிகளின் கரை வேட்டிகள் கூட சீனாவில் இருந்து இறங்கும் போல இருக்கு//

சென்ற கனேடிய தின கொண்டாட்டங்களின்போது சீனத் தயாரிப்பில் உருவான கனேடிய கொடிகள் பயன்படுத்தப்பட்டது பற்றி கனடாவில் கூட பெரும் விமர்சனங்கள் எழுந்தன....

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
நீங்க சொல்வது நம்ம மதுரை சீனா ஐய்யாவை இல்லையே???
//

உண்மையிலேயே நீங்கள் அப்பாவிதானா ?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழிவர்மன் said...
உலகமயமாக்கலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சீனா செய்யும் அட்டூழியங்களில் சாதிக்கும் கள்ள மௌனம் நிச்சயம் விமர்ச்னத்துக்குரியது. உண்மையில் சீனா கம்யூனிசம் என்ற பெயரை ஒரு லேபிளாக மட்டும்தான் பாவிக்கின்றது. இதை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.
//

அருண்மொழிவர்மன், தங்களின் சாட்டையடி பின்னூட்டத்திற்கு நன்றி.

அரசியல்வாதிகள், சார்புடையவர்கள் தன்னை நோக்கிய விமர்சனம் தவிர்த்து பொதுநல வாதிகளாக இருப்பார்கள் என்பது கம்யூனிசவாதிகளின் கள்ள மவுனத்தால் உண்மையாகிறது

ஊர்சுற்றி சொன்னது…

அடங்கொண்ணியான்....!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்