பின்பற்றுபவர்கள்

அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 நவம்பர், 2008

மும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்ளது.

CNN செய்தியின் படி, 30 நிமிடங்களுக்கு முன்பு மும்பையின் அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், பிணையாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தகவல் வந்திருக்கிறது.

தாஜ் ஹோட்டல் இன்னும் எரிந்து கொண்டு இருக்கிறது, தீயணைப்பு பணி நடந்துவருகிறது.

தீவிரவாதிகளின் கொடுஞ்செயலால் இறந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் (சுமார் 150 பேர்) ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையும் வேண்டும் என்று வேண்டுவோம், விரும்புவோம்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

******

தீவிரவாதிகள் முற்றிலும் துடைத்து ஒழிக்க பாகிஸ்தான் பகுதியாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்து, அந்த பகுதியை மீட்டெடுத்தால் தான் இந்தியர்கள் ஆறுதல் அடைவார்கள். இதுவே தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள தீவிரவாதத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும். இதைச் செய்ய துணியும் அரசை இந்தியர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

1 நவம்பர், 2007

தேவநேயப் பாவாணருக்கு மதுரையில் மணி மண்டபம் !

சிலருக்கு சிலர் பெயரை கேட்டால் சிலிர்க்கும், அது கடவுள், தனிமனித பெயர், தலைவர், நடிகர் பெயராகக் கூட இருக்கும், சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பெரிய நூலகத்தின் பெயர் என்று மட்டுமே தேவநேய பாவாணர் குறித்து அறிந்த நான் ஒரு மூன்று ஆண்டுகளாக ஓரளவுக்கு தேவநேய பாவாணர் எழுதிய தமிழார்ந்த ஆராய்ச்சிக் நூல்களையும், அவரைப்பற்றியும் படித்திருக்கிறேன். அதன் பிறகு எங்காவது பாவாணர் குறித்த செய்தியை படித்தாலே சிலிர்க்கிறது.

**********
தேவநேயப் பாவாணர் மணி மண்டபம்-கருணாநிதி திறந்து வைத்தார்
மதுரை: மதுரையில், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

தமிழுக்காகவே வாழ்ந்தவர் தேவநேய பாவாணர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையில் பிடிப்புடன் விளங்கியவர்.

அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடு நாள் கோரிக்கை. அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி, மதுரை அண்ணா நகர் சாத்தமங்கலத்தில், 80 சென்ட் பரப்பளவில், ரூ. 40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.

அதன்படி சாத்தமங்கலத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் எழிலுடன் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டப வளாகத்திற்குள் தேவநேயப் பாவாணரின் 8 அடி உயர வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தில் பாவாணரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள், புகைப்படங்கள், நூல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பாவாணர் சிலைக்கு மாலையும் அணிவித்தார்.

பின்னர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில், தமிழாக இனிக்குது இந்த மணி மண்டபம் என்று எழுதி கையெழுத்திட்டார்.

மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பரிபூரணத்திடம் கருணாநிதி வழங்கினார். மேலும் பரிபூரனத்திற்கு அரசு உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவையும் முதல்வர் வழங்கினார்.


படமும் செய்தியும் : தட்ஸ் தமிழ் - நன்றி

மணிமண்டபம் அமைத்து பாவாணர் பெருமை போற்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டுக்கள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்