பின்பற்றுபவர்கள்

மணவிலக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணவிலக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே, 2012

ஜைனப்புக்கு இறை அச்சம் இல்லையாம் !


மணவிலக்கு என்பது மனித உரிமை. மனித பண்பு நலன் போற்றப்படுகின்ற சமூகத்தில் அவற்றைக் காப்பதற்கு மணவிலக்குகள் இன்றியமையாதவை. மனித திருமண பந்தம் என்பது விரும்பிய வாழ்க்கை என்பதைவிட வெறுக்கத் தக்க வாழ்கை இல்லை என்ற அளவில் அந்த பந்தம் அறுபடாமல் தொடர்கிறது, மண வாழ்க்கை வெறுப்பாகவும், சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தொடரும் போது வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மணவாழ்க்கை கசப்பாக இருந்தாலும் அவை தொடருகின்றன. வாரிசுகளுக்காக சகித்துக் கொள்ளுதல் என்பதில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான், ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையும் இன்றியமையாதது என்பதில் வாரிசுகளின் நலன் இரண்டாம் இடத்திற்கு செல்லும் போது மணவிலக்குகள் நடைபெறுகின்றன. தனிமனித நலன் என்று பார்க்கும் போது இது தவறு இல்லை. பிரச்சனை முற்றும் போது பொறுக்கமுடியாமல் என்றோ ஒரு நாள் கொலை / தற்கொலை என்னும் போது பாதிக்கப்படாத வாரிசுகள் மணவிலக்கினால் பாதிக்கப்பட்டுவிடுவார்களா ? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் மணவிலக்கு பற்றிய முடிவின் போது வாரிசுகள் பற்றிய கேள்விகள் பின்னுக்கு தள்ளப்படும்.

நண்பர் சுவனப்பிரியன் 'விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்' என்று ஒரு பதிவை இட்டு அதில் இஸ்லாமிய நாடுகளின் பெயர்கள் இல்லை என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். முதலில் மணவிலக்கு செய்யப்படும் நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்பதை இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா என்றே தெரியவில்லை, இரண்டாவதாக மணவிலக்கு குறைவாக உள்ள நாடுகளில் மணவிலக்கு செய்துவிட்டு தனித்து வாழும் ஒரு சூழல் இருக்கிறதா என்று இவர் ஆராய்ந்து பார்த்தாரா என்றும் தெரியவில்லை, இவர் குறிப்பிடும் சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ஒரு பெண் தனித்து வாழவே முடியாத நிலையில் ஆணைச்சார்ந்து வாழும் வாழ்கை என்பதில் மணவிலக்குகள் நடைபெற சாத்தியமே இல்லை என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணிகள் இருக்க முடியும் கணவன் நான்கு திருமணம் செய்து கொண்டாலும் தலையிட முடியாத நிலைதான் முதல் மனைவியின் நிலை. இதில் அவள் எங்கிருந்து மணவிலக்கை நினைத்துப் பார்ப்பாள் ? பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?

கள்ளத் தொடர்புகள், நம்பிக்கை துரோகம், அடித்து துன்புறுத்தி (இஸ்லாம் கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று உரிமை வழங்கியுள்ளது, அந்த லேசாக என்பதைக் குறித்த அளவுகளையெல்லாம் பெண் பிள்ளைப் பெற்ற அப்பனைத் தான் கேட்கவேண்டும்) வைத்திருத்தல், கொலை, தற்கொலை இவற்றையெல்லாம் விட ஒத்துவரவில்லை என்றால் மணவிலக்கு பெற்று பிரிந்து போவதில் என்ன பெரிய தவறும், சமூகக் குற்றமும் இருக்க முடியும் ?

மணவிலக்கு என்பது சமூக சீர்கேடாகவும், மேற்கத்திய கலாச்சார நுழைவு என்று காட்டப்படுவதன் காரணம் என்ன ?

நடுத்தர வர்க்கம் என்னும் ஒரு போலி சமூகம் உருவாகாத காலத்தில் மணவிலக்குகள் மிகச் சாதாரணமானவையே, ஒரு ஆலமரத்தடியில் நாட்டமையின் தீர்ப்பாக 'வெட்டி விடுதல்' நடைபெறும். ஆண் மற்றும் பெண்ணுக்கு உழைப்பு இன்றியமையாததாக இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுதல் என்பது குடும்பம் என்னும் ஒரு அமைப்பில் இருவரும் வாழ்ந்து சந்ததிகள் பெருக்கிக் கொள்ளத்தான் என்பதன் புரிந்துணர்வு இருந்தது, ஒருவருக்கு ஒருவர் ஒத்துவரவில்லை என்றால் ஒரே நாளில் பிரிந்து போய்விடுவார்கள், அவர்களுக்கு மறுமணமோ, விரும்பியவருடன் வேறொரு வாழ்கையோ நடைபெற்று தான் வந்ததன. இன்றைக்கும் கிராமங்களில் இருந்து நீதிமன்ற வழக்காக மணவிலக்கு வழக்குகள் செல்வது கிடையாது. இன்றைக்கு நடுத்தரவர்கம் என்னும் போலி சமூக வர்க்கமும் உருவாகிய பிறகு மணவிலக்கு என்று பேசுவதே பாவம், கெடுதல், கலாச்சார சீர்கேடு என்பது போன்ற கருத்துகள் பரவலாகப்பட்டன. நடுத்தர வர்க்கத்து கனவுகள் தான் இன்றும் திரைபபட வடிவமாக முன்வைக்கபடுகின்றன, நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில், தனி மனித உரிமை என முன்னேறி மேல் தட்டு நிலையை அடையும் போராட்டம் நடந்தே வருகிறது. தனக்கும் கீழாக இருக்கும் கீழதட்டு மக்களை பின்பற்றி மணவிலக்கு செய்து கொள்கிறார்கள் என்று சொல்வது கூட தம்மை தாழ்வானதாக்கிவிடும் என்று கருதும் நடுத்தரவர்க்கம், அதனை ஞாயபடுத்தி அதே சமயத்தில் பட்சாதாபம் ஏற்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து தம் சமூகத்தைக் கெடுத்துவருவதாக புலம்பிவருகிறது. ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி அந்த சமூகத்திற்கு பிற சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்கிவிடும் அவற்றில் ஒன்று தான் ஒத்துவராத திருமண பந்தங்களை விலக்கிக் கொள்ளும் உரிமை.

மணவிலக்கிற்கும் இறை அச்சத்திற்கும் என்ன தொடர்ப்பு ? அடி உதை வாங்கிக் கொண்டு திருமண பந்தம் தொடரப்பட வேண்டும் என்பது தான் இறை அச்சங்கள் சொல்லும் தீர்ப்பா ? வஹாபிய விளம்பர விளம்பி திரு சுவனப்பிரியன் இவ்வாறு தான் கூறுகிறார். அதாவது இறை அச்சம் மிக்க இஸ்லாமியர்களிடமும் இஸ்லாமிய நாடுகளிலும் மணவிலக்கு குறைவாம் நல்ல வேளை இல்லவே இல்லை, இஸ்லாம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி என்று சொல்லாதவரை. இவர் வாதம் காலில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும் 'பீ' நாறாது, இருந்துவிட்டு போகட்டும். ஒருவேளை 'தலாக் தலாக் தலாக்' சொல்வது மணவிலக்கு ஆகாது என்று கருதுகிறாரோ.

இறை அச்சம் மணவிலக்கு வேண்டாம் என்று சொல்கிறதா ?

இஸ்லாமியர்களின் ஹதீது அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றும் அவர்களால் இஸ்லாமிய அன்னையர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜைனப்(ரலி), இவர் முகமதுவின் வளர்ப்பு மகன் ஜையதுவின்(ரலி) மனைவியாகவும் வாழ்ந்தார். பின்னர் மணவிலக்கு பெற்று முகமதுவிற்கே மனைவி ஆனார், அதை ஞாயப்படுத்த அல்லாவே தனிக் குரானெல்லாம் இறக்கி இருக்கிறார். அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.

பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும், 

Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes



என்னைப் பொருத்த அளவில் இந்தத் தகவல் மலேசியாவில் மனித உரிமைகளை மதிப்பதில் வளர்ச்சி கண்டுவருகிறது. குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பில் இருப்பதால் அவர்களால் பொறுத்தமற்ற மணவாழ்கையை உதறிவிட முடிகிறது என்று கருதுகிறேன். 

பின்குறிப்பு : இதை நான் மதவாதமாகவோ , மதம் சார்பிலோ, அல்லது குறிப்பிட்ட மதத்தை தாக்க வேண்டும் என்றோ எழுதவில்லை, அடிப்படை வாதிகள் சமூகக் கருத்தை திணிக்கும் போது அவற்றிற்கு பதில் சொல்வது 1400 பழமை வாத சிந்தனைகளை நீர்த்துப் போக வைக்கும் என்கிற நம்பிக்கையால் எழுதுகிறேன். எனது இடுகைகளில் கண்டிப்பாக புதிய சிந்தனைகளுக்கு ஓரிருவரிகளாக வாய்பளிக்கும், இதை எதோ சுவனபிரியனுக்கு எழுதிய எதிர்பதிவாக நினைக்க வேண்டாம். சுவனப்பிரியன்கள் போன்றோர் வலைப்பதிவுகள் எழுதாமலும் இருப்போர், அவர்களும் ஆதரங்கள் இன்றி விவாதிக்கும் போது இதை எடுத்துச் சொல்லுங்கள். 

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டால் மறுமணங்கள் எங்கு நிச்சயக்கப்படுகின்றன ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்