கோவியார் கூற்று !

மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு





முதல் சுற்றில் வாக்குகள் அளித்து கரையேற்றிவீட்டஅனைத்து பதிவுலக உறவுகளுக்கும் நன்றி, அடுத்தச் சுற்றிற்கும் உங்கள் பொன்னான வாக்குகளை,

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

என்ற இடுகைகளுக்கு பிடித்து இருந்தால் போடுங்கள் ! நன்றி !!

அக்கரைச் சீமை அழகினிலே !

Wednesday, July 01, 2009

இன்றைய நடுதர தமிழக மக்களுக்கு விமானப் பயணம், வெளி நாட்டுச் சுற்றுலா மிகப் பெரிய கனவு இல்லை. ஆண்டுக் கணக்கில் சேர்த்து வைத்து திட்டம் போட்டு செல்ல வேண்டிய நிலலயெல்லாம் இன்று இல்லை. நடுத்தர இல்லங்களின் வருமானம் 30
ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையில் இருப்பதால் அருகில் இருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலா சென்றுவருவது பற்றி மிகப் பெரிய திட்டம் போடத் தேவை இல்லை, விடுமுறைகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, குடி நுழைவு அனுமதி பெற்று, விமானப் பயணச் சீட்டு வாங்கிவிட்டால் போதும். சிங்கைக்கு நடுத்தர வருமான இல்லத்தினரின் சுற்றுலா வருகைகள் அண்மையில் மிகுந்திருப்பதை வைத்து இதனைச் சொல்கிறேன்.

இந்திய ஏற்றுமதி மிகாவிட்டாலும், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வெளி நாட்டு நிறுவனங்களினால் உற்பத்தி திறனும், வேலை வாய்ப்பும் மிகுந்து ஊதியமும் சிறு அளவிளேனும் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் நடுத்தர வருமான இல்லங்களின் ஆண்டு வருமான சராசரி மற்றும் எல்லைகள் உயர்ந்திருக்கிறது. பெற்றோர்களை வெளி நாட்டுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று மகிழ்வூட்டுவோர் கனிசமான அளவிற்கு இருக்கிறார்கள், இல்லச் சுற்றுலாவென ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு சென்றுவருபவர்கள் மிகுந்திருக்கிறார்கள். சுற்றுலா அழைத்துச் செல்ல தவணை முறைத் திட்டங்களுடன் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதிலிருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை மிகுந்திருப்பது தெரியவருகிறது. அண்மைய புள்ளி விவரப்படி சிங்கைக்குச் சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்விலிருந்து வந்தோர் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பூர் 4 மணி நேர விமானப் பயணத் தொலைவில் இருப்பதும், விமான பயணச் சீட்டு ஓரளவு ஏற்கக் கூடிய விலையில் இருப்பதும், சிங்கையில் இந்தியர்கள் கனிசமான அளவில் இருப்பதும், சுற்றுலா வருபவர்களுக்கான சுற்றுலா தலங்கள் இருப்பதாலும், வரிச் சலுகையுடன் அனைத்துப் பொருள்களும் வாங்கும் வழி செய்யும் நாடாக இருப்பதால் சிங்கையை சுற்றுலா செல்லத் இந்தியர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி வருபவர்களில் குறிப்பிட்டத் தக்க விழுக்காட்டினர் மலேசியாவுக்கு சிங்கை வழியாக பேருந்து அல்லது தொடர் வண்டியில் சென்று வருவதும் உண்டு.

***

நாம் சுற்றுலா செல்லும் இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் அவர்களையும் சந்தித்து வருவதால் (அந்த நாட்கள் அவர்களுக்கும் விடுமுறை நாளாக அமைந்திருந்தால்) நமது மகிழ்ச்சி இரட்டிபாக இருக்கும. சிங்கையில் ஏறக் குறைய 100 பதிவர்கள் இருக்கிறார்கள், அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர்(வருகின்றோம்) . பதிவு எழுதுவது, பதிவர் கூட்டங்களில் கலந்து கொண்டு நட்புகளைப் பெருக்கிக் கொள்வதாக தொடர்ந்த பதிவுலக பயணத்தில், இளைப்பாறிச் செல்வதுடன் நினைத்துப் பார்க்கக் கூடிய நிகழ்வுகளையும் (memorable events) அமைத்தால் என்ன என்கிற கேள்வியில் சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டிக் குறித்துப் பேசப்பட்டும், சிங்கைப் பதிவர்களில் தொடர்பில் இருப்போருட்டன் அளவளாவப்பட்டு, கருத்துகேட்டு கருத்தாய்வு போட்டி நடத்துவது என்று உறுதி செய்து, அதற்காக இணையதளம் அமைத்து, போட்டித் தலைப்புகள், விதிமுறைகள் அமைக்கப்பட்டு மணற்கேணி - 2009 என்று தலைப்பிட்டு அறிவிப்பும் வெளி இடப்பட்டு இருக்கிறது.

இந்த போட்டியில் இடம் பெற்றத் தலைப்புகள் அனைத்தும் தமிழ் சூழலை முன்னிறுத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது, எந்த ஒரு (தமிழக/இந்திய) அரசுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தலைப்புகள் வைக்கப்படவில்லை. அனைத்தும் சமூகம் சார்ந்த பொதுவான அரசியல் தலைப்புகள் மற்றும் பிறத் தலைப்புகள் தான். சிங்கைப் பதிவர்கள் சார்பில் தமிழ் சூழலுக்கு ஏற்ற, விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாங்கங்களை
வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிற நோக்கம் தவிர்த்து வேறெதும் இல்லை.
போட்டியில் இந்தியாவில் இருக்கும் தமிழில் எழுதுவோர்களும், தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ளலாம்.

சிறந்த கருத்தாய்வுகளை எழுதியோரை பாராட்டும் பரிசாக அவர்களில் முதல் மூவரை சிங்கைச் சுற்றுலா அழைத்து வந்து, அவர்களுக்கான பொதுச் செலவுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் எழுத்துலகை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறோம். போட்டி வழி நடத்தலுக்கான குழுக்கள் முறையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்பட்ட எந்த ஒருவரின் முறையற்ற தலையீடுகள் எதுவும் இல்லாமல் செயல் திட்டமும் வரையரைகளும் சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி நிர்வாகக் குழுவினருடையது. ஆனால் போட்டியை தரமான கருத்தாய்வுகளைத் தந்து பேச வைக்க வேண்டியது பதிவர்கள் மற்றும் தமிழார்வளர்களின் கையில் தான் உள்ளது. நல்ல பல ஆக்கங்களை தரவேண்டும், தமிழுக்கு பெருமையும், வளமும் சேர்த்து தமிழ் சமுதாயத்திற்கு துணையாக தூணாக இருக்க வேண்டி அனைவரின் பேராதரவை நாடுகிறோம்.

உங்கள் கருத்தாய்வுகள் சிறந்ததென தேர்ந்தெடுக்கப்பட்டால் சிங்கை சுற்றுலா செல்லவதுடன் பதிவுலக உறவுகளையும் சேர்த்து சந்தித்து மகிழலாம்.

போட்டி குறித்த விரிவான தகவல்கள் இங்கே !

18 கருத்துக்கள்:

பதிவு பார்வைகள்

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP