பின்பற்றுபவர்கள்

20 ஜூலை, 2009

வெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி !

பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்கவர்கள், பார்பனர்களின் ஆதிக்கத்தை முன்னிட்டு பெரியாரின் கடவுள் மறுப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்க ஆயிரம் காரணங்கள் உண்டு, அதில் முதன்மையானது தமிழர்களுக்கென்றே முருகன் (சேயோன்), மாயோன்(திருமால்), கொற்றவை(மாரியம்மன்), மாடன் (சிவன்) தெய்வங்கள் உண்டு. 6 ஆம் நுற்றாண்டு காலத்திற்கு பிறகே அவைகள் பார்பனர்களது வைதீக சமயத்துடன் முடிந்து வைக்கப்பட்டு பூணுல் மற்றும் பிற சடங்குகளுடன் வைதீகமயமானது. பார்பன எதிர்ப்பில் தங்கள் தெய்வங்களையும் விட்டுவிட தமிழர்கள் விரும்பவில்லை, அதனால் தான் பெரியாரின் பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்ற அளவுக்கு இறை மறுப்பு வெற்றிபெறவில்லை. என்னைக் கேட்டால் இறை மறுப்பு வெற்றி பெறவேண்டும் என எண்ணுவதற்கு மூட நம்பிக்கைகள் தவிர்த்து மிகப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மூட நம்பிக்கைகள் அனைத்து மதங்களிலுமே நிரம்பிக் கிடக்கின்றன. இறைமறுப்புக்கு பதிலாக மதமறுப்பாக திராவிட இயக்கம் சென்றிருக்கலாம், சிறுபான்மை ஓட்டு அரசியல் என்கிற பெயரில் அவையெல்லாம் கண்டு கொள்ளப் படமால் போனது பெரியாருக்குப் பிறகு இறைமறுப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்பது "மஞ்சள்" தூண்டால் வடிகட்டிய "உண்மை".

"பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்கிற 2000 ஆண்டு புளுகுகள் இன்றும் தொடர்கின்றனர். ஆனால் அவர்களே அதை அவ்வபோது உடைத்து வருகின்றனர், ஒப்பிட்டுப் பார்க்காதததல் நாமும் அவர்கள் சொல்வது சரிதானோ என்று எண்ணிவிடுவோம். அண்மையில் படித்த ஒரு கட்டுரையில், 'இராமன் பிராமணன் அல்ல, வியாசர் பிராமணன் அல்ல......இன்னும் பல இதிகாச பாத்திரங்களை பிராமணன் அல்ல" என்று தெளிவாகச் சொல்லுகிறார்கள், ஆனால் அவர்கள் பிராமணர் என்று சுட்டிக்காட்டும் பாத்திரங்களும், ஆதி சங்கரர் உட்பட அனைவருமே பார்பனர்கள், அதாவது பார்பனர்கள் மட்டுமே பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். எதாவது ஒரே ஒருவர் அல்லது பாத்திரம் சத்திரியனில் இருந்து பிராமண நிலை அடைந்திருப்பதாக எந்த ஒரு புராணங்களிலும் காட்டப்படவில்லை, பிறகு ஏன் இந்த "பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்பது எப்போது நடைமுறையில் இருந்தது என்று சொல்லாமல் தொடர்ந்து புளுகி வரவேண்டும் என்றே தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள அரசியலை ஆழ்ந்து யோசித்தால்,

பிராமணர் என்கிற சொல் பார்பனர் குறித்த சொல் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் இதுகாறும் அவை பார்பனர்களையின் தகுதியையும், சமூக அந்தஸ்தையும் நிலைநிறுத்த நுழைக்கப்பட்டு வழங்கப்படும் சொல்லாகவே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லை என்று மறுப்போர் சரியான ஆதாரங்களைத் தாருங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

இது இப்படி இருக்கையில், சோ இராமசாமி போன்றோர் 'எங்கே பிராமணன் ?' என்ற தொடர் பார்பனத் தகுதிகளை பார்பனர்களுக்கு காட்டும் ஒரு முயற்சியாகத் தான் நினைக்க முடிகிறது. அதை இந்துமதம், பண்பாடு, சமயக் கூறுகள் என்றெல்லாம் பொதுப்படுத்த முடியாது, ஏனெனில் பிராமணன் என்பவன் எந்த ஒரு காலத்திலுமே மற்ற மூவர்ணங்களில் இருந்து தகுதியால் உயர்த்திக் கொண்டவன் இல்லை. முழுக்க முழுக்க பார்பனர்களே பிரமணர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். 'எங்கே பிராமணன் ?' பார்த்து சிலாகிக்கும் பார்பனரல்லாதவர்கள் சிந்திக்க வேண்டும்.

"மிட்டாய் அனைவருக்கும் உண்டு.....ஆனால் கிடைத்தவர்கள் அனைவரிடமும் பூணூல் இருந்தது" - மிட்டாய் பூணூல் அணியாதவருக்கு கிடைத்ததே இல்லை என்பது உண்மை. இங்கு மிட்டாய் என்பது 'பிராமணர்' ஆகும் தகுதி.

பெரியாரின் கடவுள் மறுப்பு நீற்றுப் போனாலும், பார்பன எதிர்ப்பு என்றும் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் இன்றும் பார்பனர்கள் 'தகுதி' பேசுவதே. சிறுநீரும் மலமும் பார்பனர், பார்பனர் அல்லாதோர் அனைவரிடமும் உள்ளவை தான், எதன் அடிப்படையில் பார்பனர்களை "பிராமணர்" என்று அழைப்பது ? எந்த ஒரு பார்பனரும், 'பிராமணர் என்பதற்கு' பார்பனர்கள் எழுதி வைத்திருக்கும் விளக்கங்களையும், சோ இராமசாமியின் வியாக்யாணங்களையும் படித்தால் தன்னை பிராமணன் என்று அழைத்துக் கொள்வது தன்னைப் போலவே இருக்கும் பிற மனிதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று நினைப்பான்.

66 கருத்துகள்:

பரிமள ராசன் சொன்னது…

kadavul maruppum,parppana yedhirpum onedrae.kadavul maruppatra parppana yedhirpu soodaana kuchi ice pola,irukka vaippillai.parppaanai olikka ninaithean avan kadavulidam olinthukondan athanaalthan kadavulai olikka mudivu seithean-periyar.ondru sari ondru thavaru enbathu periyaarai arai kuraiyaai padipathalthan.mayir pilakkum vaadhathinaal paarpanukku maraimugamaaga udhavum neengal yenna paarpaana?

ஜோ/Joe சொன்னது…

//என்னைக் கேட்டால் இறை மறுப்பு வெற்றி பெறவேண்டும் என எண்ணுவதற்கு மூட நம்பிக்கைகள் தவிர்த்து மிகப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மூட நம்பிக்கைகள் அனைத்து மதங்களிலுமே நிரம்பிக் கிடக்கின்றன. இறைமறுப்புக்கு பதிலாக மதமறுப்பாக திராவிட இயக்கம் சென்றிருக்கலாம், சிறுபான்மை ஓட்டு அரசியல் என்கிற பெயரில் அவையெல்லாம் கண்டு கொள்ளப் படமால் போனது பெரியாருக்குப் பிறகு இறைமறுப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்பது "மஞ்சள்" தூண்டால் வடிகட்டிய "உண்மை".//
பெரியார் கடவுளையும் ,மதத்தையும் எதிர்த்ததற்கு இரண்டு காரணம் சொன்னார் , மூட நம்பிக்கை ,சமுதாய இழிவு ..இதில் சமுதாய இழிவை நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை ..மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது .அதன் பொருட்டு எல்லா மதங்களையும் பெரியார் விமர்சிக்க தயங்கியதில்லை .ஆனால் சமுதாய இழிவு ,எல்லா மதத்தாராலும் அளவில் அதிகமாகவும் அல்லது கொஞ்சமாகவும் தனிப்பட்ட விதத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் , ஒரு மதத்தில் மட்டுமே சமுதாய இழிவும் , மனுதர்ம அடுக்கும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கட்டது .அதனாலே தான் அந்த மதத்தை ,அதுவும் அவர் சார்ந்த சமுதாயத்தில் அதிகமாக கடைபிடிக்க படும் மதம் என்பதால் , அதிகமாக எதிர்த்தார் .பெரியார் பற்றி அடிக்கடி பேசும் நீங்கள் முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள்.

அப்பாவி முரு சொன்னது…

42 ஆண்டுகால பெரியாரின் வாரிசு அரசுகளாலும் ஏதும் செய்ய முடியவில்லையே?

அப்பாவி முரு சொன்னது…

//பார்பன எதிர்ப்பில் தங்கள் தெய்வங்களையும் விட்டுவிட தமிழர்கள் விரும்பவில்லை, அதனால் தான் பெரியாரின் பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்ற அளவுக்கு இறை மறுப்பு வெற்றிபெறவில்லை//

மாறாக வளர்ந்திருப்பாதாகவே தோன்றுகிறது.

CA Venkatesh Krishnan சொன்னது…

பிராமணர்கள் அனைவரும் வேதம் ஓதும் செயலில் ஈடு பட்டிருக்க வில்லை. உதாரணமாக ராஜராஜ சோழனின் தளபதி கிருஷ்ணன் ராமன் ஒரு பிராமணன். இதைப் போன்று ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாசன் முதலியோரும் பிராமணர்களே.

வேதம் என்ற பொருளைப் பாதுகாக்கும் பொருட்டு அதன் பாதுகாவலர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப் ப்அட்டிருந்தன. அவையே பிரமதேயங்கள் மற்றும் இறையிலி நிலங்கள். மன்னர்கள் வேதத்தையும் கடவுளர்களையும் போற்றினார்களே ஒழிய பிராமணர்களை என்றும் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாதுகாக்க வில்லை. ஆக பிராமணர்களின் சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் எவ்வளவு தவறோ அதே போன்று அவர்கள் சுப்பீரியர்ஸ் என்று சொல்வது. பிராமணர்களுக்கு ஒரு விதத்தில் நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்கப் பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

இரை தேடுவதோடு இறையையும் தேடு என்று எல்லோருமே ஒப்புக்கொண்டிருப்பதால், கடவுள் மறுப்பு ஏட்டளவிலேயே இருக்கிறது. இப்போது இன்னும் வளர்ந்து விட்டிருக்கிறது. இறையை வளர்க்க பிராமணர்களால் மட்டுமே முடியாது.

ஜோ/Joe சொன்னது…

'அப்பாவி' முரு,
இறை நம்பிக்கையும் ,கோவில்களும் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் மத வெறியும் ,அதற்கான ஆதரவும் ஏன் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கிறது என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/எதாவது ஒரே ஒருவர் அல்லது பாத்திரம் சத்திரியனில் இருந்து பிராமண நிலை அடைந்திருப்பதாக எந்த ஒரு புராணங்களிலும் காட்டப்படவில்லை/
ராமாயணம் படித்திருந்தால், விஸ்வாமித்திரன் என்கிற க்ஷத்ரியன், பிரம்மத்தை அறிந்தவனாக ஆன கதையும், அதை ஒட்டியே, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற வழக்கும் இருப்பதை அறிந்து கொண்டிருக்கலாம்.

இங்கே பார்ப்பன எதிர்ப்பு என்பது உண்மையில் கடவுள் மறுப்போ, பிரம்மத்தை அறியும் தகுதியைப் பற்றியதோ அல்ல, என்பது ஜஸ்டிஸ் கட்சியாக இருந்து பின்னர் தி.க. வாக மாறி, எதுவோ தேய்ந்து எதுவோ ஆன மாதிரி, திராவிட இயக்கங்களாக வளர்ந்தது என்பதும் "மஞ்சள் சால்வை" "கருப்புச சட்டை"துணியால் வடி கட்டிய உண்மையாக, வரலாறு சொல்கிறதே!

/'எங்கே பிராமணன் ?' என்ற தொடர் பார்பனத் தகுதிகளை பார்பனர்களுக்கு காட்டும் ஒரு முயற்சியாகத் தான் நினைக்க முடிகிறது./

இதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொண்டால், தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அல்லவா, இதைப் பற்றி கவலைப் பட வேண்டும்?

உங்களுடைய இறைமறுப்புக் கொள்கையை, உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை, சொந்த விஷயம் என்ற அளவோடு மதிக்கிறேன். அவ்வளவு தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பெரியார் கடவுளையும் ,மதத்தையும் எதிர்த்ததற்கு இரண்டு காரணம் சொன்னார் , மூட நம்பிக்கை ,சமுதாய இழிவு ..இதில் சமுதாய இழிவை நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை ..மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது .அதன் பொருட்டு எல்லா மதங்களையும் பெரியார் விமர்சிக்க தயங்கியதில்லை .ஆனால் சமுதாய இழிவு ,எல்லா மதத்தாராலும் அளவில் அதிகமாகவும் அல்லது கொஞ்சமாகவும் தனிப்பட்ட விதத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் , ஒரு மதத்தில் மட்டுமே சமுதாய இழிவும் , மனுதர்ம அடுக்கும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கட்டது .அதனாலே தான் அந்த மதத்தை ,அதுவும் அவர் சார்ந்த சமுதாயத்தில் அதிகமாக கடைபிடிக்க படும் மதம் என்பதால் , அதிகமாக எதிர்த்தார் .பெரியார் பற்றி அடிக்கடி பேசும் நீங்கள் முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள்.
//

பார்பனர் எதிர்ப்புக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழர்கள் தங்கள் நிலக் கடவுளை துறக்க தயாராக இல்லை, என்பதே பார்பன எதிர்ப்பு மட்டும் இன்றும் இருப்பதற்குக் காரணம், சமுதாய இழிவு இன்றைய தேதிகளில் குறைவு. இன்றைய தேதிகளில் மதவெறியே உலகை அச்சுறுத்துவதாக உள்ளது. சமுதாய இழிவு குறைந்து போனதற்கு இறை மறுப்புதான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன், ஏனெனில் இறை மறுப்பாளர்கள் அனைவருமே சாதியைத் துறந்தவர்கள் அல்ல. சமுதாய இழிவு குறைந்து போனதற்கு 'நாங்கள் மட்டும் தாழ்ந்தவர்களா ?' என்று திருப்பி கேட்கும் எண்ணம் வளர்ந்து, திருப்பி தாக்கியதால் தான் சாத்தியமாயிற்று. பெரியார் இறைமறுப்பை மட்டும் கொள்கையாக வைத்திருந்தால் 'ஆலய நுழைவு' போராட்டம் கூட முரண்பட்டது தானே.

***

"இழிவு" என்பது மதப் பிரச்சாரத்துக்கு பயன்பட்ட சொல் என்பதைத் தவிர்த்து மதவாதிகள் அதுகுறித்து கவலைப்படவில்லை, அதை ஆதாயமாகத்தான் பார்த்தார்கள் என்று சொல்ல முடியும்.

மதம் வாரி அணைக்கிறது என்றால் மைக்கேல் ஜாக்சன் ஒரு கிறித்துவராகவே இறந்திருப்பார், காஸியஸ் முகமது அலியாக மாறி இருக்க மாட்டார், அது வெள்ளை கருப்பர் இன அரசியல் என்றால் இருவரையும் வெறுக்கும் பெரும்பாண்மை வெள்ளையர்கள் மிக மிகக் குறைவே, அதற்கு அவர்கள் இருவருமே மத அடையாளம் துறக்கத் தேவை இல்லை. நான் அதற்காக இஸ்லாம் மற்ற மதங்களை விட உயர்ந்தது என்று சொல்லவரவில்லை. கருப்பினத்தோருக்கு இஸ்லாம், கிறித்துவம் தவிர உலகில் வேறு மதங்கள் பற்றி தெரியாது இருக்கலாம், பண்பாட்டிற்கு ஏற்றவகையில் அமைந்தில்லை என்று அதனை ஆப்சனாகக் கூட கொள்ளாதிருந்திருக்கலாம்.

போப்புகளில் ஒரு கருப்பினர்கள் கூட இல்லையா ? முகமது நபி உட்பட்ட இறைத் தூதர்களில் கருப்பினத்தோர் எத்தனை ? நபிகளில் பெண் நபிகள் உண்டா ? என்கிற கேள்விகளுக்கு இதுவரை கிறித்துவர், இஸ்லாமியர் பதில் சொன்னது இல்லை, அல்லது மலுப்பல் என்றே சொல்லலாம்.

சாதி இழிவு என்பதை விட மதங்களின் வழி உலக அளவில் நடக்கும் பிணக்குகளை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது, பெரியார் சாதி இழிவுக்கு எதிராக காட்டிய தீவிரம் போல் மதங்களுக்கு எதிராகவும் காட்டி இருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் பல நூற்றாண்டுகாலம் பெரியாரின் தேவை இருந்து கொண்டே இருக்கும் என்பதே நான் சொல்ல வந்தது.

***

நான் இந்தக் கட்டுரையை இதில் இருக்கும் தகவல் அடிப்படையில் தான் எழுதினேன். பெரியார் பற்றிய புரிந்துணர்வு உண்டு. அந்த சுட்டியில் இருக்கும் சில வரிகள்.

"தமிழர்க்குச் சமயம் இல்லை என்று கூறும் பகுத்தறிவுச் செம்மல்கள் தமிழர் சமயங்களையும் ஆரியரின் வைதீக மதத்தையும் தனித்தனியே பகுத்து அறிய வேண்டும். தமிழர் சமயங்களோடு கலந்துவிட்ட ஆரியரின் சமய, பண்பாட்டுக் கூறுகளை இனங்கண்டு ஒதுக்க வேண்டும். இதுவே மறைமலை அடிகளாரின் சமயப் பணியாக இருந்தது. இன்று எம்மைப் போன்ற சிலரின் சமயப் பணியாகவும் உள்ளது.


பகுத்தறிவாளர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் தமிழரின் பழஞ் சமயங்களைப் பழித்து ஒதுக்கியதால் தமிழர் சமயங்கள் நலிவடைந்தன. இந்த நலிவினைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டிலிருந்து குடி புகுந்த சமயங்கள் இந்தியாவிலும் மலேசியாவிலும் வலிமை பெற்றுள்ளன.


'நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தை எதிர்க்கிறோம்' என்றார் அறிஞர் அண்ணா. பிராமணீய எதிர்ப்பும் தமிழ் மொழிப் பற்றும் வேண்டுவதே. இதனைச் செய்யும்போது தமிழர் சமயங்களைப் பழித்துப் புறக்கணிக்கலாமா? இவ்வாறு செய்வதால் தமிழர் பண்பாட்டுக்கு ஏற்படும் ஊறுகள் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்."

வேடிக்கை மனிதன் சொன்னது…

//என்னைக் கேட்டால் இறை மறுப்பு வெற்றி பெறவேண்டும் என எண்ணுவதற்கு மூட நம்பிக்கைகள் தவிர்த்து மிகப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை.//

எனக்கும் இதில் உடன்பாடு உண்டு.
இன்ன இன்ன காரணங்களால் கடவுள் இல்லை என்று பெரியார் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை, மாறாக மூட நம்பிக்கையை எதிர்பதின் மூலமே அவரால் கடவுள் இல்லை என்று சொல்ல முடிந்தது. அதை தாண்டிய விஞ்ஞானக்காரணங்கள் எதையும் காட்டியதாகத் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Parimala said... கடவுள் மறுப்பும் பார்பன எதிர்ப்பும் ஒன்றே, கடவுள் மறுபற்ற பார்பன எதிர்ப்பு சூடான குச்சி ஐஸ் போல இருக்க வாய்ப்பில்லை, பார்பனனை ஒளிக்க நினைத்து அவன் கடவுளிடம் ஒளிந்து கொண்டான் அதனால் தான் கடவுளை ஒளிக்க முடிவு செய்தார் பெரியார். ஒன்று சரி மற்றொன்று தவறு என்பது பெரியாரை அரைகுறையாக படிப்பதனால் தான். மயிர்பிளக்கும் வாததிதினால் பார்பனருக்கு மறைமுகமாக உதவும் நீங்கள் என்ன பார்பனரா ?//

அச்சச்சோ இல்லைன்னு சொன்னால் எனக்கு உபநயணம் போட்டுவிட்டு பார்பான் ஆக்கும் திட்டம் எதும் இருக்கா ? அவ்வ்வ்

இந்த சுட்டியைப் படித்துவிட்டு பரிமளா மேலே சொல்லு.......!

:)

ஜோ/Joe சொன்னது…

கோவி.கண்ணன்,
அதே அரைத்த மாவைத் தான் அரைக்கிறீர்கள் .

ஒரு மதத்தை பின்பற்றுபவர் உயர்வு தாழ்வு பார்ப்பதற்கும் ,அந்த மதம் 'அதிகார பூர்வமாக' இழிவை ,மனுதர்ம அடுக்கை அங்கீகரிப்பதற்கும் வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் விட்டுவிடுங்கள்.

அப்பாவி முரு சொன்னது…

//ஜோ/Joe 12:28 PM, July 20, 2009
'அப்பாவி' முரு,
இறை நம்பிக்கையும் ,கோவில்களும் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் மத வெறியும் ,அதற்கான ஆதரவும் ஏன் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கிறது என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.//

பெரியாரின் காலத்திற்கும் முன்னரும் தமிழகத்தில் மதவெறியால் கலகங்கள் நடந்ததில்லை.

ஜோ/Joe சொன்னது…

//பெரியாரின் காலத்திற்கும் முன்னரும் தமிழகத்தில் மதவெறியால் கலகங்கள் நடந்ததில்லை//

ஓ! அப்படியா ? சரி..சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...
கோவி.கண்ணன்,
அதே அரைத்த மாவைத் தான் அரைக்கிறீர்கள் .

ஒரு மதத்தை பின்பற்றுபவர் உயர்வு தாழ்வு பார்ப்பதற்கும் ,அந்த மதம் 'அதிகார பூர்வமாக' இழிவை ,மனுதர்ம அடுக்கை அங்கீகரிப்பதற்கும் வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் விட்டுவிடுங்கள்.
//

அதிகாரப் பூர்வ இழிவு மதத்தின் பெயரால் தான் நடக்குது, மற்ற இடங்களில் ? ஐய்யனாரை வணங்குவதையும், மாரியம்மன் கோவிலுக்கும் போவதையும் ஏனைய நாட்டார் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதையும் யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை, அதையும் வைதீக மயமாக்க ஆடுகோழி வெட்ட தடை விதிக்கப் பார்த்தார்கள் அதுவும் முடியவில்லை. பரம்பரை கோவிலுக்களுக்கு அவரவர் பரம்பரைகள் தான் செல்ல முடியும் மீறிச் சென்றால் தான் அங்கே பிரச்சனை, வன்னிய ஆதிக்க சர்சுகள் மூடப்பட்டது கூட ஆதிக்க வெறியினால் தானே ? ஆனால் அந்த ஆதிக்க வெறியை தடுக்க மதம் முயற்சி எடுக்க வில்லை அல்லது கட்டுபடுத்த முடியவில்லை என்பதும் உண்மைதானே ?

"இந்துமதம்" உயர்ந்ததுன்னு கருத்தில் நான் இங்கே எதுவும் எழுதவில்லை, அப்படி எழுதி இருந்தால் சொல்லுங்கள்.

அதிகாரபூர்வ இழிவு இந்துமதம் தவிற வேறெதிலும் இல்லை என்று சொன்னால் நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
//ஜோ/Joe 12:28 PM, July 20, 2009
'அப்பாவி' முரு,
இறை நம்பிக்கையும் ,கோவில்களும் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் மத வெறியும் ,அதற்கான ஆதரவும் ஏன் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கிறது என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.//

பெரியாரின் காலத்திற்கும் முன்னரும் தமிழகத்தில் மதவெறியால் கலகங்கள் நடந்ததில்லை.

12:53 PM, July 20, 2009
//

தம்பி முரு,

சமணர்கள் எண்ணாயிரம் பெயர் சைவ வெறியால் கழுவேற்றப்பட்டது வரலாறு, இன்னும் கூட கழுமரங்கள் சாட்சியாக நிற்கின்றனவாம். தசவதாரம் படம் பார்திங்களா ? சைவம் / வைணவ சண்டைகளெல்லாம் உங்களுக்கு மதச் சண்டையாக தெரியாதா ?

அவ்வ்வ்வ்வ்வ் !

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பெரியாரின் பக்தர்களிடமும் மூடநம்பிக்கை இருக்கின்றதே! அவர்கள் காவி அணிகின்றார்கள், இவர்கள் கருப்பு அணிகின்றாரகள். அவர்கள் சுவாமி என்கின்றார்கள் இவர்கள் தோழா என்கின்றார்கள். அவர்களும் கூடி கூடி போசுவார்கள் இவர்களுதான்..... ஒருவர் சொன்னதை காரணம் கேட்காமல் அதையே திரும்ப திரும்ப செய்தால் அதுவும் மூடநம்பிக்கையாக வாய்புள்ளது...

ஜோ/Joe சொன்னது…

கோவி.கண்ணன்,
எப்போதுமே சொல்லப்பட்டது என்ன என்பதை பார்க்காமல் ,சொல்லியவர் பெயரைப் பார்த்து நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு வளவளா கொள கொளா விளக்கங்கள் கொடுப்பதே உங்கள் வழக்கம் ..கிறிஸ்தவ மதத்தில் அப்படி இல்லையா ,இப்படி இல்லையா என இங்கே என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் நீங்கள் பொது வெளியில் எப்படி என்னை மடக்குவது என்பதை மட்டுமே சிந்திக்காமல் நான் பேசிய விடயத்தை மட்டும் பேசினால் நல்லது .நீங்கள் நினைப்பது போல கிறிஸ்தவம் பற்றிய கேள்விகளை எதிர்வினையாக தொடுக்க நினைப்பது உங்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும் ..எனென்றால் மிகச்சுலபமாக என்னால் அவற்றை ஒத்துக்கொண்டு போக முடியும்..வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

// பரம்பரை கோவிலுக்களுக்கு அவரவர் பரம்பரைகள் தான் செல்ல முடியும் மீறிச் சென்றால் தான் அங்கே பிரச்சனை, வன்னிய ஆதிக்க சர்சுகள் மூடப்பட்டது கூட ஆதிக்க வெறியினால் தானே ?//
ஆம் .ஆதிக்க வெறியினால் தான்.

//ஆனால் அந்த ஆதிக்க வெறியை தடுக்க மதம் முயற்சி எடுக்க வில்லை அல்லது கட்டுபடுத்த முடியவில்லை என்பதும் உண்மைதானே ? //
உண்மை தான் .

கிறிஸ்தவ மதத்தில் நடைமுறையில் ஆதிக்க வெறியும் ,ஏற்றத்தாழ்வுகளும் இல்லையென்று நான் சொன்னேனா? குறைந்த பட்சம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடுக்குகளாக பிரிப்பதை கொள்கை ரீதியில் கிறிஸ்தவமும் ,இஸ்லாமும் ஒத்துக்கொள்ளவில்லை .

ஒரு நாட்டில் ஒரு குற்றம் நடைபெறுவதற்கும் அது அந்நாட்டு சட்டப்படி அது குற்றம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா இல்லையா ? சட்டம் உள்ள நாட்டிலும் சட்டம் இல்லாத நாட்டிலும் அந்த குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்களே ,சட்டத்தை வளைக்கிறார்களே என்றெல்லாம் வாதிட்டால் ..ஆமாம் ..உண்மை தான் ..அதனால் இரண்டு நாடும் ஒரே நிலை என்றாகிவிடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
கோவி.கண்ணன்,
எப்போதுமே சொல்லப்பட்டது என்ன என்பதை பார்க்காமல் ,சொல்லியவர் பெயரைப் பார்த்து நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு வளவளா கொள கொளா விளக்கங்கள் கொடுப்பதே உங்கள் வழக்கம் ..கிறிஸ்தவ மதத்தில் அப்படி இல்லையா ,இப்படி இல்லையா என இங்கே என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் நீங்கள் பொது வெளியில் எப்படி என்னை மடக்குவது என்பதை மட்டுமே சிந்திக்காமல் நான் பேசிய விடயத்தை மட்டும் பேசினால் நல்லது
//

இதை எழுதும் போது உங்களை நினைத்தெல்லாம் எழுதவில்லை, உங்களை நினைக்க எனக்கு தேவையும் இல்லை, கட்டுரையில் கிறித்துவம் என்றோ, கத்தோலிக்க கிற்த்துவர்கள் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை, உங்களை நான் ஏன் மடக்க வேண்டும் ? உங்களுக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என்பதை சொல்லிவிட்டு பிறகு மற்றவற்றைப் பேசினால் நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//.நீங்கள் நினைப்பது போல கிறிஸ்தவம் பற்றிய கேள்விகளை எதிர்வினையாக தொடுக்க நினைப்பது உங்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும் ..எனென்றால் மிகச்சுலபமாக என்னால் அவற்றை ஒத்துக்கொண்டு போக முடியும்..வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
//

நான் மதமறுப்பு முன்னெடுத்து செல்லவேண்டியது அவசியம் என்று தான் சொன்னேன், அது கிறித்துவம் என்று சொல்லவில்லை, திரும்ப திரும்ப உங்களைக் குறித்துச் சொல்வதாக நினைப்பது ஏன் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிறிஸ்தவ மதத்தில் நடைமுறையில் ஆதிக்க வெறியும் ,ஏற்றத்தாழ்வுகளும் இல்லையென்று நான் சொன்னேனா? குறைந்த பட்சம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடுக்குகளாக பிரிப்பதை கொள்கை ரீதியில் கிறிஸ்தவமும் ,இஸ்லாமும் ஒத்துக்கொள்ளவில்லை .
//

பிறப்பு படி இல்லை என்றால் வெள்ளையர்கள் மேலிருந்து வந்தவர்களா ? அல்லது கருப்பர்கள் நிறத்தின் அடிப்படையில் இழிவானவர்களா ? கொள்ளை ரீதியான குப்பைகள் அனைத்து மததிலும் இருக்கிறது, சூத்திரன் இழிவானவன் அல்ல காலில் விழுந்து வணங்குவது சூத்திரனை என்று தான் இந்து மதக் கொள்கை குப்பையிலும் சொல்லுகிறார்கள் இதற்கு என்ன சொல்லுவீர்கள் ?

அப்பாவி முரு சொன்னது…

// கோவி.கண்ணன் said...
தம்பி முரு,

சமணர்கள் எண்ணாயிரம் பெயர் சைவ வெறியால் கழுவேற்றப்பட்டது வரலாறு, இன்னும் கூட கழுமரங்கள் சாட்சியாக நிற்கின்றனவாம். தசவதாரம் படம் பார்திங்களா ? சைவம் / வைணவ சண்டைகளெல்லாம் உங்களுக்கு மதச் சண்டையாக தெரியாதா ?

அவ்வ்வ்வ்வ்வ் !//

அண்ணே அதைச் செய்தது அதிகார வர்க்கம்.

அதிகார வர்க்கத்தினர் மனிதனையோ, மாடுகளையோ இல்லை சாமியார்களையோ கொல்வதற்கு காரணமே தேவையில்லை.

மக்களுக்குள் மதத்தால் கலகம் புரிந்ததாக எனக்கு தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணே அதைச் செய்தது அதிகார வர்க்கம்.

அதிகார வர்க்கத்தினர் மனிதனையோ, மாடுகளையோ இல்லை சாமியார்களையோ கொல்வதற்கு காரணமே தேவையில்லை.

மக்களுக்குள் மதத்தால் கலகம் புரிந்ததாக எனக்கு தெரியவில்லை.

2:28 PM, July 20, 2009
//

அதிகாரவர்க்கம் எதன் ஆதாரத்தில் செயல்படுது ? மதம் மதம் கொடுக்கும் சுதந்திரம். மதத்துக்கு அரசியலும் அரசியலுக்கு மதமும் என்றொன்றும் ஆதரவு அளிக்கும், மதம் என்றால் கண்ணுக்குத்தெரியாத ஒரு கொள்ளையைச் சொல்லவில்லை, அதன் தலைமையில் இருக்கும் மதவாதிகளைத் தான் சொல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
ராமாயணம் படித்திருந்தால், விஸ்வாமித்திரன் என்கிற க்ஷத்ரியன், பிரம்மத்தை அறிந்தவனாக ஆன கதையும், அதை ஒட்டியே, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற வழக்கும் இருப்பதை அறிந்து கொண்டிருக்கலாம்.//

அதுக்கு இராமாயணம் படிக்கத் தேவை இல்லை, சிவாஜி கனேசன் நடித்திருந்த 'இராஜ குரு' படம் பார்த்திருந்தாலே போதும். :)

விஷ்வாமித்திரன் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றான் என்று வைத்துக் கொண்டாலும் அதன் பிறகு அவனை யாரும் பிரமணனான் ஆனான் என்றோ பிரமணனாக ஏற்றுக் கொள்ளவே இல்லையே, இன்றும் விஷ்வா மித்திரன் ஒரு சத்திரியன் என்று தானே ஐயா சொல்கிறார்கள் ?

//இங்கே பார்ப்பன எதிர்ப்பு என்பது உண்மையில் கடவுள் மறுப்போ, பிரம்மத்தை அறியும் தகுதியைப் பற்றியதோ அல்ல,/

பிரம்மத்தை யார் யாரெல்லாம் அடைந்தார்கள் ? அப்படி ஒன்று இருப்பதாக கூறப்படுவது இதிகாச நம்பிக்கை மட்டுமே. இல்லாத ஒன்றைப் பற்றி பெருமையாகப் பேசவோ, அதன் பொருட்டு பிராமணன் என்று அழைத்துக் கொள்வதோ யாரை ஏமாற்றுவதற்கு என்று சொன்னால் அது நலம்.

இப்ப இருக்கும் பார்பனர் அனைவரும் பிரம்மத்தை அடையப் போறாங்களா ? தேவுடா தேவுடா !

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொண்டால், தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அல்லவா, இதைப் பற்றி கவலைப் பட வேண்டும்?//

அதைத்தான் நானும் சொல்கிறேன், பிராமணியம், பிராமணன் இதையெல்லாம் பார்பனர்கள் கவலைப்பட வேண்டிய ஒன்று, அதையேன் பிரமணனின் தகுதி இவை இவை என்று பிறருக்கும் காட்ட / சொல்ல வேண்டும் ? நான் இங்கே எங்காவது பார்பனன் பிராமணிய தகுதி படி நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறேனா ? கவலைப்பட்டு இருக்கேனா ?

//உங்களுடைய இறைமறுப்புக் கொள்கையை, உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை, சொந்த விஷயம் என்ற அளவோடு மதிக்கிறேன். அவ்வளவு தான்!//

இங்கே இறைமறுப்பாக என்னை எழுது இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டினால் நலம், அப்படி எதையும் எழுதவில்லை. பார்பன எதிர்ப்பை இறைமறுப்பாக நானும் கருதவில்லை

அப்பாவி முரு சொன்னது…

//கோவி.கண்ணன் 2:35 PM, July 20அதிகாரவர்க்கம் எதன் ஆதாரத்தில் செயல்படுது ? மதம் மதம் கொடுக்கும் சுதந்திரம். மதத்துக்கு அரசியலும் அரசியலுக்கு மதமும் என்றொன்றும் ஆதரவு அளிக்கும், மதம் என்றால் கண்ணுக்குத்தெரியாத ஒரு கொள்ளையைச் சொல்லவில்லை, அதன் தலைமையில் இருக்கும் மதவாதிகளைத் தான் சொல்கிறேன்//

தலைமைத்துவத்தில் நான்கைந்து பேர் எடுக்கும் முடிவுகளுக்கு, மக்களையும் குறை சொல்லக் கூடாது அல்லவா!!

தமிழ் ஓவியா சொன்னது…

பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றி பெற்றுள்ளதா? என்பது பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள செய்திகளின் சுட்டியை தருகிறேன். படித்துப் பாருங்கள்

http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_8767.html

http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_4247.html

நன்றி

ஜோ/Joe சொன்னது…

////கிறிஸ்தவ மதத்தில் நடைமுறையில் ஆதிக்க வெறியும் ,ஏற்றத்தாழ்வுகளும் இல்லையென்று நான் சொன்னேனா? குறைந்த பட்சம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடுக்குகளாக பிரிப்பதை கொள்கை ரீதியில் கிறிஸ்தவமும் ,இஸ்லாமும் ஒத்துக்கொள்ளவில்லை .
//

பிறப்பு படி இல்லை என்றால் வெள்ளையர்கள் மேலிருந்து வந்தவர்களா ? அல்லது கருப்பர்கள் நிறத்தின் அடிப்படையில் இழிவானவர்களா ? கொள்ளை ரீதியான குப்பைகள் அனைத்து மததிலும் இருக்கிறது, சூத்திரன் இழிவானவன் அல்ல காலில் விழுந்து வணங்குவது சூத்திரனை என்று தான் இந்து மதக் கொள்கை குப்பையிலும் சொல்லுகிறார்கள் இதற்கு என்ன சொல்லுவீர்கள் ?//

சங்கிலி முருகன் குரலில் "எப்பா ..நான் சரியாத் தானே சொல்லுறேன்".

கோவி ,முதலில் அதிகாரபூர்வ ,கொள்கை ரீதியில் ,officially என்று திரும்பத் திரும்ப சொல்வதை கேட்க செவியிருந்தால் கேளுங்கள் .

தயவு செய்து மீண்டும் "என்ன கைய புடிச்சு இழுத்தியா.." -ன்னு ஆரம்பிச்சுடாதீங்க .

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றி பெற்றுள்ளதா? என்பது பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள செய்திகளின் சுட்டியை தருகிறேன். படித்துப் பாருங்கள்

http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_8767.html

http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_4247.html

நன்றி
//

தமிழ் ஓவியா,

தாங்கள் கொடுத்த சுட்டிகளில் கோவிலகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தான் குறிப்பிடப் பட்டு இருக்கிறது, கோவில்களுக்குச் செல்லும் கூட்டம் திக பிரச்சாரங்களினால் கட்டுப்படுவதாக எங்கும் குறிப்பிடப் படவில்லை

தமிழ் ஓவியா சொன்னது…

//பெரியாரின் பக்தர்களிடமும் மூடநம்பிக்கை இருக்கின்றதே! அவர்கள் காவி அணிகின்றார்கள், இவர்கள் கருப்பு அணிகின்றாரகள்.//

கருப்புச் சட்டை அணிவது மூடநம்பிக்கைக்காக அல்ல ஞானசேகரன்.

கருப்புச்சட்டை ஏன் அணிகிறோம் என்பது பற்றி பெரியார் விளக்குகிறார். கேளுங்கள்

கேள்வி:-நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

பதில்:-நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.



------கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் 09.02.1959 அன்று நிகழ்த்திய உரையாடல் .

கருப்புச் சட்டை அணிவதின் நோக்கம் இதுதான். நீங்கள் நினைப்பது போல் மூடநம்பிக்கைக்காக அல்ல.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சங்கிலி முருகன் குரலில் "எப்பா ..நான் சரியாத் தானே சொல்லுறேன்".
//

இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை, பெரியாரை மாற்று மத அன்பர்கள் போற்றுவதற்கு, அவர் இந்து மதத்தை மிகுதியாகத் தாக்கினார் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் குறைவே. திரும்பத் திரும்ப சொன்னாலும் நூறு முறைச் சொன்னாலும் இதுவே உண்மை, இதைத் தவிர பெரியாரின் கொள்கை என்று மாற்றுமத அன்பர்கள் எதையாவது கடைபிடிக்கிறார்கள் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும்.

//கோவி ,முதலில் அதிகாரபூர்வ ,கொள்கை ரீதியில் ,officially என்று திரும்பத் திரும்ப சொல்வதை கேட்க செவியிருந்தால் கேளுங்கள் .//

செவிடன் என்று மறைமுகமாகத் திட்டுவதற்கு அழகான சொல்லாடலா ? நல்ல முயற்சி. அபிசியல் மண்ணாங்கட்டி, கொள்கை இவையெல்லாம் எல்லா மதங்களிலுமே உண்டு, அதைத்தான் மேலே குறிப்பிட்டேன். ஒரு பார்பானரிடம் சென்று சூத்திரன் இழிவானவனான்னு கேட்டுப்பாருங்க, அவர் கொடுக்கும் விளக்கம் கேட்டுவிட்டு அதன் பிறகு இந்துமதம் இழிவு படுத்துதுன்னு சொல்லலாம்.

//தயவு செய்து மீண்டும் "என்ன கைய புடிச்சு இழுத்தியா.." -ன்னு ஆரம்பிச்சுடாதீங்க .

3:15 PM, July 20, 2009//

கையைப் பிடிச்சு இழுத்தியா காலைவாரி விட்டியான்னு நீங்க நினைப்பது நான் உங்களை கிறித்துவராக நினைத்து, உங்களை நினைத்துத்தான் எழுதினேன் என்று நீங்களாக நினைத்தும் கொள்வதின் வெளிப்பாடு, நான் யாருக்கும் பிரதிநிதி கிடையாது, நீங்கள் அப்படி இருந்தால் சொல்லுங்கள், கட்டுரை எழுதிவிட்டு இது 'ஜோ' வைக் குறித்தது அல்ல என்று பின்குறிப்பு போடுகிறேன்

தமிழ் ஓவியா சொன்னது…

//இன்ன இன்ன காரணங்களால் கடவுள் இல்லை என்று பெரியார் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை, மாறாக மூட நம்பிக்கையை எதிர்பதின் மூலமே அவரால் கடவுள் இல்லை என்று சொல்ல முடிந்தது. அதை தாண்டிய விஞ்ஞானக்காரணங்கள் எதையும் காட்டியதாகத் தெரியவில்லை.//
என்கிறார் வேடிக்கை மனிதன்.


கடவுள் இல்லை என்று காரனகாரியங்களோடு பெரியார் பேசியவை எழுதியவைகளை தொகுத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் களஞ்சியம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

அதே போல் மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை என்று பல தொகுதிகளையும், சின்னச் சின்ன நூல்கள் ஏராளம் வெளியிட்டுள்ளது. அருள்கூர்ந்து அவைகளைப் படிக்கு மாறு வேண்டுகிறென்.

மதி.இண்டியா சொன்னது…

//தம்பி முரு,

சமணர்கள் எண்ணாயிரம் பெயர் சைவ வெறியால் கழுவேற்றப்பட்டது வரலாறு, இன்னும் கூட கழுமரங்கள் சாட்சியாக நிற்கின்றனவாம். தசவதாரம் படம் பார்திங்களா ? சைவம் / வைணவ சண்டைகளெல்லாம் உங்களுக்கு மதச் சண்டையாக தெரியாதா ?

அவ்வ்வ்வ்வ்வ் !தம்பி முரு,

சமணர்கள் எண்ணாயிரம் பெயர் சைவ வெறியால் கழுவேற்றப்பட்டது வரலாறு, இன்னும் கூட கழுமரங்கள் சாட்சியாக நிற்கின்றனவாம். தசவதாரம் படம் பார்திங்களா ? சைவம் / வைணவ சண்டைகளெல்லாம் உங்களுக்கு மதச் சண்டையாக தெரியாதா ?

அவ்வ்வ்வ்வ்வ் !//

அந்த கழுமரங்களை போட்டோ பிடித்து போடமுடியுமா ?

திருநாவுக்கரசரின் (சரி்தானே) ஒரு பாடல் வரிதவிர எங்கும் இப்படி ஒரு சம்பவம் குறிப்பட படவேயில்லை ,

சமண இலக்கியங்களில் கூட..

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழ் ஓவியா,

பெரியாரை யாரும் இங்கு குறைத்துச் சொல்லவில்லை. பெரியாருக்கு பிறகு திராவிட இயக்கங்களின் திசை மாறி இருப்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

மதி.இண்டியா சொன்னது…

//கேள்வி:-நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

பதில்:-நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.//

அய்யா , பள்ளச்சிகளும் பறைச்சிகளும் தோள்சீலை போடுவதால்தான் துணி விலை உயர்கிறது என்று ஏன் சொன்னார் ராமசாமி ?

இதற்க்கு ஏதாவது விளக்கபுத்தகம் உள்ளதா?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

// தமிழ் ஓவியா said...

//பெரியாரின் பக்தர்களிடமும் மூடநம்பிக்கை இருக்கின்றதே! அவர்கள் காவி அணிகின்றார்கள், இவர்கள் கருப்பு அணிகின்றாரகள்.//

கருப்புச் சட்டை அணிவது மூடநம்பிக்கைக்காக அல்ல ஞானசேகரன்.

கருப்புச்சட்டை ஏன் அணிகிறோம் என்பது பற்றி பெரியார் விளக்குகிறார். கேளுங்கள்

கேள்வி:-நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

பதில்:-நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.//

காவி, வெள்ளை அணியும் சாமியார்களும் இதே காராணங்கள்தான் சொல்லுகின்றார்கள்.
நல்ல விளக்கமாயினும். தோடர்ந்து அதன் அடையாளங்களாக பயன்படுத்தும்பொழுதுதான் அதன் மீது இருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகின்றது.. மத அடையாளங்களோ அல்லது வேற்று அடையாளங்களோ காட்டுவதை விட்டுவிட்டு அதன்படி நடந்துகாட்டுவதுதான் நலம் என்பது என் எண்ணங்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த கழுமரங்களை போட்டோ பிடித்து போடமுடியுமா ?

திருநாவுக்கரசரின் (சரி்தானே) ஒரு பாடல் வரிதவிர எங்கும் இப்படி ஒரு சம்பவம் குறிப்பட படவேயில்லை ,

சமண இலக்கியங்களில் கூட..

3:44 PM, July 20, 2009
//

மதுரைக்குச் சென்றால் இன்றும் பார்க்கலாம் என்றே மதுரை நண்பர்கள் சொல்லுகிறார்கள், ஆதாரம் கிடைத்தால் 'நாங்களெல்லாம் பாவிகள்... நாங்களும் கழுமரம்' ஏறுகிறோம் என்று சொல்லிவிடப் போறோமா ?

இந்த சுட்டியைப் பாருங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அய்யா , பள்ளச்சிகளும் பறைச்சிகளும் தோள்சீலை போடுவதால்தான் துணி விலை உயர்கிறது என்று ஏன் சொன்னார் ராமசாமி ?//

இதுக்கு எதும் ஆதாரம் உள்ளதா ?

முலைவரி கட்டியவர்கள் யார் ?எதற்காகக் கட்டினார்கள் ? அவர்களின் தற்போதைய நிலை என்ன ? யார் காரணம் ? என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள்.

தமிழ் ஓவியா சொன்னது…

//அய்யா , பள்ளச்சிகளும் பறைச்சிகளும் தோள்சீலை போடுவதால்தான் துணி விலை உயர்கிறது என்று ஏன் சொன்னார் ராமசாமி ?

இதற்க்கு ஏதாவது விளக்கபுத்தகம் உள்ளதா?//

மதி.இண்டியா அவர்களே இது குறித்துத்து ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப்பூவில் பதிவு ச்ய்துள்ளேன். கீற்று இணையதளத்திற்கும் அனுப்பியுள்ளேன். அவர்களும் பதிவு செய்துள்ளார்கள் அதன் சுட்டி இதோ:-


http://www.keetru.com/rebel/periyar/96.php

விரிவான விளக்கத்திற்கு பெரியார் களஞ்சியம் நூல்களைப் படிக்க வேண்டுகிறேன்
நன்றி

ஜோ/Joe சொன்னது…

////பெரியாரை மாற்று மத அன்பர்கள் போற்றுவதற்கு, அவர் இந்து மதத்தை மிகுதியாகத் தாக்கினார் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் குறைவே.//
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் ..ஒரே நேரத்தில் பெரியாருக்கும் இந்து மதத்துக்கும் நீங்க தானே அத்தாரிட்டி.

//இதைத் தவிர பெரியாரின் கொள்கை என்று மாற்றுமத அன்பர்கள் எதையாவது கடைபிடிக்கிறார்கள் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும்.//
நான் அந்த மாற்றுமத பிரதிநிதி இல்லை ..எனவே என்னால் சொல்ல முடியாது.

//அபிசியல் மண்ணாங்கட்டி, கொள்கை இவையெல்லாம் எல்லா மதங்களிலுமே உண்டு, அதைத்தான் மேலே குறிப்பிட்டேன்.//
அந்த அபிசியல் மண்ணாங்கட்டி ,கொள்கையிலாவது குறைந்த பட்சம் வேறுபாடு உள்ளது என்பதைத் தான் நான் மேலே ,நடுவுலே ,கீழே எல்லா இடத்திலும் குறிப்பிடுகிறேன்.

//ஒரு பார்பானரிடம் சென்று சூத்திரன் இழிவானவனான்னு கேட்டுப்பாருங்க, அவர் கொடுக்கும் விளக்கம் கேட்டுவிட்டு அதன் பிறகு இந்துமதம் இழிவு படுத்துதுன்னு சொல்லலாம்.//
தனிப்பட்ட பார்ப்பானோ ,தனிப்பட்ட கிறித்துவனோ ,தனிப்பட்ட இஸ்லாமியனோ என்ன சொல்வான் என்பது பற்றியதல்ல என் வாதம் ..அவன் சார்ந்த மதம் அதிகாரபூர்வமாக எதை ஏற்றுக்கொள்ளுகிறது ,இல்லை என்பது மட்டும் தான் என் வாதம் .

(உங்கள் மற்ற திசை திருப்பல்களுக்கு பதிலிறுக்க தேவையில்லை என நினைகிறேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//(உங்கள் மற்ற திசை திருப்பல்களுக்கு பதிலிறுக்க தேவையில்லை என நினைகிறேன்)//

உங்களுடைய 'செவிடன்' தூற்றலும் எனக்கு தேவை இல்லாததே. முதலில் தன்மையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். கருத்துக்குப்பையெல்லாம் பிறகுதான். நம்ம கருத்துக்குப்பைகளைவிட 'காது' இருக்கான்னு நீங்கள் கேட்டதுதான் உங்களை சந்திக்கும் போது நினைக்கத் தோன்றும். உங்களுக்கு ஏன் அவ்வளவு வெறி ? எனது எழுத்தில் எங்கேயாவது நான் இந்துமததிற்கு வக்காலத்து வாங்குவது போல் எழுதி இருக்கிறேனா ?

தமிழ் ஓவியா சொன்னது…

என்னை,எங்களை இழிமகன் என்று இந்து மதம் சொல்லுகிறது அப்படிசொல்லாதே என்று சொல்லி போராடுகிரோம். அந்த எதிர்ப்பைக் காட்ட கருப்புச்சட்டை அணிகிறோம்.
மூடநம்பிக்கைக்காக அல்ல.

என்று இழிவு ஒழிகிறதோ அன்று கருப்புச்சட்டையை கழட்டிவிடுவோம்.
நம்பிக்கைக்காக அணியவில்லை போராட்ட யுத்திகளில் ஒன்று.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த அபிசியல் மண்ணாங்கட்டி ,கொள்கையிலாவது குறைந்த பட்சம் வேறுபாடு உள்ளது என்பதைத் தான் நான் மேலே ,நடுவுலே ,கீழே எல்லா இடத்திலும் குறிப்பிடுகிறேன்.//

கொள்கையை வைத்துக் கொண்டு செயல்முறைகளில் எதுவும் மாற்றம் இல்லை என்றால் கொள்கைகளை வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க முடியுமா ? எல்லாக் குப்பையும் கொள்கைகள் அளவில் சிறப்பாக இருந்தால் கூட, நடைமுறையில் எதுவும் இல்லை என்றால் ஒரே குப்பைதான்

ஜோ/Joe சொன்னது…

//உங்களுடைய 'செவிடன்' தூற்றலும் எனக்கு தேவை இல்லாததே. முதலில் தன்மையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். கருத்துக்குப்பையெல்லாம் பிறகுதான். நம்ம கருத்துக்குப்பைகளைவிட 'காது' இருக்கான்னு நீங்கள் கேட்டதுதான் உங்களை சந்திக்கும் போது நினைக்கத் தோன்றும். உங்களுக்கு ஏன் அவ்வளவு வெறி ?//

நான் சொன்னது...
//கோவி ,முதலில் அதிகாரபூர்வ ,கொள்கை ரீதியில் ,officially என்று திரும்பத் திரும்ப சொல்வதை கேட்க செவியிருந்தால் கேளுங்கள் .//

கோவி,
ஏராளமான தத்துவங்களையும் விளக்கங்களையும் எழுதும் நீங்கள் ,இப்படித் தான் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கொள்ளும் அளவே புரிந்துணர்வு கொள்வீர்கள் என நான் நம்பவில்லை .,மாறாக ,மற்றவர் முன் இதை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மையப்படுத்தி வழக்கம் போல அனுதாபமும் கூட்டமும் சேர்க்கும் முயற்சியாகவே இதைக் கருதுகிறேன்.

திரும்பத் திரும்ப இத்தனை முறை சொல்லியும் நீங்கள் புரிந்து கொள்ள மறுப்பதால் ,திறந்த மனதோடு அணுகுங்கள் என பொருள்படும் படி தான் அதை கூறினேன் என சர்வ நிச்சயமாக என் மனச்சாட்சிக்கு தெரியும் என்பதால் இதில் நான் வருத்தப்பட ஏதுமில்லை.

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கக் கடவான்" - இயேசு கிறிஸ்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றவர் முன் இதை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மையப்படுத்தி வழக்கம் போல அனுதாபமும் கூட்டமும் சேர்க்கும் முயற்சியாகவே இதைக் கருதுகிறேன்.//

அனுதாபம் தேட முயற்சிக்கிறேன் ? என்னங்க ஆச்சு உங்களுக்கு ? இதுல அனுதாபம் தேட என்ன இருக்கு ? அல்லது உங்களுக்கு வலையில் தனிப்பட்ட எதிரிகள் எவரும் இருந்து அவர்களிடம் சிக்க வைக்க முயற்சிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா ? "வழக்கம் போல் என்று சொல்வதன் நோக்கம் என்ன ?" எனக்காக என்ன அனுதாபப்பட்டீர்கள் ? அனுதாபம் தேடி நான் வாரிக் கட்டிக் கொண்டவை எவை எவை என்று சொன்னால் நன்றாக இருக்கும். இதுக்கு காது இருந்தால் கேட்கலாம் என்று சொன்னதே பரவாயில்லை போலும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///தமிழ் ஓவியா said...

என்னை,எங்களை இழிமகன் என்று இந்து மதம் சொல்லுகிறது அப்படிசொல்லாதே என்று சொல்லி போராடுகிரோம். அந்த எதிர்ப்பைக் காட்ட கருப்புச்சட்டை அணிகிறோம்.
மூடநம்பிக்கைக்காக அல்ல.

என்று இழிவு ஒழிகிறதோ அன்று கருப்புச்சட்டையை கழட்டிவிடுவோம்.
நம்பிக்கைக்காக அணியவில்லை போராட்ட யுத்திகளில் ஒன்று.

நன்றி///

அடையாளங்கள் என்னை பொருத்தவரை எதார்த்தங்களை மறைக்க பயன்படுகின்றது.. அதைதான் சுட்டிகாட்டுகின்றேன். இன்று அப்படிதான் பயன்படுத்துகின்றார்கள். பெரியார் பற்றி பேசிகொண்டு கட்டப்பஞ்சாத்து, இச்சையை போக்கிகொள்ள வாய்ப்புகளாக பயன்படுத்துவதை சுட்டிகாட்டுகின்றேன். பெரியாரை குறைசொல்லவில்லை, ஏசுவை குறைசொல்லவில்லை, நபிகளை குறைசொல்லவில்லை, புத்தனை குறைசொல்லவில்லை. இவர்கள் பெயரை சொல்லி எதாத்தங்களை மறைப்பவர்களை சாடுகின்றேன்...

மிக்க நன்றி தமிழ் ஓவியா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//என்று இழிவு ஒழிகிறதோ அன்று கருப்புச்சட்டையை கழட்டிவிடுவோம்.
நம்பிக்கைக்காக அணியவில்லை போராட்ட யுத்திகளில் ஒன்று.//

இப்படி ஒரு நம்பிக்கையே
மூடநம்பிக்கையில் ஒன்றுதான். எதுவாயினும் உங்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

தல கொஞ்சம் செமா ஹாட்

ஜோ/Joe சொன்னது…

//அல்லது உங்களுக்கு வலையில் தனிப்பட்ட எதிரிகள் எவரும் இருந்து அவர்களிடம் சிக்க வைக்க முயற்சிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா ?//

என்ன கொடுமை இது கோவியாரே!
வலையில் தனிப்பட்ட எதிரிகள் இருக்கும் அளவுக்கு நான் பிரபல பதிவர் அல்ல.

நீங்கள் சிக்க வைப்பதா? ஹா.. ஹா.. சிக்கும் படி நான் எதையும் செய்ததில்லை ..மடியில் கனமில்லை .எனவே வழியில் பயமில்லை.

விடுங்க கோவி ,நான் சொல்லுவதற்கெல்லாம் புதுசு புதுசா நீங்க புரிஞ்சிக்கிறது நல்ல தமாசா இருந்தாலும் ,இதோட நிறுத்திக்குவோம் .நன்றி!

தமிழ் ஓவியா சொன்னது…

//பெரியார் பற்றி பேசிகொண்டு கட்டப்பஞ்சாத்து, இச்சையை போக்கிகொள்ள வாய்ப்புகளாக பயன்படுத்துவதை சுட்டிகாட்டுகின்றேன்.//

அப்படிச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அயோக்கியர்களே.

கொள்கையை முன்னிறுத்தி வாழும் கருப்புச் சட்டைக்காரர்கள் யாரும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை ஞானசேகரன்.

தமிழ் ஓவியா சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...

//என்று இழிவு ஒழிகிறதோ அன்று கருப்புச்சட்டையை கழட்டிவிடுவோம்.
நம்பிக்கைக்காக அணியவில்லை போராட்ட யுத்திகளில் ஒன்று.//

இப்படி ஒரு நம்பிக்கையே
மூடநம்பிக்கையில் ஒன்றுதான். எதுவாயினும் உங்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

ஒரு பிரச்சினையின் அடிப்படையில்தான் (இழிவு ஒழிய) கருப்புச் சட்டை அணிகிறோம். அந்த இழிவு ஒழியும் போது கருப்புச் சட்டையை கழட்டிவிடுவோம் என்ரு சொல்வதும் மூடநம்பிக்கையா?
என்னதான் உங்க லாஜிக்

ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்
இங்கிருந்து திருச்சி போகிறீர்கள். நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்கிறார். அந்தச் சீட்டை பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.எது வரை? திருச்சி போகும் வரை(பிரச்சினை முடிந்தது). அதன் பின் அந்தச் சீட்டை தூக்கிஎறிந்து விடுவது தானே சரியானது?

அதைவிட்டு நான் அந்தச் சீட்டை அப்படியே வைத்து இருப்பேன் என்று சொல்வது அவ்வளவு சரியானது அல்லவோ? அது போல் கருப்புச் சட்டை அணிவது பற்றி நீங்கள் வைக்கும் வாதமும் சரியானது அல்ல.

என்னை மட்டும் சார்ந்தது அல்ல அந்த இழிவு ஒட்டு மொத்த பார்ப்பரலாதாரையும் இழிவு படுத்துகிறது என்வே அந்தப் போராட்டம் தனிப்பட்ட எங்களின் வெற்றி அல்ல ஒடுக்கப்பட்ட பார்ப்ப்னரல்லாதார மக்களின் வெற்றி.


வெற்றி பெற வாழ்த்தும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி ஞானசேகரன்.

இயலுமானல் தோழர் குழலியிடம் நேரடியாக விளக்கம் பெறலாம்.

நன்றி

மணிகண்டன் சொன்னது…

ச்சை ! me the 50th ஜஸ்ட் மிஸ்டு !

evilatheist சொன்னது…

Tamil.Oviya avargale Pagutharivu thalaivar Veeramani mithu oru kuttrachaattu ullathu.Ithai korupavar Cho.Ramasamy.

Avar solgirar "Ivarukku aatchi maarinaal Veeram poi Money gnabagam vanthu vidum endru"

Avar kooruvathil oru unmayum irukkirathu.Periyarin padaippugalai enn Naatu undamai aaka marukkinraar?Ithai thadukka thaane aatchi maarum pothu ani maarugirar.Jayalalithavai aatchiyil irukkum pothu atharikka ithaivida oru kaaranam iruppathaaga enakku theriyavillai.aatchiyil ullavargalukku sombhu adithaal periyar karuthu ennum sothai kaapathi vidalaam endra (mooda)nambikkai thaane

பரிமள ராசன் சொன்னது…

yaaraiyum parpaa(naai) mattravae mudiyaathu.neengal paarpaa(naai) maara mudiyaathu.thamilar nalam patriyum,periyarai patriyum thaangal kondulla karutthukkalai vendumaanaal mattralaam.

தமிழ் ஓவியா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் ஓவியா சொன்னது…

நீங்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் உண்மையல்ல momentumcalls.

நீங்கள் எழுப்பிய அத்துனை கேள்விகளுக்கும் தமிழ் ஓவியா வலைப் பூவில் விடை உள்ளது. அருள்கூர்ந்து ஒரு முறை தமிழ் ஓவியா வலைப்பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டுகிறேன்.

ஊர்சுற்றி சொன்னது…

//தன்னை பிராமணன் என்று அழைத்துக் கொள்வது தன்னைப் போலவே இருக்கும் பிற மனிதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று நினைப்பான்.
//

இந்த இடுகையில் கருத்துகளை தெளிவாக இயம்பியிருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Parimala 1:13 AM, July 21, 2009
yaaraiyum parpaa(naai) mattravae mudiyaathu.neengal paarpaa(naai) maara mudiyaathu.thamilar nalam patriyum,periyarai patriyum thaangal kondulla karutthukkalai vendumaanaal mattralaam.
//

உங்களுக்கு அப்படி ஆக ஆசை இருந்தால் சொல்லுங்க, பார்பன நண்பர்கள் இருக்கிறார்கள், நான் சொன்னா கேட்பார்கள் உங்களுக்கு பூணூல் போட்டுவிட்டு மந்திரம் சொல்லி பார்பானாக மாத்திடுவோம்.

தமிழ் ஓவியா சொன்னது…

//உங்களுக்கு பூணூல் போட்டுவிட்டு மந்திரம் சொல்லி பார்பானாக மாத்திடுவோம்.//

முடியுமா? கோவி.கண்னன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
//உங்களுக்கு பூணூல் போட்டுவிட்டு மந்திரம் சொல்லி பார்பானாக மாத்திடுவோம்.//

முடியுமா? கோவி.கண்னன்.

9:55 AM, July 21, 2009
//

ஏன் முடியாது, இது நம்ம ஆளு படம் பார்த்திங்களா ?

அதைவிடுங்க, உங்களுக்கு பூணூல் வேண்டுமானால் சொல்லுங்க ஏற்பாடு செய்துவிடுவோம். முற்போக்கு பார்பனர்கள் பலர் இருக்காங்க, அவங்க உங்களை பார்பனராக சேர்த்துக் கொள்ளுவாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
//உங்களுக்கு பூணூல் போட்டுவிட்டு மந்திரம் சொல்லி பார்பானாக மாத்திடுவோம்.//

முடியுமா? கோவி.கண்னன்.
//

தமிழ் ஓவியா,
ஒரு பார்பனரிடம் பேசிவிட்டேன், நீங்க விரும்பினால் மாற்றுகிறேன். 8 ஆம் நம்பர் நூல்கண்டு தவிர்த்து செலவு ஒண்ணும் ஆகாதுன்னார். அதையும் அவரே வாங்கி போட்டுவிடுகிறாராம்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
//உங்களுக்கு பூணூல் போட்டுவிட்டு மந்திரம் சொல்லி பார்பானாக மாத்திடுவோம்.//

முடியுமா? கோவி.கண்னன்.
//

தமிழ் ஓவியா, உங்களுக்கு ஐயர், ஐயங்கார் எந்தப் பட்டம் வேண்டும் என்று சொல்லுங்க.

லக்கிலுக், ஜோசப் பால்ராஜ் ஆகியோருக்கு ஏற்கனவே ஐயங்கார் பட்டம் கொடுத்து இருக்கிறேன். டிபிசிடியை ஐயராக மாற்றியாச்சு.

உங்களுக்கு என்ன பட்டம் வேண்டும் ?

தமிழ் ஓவியா ஐயர், தமிழ் ஓவியா தென்கலை ஐயங்கார், தமிழ் ஓவியா வடகலை ஐயங்கார்.

எது பொருத்தமாக இருக்குன்னு சொல்லுங்க போட்டுவிடுவோம்

தமிழ் ஓவியா சொன்னது…

கோவி. கண்ணன் உங்களுக்கு நகைச்சுவை அதுவும் எள்ளல் இயல்பாக வருகிறது. அதுவு அய்யர் வேணுமா?அய்யங்க்கார் பட்டம் வேணுமா? படித்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

தமிழ் ஓவியா "மனிதன்" என்ற நிலையே போதுமானது கோவி.கண்ணன். இதுதான் யதார்த்தமானது


இன்னும் சிரிப்பை அடக்கமுடியவில்லை கோவி. கண்ணன்.

தமிழ் ஓவியா சொன்னது…

//முற்போக்கு பார்பனர்கள் பலர் இருக்காங்க, அவங்க உங்களை பார்பனராக சேர்த்துக் கொள்ளுவாங்க.//

வைதீக பார்ப்பனரை விட லவ்ஹீகப் (முற்போக்கு) பார்ப்பான் மோசமானவன் கோவி.கண்னன். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

நன்றி.

தமிழ் ஓவியா சொன்னது…

//இது நம்ம ஆளு படம் பார்த்திங்களா ?//

மிகச் சிறப்பான படம். நான் விரும்பி பார்த்த படமும் இது தான்.

பாக்கியராஜ் மிகச் சாமார்த்தியமாக எடுத்திருப்பார் இப்படத்தை "மேற்பார்வை" என்று போட்டுக் கொண்டு. ஆனால் டைடிலில் பார்ப்பனர் பாலகுமாரன் பெயரை போட்டிருப்பார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...

கோவி. கண்ணன் உங்களுக்கு நகைச்சுவை அதுவும் எள்ளல் இயல்பாக வருகிறது. அதுவு அய்யர் வேணுமா?அய்யங்க்கார் பட்டம் வேணுமா? படித்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

தமிழ் ஓவியா "மனிதன்" என்ற நிலையே போதுமானது கோவி.கண்ணன். இதுதான் யதார்த்தமானது


இன்னும் சிரிப்பை அடக்கமுடியவில்லை கோவி. கண்ணன்.//

தமிழ் ஓவியா அவர்களே நான் நகைச்சுவையாகச் சொல்லவில்லை, ஐயர், அந்தணர் இவையெல்லாம் பழந்தமிழர்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பெயர்கள், ஆசிரியர் தொழிலை பார்பனர்கள் எடுத்துக் கொண்டதால் அவர்களுடைய சந்ததிகளும் ஐயர், அந்தணர் என்று அழைத்துக் கொண்டனர். ஐயரில் வைணவ பிரிவு ஏற்பட்ட போது ஐயங்கார் என்ற பெயர் வழக்கு ஏற்பட்டது.

ஜியுபோப், கால்டுவெல் ஆகியோரை தமிழர்கள் முறையே ஜியுபோப் ஐயர், கால்டுவெல் ஐயர் என்றே அவர்களின் தமிழார்வத்தையும் தமிழ்தொண்டையும் போற்றி ஐயர் பட்டங்களை வழங்கினர்.

நீங்களோ பிறரோ நினைப்பது போல் 'ஐயர்' பட்டம் பார்பனர்களுக்கு பாத்தியப்பட்ட ஒன்று அல்ல, தமிழார்வளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் பட்டம் தான். அந்தப் பொருளில் தான், புலவர் திருவள்ளுவர். ஐயன் திருவள்ளுவர் என்றே அழைக்கப்படுகிறார்.

இது பற்றி மேலும் இங்கே எழுதி இருக்கிறேன்.

உங்களுக்கு ஐயர் பட்டம் வேண்டுமா என்று கேட்டது நகைச்சுவைக்காக அல்ல.

தமிழ் ஓவியா சொன்னது…

/உங்களுக்கு ஐயர் பட்டம் வேண்டுமா என்று கேட்டது நகைச்சுவைக்காக அல்ல.//

அய்யர் அய்யங்க்கார் என்பது இப்போது ஜாதிப் பெயர்களாகிவிட்டது
இது குறித்து மனுஸ்மிருதி சொல்வது என்ன?
"அனார்யமார்ய கர்மாணம்
ஆர்யம் சானகர்யகர்மிணம்
ஸம்ப்ரதார்யாப்வீதத் தாதா
தஸமென நாஸமாவிதி"
-----மனுஸ்மிருதி


இதன் பொருள்:-

ஆரியன்(பார்ப்பனன்)தொழிலைச் செய்கின்ற அனாரியன்(தமிழன்) ஆரியனும் ஆகப் போவதுமில்லை.அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாக மாட்டான். தொழிழினால் இவ்விருவர்களுக்கு சமத்துவம் தோன்றினாலும் ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானாக முடியாதென்பது பொருள்.

அன்புத் தோழர் கோவி.கண்ணன் அவர்களே ஒருவன் மதம் மாறலாம்,கட்சி மாறலாம். ஆனால் ஜாதி மாறமுடியாது.(அது எனக்கு தேவையுமில்லை) எனக்கு மனிதனாக இருக்கவே விருப்பம்.
எனவே எந்தப் பட்டமும் எனக்கு தேவை இல்லை.

மிக்க நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்