பின்பற்றுபவர்கள்

3 ஜூலை, 2009

கம்யூனிஸ்டுகள் கட்டிக் கொள்ளும் சீனக் கோவணம் !

பழங்காலத்தில் மருத்துவம் முதல் (புத்த)மதம் வரை சீன பயணிகள் யுவான் சுவாங்க் போன்றோர்களால் சீனாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது, சீனத் தத்துவங்களுக்கும் மருத்துவத்திற்கும் இந்தியாவே அடித்தளமாக இருந்திருக்கிறது. கன்ப்யூசியஸ் காலத்தில் சீனர்கள் இந்தியாவை சொர்க பூமியாக நினைத்திருந்திருக்கிறார்கள், 2500 ஆண்டுகளுக்கு முன் சீனத் தத்துவ அறிஞர் கன்ப்யூசியஸ் சீனர்களிடம் 'நீங்கள் நல்ல மனிதனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறப்பீர்கள்' என்று சொன்னாராம். உலகின் முதல் பல்கலைக் கழகமான நாளந்தாவில் சீன மாணவர்கள் தங்கிப் படித்தார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. இந்தியா செல்வச் செழிப்பும், கல்வி வளமும் மிக்க நாடாக இருந்ததால் தான் பல்வேறு அன்னிய படையெடுப்புகளால் முற்றுகை இடப்பட்டு இந்தியாவின் உலோக வளம் முழுவதும் சுரண்டப்பட்டது, வெள்ளையர்களின் அடிமை ஆனோம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம், காரணம் மேற்கல்வி படிப்பறிவு மட்டுமின்றி குன்றாத இயற்கை வளமும் இந்தியாவில் நிறைந்திருப்பதும் தான்.

இந்திய ஏற்றுமதி சந்தை வளரும் நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைவே, இந்தியாவின் ஏற்றுமதிகள் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தான் செய்யப்படுகிறது. மற்றபடி 'எக்ஸ் போர்ட்' குவாலிட்டி என்று வில்லை ஒட்டி உணவு பொருள்களை மட்டும் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கு ஏ(மா)ற்றுகிறார்கள். உலக அளவிலான மிகப் பெரிய வனிக துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறிப்பிடத் தக்க அளவிலும் இல்லை. விலை மிகுதி என்றாலும் உள்நாட்டு மின்னனு பொருள்கள் உற்பத்தி முன்பு நல்ல நிலையில் இருந்தது. உலகமயமாக்கள் என்ற பெயரில் இந்தியா சந்தை வழிகளை திறந்துவிட்டதும் வேறெந்த நாடுகளை விட சீனப் பொருள்களின் வருகை மிகுந்துவிட்டது.

இந்தியாவில் சீனப் பொருள்கள் விற்பனையால் இந்தியாவில் குடிசைத் தொழில்களாக செய்துவந்த அனைத்து கைவினைப் பொருள்களையும் அதைவிட விலைக் குறைவாக கிடைக்கும் சீனப் பொருள்களின் மீது மையல் கொண்டு வாங்குகிறார்கள், இந்திய பொருள்களை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் போனதுடன் அந்த தொழிலைச் செய்து வந்தவர்கள் வேறு வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். முன்பெல்லாம் திருவிழாக்களில் ப்ளாஸ்டிக் கைக்கடிகாரம், பலூன் மற்றும் இத்யாதிகள் விற்கும், அங்கெல்லாம் தற்போது இயங்கக் கூடிய சீன கைக்கடிகாரங்களும்,விலை மலிவான சிறுவிற்பனை சீனத் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. திருவிழாக்களில் சீனப் பொருள்களே மிகுதியாக வைக்கபப்ட்டு விற்பனையும் அதற்குத்தான் மிகுதியாக இருக்கிறது

அதுமட்டுமல்ல சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது எலெக்ட்ரானிக் துறையில் Research and Development நிறுவனம் நடத்தும் நண்பர் சொன்னார், 'சீன கம்பெணிகளுடன் எங்களால் போட்டி இட முடியலை...நாங்கள் 4 லட்சத்துக்கு ஒரு ப்ராடெக்ட் செய்து விற்றால்.....அதே செயல்பாடு உள்ள சீனப் ப்ராடெக்ட் அடிமாட்டு விலைக்கு 1 லட்சத்துக்கு கிடைக்கிறது, நாம் எதுவும் செய்யாமல் அதை வாங்கி விற்றாலே லாபம் ஈட்டலாம், இந்தியாவில் பலர் அப்படித்தான் விற்கிறார்கள், இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் இருக்கும் சிறு சிறு எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் அனைத்தையும் இழுத்து மூடிவிட வேண்டியது தான்' என்றார்.

ஒருகாலத்தில் இந்தியாவை சொர்கமாக நினைத்த சீனர்கள் மீண்டும் இந்திய சந்தையை சொர்கமாக நினைக்கிறார்கள். இது இப்படியே போனால் ஏழை இந்திய விவசாயி கட்டும் கோமணம் கூட சீன உற்பத்தியாகத்தான் இருக்கும் போல. சிங்களர்களைப் போல் தான் சீனர்களும் இந்தியாவின் உறவை தன் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் முன்பு எழுதிய சிறுகவிதை

உலகமயமாக்கல் !

ஏழைகளும் கூட பயனடைகிறார்கள் !
ஆம் ! மானத்தை மறைக்கிறது
சீனக் கோவணம் !

தொட்டதெற்கெல்லாம் ஐரோப்பியர்களை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளமல் இருப்பதற்கு சீனர்களிடம் இருந்து கையூட்டு வருகிறதாம், நான் சொல்லவில்லை பரவலாகப் பேசப்படுகிறது.

முதலாளித்துவம், கம்யூனிசம் இவை எல்லாம் அரசியல்வியாதிகளின் பெயரளவிலான கொள்கைதான், இதில் நாங்க மட்டும் உத்தமர்கள் பேசும் கம்யூனிஸ்டுகளை என்ன செய்யலாம் ?

40 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தியர்கள், இந்தியா தனது வளர்ச்சியில் சீனாவை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது என்று நினைத்தால் அதை நல்ல கனவாக மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியும்.
உண்மை பப்பரப்பா...! என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே இந்தியா சீனாவை நெருங்க முடியும் என்பது உண்மை!

சி தயாளன் சொன்னது…

உண்மைதான். இலத்திரனியல் (வன்பொருட்கள்), மற்றும் உணவு உற்பத்தி, போன்று பலவற்றில் சீனாவிடம் இந்தியா பின் தங்கியுள்ளது.

உடன்பிறப்பு சொன்னது…

நம்மவர்களுக்கு பஞ்சு மிட்டாய் ஆனாலும் பக்கத்து ஊர் மிட்டாய் வாங்கி சாப்பிட்டா தான் பெருமையா இருக்கும் அதிலும் விலை மலிவு என்றால் கேட்கவும் வேண்டுமா

மணிகண்டன் சொன்னது…

கோவணம் கிடைச்சா சரி தான்.

க.பாலாசி சொன்னது…

//உற்பத்தி, போன்று பலவற்றில் சீனாவிடம் இந்தியா பின் தங்கியுள்ளது.//

எதிலும் இந்தியா பின்தங்கவில்லை. அரசியல்வாதிகளின் ’பின்னால்தான்’ தங்கியுள்ளது.

பெயரில்லா சொன்னது…

nallathu

பீர் | Peer சொன்னது…

அதே பொருளை நம்மால் ஏன் மலிவு விலையில் உற்பத்திசெய்ய முடிவதில்லை? சீனர்களின் கடின உழைப்புதான் விலை மலிவிற்குக்கான காரணமாக இருக்கமுடியும். கடின உழைப்பிற்குத் தயங்கும் நம்மவர்கள், சீன மலிவு பொருட்களை இறக்குமதித்து இங்கு சந்தைப் படுத்துகிறார்கள். சிங்கையில் இருக்கும் தங்களுக்கு தெரியாததல்ல, சீனர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை.

அப்பாவி முரு சொன்னது…

அந்தக் கோவணத்தை கொண்டுவந்தது நான் தான் எனக் கூறி தலைவர் கருணாநிதியும், கம்யுனிஸ்ட் தோழர்களும் சண்டையிட்டுக்கொள்வர்

குடுகுடுப்பை சொன்னது…

பீர் | Peer 11:05 PM, July 03, 2009

//

முதல் காரணம், அரசு அளிக்கும் மானியம் கேப்பிட்டல் முதலீடு குறைவு, உலகிலேயே மிகக்குறைந்த சம்பளம் , கமிஸ்டுகளை எதிர்த்து கமிஸ்ட்டு போராட முடியாது. யுவானின் மதிப்பு கிட்டத்தட்ட அரை அமெரிக்க டாலருக்கு சமம், ஆனால் அது கால் அமெரிக்க டாலருக்கு கீழாக ஏற்றுமதியை அதிகரிக்க கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பி.கு:எனக்கு தெரிந்த சீன மக்கள் நல்லவர்கள்.

குடுகுடுப்பை சொன்னது…

கமிஸ்ட்டுகள் சீன கோமணம் கட்டமாட்டார்கள் அவர்களுக்கு அம்மணம்தான் பிடிக்கும்.

கமிஸ்ட்டு அல்லாதவர்கள் அனைவருக்கும் சீனக்கோமணம்தான்

Matra சொன்னது…

//இந்தியாவின் ஏற்றுமதிகள் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தான் செய்யப்படுகிறது//

Not really true. For example, I have seen manhole covers in most US cities with the "Made in India" sign.

Go to IKEA, Walmart and many shops and you will find products made in India.

Now, India is also exporting cellphones, cars and a spectrum of products apart from the traditional leather/textile ones.

Peer said..
//அதே பொருளை நம்மால் ஏன் மலிவு விலையில் உற்பத்திசெய்ய முடிவதில்லை? சீனர்களின் கடின உழைப்புதான் விலை மலிவிற்குக்கான காரணமாக இருக்கமுடியும்//

India can also produce at China's prices if slavery/bonded labor is used and working hours are upto 14 per day. China also has other hidden cost cutting measures.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஏழைகளும் கூட பயனடைகிறார்கள் !
ஆம் ! மானத்தை மறைக்கிறது
சீனக் கோவணம் !//

கோவணத்தை கொடுத்துட்டு மற்றதை எல்லாம் பிடிங்கிட்டாங்க பாஸ்...

தூங்கி இருந்தேன் கோவணமும் போயிருக்கும்...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///காரணம் மேற்கல்வி படிப்பறிவு மட்டுமின்றி குன்றாத இயற்கை வளமும் இந்தியாவில் நிறைந்திருப்பதும் தான்.///

முற்றிலும் உண்மை

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//சிங்களர்களைப் போல் தான் சீனர்களும் இந்தியாவின் உறவை தன் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்.//

சரியா சொன்னிங்க

வலசு - வேலணை சொன்னது…

//
சிங்களர்களைப் போல் தான் சீனர்களும் இந்தியாவின் உறவை தன் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்
//
உண்மையை ரசித்தேன்

லெமூரியன்... சொன்னது…

யதார்த்ததை பதிவு செய்திருக்கிறீர்கள்....இங்கு மட்டுமல்ல.....ஆப்ரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களையும் போலியாக செய்து விற்கிறார்கள் சீனர்கள் ....காப்புரிமை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை அவர்கள்...கம்யுனிஸ்ட்கள் பாவம்....அவர்களால் உள்ளூர் அரசியலையே சரி வர செய்ய இயலவில்லை....இதில் சீனாவை எங்கே எதிர்க்க போகிறார்கள்....நீங்கள் சொன்ன படியே இந்திய விவசாயீ கோமணம் சீனாவில் தயாரிக்கப் பட்டவையாக இருக்கும் வெகுவிரைவில்.....அப்போது இந்திய ஊடகங்கள் இந்தியாவை வல்லரசாக கொண்டாடிக்கொண்டிருக்கும்.....

ராம்.CM சொன்னது…

சரியா சொன்னிங்க.....

வேடிக்கை மனிதன் சொன்னது…

//முன்பெல்லாம் திருவிழாக்களில் ப்ளாஸ்டிக் கைக்கடிகாரம், பலூன் மற்றும் இத்யாதிகள் விற்கும், அங்கெல்லாம் தற்போது இயங்கக் கூடிய சீன கைக்கடிகாரங்களும்,விலை மலிவான சிறுவிற்பனை சீனத் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. திருவிழாக்களில் சீனப் பொருள்களே மிகுதியாக வைக்கபப்ட்டு விற்பனையும் அதற்குத்தான் மிகுதியாக இருக்கிறது//

மக்கள் விரும்பாத எந்தப் பொருளையும் அவர்களிடம் நாம் விற்கமுடியாது. இருபது ரூபாய் குடுத்து பொம்மை கடிகாரம் வாங்குவதை விட கூடுதலாக ஐந்து ரூபாய் குடுத்து இயங்கக் கூடிய சீனக் கடிகாரம் வாங்கவே யாரும் விரும்புவார்கள். ஒன்று நாம் சீனர்களின் பொருளின் தரத்தை விட நம் பொருளின் தரத்தை உயர்துவது அல்லது அவர்களின் தரத்திற்கே தயாரித்து அவர்களின் விலையை விட சற்று குறைவாக விற்பது என்றால் மட்டுமே நம் பொருளை நம் மக்களை வாங்கச் செய்ய முடியும், சீனர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

Renga சொன்னது…

//இந்தியாவின் ஏற்றுமதிகள் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தான் செய்யப்படுகிறது//

Can you give some concrete evidence for this?

Please do not project yourself as "Intellectual Economist" and give wrong information to readers.

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...
அதே பொருளை நம்மால் ஏன் மலிவு விலையில் உற்பத்திசெய்ய முடிவதில்லை? சீனர்களின் கடின உழைப்புதான் விலை மலிவிற்குக்கான காரணமாக இருக்கமுடியும். கடின உழைப்பிற்குத் தயங்கும் நம்மவர்கள், சீன மலிவு பொருட்களை இறக்குமதித்து இங்கு சந்தைப் படுத்துகிறார்கள். சிங்கையில் இருக்கும் தங்களுக்கு தெரியாததல்ல, சீனர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை.

11:05 PM, July 03, 2009
//

விலைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்தே முடிவு செய்யப்படும். ஒரு நாட்டின் ஒரு பொருள் அந்நாட்டில் ஒரு விலைக்குக் கிடைத்தால் வேறொரு நாட்டில் அதைவிட குறைவாகக் கிடைக்க வாய்ப்பாக அரசாங்க மான்யம் போன்றவை உண்டு. உற்பத்தி செலவுகளுக்கு இதுவே காரணம். மான்யம் இல்லாமல் உற்பத்தி செய்யும் பொருள்களின் விலை மிகுதியாகத்தான் இருக்கும், இதில் அரசாங்கத் தவறுகளே மிகுதி, உள்நாட்டில் உற்பத்தியாகும் ஒருபொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இந்தியர்கள், இந்தியா தனது வளர்ச்சியில் சீனாவை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது என்று நினைத்தால் அதை நல்ல கனவாக மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியும்.
உண்மை பப்பரப்பா...! என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே இந்தியா சீனாவை நெருங்க முடியும் என்பது உண்மை!
//

நன்றி ஜோபா.

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
உண்மைதான். இலத்திரனியல் (வன்பொருட்கள்), மற்றும் உணவு உற்பத்தி, போன்று பலவற்றில் சீனாவிடம் இந்தியா பின் தங்கியுள்ளது.
//

உலக வரைப்படத்தில் அவங்க மேலே இருப்பதும் இந்தியா பின் தங்குவதற்கு இயற்கையான காரணம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// உடன்பிறப்பு said...
நம்மவர்களுக்கு பஞ்சு மிட்டாய் ஆனாலும் பக்கத்து ஊர் மிட்டாய் வாங்கி சாப்பிட்டா தான் பெருமையா இருக்கும் அதிலும் விலை மலிவு என்றால் கேட்கவும் வேண்டுமா
//

நம்மவர்கள் சாப்பிடப் போனாலே அடுத்தவன் என்ன சாப்பிடுகிறான் என்று பார்த்து அதையே சொல்வது தானே வழக்கம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவணம் கிடைச்சா சரி தான்.
//

சீனப் பட்டுக் கோவணமாகக் கிடைத்திருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//பாலாஜி said...
//உற்பத்தி, போன்று பலவற்றில் சீனாவிடம் இந்தியா பின் தங்கியுள்ளது.//

எதிலும் இந்தியா பின்தங்கவில்லை. அரசியல்வாதிகளின் ’பின்னால்தான்’ தங்கியுள்ளது.

9:02 PM, July 03, 2009
//

அரசியல் தான் காரணம் ! சரியாச் சொன்னிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// pukalini said...
nallathu
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...
அந்தக் கோவணத்தை கொண்டுவந்தது நான் தான் எனக் கூறி தலைவர் கருணாநிதியும், கம்யுனிஸ்ட் தோழர்களும் சண்டையிட்டுக்கொள்வர்
//

ஆளுக்கு பாதியாக பிய்த்துக் கொள்வார்கள் நீளவாக்கில் இல்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// குடுகுடுப்பை said...
பீர் | Peer 11:05 PM, July 03, 2009

பி.கு:எனக்கு தெரிந்த சீன மக்கள் நல்லவர்கள்.
//

தனிப்பட்ட மக்களின் குண நலன்களை பொதுப்படுத்திப் பார்க்க நானும் விரும்புவதில்லை ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு சில நல்லவர்களின் செயலுக்காக எல்லோரும் அப்படியே என்று சொல்வதும் தவறாகவே படுகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
கமிஸ்ட்டுகள் சீன கோமணம் கட்டமாட்டார்கள் அவர்களுக்கு அம்மணம்தான் பிடிக்கும்.

கமிஸ்ட்டு அல்லாதவர்கள் அனைவருக்கும் சீனக்கோமணம்தான்
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra said...

Not really true. For example, I have seen manhole covers in most US cities with the "Made in India" sign.//

இந்தியாவில் இரும்பு உற்பத்தி மிகுதி எனவே மேன் ஹோல் எனப்படும் மூடிகள் வெள்ளையர்களால் அவர்களின் இந்திய நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டது.

//Go to IKEA, Walmart and many shops and you will find products made in India.//
அது கூட எம் என் சி ப்ராடெக்டாகத் தான் இருக்கும். முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி மென்பொருள், உணவுப்பொருள் தவிர்த்து குறிப்பிடத் தகுந்த அளவு இல்லை

//Now, India is also exporting cellphones, cars and a spectrum of products apart from the traditional leather/textile ones.//

இது எல்லாமே மல்டி நேசனல் நிறுவனங்களின் தயாரிப்புகள், உற்பத்தி செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் செயல்படும் அவர்களின் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
//ஏழைகளும் கூட பயனடைகிறார்கள் !
ஆம் ! மானத்தை மறைக்கிறது
சீனக் கோவணம் !//

கோவணத்தை கொடுத்துட்டு மற்றதை எல்லாம் பிடிங்கிட்டாங்க பாஸ்...

தூங்கி இருந்தேன் கோவணமும் போயிருக்கும்...
//

தூங்கும் போது இல்லை, விழித்துக் கொண்டு இருக்கும் போது தான் அவையும் பறிபோகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//வலசு - வேலணை said...
//
சிங்களர்களைப் போல் தான் சீனர்களும் இந்தியாவின் உறவை தன் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்
//
உண்மையை ரசித்தேன்
//

நன்றி வேலணை

கோவி.கண்ணன் சொன்னது…

//மக்கள் விரும்பாத எந்தப் பொருளையும் அவர்களிடம் நாம் விற்கமுடியாது. இருபது ரூபாய் குடுத்து பொம்மை கடிகாரம் வாங்குவதை விட கூடுதலாக ஐந்து ரூபாய் குடுத்து இயங்கக் கூடிய சீனக் கடிகாரம் வாங்கவே யாரும் விரும்புவார்கள். ஒன்று நாம் சீனர்களின் பொருளின் தரத்தை விட நம் பொருளின் தரத்தை உயர்துவது அல்லது அவர்களின் தரத்திற்கே தயாரித்து அவர்களின் விலையை விட சற்று குறைவாக விற்பது என்றால் மட்டுமே நம் பொருளை நம் மக்களை வாங்கச் செய்ய முடியும், சீனர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

3:28 PM, July 04, 2009
//
மேலே நான் கொடுத்துள்ள அதே பதிலைத் தருகிறேன்.

விலைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்தே முடிவு செய்யப்படும். ஒரு நாட்டின் ஒரு பொருள் அந்நாட்டில் ஒரு விலைக்குக் கிடைத்தால் வேறொரு நாட்டில் அதைவிட குறைவாகக் கிடைக்க வாய்ப்பாக அரசாங்க மான்யம் போன்றவை உண்டு. உற்பத்தி செலவுகளுக்கு இதுவே காரணம். மான்யம் இல்லாமல் உற்பத்தி செய்யும் பொருள்களின் விலை மிகுதியாகத்தான் இருக்கும், இதில் அரசாங்கத் தவறுகளே மிகுதி, உள்நாட்டில் உற்பத்தியாகும் ஒருபொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

ரமேஷ், நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

மீசைக்காரி ராம் CM,

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Renga said...

Can you give some concrete evidence for this?

Please do not project yourself as "Intellectual Economist" and give wrong information to readers.

10:47 AM, July 05, 2009
//

இதில் விவரங்கள் கொடுக்க பெரிதாக ஒன்றுமே இல்லை. சாப்பாட்டுப் பொருள்கள் அதுவும் இந்திய நிறுவனங்களில் விற்கப்படுவதைத் தவிர்த்து சிங்கையில் இந்திய தயாரிப்புகள் எதையுமே பார்த்தது இல்லை. என்ன என்ன பொருள்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்படுகிறது என்று நீங்களே சொல்லுங்கள்

பீர் | Peer சொன்னது…

//இதில் அரசாங்கத் தவறுகளே மிகுதி, //

இருக்கலாம்.

அதற்காக,

//உள்நாட்டில் உற்பத்தியாகும் ஒருபொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.//

என்பது எப்படி சரியாகும்,
(உ.ம்) உள்நாட்டில் பற்றாக்குறை காரணமாக தானிய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் பருப்பை இறக்குமதி செய்து 30 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது?
அண்மையில் பருப்பு விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்போவதாக அரசு அறிவிப்பு வந்த பிறகுதான் பருப்பு விலை குறைந்தது என்பதை நினைவில் கொள்க.

Renga சொன்னது…

//இதில் விவரங்கள் கொடுக்க பெரிதாக ஒன்றுமே இல்லை. சாப்பாட்டுப் பொருள்கள் அதுவும் இந்திய நிறுவனங்களில் விற்கப்படுவதைத் தவிர்த்து சிங்கையில் இந்திய தயாரிப்புகள் எதையுமே பார்த்தது இல்லை. என்ன என்ன பொருள்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்படுகிறது என்று நீங்களே சொல்லுங்கள்//

I thought you have some basic information and writing about economics.. now I realized your standards... GOOD BYE...(I don't want to waste my time)...

ஜோ/Joe சொன்னது…

////பாலாஜி said...
//உற்பத்தி, போன்று பலவற்றில் சீனாவிடம் இந்தியா பின் தங்கியுள்ளது.//

எதிலும் இந்தியா பின்தங்கவில்லை. அரசியல்வாதிகளின் ’பின்னால்தான்’ தங்கியுள்ளது.

9:02 PM, July 03, 2009
//

அரசியல் தான் காரணம் ! சரியாச் சொன்னிங்க
//
கம்யூனிஸ்டுகளை பாராட்டுவது மாதிரியல்லவா இருக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

/Renga said...

I thought you have some basic information and writing about economics.. now I realized your standards... GOOD BYE...(I don't want to waste my time)...
//

வருகைக்கு நன்றி ! எனது கட்டுரைகள் அனைத்துமே நடப்புகளை வைத்து மேலோட்டமாகத்தான் எழுதப்பட்டு இருக்கும், புள்ளிவிவரப் புலிகள் இருந்தும் அமெரிக்காப் போன்ற நாடுகள் பொருளியலில் மண்ணைக் கவ்வியதால் புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு பிராக்டிகலாக உதவும் என்று தெரியவில்லை. நடக்கப் போவதை ஏற்கனவே கிடைக்கும் புள்ளிவிவரங்கள் தீர்மாணிப்பது இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்