குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம், குழந்தைகளை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு தண்டனைக் கொடுக்கிறோம் என்று அரசு சொல்கிறது. சாதனைக்காக பயற்சி என்ற பெயரில் துன்புறுத்தப்படும் குழந்தைகளின் நிலைகளை கண்டு கொள்பவர்கள் குறைவே, ஏனெனில் இவை பெற்றோர்களின் ஆசியுடன் நடக்கும் சாதனை வன்முறை.
படத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கு பணிரெண்டு வயதிற்குள் தான் இருக்கும், பைக் ஓட்டும் படுபாவியின் கவனம் கொஞ்சம் பிசகினாலும் அவள் வயிற்றிலோ, மார்பிலோ மொத்த பைக் எடையும் இறங்கி அவளது வாழ்க்கையையே முடக்கிவிடும். சாதனைகள் தவிர்த்து, கடுமையான பயிற்சியின் போது காயம்படும் குழந்தைகள், இறக்கும் குழந்தைகள் பற்றிய செய்திகள் வெளியே வருவது கிடையாது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(படம் நன்றி தினமலர்)
குழந்தைகளை அவர்களது மனதுக்கும் வயதுக்கும் மீறிய செயல்களை செய்ய வைப்பதும், அதனை சாதனையாக எண்ணி மகிழ்வதும், பெற்றோர் தம் வீண் பெருமைக்கும் பேராசைக்கும் குழந்தைகளை வற்புறுத்துவதும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக கண்டிக்கப் படவேண்டும், அந்தக் குழந்தையைத் தவிர்த்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.
குழந்தைகளை வேலை வாங்குவது, அடிப்பது, காயப்படுத்துவது போலவே அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுப்பதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன் செயல்கள் (Child Abuse) தான்.
37 கருத்துகள்:
இல்லை,
\\குழந்தைகளை அவர்களது மனதுக்கும் வயதுக்கும் மீறிய செயல்களை செய்ய வைப்பதும், அதனை சாதனையாக எண்ணி மகிழ்வதும், பெற்றோர் தம் வீண் பெருமைக்கும் பேராசைக்கும் குழந்தைகளை வற்புறுத்துவதும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக கண்டிக்கப் படவேண்டும், அந்தக் குழந்தையைத் தவிர்த்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.\\
மேற்கண்ட நோக்கம் இல்லாது குழந்தைகளின் விருப்பத்தின்பேரில், நடக்கப்போவதின் சாதக பாதகங்களை அறிய வைத்து அவர்கள் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
அது அவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோநிலையை வளர்க்கும்.
இல்லையெனில் 18 வயது வரை குழந்தைகள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு விடுவர்.
இதில் விபத்து என்பது அதிக வாய்ப்பில்லை.,
சாதரண வாழ்வில் கூட விபத்துக்களுக்கு வாய்ப்பு உள்ளது.
//மேற்கண்ட நோக்கம் இல்லாது குழந்தைகளின் விருப்பத்தின்பேரில், நடக்கப்போவதின் சாதக பாதகங்களை அறிய வைத்து அவர்கள் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
அது அவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோநிலையை வளர்க்கும்.
இல்லையெனில் 18 வயது வரை குழந்தைகள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு விடுவர்.
இதில் விபத்து என்பது அதிக வாய்ப்பில்லை.,
சாதரண வாழ்வில் கூட விபத்துக்களுக்கு வாய்ப்பு உள்ளது.//
பெரும்பாலும் சாதனைகள் பலருக்கு முன்பு நடத்தப் படுவதால் வெளியே தெரிகிறது, கடுமையான பயிற்சியின் போது காயம்படும், இறந்து போகும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஊடகங்களை எட்டாது.
சாதாரண வாழ்வில் விபத்து எதிர்பாராத ஒன்று யாரும் ஆணியின் மீது விரும்பி அமர்ந்து கொள்வதில்லை.
//மேற்கண்ட நோக்கம் இல்லாது குழந்தைகளின் விருப்பத்தின்பேரில், நடக்கப்போவதின் சாதக பாதகங்களை அறிய வைத்து அவர்கள் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
//
எந்தக் குழந்தையும் என் மீது பைக் ஏற்றுங்கள் சாதனை செய்ய விரும்புகிறேன் என்று கூறுவது இல்லை.
படத்தை பார்த்ததும் மனது கனமானது எப்போதும் போல..?
மிக நல்ல கருத்து தோழரே.
யாருக்கும் எந்த வித பயனும் தராத எந்த சாதனையும் ஊக்கு விக்கக் கூடாது.உடல் மற்றும் உயிருக்கு கேடு செய்யும் எந்த சாதனையயும் தற்கொலை முயற்சியாக கருதி தண்டிக்கப்பட வேண்டும்,
இது போலவே
சின்ன, பெரிய திரைகளிலும்
குழந்தைத்தனத்தை இழக்கின்றன குழந்தைகள்.
விழிப்புணர்வு பதிவு கோவியாரே!
நான் ஒரு முறை தொண்ணூறுகளில் கிளாஸ் திண்கிறவனை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
சன் டிவியில்... தமிழ்மாலையில்...
நல்லா இருக்கட்டும்...
இதுபோன்ற சாதனைகளை ஒரு கீழ்த்தரமான செயலாக கருதவேண்டுமே தவிற, ஊக்குவித்தல் கூடாது. தேவையான விழிப்புணர்வு. பாராட்டுக்கள் கோவியாரே.
நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு....!
நியாயமான கோபம்.
ஏதாவது பண்ணனும் சார்.
ஆமாம், காலையில் தினமலர் திறந்தவுடன் முதலில் இந்த படத்தைப் பார்த்ததும் எரிச்சலும், கோபமும் வந்தது அந்த பைக் ஓட்டியின் மீது.
18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்... kandippaaga seiyalaam....
அவனுங்க நம்மள கண்டுக்கபட்டானுங்க ..திருப்பியும் இது மாதிரி ஏதாவ்து கொரங்கு தனம் பண்னிக்கிட்டு திரிவானுங்க
//அக்னி பார்வை said...
அவனுங்க நம்மள கண்டுக்கபட்டானுங்க ..திருப்பியும் இது மாதிரி ஏதாவ்து கொரங்கு தனம் பண்னிக்கிட்டு திரிவானுங்க
//
அக்னி,
ஆளு யாருன்னு பார்த்து மேலே ஏறு உட்கார்ந்துவிடுங்க. அதுதான் சரியான தண்டனை. இல்லாடி WWF மாதிரி அவங்க மேல குதிக்கனும் :)
//Raja said...
ஆமாம், காலையில் தினமலர் திறந்தவுடன் முதலில் இந்த படத்தைப் பார்த்ததும் எரிச்சலும், கோபமும் வந்தது அந்த பைக் ஓட்டியின் மீது.
//
நானும் அந்தப் படத்தைப் பார்த்ததும் அப்பறம் படிக்கல, படத்தை தள்ளிக் கொண்டு வந்துவிட்டேன்
//ivingobi said...
18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்... kandippaaga seiyalaam....
4:49 PM, July 29, 2009
//
நன்றி !
//Raja said...
ஆமாம், காலையில் தினமலர் திறந்தவுடன் முதலில் இந்த படத்தைப் பார்த்ததும் எரிச்சலும், கோபமும் வந்தது அந்த பைக் ஓட்டியின் மீது.
2:20 PM, July 29, 2009
//
அவன் இன்னும் பல குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கைகளில் பைக் ஓட்டி வந்திருக்கிறான், தட்ஸ் தமிழில் படத்தோடு போட்டு இருக்கிறார்கள்
//கதியால் said...
நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு....!
//
கதியால் நன்றி !
//கில்ட்டன் said...
இதுபோன்ற சாதனைகளை ஒரு கீழ்த்தரமான செயலாக கருதவேண்டுமே தவிற, ஊக்குவித்தல் கூடாது. தேவையான விழிப்புணர்வு. பாராட்டுக்கள் கோவியாரே.
//
பாராட்டுக்கு நன்றி கில்ட்டன்
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
விழிப்புணர்வு பதிவு கோவியாரே!
நான் ஒரு முறை தொண்ணூறுகளில் கிளாஸ் திண்கிறவனை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
சன் டிவியில்... தமிழ்மாலையில்...
நல்லா இருக்கட்டும்...
//
பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி வெளிச்ச பதிவரே
//நட்புடன் ஜமால் said...
இது போலவே
சின்ன, பெரிய திரைகளிலும்
குழந்தைத்தனத்தை இழக்கின்றன குழந்தைகள்.
//
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப் படவேண்டும் ஜமால்
//சாதிக் அலி said...
மிக நல்ல கருத்து தோழரே.
யாருக்கும் எந்த வித பயனும் தராத எந்த சாதனையும் ஊக்கு விக்கக் கூடாது.உடல் மற்றும் உயிருக்கு கேடு செய்யும் எந்த சாதனையயும் தற்கொலை முயற்சியாக கருதி தண்டிக்கப்பட வேண்டும்,
//
தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் அடுத்து தொடராமல் இருப்பார்கள்
//கிறுக்கன் said...
படத்தை பார்த்ததும் மனது கனமானது எப்போதும் போல..?
//
எனக்கும் தான் மிகவும் மனதை பாதித்தது
இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
பல கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என குழந்தைப் பருவத்தைக் கொள்ளையிடும் வேடிக்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. சிறுவயதில் பல கலைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பின்றி போனதால் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
அதேவேளையில் வாய்ப்பிருப்பதால் பல கலைகள் கற்றுக்கொள்ள வேண்டுமென குழந்தையைப் பணிக்கும்போது ஒரே கேள்விதான் என்னை நோக்கிப் பாய்கிறது 'நீ இதையெல்லாம் ஏன் கற்றுக்கொள்ளவில்லையென?'
'வலியின்றி வெற்றி இல்லை' என இருந்தாலும் சில அதிகப்பிரசங்கித்தனமான விசயங்களை சாதனை என்கிற பெயரில் நடத்தாமல் தவிர்க்கலாம்.
எது அதிகப்பிரசங்கித்தனம், எது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை என்பதை தீர்மானிப்பவர் வேறுபடுவதால் இதுபோன்ற அவலநிலைத் தொடர்கிறது. வெறும் கண்டிப்புகளால் மட்டுமே இவை நின்றுவிடாது, செயல்படுத்துவோம்.
///குழந்தைகளை வேலை வாங்குவது, அடிப்பது, காயப்படுத்துவது போலவே அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுப்பதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன் செயல்கள் (Child Abuse) தான்.///
உண்மைதான்
நீங்கள் சொல்லி இருக்கறது பலவிதத்துல சரியா இருந்தாலும் இதுக்கு எல்லாம் முறைபடுத்தறது தான் சரியான தீர்வா இருக்கும். அதே மாதிரி, அத்தனையையும் தடை செய்ய முடியுமான்னு சொல்ல தெரியல. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பதினைஞ்சு, பதினாறு வயசுல சர்வசாதாரணமா விளையாடறாங்க. ஒலிம்பிக் Gymnastics champion 18 வயசுக்கு உள்ளார ஈசியா வராங்க. எல்லாத்தையும் தடை செஞ்சா, you lose child prodigies.
ஆனா, அதே சமயம் பாதுகாப்பே இல்லாம குழந்தைகளை வருத்தி செய்ய வைக்கறது கொடுமை தான். என்னைய ஸ்கூலுக்கு அனுப்பின போது அப்படி தான் இருந்தது.
//மணிகண்டன் said...
நீங்கள் சொல்லி இருக்கறது பலவிதத்துல சரியா இருந்தாலும் இதுக்கு எல்லாம் முறைபடுத்தறது தான் சரியான தீர்வா இருக்கும். அதே மாதிரி, அத்தனையையும் தடை செய்ய முடியுமான்னு சொல்ல தெரியல. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பதினைஞ்சு, பதினாறு வயசுல சர்வசாதாரணமா விளையாடறாங்க. ஒலிம்பிக் Gymnastics champion 18 வயசுக்கு உள்ளார ஈசியா வராங்க. எல்லாத்தையும் தடை செஞ்சா, you lose child prodigies.
//
மணி விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிச் சொல்லவில்லை, அதில் ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி எடுப்பார்கள், எனக்கெல்லாம் விளையாட்டுப் போட்டி என்றாலே வேகமாக எதிர்பக்கம் ஓடித்தான் பழக்கம்.
ஒரு சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஆற்றல் உண்டு அவை கலைகள், விளையாட்டு மற்றும் படிப்பு அறிவுடன் தொடர்புடையது மட்டும் தான். - என்று பதிவின் தொடக்கத்திலேயே விளையாட்டு என்பது தனித் திறமை அல்லது பயிற்சியினால் நன்றாக வரமுடியும் என்பதற்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
நான் சுட்டி இருப்பது வதை, கரணம் தப்பினால் மரணம் போன்ற சாதனைகள் தொடர்புடையது.
ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
கண்ணன்.. அந்த புகைப்படத்தில் மரத்தின் பக்கத்தில் ஒரு பெண் சிரிப்பதைப் பாருங்கள்...
என்ன கொடுமையான ரசனை
இதைப் படிக்காமல் போயிருந்தால் வெட்கக்கேடு
மனதை பாதித்தது
எதை தடை செய்தாலும் செய்ய விட்டாலும். உயிருக்கு ஆபத்தான சாதனைகளை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். அவசியமான பதிவு. நன்றி கோவி.கண்ணன்.
அந்த போட்டோவை பார்க்கும்போதே மனம் பதறுகிறது.
அருமையான பதிவு அண்ணா. பகிர்வுக்கு நன்றிகள். சிறுவர்களைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது சிறுவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பாக நான் பல இடுகைகளை இட்டு இருக்கிறேன் முடிந்தால் வந்து பாருங்கள் அண்ணா..
தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_29.html
உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்...
phone podunga thalai nanum vanthu velukkuran sariyana pathivu ... Nalla vizhippunarvu pathivu
கருத்துரையிடுக