பின்பற்றுபவர்கள்

24 ஜூலை, 2009

மின்னணு வாக்கு இயந்திரங்களை முற்றிலும் அழிக்கலாம் !

மின்னணு வாக்குப் பதிவு வரவேற்க்கக் கூடிய ஒன்று தான். இதன் மூலம் கள்ள வாக்குப் பதிவை தவிர்க்க முடியாதெனினும் விரைவாக வாக்கு எண்ணிக்கைக்கு வழி வகை செய்கிறது. ஆனால் இவற்றிற்கும் ஆன செலவுகளுக்கான பலனை இவைத் தரவில்லை என்பதே உண்மை, வாக்குப் பதிவின் போது இயந்திரங்கள் பழுதானதும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் அடுப்பொடிகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பெற்றிக் கொண்டு தங்களுக்கே வாக்களித்துக் கொண்டு வாக்களர்களைத் துறத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. வாக்குப் பதிவை வீடியோ எடுப்பது போன்ற நடவெடிக்கைகள் வெறும் வாக்களர் கண் துடைப்பாகத்தான் நடைபெறுகின்றன. வாக்காளர்களின் சான்றாவணங்களில் எதோ ஒன்று இருந்தால் போதும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்க முடியும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தாலும் மின்னனு வாக்குப் பதிவு முழு வெற்றிப் பெறவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மறுப்பதற்கும் திணறுகிறது. முறைகேடு நடைபெறுவதில்லை என்கிற தேர்தல் ஆணையத்தின் வெறும் நம்பிக்கை வழியுறுத்தல் மட்டுமே என்பதாகவே எதிர்கட்சிகள் கருதுகின்றனர்.

உலகில் முதன் முறையாக, உலகில் மாபெரும் மின்னணுவாக்குப் பதிவு என்பதெல்லாம் வெறும் சாதனை வாக்கியங்கள் தானா ? மின்னணு வாக்குப் பதிவை முறை படுத்த முடியாதா ? கண்டிப்பாக முறைப் படுத்த முடியும். அதற்கு முதலில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை எல்லாம் ஒரு பெரிய திடலில் குவித்து வைத்து புல்டவுசரை விட்டு ஏற்றி அழித்துவிட்டு மக்கும் குப்பையாக மாற்றி ஆழக் குழியில் புதைக்க வேண்டும். தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது, இன்றும் இந்த பழைய முறை வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துக் கொண்டிருந்தால் தேர்தல் தோறும் குழப்பமே வரும். மின்னணு வாக்குப் பதிவை தற்போது இருக்கும் தொழில் நுட்ப முறையில் இன்னும் சிறப்பானதாக 100 விழுக்காடு நம்பகத் தன்மையுடன் நடத்த முடியும்.

எப்படி ?

இன்று உள்ள சிறப்பான மின்னணு தொழில் நுட்பங்கள் இதற்கு உதவி செய்யும்
1. கிளைன்ட் சர்வர் எனப்படும் பொதுவான டேட்டாபேஸ் சர்வர் மற்றும் அதனை தொடர்பு கொள்ளும் கணிணிகள்
2. தொடுதிரைகள்
3. கம்பியில்லா (வயர்லெஸ்) இணைப்பு
4. வாக்களர்களின் ஆள்காட்டி விரல் ரேகை பதிவு (நன்றி பதிவர் அறிவிலி - இராஜேஷ் குமார்)

வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரியுடன், புகைப்படம் மற்றும் அவர்களின் விரல் ரேகைகளை தொகுதிக்கு ஒன்றாக சர்வர் கணிணியில் பதிந்துவிட்டு, அந்த சர்வர் கணிணியை பல்வேறு வாக்குச் சாவடியில் வைக்கப்படும் க்ளைண்ட் கணிணியுடன் இணைத்து, கைரேகை படிக்கும் கருவியுடன் இணைத்துவிட்டால் போதும்.
ஒவ்வொரு வாக்களர் வாக்களிக்கும் போதும் கைரேகையை ஒப்பிட்டு வாக்களிக்க அனுமதிக்கும் படி மென்பொருள் அமைத்துவிட்டால் போதும். வாக்களர்கள் கைரேகையை சரிபார்த்தவுடன் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தை தொடுதிரையில் தொடுவதன் மூலம் வாக்குப் பதிவை செய்யலாம். ஒரு 17" தொடுதிரைக்கு 20 வேட்பாளர் வரை விரல் தொடுவதற்கு ஏற்ற அகலங்களுடன் வடிவமைத்து வைக்க முடியும். 40 வேட்பாளர் இருந்தால் அருகருகே இரண்டு தொடுதிரை வைத்துவிட்டால் போதும், கணிணிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடுதிரை இணைக்க கிராபிக்ஸ் வன்பொருளை (Video Graphic Cards) அதே எண்ணிக்கையில் சேர்த்தாலே போதும். கணிணிகளில் இந்த வசதியை சேர்ப்பதும் எளிதுதான். மிகுந்த அளவாக 100 வேட்பாளர்கள் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு கணிணியும் 5 தொடுதிரைகளும் போதுமானது. இன்றைய தேதிகளில் இதற்கு ஆகும் செலவு ஒரு தொகுதிக்கு ரூ 50,000 மட்டுமே, இந்த கணிணிகளை தகுந்த மின் கலன் Backup உடன் வைத்துவிட்டால் திடீர் மின்சாரம் தடைபெற்றாலும் தொடர்ந்து இயங்கும். 32" தொடுதிரைகளைப் பயன்படுத்தினால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடுதிரைகள் தேவை இருக்காது.

வாக்குப்பதிவு க்ளைண்ட் கணிணிகள் அணைத்தும் சர்வர் கணிணியுடன் வயர்லஸ் இணைப்புடன் இருப்பதால் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை.
வாக்களித்தவர் மீண்டும் வாக்களிக்காத வண்ணம் விரல் ரேகை பதிவை ஒப்பிட்டு கணிணி மென் பொருள் தடுக்கும் வண்ணம் அமைத்துவிட்டால் போதும். வாக்குப் பதிவை ஆளில்லா பணமெடுக்கும்
இயந்திரம் அமைப்பது போல் அமைத்துவிட்டு ஒரு ஏகே 47 னுடன் ஒன்று/இரண்டு காவல் அலுவலரைப் போட்டாலே போதும், வேண்டுமென்றால் பாதுகாப்பு கேமரா ஒன்றே ஒன்று பொருத்தலாம். வாக்குப் பதிவுக்கு இவ்வளவு அலுவலர்களும் அவர்களின் பந்தாக்களும் வெகுவாக குறைக்க முடியும்.

அனைத்து சர்வர் கணிணிகளையும் (ஏற்கனவே) தலைமை சர்வர் கணிணியுடன் இணைத்துவிட்டால் போதும், வாக்குப் பதிவு முடிந்ததும் சில நொடிகளில் வெற்றியாளர்களையும், அணைத்து வாக்குப் பதிவு விவரங்களையும் அறிவித்துவிட முடியும். இன்று வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தில் இதைச் செயல்படுத்துவது மிகவும் எளிது, பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களைவிட வாக்களிக்கும் முறையும் எளிது, மிகவும் பாதுகாப்பானது. வாக்குப் பதிவு க்ளைண்ட் கணினியைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும், தண்ணீரையே அதில் கொட்டினாலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்குகளை ஆளுமை அதிகாரவர்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த முறை மின்னணு வாக்குப் பதிவின் தேர்தல்கள் பூசல், புகார்கள் குறைந்து அமைதியாகவும் நம்பகத் தன்மையுடனும் நடக்கும்.

34 கருத்துகள்:

Sambar Vadai சொன்னது…

அது 'மின்னனு' இல்லை - மின்னணு - மின் + அணு

கோவி.கண்ணன் சொன்னது…

//Sambar Vadai said...
அது 'மின்னனு' இல்லை - மின்னணு - மின் + அணு
//

பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி சாம்பார் வடை.

மாற்றி இருக்கிறேன்

பிரபாகர் சொன்னது…

அறிவுப்பூர்வமான தகவல்... நன்றி கண்ணன்.

பிரபாகர்...

ஜோ/Joe சொன்னது…

தேவையான பதிவு.

என்னைப் பொறுத்தவரை முதலில் செய்ய வேண்டியது நாடு தழுவிய ஒற்றை எண் கொண்ட குடியாளர் அட்டை (சிங்கையில் இருப்பது போல) முதலில் செய்ய வேண்டியது ..அதுவே இல்லாத போது மின்னணு வாக்குப்பதிவு ,வாக்காளர் அட்டை என்பதெல்லாம் கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான்.

Sambar Vadai சொன்னது…

நன்றி கோவி.கண்ணன்.

வடை பத்தி நேற்று பதிவு எழுதினீர்கள். பெரியவர்களுக்கும் ஊறு விளைவிக்காத 'சாம்பார்(ரில் முக்கிய) வடை' பற்றி எழுத விட்டுவிட்டீர்களே :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//Sambar Vadai said...
நன்றி கோவி.கண்ணன்.

வடை பத்தி நேற்று பதிவு எழுதினீர்கள். பெரியவர்களுக்கும் ஊறு விளைவிக்காத 'சாம்பார்(ரில் முக்கிய) வடை' பற்றி எழுத விட்டுவிட்டீர்களே :-)
//

அது பெரியவர்களுக்கான பதிவு....சாம்பார் வடை பெரியவர்களுக்கு சரி வராது, சாம்பார் வடை மட்டுமல்ல...உருளை கிழங்கு போண்டா கூட சரிவராது :)

மன்னிக்கனும், சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். பதிவு முழுவதும் கிரியை வரிக்கு வரி வாரனும் என்று நினைத்ததில் சாம்பார் வடை மிஸ் ஆகிவிட்டது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Prabhagar said...
அறிவுப்பூர்வமான தகவல்... நன்றி கண்ணன்.

பிரபாகர்...
//

நன்றி பிரபாகர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
தேவையான பதிவு.//
நன்றி !

//என்னைப் பொறுத்தவரை முதலில் செய்ய வேண்டியது நாடு தழுவிய ஒற்றை எண் கொண்ட குடியாளர் அட்டை (சிங்கையில் இருப்பது போல) முதலில் செய்ய வேண்டியது ..அதுவே இல்லாத போது மின்னணு வாக்குப்பதிவு ,வாக்காளர் அட்டை என்பதெல்லாம் கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான்.
//

குடியாளர் அட்டை கொடுக்கப் படவேண்டும், அதில் 'இந்த அட்டையை அடகு வைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்ற குறிப்பு இருக்க வேண்டும்.

Raja சொன்னது…

அப்பவும் server admin/db admin நினைச்சா வோட்ட மாத்தலாம்னு அல்லது மாத்திட்டாங்கன்னு தோத்தவங்க சொல்வாங்களே?

குடந்தை அன்புமணி சொன்னது…

//Raja said...
அப்பவும் server admin/db admin நினைச்சா வோட்ட மாத்தலாம்னு அல்லது மாத்திட்டாங்கன்னு தோத்தவங்க சொல்வாங்களே?//

தோத்தவனுக்கு சொல்ல ஆயிரம் காரணங்கள்...
அப்ப என்னதான் செய்யிறது...?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல தகவல்கள்,... அமேரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் ஏன் இப்படிப்பட்ட தொழில்நுட்பம் கொண்டுவரவில்லை?

கோவி.கண்ணன் சொன்னது…

//Raja said...
அப்பவும் server admin/db admin நினைச்சா வோட்ட மாத்தலாம்னு அல்லது மாத்திட்டாங்கன்னு தோத்தவங்க சொல்வாங்களே?

1:59 PM, July 24, 2009
//

அப்படியெல்லாம் நினைத்தால் எந்த ஒரு வங்கியிலும் server admin/db வேலைக்கே வைத்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் முறைப் படுத்த வழிகள் உண்டு. அரசியல்வாதிகள் கட்டுபாடு இல்லாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படனும் அப்படி இருந்தால் 100 விழுக்காடு நேர்மையான வாக்குப்பதிவு நடக்கும்.

மணிகண்டன் சொன்னது…

கோவி,
இப்பொழுது இருக்கும் முறை நன்றாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு இருந்தது போல் கள்ளவோட்டு பிரச்சனைகளும் இல்லை. மிகவும் குறைந்தே உள்ளது. ஓரிரு இடங்களில் இயந்திரங்கள் பழுதானாலும் உடனே சீர் செய்யப்படுகின்றன. அதே போன்று இந்தியாவில் உள்ள அனைவரது ரேகையும் ஓரிடத்தில் இருப்பது எனக்கு சரியாக படவில்லை. அதைத் தவிர நீங்கள் கூறி உள்ள முறையிலும் பல ஓட்டைகள் இருக்கிறது. அதுவும் பல மனிதர்களின் செயல்பாடை சார்ந்தே இருக்கிறது. ஆளும் கட்சி நினைத்தால் ஓரிடத்தில் இருந்தே பல தில்லுமுல்லுகளை செய்யலாம். இப்பொழுது அது முடியாது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.

Raja சொன்னது…

//அப்படியெல்லாம் நினைத்தால் எந்த ஒரு வங்கியிலும் server admin/db வேலைக்கே வைத்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் முறைப் படுத்த வழிகள் உண்டு. அரசியல்வாதிகள் கட்டுபாடு இல்லாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படனும் அப்படி இருந்தால் 100 விழுக்காடு நேர்மையான வாக்குப்பதிவு நடக்கும்.//

நான் சொல்ல வந்தது, இப்ப இருக்குற சிஸ்டம்‍ல கோல்மால் செய்யனும்னா (அதுக்கு வாய்ப்பு இருந்ததுனா..) ஒவ்வொரு கருவியிலும் சிப் மாற்ற அல்லது மென்பொருள் மாற்ற வேண்டும். பல்லாயிரக்கணக்கான கருவிகள் பயன்படுத்தப்படும்போது, அவ்வாறு ஒவ்வொன்றிலும் மாற்றுவது எளிதானதல்ல, அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. அதிலேயே இவ்வளவு குறை காண்பவர்கள், நீங்கள் சொல்லும் சிஸ்டத்தில் ஒருவரோ அல்லது ஒரு சிறு குழுவோ வெகு எளிதில் நினைத்ததை மாற்றிவிட வெகு அதிக வாய்ப்புகள் உள்ளதால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதே.

குடந்தை அன்புமணி சொன்னது…

//அரசியல்வாதிகள் கட்டுபாடு இல்லாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படனும் அப்படி இருந்தால் 100 விழுக்காடு நேர்மையான வாக்குப்பதிவு நடக்கும்.//

இதுக்கு சாத்தியமுண்டா என்ன? அதுவும் தமிழ்நாட்டில்...?

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவி,
இப்பொழுது இருக்கும் முறை நன்றாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு இருந்தது போல் கள்ளவோட்டு பிரச்சனைகளும் இல்லை. மிகவும் குறைந்தே உள்ளது. ஓரிரு இடங்களில் இயந்திரங்கள் பழுதானாலும் உடனே சீர் செய்யப்படுகின்றன. அதே போன்று இந்தியாவில் உள்ள அனைவரது ரேகையும் ஓரிடத்தில் இருப்பது எனக்கு சரியாக படவில்லை. அதைத் தவிர நீங்கள் கூறி உள்ள முறையிலும் பல ஓட்டைகள் இருக்கிறது. அதுவும் பல மனிதர்களின் செயல்பாடை சார்ந்தே இருக்கிறது. ஆளும் கட்சி நினைத்தால் ஓரிடத்தில் இருந்தே பல தில்லுமுல்லுகளை செய்யலாம். இப்பொழுது அது முடியாது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.
//

மணி நான் அனைத்து கைரேகைகளையும் ஒரே சர்வரில் வைக்கச் சொல்லவில்லை. ஒரு தொகுதியில் இருக்கும் கைரேகைகளை ஒரு சர்வரில் வைத்து ஒப்பிட முடியும். தற்போது (சிங்கை) விமான சோதனைச் சாவடிகளில் அனைவரது கைரேகைகளையும் ஒப்பிடுகிறார்கள். அந்த முறை வெற்றிகரமானது தான்.

நீங்கள் சொல்வது போன்ற முறைகேடுகள் வங்கி போன்ற நிறுவங்களில் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. தேர்தல் ஆணையம் முற்றிலும் ஆளுங்கட்சிக்கு சாதமாக நடந்தால் அடுத்த ஆட்சியில் அம்பலப்படுவோம் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும்

Suresh Kumar சொன்னது…

நல்ல யோசனை

நையாண்டி நைனா சொன்னது…

கை இல்லாதவரும், கட்டு போட்டிருபபாவரும் எப்படி ஒட்டு போடமுடியும் இதிலே....??????

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
கை இல்லாதவரும், கட்டு போட்டிருபபாவரும் எப்படி ஒட்டு போடமுடியும் இதிலே....??????
//

உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் ??....
அவ்வ்வ்வ்

கையில்லாதவங்க விழி யை பதியவைக்களாம் (ஆக்குலர் பையோ மெட்ரிக் ?)

விழியற்றவர்கள் கைரேகையைப் பதிந்து பிறர் உதவியுடன் வாக்களிக்கலாம்

அஹோரி சொன்னது…

எல்லாம் சரி. பூனைக்கு யாரு மணிய கட்றது?

சரவணகுமரன் சொன்னது…

சார், நீங்க எங்கயோ போயிடீங்க...

சரவணகுமரன் சொன்னது…

நந்தன் நிலேகனியை அடையாள அட்டை ஆணையத்திற்கு தலைவராக போட்டது போல், இதற்கு உங்களை போடலாம்....

krish சொன்னது…

ரொம்ப யோசிக்கிறீங்க. என் பங்குக்கு நானும் அவுத்து விடறேன். வீட்ல இருந்தே இணையம் மூலமா (இணையம் இருக்குறவங்க) வாக்குபதிவு செய்யலாம்னா இன்னும் சுலபம். கை ரேகை கால் ரேகை எல்லாம் வேண்டாம். தகுதி உள்ள வாக்காளருக்கு வங்கி போல் ஒரு யூசர் நேம் பாஸ்வேர்டு. வேலை முடிந்தது. மிச்சம் உள்ளவர்கள் வாக்கு சாவடியில் வாக்கு பதிவு செய்யலாம். செலவு மிச்சம். வாக்கு எண்ணிக்கையும் அதிகமாகும்.

மணிகண்டன் சொன்னது…

****
கை இல்லாதவரும், கட்டு போட்டிருபபாவரும் எப்படி ஒட்டு போடமுடியும் இதிலே....??????

****
அருமை
அருமை !

கையிருந்தும் நகச்சுத்தி வந்தா என்ன பண்ணறது ? எலுமிச்சம்பழம் ரேகையா ஏத்துக்குமா மிஷின்னு ? பதில் சொல்ல சொல்லுங்க நைனா ! இல்லாட்டி எதிர்வினை போடுங்க. எங்களுக்கு பொழுது போகும்.

Unknown சொன்னது…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அதன் Designing Stageல் இருக்கும்போதே வாக்காளர் பக்கம் இருக்கும் Panelல் ஒரு Chip சேர்த்து கொஞ்சம் மேம்படுத்த முயன்றார்களாம். அப்போதே தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல்வாதிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஏற்கனவே இந்த இயந்திரம் Technically Complicated. மேலும் அதை Complivate பண்ணினால் மக்களுக்கு கஷ்டம் என்றார்களாம். மக்களுக்கு கஷ்டமா இவர்கள் மோசடி செய்வதுக்கு கஷ்டமா என்பதைப் பற்றித் தான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று இந்த இயந்திர வடிவமைப்பில் பெரும் பங்காற்றிய சுஜாதா சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்லும் மாற்றங்களைச் செய்ய முயன்றால் அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் தொண்டர்கள் தீக்குளித்தாலும் தீக்குளிப்பார்கள்... ஏனென்றால்.. நியாயமான தேர்தல் நடந்து விடுமே!!!!!

அறிவிலி சொன்னது…

ஹ்ம்ம்ம்....எங்கேயாவது என் பெயரை சொல்வதற்கு வாய்ப்பிருந்தும் விட்டுட்டீங்களே...
:-)

புதிய டெக்னாலஜி கொண்டு வரவேண்டும்தான். ஆனால் தோற்றவர்கள் குறை கூறுவது நிற்காது.

சர்வரை ஹேக் செய்துவிட்டதாகவோ அல்லது ஜெயித்த கட்சிக்கு ஆதரவாக ப்ரோகிராம் செய்துவிட்டதாகவோ கூறுவார்கள். அப்புறம் சர்வரையும் க்ளையண்ட்களையும் சேர்த்து யானையை விட்டு மிதிக்க சொல்ல வேண்டியதுதான்.(பழமைவாதிகள் புல்டோசரையும் நம்ப மாட்டார்கள்)

ஊர்சுற்றி சொன்னது…

வாவ். டெக்னாலஜி ஒகே. நடக்கட்டும் பார்க்கலாம்.

வடுவூர் குமார் சொன்னது…

இதே மாதிரியான முறையை ஒரு கல்லூரி மாணவிகள் “Open source " மென்பொருள் மூலம் முயற்சிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவிலி said...
ஹ்ம்ம்ம்....எங்கேயாவது என் பெயரை சொல்வதற்கு வாய்ப்பிருந்தும் விட்டுட்டீங்களே...
:-)
//
எழுதும் போது நினைவு வந்தது, பதிவு எழுதிய விரைவில் உங்கள் பெயரை சேர்க்க மறந்து விட்டேன். மன்னிக்கவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட பிங்கர் பிரிண்ட் குறித்த உங்கள் பின்னூட்டப் பக்கத்தை இடுகையில் இணைத்திருக்கிறேன்

//புதிய டெக்னாலஜி கொண்டு வரவேண்டும்தான். ஆனால் தோற்றவர்கள் குறை கூறுவது நிற்காது.//

அரசாட்சியில் இருந்து மக்கள் ஆட்சி மாறியபோதும் மக்கள் ஆட்சியை குறை சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.

//சர்வரை ஹேக் செய்துவிட்டதாகவோ அல்லது ஜெயித்த கட்சிக்கு ஆதரவாக ப்ரோகிராம் செய்துவிட்டதாகவோ கூறுவார்கள். அப்புறம் சர்வரையும் க்ளையண்ட்களையும் சேர்த்து யானையை விட்டு மிதிக்க சொல்ல வேண்டியதுதான்.(பழமைவாதிகள் புல்டோசரையும் நம்ப மாட்டார்கள்)//
:))

அறிவிலி சொன்னது…

நாடோடிகள் - சசிகுமார் : உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

பீர் | Peer சொன்னது…

நல்ல தகவல் தான், ஆனால் பின்னூட்டங்களில் விவாதித்தவாறு இதிலும் பல ஓட்டைகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. மட்டுமல்லாது, இதை நடைமுறைப்படுத்த காலமும் செலவும் அதிகமாகும். எனவே, இப்போதுள்ள முறையிலிருக்கும் ஓட்டைகளை அடைத்தாலே சில காலம் ஓட்டலாம்.

அது கிடக்கட்டும்...கடந்த தேர்தலில் 70 வயதாகும் என் அம்மா வாக்களிக்கச் சென்ற போது, 'நீங்கள் இறந்து விட்டீர்கள்' என்று சொன்னார்களாம் 60 வயதிற்கு மேலாகிவிட்டதால் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாம். இதற்கு என்ன செய்வது?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பயனுள்ள தகவல்களுடன் கூடிய பதிவு,
உழைப்பு தேடல் தெரிகிறது கோவியாரே!

நன்று!

இருப்பினும் இந்த பதிவை ஜெயலலிதாவிற்கு ஆதரவான பதிவாக வகைப் படுத்த விரும்புகிறேன்.

ஜெ யோட கருத்து தானே அண்மைய காலங்களில் உங்க கருத்தா இருக்கு...

:))) :P
நமக்கேன் வம்பு,
வந்தமா பின்னூட்டம் போட்டமா,
போயிகிட்டே இருக்கனும்....

பை பை...!

Subu சொன்னது…

இப்போதிருக்கும் மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியமே என்று தோன்றுகிறது... ஆள் மாற்றம் மட்டுமல்லாது மற்ற பித்தலாட்டமும் சாத்தியமே

நீங்க சொன்ன client server முறை உயர்ந்ததாய் இருக்கலாம்...அனால் secret ballot ... பயமின்றி யாருக்கு ஓட்டிடும் உறிமை ஒரு விதத்தில் பறித்துவிடும்... யாராவது serverரை hack செய்தால் எல்லா விபரமும் வெளி வந்துவிடும் ...ரொம்ப சுலபம்..

மேலும் :

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க சொன்ன client server முறை உயர்ந்ததாய் இருக்கலாம்...அனால் secret ballot ... பயமின்றி யாருக்கு ஓட்டிடும் உறிமை ஒரு விதத்தில் பறித்துவிடும்... யாராவது serverரை hack செய்தால் எல்லா விபரமும் வெளி வந்துவிடும் ...ரொம்ப சுலபம்..

மேலும் :

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html//

ஓட்டு போடும் 90 விழுக்காட்டினருக்கு ஹேக்கிங் விபரமெல்லாம் தெரியாது, அப்படியே ஓட்டுப் போட்டவர் யார் என்கிற விபரம் தெரியும் என்றுகூறினீர்கள் என்றால் அது எலெக்ட்ரானிக் வாக்கு முறைகள் அனைத்திலும் சாத்தியமே.

உங்கள் வாதப்படி தேர்தல் நிர்வாகமே பயனற்றது என்கிற கருத்தையும் விட்டுச் செல்கிறது. ரகசியங்களை தேர்தல் ஆணையம் காக்கும் என்கிற நம்பிக்கையில் தான் தற்போதும் நாம் வாக்களித்துவருகிறோம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்