தினமலர் சென்ற ஆண்டு முகமது நபியின் கார்டூன் வெளி இட்டாதால் இஸ்லாமியர்களிடம் கண்டனம் பெற்றது. அரேபிய நாடுகளில் இணைய தினமலர் பதிப்பு தடை செய்யப்பட்டது. அதையெல்லாம் படத்தோடு வெளி இட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட தினமலர், மகாலட்சுமி மட்டன் பர்கரில் அமர்ந்திருக்கும் படத்தை வெளி இட்டு (இல்லாத) நடுநிலையை மெய்பிக்க திணறுவது ஏன் ?
***
தினமலர் மற்றும் அதேபோன்ற எண்ணம் கொண்டோர் அனைவரிடம் கேட்கும் கேள்வி, மட்டன் இறைச்சிக்கும் இந்துக்கடவுளுக்கும் தொடர்பே இல்லை என்றால், மனித இறைச்சிக்கு தொடர்புகள் உண்டா ?

இது தமிழர்கள் வணங்கும் பெரியாச்சி என்கிற தெய்வத்தின் படம், கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் குலம் தெய்வம் இது என்றும் சொல்லப்படுகிறது.
Periyachi is non-vedic (not based on holy books) and non-brahmic (not a priestly class and non-vegetarian). - இந்த படத்துக்கு மேற்கண்ட ஆங்கில வியாக்கானத்தை இந்த ஆங்கிலப் பதிவில் படித்தேன், இவர்களுக்கு தமிழர்கள் வணங்கும் தெய்வங்கள் என்றால் இளக்காரம் தான். குடலை உறுவி மாலை போட்டுக் கொள்வதால் அது வேதவழி தெய்வம் இல்லை என்றும், பார்பனர்கள் அதற்கு பூசை செய்யவில்லை என்று குறிப்பிட்டவர், அடுத்தவரியில் தற்பொழுது பார்பனர்ர்களும் பெரியாச்சிக்கு பூசை செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

சைவம் - அசைவம் காரணம் சொல்லி மகாலட்சுமி மட்டன் பர்கரில் போட்டது தவறு என்றால் மனித இறைச்சி உண்ணுவதாகக் காட்டப்படும் மாகா காளியும், மகா துர்காவும் பர்கரில் பொறிக்கப்பட்டால் சரியான தேர்வாக இருக்குமா ?
இந்து தெய்வத்தை பர்க்கரில் அச்சிடலாமா கூடாதா என்பது தான் பிரச்சனை அன்றி அது சைவமாக இருக்கிறதா அசைவமாக இருக்கிறதா என்றோ அசைவம் தாழ்ந்தது சைவம் உயர்ந்தது என்றெல்லாம் கட்டமைப்பது தவறு.
13 கருத்துகள்:
http://www.hafsite.org/sites/default/files/BURGER%20KING.JPG
***
இந்து தெய்வத்தை பர்க்கரில் அச்சிடலாமா கூடாதா என்பது தான் பிரச்சனை
***
தினமலர் செய்தியை படித்தேன். உங்களை போன்றே எனக்கும் புரிந்தது அவர்களின் திரிப்பு செய்தி.
அதிலும் மட்டன் பர்கர் என்று குறிப்பிட்டு இருப்பது பார்ப்பனீய சிந்தனையின் குறியீடே.
தினமலரை புறக்கணிப்போம்.
வெஜ் பர்கர் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பர்கர் கிங் நிறுவனத்தில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து அதில் அவர்கள் சரஸ்வதி படம் போட்டால் தினமலர் நிறுவனம் அந்த செய்தியை வெளியிடுமா ? வெளியிட்டால் மட்டுமே தினமலர் மறுபடியும் படிப்போம்.
யாழ்,
படத்துக்கு நன்றி !
//வெஜ் பர்கர் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பர்கர் கிங் நிறுவனத்தில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து அதில் அவர்கள் சரஸ்வதி படம் போட்டால் தினமலர் நிறுவனம் அந்த செய்தியை வெளியிடுமா ? வெளியிட்டால் மட்டுமே தினமலர் மறுபடியும் படிப்போம்.
//
மணி,
மாகாத்மா காந்தி மாடர் பார்ம் என்று இறைச்சிகாக ஆடுகோழி வளர்ப்பது பற்றி நக்கீரனின் விளம்பரம் பார்த்து இருக்கிறேன். முனியாண்டிவிலாசில் கல்லாவுக்கு மேலே வரிசையாக லட்சுமி, சரஸ்வதி படங்களெல்லாம் இருக்கும், ஒரு வெள்ளைக்காரன் அந்தப் படத்தைப் போட்டுவிட்டானே என்கிற ஆதங்கம் தான் இவர்களுக்கு.
கன்றுகுட்டி, பசுமாட்டு தோலில் செய்த கெட்டி மேளம் முழங்குவதை சாமிகள் காதுகுளிர கேட்பதாக நினைக்கிறார்கள். :)
இங்க drug கடைக்கு காபி ஷாப்ன்னு பேரு. Red light Street ல நிறைய காபி ஷாப் இருக்கும். அதுல இருக்கும் ஒரு ஷாப் பேரு பாபா காபி ஷாப். ஒரே சாமி படமா இருக்கும் :)-
தொடர்ந்து இது போன்ற செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தினமலரையும் படித்து வரும் கோவியாருக்கு எனது கடும் கண்டனங்கள்.
காசு கொழித்தால் குலதெய்வம்.
சாப்பாட்டுக்கே சிங்கியடித்தால் சாப்பாடு தானே சாமி தெய்வம்.
புரியும் என்று நம்புகிறேன்.(பின் நவீனத்துவம்)
தினமலர் போடலைன்னா என்ன.
இங்க போய் பார்த்துக்கோங்க அண்ணாச்சி..
http://twitpic.com/9sf03
பர்கர் என்பதை பர்கூர் என்று படித்து விட்டு, அங்கே இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் இப்போதே மட்டன் விருந்து தொடங்கி விட்டார்களா என்று படிக்க வந்தேன்.
மகாலட்சுமி, மட்டன், பர்கர் மூன்றுமே நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் சாமி.
//மகாலட்சுமி மட்டன் பர்கரில் அமர்ந்திருக்கும் படத்தை வெளி இட்டு (இல்லாத) நடுநிலையை மெய்பிக்க திணறுவது ஏன் ?//
:-)) விக்காதுன்னு தான் :-)))))))))
கடையில் மாட்டிருக்கும் படங்கள் பற்ரிய பதிவல்ல இது.
பிரித்துவிட்டு குப்பைத் தொட்டியில் எறியப்படும் தாளில் இருப்பதில்தான் பிரச்சினை.
அதை அழகாகத் திசை திருப்பியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
//VSK said...
கடையில் மாட்டிருக்கும் படங்கள் பற்ரிய பதிவல்ல இது.
பிரித்துவிட்டு குப்பைத் தொட்டியில் எறியப்படும் தாளில் இருப்பதில்தான் பிரச்சினை.
அதை அழகாகத் திசை திருப்பியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
8:30 AM, July 10, 2009
//
உங்களைப் பொருத்து 'இல்லாத' இடம் குப்பையா ? அப்போ எங்கும் இருக்கிறான், மூலை முடுக்கெல்லாம் இருக்கிறான் என்பது ஏன் ?
தாமரை சேற்றில் தானே முளைக்குது ? அதுல ஸ்ட்ராங்காகத்தானே லட்சுமி அம்மா உட்கார்ந்து இருக்காங்க.
அடுத்தவனைக் குறைச் சொல்ல ஆயிரம் காரணம் கிடைக்கும், வாழ்த்து சொல்லத்தான் காரணம் தேடுவார்கள். நான் கேட்ட கேள்வியே அது அல்ல முகமது நபி கார்டூன் வெளி இட்டு தனது இஸ்லாம் வெறுப்பை உறுதி செய்த தினமலர் பர்கரில் லட்சுமி படத்தைப் போடாதது ஏன் ?
திசைகளைத் திருப்ப முடியாதுங்க. :)
ஒன்றும் சொல்வதிற்கில்லை
சரி தாளை குப்பையில் போட்டால்தான் என்ன குறை....விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் கடவுளை குப்பையாக்குகிற கூட்டம்தானே நீங்கள்....இதில் மட்டும் என்ன குறை கண்டீர்கள்...சந்தோசப் படுங்கள் ஒரு வேளை குப்பைக்கு போனாலும் உங்கள் ஆரிய மண்ணுக்குத்தான்(ஐரோப்பா )போவாள் உங்க லட்சுமி ....
கருத்துரையிடுக