காலத்தில் தேட...

நான் வளர்கிறேன் அம்மா !

Thursday, July 02, 2009

ஒரு குழந்தை வலி என்றால் வெறும் அழுகையுடன் நிறுத்துக் கொள்வதுடன் அதை உணரத் தொடங்கி தவிர்க்க விரும்புவது 4 வயதில் இருந்து தொடங்குகிறது. தான் அடிபடுவது போல் பிறரை அடித்தால் வலிக்கும் என்று தெரியத் தொடங்கியதும் அதைச் சோதனை செய்து பார்த்து மகிழும் குழந்தைகள். அந்த வயதில் நாம் (பெற்றோர்கள்) கண்டிக்கிறோம் என்பது அதற்குத் தெரியாது, அடித்தால் திருப்பி அடிக்கும், அப்படி திருப்பி அடிக்கும் போது நாம் மீண்டும் அடித்தால் பயப்பட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டு மிகுந்து அழும். 'நீங்க அடிக்கலாம், நான் அடிக்கக் கூடாதா என்று கேட்கத் தெரியாது', 5 வயதைக் கடந்ததும் அப்படிக் கேட்டு வைக்கும். அதன் பிறகே பெரியவர்கள் கண்டிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளும்.

குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குவது 5 வயதில் இருந்து தொடங்குகிறது. அதற்குத் தெரிந்து பெற்றோர்கள் பொய் சொன்னால், நாமும் சொல்லலாம் என்பதாக முடிவு செய்து கொள்ளும். முதலில் அடிக்கு பயந்து சொல்லும் பொய்களை பிறகு தவறுகளை மறைக்க சொல்லத் தொடங்கும், 8 வயதில் பொய் சொல்லி தவறுகளை மறைக்க முழுமையாகக் கற்றுக் கொள்ளும். இவை தெரியாமல் 'பொய் பேசுவியா ?' என்று கேட்டு கடுமையாக குழந்தைகளை தாக்கும் பெற்றோர்கள் உண்டு.

ஒரு குழந்தை பொய் பேசத் தொடங்கினால் அது தன்னளவில் உலகைப் பற்றிய அறிவும், எப்படி நடந்து கொண்டால் தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்கிற 'அறிவை' பெற்றிருப்பதாகவே பொருள். அதாவது குழந்தை அறிவு வளர்ச்சி பெற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் தான் குழந்தைகள் பொய் சொல்லும் செயல். இதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் குழந்தைகள் பெரும் குற்றம் செய்வது போல் ஆற்றாமையால் புலம்பித் தீர்பதுடன் குழந்தைகளை கடுமையாக அடித்துவிடுவார்கள்.

"அப்பா என்னை அடிக்கலாம், அப்பாவை நான் அடிக்கக் கூடாதா ?" எதிர்த்துக் கேட்கும் குழந்தைகள் அவ்வாறு அடிக்கும் போது அவமானம் அடைந்ததாக நினைத்து உடனடியாக கை நீட்டிவிடாதீர்கள். பாதிப்பு அடையும் செயலுக்கான எதிர்வினை ஆற்றவேண்டிய அறிவை அவை பெற்றிருப்பதாகவே பொருள். குழந்தைகளின் செயலில் ஏற்பு இல்லை என்றால் பொருமையாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், எளிமையாக தேவையான தகவல்களை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டால் குழந்தைகள் கற்பூரம் போல் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். வாங்கி வைத்திருக்கும் பொருள் நமக்குத் தான், கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று குழந்தைகள் உறுதியுடன் நம்பினால் அந்த பொருள்களை திருடும் பழக்கம் கூட அவைகளுக்கு ஏற்படாது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. கிடைக்காது என்கிற நிலையும் ஏக்கமும் தான் குழந்தைகள் திருடப் பழகுவதற்குக் காரணமாக அமைகிறது

உங்கள் குழந்தைகள் பொய் சொன்னாலோ, திருப்பி அடித்தாலோ உங்களுக்கு சினம் வருவதற்கு முன், உலகில் எதிர்த்து நின்று வாழ்வதற்கான அடிப்படை அறிவை குழந்தைகள் பெற்றுருக்கிறார்கள், தெரிந்து கொண்டுள்ளார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள், அதன் பிறகு அப்படி பேசுவது, அடிப்பது ஏன் தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் எப்படியான அறிவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதே அவைகளின் நடவடிக்கை மூலம் வெளிப்படுகிறது.

26 கருத்துக்கள்:

  • ஸ்வாமி ஓம்கார்
     

    எங்களுக்காக ஒரு இடுக்கை இட்டதற்கு நன்றி..

    குழந்தை ஓம்கார்

  • ஆ.ஞானசேகரன்
     

    //வாங்கி வைத்திருக்கும் பொருள் நமக்குத் தான், கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று குழந்தைகள் உறுதியுடன் நம்பினால் அந்த பொருள்களை திருடும் பழக்கம் கூட அவைகளுக்கு ஏற்படாது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு//

    உண்மைதான் கண்ணன்

  • துபாய் ராஜா
     

    நல்லதொரு பதிவு.

    //"உங்கள் குழந்தைகள் பொய் சொன்னாலோ, திருப்பி அடித்தாலோ உங்களுக்கு சினம் வருவதற்கு முன், குழந்தைகள் உலகில் எதிர்த்து நின்று வாழ்வதற்கான அடிப்படை அறிவை பெற்றுருக்கிறார்கள், தெரிந்து கொண்டுள்ளார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள், அதன் பிறகு அப்படி பேசுவது, அடிப்பது ஏன் தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் எப்படியான அறிவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதே அவைகளின் நடவடிக்கை மூலம் வெளிப்படுகிறது."//

    உண்மையான உண்மை.

  • "அகநாழிகை"
     

    //குழந்தை அறிவு வளர்ச்சி பெற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் தான் குழந்தைகள் பொய் சொல்லும் செயல்.//

    சரியான கருத்து.
    சிந்தனையூட்டும் பதிவு.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  • நட்புடன் ஜமால்
     

    பாதிப்பு அடையும் செயலுக்கான எதிர்வினை ஆற்றவேண்டிய அறிவை அவை பெற்றிருப்பதாகவே பொருள்\\


    சரியாக(ச்)சொன்னீங்க ...

  • கோவி.கண்ணன்
     

    //ஸ்வாமி ஓம்கார் said...
    எங்களுக்காக ஒரு இடுக்கை இட்டதற்கு நன்றி..

    குழந்தை ஓம்கார்

    12:30 PM, July 02, 2009
    //

    :)

    உங்களுக்கும் ஒரு சின்னவா ரெடி பண்ணிட்டிங்களா ?

    அவ்வ்வ்வ்வ்வ் !

  • கோவி.கண்ணன்
     

    ஆ.ஞானசேகரன், நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    துபாய் ராஜா,

    நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    //"அகநாழிகை" said...


    சரியான கருத்து.
    சிந்தனையூட்டும் பதிவு.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்
    //

    பாராட்டுக்கு நன்றி அகநாழிகை சார்.

  • கோவி.கண்ணன்
     

    //நட்புடன் ஜமால் said...
    பாதிப்பு அடையும் செயலுக்கான எதிர்வினை ஆற்றவேண்டிய அறிவை அவை பெற்றிருப்பதாகவே பொருள்\\


    சரியாக(ச்)சொன்னீங்க ...
    //

    நன்றி தம்பி !

  • வேடிக்கை மனிதன்
     

    //அதற்குத் தெரிந்து பெற்றோர்கள் பொய் சொன்னால், நாமும் சொல்லலாம் என்பதாக முடிவு செய்து கொள்ளும்.//

    குழந்தைகளின் பத்து வயதுவரை அவர்களின் பெற்றோர்களே அவர்களின் ரோல் மாடெல், பெற்றோர்கள் செய்யும் எந்தச் செயலையும் அந்த வயதில் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவார்கள், கடைப்பிடிப்பார்கள் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    நல்ல பதிவு

  • அக்பர்
     

    நான் படித்து ரசித்த சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

    நீங்கள் சொன்ன அனைத்தும் யாரும் யோசிக்காதவை. நிறைய பேர் குழ்ந்தை எதிர்த்து பேசுவதை அவமானமாக நினைத்து அடக்கி வைக்கவே விரும்புகிறார்கள்.

    நல்ல பதிவு.

  • பீர் | Peer
     

    எங்கள் கூட்டுக்குடும்பத்தில் ஒரு 3 வயது பையன், மற்ற சிறிய பெரிய குழந்தைகளை அடிப்பதும், அவர்களின் மீதேரி சாதாரணமாக நடந்து செல்வதுமாக இருந்தான். நான் பல முறை அதட்டி அடித்தும் பலன் இல்லை. இனி டாக்டர் கோவியாரின் அறிவுரைகளை நடைமுறை படுத்தி பார்ப்போம்.

  • அறிவிலி
     

    தமிழ் பதிவர்களில் முதல் சீன பெண் ரசிகையின் பின்னூட்டம் பெற்று சரித்திரம் படைத்த கோவியாருக்கு வாழ்த்துகள்.

  • கோவி.கண்ணன்
     

    //வேடிக்கை மனிதன் said...
    //அதற்குத் தெரிந்து பெற்றோர்கள் பொய் சொன்னால், நாமும் சொல்லலாம் என்பதாக முடிவு செய்து கொள்ளும்.//

    குழந்தைகளின் பத்து வயதுவரை அவர்களின் பெற்றோர்களே அவர்களின் ரோல் மாடெல், பெற்றோர்கள் செய்யும் எந்தச் செயலையும் அந்த வயதில் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவார்கள், கடைப்பிடிப்பார்கள் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    நல்ல பதிவு
    //

    எடுத்தியம்பியதற்கு நன்றி சரவணன்

  • கோவி.கண்ணன்
     

    //அக்பர் said...
    நான் படித்து ரசித்த சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

    நீங்கள் சொன்ன அனைத்தும் யாரும் யோசிக்காதவை. நிறைய பேர் குழ்ந்தை எதிர்த்து பேசுவதை அவமானமாக நினைத்து அடக்கி வைக்கவே விரும்புகிறார்கள்.

    நல்ல பதிவு.
    //

    பாராட்டுக்கு மிக்க நன்றி அக்பர்.

  • கோவி.கண்ணன்
     

    //பீர் | Peer said...
    எங்கள் கூட்டுக்குடும்பத்தில் ஒரு 3 வயது பையன், மற்ற சிறிய பெரிய குழந்தைகளை அடிப்பதும், அவர்களின் மீதேரி சாதாரணமாக நடந்து செல்வதுமாக இருந்தான். நான் பல முறை அதட்டி அடித்தும் பலன் இல்லை. இனி டாக்டர் கோவியாரின் அறிவுரைகளை நடைமுறை படுத்தி பார்ப்போம்.
    //

    அன்பால் குழந்தைகள் அறிவு பெருவது போலவே மிகுந்து செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் கெட்டுப் போவதும் உண்டு, அதைக் குறைத்துக் கொண்டு அங்கே கண்டிப்பை (அடிக்காமல்) காட்டவேண்டும்.

  • கோவி.கண்ணன்
     

    //
    அறிவிலி said...
    தமிழ் பதிவர்களில் முதல் சீன பெண் ரசிகையின் பின்னூட்டம் பெற்று சரித்திரம் படைத்த கோவியாருக்கு வாழ்த்துகள்.
    //

    அண்ணே,

    இதெல்லாம் ஓவருண்ணே, நல்லா ஓட்டுறிங்க. அனானிமஸாக இப்படிப் பட்ட பின்னூட்டங்கள் பலருக்கும் வருவதுண்டு.
    :)

  • அப்பாவி முரு
     

    // கோவி.கண்ணன் said...
    //
    அறிவிலி said...
    தமிழ் பதிவர்களில் முதல் சீன பெண் ரசிகையின் பின்னூட்டம் பெற்று சரித்திரம் படைத்த கோவியாருக்கு வாழ்த்துகள்.
    //

    அண்ணே,

    இதெல்லாம் ஓவருண்ணே, நல்லா ஓட்டுறிங்க. அனானிமஸாக இப்படிப் பட்ட பின்னூட்டங்கள் பலருக்கும் வருவதுண்டு.
    :)//

    அசோகன் பாணியில் படிக்கவும்.,

    நான் நம்ப மாட்டேன்...

  • வெ.இராதாகிருஷ்ணன்
     

    மிகவும் பயனுள்ள பதிவு.

    குழந்தைகளுக்கு எனச் சொல்லப்படும் விசயங்கள் எல்லாம் குழந்தைகளுக்காக மட்டுமின்றி பெரியவர்களுக்கும்தான் என்பதையும் நாம் அனைவரும் ஒப்புக்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    இங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இதே மனோபாவத்தை அனைவரிடமும் நாம் கொண்டால் நமக்கு கோபம் வராதுதானே, பிறருக்கும் கோபம் ஏற்படாதுதானே!

    மிக்க நன்றி கோவியாரே.

  • கோவி.கண்ணன்
     

    //அசோகன் பாணியில் படிக்கவும்.,

    நான் நம்ப மாட்டேன்...//

    முரு,

    நம்புவதற்கு என்ன செய்யனும் ?

    அடுத்த பதிவர் சந்திப்பில் ஒரு வடை எக்ஸ்ட்ராவாக கொடுத்துடுறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //வெ.இராதாகிருஷ்ணன் said...
    மிகவும் பயனுள்ள பதிவு.

    குழந்தைகளுக்கு எனச் சொல்லப்படும் விசயங்கள் எல்லாம் குழந்தைகளுக்காக மட்டுமின்றி பெரியவர்களுக்கும்தான் என்பதையும் நாம் அனைவரும் ஒப்புக்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். //

    ஒத்தக் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா !

    //இங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இதே மனோபாவத்தை அனைவரிடமும் நாம் கொண்டால் நமக்கு கோபம் வராதுதானே, பிறருக்கும் கோபம் ஏற்படாதுதானே!

    மிக்க நன்றி கோவியாரே.
    //

    குழந்தைகளின் தவறான செயலில் உள்நோக்கம் இருக்காது அதை பெரியவங்க திருத்த முடியும். பெரியவங்க வேண்டுமென்றே செய்யும் தவறுகளை ? அதற்க்குதான் சிக்கினால் பல்வேறு தண்டனைகள் கிடைக்கிறது

  • மாதேவி
     

    "நம்பிக்கையை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு".

    கட்டாயமாய் செய்யவேண்டியது.

  • வலசு - வேலணை
     

    அருமையான கருத்துக்கள்.

  • முகவை மைந்தன்
     

    அருமையான இடுகை. இந்த பொருளில் இன்னும் நிறைய எழுதுங்கள். குறிப்பா பூச்சாண்டிகள் பத்தி.

    //அப்பா என்னை அடிக்கலாம், அப்பாவை நான் அடிக்கக் கூடாதா//
    எங்க வீட்ல நேர் எதிர். கிழமைக்கொரு பெரிய அடி விழுகுது. திருப்பி அடிச்சா மனைவி தலையிட்டு பையனுக்கு ஏதுவா தீர்ப்பு வழங்குகிறார்.

  • T.V.Radhakrishnan
     

    நல்லதொரு பதிவு.

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP