பின்பற்றுபவர்கள்

9 டிசம்பர், 2008

(அ)சைவ கதை !

திருவிளையாடல் புராணங்களின் ஆதார அடிப்படையில் சேக்கிழாரின் 63 நாயன்மார்களின் கதைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணத்தில் திருத்தொண்டரின் சிவ பக்தி நெறியைப் பற்றிய கதையப் பற்றி பார்ப்போம்

பக்தர்களை 13 ஆம் நூற்றாண்டில் அடிக்கடி சோதித்த சிவன் ஒருமுறை திருத்தொண்டர் என்னும் சைவ அடியாரை சோதிக்க வருகிறார். திருத்தொண்டர் போன்ற ஆட்கள் சிவனுக்கு, சிவனடியாருக்கு என்றால் கொலையும் செய்யத் தயங்காதவர்கள். திருத்தொண்டர் எவ்வளவு தூரம் தன்மீது பக்தி பைத்தியமாக இருக்கிறார் என்று சோதிக்க எண்ணிய சிவபெருமான், சிவனடியார் வேடம் கொண்டு திருத்தொண்டரின் வாசல் கதவை தட்டினார்.

அங்கமெங்கும் விபூதியில் சிவனடியார் கோலம் கண்டு, மெய்மறந்த சிறுதொண்டர்,

"சிவனடியாரே, உங்களுக்கு திருஅமுது படைக்க எண்ணியுள்ளோம், தங்கள் திருவுளம் வேண்டி நிற்கிறேன்" என்று சொல்லி அவருடைய காலடியில் விழுந்தாராம்

"திருத்தொண்டரே, நான் உங்கள் வீட்டில் உண்ணவேண்டுமெனில் ஐந்து வயது சிறுவனை அரிந்து பதமாக சமைத்துத் தருவதாக இருந்தால் உண்ணுகிறேன்"

கேட்பது சிவனடியார் ஆயிற்றே, மறுப்பேதும் இல்லாமல் பேருவுவகைக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்று உள்ளே அழைத்துச் சென்று இளைப்பார வைத்துவிட்டு,

கணவனும்(திருத்தொண்டர்), மனைவியும், ஊரார் யாரும் பிள்ளை தர ஒப்புக் கொள்ளமாட்டார்கள், எனவே நம் பிள்ளையையே அரிந்து சமைத்து திருஅமுது படைப்போம் என்றாராம், சற்றும் தயங்காத மனைவி, மகன் சீராளன் பாடசாலையில் இருந்து வந்ததும், எடுத்துச் சொல்ல, சீராளனும் தன்னை அரிந்து அமுது படைக்க ஒப்புக் கொண்டானாம். பிறகு கணவனும் மனைவியுமாக மகனை தரையில் கிடத்தி, மனைவி மகனின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள, மகனின் கழுத்தை அறுத்து (நவரசுவை நினைச்சாலே குடலே நடுங்குது, பெற்ற பிள்ளையை எப்படி ?) தலை தனியாக எடுத்து வேலைக் காரியிடம் கொடுத்துவிட்டு , உடலை துண்டு துண்டாக்கி பதமாக சமைத்துவிட்டு, சிவனடியாரை உணவுக்கு அழைத்தனராம்.

"ஆகா அருமையான மணம், எங்கே உணவை இடுங்கள்" - சிவனடியார் (வடிவில் வந்த சிவன்)

"ஆகட்டும் ஸ்வாமி..."

என்று சொல்லி பரிமாறுகிறார்கள்,

"எனக்கு தலைக்கறியே பெருவிருப்பம், எனவே தலைக்கறியை கொண்டுவாருங்கள்"

'தலைக்கறியா ? அதைத்தான் வேலைக்காரியிடம் கொடுத்தாகிவிட்டதே....'என்று மனதிற்குள் கணவனும் மனைவியும் நினைக்க, இதுபோல் எதாவது ஏடாக் கூடம் ஆகலாம் என்பதால் முன் யோசனையால் வேலைக்காரி தலையை சமைத்து வைத்திருந்திருந்திருக்கிறாள். இவர்கள் கையை பிசைவதைப் பார்த்து குறிப்பறிந்து, தலைகறியை கொண்டு வந்து இலையில் படைத்தாளாம்.

இங்குதான் சிவனடியாராக வந்தவர் சித்து விளையாட்டைக் காட்டுகிறார்.

"எல்லாம் சரியாக இருக்கிறது, தங்கள் மகன் சீராளனைக் கூப்பிடுங்கள், சேர்ந்து உண்ணுகிறேன்" என்றார்

'அவனைத்தான் சமைத்தாயிற்றே...' என்று நினைத்தாலும் தயங்கி தயங்கி, சீராளனை கூப்பிடுவது போல் உருகி அழைக்க....அவன் பள்ளியில் இருந்து திரும்புவது போன்று வீட்டுக்குள் நுழைந்தானாம்.

கணவனும் - மனைவியும் மகிழ சிவனடியார் சிவனாக மாறி, பார்வதியுடன் இடப வாகனத்தில் திருக்கயிலாய தோற்றத்துடன் காட்சி கொடுத்து மறைந்தாராம்

*********
இந்த திருத்தொண்டர் மட்டுமல்ல, ஏனைய சிவனடியார்களும் சிவ பக்தி என்ற பெயரில் வெறி ஆட்டமே ஆடி இருப்பதாக நாயன்மார்கள் கதைகளைப் படித்ததும் தெரிகிறது.

1. அம்மையே அப்பனே என்று போற்றப்படும் சிவன், பக்தனை சோதிக்க பக்தனின் மகனை அரிந்து சமைத்து தரச் சொன்னாராம். இறைவனை இதைவிட கீழ்த்தரமான மனித மாமிசம், அதுவும் சிறுகுழந்தையின் மாமிசம் உண்ணுபவனாக காட்டமுடியாது, (இது போலவே மற்றொரு கீழ்த்தர நடவடிக்கையாக சிவன் சிவனடியார் வேடம் கொண்டு இயற்பகை நாயனாரின் மனைவியைக் தனக்கு கூட்டிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாராம்)

2. பெற்ற பிள்ளையையே அரிந்து கொடுக்க துணிபவனின் சமய வெறி எத்தகையதாகவும், மூட நம்பிக்கையும் உச்சியாகவும் இருக்கிறது, இதற்கு மனைவியும் உடந்தை என்று எழுதப்பட்டு இருக்கிறது, கணவனை கல்லால் அடித்துக் கொல்லத் துணியும் மனைவி கூட பெற்றப் பிள்ளையை கொல்லவும், அதை சமைத்துத் தரவும் முன்வருவாளா ? இந்த பைத்தியத்திடம் இல்லறம் நடத்துவதைவிட பிச்சை எடுத்து உண்ணலாம் என்றே நினைப்பாள்.

3. ஐந்துவயது மகனிடம் சம்மதம் கேட்டார்களாம், அவனும் சிவனடியாருக்கு என்பதால் இசைந்தானாம். என்ன கொடுமை அந்த வயதில் செய்வது சரி / தவறெல்லாம் தெரியுமா ?

4. நரபலி என்னும் கேடுகெட்ட செயலை செய்ததுமின்றி அதை மசாலா போட்டு சமைத்தனராம், தலைக்கறிதான் வேண்டும் என்று சிவனடியார் பிடிவாதமாகக் கேட்டாராம்.

5. சிவன் பிள்ளைக் கறி கேட்டான் என்று சொல்லுவது 'சைவ' சமயமாம்

ஐயோ......ஐயோ......இதுவா பக்தி, இதுவா ஆன்மிகம். இந்த கேடுகெட்டக் கதையை எழுதியதும், இல்லாமல் நாயன்மார்களுள் ஒருவனாகும் தகுதியுடன் திருத்தொண்டர் சிலையாக வைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு நாள் பூசையும், தீபாரதணையும் நடைபெறுகிறது.

******

மற்ற நாயன்மார்களும் சைவ வெறியில் இன்னும் பல அடாத, அறிவுக்கு ஒவ்வாத செயல்களை செய்யத் துணிந்து இருக்கிறார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்கள் கதையைப் போன்று பலக் (சைவ) கதைகள் சேர்ந்துதான் சைவ சமயம், இந்த கதைகளைப் போற்றிதான் அந்தகாலத்தில் சைவ சமயமே உயர்ந்தது என்கிற சண்டையெல்லாம் நடைபெற்று, சமணம் / பெளத்தம் துடைத்தொழிக்கப்பட்டது

சிதம்பரத்தில் பூட்டப்பட்டு இருந்த திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி 12 ஆம் திருமுறையாக சேக்கிழாரின் பெரியபுராணத்தை சேர்க்காமலேயே கரையான் அரிப்பதற்கு விட்டு இருந்தால் சிவனுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

சிவப் பேரொளியன்பது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே ஆன்றோர் வாக்கு, இதையெல்லாம் மழுங்கச் செய்ய சிவன் சிவனடியார் வேடம் கொண்டு பார்வதியுடன் விடப (ரிஷப) வாகனம் ஏறிவந்தான், சிவகனங்களுடன் காட்சி தந்தான், சோதனைக்காக அறிவுக்கு ஒவ்வாத திருவிளையாடல் புரிந்தான் என்பதெல்லாம் முற்றிலும் பகுத்தறிவுக்கோ, பக்தி செய்து போற்றவோ ஒவ்வாதவைகள். மறுப்பவர்கள் எவரும் சிவனடியாருக்கு பிள்ளைக் கறி சமைத்துத்தர துணிந்தவருமல்லர். அப்படி துணிந்தால் பக்தி என்கிற பெயரில் ஒரு முற்றிய பைத்தியம் இருப்பதாகவே கொள்ளலாம்.

"அம்மையப்பா போற்றி......போற்றி !"

88 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

கிறித்துவத்தில் குறைகள் இல்லையா? இஸ்லாத்தில் குறைகள் இல்லையா? சீக்கிய மதத்தில் குறைகள் இல்லையா? புத்த மதத்தில் குறைகள் இல்லையா? யூதத்தில் குறைகள் இல்லையா?
பெளத்த மதத்தில் குறைகள் இல்லையா?
இதையெல்லாம் பற்றிப் பேசாமல் ஏன் இந்து மதத்தைப் பற்றி மட்டும் தப்பும் தவறுமாகப் பேசுகிறீர்கள்??? இதற்குப் பெயர்தான் பகுத்தறிவா?
:P

சி தயாளன் சொன்னது…

ஆகா...:)

வால்பையன் சொன்னது…

மதம் பிடித்த யானையும்
மதம் பிடித்த மனிதனும் ஒன்று

நான் சொல்வது எல்லா மததிற்க்கும் ஜெகதீசன்

Kanchana Radhakrishnan சொன்னது…

///வால்பையன் said...
மதம் பிடித்த யானையும்
மதம் பிடித்த மனிதனும் ஒன்று///

repeateyyyyyyyyy

மணிகண்டன் சொன்னது…

நீங்கள் வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுக்கறீர்கள் ! இறைவனிடம் உள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதற்காக எழுதப்பட்ட வரலாறு. அதில் பக்தியின் மீது கொண்ட முழு நம்பிக்கையோடு இணைத்து பார்க்க வேண்டும். அதன் சாரம்சத்தை விட்டுவிட்டு அதில் உள்ள நிகழ்வுகளை மட்டும் குறை சொல்ல முயல்கறீர்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜெகதீசன் 11:01 PM, December 09, 2008
கிறித்துவத்தில் குறைகள் இல்லையா? இஸ்லாத்தில் குறைகள் இல்லையா? சீக்கிய மதத்தில் குறைகள் இல்லையா? புத்த மதத்தில் குறைகள் இல்லையா? யூதத்தில் குறைகள் இல்லையா?
பெளத்த மதத்தில் குறைகள் இல்லையா?
இதையெல்லாம் பற்றிப் பேசாமல் ஏன் இந்து மதத்தைப் பற்றி மட்டும் தப்பும் தவறுமாகப் பேசுகிறீர்கள்??? இதற்குப் பெயர்தான் பகுத்தறிவா?
:P
//

எல்லா மதத்திலும் குறைகள் நிறைகள் உண்டு சேகு.
புத்த-பௌத்த மதம் கூட இனப்படுகொலைக்குத் துணைபோகிறதே?
அவர்களுடைய அடிப்படைக் கொள்கையான, பிற உயிர்களுக்குத்(மனிதர்களுக்கு மட்டும் அல்ல) தீங்கு இழைக்காதே என்பது எந்த காற்றில் பறந்து போனது?
மற்ற மதங்கள் மூட நம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. சில நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ளலாம். சொந்த மதத்தில் இருக்கும் தீய விடயங்களை விமர்சிக்க எத்தனை பேர் முன் வருகிறார்கள்.

வால்பையன் சொன்னது…

//அதன் சாரம்சத்தை விட்டுவிட்டு அதில் உள்ள நிகழ்வுகளை மட்டும் குறை சொல்ல முயல்கறீர்கள்//

எப்படி இப்படி
சாராம்சம் பார்த்து குழந்தையை கொன்னுடலாமா?

இந்த மாதிரி கதையை நம்புறதால தான் புதையலுக்காக பெத்த குழந்தையை கொல்லும் அவலம் நடக்குது.

கொஞ்சம் கண்ண திறங்க ப்ளீஸ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மனிதன் மாறி விட்டான்,
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்.

கவியரசு சும்மாவா பாடினான்

மணிகண்டன் சொன்னது…

***** இந்த மாதிரி கதையை நம்புறதால தான் புதையலுக்காக பெத்த குழந்தையை கொல்லும் அவலம் நடக்குது.

கொஞ்சம் கண்ண திறங்க ப்ளீஸ் ******

நீங்கள் சொல்வது உண்மை தான் வால்பையன். எந்த ஒரு விடயத்திலும் நல்லதும்/ தீதும் உண்டு. இக்கதையின் சாராம்சம் "இறைவனின் மீது நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்" அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப இறைவன் என்பது சிவனாகவோ, பெருமாளாகவோ, புத்தராகவோ அல்லது இயற்கையாகவோ இருக்கலாம். முழு நம்பிக்கை என்பதை பறைசாற்றவே வரலாறை "extreme" ஆக சித்தரிக்கபட்டுளது.

"When you completely trust something, nothing can harm you"

But my understanding is that the complete trust is not anymore possible !

மணிகண்டன் சொன்னது…

***** எப்படி இப்படி
சாராம்சம் பார்த்து குழந்தையை கொன்னுடலாமா?**********

இதன் சாரம்சத்தை புரிந்த எவரும் குழந்தையை கொல்லமாட்டார்கள். அதலாலே தான் இவ்வாறான கதைகளை பக்தியுணர்வை நன்கு புரிந்தவர்கள் சொல்லி கேட்க வேண்டும். அரைவேக்காடுகள் சொல்லி அல்ல. (கோவி - உங்களை சொல்லவில்லை)

வால்பையன் சொன்னது…

//கவியரசு சும்மாவா பாடினான் //

ஆமாம் காசு வாங்கி தான் பாடினார்

நண்பரே வர்த்தை கோர்வையும்,
வசிகர பேச்சும் எதையும் நம்பவைக்கும்.இங்கே தேவை புரிதல் மட்டுமே.

இதே கவியரசு பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் என்று உளரியது மறந்து விட்டதா?

நாத்திகர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பார்கள் என்று எழுதியதும் அவரே!

வால்பையன் சொன்னது…

//இக்கதையின் சாராம்சம் "இறைவனின் மீது நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்"//

இது ஒரு வகையான மூளை சலவை.
ஒருவேளை நல்லது நடக்க்வில்லை என்றால் உன் மேல் போன ஜென்மத்து குறை இருக்கிறது என்று நழுவி கொள்வார்கள்.

கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள்

மணிகண்டன் சொன்னது…

வால்பையன்,

ஜோதி பாரதி கூறியது அந்த பாடலில் உள்ள கவியரசின் வரிகளை பற்றி ! நீங்கள் எதற்கு தேவையற்று வேறு நிகழ்வுகளை இதற்கு இழுக்கறீர்கள். வளர்பிறை நிலவு போல என்று ஒருவர் சொன்னால், அந்த நிலவு பின்பு தேயுமே என்று சொல்வது புரிதல் அல்ல.

வால்பையன் சொன்னது…

தமிழிலேயே எழுதுங்க நண்பரே!
எனக்கு ஆங்கிலம் தெரியாது

வால்பையன் சொன்னது…

//இவ்வாறான கதைகளை பக்தியுணர்வை நன்கு புரிந்தவர்கள் சொல்லி கேட்க வேண்டும். //

நாசமா போச்சு!
கடவுளை கூட போய் தொலையுதுன்னு விட்டுடலாம் ஆனா இந்த புரோக்கர்களை கட்டி வச்சி அடிக்கனும்

மணிகண்டன் சொன்னது…

****************
இது ஒரு வகையான மூளை சலவை.
ஒருவேளை நல்லது நடக்க்வில்லை என்றால் உன் மேல் போன ஜென்மத்து குறை இருக்கிறது என்று நழுவி கொள்வார்கள்.

கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள் **********

வைக்கவேண்டாம் என்று யார் சொன்னார்கள். வைக்கும் நம்பிக்கை முழுவதுமாக இருக்க வேண்டும். அவ்வளவே. அதுவே அந்த கதையின் centre point. அதை புரிந்து கொள்ளுங்கள்.

மணிகண்டன் சொன்னது…

***** தமிழிலேயே எழுதுங்க நண்பரே!
எனக்கு ஆங்கிலம் தெரியாது ****

நம்பிக்கையோடு படியுங்கள். புரியும் !

வால்பையன் சொன்னது…

//ஜோதி பாரதி கூறியது அந்த பாடலில் உள்ள கவியரசின் வரிகளை பற்றி ! நீங்கள் எதற்கு தேவையற்று வேறு நிகழ்வுகளை இதற்கு இழுக்கறீர்கள். வளர்பிறை நிலவு போல என்று ஒருவர் சொன்னால், அந்த நிலவு பின்பு தேயுமே என்று சொல்வது புரிதல் அல்ல. //

இதை எடுத்து கொண்டாய் அல்லவா!
அப்போ அதையும் எடுத்து கொள் என்று வாதம் வரும் நண்பா!

வார்த்தை விளையாட்டுக்கு இடம் கொடுக்காமல் நமது புரிதல்கள் பற்றி உரையாடுவோமே

மணிகண்டன் சொன்னது…

********** இது ஒரு வகையான மூளை சலவை ஒருவேளை நல்லது நடக்க்வில்லை என்றால் உன் மேல் போன ஜென்மத்து குறை இருக்கிறது என்று நழுவி கொள்வார்கள் *****

இன்றைய மருத்துவம் கூட நமக்கு வரும் வியாதிக்கு நம்மை பொறுப்பாளிகள் ஆக்குவது இல்லை.
அதையும் மூளை சலவை என்று கூற முடியுமா ?
It is just to reduce the burden of pain.

வால்பையன் சொன்னது…

// வைக்கும் நம்பிக்கை முழுவதுமாக இருக்க வேண்டும். அவ்வளவே. அதுவே அந்த கதையின் centre point. அதை புரிந்து கொள்ளுங்கள். //

தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மத கதைகளில் ஒன்றும் இல்லை நண்பரே!
எல்லாவற்றுக்கும் அவனை பற்று என்று நமது தன்னம்பிக்கைக்கு ஆப்பு வைப்பது மட்டுமே அதன் செயல்

வால்பையன் சொன்னது…

//நம்பிக்கையோடு படியுங்கள். புரியும் ! //

டோண்டுவை கூப்பிட்டு ஜெர்மனியிலும்,ப்ரெஞ்சிலும் எழுத சொல்கிறேன் படிக்கிறீர்களா

அதற்கு சரி என்றால் நான் இதற்கு சரி

நான் பெருமைக்கு சொல்லவில்லை எனக்கு உண்மையிலேயே அர்த்தம் புரியாது

வால்பையன் சொன்னது…

//இன்றைய மருத்துவம் கூட நமக்கு வரும் வியாதிக்கு நம்மை பொறுப்பாளிகள் ஆக்குவது இல்லை.
அதையும் மூளை சலவை என்று கூற முடியுமா ? //

என்ன வாதம் இது?
கெட்ட தண்ணீர் குடித்தால் டயேரியா வரும். தண்ணீர் மேல் தான் தப்பு இல்லையா?
நமது நம்பிக்கையை பற்றி பேசுவோம்.
எந்த செயலிலும் நான் சம்மந்த படவிலை என்றால் ஏன் வாழனும்?

மணிகண்டன் சொன்னது…

நான் கூகிள் transliterate மூலமாக தமிழில் டைப் செய்கிறேன். அதனால் சில சமயம் ஆங்கிலத்தில் எழுத வேண்டி உள்ளது.

எனக்கு ஜெர்மனும் பிரெஞ்சும் புரியும். ஆதலால் நீங்களும் இதை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்ல வருவதை புரிந்து அதற்கான பின்னூட்டமே அளித்துள்ளேன். இதையே தான் நீங்கள் பக்தி கதைகளில் செய்ய வேண்டும்.

மணிகண்டன் சொன்னது…

***** நமது நம்பிக்கையை பற்றி பேசுவோம்.
எந்த செயலிலும் நான் சம்மந்த படவிலை என்றால் ஏன் வாழனும்? ****


எல்லா செயல்களிலும் என்னை சம்பந்தபடுத்திக்கொண்டால் குற்றஉணர்ச்சி என்னை வாழ விடாது. அதற்கான வடிகால் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

வால்பையன் சொன்னது…

//எனக்கு ஜெர்மனும் பிரெஞ்சும் புரியும். ஆதலால் நீங்களும் இதை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்ல வருவதை புரிந்து அதற்கான பின்னூட்டமே அளித்துள்ளேன். இதையே தான் நீங்கள் பக்தி கதைகளில் செய்ய வேண்டும். //


நான் கதைகள் அனைத்தும் புனைவு என்கிறேன்.
ஒருவேளை ஆங்கிலம் புரியாதவனுக்கு பக்தி கதை புரியாதோ என்னவோ

வால்பையன் சொன்னது…

//எல்லா செயல்களிலும் என்னை சம்பந்தபடுத்திக்கொண்டால் குற்றஉணர்ச்சி என்னை வாழ விடாது. அதற்கான வடிகால் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். //

கடவுள் தேவையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது

மணிகண்டன் சொன்னது…

***** நான் கதைகள் அனைத்தும் புனைவு என்கிறேன் *****

கதைகள் என்றால் புனைவு தான் ! இதை நீங்கள் தனியாக எதற்கு சொல்ல வேண்டும்

வால்பையன் சொன்னது…

//கதைகள் என்றால் புனைவு தான் ! இதை நீங்கள் தனியாக எதற்கு சொல்ல வேண்டும்//

பின் அதன் மேல் நம்பிக்கை கொள்ள என்ன இருக்கிறது.

இன்று ஆட்சியில் இருப்பவர்களை புகழ்ந்து பாடுகிறார்களே பார்த்திருக்கிறீர்களா!
அதுபோல் வேலை வெட்டி இல்லாத யாரோ கிறுக்கிய கதையாக இருக்கும் அது.

மணிகண்டன் சொன்னது…

ஒருவரின் குழந்தை முடமாகவோ, குருடாகவோ, புத்தி பேதலித்தோ பிறக்கிறது. அதற்கு அந்த குழந்தை தான் பொறுப்பு என்று ஏற்போமா நாம் ?

வால்பையன் சொன்னது…

//ஒருவரின் குழந்தை முடமாகவோ, குருடாகவோ, புத்தி பேதலித்தோ பிறக்கிறது. அதற்கு அந்த குழந்தை தான் பொறுப்பு என்று ஏற்போமா நாம் ? //

இல்லை அந்த குழந்தை போனபிறவியில் சரக்கு வுட்டுகிட்டு என்ன மாதிரி நாத்திகம் பேசிருக்கும்னு வச்சிகலாமா?

நம் செயலின் விளைவுகள் நாம் தானே அனுபவித்தாக வேண்டும்.
கடவுள் எங்கே இங்கே?

மணிகண்டன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மணிகண்டன் சொன்னது…

*****நம் செயலின் விளைவுகள் நாம் தானே அனுபவித்தாக வேண்டும்.
கடவுள் எங்கே இங்கே*****

செயலின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் அந்த செயலுக்கு நம்மை நாமே முழுப்பொறுப்பு ஆக்கி கொள்வதற்கும் வேறுபாடு மிக அதிகம்.

வால்பையன் சொன்னது…

//செயலின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் அந்த செயலுக்கு நம்மை நாமே முழுப்பொறுப்பு ஆக்கி கொள்வதற்கும் வேறுபாடு மிக அதிகம். //

ஒருவன் செய்த செயலின் தன்மையை உணர்ந்து அதற்கு பொறுப்பேற்பவனே அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளும் தைரியம் படைத்தவன்.

மற்றவர்களெல்லாம் மேலே கை காட்டி சென்று விடுவார்கள்.

மணிகண்டன் சொன்னது…

மேலே கை காட்டுபவர்கள் எல்லாம் தனது செயலுக்கு தன்னை பொறுப்பு ஆக்கி கொள்ள மாட்டார்கள் என்றோ, தைரியம் அற்றவர்கள் என்றோ நம்புவது கடினமே.

மணிகண்டன் சொன்னது…

வால்பையன், நீங்க ஜக்கி வாசுதேவ் நடத்தும் யோகாவில் பங்கு கொண்டவரா ?

வால்பையன் சொன்னது…

//வால்பையன், நீங்க ஜக்கி வாசுதேவ் நடத்தும் யோகாவில் பங்கு கொண்டவரா ? ///

இல்லை
யோகா என்பது ஒரு வகையான உடற்பயிற்சி தானே, அதை ஜக்கி தான் சொல்லி தர வேண்டுமா?

தருமி சொன்னது…

//இக்கதையின் சாராம்சம் "இறைவனின் மீது நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்" //

எப்படி இப்படிப்பட்ட மதக் கதைகள் மதந்தோரும் "கதைக்கப்பட்டன" என்பது ஆச்சரியம்தான்,. ஒரு செண்டி எஃபக்டுக்காக எழுதுறதோ .. (கிரித்துவத்தில் ஆபிரஹாமின் மகனை கடவுள் பலியாகக் கேட்டாராமே!)

வால்பையன் சொன்னது…

//(கிரித்துவத்தில் ஆபிரஹாமின் மகனை கடவுள் பலியாகக் கேட்டாராமே!) //

நீங்கள் தான் அந்த வாதத்தை முன்னிறுத்த வேண்டும்.
குர்ஆனிலும் இதே போல் ஒரு கதையுண்டு.
கொஞ்சம் வேற மாதிரி அது, கடவுள் பேச்சை கேட்கவில்லை என்பதால் அவரே கொன்று விட்டாராம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
கிறித்துவத்தில் குறைகள் இல்லையா? இஸ்லாத்தில் குறைகள் இல்லையா? சீக்கிய மதத்தில் குறைகள் இல்லையா? புத்த மதத்தில் குறைகள் இல்லையா? யூதத்தில் குறைகள் இல்லையா?
பெளத்த மதத்தில் குறைகள் இல்லையா?
இதையெல்லாம் பற்றிப் பேசாமல் ஏன் இந்து மதத்தைப் பற்றி மட்டும் தப்பும் தவறுமாகப் பேசுகிறீர்கள்??? இதற்குப் பெயர்தான் பகுத்தறிவா?
:P

11:01
//

ஜக்கு,

எல்லாத்துலையும் குறைகள் இருக்குன்னு ஒப்புக் கொள்கிறீர்கள், அடுத்த மதத்தை குறை சொல்வதற்கு அதன் தாக்கம் நம் மீது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
மதம் பிடித்த யானையும்
மதம் பிடித்த மனிதனும் ஒன்று

நான் சொல்வது எல்லா மததிற்க்கும் ஜெகதீசன்
//

வால்பையன்,

மறுபடியும் ருத்ர தாண்டவம்...!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
நீங்கள் வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுக்கறீர்கள் ! இறைவனிடம் உள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதற்காக எழுதப்பட்ட வரலாறு. அதில் பக்தியின் மீது கொண்ட முழு நம்பிக்கையோடு இணைத்து பார்க்க வேண்டும். அதன் சாரம்சத்தை விட்டுவிட்டு அதில் உள்ள நிகழ்வுகளை மட்டும் குறை சொல்ல முயல்கறீர்கள்.
//

நான் 63 நாயன்மார்கள் கதைகளைப் படித்ததும் புரிந்து கொண்டது இதுதான். சிவன் பக்தி என்ற பெயரில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும் அது போற்றப்படும், மற்றும் கதையில் சொல்லியது போல் கடும் சோதனைகளை செய்யத் துணிபவர் என்றால் உங்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பார். நம்பிக்கை என்பது பெற்ற குழந்தையை பலி கொடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
///வால்பையன் said...
மதம் பிடித்த யானையும்
மதம் பிடித்த மனிதனும் ஒன்று///

repeateyyyyyyyyy
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***** எப்படி இப்படி
சாராம்சம் பார்த்து குழந்தையை கொன்னுடலாமா?**********

இதன் சாரம்சத்தை புரிந்த எவரும் குழந்தையை கொல்லமாட்டார்கள். அதலாலே தான் இவ்வாறான கதைகளை பக்தியுணர்வை நன்கு புரிந்தவர்கள் சொல்லி கேட்க வேண்டும். அரைவேக்காடுகள் சொல்லி அல்ல. (கோவி - உங்களை சொல்லவில்லை)

12:00 AM, December 10, 2008
//

மணிகண்டன்,

திருவிளையாடல் புராணங்களையோ, நாயன்மார்கள் கதையையோ சொல்லும் கதாகலேசாபங்களில் சொல்பவருக்கு "என்ன ஒரு பக்தி..." என்றெண்ணி கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுரெடுக்குமாம்.

அந்த சமயத்தில் சிவன் சிவனடியாராகத் தோன்றி பிள்ளைக் கறி கேட்டால் அப்படி ஊற்றெடுக்குமான்னு தெரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

/வால்பையன் said...
//கவியரசு சும்மாவா பாடினான் //


//இதே கவியரசு பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் என்று உளரியது மறந்து விட்டதா?
//

உருகி உருகி அர்த்தமுள்ள இந்து மதம் என்பார், அந்தபக்கம் அர்த்தமுள்ள கிறித்துவம் என்று ஏசுவுக்கு கவிதை பாடுவார்.

//நாத்திகர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பார்கள் என்று எழுதியதும் அவரே!
//

இறைவனுக்காக பெண்டாட்டியைக் கூட்டி கொடுத்ததாக திருவிளையாடல் புராணத்தில் தான் எழுதி இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
****************
இது ஒரு வகையான மூளை சலவை.
ஒருவேளை நல்லது நடக்க்வில்லை என்றால் உன் மேல் போன ஜென்மத்து குறை இருக்கிறது என்று நழுவி கொள்வார்கள்.

கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள் **********

வைக்கவேண்டாம் என்று யார் சொன்னார்கள். வைக்கும் நம்பிக்கை முழுவதுமாக இருக்க வேண்டும். அவ்வளவே. அதுவே அந்த கதையின் centre point. அதை புரிந்து கொள்ளுங்கள்.//

அடக் கொடுமையே ஒரு பக்தன் தன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பானா இல்லையான்னு தெரியாத ஒன்றை கடவுள் என்று உருவகப்படுத்துவிங்களா ? பொண்டாட்டிய சந்தேகப்படுபவனுக்கும் இந்த கதையில் காட்டும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
//இக்கதையின் சாராம்சம் "இறைவனின் மீது நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்" //

எப்படி இப்படிப்பட்ட மதக் கதைகள் மதந்தோரும் "கதைக்கப்பட்டன" என்பது ஆச்சரியம்தான்,. ஒரு செண்டி எஃபக்டுக்காக எழுதுறதோ .. (கிரித்துவத்தில் ஆபிரஹாமின் மகனை கடவுள் பலியாகக் கேட்டாராமே!)
//

இஸ்மாயிலை கனவில் பலிகேட்ட கதையை படித்ததும் எனக்கு சிறுதொண்டர் புராணம் தான் நினைவுக்கு வந்தது. கடைசியாக ஒரு ஆட்டை பலி இட்டாலே போதும் என்று கடவுள் இறங்கி வந்துவிடுவாராம். எதுக்கு இந்த சோதனை ? இந்த லட்சணத்தில சில இஸ்லாமிய அன்பர்கள் பிள்ளைக்கறி கேட்டானா சிவன் ? என்னமோ ஆன்மிக அபத்தம் இந்துமதம் மட்டுமே மொத்த குத்தகையில் வைத்திருப்பது போல் பேசுகிறார்கள்.

ஒன்று புனிதமாம், மற்றொன்று மூட நம்பிக்கையாம். அவரவர் பார்வையில் இருக்கிறது கோளாறுகள்.

RAHAWAJ சொன்னது…

கோவி, அருமையான விளக்கம் உங்கள் நடையில், ஆனால் இந்த கதையின் உட்பொருள் உங்களுக்கு விளங்கவில்லை என்பதனை உங்கள் அருமையான விளக்கத்தின் மூலம் உணரமுடிகிறது."புரிதல்" என்பது மிக கடினம் கோவி. ஆன்மிகம் என்பது இது அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//RAHAWAJ said...
கோவி, அருமையான விளக்கம் உங்கள் நடையில், ஆனால் இந்த கதையின் உட்பொருள் உங்களுக்கு விளங்கவில்லை என்பதனை உங்கள் அருமையான விளக்கத்தின் மூலம் உணரமுடிகிறது."புரிதல்" என்பது மிக கடினம் கோவி. ஆன்மிகம் என்பது இது அல்ல.
//

ஜவஹர் அண்ணா,

உட்பொருளை விளங்கவைக்கும் அளவுக்கு அன்பே சிவமென்னும் சைவ மேட்டர் இந்த கதையில் இல்லை. எதையும் செய்யத் துணிந்தால் தான் உயர்ந்த பக்தி என்பதான வலி யுறுத்தல் இந்த கதையில் இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. தியாகம் வேறு அது தன்னுடைய உடமையை கொடுப்பது. மகன் பெற்றவர்களுக்கு பிறந்தவரென்றாலும் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. அதையே கடவுள் பெயரால், கடவுள் விரும்புகிறார் என்றூ சொல்வது காட்டுமிராண்டித்தனமாகத் தான் எனக்கு தெரிகிறது.

நாளைக்கு சாமிக்கு படையல் போட பணம் இல்லை அதனால் கொள்ளை அடித்தேன் என்று ஒருவன் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ?

ஆனால் அது போன்ற கதைகள் பெரியபுராணத்தில் உண்டு.

வால்பையன் சொன்னது…

//நாளைக்கு சாமிக்கு படையல் போட பணம் இல்லை அதனால் கொள்ளை அடித்தேன் என்று ஒருவன் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மணிகண்டன் சொன்னது…

*************** எப்படி இப்படிப்பட்ட மதக் கதைகள் மதந்தோரும் "கதைக்கப்பட்டன" என்பது ஆச்சரியம்தான்,. ஒரு செண்டி எஃபக்டுக்காக எழுதுறதோ .. (கிரித்துவத்தில் ஆபிரஹாமின் மகனை கடவுள் பலியாகக் கேட்டாராமே!) ****************

உண்மை தான். மக்களை மதத்தின், நம்பிக்கையின்பால் இழுக்கவே இவ்வாறான கதைகள் கதைக்கபடுகின்றன. இக்கதைகளில் உள்ள சம்பவத்தை மட்டுமே எடுத்துகாட்டாக எடுத்துகொள்ளும் சமூகம் இருக்கும் பட்சத்தில், இக்கதைகளுக்கு (இந்த சூழ்நிலையில்) இடமில்லை என்று தான் சொல்லவேண்டும்.

மணிகண்டன் சொன்னது…

****** அடக் கொடுமையே ஒரு பக்தன் தன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பானா இல்லையான்னு தெரியாத ஒன்றை கடவுள் என்று உருவகப்படுத்துவிங்களா ? பொண்டாட்டிய சந்தேகப்படுபவனுக்கும் இந்த கதையில் காட்டும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு ? ******

பக்தனின் நம்பிக்கையை சமூகத்திற்கு பறை சாற்றும் யுக்தி.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
*************** எப்படி இப்படிப்பட்ட மதக் கதைகள் மதந்தோரும் "கதைக்கப்பட்டன" என்பது ஆச்சரியம்தான்,. ஒரு செண்டி எஃபக்டுக்காக எழுதுறதோ .. (கிரித்துவத்தில் ஆபிரஹாமின் மகனை கடவுள் பலியாகக் கேட்டாராமே!) ****************

உண்மை தான். மக்களை மதத்தின், நம்பிக்கையின்பால் இழுக்கவே இவ்வாறான கதைகள் கதைக்கபடுகின்றன. இக்கதைகளில் உள்ள சம்பவத்தை மட்டுமே எடுத்துகாட்டாக எடுத்துகொள்ளும் சமூகம் இருக்கும் பட்சத்தில், இக்கதைகளுக்கு (இந்த சூழ்நிலையில்) இடமில்லை என்று தான் சொல்லவேண்டும்.
//

மணிகண்டன்,

அந்த சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு 'ஆகா...ஆன்மிக அற்புதம், அதைப் போற்றாதவன் அறிவிலி, நாத்திகன்' என்பவர்களிடம் அந்தக் கதையைத் தான் சுட்டிக் காட்டி கேள்வி கேட்க முடியும் என்பதை புரிந்து கொண்டுள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். நன்றி !

மணிகண்டன் சொன்னது…

*********** திருவிளையாடல் புராணங்களையோ, நாயன்மார்கள் கதையையோ சொல்லும் கதாகலேசாபங்களில் சொல்பவருக்கு "என்ன ஒரு பக்தி..." என்றெண்ணி கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுரெடுக்குமாம்.

அந்த சமயத்தில் சிவன் சிவனடியாராகத் தோன்றி பிள்ளைக் கறி கேட்டால் அப்படி ஊற்றெடுக்குமான்னு தெரியல. **********

பயம் ஊற்றுரெடுக்கும் !

மணிகண்டன் சொன்னது…

*********** இல்லை
யோகா என்பது ஒரு வகையான உடற்பயிற்சி தானே, அதை ஜக்கி தான் சொல்லி தர வேண்டுமா? ********

இல்லை வால்பையன். அந்த பயிற்சியில் சென்று வந்த என் நண்பன் உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவத்திற்கும் நானே பொறுப்பு என்று நினைக்க வேண்டும் என்று கூறி வந்தான். செப்டம்பர் 11 குண்டுவெடிப்புக்கு கூட நான் தான் பொறுப்பு என்று கூறி வந்தான் ! அதனால் தான் கேட்டேன்.

மணிகண்டன் சொன்னது…

****** அந்த சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு 'ஆகா...ஆன்மிக அற்புதம், அதைப் போற்றாதவன் அறிவிலி, நாத்திகன்' என்பவர்களிடம் அந்தக் கதையைத் தான் சுட்டிக் காட்டி கேள்வி கேட்க முடியும் என்பதை புரிந்து கொண்டுள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். நன்றி ********

மிக அதிக மக்களை சென்றடைவதே மட்டுமே உங்களது குறிக்கோள் என்றால் இதுவும் ஒரு நல்ல யுக்தியே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
****** அந்த சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு 'ஆகா...ஆன்மிக அற்புதம், அதைப் போற்றாதவன் அறிவிலி, நாத்திகன்' என்பவர்களிடம் அந்தக் கதையைத் தான் சுட்டிக் காட்டி கேள்வி கேட்க முடியும் என்பதை புரிந்து கொண்டுள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். நன்றி ********

மிக அதிக மக்களை சென்றடைவதே மட்டுமே உங்களது குறிக்கோள் என்றால் இதுவும் ஒரு நல்ல யுக்தியே.
//

மணிகண்டன்,

பெரியார்காலத்திலேயே பெரியபுராணக் கதைகள் கதாகலேட்சேபமாக, திரைப்படமாகக் கூட பெரிய அளவில் பக்திக் கதையாக பரப்பப்பட்டு வந்தன. பெரியார் மற்றும் அண்ணா அந்த கதைகளின் தன்மைகள் குறித்து கேள்வி எழுப்பிய பிறகு யாரும் அவை பற்றி வெளியே பேசுவது இல்லை. இன்றைக்கு (வெறும்) பக்தி இலக்கியம் என்ற அளவில் தான் இருக்கிறது.

நான் இந்த கதையை பழைய கண்டுபிடிப்பில்ல் புதிய குறைச் சொல்வது போல் செல்லவில்லை. ஏற்கனவே பெரியார் இயக்கத்தினர் கேட்டவைதாம் இவைகள்.

பெரியார் கொள்கைகளில் இறைமறுப்பில் எனக்கு நாட்டமில்லாவிட்டாலும், மூட நம்பிக்கைகளை ஆராய்ந்து மறுக்கும் அவர்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்.

பக்தியாளர்கள் சாக்கடையில் பன்னீர் தெளித்துவிட்டால் , வாடை வராது என்று நினைப்பர், பெரியார் இயக்கத்தினர் சுட்டிக் காட்டி அசுத்தம், நல்லதல்ல தூய்மை படுத்துங்கள் என்கிறார்கள்.

மணிகண்டன் சொன்னது…

பக்திப்படங்கள் சினிமாவாக வருவது நின்று போனது நல்லது தான் ! எனக்கு அவ்வாறான படங்கள் பிடிப்பதில்லை. (தெலுங்கு டப்பிங் பக்தி படங்கள் வராததால்) கதாகலேட்சேபங்கள் இன்றும் நடந்து தான் வருகின்றன. கூட்டமும் ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவை விட்டு வெளியே வசிப்பதால் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள். புதிது புதிதாக சேனல்கள் வருகின்றன. தொலைக்காட்சி பார்ப்பது இல்லையோ நீங்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
பக்திப்படங்கள் சினிமாவாக வருவது நின்று போனது நல்லது தான் ! எனக்கு அவ்வாறான படங்கள் பிடிப்பதில்லை. (தெலுங்கு டப்பிங் பக்தி படங்கள் வராததால்) கதாகலேட்சேபங்கள் இன்றும் நடந்து தான் வருகின்றன. கூட்டமும் ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவை விட்டு வெளியே வசிப்பதால் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள். புதிது புதிதாக சேனல்கள் வருகின்றன. தொலைக்காட்சி பார்ப்பது இல்லையோ நீங்கள் ?
//

மணிகண்டன்,

நீங்கள் சொல்வது புராண இதிகாசங்களில் கதை நிகழ்ச்சிகள், அதாவது வில்லிபாரதம், இராமயணம் மற்றும் கந்தப்புரணம், இங்கும் எப்போதாவது நடக்கும்.

மற்றபடி 64 நாயன்மார்கள் வரலாற்றை கண்ணீர் பெருக்குடன் சொல்பவர்கள் யாரும் தற்பொழுது இல்லை.

மணிகண்டன் சொன்னது…

இந்தியாவுக்கு வரும் பொழுது கூறுங்கள் ! நான் உங்களை T.V கோயில் அல்லது சீரங்கத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முயற்சிக்கறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
இந்தியாவுக்கு வரும் பொழுது கூறுங்கள் ! நான் உங்களை T.V கோயில் அல்லது சீரங்கத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முயற்சிக்கறேன்.
//

மணிகண்டன்,

அன்புக்கு நன்றி !
திருவரங்கத்தில் நாயன்மார்கள் கிடையாது ஆழ்வார்கள் தான்.

1000 ஆண்டு பழமையான கோவில்கள், 2000 ஆண்டு பழமையான பக்தி இலக்கியங்கள் இவற்றைப் பலரும் போற்றுகிறார்கள் என்று தெரிந்தே மறுப்பவர்களை எந்த விதத்தில் சரி செய்ய முடியும் ? ஒன்று அதையெல்லாம் முற்றிலும் ஒதுக்குபவராக இருப்பார்கள், அவர்கள் பகுத்தறிவுவாதிகள், ஏனென்றால் கதைகளை அவர்கள் நம்புவதற்கு ஏதுவாக இருப்பது இல்லை.

அப்படி நினைக்கும் மற்றவர்களும் உள்ளனர். அதே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில்கள், சைவ சமய பாடல்கள் சிவனெல்லாம் சாமியல்ல திருமாலே எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பார்கள். இவர்களுக்கு(ம்) ஆத்திகர் என்றே பெயர்.

நான் பகுத்தறிவாளனோ, அதற்கு எதிரான ஆத்திகனோ இல்லை.

இறைவன் பற்றிய சரியான புரிந்துணர்வு எனக்கு உண்டு, ஆகையால் நான் வழிபாட்டு தலங்களுக்கு செல்வது கிடையாது.

மணிகண்டன் சொன்னது…

T.V Koil என்பது திருவானைக்கோவில் - புகழ் பெற்ற சைவ திருத்தலம். சீரங்கத்திலிருந்து 1கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது !

திருமாலை மட்டுமே வழிபடும் வைணவர்கள் இருக்கிறார்கள். சமாசனம், பரண்யாசம் செய்து கொண்டவர்களை இவ்வாறு கூறுவர். மனதை ஓரிடத்தில் செலுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நியதிகள் இவை. அது சிதிலம் அடைந்து இப்பொழுது இந்த நிலையில் உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
T.V Koil என்பது திருவானைக்கோவில் - புகழ் பெற்ற சைவ திருத்தலம். சீரங்கத்திலிருந்து 1கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது !//

மணிகண்டன்,

கேள்விப்பட்டு இருக்கிறேன்.

//திருமாலை மட்டுமே வழிபடும் வைணவர்கள் இருக்கிறார்கள். சமாசனம், பரண்யாசம் செய்து கொண்டவர்களை இவ்வாறு கூறுவர். மனதை ஓரிடத்தில் செலுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நியதிகள் இவை. அது சிதிலம் அடைந்து இப்பொழுது இந்த நிலையில் உள்ளது.//

தகவலுக்கு நன்றி, ஆனால் அப்படி பட்டவர்கள் யாரும் தற்போது இல்லை, யானைக்கு எந்த கலை நாமம் போடுவது என்பதே வழக்காகி நீதிமன்றம் சென்றதாம். பெருமாள் பக்தியிலும் நாமத்தின் மீதான பக்தி உயர்ந்தது போலும்.

கலியுகம் என்பதற்கு ஒரு இடத்தில் விளக்க்கம் படித்தேன். "இறைவன் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட இறைப்புகழ் பாடுவார்களாம்...அதாவது இனிப்பின் சுவை இன்னதென்றே அறியாதவர் அதில் பலகாரம் செய்வது பற்றி பக்கம் பக்கமாக எழுதுவது" இப்ப விற்கிற கடவுள், இறைநம்பிக்கைக் கடைச் சரக்குகளெல்லாம் இப்படிப்பட்டதே.

வால்பையன் சொன்னது…

//அந்த பயிற்சியில் சென்று வந்த என் நண்பன் உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவத்திற்கும் நானே பொறுப்பு என்று நினைக்க வேண்டும் என்று கூறி வந்தான். செப்டம்பர் 11 குண்டுவெடிப்புக்கு கூட நான் தான் பொறுப்பு என்று கூறி வந்தான் ! அதனால் தான் கேட்டேன். //


ஹா ஹா ஹா
நல்ல காமெடி
கடவுள்
நம்பிக்கை
சூழல்
சூழ்நிலை

அப்படியே வேற எங்கேயாவது போயிரப்போறேம்

நம் உரையாடல் ட்ராக் மாறி போய் கொண்டிருக்கிறது.
தவறு என் மீதும் இருக்கலாம்.
கொஞ்சம் திரும்பி பார்ப்போம்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையன் 12:00 AM, December 10, 2008
//கவியரசு சும்மாவா பாடினான் //

ஆமாம் காசு வாங்கி தான் பாடினார்

நண்பரே வர்த்தை கோர்வையும்,
வசிகர பேச்சும் எதையும் நம்பவைக்கும்.இங்கே தேவை புரிதல் மட்டுமே.

இதே கவியரசு பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் என்று உளரியது மறந்து விட்டதா?

நாத்திகர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பார்கள் என்று எழுதியதும் அவரே!//


திரு வால்பையன்,
சினிமாவிற்கு பாட்டு எழுதுகிறவர்கள் அனைவரும் காசு வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள். அது எனக்கு தெரியாது என்று நினைத்து சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். இருக்கட்டும்.
கண்ணதாசன் மீது உங்களுக்குக் காண்டு இருப்பதைப் புரிந்து கொண்டேன்.
உண்மையை அப்பட்டமாக எழுதுபவர்களை யாருக்குத் தான் பிடிக்கும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்/எழுதும் ஒப்பனைத் மனிதர்களான அமிர்த கலயங்களை அல்லவா இப்போதெல்லாம் தரிசிக்கிறார்கள்.
சொல் ஒன்று அர்த்தங்கள் ஆயிரம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒருவர் ஆயிரம் விடயங்களை பேசலாம் எழுதலாம். நமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் என் வாதம்.
பத்து கொலையைப் செய்து விட்டு நான் திருந்திவிட்டேன் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லையா?
அப்படிப்பார்த்தால் மகாத்மா காந்தி கூடத்தான் நிறைய தவறுகள் செய்திருக்கிறார்.
அவரை ஏன் மகாத்மா என்று உலகெங்கும் போற்றுகிறார்கள்? அவர் செய்த சில நல்ல செயல்களால் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

வால்பையன் சொன்னது…

//உண்மையை அப்பட்டமாக எழுதுபவர்களை யாருக்குத் தான் பிடிக்கும். //

அப்படியானால் சொலவதையெல்லாம் உண்மையென்று நம்பும் பழக்கம் உள்ளவர் நீங்கள்,

ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்று நம்பினார்கள், அதுவே அப்போது உண்மையாக இருந்தது

சூரியன் பூமியை சுற்றுயது என்று நம்பினார்கள் அதுவே அப்போது உண்மையாக இருந்தது.

பின்னாளில் உங்களின் உண்மையும் அதை போல் பல்லிளிக்கலாம்.

வால்பையன் சொன்னது…

//மகாத்மா காந்தி கூடத்தான் நிறைய தவறுகள் செய்திருக்கிறார்.
அவரை ஏன் மகாத்மா என்று உலகெங்கும் போற்றுகிறார்கள்? //

உங்களுக்கு தான் கொண்டாட ஒரு ஆள் இல்லையென்றால் தூக்கம் வராதே!
பெரியாரை கொண்டாடுவதே தவறு என்கிறவன் நான் நீங்கள் காந்திக்கு போய் விட்டீர்கள்

வால்பையன் சொன்னது…

//அவர் செய்த சில நல்ல செயல்களால் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.//

காந்தி மட்டும் தான் நல்லது செய்தாரே!
மற்ற அனைவரும் குற்றவாளிகளா என்ன? நீங்கள் உட்பட
யாரையாது கொண்டாட ஆசைப்பாடால் நீங்கள் உங்களையே கொண்டாடுங்கள்

வால்பையன் சொன்னது…

//ஒருவர் ஆயிரம் விடயங்களை பேசலாம் எழுதலாம். நமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் என் வாதம்.//

புரிதலில் அனைவரும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறோம்.
ஒரே வகுப்பு தான், ஒரே ஆசிரியர் தான்,
அதே பாடம் தான் ஆனால் எல்லோரும் முதல் மதிப்பெண் வாங்குவதில்லை, காரணம் அவர்களது புரிதல்.
நீங்கள் சொல்வதை போல் நல்லதை மட்டுமே எடுத்து கொள்ளலாம்.
ஆனால் எது நல்லது என்று எப்படி தெரிந்து கொள்வது?
என்பதே என் வாதம்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையன் said...
//உண்மையை அப்பட்டமாக எழுதுபவர்களை யாருக்குத் தான் பிடிக்கும். //

அப்படியானால் சொலவதையெல்லாம் உண்மையென்று நம்பும் பழக்கம் உள்ளவர் நீங்கள்,

ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்று நம்பினார்கள், அதுவே அப்போது உண்மையாக இருந்தது

சூரியன் பூமியை சுற்றுயது என்று நம்பினார்கள் அதுவே அப்போது உண்மையாக இருந்தது.

பின்னாளில் உங்களின் உண்மையும் அதை போல் பல்லிளிக்கலாம்.//

சொல் ஒன்று அர்த்தங்கள் ஆயிரம் என்பது உங்கள் வாதத்திற்கு சரியாகப் பொருந்தி வருகிறது. நீங்கள் யாரையும் மினிமம் கேரண்டியில் கூட நம்ப மாட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படிதான் உள்ளது உங்கள் வாதம். நீங்கள் அறிவியலைப் பற்றியெல்லாம் பேச வேண்டியதில்லை. அடிப்படைப் பகுத்தறிவு படிக்காதவனுக்குக் கூட உண்டு. எதை நம்பவேண்டும் எதை நம்பக் கூடாது என்று ஓரளவுக்காவது தெரிய வேண்டும். அதுதான் மக்களை மாக்களிடமிருந்து வேறுபடுத்திக் கட்டுகிறது என்கிற புரிதல் இருந்தால் போதும்.

CA Venkatesh Krishnan சொன்னது…

இதனடிப்படையில் இன்றைய ஹிந்துவில் வந்த செய்தி இது. திருவண்ணாமலை அருகே ஒருவனுக்குக் காளி கனவில் வந்து அவன் இரு குழந்தைகளையும் நரபலி கொடுத்தால் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீடு எந்தவிதத் தடங்கலும் இன்றி நிறைவடையும் என்று கூறியதால், அவ்வாறு செய்திருக்கிறான்.

இதை எங்கே போய்ச் சொல்ல :(((

வால்பையன் சொன்னது…

//அதுதான் மக்களை மாக்களிடமிருந்து வேறுபடுத்திக் கட்டுகிறது என்கிற புரிதல் இருந்தால் போதும். //

மாக்கள் தான் இன்று மக்களாக இருக்கிறோம், மீண்டும் எல்லாவற்றையும் நம்பி மாக்களாக சொல்கிறீர்களா?
யார் சொன்னாலும் அதை ஆராயாமல் நான் ஏற்று கொள்ள மாட்டேன். மற்றவர்களையும் அதையே செய்ய சொல்கிறேன்

வால்பையன் சொன்னது…

//இதனடிப்படையில் இன்றைய ஹிந்துவில் வந்த செய்தி இது. திருவண்ணாமலை அருகே ஒருவனுக்குக் காளி கனவில் வந்து அவன் இரு குழந்தைகளையும் நரபலி கொடுத்தால் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீடு எந்தவிதத் தடங்கலும் இன்றி நிறைவடையும் என்று கூறியதால், அவ்வாறு செய்திருக்கிறான்.

இதை எங்கே போய்ச் சொல்ல :(((

//


சரியான இடத்தில் தான் சொல்லியிருக்கிறீர்கள்

உளவியல் ரீதியாக சாமியாடுதல்,
கடவுளை பார்த்தல் போன்றவை
மனசிதைவால் ஏற்படும் மாய பிம்பம் மற்றும் நரம்பியல் கோளாறு என்று நிறூபிக்கப்பட்டுள்ளது

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
இதனடிப்படையில் இன்றைய ஹிந்துவில் வந்த செய்தி இது. திருவண்ணாமலை அருகே ஒருவனுக்குக் காளி கனவில் வந்து அவன் இரு குழந்தைகளையும் நரபலி கொடுத்தால் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீடு எந்தவிதத் தடங்கலும் இன்றி நிறைவடையும் என்று கூறியதால், அவ்வாறு செய்திருக்கிறான்.

இதை எங்கே போய்ச் சொல்ல :(((
//

நட்சத்திர பதிவரே, வருத்தமான செய்தி, ஒருவர் கடவுள் கனவில் கேட்டதாக இரண்டு கண்ணையும் தோண்டி வைத்துவிட்டார். மன நோயின் உச்சகட்டம்.

ஒரு 300 ஆண்டுகளின் பிந்தைய நிகழ்வாக இருந்திருந்தால் சைவ சமயத்தில் அந்த ஆள் சக்தி(காளி) அடியவராக இருந்தார் எனச் சொல்லி அவனது பெருமையைப் பாடி இருப்பார்கள்.
:(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையன் said...
//மகாத்மா காந்தி கூடத்தான் நிறைய தவறுகள் செய்திருக்கிறார்.
அவரை ஏன் மகாத்மா என்று உலகெங்கும் போற்றுகிறார்கள்? //

உங்களுக்கு தான் கொண்டாட ஒரு ஆள் இல்லையென்றால் தூக்கம் வராதே!
பெரியாரை கொண்டாடுவதே தவறு என்கிறவன் நான் நீங்கள் காந்திக்கு போய் விட்டீர்கள்//

நான் மகாத்மா காந்தியைக் கொண்டாடுகிறேன் என்று உங்களுக்குச் சொன்னேனா?
நீங்கள் எடுத்துக் கொள்வதற்கெல்லாம், நான் விளக்கம் சொல்ல வேண்டியதாயிருக்கிறது வால்ப்பையன்.
பெரியாரும் மனிதர்தான், காந்தியும் அதே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. பிடித்தவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். பிடிக்காதவற்றை விட்டு விடுகிறார்கள். யாரும் தனி மனிதரை கட்டாயப் படுத்த முடியாதல்லவா? கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை நூறு சதம் ஆதரிப்பதை, அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

வால்பையன் சொன்னது…

//கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை நூறு சதம் ஆதரிப்பதை, அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. //

ஆனால் கடவுளை மட்டும் நூறு சதவிகதம் ஆதரிக்கிரீர்களே!

இல்லாத ஒன்றை மட்டும் ஆதரிக்க மட்டும் எப்படி முடிகிறாது?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையன் said...
//அவர் செய்த சில நல்ல செயல்களால் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.//

//காந்தி மட்டும் தான் நல்லது செய்தாரே!
மற்ற அனைவரும் குற்றவாளிகளா என்ன? நீங்கள் உட்பட
யாரையாது கொண்டாட ஆசைப்பாடால் நீங்கள் உங்களையே கொண்டாடுங்கள்////

யாரும் யாரையும் கட்டாயப் படுத்தமுடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி காந்தியைப் பற்றிய உங்கள் கருத்துக்கு முந்தைய மறுமொழியே பதில். உங்களுக்கு காந்தியை பிடிக்காமல் இருக்கலாம். நீங்கள் லட்சத்தில் ஒருவராக இருக்க முடியும். உங்கள் கருத்தை யாரிடமும் திணிக்க வேண்டாம் அல்லது முடியாது என்கிற புரிதலை வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு காந்தியை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாமலேயே என்னிடம் வாதம் செய்வதில் இருந்து எனக்கு, நீங்கள் பகுத்தறிவு வாதி என்று தெரிகிறது.

வால்பையன் சொன்னது…

//அவரை ஏன் மகாத்மா என்று உலகெங்கும் போற்றுகிறார்கள்? //

//நான் மகாத்மா காந்தியைக் கொண்டாடுகிறேன் என்று உங்களுக்குச் சொன்னேனா?//

மேல் உள்ள வாக்கியங்கள் எனக்கு அந்த அர்த்ததை தந்து விட்டது. மன்னிக்கவும்

வால்பையன் சொன்னது…

//உங்களுக்கு காந்தியை பிடிக்காமல் இருக்கலாம். //

காந்தியை கொண்டாட வேண்டாம் என்றால், எனக்கு காந்தியை பிடிக்காது என்று முடிவு கட்டி விட்டீர்கள். இது பொது புத்தி.
பிடிப்பது. பிடிக்காதது என்பது எந்த கட்டமைப்பில் ஆரம்பிக்கறது?

வால்பையன் சொன்னது…

//எனக்கு காந்தியை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாமலேயே என்னிடம் வாதம் செய்வதில் இருந்து எனக்கு, நீங்கள் பகுத்தறிவு வாதி என்று தெரிகிறது. //

உங்களுக்கு காந்தியை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதால், அதற்க்காக உங்களது கேரக்டர் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எதாவது வரைமுறை உள்ளதா?
உங்களுக்கும் எனக்கும் தானே உரையாடல், காந்தி என்ன செய்தார் பாவம்

வால்பையன் சொன்னது…

//நீங்கள் பகுத்தறிவு வாதி என்று தெரிகிறது.
//

தமிழகத்தில் இது அதிகம் புழங்கம் கெட்டை வார்த்தையாக பார்க்க படுகிறது

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையன் said...
//கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை நூறு சதம் ஆதரிப்பதை, அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. //

ஆனால் கடவுளை மட்டும் நூறு சதவிகதம் ஆதரிக்கிரீர்களே!

இல்லாத ஒன்றை மட்டும் ஆதரிக்க மட்டும் எப்படி முடிகிறாது?
//

ஹா ஹா!
ஜோக் அடிக்கிறீங்க வால்ப்பையன்,
என்னோட பதிவுகள் அல்லது வேறு எங்காவது பின்னூட்டம், மறுமொழியில் அப்படி எழுதியிருந்தால், தெரிவியுங்கள். எப்படி நீங்களாகவே எடுத்துக் கொள்கிறீர்கள்.
அதுதான் உங்கள் ச்பெசாலிட்டியா?

வால்பையன் சொன்னது…

இவ்வளவு நேரம் பெயரை பார்க்காமல் மணிகண்டனிடம் உரையாடி கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஹா ஹா!
இந்த ஜோக்கு நூத்துல ஒன்னு!!
இதுவரையும் சிறப்பாக வாதம் செய்த வாலுக்கு நன்றி!

வால்பையன் சொன்னது…

உங்களுக்கும் நன்றி பாரதி,
இந்த உரையாடலில் எனக்கு தெரியாத சில விசயங்களை தெரிந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி

மணிகண்டன் சொன்னது…

மணிகண்டன் - ஐயப்பன் - ஜோதி

நீங்கள் நினைத்ததில் தவறில்லை வால்பையன்.

வீ. எம் சொன்னது…

சோதனை , விளையாட்டு என்ற பெயரில் இது போண்று நடந்தது என்று படிக்கின்ற போதே வெறுப்பாக இருக்கிறது..

இதன் தொடர்ச்சி தான் போலும், இன்றும் நாம் கேள்விப்படும் சில செய்திகள்... தன் குடும்ப நலனுக்கு மகனை நரபலி கொடுத்த தந்தை .. பக்கத்து வீட்டு மூத்த பிள்ளையை காளிக்கு நரபலி... கள்ளகாதலன் விருப்பத்துக்கு இனங்கி 3 வயது மகனை கொன்ற தாய்...

இப்பொழுது வந்திருக்கும் ஓர் செய்தி - தன் புதுவீட்டில் சந்தோஷமாக வாழ தன் மகனை வெட்டி கொன்று நரபலி கொடுத்த தந்தை..

இந்த கதையிலும் சிவன் மேல் பக்தியால் தாய் தந்தையார் கொலை செய்தனர்

இங்கே காளியின் பக்தியில் தன் மகனை கொன்றான் தந்தை ஆனால்

Adhitya சொன்னது…

வணக்கம்.

தங்களுடைய பாணி அருமை. மிகப் பெரிய விஞ்ஞானத்தையும், இன்னும் புரியாத இரகசியங்களையும் கொண்டது ஆன்மிகம். மனிதன் பகுத்தறிவால் தன்னை திருப்திபடுத்தும் விளக்கங்களை தேடிக் கொள்ளலாம். பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட புரியாத விஷயங்களை மூடத்தனம் என்று புறந்தள்ளுவது அவரவர் வசதிக்கேற்பதான். மூடத்தனம் உருவானதும் பகுத்தறியாமல் இருப்பதற்குதான். ஆனால் இதில் எது பகுத்தறிவு, எது ஆன்மிகம், எது பக்தி.... இன்னும் பல அறிவுக்கு எட்டாத... சாதாரண எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட... புரிந்து கொள்வதற்கு எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் இருக்கட்டும். ஆனால் மனிதனுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை அவனும் உணர்ந்து, அவனைச் சுற்றியுள்ளவர்களும் அதனால் மேன்மை பெற எந்த வழியும்... உண்மையான இறைத்தொண்டே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்