பூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் மனிதனைவிட பிற உயிரினங்களே முன்னிலை வகிக்கின்றன. பருவம் மாறும் போது முட்டையிட பிற நாடுகளுக்கு பறந்து செல்லும் பறவைகள், பருவ காலத்தின் ஈரப்பதத்தை சரியாகப் பயன்படுத்தி பூத்துக் குலுங்கும் மரங்கள், சரியான நீர் ஓட்டம், வெப்பம் இருக்கும் காலத்தில் முட்டையிடும் மீன் இனங்கள் என அனைத்து உயிரினங்களுமே இயற்கையில் பூமியில் நடக்கும் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப தனது இனப்பெருக்கச் செயல்பாடுகளையும், வளர்ச்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டன. அல்லது அவைகளின் இயல்பான இயற்கை அமைப்பே இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவதாகவே இருக்கின்றன.
200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நாடுகளில் மனிதர்களின் பெரும்பகுதியினர் வசித்தனர். அவைகள் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடமாக விளைச்சலுக்கு ஏற்ற பருவகாலங்கள் மாறி மாறி வந்ததும் ஒரு காரணம். மனிதன் உலக நிலப் பரப்புகளைத் தேடிக் கண்டு கொண்ட பிறகு பல்வேறு குடியேற்றங்கள் என பூமியின் நிலப்பரப்பு முழுவதுமே மனிதன் காலடிப் பட்ட இடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகள் மனிதர்கள் இல்லையா ? அவர்களெல்லாம் பழங்குடி இனராக அநதந்த கண்டங்களில் இருந்தவர்கள் தானே ? சரிதான். கண்டங்கள் ஒன்றாக இருந்த போது ஒரே இடத்தில் இருந்த மனித இனம் கண்டங்கள் பிரிந்த போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள். பெரும்பாலும் வேட்டை ஆடுவதால் அவர்களுக்கு அன்றாட வாழ்வில் பிறவகையான அறிவு வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் தேவை இல்லாது போய்விட்டது. பழங்குடி இன காட்டுவாசிகள் காடுகளை அழித்துவிட்டு நகரங்களை உருவாக்க வில்லை.
ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு பல்வேறு கண்டங்கள் வந்த பிறகு பெருவாரியான குடியேற்றத்தின் காரணமாக காடுகளாக இருந்த நிலப்பரப்புகள் அழிக்கப்பட்டன. இவை இனப்பெருக்கத்தின், மனித இன இடப் பெயர்ச்சியின் தேவைகள் என்றாலும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை என்பதிலிருந்து மனித சமூகம் விலகியதே சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தலுக்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது
இயற்கையோடு இணங்கிய வாழ்க்கை, இதில் இந்தியர்கள் மிகச் சரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற செயலாக பயிரிடுதல், அறுவடை, நிலத்தை பதப்படுத்துதல் ஆகிய விவசாயம் சார்ந்தது மட்டுமின்றி, சில பிற உயிரினங்களைப் போல் முட்டையிடும் பருவம் என்று தனியாக காலக் கட்டங்கள் இல்லாததால் பருவம் மடைந்த மனிதனுக்கு கற்ப காலம் என்று எதுவும் தனியாகக் கிடையாது எனவே குழந்தை எந்த மாதத்தில் உருவாகுவதைத் தடுத்தால் குழந்தையும் தாயும் துன்பமின்றி இருப்பார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டே கணவன் - மனைவியை 'ஆடியில் தள்ளி' இருக்கச் செய்தனர். இந்தியர்களின் வாழ்வியல் முறை முழுவதும் அந்த ஆண்டு பருவ சுழற்சிக்கு ஏற்பவே அமைத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. நில அமைப்புகளையும் நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம் என்கிற வகைப்பாட்டிற்குள் வைத்து அதற்கேற்ற பயிர்களையே செய்து வந்தனர். மழைத்தப்பி பஞ்சம் ஏற்பட்டு இருந்தாலும் பருவகாலங்களையும், நிலப் பரப்பு சார்ந்த தொழில்களைத் துறந்து புதிய தொரு தொழில்களுக்கு எந்த ஒரு காலத்திலும் இந்தியர்கள் முயன்றிருக்கவில்லை. அதாவது இயற்கையை பெரும அளவு அழித்துவிட்டு தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளத் துணிந்ததில்லை. அன்றைய நகரங்கள் எதுவும் மக்கள் நெருக்கம் மிகுந்ததாக இல்லாமல், தலைமை செயல்படும் இடங்களாக, பாதுகாப்பான இடங்களாகவும் மட்டுமே இருந்தன.
நிலப்பரப்புகளை மண்ணின் தன்மைக்கு, அங்கு நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப எப்படி பிரித்து பயன்படுத்துவது என்பதை இந்தியர்கள் தவிர்த்து பிற நாட்டினர் அறிந்திருப்பார்களா என்பதே கேள்விக் குறிதான். விவசாயம் என்பது முதன்மைத் தொழிலாக இருந்தது இந்தியாவில் தான். பிற நாட்டினர் முதன் முதலில் முறைப்படுத்தப்பட்ட விவசாயம் இந்தியாவிலிருந்தே கற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் இருந்து உலகம் கற்றுக் கொண்டிருக்க வேண்டிய ஒன்று இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை. ஆனால் அதை அவர்களும் கற்றுக் கொள்ளாமல், அவர்களைப் பார்த்து நாமும் கெடும் வண்ணம் சொகுசான வாழ்க்கை முறைக்கு மாற, கெட்டுப் போனவை காடுகள் அழிக்கப்பட்டதால் அழிந்து போன இயற்கை. உடல் உழைப்பை விட்டுவிட்டு, வியர்வை வரவழைக்க உடற்பயிற்சி எந்திரங்களில் ஓடிக் கொண்டு இருக்கிறோம்.
உற்பத்தி மிகுதி இன்றைய தேவைதான். காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்கிற காரணங்கள் மிகவும் சொற்ப காரணங்களே ஆண்டுக்கு ஆண்டு டன் கணக்கில் தானியங்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இயற்கை சார்ந்த விவசாயங்கள் எதுவும் நடைபெறுவதில்லை, அனைத்து செயற்கை உரங்கள், ஊட்டச் சத்துகளால் நடக்கின்றன. 24 மணி நேரமும் புகையைக்கக்கும் மாபெரும் தொழிற்சாலைகள் ஆண்டுமுழுவதும் செயல்படுகின்றன. என்ன கிடைக்கிறது ? சொகுசான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது, அதுவும் நம்முடைய இந்த தலைமுறைக்குத்தான், அடுத்த தலைமுறைகள் பிழைக்குமா என்பதே கேள்விக் குறி. அறிவியல் வளர்ந்து விட்டது என்று வியக்கும் நாம் அதனால் பெற்றது நம் இழந்தவைகளை ஒப்பிட சொற்பமே.
இன்றைய தேதியில் பருவகாலங்களை மனித இனம் மதிப்பதே இல்லை. அது ஒரு இயற்கைச் செயலாக வந்து போகிறது. மனிதனின் உற்பத்தி எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அறிவியல் சாதனைகள் என்பது புலன்களின் திறனை நீட்டிக்க உதவியது மட்டுமே. அவை இல்லாத காலகட்டங்களிலும் மனித இனம் நன்றாகவே வாழ்ந்திருக்கிறது. நமது அறிவியல் சாதனைகளை எண்ணி வியப்பது போலவே நாம் பூமிக்குச் செய்யும் கெடுதல்களின் பலனாக அவை திருப்பித் தாக்கும் போது வருந்தியே அழிவோம்.
எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ? வெறும் தத்துவம் தான். ஆனால்
எதையுமே கொண்டுவராமல் எல்லாவற்றையும் அழிக்கிறோமே இதற்கு என்ன பெயர் சொல்வது ?
பின்பற்றுபவர்கள்
28 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
11 கருத்துகள்:
தாங்க முடியலை. ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு இப்படி மொக்கை போட்டா எப்புடி?
//senthamizselvan said...
தாங்க முடியலை. ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு இப்படி மொக்கை போட்டா எப்புடி?//
நன்றிங்கண்ணா !
இதுவும் நல்லாத்தான் இருக்கு இது மாதியும் எழுதுங்க
//பூமி சூரியனை சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டம் என்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது.//
வெவ்வேறு பருவகாலங்களுக்கு முக்கியமான காரணம் பூமியின் சாய்வுத்தன்மைதாங்க. அதனோட சுற்றுப் பாதை கிடையாது.
//எதையுமே கொண்டுவராமல் எல்லாவற்றையும் அழிக்கிறோமே இதற்கு என்ன பெயர் சொல்வது ?//
நல்லா இருக்கே
NICE.. WILL BE MORE EFFECTIVE WHEN IT REACH TO ALL INDIANS WHO R LEADING LUXUARY LIFE.
supper ...
அறிவுப் பூர்வமான அறிவியல் பதிவு .
நான் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளேன் .
பெற்றுக் கொள்ளவும் ...
//Starjan ( ஸ்டார்ஜன் )
supper ...
அறிவுப் பூர்வமான அறிவியல் பதிவு .
நான் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளேன் .
பெற்றுக் கொள்ளவும் ...//
பட்டாம்பூச்சி விருது திரும்பவுமா??????
பட்டாம்பூச்சி விருது திரும்பவுமா??????//
இது நம்ம ஆசிப் அண்ணாச்சிக்குத் தெரியுமா?
என்னடா இந்த பதிவுக்கு டிராபிக் பயங்கரமா இருக்கேன்னு பார்த்தேன்?
நான் ஒரு டியூபு லைட்டு...
படிச்சத்துக்கப்புறம் தலைப்பப் பாக்குறவன்...
அற்புதமான பதிவு. பல விசயங்களையும், அரியதொரு தகவல்களையும் உள்ளடக்கியதைப் படித்து பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். காலநிலைக்கு ஏற்ப செயற்கையாக மனிதன் வாழப் பழகிக்கொண்டான், அதனால்தான் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டான். கடைசி வரி அற்புதம்.
கருத்துரையிடுக