பின்பற்றுபவர்கள்

பயோடேட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயோடேட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 அக்டோபர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : A.N.Jayachandran

பெயர் : அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,

புனைப் பெயர் : ஞானவெட்டியான், வாழும் சித்தர்

வயது : சித்தர்களுக்கு வயது இல்லையாம் :)

வசிக்கும் இடம் : கதவுகளுக்கு உறுதியை உறுதி செய்யும் தரும் ஊர் திண்டுக்கல், தற்பொழுது வசிப்பது கோவை

தொழில் : வங்கி உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்

துணைத் தொழில் : கல்வி உதவி சேவை அமைப்பு மற்றும் சித்தர் தத்துவங்களை எளிமை படுத்துதல்

அண்மைய சாதனை : கோவைக்கு இடம் பெயர்ந்து ஓய்வு எடுத்துவருவது

நீண்ட நாளைய சாதனை : பெரிய அளவில் சித்தர் பாடல்கள், மற்றும் பல ஆன்மிகம் தொடர்புடையவற்றை பதிவில் தொகுத்து வைத்திருக்கிறார்

வாழ்நாள் சாதனை : 95 வயது தந்தைக்கு இன்றும், அடக்கமான மகனாகவே வாழ்ந்து தனக்கு பணிவிடை செய்ய ஆள் தேடும் வயதில் அவருக்கு பணிவிடை செய்துவருவது ( அவரது தந்தை - திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம், 95 வயது முதியவர், திருச்சியில் வசிக்கிறார்)

பிடித்த பதிவர்கள் : எல்லோரையும்

பிடித்தது : விரலிடுக்கில் வெண் குழல்

அண்மைய எரிச்சல் : விரல் வலி, அதனால் பதிவு எழுத முடியாமல் இருப்பது, (அப்படியும் விரல் வலியை பொருட்படுத்தாது அவ்வப்போது எழுதி வருகிறார்)


பதிவுகள்:

ஞானவெட்டியானின் ஞானவேள்வி
குறவஞ்சி
சித்தன் (புதியது)

(100 விழுக்காடு ஆன்மீகம், கொஞ்சம் தத்துவ பாடல்கள் !


வாழ்நாள் சாதனை : அநுமன் துதி, அம்மை ஆயிரம், அரன் ஆயிரம், ஆன்மிகம், கட்டுரைகள், கந்தர் கலிவெண்பா, சித்தர் இலக்கியம், சிவ வாக்கியர் பாடல், ஞான முத்துக்கள், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞானக் குறள், ஞானம் எட்டி, ஞானவேள்வி, தமிழமுது, தாகி பிரபம், திருவாசகம், பிரபுலிங்க லீலை, மாலியம், விவேக சிந்தாமணி, வேண்டல் 108, தமிழ் இணையம், தமிழ் இணையம் இன்னும் பல வரும்காலத்தினரின் பயன்பாட்டுக்காக எழுதி தொகுத்தது

அடையாளம் : ம.பொ.சி மீசை





பின்குறிப்பு : இத்துடன் பயோடேட்டா தொகுப்பு தற்காலிகமாக நிறைவுறுகிறது !

4 அக்டோபர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : Prof. SAM GEORGE

பெயர் : Prof. SAM GEORGE

புனைப் பெயர் : பேராசிரியர், தருமி (வலைப்பெயரும் அதுதான், ஆனால் கேள்வி மட்டுமே கேட்கமாட்டார்), தருமி ஐயா, தருமி சார்

வயது : நடிகர் ரகுவரனை விட 2 - 3 வயது கூட இருக்கும்


வசிக்கும் இடம் : தருமி என்கிற பேரைச் சொன்னாலே ஊரைச் சொல்ல வேண்டியது இல்லை.

தொழில் : விலங்கியல் பேராசிரியராக அமெரிக்கன் கல்லூரியில் வலம் இடமாக சுற்றிச் சுற்றி வந்தது, கல்லூரி வளாக மரத்தடி நிழல்களில் மாணவர்களுக்கு சிறப்பு பாடம் நடத்தியது

துணைத் தொழில் : பேரப் பிள்ளைகளுடன் அவர்களில் ஒருவராக விளையாடுவது, வலைப்பதிவது

அண்மைய சாதனை : பண்புடன் குழுமத்தில் இந்தவார நட்சத்திர ஆசிரியர்

நீண்ட நாளைய சாதனை : மதத்தை விட்டு வெளியே வந்து, மூட நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதலாக கேள்விக் கணைகளை தொடுத்து வருவது.

வாழ்நாள் சாதனை : காலனை எட்டி உதைத்து ஓட ஓட விரட்டியது (மரணம் தொட்ட கணங்கள் )

பிடித்த பதிவர்கள் : பெரும்பாலும் இளையர்கள், முற்போக்காளர்கள்

அண்மைய எரிச்சல் : சமையல் அறையில் அவரது மனைவி உறித்த வெங்காயம், மற்றும் மதுரை மாநகராட்சி , யாரோ ஒரு பதிவர் சாம் தாத்தா என்ற பெயரில் பதிவு ஆரம்பித்தது (அப்பறம் இவர் கண்டு கொள்ளவில்லை), மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிர்வாகத்தினரால் நடக்கும் வெளிப்படையான பாலிடிக்ஸ்




பதிவு: தருமி (கேள்வி கணைகள், அன்றாட அரசியல், திரைப்படம், முற்போக்கு சிந்தனைகள், மத விவாதங்கள் ( நான் ஏன் மதம் மாறினேன் ? - போன்று பெயர் பெற்று தந்த) தொடர்கள், சொந்த கதைகள், தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது எழுதி வருவது)


குழுப்பதிவுகள்:
வேடந்தாங்கல்.......
மதுரை மாநகரம்
Fix My India
Sixth-Finger
IPAC
singleclicks

வாழ்நாள் சாதனை : மரணத்தை தொட்டு வந்தவருக்கிறார். நெஞ்சிலும், ஈரலிலும் ஒன்றாக கலந்திருந்த புகையை மறந்தது, நிறைய மாணவர்களின் நினைவில் பதிவாக ஆனது. காலத்திற்கேற்ற சிந்தனைகளை மாற்றி அமைத்துக் கொள்வது, மன அளவில் இளைஞராகவே, இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து உரையாடுவது

(மதுரை பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு எடுத்த புகைப்படம்)

அடையாளம் : இவருடன் ராசியான (உடன் இருக்கும்) சிவப்புக்கல் மோதிரம்

2 அக்டோபர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal

பெயர் : துளசி கோபால்

புனைப் பெயர் : டீச்சர், ரீச்சர், பதிவானந்தமயி,துளசி அக்கா, துளசி அம்மா, பின்னூட்ட அரசி மற்றும் பின்னூட்ட நாயகி, அம்மனுக்கு ஆயிரம் பெயர்கள் போன்று இன்னும் நிறைய இருக்கிறது

வயது : பெண்களுக்கெல்லாம் அகவை 'ஆவதே' இல்லை

கணவர் பெயர் : திரு கோபால்

வசிக்கும் இடம் : நியூசி

தொழில் : புதுப்புது காய்கறி வகைகளை வைத்து சமையல் செய்து, சரியாக, சுவையாக வந்திருக்கிறதா ? என கோபால் ஐயாவை வைத்து (வதைத்து அல்ல) சோதனை செய்வது, இல்லாள் (ஹவுஸ் மேக்கர்)

துணைத் தொழில் : வலைப்பதிவது, கோபால கிருஷ்ணனை தாலாட்டுவது ( அவங்க வீட்டு கருப்பு பூனைதான், பூனை என்று சொன்னால் அவங்களுக்கு கோபம் வந்துடும், கிட்டதட்ட அவங்க வீட்டு இரண்டாவது வாரிசு)





அண்மைய சாதனை : மரத்தடி நினைவுகளை பெருமூச்சுடன் நினைவு கூர்ந்தது

நீண்ட நாளைய சாதனை : புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பதிவர் ஜோதியில் அவர்களை அமிழ்த்தி விடுவது.

பிடித்த பதிவர்கள் : 6 முதல் 100 அகவை வரை உள்ள எந்த பதிவரும்

தோழிகள் : பெண்பதிவர்கள் அனைவரும், மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர், இராமச்சந்திரன் உஷா, தமிழச்சி (இவங்களும் அதிரடி பதிவர் தான் இவங்க வேற தமிழச்சி) மற்றும் 'சிறுமி' துர்கா.

அண்மைய எரிச்சல் : சிங்கை வாழ் (சிங்க வால் இல்லை) ஆமத்தூர் ஜெகதீசனின் சமையல் குறிப்புகள்

பதிவு:

துளசி தளம் ( அன்றாட நிகழ்வுகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, நியூசி, ஆஸி பற்றிய தகவல்கள், கோகுலாஷ்டமி, ராம் நவமி போன்ற பண்டிகைகளுக்கு சிறப்பு பதிவு)

குழுபதிவுகள்:

விக்கிபசங்க, சாப்பிட வாங்க, சற்று முன்...



வாழ்நாள் சாதனை : கணவர் கோபாலுடன் நாடுகளைச் சுற்றி வருவதும் மட்டுமின்றி, தேவையான புகைப்படங்களைச் சேர்த்து அதை அருமையான பயணக் கட்டுரைகளாக எழுதி, அங்கு செல்பவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சுவைபட எழுதிவருவது. அதையெல்லாம் தொகுத்தால் 4 - 5 நூல்களாக ஆக்கலாம் (செய்வார் என்று எதிர்பார்க்கிறேன், விரும்புகிறேன், வேண்டுகோள் வைக்கிறேன், தலைக்கு ஒரு நூல் வாங்கினாலும் 1000 நூல்கள் வரை பதிவர்கள் பெற்றுக் கொள்வார்கள், அப்படியும் தீரவில்லை என்றால் திருமணத்திற்குச் சென்றால் அங்கு மொய்யாக வைக்கலாம்) பின்னூட்டத்திற்கு மறுமொழி மறக்காமல் போடுவது.

பொழுது போக்கு : அதுவாகவே போய்விடுகிறது, நேரத்தை வேறு நீயுசியில் மாற்றியதால் விரைவாக தூங்குவது, அதிகாலையில் எழுவது, அக்கம்பக்கம் விழாக்களில் கலந்து கொள்வது, எல்லாருடைய பதிவுகளையும் படித்து சர்சை என்று தெரிந்தால் பின்னூட்டத்தை தவிர்பது, மற்ற பதிவுகளிக்கு இரண்டு வரியேனும் பாராட்டியோ, மாற்றுக் கருத்தையோ பின்னூட்டமாக இடுவது.

30 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : DR V.Sankar Kumar

பெயர் : DR V.Sankar Kumar (VSK)

புனைப் பெயர் : மருத்துவர் ஐயா, VSK, SK

வயது : என் மகள் தாத்தா என்று கூப்பிடும் வயது

வசிக்கும் இடம் : நார்த் காரோலினா, அமெரிக்கா

தொழில் : ஆங்கில மருத்துவர்

துணைத் தொழில் : மூன்றாண்டு காலமாக தொடர்ந்து வலைப்பதிவது, பாட்டு எழுதி பஜனைகளில், பூஜைகளில் பாடுவது

அண்மைய சாதனை : பாலியல் கேள்விகளுக்கு பதில் சொல்லிவருவது (வலையுலக நாராயண ரெட்டி)

நீண்ட நாளைய சாதனை : மயிலை மன்னார் பெயரில் சென்னை மொழியில் திருக்குறள் விளக்கம் மற்றும் திருப்புகழ் பொருள் விளக்கம் எழுதிவருவது

நீண்ட நாள் எரிச்சல் : திமுக ஆட்சி

மிகவும் பிடித்த கவிஞர் : பாரதியார்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : சோ ராமசாமி

மிகவும் பிடித்த அரசியல் தலைவர் : விஜய்காந்த்

சிறப்பு குணம் : எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது

பதிவுகள் :

ஆத்திகம் ( அந்தந்த தெய்வங்களுக்கான இந்து பண்டிகைகளில் சிறப்பு பதிவுகள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல், உள்குத்து அரசியல், அனுபவம், மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள், கலவைகள், மன்னார் குறள் விளக்கம்)

திருப்புகழ் ( அருணகிரிநாதர் திருப்புகழ்)

கசடற (மருத்துவ துறை சார்ந்த பதிவுகள், தொடர்கள்)

குழுப் பதிவுகள் :
விக்கி பசங்க
கற்பூர நாயகியே கனகவல்லி
முருகனருள்
தமிழ்ச் சங்கம்



நண்பர்கள் : ஆத்திகம் பேசுபவர்கள், விஜய்காந்தை ஆதரிப்பவர்கள், திராவிடம் பேசாதவர்கள்

அன்பான எதிரிகள் : கேஆரஎஸ், கோவியார்

எரிச்சல் அடைவது : ஆத்திகவாதிகள் சிலர் முற்போக்காக எழுதுவது

வாழ்நாள் சாதனை : இதயம் தொட்ட தொடர், எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு ஆகிய தொடர் கட்டுரைகள், இசைஞானி இளைய ராஜாவின் திருவாசகம் வெளியே வர அவருடன் இணைந்து செயல்பட்டது.

பொழுது போக்கு : விஜய் டிவி, பஜனை, அடிக்கடி வீட்டில் நடக்கும் பூஜைக்குக்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து சுவையான சிற்றுண்டி வகைகளை செய்து பரிமாறுவது (யாருக்காவது சைவ சிற்றுண்டி வகைகளில் சுவை கூட்டுவதற்கு டிப்ஸ் தேவைப்பட்டால் கேட்கலாம்)

அடையாளம் : மொட்டையுடன் இருந்தால் மகாத்மா காந்தி, முடியுடன் இருந்தால் மருத்துவர் இராமதாஸ்

29 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - SP.VR.SUBBIAH

பெயர் : SP.VR.SUBBIAH

புனைப் பெயர் : வாத்தியார், ஆசிரியர், ஆசான்

வயது : ஆசையுடன் பாசம் வரும், அந்தரங்கமில்லாத வயது

வசிக்கும் இடம் : கோவை

தொழில் : டெக்ஸ்டைல் மார்கெட்டிங்

துணைத் தொழில் : இலவசமாக ஜோதிடம் சொல்வது

நீண்ட நாளைய சாதனை : பலரை வகுப்பறையில் கட்டிப் போட்டு, பிரம்பை சுழற்றி வருவது

அண்மை சாதனை : நட்சத்திர வாரத்தில் 34 பதிவுகள் எழுதியது, ஜோதிட பாடத்தில் 190 இடுகையை எழுதியது

அண்மைய எரிச்சல் : ஜோதிடப் பதிவின் தலைப்பில் டிஸ்கி போடும் முடிவுக்கு தள்ளிவிடப் பட்டது

மிகவும் பிடித்த பொருள் : ஒலிவாங்கி, பில்டர் காஃபி

மிகவும் பிடித்த கவிஞர் : கவியரசர் கண்ணதாசன்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : தமிழ்வாணன்



பதிவுகள் :

1. வகுப்பு அறை (ஜோதிட பாடம் மற்றும் அனுபவ பாடம்)
2. பல்சுவை (நகைச்சுவை மற்றும் சிவகங்கை சீமை நாட்டுத் தகவல்கள்)

நண்பர்கள் : வகுப்பறை மாணவர்கள், ஆத்திகர்கள்

எரிச்சல் ஏற்படுத்த முயல்பவர்கள் : நாத்திகம் பேசுபவர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் அடிக்கும் பின்னூட்ட கும்மி (ஆனால் அவர் எரிச்சல் அடைந்தது கிடையாது)

வாழ்நாள் சாதனை : நீண்டகாலமாக எழுதி வருவது, எதிரே அமர்ந்திருப்பவர் கேட்டுக் கொண்டு இருந்தால், தண்ணீர் குடிக்காமல், மூச்சுவிடாமல் பேசுவது

பொழுது போக்கு : பதிவர் சந்திப்புகளுக்குச் சென்று, பதிவர் நண்பர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு (சுமார் இரண்டு மணி நேரம்) சிற்றுரை ஆற்றுவது

28 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - T.V. Radhakrishnan

பெயர் : டி.வி.இராதா கிருஷ்ணன்
முழுப்பெயர் : வரதராஜன் இராதகிருஷ்ணன்
வயது : பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் வயது




துணைவியார் : காஞ்சனா இராதா கிருஷ்ணன் (மீரா கிச்சன், பாரதியார் ஆகிய தலைப்புகளில் வலைப்பதிபவர், கனரா வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்)

வலைப்பூக்கள் :

கற்க கசடற - அறிவியல், ஆன்மிகம் சமூகம் தொடர்பான கட்டுரைகள்

வள்ளுவன் - திருக்குறளுக்கு இரண்டு வரிகளில் எளிய விளக்கம்

தமிழா...தமிழா.. - அனுபவம், அன்றாட அரசியல், அதிபுத்திசாலி அண்ணாசாமி, வாய்விட்டு சிரிங்க மற்றும் கலாய்த்தல்

பணி : ஸ்டேட் வங்கி (விருப்ப ஓய்வு)


நீண்டகால சாதனை : தனது செளமியா தியேட்டர்ஸ் மூலம் எம்ஆர் இராதா, சோ இராமசாமி ஆகிய பிரபலங்களை வைத்து நாடகம் போட்டு, நாடக உலகில் வலம் வந்து, நாடகத் துறைக்கு வளம் தந்தது, பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்து வருவது, இலக்கிய துறையில் நீண்ட கால அனுபவம்

சமீபத்திய சாதனை : அரசியல்வாதிகளுக்கும், அவர்களது அடாவடி வாரிசுகளுக்கும் வலைப்பூக்களில் அளவான ஆப்பு வைப்பது. எழுத்துக்கள் மூலம் இளைஞர்களின் கவனம் பெற்றுவருவது, அடிக்கடி சூடான இடுகைகளில் இடம் பெறுவது

அடையாளம் : பெரிய மீசை, நேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் போன்றும், மெகா சீரியல்களின் அப்பாக்களைப் போன்ற பொலிவான தோற்றம்

வசிக்கும் இடம் : சென்னை, பெசண்ட் நகர்

(பயோடேட்டாவை திருத்த உதவிய இராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்