"டேய் மச்சான் ப்ளாக் எழுதுறண்டா...."
"என்னது ?"
அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,
"என்ன படிக்கிறியா ?"
"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"
அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.
இது தெரிந்தும் மக்கள்ஸ் அவர்களிடம் சென்று 'நான் பிரபல பதிவராக்கும்' னு காலரை தூக்குவதை என்னச் சொல்வது :)
நாம வலையில மொக்கைப் போடுவது பற்றி நம்ம நண்பர்களிடம் சொன்னால்....'ஆகா இம்புட்டு பெரிய எழுத்தாளன் ஆகிட்டியான்னு மகிழுவாங்க' ன்னு நினைக்கிறோம், ஆனா ஒரு பய மதிப்பது இல்லை. எழுத்து அது எழுத்தாளர்கள் தான் எழுதுவாங்ககிறது போல் பலர் நினைக்கிறாங்க.
***
"நீ தான் எனக்கு அறிவு இல்லேம்ப......என் எழுத்தையும் நாலு பேர் படிச்சுட்டு பாராட்டுறாங்க.....ஒரு நாள் படிச்சு பாரு நான் எப்படி எழுதுறேன்னு"
மனைவியிடம் திருமணம் ஆனவங்க புலம்பி இருப்பிங்க(போம்)
"பொழுதன்னிக்கும் லொட்டு லொட்டுன்னு தட்டிக் கிட்டு இருக்கிறதுக்கு பர்மிசன் கொடுப்பதே பெருசு.....இதுல அவங்க வேற படிச்சுப் பாராட்டுனுமாக்கும்" என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
***
இப்பெல்லாம் மாப்பிள்ள வீட்டுக்கு வந்தாலும் லேப்டாப்போடு வர்றார்......அடிக்கடி நெட் செண்டருக்கு போய்டுறார்..... என்னம்மா நடக்குது ? ஆபிசில் வேலை மிக அதிகமோ !
நாம பிரபல, பிராபல பதிவர்னும், நமக்கு வலையைப் பக்கம் வரலைன்னா தூக்கம் வராதுன்னும் அவிங்களுக்கு என்ன தெரியும் ?
***
மொக்கை அல்லது மொக்கையற்ற கவிதை, ஜோக் சொன்ன நண்பரிடம்
'இவ்வளவு அருமையாக யோசிக்கிறிங்க...நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்க கூடாது ?'
'அப்படிங்கிறிங்க......'
உண்மையிலேயே நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்
***
கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
38 கருத்துகள்:
937 கட்டுரையா எழுதியிருக்கீங்க?
அப்பா, எங்கேயோ பொயிட்டிங்க பாஸ்.
நான் தான் முதலா போணி...!
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி,
பிரபல பதிவர்,
சிங்கப்பூர்.
சாரி அத்திவெட்டி ஜோதிபாரதி
நான் தான்.
முத்ல் முதல் "மீ த பர்ஸ்ட்"
//'இனியவன்' என். உலகநாதன் said...
937 கட்டுரையா எழுதியிருக்கீங்க?
அப்பா, எங்கேயோ பொயிட்டிங்க பாஸ்.
//
உலகநாதன் சார்,
இன்னொரு வலைப்பக்கம் இருக்கு அதில 100 சில்லரை இருக்கு.
:)
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நான் தான் முதலா போணி...!
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி,
பிரபல பதிவர்,
சிங்கப்பூர்.
//
'வெளிச்சப் பதிவர்' என்றால் நேற்று பதிவு தொடங்கியவருக்கு அது யார்னு தெரியும். அப்ப நீங்க பிரபலம் தானே ?
//'இனியவன்' என். உலகநாதன் said...
சாரி அத்திவெட்டி ஜோதிபாரதி
நான் தான்.
முத்ல் முதல் "மீ த பர்ஸ்ட்"
//
:)
-:)))
-ரபல பதிவர் பித்தன்
-:)))
-பிரபல பதிவர் பித்தன்
//கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?//
யாருங்க அந்த புண்ணியவான்?
:))
ஐயோ...!
போச்சே...!
போச்சே...!
பிரபல பதிவர் ஜமால கூட தோற் கடிச்சிருக்கேன்...!
ஆனா இப்ப...
போச்சே...
கோவி சார்,
உங்களிடம் சில கேள்விகள்:
01. இவ்வளவு எழுதியிருக்கும் உங்களுக்கு குறைந்தது 12 லட்சம் ஹிட்கள் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? ஒரே குழப்பமா இருக்கு.
02. நீங்கள் மொத்தம் 43 நாட்கள் தொடர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். 937+100/24. அதனால், என்னை பொறுத்தவரை நீங்கள்தான் பிரபல பதிவர்.
03. நீங்கள் ஏன் ஆவி, குமுதம், ஜூவி போன்ற பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை?
//'இனியவன்' என். உலகநாதன் said...
கோவி சார்,
உங்களிடம் சில கேள்விகள்:
01. இவ்வளவு எழுதியிருக்கும் உங்களுக்கு குறைந்தது 12 லட்சம் ஹிட்கள் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? ஒரே குழப்பமா இருக்கு.//
ஹிட் கவுண்டர் நான் பதிவில் ஏற்றியது 2 ஆண்டுகளுக்கு முன்பு தான். 3 ஆண்டுகள் 3 மாதமாக எழுதி வருகிறேன். முதல் ஆண்டில் நாளொன்றுக்கு 150 பேர் படிப்பார்கள், அது ஒவ்வொரு ஆண்டும் இருமடங்கு ஆகிவருகிறது தற்போது சராசரியாக 700 - 800 பேர் படிக்கிறார்கள். அந்த கணக்கில் மொத்தம் இதுவரை படித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும். சாரு, ஜெமோ, லக்கிலுக் போல எனக்கு மிகப் பெரிய வாசகர் வட்டம் இருக்கும் அளவுக்கு என்னால் அவ்வளவு ஜனரஞ்சகமாக எழுத முடியாது. பொழுது போக்கிற்கு எழுதுகிறேன். எழுத்து எனக்குதொழிலாக இருந்தால் ஒருவேளை சிறப்பாக செய்ய முடியும்
//02. நீங்கள் மொத்தம் 43 நாட்கள் தொடர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். 937+100/24. அதனால், என்னை பொறுத்தவரை நீங்கள்தான் பிரபல பதிவர்.//
நான் தொடர்ந்து ஒரு மாதம் எழுதாமல் இருந்தால் என்னை மறந்துவிடுவார்கள், எழுதும் வரை தான் பதிவுலகம் நினைவு வைத்திருக்கும்.
//03. நீங்கள் ஏன் ஆவி, குமுதம், ஜூவி போன்ற பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை?
10:06 AM, July 28, 2009
//
அதற்கு முயற்சி செய்ய எண்ணம் ஏற்பட்டதில்லை. முன்பு சிங்கை தமிழ் முரசில் கவிதை, சிறுகதை எழுதி அனுப்பி இருக்கிறேன் வெளி வந்திருக்கிறது.
விளக்கம் அளிக்க வாய்பளித்த தங்களுக்கு நன்றி !
கொஞ்சமாச்சும் வேலை பார்க்கலாமுன்னா விடுறாங்கயில்லப்பா
நான் பிரபலமும் இல்லை
problemமும் இல்லை.
[[அடுத்த முறை "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க. ]]
இதுவரை அனுபவித்து கொண்டிருக்கும் உண்மை.
ஆமாம் கோவி அவர்களே.. drug addicts மாதிரி இந்த வலைப்பதிவர்கள் (நானும் தான்) :)
//அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,
"என்ன படிக்கிறியா ?"
"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"
அடுத்த முறை "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க. //
ஹி ஹி ஹி Why blood same blood :-))) நானும் சொல்லி பார்க்கிறேன் ஒரு பய படிக்க மாட்டேங்குறானுக ;-)
//நான் தொடர்ந்து ஒரு மாதம் எழுதாமல் இருந்தால் என்னை மறந்துவிடுவார்கள், எழுதும் வரை தான் பதிவுலகம் நினைவு வைத்திருக்கும்.//
உங்களுக்கு நெம்ப தன்னடக்கம் :-) அப்ப எங்களை எல்லாம் யாருன்னு கேட்ப்பாங்க..அழுவாச்சி அழுவாச்சியா வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முற்றிலும் உண்மை....!
நம்ம வலைப்பக்கம் எல்லாம் தலைவச்சுப் படு/படிக்காம இருந்த ரங்க்ஸ், ஒரு பதிவர் மீட்டிங்குலே எல்லாரும்(!) நீங்க படிக்கிறீங்களான்னு கேட்டு அவர் உசுரை வாங்கின பிறகு, என்னமோ இருக்குன்னு இதுலேன்னு நினைச்சுப் படிக்க ஆரம்பிச்சவர் இப்போதெல்லாம் ரெகுலராப் படிச்சுப் பின்னூட்டத்தை நேரில் சொல்றார்.
எல்லாம் வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டம்தான்....(இதை அப்படி எழுதி இருக்கலாமே...இப்படி எழுதி இருக்கலாமே.....)
உங்களுக்கு ஒரு பக்கம் ஆரம்பிச்சுக் கொடுத்துடறேன். நீங்களே எழுதிக்குங்கன்னு அதுக்கு பின்னூட்ட மறுபடியும் நேரில் கொடுத்துடுவேன்:-)))))
இப்படித்தான் 'காலம்' போய்க்கிட்டு இருக்கு:-)
மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கோவியாரே. நல்லவேளை எனக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் எழவில்லை, ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டியதுதானே எனக் கேட்டதைத் தவிர. ஒரு புத்தகம் எழுதி நானே வெளியிட்டதும் 'அட நீ எழுதுவியா?' எனக் கேட்டவர்களே அதிகம்.
நீங்கள் முன்னர் சொன்னதுபோல பிறருக்காக எழுதுகிறோமோ இல்லையோ நமது ஆர்வத்திற்காகவும் எழுதுகிறோம் என்பதும் உண்மை.
'நாம எழுதறதை நாமளேப் படிச்சிக்கிர வேண்டிய்துதான்' என்று சொல்வார் என் நண்பர் ஒருவர். 'இல்லையில்லை உலகில் எவரேனும் படித்துக் கொண்டிருப்பார், அந்த ஒருவருக்காகவும், நமக்காகவும் எழுதிக்கொண்டிருக்கத்தான் வேண்டும்' என்றே என் பதிலும் இருக்கும்.
எழுதத் தொடங்கிய பின்னர் நிறுத்தியபாடில்லை, நிச்சயம் நான் பிரபல பதிவர் என்றும் ஆகப்போவதில்லை என்பது மட்டும் உறுதி, அதற்கான காரணமும் அறிவேன். மிக்க நன்றி ஐயா.
//பி]-[த்]-[த]-[ன்] said...
-:)))
-பிரபல பதிவர் பித்தன்
9:46 AM, July 28, 2009
//
நீ பிரபலம் இல்லை பிராபலம் !
//நாமக்கல் சிபி said...
//கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?//
யாருங்க அந்த புண்ணியவான்?
:))
//
கொல முயற்சி எதாவது செய்யும் திட்டம் இருக்கா ?
//நட்புடன் ஜமால் said...
கொஞ்சமாச்சும் வேலை பார்க்கலாமுன்னா விடுறாங்கயில்லப்பா
நான் பிரபலமும் இல்லை
problemமும் இல்லை.
[[அடுத்த முறை "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க. ]]
இதுவரை அனுபவித்து கொண்டிருக்கும் உண்மை.
10:26 AM, July 28, 2009
//
இப்ப தான் வெளியே வருது யார் யாரெல்லாம் நட்புகளை டார்சர் கொடுத்து இருக்காங்கன்னு !
:)
//நாகா said...
ஆமாம் கோவி அவர்களே.. drug addicts மாதிரி இந்த வலைப்பதிவர்கள் (நானும் தான்) :)
//
அதே அதே !
//கிரி said...
ஹி ஹி ஹி Why blood same blood :-))) நானும் சொல்லி பார்க்கிறேன் ஒரு பய படிக்க மாட்டேங்குறானுக ;-)
//
நம்ம தலையைப் பார்த்து, தொலைபேசியில் குரலைக் கேட்டு ஓடாத அது வரைக்கும் சரிதான்
/கதியால் said...
முற்றிலும் உண்மை....!
//
//துளசி கோபால் said...
நம்ம வலைப்பக்கம் எல்லாம் தலைவச்சுப் படு/படிக்காம இருந்த ரங்க்ஸ், ஒரு பதிவர் மீட்டிங்குலே எல்லாரும்(!) நீங்க படிக்கிறீங்களான்னு கேட்டு அவர் உசுரை வாங்கின பிறகு, என்னமோ இருக்குன்னு இதுலேன்னு நினைச்சுப் படிக்க ஆரம்பிச்சவர் இப்போதெல்லாம் ரெகுலராப் படிச்சுப் பின்னூட்டத்தை நேரில் சொல்றார்.//
சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்றால் தயார் செய்யும் உணவில் சுவை குறைஞ்சிடும்னு பயப்பட்டு இருப்பார்னு நினைக்கிறேன். :)
// வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கோவியாரே. நல்லவேளை எனக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் எழவில்லை, ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டியதுதானே எனக் கேட்டதைத் தவிர. ஒரு புத்தகம் எழுதி நானே வெளியிட்டதும் 'அட நீ எழுதுவியா?' எனக் கேட்டவர்களே அதிகம். //
//எழுதத் தொடங்கிய பின்னர் நிறுத்தியபாடில்லை, நிச்சயம் நான் பிரபல பதிவர் என்றும் ஆகப்போவதில்லை என்பது மட்டும் உறுதி, அதற்கான காரணமும் அறிவேன். மிக்க நன்றி ஐயா.
//
எழுதுவதை நிறுத்த தேவை இல்லை. எல்லாவற்றையும் மனசுக்குள்ளே பூட்டி வைக்கிறவர்களுக்கு மன அழுத்தம் வரும். நமக்கு ப்ளாக் வடிகால். ப்ளாக்கர்களுக்கு மன அழுத்தம் வருவது குறையும்னு நினைக்கிறேன்.
பிரபல பதிவர் கோவி வாழ்க
வீட்டுல கணினி இல்லாததால் இவ நெட் செண்ட்டருக்கு போவேண்டி இருக்கேன்னு ஊருலயும் கணினி வாங்கற ஐடியாவுக்கு வந்திருக்காங்க.. :)
என்ன கோவி
சூப்பரா போயிக்கிட்டு போலிருக்கே ....
கலக்குங்க கலக்குங்க ....
மருந்து இல்லை! பத்தியம் இல்லை! முப்பது நாட்களில் ப்ளாக் போதையில் இருந்து மீட்டுத் தருகிறோம்.
- வானப்பாடி வைத்தியசாலை
இது போன்ற விளம்பரத்தை விரைவில் டீவியிலோ பத்திரிக்கையிலோ எதிர்பார்க்கலாமோ? ;)
//"டேய் மச்சான் ப்ளாக் எழுதுறண்டா...."
"என்னது ?"
அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,
"என்ன படிக்கிறியா ?"
"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"
அடுத்த முறை "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.//
அண்ணே நான் இப்போதான் அந்த வேலைய தொடங்கலாம்னு இருந்தேன்
நல்லவேலை எல்லாரும் இப்படிதான் நினைப்பாங்கன்னு புரிய வச்சிட்டிங்க
//எனக்கு மிகப் பெரிய வாசகர் வட்டம் இருக்கும் அளவுக்கு என்னால் அவ்வளவு ஜனரஞ்சகமாக எழுத முடியாது. பொழுது போக்கிற்கு எழுதுகிறேன். எழுத்து எனக்குதொழிலாக இருந்தால் ஒருவேளை சிறப்பாக செய்ய முடியும்//
பலபதிவர்களின் நிலைப்பாடு இதுதான்.
//நான் தொடர்ந்து ஒரு மாதம் எழுதாமல் இருந்தால் என்னை மறந்துவிடுவார்கள், எழுதும் வரை தான் பதிவுலகம் நினைவு வைத்திருக்கும்.//
உண்மையான உண்மை.
//அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க. //
எப்படி இதெல்லாம்????
//ஆமாம் கோவி அவர்களே.. drug addicts மாதிரி இந்த வலைப்பதிவர்கள் (நானும் தான்) :)//
மாசத்துக்கு ஒரு பதிவ போட்டுட்டு யாராவது பின்னுரை போட்டிருக்காங்களானு பார்ப்பதற்காகவே தினமும் ப்ளாக் பக்கம் வந்துபோகிறேன்.. அப்படி வரும்போதும் மத்தவங்களுத படிக்காம போனா நல்ல இருக்குமா..?? இப்படி ஆரம்பிச்ச நோய் தான்.. தினமும் மணிக்கணக்கா இதுலதான் உட்கார்ந்திருக்கேன்...
அப்படியே என் ப்ளாக் பக்கமும் வந்துட்டு போங்களேன் :(
nilamagal-nila.blogspot.com
அனுபவம் அருமை
நெத்தி பொட்டுல சுடுறீயலே
//நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்//
அடுத்ததாய் அவரும் வந்து நம்மள மாதிரியே புலம்ப...... என்ன கொடுமை சரவணா?
கருத்துரையிடுக