மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர்.
மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.
நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர், திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும். வின்மீன் 'நக்ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம் செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான் பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.
வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,
( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)
அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை.
வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.
அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது
இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)
இதில் கண் வேற்றுமையும், இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,
ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது, இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,
குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர் (Many / Plural)
ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.
மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை) சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,
இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,
ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும்.

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.
கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை, தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.
அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.
பின் இணைப்பு :
http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)
Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)