பின்பற்றுபவர்கள்

4 ஜூலை, 2009

நாடோடிகளும் நடுத்தரவர்க்கத் தீண்டாமையும் !

காதல், நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. காதலில் வெற்றி என்பதை போராட்டக் களமாகவும் அதில் போராடி காதலர்களுக்கு வெற்றியைத் தருபவர்களாக நண்பர்களையும் நிறைய படத்தில் காட்டிவிட்டார்கள். அது மட்டுமல்ல காதலும் நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். சமுத்திரக்கனி அதே போன்று அரிசியை எடுத்துக் கொண்டு மாவு அரைப்பதுடன் அந்த அரிசு மாவு ஆவதற்கு முன் அரிசியில் இருக்கும் கற்களை பொறுக்குபவர்களின் துன்பங்களைக் காட்டி இருக்கிறார். காதல் வெற்றி பெறாவிட்டாலும் நட்பு தோற்காது என்பதைச் செய்தியாகச் சொல்லும் பொருட்டு, காதலுக்கு உதவிய நண்பர்கள் படும் பாட்டை அழுத்தமாகச் சொல்ல காதலைச் சாகடித்து இருக்கிறார்.

"பணக்காரர்கள்" என்று வானத்தில் இருந்து எவரும் குதித்துவிடுவதில்லை. பரம்பரை பணக்காரர்கள் உண்டு, ஆனால் மொத்த பணக்காரர்களை ஒப்பிடும் போது பரம்பரைப் பணக்காரர்கள் பணக்கார சமூகத்தில் குறைவுதான். கடுமையான உழைப்பில் இருந்து பணக்காரர்களாக மேலே வந்தவர்களே மிகுதி. ஆனால் நடுத்தரவர்கம் "பணக்காரர்கள்" என்ற சொல்லில் பணக்காரர்கள் பற்றிய மிக மட்டமான பிம்பத்தையே கட்டமைத்து இருக்கின்றன. இதற்கு முழுக்க முழுக்க திரைத்துரையினரே காரணம். அன்றாடம் காய்ச்சிகளும், பணக்காரர்களும் ஒழுக்கம் மில்லாதவர்கள் என்பதாகவே நடுத்தரவர்கத்தினரால் பார்க்கப் படுகிறது. நடுத்தர வர்கம் என்கிற சமூகத்தின் மனத் தீண்டாமை இது போன்ற தாழ்வான எண்ணங்கள் என்றே நினைக்கிறேன். பணக்காரர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், ஒழுக்கமற்றாவர்கள், வரட்டு கவுரவக்காரர்கள், பண்பாடு அற்றவர்கள் இன்னும் என்ன என்ன சமூக ஒழுங்கீனங்கள் இருக்கிறதோ அத்தனையும் பணக்காரர்களுக்கும், அன்றாடம் காய்சும் ஏழைகளுக்கும் இருப்பதாகவே நடுத்தரவர்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. பொதுச் சமூகம் என்றால் அது தாங்கள் தான் என்பதையும் நடுத்தரவர்க்கம் சொல்லித் திரி(க்)கிறது. இவற்றையெல்லாம் சொல்லவும், சமூகம் பற்றிய எண்ணங்களைக் கட்டமைக்க போதிய நேரங்கள் இருப்பதும், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் மேல்தட்டு பணக்கார வர்கத்தின் மீதான பொறாமையுமே இத்தகைய கட்டுமானங்களைத் தொடர்ந்து செய்வதற்குக் காரணம். முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது பணக்கார வர்கம் என்பதாகவே காட்டப்படுகிறது.

நாடோடிப் படத்தில் போராடி சேர்த்துவைக்கப்படும் காதல் திருமணம் முறிந்து போவதற்குக் காரணமாக காதலனின் அரசியல் செல்வாக்கு மிக்க தாய், காதலியின் பெரும் பணக்கார அப்பா மற்றும் காதலன் காதலி இருவரும் பணம் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர முடியாத அளவுக்கு அவர்கள் பணக்கார வாழ்க்கை வாழ்ந்தால் மனம் மாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு பிரிவதாகக் கதைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் இயல்பு என்பது துளிகூட இல்லை. ஒரு பணக்கார பையன் நடுத்தர வர்க்கத்தினர் போல் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகவும் காதல் கைகூட நண்பர்களை நாடுவதாகவும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு பணக்காரப் பையனும் துரத்தி துரத்தி காதல் செய்வான் என்பது வெறும் கட்டுமானம் தான். அந்த காதலுக்குத் தடையாக அரசியல் செல்வாக்கு மிக்க தாயும், பணக்கார அப்பாவும் தடையாக இருக்கிறார்கள் என்பதும் கட்டுமானம் தான். காதலன் காதலி 'அனுபவித்த' பிறகு பிரிகிறார்கள், அதுதான் அவர்களின் நோக்கமே என்பதாகவேறு சொல்லப்படுகிறது. பணக்கார வர்கத்தில் அனுபவித்தல், டேட்டிங்க் இவை இயல்பு என்றாலும் அதற்காக மெனக்கட்டு காதல் திருமணம் என்கிற வழக்கங்களையெல்லாம் செய்து அவ்வாறு பாலியல் வேட்கையை அனுபவித்துவிட்டு பின்பு கழட்டி விடுவார்கள் என்று காட்டுவதெல்லாம் மிகவும் மோசமான கற்பனையாகவே படுகிறது. பணக்காரர்களுக்கு காதல் இன்னொரு பணக்காரர் மீது இருக்கலாம் அல்லது ஏழையின் மீது கூட இருக்கலாம் அது வெற்றியும் பெற்றிருக்கிறது என்பதை இதே திரையுலகம் பலமுறை காட்டியுள்ளது, ஆனால் மாறுபட்டக் கதை என்கிற பார்வையில் பணக்காரக் காதலைக் கொச்சைப் படுத்தும் ஒரு செயலாகவே படத்தில் சொல்லப்படாத செய்தியாக படம் பார்த்ததும் உணர்ந்தேன்.


சமுத்திரக்கனிக்கு பணக்காரர்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை, நான்கு படங்கள் வெற்றிகரமாக அமைந்தால் இவரும் அந்த பட்டியலில் ஒருவர் என்பதை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை. அதே போல் நடுத்தரவர்க 'கருணாவின்' காதல் தோற்றுப் போவதற்கு ஒரு சப்பைக் காரணமாக அவருடைய முறைமாமன் தன் முறை மருமகனுக்கு அரசாங்க வேலை எதிர்பார்பதாகவும் குற்ற வழக்கில் சிக்கியுள்ளதால் கருணா (சசிகுமார்)சிக்கியுள்ளதால் கருணாவை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்து அந்த காதல் முறிவதாகச் சொல்லி இருக்கிறார். ஒரு காதல் முறிவதற்கு பணக்காரத் திமிரும், மற்றொருக் காதல் முறிவுக்கு நடுத்தரவர்கத்தின் ஞாயமான காரணம் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்.

படத்தில் இடைவேளை வரை மண்வாசனை இருக்கிறது, படத்தில் நடித்த முதன்மைக் கதை பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கின்றன. நல்லப் பொழுது போக்குப் படம், ஆனால் படத்தின் பணக்காரர்கள் மீதான நடுத்தரவர்கத்தின் வன்மம், தாழ்வுணர்வு ஆகியவை சமூகத் தீண்டாமையாக சமுத்திர கனியின் சிந்தனைகள் மூலம் வெளிச்சமிடப் பட்டு இருக்கிறது. சமுத்திரக் கனிக்கு நடுத்தரவர்கத்தின் பிரதிநிதி என்று யாரும் பட்டம் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. ஒரு நல்லப் படத்தில் பணக்காரர்கள் பற்றிய மோசமானக் கட்டமைப்பைச் செய்து அதை மக்கள் மனதிலும் விதைத்திருக்கிறார். படத்தின் வெற்றிக்காக மாறுபட்டக் கதை என்கிற பெயரில் பல இயக்குனர்கள் இது போன்ற அபத்தங்களைச் செய்துவிடுவதுண்டு அதற்குக் காரணம் அறியாமையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பட இயக்குனர் படத்தில் சொல்லப்படும் செய்திகளில் கட்டுமானங்களின் மூலம் சொல்லாமல் சென்று சேரும் செய்திகள் எவை என்றும் ஓரளவு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி திறனாய்வுடன் செய்யப்படும் படங்கள் இயல்பான சமூகக் கதைகளை பிரதிபலிக்கும் மற்றவை எல்லாம் அள்ளித் தெளித்த கோலங்கள் தான்.

பரம ஏழைகளும், பணக்காரர்களும் சமூகத்தின் கூறுகள் அவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று அவர்களை மோசமாக சித்தரிக்கும் சமூகத் தீண்டாமைகளில் நடுத்தரவர்கத்தினர் வெளியே வந்து தாமும் முன்னேற வேண்டும்.

முஸ்லீம்கள் என்றால் கடத்தல் காரர்கள், கிறித்துவர்கள் என்றால் காபரே டான்ஸ் ஆடுபவர்கள், பணக்காரர்கள் என்றால் பண்பாடு அற்றவர்கள் என்ற கருத்தை திரையுலகம் தான் பொதுமக்களிடம் தவறான கருத்தாக விதைத்துள்ளது.

சாரி சமுத்திரக் கனியின் 'நாடோடிகள்' கட்டிடம் உறுதி அடிக்கட்டுமானம் ஆட்டம். தயவு செய்து இது போல் தவறான கட்டுமானம் செய்து சமூகத்திற்கு தவறான எண்ணங்களை விதைகாதீர்கள். காதலர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் படும் பாடு காட்டப்படாது தான், ஆனால் அதை அழுத்தமாகச் சொல்ல மற்றொரு (பணக்கார) சமூகத்தைக் கேவலாமாக சித்தரிக்கத் தேவை இல்லை. உங்கள் படத்தை ஓகோ என்று சொல்ல என்னால் முடியவில்லை. மண்வாசனைக்காகவும், இயல்பான பேச்சுரை, நகைச்சுவைக்காக ஒருமுறைப் பார்க்கலாம்.

45 கருத்துகள்:

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி ? -:)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா.


வித்தியாசமான கண்ணோட்டம்.

வலசு - வேலணை சொன்னது…

//

முஸ்லீம்கள் என்றால் கடத்தல் காரர்கள், கிறித்துவர்கள் என்றால் காபரே டான்ஸ் ஆடுபவர்கள், பணக்காரர்கள் என்றால் பண்பாடு அற்றவர்கள் என்ற கருத்தை திரையுலகம் தான் பொதுமக்களிடம் தவறான கருத்தாக விதைத்துள்ளது.
//
நல்லவொரு, பக்கச்சார்பற்ற விமர்சனம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Subbiah Veerappan சொன்னது…

அடடே, பட விமர்சனமா? தலைப்பைப் பார்த்து நான் பயந்துவிட்டேன் சாமி!

Athisha சொன்னது…

அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டீங்களாய்யா... நடத்துங்க..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

படம் பார்க்கவில்லை, எனவே கருத்திற்கும் வழியில்லை

Sanjai Gandhi சொன்னது…

இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு வர்க்கத்தைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.

பீர் | Peer சொன்னது…

//அன்றாடம் காய்சிகளும், பணக்காரர்களும் ஒழுக்கம் மில்லாதவர்கள் என்பதாகவே நடுத்தரவர்கத்தினரால் பார்க்கப் படுகிறது.//

அருமை!!!

(இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்றீங்க கோ?)

அப்பாவி முரு சொன்னது…

அண்ணே உங்கள் கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

வரலாற்று கதையாக இருந்தால், பின்னால் வரும் மூன்றாம் தலைமுறைக்கு மேல் உண்மை தெரியாமல் கதையை மட்டும் வைத்து ஒரு இனத்தின்மேல் தப்பான அபிப்பிராயம் கொண்டுவிடுவார்கள்.

இங்கே சமுத்திரகனி காண்பித்தது ஒரு பணக்கார காதல் ஜோடியை மட்டும் தான், மன்மதன் திரைப்படம் போல் தொடர்சியாக காண்பிக்கவில்லை. அதனால் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

அடுத்து, கஜினி, ஜெமினி போன்ற படங்களில் பணக்கார - ஏழையிக்கிடையேயான உண்மைக்காதலைக் காண்பித்தார்களே.

அதனால் நீங்கள் இந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் தனியாக எழுதிவிட்டு, திரைப்படங்களின் மேலான மொத்தக் கோபத்தை தனியாக எழுதியிருக்கலாம்!!!

அப்பாவி முரு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வேடிக்கை மனிதன் சொன்னது…

உங்கள் கருத்துக்களில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களின் வித்தியாசமான கண்ணோட்டத்திற்காக உங்களுக்கு ஒருப் பூங்கொத்து

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தன் said...
ஏன் இந்த கொலைவெறி ? -:)
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா.


வித்தியாசமான கண்ணோட்டம்.
//

மனிதர்கள் உளவியல் சிக்கலால் அவர்களுக்குத் தெரியாமலேயே நிறைய கட்டுமானங்களை அமைத்துவிடுவார்கள். அதில் சமுத்திரக்கனியும் ஒருவர் என்பதாக நினைக்க முடிகிறது.

பின்னூட்டத்திற்கு நன்றி அக்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லவொரு, பக்கச்சார்பற்ற விமர்சனம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்//

பாராட்டுக்கு நன்றி வேலணை

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
அடடே, பட விமர்சனமா? தலைப்பைப் பார்த்து நான் பயந்துவிட்டேன் சாமி!
//

நாங்களும் பின்னவினத்துவ தலைப்பு வைம்போம்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டீங்களாய்யா... நடத்துங்க..
//

யோவ், உங்களால்தான் இந்தப் படத்தைப் போய் பார்த்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
படம் பார்க்கவில்லை, எனவே கருத்திற்கும் வழியில்லை
//

பார்த்த பிறகு பொறுத்திப் பாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதனால் நீங்கள் இந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் தனியாக எழுதிவிட்டு, திரைப்படங்களின் மேலான மொத்தக் கோபத்தை தனியாக எழுதியிருக்கலாம்!!!//

காதலிக்கும் இரு பணக்காரர்களுமே 'அனுபவிக்கும்' எண்ணத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்று சொல்வது உங்களுக்கு இயல்புக்கு மாறாக அபத்தமாகத் தெரியவில்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//$anjaiGandh! said...
இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு வர்க்கத்தைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.
//

சஞ்செய் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
//அன்றாடம் காய்சிகளும், பணக்காரர்களும் ஒழுக்கம் மில்லாதவர்கள் என்பதாகவே நடுத்தரவர்கத்தினரால் பார்க்கப் படுகிறது.//

அருமை!!!
//
நன்றி

//(இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்றீங்க கோ?)
//

எந்த கேட்டகிரியில் வந்தாலும் ஒரு மனிதன் தான் சார்ந்த கேட்டகிரியை விமர்சனம் செய்வது தவறு என்ற எண்ணமும், தற்காக்கும் சப்பைக் கட்டுகளும் இருக்க வேண்டுமா ?
இது ஏழைப்பணக்காரன் நடுத்தரவர்கள் என்று மட்டுமல்ல சாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

சுய சமூக விமர்சனங்கள் சமூகத்தை செம்மைப் படுத்தும்

கோவி.கண்ணன் சொன்னது…

//வேடிக்கை மனிதன் said...
உங்கள் கருத்துக்களில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களின் வித்தியாசமான கண்ணோட்டத்திற்காக உங்களுக்கு ஒருப் பூங்கொத்து
//

உடன்பாடு இல்லாததற்குக் சரியான காரணம் சொல்ல வேண்டும். பாராட்டுக்கு நன்றி !

ஊர்சுற்றி சொன்னது…

எல்லா நண்பர்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல காதலுக்காக இவ்வளவு தூரம் போராடுபவர்களா?!!!

இருக்கமுடியாது, அதேபோல்தான் எல்லா பணக்காரர்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் இல்லை என்பதும் உண்மை. இதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். படத்தில் ஒட்டத்திற்கு தேர்ந்தெடுத்த கதையில் பாத்திரங்கள் இவ்வாறு படைக்கப்பட்டுள்ளன, அவ்வளவே!

கோவி.கண்ணன் சொன்னது…

/ஊர்சுற்றி said...
எல்லா நண்பர்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல காதலுக்காக இவ்வளவு தூரம் போராடுபவர்களா?!!!

இருக்கமுடியாது, அதேபோல்தான் எல்லா பணக்காரர்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் இல்லை என்பதும் உண்மை. இதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். படத்தில் ஒட்டத்திற்கு தேர்ந்தெடுத்த கதையில் பாத்திரங்கள் இவ்வாறு படைக்கப்பட்டுள்ளன, அவ்வளவே!
//

பணக்காரத்தனத்தினால் திருமணத்திற்கு பிறகு காதலைத் தூக்கி எறிந்தார்கள் அதற்கு முன்பு நகையும் சதையுமாக இருந்தார்கள் என்று கதை சொல்வது உங்களுக்கு ஆர்டிபிசியலாகத் தெரியவில்லையா ?

அவ்வளவு பெரிய பணக்கார பையனுக்கு உதவச் செல்லும் நண்பர்கள் மடிப்பிச்சை போல் பணம் தேற்றி அந்த பணத்தில் பெண் கடத்தலுக்குச் செல்வது போல் காட்டப்படுவது போல் காட்டப்படுவது ஏன், ஆளாலுக்கு மாடர்ன் செல்போன் கையில் வைத்திருக்கிறார்கள், அந்த பையனிடம் ஏடிஎம் கார்டு இருக்காதா ?

காதலர்கள் பிரிவிற்கு பணக்காரத்தனம் தான் காரணம் போல் காட்டப்படுவது ரசிக்கும் படி இல்லை.

உங்களுக்கு கான்சப்ட் பிடிந்திருந்தால் நல்லது.

Kumky சொன்னது…

இன்னும் படம் பார்க்கல...

உங்க கருத்தில் எனக்கும் முரன்பாடுள்ளது.

படம் பார்த்துவிட்டு விவாதிப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கும்க்கி said...
இன்னும் படம் பார்க்கல...

உங்க கருத்தில் எனக்கும் முரன்பாடுள்ளது.

படம் பார்த்துவிட்டு விவாதிப்போம்.
//

படம் பார்த்துவிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதனால் தான் படக் கதை பற்றி எதுவும் மிகுதியாகச் சொல்லவில்லை

குடுகுடுப்பை சொன்னது…

இந்த விமர்சனத்திற்கு MR NO வந்து கமெண்ட் போடுவாருன்னு எதிர்பார்க்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
இந்த விமர்சனத்திற்கு MR NO வந்து கமெண்ட் போடுவாருன்னு எதிர்பார்க்கிறேன்.
/

நீங்கச் சொன்னபிறகு தான் அப்படி ஒருவர் பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருது.

ஏன் ஏன் கொலவெறி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

படம் பார்த்தாச்சா?

அதான பார்த்தேன்!

அடங்கமாட்டியளே!

:)

ராம்.CM சொன்னது…

வித்தியாசமாக கூறியுள்ளீர்கள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை.(பார்க்க தோன்றுகிறது.)

ஊர்சுற்றி சொன்னது…

//அவ்வளவு பெரிய பணக்கார பையனுக்கு உதவச் செல்லும் நண்பர்கள் மடிப்பிச்சை போல் பணம் தேற்றி அந்த பணத்தில் பெண் கடத்தலுக்குச் செல்வது போல் காட்டப்படுவது போல் காட்டப்படுவது ஏன், ஆளாலுக்கு மாடர்ன் செல்போன் கையில் வைத்திருக்கிறார்கள், அந்த பையனிடம் ஏடிஎம் கார்டு இருக்காதா ?//

இதெல்லாம் படத்தோட மைனஸ் என்று சொல்லுக்கொள்ளுங்கள். தவறில்லை. ஆனால் படமே சுத்த பேத்தல் என்பதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. இருந்தாலும் உங்கள் கருத்து உங்களுடையது. உங்கள் வித்தியாசமான விமர்சன அணுகுமுறையை பாராட்டுகிறேன்.

அகநாழிகை சொன்னது…

நண்பரே,
உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் வாசித்தேன். தெளிவான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//
இதெல்லாம் படத்தோட மைனஸ் என்று சொல்லுக்கொள்ளுங்கள். தவறில்லை. ஆனால் படமே சுத்த பேத்தல் என்பதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. இருந்தாலும் உங்கள் கருத்து உங்களுடையது. உங்கள் வித்தியாசமான விமர்சன அணுகுமுறையை பாராட்டுகிறேன்.//

படத்தை மோசமானது என்று குறிப்பிடவில்லை மோசமான கட்டமைப்பை செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோபா, நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

மீசைக்காரி இராம் CM, நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// "அகநாழிகை" said...
நண்பரே,
உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் வாசித்தேன். தெளிவான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//

பொன்.வாசுதேவன், பாராட்டுக்கு நன்றி !

மணிகண்டன் சொன்னது…

ரொம்ப கேவலமா சித்தரிச்சி இருக்காங்களா ? படம் பாத்துட்டு சொல்றேன். ஆனா இதே கருத்தை பொது கருத்தா வச்சி பார்த்தா நடுத்தர வர்க்கம் பண்ணும் அட்டூழியம் கொஞ்சம் ஓவர் தான்.

அதிகமான எழுத்துப்பிழைகள் கோவி பதிவுல.

கிடுகுவேலி சொன்னது…

உங்கள் பார்வை வித்தியாசமானது. படமாக பார்த்து அந்த நகைச்சுவைகளை ரசிக்கலாம். அவ்வளவே. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

priyamudanprabu சொன்னது…

மறுபட்ட விமர்சனம்

Bharath சொன்னது…

ஊரே நல்லாருக்குன்னு சொல்லுதே... நம்ப கொஞ்சம் வித்தியாசமா சொல்லி ஹிட்ஸ் வாங்குவோம்னு ஒக்காந்து யோசிச்ச மாதிரி இருக்கு..

ஓரு பேச்சுக்கு சொல்றேன்.. உங்க கட்டுரையில் search and replace "பணக்காரர்கள்" with "பார்பனர்கள்" and "நடுத்தரவர்கம் " with "இதர ஜாதியினர்".. என்று செய்து பார்த்தால் எப்பிடி இருக்கிறது??

எனக்கென்னமோ உங்க “கட்டுமானத்தில்” Basement Weak'a இருப்பது போல் தெரிகிறது..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓரு பேச்சுக்கு சொல்றேன்.. உங்க கட்டுரையில் search and replace "பணக்காரர்கள்" with "பார்பனர்கள்" and "நடுத்தரவர்கம் " with "இதர ஜாதியினர்".. என்று செய்து பார்த்தால் எப்பிடி இருக்கிறது??

எனக்கென்னமோ உங்க “கட்டுமானத்தில்” Basement Weak'a இருப்பது போல் தெரிகிறது..//

பரத்,

வினைவிதைத்தவர்கள் இன்னும் அறுவடை போதாது என்று இருக்கையில் நாம என்ன செய்ய முடியும். :)

பொருளியல் ஏற்றத் தாழ்வு உழைப்பால் ஏற்படுவதும், சாதிய ஏற்றத் தாழ்வை வழியுறுத்துவதும் ஒன்றல்ல.

Bharath சொன்னது…

//பொருளியல் ஏற்றத் தாழ்வு உழைப்பால் ஏற்படுவதும், சாதிய ஏற்றத் தாழ்வை வழியுறுத்துவதும் ஒன்றல்ல.//

மிகச் சரி.. நான் சொல்ல வந்தது என்னவென்றால்.. உங்கள் கட்டுரை மிகவும் “Superficial" ஆக (தமிழ் வார்த்தை “மேலோட்டமாக”???).. இருக்கிறது. ஓரு விதண்டாவாதமாகவே எனக்கு படுகிறது..
அதை வலியுருத்தவே அந்த உதாரணத்தைக் கொடுத்தேன்..

VSK சொன்னது…

நல்லதொரு விமரிசனத்துக்கு நன்றி கோவியாரே!

பார்க்கும்போது சுவைபடச் சென்றாலும், முடிந்ததும் ஒரு வெறுமையே மிஞ்சியது.

அவ்வளவு பணக்கார அதிகார வர்க்கங்களுக்கு நடுவில் சிக்கி இவர்கள் தப்பித்தது செயற்கை.

தாங்கள் நடத்தி வைத்தோம் என்பதற்காக ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்த பின்னும், வீறாப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்க முயற்சித்தது சரியாகப்படவில்லை.

பல தவறான செய்திகளைத் தாங்கி, சுவையாக எடுக்கப்பட்ட படம்.
எடுத்தவருக்கு லாபம். பார்த்தவருக்கு...?? கோபம்!

Kannan.S சொன்னது…

#####################################
கோவி.கண்ணன் 2:15 PM, July 05, 2009

// "அகநாழிகை" said...
நண்பரே,
உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் வாசித்தேன். தெளிவான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//

பொன்.வாசுதேவன், பாராட்டுக்கு நன்றி !

#####################################

தெளிவான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். -- ஒன்னுமே புரியல...



But படம் நல்லா தான் இருக்கு...

venkat சொன்னது…

உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை

இப்போது நடை முறயில் இது போன்று சில நிகழ்ச்சிகள் நடக்கின்றது காதலுக்காக பெற்றவர்களை எதிர்பது பின்பு காசுக்காக காதலனை கைவிடுவது நடக்கின்ற ஒன்றையே அண்ணன் சமுத்திரிரக்கணி சொல்லி இருக்கிறார்.

by
Villanvenkat

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போது நடை முறயில் இது போன்று சில நிகழ்ச்சிகள் நடக்கின்றது காதலுக்காக பெற்றவர்களை எதிர்பது பின்பு காசுக்காக காதலனை கைவிடுவது நடக்கின்ற ஒன்றையே அண்ணன் சமுத்திரிரக்கணி சொல்லி இருக்கிறார்.//


அப்படியே இருந்தாலும் அதை பணக்கார பின்னனியில் உள்ளவர்கள் மட்டும் தான் செய்வார்களா என்ன ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்