பின்பற்றுபவர்கள்

31 மே, 2007

நீயே அள்ளு !

ஞாயங்கள் குறித்து பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் தங்களை 'அறிவாளிகள்' என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இட ஒதுக்கீடு பற்றி பேச வேண்டுமென்றால் அவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டுமாம். நீயெல்லாம் சிங்கபூரில் உட்கார்ந்து கொண்டு ஞாயம் பேசுவதைவிட களத்தில் இறங்கி வேலை செய்து முன்னேற்றலாமே, அதைவிட்டு பிளாக்கில் ஏன் உளறுகிறாய் ? என்று அறிவாளிகள் சொல்லுகின்றனர்.

அப்படியே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் வந்து போராடினால், நீ தான் விழிப்புணர்வு பெற்று போராட்டம் வரை வந்துவிட்டாயே ? நீ பாதிக்கப்படுகிறாயான்னு ? அதே அறிவாளிகள் கேட்கிறார்கள்.

இவர்களெல்லாம் கேள்வியைப் பற்றி எரிச்சல் அடைவதைவிட 'இவனெல்லாம் கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டானே' என்ற எரிச்சல் தான் அதிகம். அதிகமானல் கீழ்பாக்கத்துக்கு சென்று சரியான மருத்துவரை அனுகுங்கள் என்று அன்புடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

ஒருவர் அறிவு கெட்டுப் போய் 'நீ ஏன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு புலம்புகிறாய் ?' என்ற கேள்விக்கு நான் ஒரு பெரிய முன்னோட்டம் கொடுக்கனுமாம்.

அதாவது நான் யார் ?, எந்த சாதி, தாழ்த்தப்பட்டவனா ? எனக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன சம்பந்தம், இந்தியாவில் படித்துவிட்டு அடுத்த நொடியே வெளிநாட்டுக்கு ஓடிவந்தவனா ? எனது அனுபவம் என்ன ? இது போன்று நான் சொல்லனுமாம். இங்கு முக்கால் வாசிப்பேர் அமெரிக்காவிலும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு தங்கள் சமூகமே விழுந்துக் கொண்டிருப்பதாக கவலைப் பட்டு இணையம் தோறும் பொய்யும் அவதூரும் பரப்புகிறார்களே அவர்கள் ஏன் களத்தில் இறங்கி உயர்ந்த சமூகத்து ஏழைகளை தூக்கி நிறுத்தக் கூடாது. காசு இருக்கிறது என்று காண்வெண்டில் படித்துவருபவன் ஏன் அரசாங்க கல்லூரியில், வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு கேட்கவேண்டும் ?

அறிவுபூர்வ கேள்வி கேட்பவர்கள் இதையெல்லாம் என்னை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்துவிட்டு 'நீ ஏன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு புலம்புகிறாய் ?' என்று கேட்கலாமே ?

ஒற்றை வார்த்தையில் மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ளும் அறிவாளிகளே, நீங்கள் ஏன் எதிராக போராடுகிறீர்கள் ? உங்களது சமூகத்தில் படிக்காதவர்களே இல்லையே ? பீ அள்ளும் தொழிலுக்கு அவர்களை அனுப்பலாமே செய்வீர்களா ? எங்களாலும் பீ அள்ள முடியும், பிணம் அறுக்க முடியும், வெட்டியானாக இருக்க முடியும் என்று செய்து காட்டிவிட்டு தகுதி, திறமை பற்றி அதற்கு மேல் ஞாயம் குறித்து பேசவாருங்கள்.

30 மே, 2007

இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !

இடஒதுக்கீடு - என்பது நடைமுறையில் இருப்பது ஒன்று. இடஒதுக்கீடு இருப்பதால் தான் பாதிக்கப்படாவிட்டாலும் தான் சார்ந்துள்ள சமூகம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக சிலர் திடீர் தேசிய வாதிகள் ஆகுகிறார்கள்.

எப்படி ?

அதாவது இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்து வந்தால் அவர்கள் வேலைக்குச் செல்லும் போது திறமை அவ்வளாக இருக்காது, வேலையில் சோபிக்க மாட்டார்கள், உற்பத்தி திறன் குறையும், இந்திய பொருளாதாரம் சரியும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும். :)) - என்ற குற்றச் சாட்டுகளைச் சொல்கிறார்கள். எதோ இதெல்லாம் இல்லாதபோது சுபிக்ஷ்மாக இருந்தது போலவும் இப்பொழுது நலிந்துவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். முயற்சி தானே செய்யட்டுமே ! :)

எனது கல்லூரியில் பிற்பட்ட பிரிவில் இருந்து இடம் கிடைத்து படித்தவர்தான் கோல்ட் மெடல் வாங்கினார். பள்ளியில் படிக்கும் கிடைக்கும் படிப்பில் மதிபெண்கள் தகுதியை நிர்ணயம் செய்துவிட முடியுமா ? வேலைக்குச் செல்லும் போது நேரடித் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் போட்டி போட்டுதானே வருகிறார்கள் ? பெண்களைவிட ஆண்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுவருகிறார்கள், தேர்வு விகிதமும் குறைவு. அதனால் ஆண்களின் வேலை திறமை குறைந்து போய்விட்டதா ?

இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருக்கக் கூடாதாம், சாதி எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என்று விளக்கினால் நன்றாக இருக்கும். பழமை வாதம் பேசாதே ! ன்னு கொஞ்சம் சத்தமாக சொல்லுறாங்க. சரி...? மதம் மாறுவது போல் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைத்துக் கொள்ள எந்த உயர்ந்த சமூகம் தயாராக இருக்கிறது?..முனிசிபல் கொசுமருந்து இயந்திரத்தை எங்களுக்கும் கொடுங்க, நாங்களும் தோலில் மாட்டிக் கொண்டு கொசுமருந்து அடிக்கிறோம் என்று சொல்லத்தயாராக இருக்கிறார்களா ? அப்போது பொருளாதாரவாதிகள் ஆகிவிடுகிறார்கள்ள். யார் யார் டேபிள் துடைக்கிறார்கள், யார் யார் சமையல் செய்கிறார்கள் என்று ஒரு லிஸ்டை காட்டி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

50 ரூபாய்க்கு 500 ரூபாய் மாதவருமானம் என்று சான்றிதழ் கிடைக்காதா ? இதுபோல் ஆண்டாண்டு காலமாக ஆண்டைகளுக்கு அடிமையாக இருந்த சமூகம் எழுவுதற்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன ? உயர்ந்த சமூகமாகவும் மற்றவர்களை தாழ்ந்த சமூகமாகவும் காலடிக்கு கீழ் அறிவித்து வைத்திருந்த பாட்டன் சொத்தில் மட்டும் உரிமை வேண்டும்...பாட்டன் சேர்த்துவைத்த பாவத்தில் பங்கு வேண்டாமோ ? வசதி படைத்த உயர்ந்த சமூகமே தங்கள் சாதியில் வசதி குறைந்து உள்ளவர்களுக்கு இலவசமாக எல்லாமும் கொடுக்க வேண்டியதுதானே யார் தடுக்கப் போகிறார்கள் ? இதைவிட சாதி சங்களால் உருப்படியாக வேறெதும் செய்ய முடியாது!

என்னைக் கேட்டால் அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப் படவேண்டும் என்று சொல்வேன். அதாவது மொத்தம் 100% இடம் இருந்தால் சாதிகளுக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்கலாம். அப்போதுதான் எல்லோரும் எல்லாமும் பெறலாம். ஒட்டுமொத்த கொள்ளையை சாதிப்பற்றுள்ள மேலதிகாரிகள் மூலம் சாதித்துக் கொள்வதை தடுக்க முடியும். தேசிய வாதிகள் ஸிந்திப்பார்களா ? தன் சமூகம் பாதிக்கபடுவதாக உணர்ந்தாலே போதும் எல்லோரும் தேசியவாதிகள் தான். அங்கு பேசப்படுவதும் தேஸ நலன்தான்.

சொல்லுங்க! சொல்லுங்க !! கேட்டுக் கொள்கிறோம் !!!

29 மே, 2007

சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

வியாபார பொருள்களை பதுக்கி வைத்தால் டிமாண்ட் ஏற்படும் போது அதிக லாபத்துக்கு விற்கலாம் என்ற மக்கள் விரோத கோட்பாடு படி, சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை காலி செய்யும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜி படம் வெளிவருகிறது. சிறுவர்களாக இருக்கும் போது 'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்று 3 x 3 கட்டம் போட்டு எழுதுவோம். ஜிலேபிக்கு பதில் அல்வா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். கிடைப்பது ரசிகர்களுக்கு.

இதோ வருது அதோ வருது என்று தற்பொழுது ரிலிஸ் தேதி ஜூன் 15 என்கிறார்கள். சிவாஜி வெளிவந்தால் சிறுபட்ஜெட் படங்கள் படுத்துவிடுமோ என்று அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட பல படங்கள் பெட்டியில் உறங்குவதாக சொல்கிறார்கள்.

அப்படி ஒரு படம் தங்கர்பச்சானின் 'பள்ளிக் கூடம்' ஏப்ரல் - மே பள்ளிக் கூட விடுமுறையில் வெளி இடவேண்டும் என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டு சிவாஜி பூச்சாண்டியால் வெளி வராமல் தவி(ற்)க்கிறது. தங்கர்பச்சானுக்கு வெளியிட விருப்பம் இருந்தாலும் படம் எடுக்க காசு போட்ட தயாரிப்பாளர் 'நோ' சொல்கிறாராம். விடுமுறை காலம் கழிந்து 'பள்ளிக்கூடம்' பள்ளிக் கூடங்கள் திறந்த பின்புதான் மணி அடிக்கும் போல் தெரிகிறது. பள்ளிக் கூட 'நேரம் தவறுவதற்கு' இதுவே காரணமாம். சிலருக்கு லாபம் பலருக்கு நட்டம் ! அரசியல் போல் சினிமாவும் 'இமேஜ்' தக்கவைத்துக் கொள்ள எதுவேண்டுமானாலும் செய்யும் !

இதுபோல் பலபடங்கள் ரஜினியின் 'சிவாஜி' க்கு பயந்து பெட்டியில் உறங்குகின்றன. படங்களுக்கு செலவு செய்த பணம் கொடுத்து உதவிய சேட்டுகள் வட்டிப் போட்டு கொழிக்கிறார்கள். எதிர்பார்ப்பை ரொம்பவே கிளப்பிவிட்டதால் திரை அரங்க உரிமையாளர்கள் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு பங்குதரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிகிறது. டிக்கெட்விலை முதல் மாதத்தில் 500 - 1000 வரை போகும். ரசிகனின் பாகெட்டில் பெரிய ஓட்டை விழுந்து ஏவிஎம்ன் பட்ஜெட்டில் ஓட்டையை அடைத்து நிறப்பும் என எதிர்பார்கப்படுகிறது.

எல்லாம் எதற்காக ? 3 மணி நேர டயலாக்கில் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கப் போகும் பஞ்ச் டயலாக்குகளுக்காக ! ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பே சென்னை வாசிகள் தேவையான பாலை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் ஒரு வாரத்துக்கு கிடைக்காது. :)))))))))

மாயத்திரை !

சூப்பர் ஸ்டார் வாழ்க !

27 மே, 2007

சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?

சுதந்திர இந்தியாவில் தேசிய அளவில் கல்வி, வேலை வாய்ப்பு பழங்குடியினர் (SC), மலை வாழ்மக்கள்(ST) மற்றும் பின்தங்கியவர் (BC) என்ற பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. SC/ST பிரிவு மக்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இதில் சலுகை பெற SC/ST க்கான சிறப்பு தகுதி என்னவென்றால் அவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனைதான். அதாவது இந்துமதத்தில் இருக்கும் பழங்குடியினர் (SC), மலைவாழ்மக்கள் என்று அறியப்பட்டவர்களுக்குத்தான் அந்த சிறப்பு சலுகைகள்.

இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பிறமதங்களுக்கு மாறும் போது அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைக்கும் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பதில்லை. மாநிலங்கள் அளவில் MBC ஐ சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது BC க்கள் ஆகின்றனர். கணக்கில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் மதம் மாறும் எண்ணிக்கையும் அதற்கான காரணங்களும் MBCக்களுக்கு மிக மிக குறைவு. பிறமதத்தினரில் BC, FC ஆகிய பிரிவுகள் இருக்கின்றனர். ஆனால் மதம் மாறும் தலித்துக்களின் சலுகைகளுக்கான நிலையோ வேறு. மதம் மாறும் போது SC/ST பிரிவினர் BC எனவும் மாற்றப்படுகிறது.

மதமாற்றத்திற்கு தூண்டுதல் (கட்டாயம்) என்பது ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதாவது கட்டாய மதமாற்றதடை சட்டம் அமுல்படுத்தியபோது பல அமைப்புகள் அதற்கு எதிராக போராடி திரும்ப பெறவைத்தனர். கட்டாயப்படுத்தவில்லை என்று அந்த மதத்தினர் சொல்லும் போது அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எதற்கு போராடவேண்டும் ? என்ற கேள்விக்கு 'சிலரை பழிவாங்க சட்டம் தவறாக பயன்படுதப்படலாம்' என்ற உப்பு இல்லாத ஒரு காரணம் என்ற சொல்லப்பட்டது தவிற வேறு காரணங்கள் வெளிப்படையாக இருப்பது போல் தெரியவில்லை.

பலருக்கும் எனக்கும் முதல்காரணமாக தெரிந்தது மதவியாபாரம் படுத்துவிடும் என நினைக்கும் மாற்று மதத்தில் உள்ள மத விற்பனையாளர்களின் தேவையற்ற அச்சமே இதற்கு மறைமுக காரணம். மதமாறச் சொல்லும் மாற்றுமதத்தினர் சொல்லும் முக்கிய காரணம் எங்கள் மதத்திற்கு வந்தால் சமத்துவமாக நடத்துவோம், சாதி பார்க்கமாட்டோம் என்பதுதான், கூடவே எங்கள் இறைவனும், மத புனித நூல்களும் உண்மையானவை என்றும் சொல்லுவார்கள், சொல்லுகிறார்கள்.

தலித்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மாறுகிறார்களா ? அல்லது விரும்பி மாறுகிறார்களா ? என்பது மதவாதிகள் கவலைப்பட வேண்டிய விசயம். அப்படி விரும்பியோ, கட்டாயப்படுத்தப்பட்டோ மதம் மாறுகிறவர்கள் இன்னும் தலித்துக்களாகவே பார்க்கபடுகிறார்களே ! அது ஏன் ? என்பதும் மதவாதிகள், சமூக ஆர்வளர்கள் விவ ாதிக்க வேண்டிய, கேள்வி கேட்க வேண்டிய விசயம். மதம்மாறித்தான் ஒரு கடவுளை வழிபடவேண்டுமா ? ஏன் உங்கள் கடவுளை வழிபட மதம் மாறவேண்டும் ? என்று சொல்கிறீர்கள் என்பதெல்லாம் மதவாதிகள், பக்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய விசயம். ஆனால் அரசாங்கம் இதுகுறித்து கவலைப் படவேண்டுமா ?

ஒரு தலித் தனது மதத்துகட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்பதாலும், அந்த மதம் தன் குலத்தோரை வாழவிடவில்லை, தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து, கண்ணுற்று, தெளிந்து, உணர்ந்து அவர் கடவுள் பற்று உடையவராக (ஆத்திகராக) இருப்பின் சூத்திரன் என்ற இழிபெயரை தாங்கிக் கொள்ள விரும்பாமல் மாற்று மத கடவுளையும், அவர்களது நம்பிக்கைகளையும் அறிந்து மதம் மாறினால் அவனது ஏழ்மை நிலை, சமூக நிலை உடனே அழிக்கப்பட்டுவிடுமா ? எந்த மதமும் இதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். நிலை இப்படி இருக்க... மதம் மாறினால் சலுகை ரத்து என்று சொல்வதற்கு அடிப்படைகாரணம் என்ன ? மாற்று மதத்தினர் இந்திய அரசாங்கத்துக்கு எதாவது எழுத்தில் எழுதி கொடுத்திருக்கிறார்களா ? அதவது ஒரு தலித் எங்கள் மதத்திற்கு மாறும் போது அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளை நாங்கள் பிற்பட்டவருக்கோ, அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் அளவுக்கோ மாற்றுவோம் என எழுதி கொடுத்திருக்கிறார்களா ? பின்பு எதை வைத்து அரசாங்கம் மதம் மாறிய தலித்துகளுக்கான சலுகைகளை மறுக்கிறது ?


எனது பார்வையில், இந்து தலித்துகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் மூலம் இந்துக்களின் எண்ணிக்கையை அப்படியே வைத்திருக்க மட்டும் உதவுகிறது. மேலும் இந்து தலித்துக்களுக்கு மட்டும் சலுகை என்பது ஒரு தலித் சாதிக் கொடுமைகளை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவன் இந்துமததில் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே சலுகைகள் பெறமுடியும் என்ற எழுதப்படாத விதியா ? தலித்துக்கள் எந்த மதத்தை சார்ந்துள்ளார்கள் என்பதை மட்டும் பார்த்து ஏழ்மைநிலையை கவனத்தில் கொள்ளாமல் மறுக்கப்படும் சலுகைகள் மதம் மாறிய தலித்துக்களுக்கு கிடைக்கும் தண்டனையா ? ஒரு சமூகத்தின் மீது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மாற்ற முடியாமல் சுமத்திவரும் தாழ்வுகளை அகற்றவேண்டும் என வழங்கப்படும் சிறப்பு சலுகைகளுக்கான பலன் அவன் சந்ததியை மாற்றிவிடும் என்று நினைத்து சலுகை கொடுப்பது என்பதும் ஒரு தலித் மாற்று மதம் மாறுவதற்கு ஈடான ஒன்றா ? இது சரியென்றால் அரசாங்கமே மதமாற்றம் சரி சலுகைகள் தேவை இல்லை என்று சொல்லிவிடலாமே ? பொருளாதாரம், சமூக நிலை மாறவேண்டுமென்றால் சலுகையை விட மதமாற்றம் சிறந்தது, சுலபமானது என்று அரசாங்கம் சொல்லிவிட முடியாது தானே ? மதத்தையும் தொடர்பு படுத்தி மதம்மாறிய தலித்துக்களுக்கு மறுக்கப்படும் சலுகை சமூக நீதிக்கு எதிரானது, மதங்கள் செய்யும் தவறுக்கு அவர்களை தண்டிப்பது என்ன ஞாயம் ?

மேலும் இந்து தலித்துக்களுக்கு மட்டும் சலுகை என்பது தலித்துகள் தன் சாதி பெயரில் வருணாசர தருமத்தின் பிரிக்கப்பட்ட ஒரு கீழ் சாதியாகவே (சூத்திரனாக) தொடரவேண்டும் என்பதற்காகவும், சமூக சீர்கேடான இந்து சாதி அமைப்பை கட்டிக்காக சலுகை என்ற பெயரில் தரப்படுவது, பெரும் சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக் கொள்ளும் அரசாங்கம் இந்து தலித்துகள் மட்டும் பாதிக்கப்பட்டவர் எனபார்த்து செய்யும் சலுகைகள் இந்து மதத்தைக் கட்டிக்காக்கும் ஒரு கேடயமே.

60 ஆண்டுகளாக இருக்கும் மாற்றுமத தலித்துக்களுக்கு எதிரான இந்நிலை உடனடியாக மாற்றப்படவேண்டும், உடனடியாக தலித்துக்கள் எந்த மதத்தை சேர்ந்தவார் ஆயினும் அனைவருக்கும் அரசாங்க சலுகைகளை வழங்கப்படவேண்டும், நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை உலகில் அனைவரும் ஒப்புக் கொள்ளகிறார்களா ?என்று கூட கவலைப்படத் தேவை இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும்.

பின்குறிப்பு : இந்த இடுகையில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எல்லாவித கருத்துக்களுக்கும் ஆதரவு எதிர்ப்பு எல்லாம் பதிவில் கொடுத்து இருப்பதாக நினைக்கிறேன். எனவே கருத்துக்கள் அனைத்திற்கும் மறுமொழி இடப்போவதில்லை. உங்கள் கருத்துக்களை எவரேனும் மறுத்தால் அதற்கு நீங்களே மறுமொழி இட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இங்கு பேசப்படுவது தலித்துகளுக்கான சலுகைகள் குறித்து மட்டுமே !


தொடர்புடைய சுட்டிகள் :
மதமாற்றம் என்றால் என்ன ?
மதமாற்றமா ? மனமற்றமா ?

25 மே, 2007

வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...

அடுத்த ஜனாதிபதி யார் என்று கேள்வி எழும் போது வாஜ்பேயின் பெயரும் அடிபட்டு இருக்கிறது.

சோபனா ரவி ? நிர்மலா பெரியசாமி ? - வாஜ்'பேயி' ன்னு அழுத்தமாக செய்திகளில் சொல்லுவாங்க :) அவர் பேயெல்லாம் இல்லை. முன்னால் பிரதமர் என்பதில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

அவருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்று தெரியவில்லை ? பிஜேபி கூட்டனி கட்சியினர் அவரை வழிமொழிகிறார்கள்ள். பிரதமராக சில ஆண்டுகள் அவர் இருந்தாகிவிட்டது. ஏற்கனவே முட்டுவலி, முழங்கால் ஆபரேசன் என தளர்வாக இருக்கிறார் என்ற உடலியல் காரணங்களை ஏன் இவர் கருத்தில் கொள்ள வில்லை ?

வாஜ்பாய் பாஜகவை சேர்ந்தவர், மிதவாத இந்துத்துவாவாதி என்று மதச் சார்ர்பு உடையவர். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மதவாதிகளாக இருப்பது அந்தபதவிக்கு ஏற்றதல்ல என நினைக்கிறேன். ஏனென்றால் எதைச் செய்தாலும் விமர்சனம் வரும்.

தேசிய அளவில் ஆன பிஜேபி கட்சியில் வாஜ்பாயிக்கு மாற்று என்று சொல்லக் கூடிய அளவுக்கு மிதவாதிகள் இல்லை என்பதைத்தான் அவர்கள் வாஜ்பாயை முன்னிறுத்துவது காட்டுகிறது.

ஜனாதிபதி பதவி நாட்டின் உயரிய பதவி அந்த பதவியை அடைய ஏற்கனவே இருந்தவர் மீண்டும் நல்லவர், வல்லவர் என்பதற்காக மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் கோரிக்கையை வைப்பவர்கள் சற்றும் யோசிப்பதே இல்லை. முன்பு கே.ஆர்.நாராயணன் மீண்டும் வரவேண்டும் என்றார்கள், இன்று பலர் அப்துல் கலாம் மீண்டும் வரவேண்டும் என்கிறார்கள். இப்படி சொல்பவர்களிடம் நான் கேட்க விரும்புவது,

மான்புமிகு கலாம் மிகச்சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் என்று பாராட்டலாம். அதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.

100 கோடி இந்தியர்களில் அந்த பதவியை அடைய தகுதியானவர்கள் எவருமே இல்லையா ? உயர்பதவி என்றாலும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் அதே போன்று மதிப்பும் மரியாதையும் மற்றோரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டாமா ? ஏற்கனவே இருந்தவர்களே மீண்டும் வரும் போது அப்படி ஒரு நல் வாய்ப்பு எவரோ ஒரு நல்ல இந்தியனுக்கு மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். அதாவது கேஆர்நாராயணனே மீண்டும் வந்திருந்தால் அப்துல் கலாமுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. நற்செயல்பாடுகளால் அவர்களே மீண்டும் வரவேண்டும் என்று சொல்பவர்கள் யோசிக்க வேண்டும்.


கருத்து ?

24 மே, 2007

குமரன் முருகனும் பெரியார் இராமசாமியும் - ஒப்பீடு

ஆத்திகம் நாத்திகம் எதிர்துருவமாக பார்த்து மற்றது தாழ்ந்தது என இரு கொள்கை பற்றாளரும் மற்றவர்களுக்கு எதிராக காலம் காலமாக கலகம் வளர்த்தே வருகின்றனர்.

எனது பார்வையில் கொள்கைகளில் முரண்பாடுகள் ஏற்படும் போது, உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடம் உடன்பாடு ஏற்படாத போது அல்லது எதாவது காரணத்தினால் வளருபவர்களை அமுக்க நினைத்து அதற்கான தலைவரின் விதிமீறல்கள் அல்லது கடுமையான விதிகளை அமல்படுத்தும் போது உடன்பாடு ஏற்படாததால் கட்சிகள் உடைவதைப் போல மதங்களும் அதனுள் கிளை மதங்களும் தோன்றி இருக்கிறது.

இந்தியாவில் நாத்திகம் என்பது இன்னாளில் கடவுள் மறுப்பு என்று முன்னிறித்தி எதிர்தரப்பினில் சொல்லப்பட்டாலும் அந்நாளில் வாழ்வியல் மறுப்புக்கு எதிராகத்தான் நாத்திகர்கள் போராடி இருக்கிறார்கள். நாத்திகம் என்பது ஆத்திக தடாகத்தின் வருண கட்டுப்பாடுகள் என்ற பாசிகளையும், மரபுச் சேறுகளையும் சுட்டிக்காட்டி அதில் குளிப்பதற்கு இறங்கு முன் ஏறகனவே பாசி, சேறு பலரை கபலீகரம் பண்ணியதை சுட்டிக்காட்டவும், பாசிகளில், சேறுகளில் சிக்கித் தவிப்பர்களை மீட்கவும், எச்செரிக்கையாகவும், தடாகத்தை சுத்தப்படுத்தவும் உதவி இருக்கிறது. இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதைத்தவிர ஆத்திகவாதிகள் செய்த அளவுக்கு நாத்திகம் அதாவது குலம் பிரித்து, பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பித்து பொதுமக்களுக்கு கேடு செய்யவில்லை.

எதையுமே ஆராயாமல் எப்போதும் ஒருவரை கெட்டவர் என்பதும் நல்லவராக நம்பப்படுபவரின் கெட்ட செயல்களை மறைத்து எப்போதுமே நல்லவனாவே காட்ட முயல்வதும் பகுத்தறிவு பார்வை இல்லாத கோளாறினால் ஏற்படும் மாயத்தோற்றம். மகாபாரதம் இராமயண கதைகளில் இவற்றிற்கு எடுத்துக் காட்டுகிறேன்.

தன் மனைவியின் சேலையை கர்ணன் பிடித்து இழுக்கும் போது முத்துமாலை அறுந்துவிழுந்ததும் அதை நேரடியாகப் பார்த்தும் சிறிதும் சந்தேகம் கொள்ளாது நம்பிக்கையையும் நட்பையும் போற்றிய துரியோதனனை கெட்டவனாகத்தானே என்றும் காட்ட முயன்று வருகிறார்கள். எவனோ சந்தேகப்பட்டான் என்பதற்காக மனைவி மீதே 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என தீக்குளிக்க சொன்ன ஆணாதிக்க இராமன் என்றும் இவர்களுக்கு நல்லவரே. நாரயணன் நாமம் நாளும் பாடினாலும் நன்மை செய்வதாக சொல்லும் நாரதனின் நோக்கம் என்னமோ கலகம் தான்.


டிஸ்கி ஓவர். :)))

நாத்திகரை ஆத்திகராக பார்க்க முடியுமா ? அல்லது ஆத்திக கடவுளுடன் ஒப்பிட முடியுமா ? ஒப்பிட்டு இருக்கிறார்கள். புத்தரும் ஆனாரே விஷ்னு அவதாரமாக.

தமிழக தந்தை பெரியாரும் தமிழ் குமரன் முருகனும் ஒரு ஒப்பீடு. வியத்தகு நல்லதொரு ஒப்பீடு.


உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்கள் !

தீட்டு கழிக்கும் வைபவம் !

தீட்டு கழிப்பது ஒரு குறைந்த செலவு நிகழ்ச்சியாக இருந்தால் பல பதிவுகளை படித்தவுடன் உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம். குருவாயூர் பட்ஜெட் படி ஹூம் ... லட்சக்கணக்கில் ஆகுமாமே. அதனால் பதிவுகளை படிக்கும் பலர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு தலையில் நீர் தெளித்துக் கொள்வது போதும் என முடிவு செய்து விடுகிறார்களோ ?

சிலை செதுக்க உளி செய்தவனும், சிலையை தொட்டு தொட்டு செதுக்கியவன் என இருவரும் தீண்டத்தகாதர் என்ற நிலையில் அப்படியே இருக்க அவர்கள் கற்பனைகளில் உருவான சிலைகளுக்கு மட்டும் தொட்டுவிட்டான், பார்த்துவிட்டான் என தீட்டுகள் கழிக்கப்படுகிறது.

சிலைக்கு தீட்டு ஆனால் அந்த சிலையில் தீட்டுகழிக்க பயன்படுத்தும் பாலில் தீட்டு இல்லையாம். பாலில் தீட்டு இல்லை என பழைய பஞ்சாங்காமே சொல்லி இருக்கிறது வேறு எவர் சொல்ல வேண்டும் ??? :)).

தீட்டுக் கழிக்கும் பொருள்களை விளைவித்தவர்கள், அறுவடை செய்தவர்கள் என தீண்டத்தகாதன் கைபட்டு அப்பொருள்களில் தீட்டுபட்டு இருக்காதா என தெரியவில்லை. தீட்டு கழிக்கும் பொருள்களில் உள்ள தீட்டை கழிப்பதற்கு கைபடாத பொருள்கள் எதும் இருக்கிறதா ? அறிந்தவர்கள் சொல்லுங்க. வெறும் மந்திரம் மட்டும் போதூமா ? சரி.

நாமெல்லாம் வம்சாவளி குறித்து பேசுகையில் இதுவரை வம்சம் என்பது ஆண்கள் உருவாக்கும் சமூகம் என்பதால் ஆணைச் சார்ந்தாக இருக்கிறது. அதாவது தாய் எந்த மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலூம் தந்தை எதைச் சேர்ந்தவரோ அதைத் தான் அவருடைய பிள்ளைகளும் சேருகிறார்கள் என்பது வழக்கம் மற்றும் வழக்கு.

ஆனால் வயலார் ரவி இந்துவாக இருந்தாலும் அவர் கிறித்துவரை மணந்திருக்கிறார் என்ற காரணத்தினால் அவருடைய பிள்ளைகள் குருவாயூரில் கிறித்துவராக பார்ப்பார்களாம். என்ன ஒரு தெளிவான சிந்தனை பாருங்கள். அவர் ஏற்கனவே அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்கீறார்கள். அப்போதும் அதே தீட்டுகழிக்கும் வைபவமும் நடந்து இருக்கிறது. இவ்வளவு தெரிந்தும் முதலில் அவரது மகனின் சடங்குகளுக்கு அனுமதித்து எல்லாம் முடிந்த பிறகு அவரது மகன் கிறித்துவன் என (சரி?)பார்க்கப்பட்டு தீட்டு கழிக்கிறார்களாம்.

இராஜிவ் 'காந்தி' இந்துவாக இருந்தாலும் அவர் மனைவி சோனியா 'காந்தி 'என்று குடும்ப பெயரை வைத்துக் கொண்டாலும் இந்துத்துவா வாதிகள் சோனியாவை கிறித்துவராக மட்டும் பார்க்காமல் அவருடைய வாரிசுகள் பிரியங்கா மற்றும் இராகுல் 'காந்தி' யும் கிறித்துவர்களாகப் பார்த்து அவர்களையும் கிறித்துவர் வெளிநாட்டினர் என்று நாக்காலி ஆசையில் நா குழறுகிறார்கள் அதாவது அந்நியருக்கு பிறந்தவர்கள் எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.

உயர்சாதிக்காரன் என்று சொல்லப்படுகிறவர்கள் தன்னைவிட கீழ் உள்ள சாதியில் உள்ள பெண்ணை அல்லது வேற்று மத பெண்ணை மணந்தால் அவர்களுடைய வாரிசுகள் உயர்ந்த சாதியாகத் தானே தந்-தையை வைத்து இதுவரை பார்த்து இருக்கிறோம். நடைமுறையில் இருப்பது. அங்கெல்லாம் வாரிசுகள் தாழ்ந்த சாதியாக பார்க்கப்பட்டார்களா ?

குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை சிரிப்பதை பாருங்கள் ... !

கண்ணன் ஒரு வேளை இதை நினைத்துதான் சிரிக்கிறானோ என்னவோ ? கண்ணனுடன் சேர்ந்து நாமும் சிரிப்போம். வேடுவர் (தாழ்ந்த ?) குல வள்ளியை மணந்த குமரனும் குன்றம் ஏறிநின்று சிரிக்கிறான். திருப்பதியில் இருந்து வெங்கடேசன் - இஸ்லாம் நாச்சியார் தம்பதிகளின் சிரிப்பொலிகள் கொஞ்சம் பலமாகவே கேட்கிறது.

23 மே, 2007

பரண் 2004 - மேல் மாடி காலி


தமிழ் மணத்தில் பரண் இருக்கிறது. அதில் 2005, 2004 ல் என இரண்டு அடுக்குகள் இருக்கிறது. ரொம்ப பழைய பரண் (2004ல்) அதில் 'பொருள்'கள் இல்லை.

2005ல் மூத்த பதிவர்கள் (வயதில் மட்டும் அல்ல) எழுதிய இன்றைய நாளில் எழுதிய இடுகைகள் தொகுக்கப்பட்டு இருக்கிறது. 2004ல் எதுவும் காணப்படவில்லை என செய்தி வருகிறது. இதில் என்ன சிறப்பு என்றால் விலகிய மற்றும் விலக்கப்பட்ட பதிவகளின் 2005ஆம் ஆண்டு இடுகைகளும் வருகிறது. மகிழ்வான விடயம் தான்.

பழைய பரணில் எதுவும் இல்லை என்றால் சமீபத்திய புதிய பரணில் (2006) இருக்கும் தட்டுமுட்டு சாமாண்களைக் காட்டலாமே. அதாவது 2005 மற்றும் 2006 பிரிவுகளாக அந்த ஆண்டுக்குள் இருக்கும் இடுகைகளை காட்டலாமே.

தமிழ்மணம் கவனிக்குமா ?

நாமக்கல்லார் கண்டுபிடித்து (மொக்கை) பதிவு போடுவதற்குள் என் கண்ணில் சிக்கிடுச்சு.
:))
என்னுடைய பழைய பொருள்களைப் (2006) பார்கலாமே என்ற நப்பாசை தான் ! :)

பிறப்பின் அடிப்படையில் ?

ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை.

என்று பதிவர் ஜடாயு போன்றவர்கள் மனு ஸ்மிருதியில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள். இது போல் இதுவரை உயர்ந்துள்ளதாகவோ, அல்லது அவ்வாறு உயர்ந்த நிலைக்குச் சென்ற முன்னாள் சூத்திரன் இதோ இந்த பிராமணரின் சந்ததிகளே...! என்று சொல்வதற்கு எவராவது அல்லது எதாவது வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதா ? அதையும் அவர்கள் காட்டவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய 'உயர்ந்த தத்துவங்கள்' ஏட்டளவில் பேசப்படும் ஒரு கருத்தாக மட்டுமே தெரிகிறது. ஒரு வேளை சூத்திரர்களின் நிலை இன்னும்... இன்னும் உயரவேண்டும் என்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்களா தெரியவில்லை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்வது நல்ல செய்திதான். ஆனால் நடைமுறையில் வழிவழி வருவது, பாரம்பரியம், மரபு என்றல்லவா சொல்லப்படுகிறது.

ஜூனியர் விகடன் கட்டுரையை சுட்டிக் காட்டி, சிதம்பரத்தில் குழப்பம் வேண்டுமென்றே விளைவிக்கப்படுகிறது. அங்கு பிரச்சனை தமிழ் அல்ல. சிற்றம்பல மேடையில் சம்ஸ்கிரதமும் பிறரால் (பிராமணர் உட்பட) பாடமுடியாதது என்பது தான் ஆகம விதி என்று சொல்கிறார்கள்.

ஆகமம், விதி இவையெல்லாம் ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டதா ? கோவில்கள் எதுவும் சுயம்புவாக (தானாகவே) தோன்றிவிடவில்லையே. கோவிலை நிர்வாகிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதில் சில தீர்மானங்கள் வழி இவர்கள் நிர்வகிப்பார்கள் என்று சொல்லி இருப்பார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் நின்றுபாடுவதற்கு உரிமை இல்லை என்று ஒரு ஆகம விதி இருக்க முடியுமா ? இங்கு தான் பிறவியின் அடிப்படையில் என்ற உரிமையைச் சொல்கிறார்கள். ஆகம விதிப்படி அங்கு இருக்கும் தீட்சிதர்கள் எல்லோருமே சிதம்பரம் கோவிலை நம்பித்தான் இருக்கிறார்களா ? படித்துவிட்டு வெளியுலக பணிகள் எதற்கும் செல்லவில்லையா ? ஆகமம் கூறுகிறதே என்று விதியை மீறக்கூடாது என்று அப்படியே இருந்துவிடுகிறார்களா ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தனியார் வசமிருக்கும் கோவில்களில் எவரும் பிரச்சனை செய்வதில்லை ஏன் சிதம்பரத்தில் மட்டும் ? அங்கும் செய்யலாமே என்று கேட்கிறார்கள். எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் இருக்கிறது, அது பிராமணர்களுக்கு சொந்தமானது. அவர்களுடைய முயற்சியில் ஏற்பாட்டில் பொருளுதவியில் அவர்களே கட்டிக் கொண்டது. பிறரும் பொருளுதவி இருக்கிறார்கள். இது எல்லோருக்குமே தெரியும். அது ஒரு தனியாருக்கு சொந்தமான கோவில் என்று உணர்ந்து இருக்கிறார்கள்... தெரிந்துதான் அங்கு சென்று எப்படி இது போல் கேட்க முடியும் ? இதேபோல் சிங்கையில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் கோவில் செட்டியார்களால் கட்டப்பட்டது. அதில் உரிமை கோருவது ஏற்புடையதா ? பிடிக்கவில்லை என்றால் போகமல் மட்டுமே இருக்க முடியும். சிதம்பரம் கோவிலைப் பற்றி பேசும் போது தனியாருக்கு சொந்தமான கோவிலிலும் போய் பிரச்சனை வளருங்கள் என்று சொல்வது விதண்டாவாதம். இதுபோல் நாட்டார் தெய்வங்கள் வழிபடும் கோவில்கள் எல்லாம் அவர்களின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. உரிமையை மற்றவருக்கும் விட்டுக் கொடுத்தால் அது பெரும்தண்மை என்று பாராட்டலாம். ஆனால் அதற்காக போராட முடியாது.

அறநிலைய பொது சொத்தான கோவிலுக்குள் பாட உரிமை கேட்பதும் தனியார் கோவில்களில் அதே உரிமையை எதிர்பார்பதும் ஒன்றா ?

வணங்குபவன், அதில் நம்பிக்கையுடவன் தான் இது போன்று நம்பிக்கைகள் குறித்து கேள்வி கேட்கவேண்டும்... அருகதை அற்றவர்கள் (நாத்திகர்கள் ? ) கேட்கக் கூடாது என்று மிகச் திறமையாக சொல்கிறார்கள். அந்த உரிமைக்குப் போராடும் நம்பிக்கை உடையவர்களுக்கு சொல்வதோ வேறு பதில். அதாவது இறைவன் எங்கு தான் இல்லை ? ஏன் அங்கு பாடவேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள்!!! என்று. அதே அடத்தைத்தான் உரிமை குறித்துப் பேசி அதை மறுப்பவர்களும் செய்கிறார்கள் என்று ஏன் இவர்கள் (வசதியாக மறந்து ?) நினைப்பது இல்லை ?

'பிறப்பின் அடிப்படையில்' மரபு என்பதெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் கூட இருக்கிறது. நமக்கு தெரிந்து கத்தோலிக்கர் என்றாலும் ஆப்பிரிக்க இனத்தில் இருந்து எந்த போப்பாண்டவரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

கடவுள் விசயத்தில் காம்ப்ரமைசுக்கு இடமில்லையா ?

பின்குறிப்பு : டிஸ்கி போடாமல் எதுவுமே எழுத முடியவில்லை. :) இங்கு எவரையும் தாழ்வாகவோ, குறைத்தோ மதிப்பிடவில்லை. கேட்பது மரபுகள் மற்றும் பிறப்பின் அடிப்படையான உரிமைகள் குறித்து...பிறப்பின் அடைப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி உரிமைகள் மறுக்கப்பட்டதைத்தான் பார்த்து வந்திருக்கிறோம்.

22 மே, 2007

மதமாற்றம் என்றால் என்ன ?

தீண்டாமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு காரணங்களை விடுவோம். ஏனென்றால் அப்படிபட்ட குற்றச் சாட்டுகளை கூறிக் கொண்டுதான் (அவற்றில் உண்மையும் உண்டு) மதம் மாற்றம் பெரிய அளவில் நிகழ்கிறது. காதல் திருமணத்தால் ஒரு கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் நிகழ்கிறது.

இவ்விரண்டு முக்கிய காரணங்கள் இன்றி எவரேனும் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு மாறுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் ? உங்களுக்கு தெரிந்து அவ்வாறு யாரும் மாறி இருக்கிறார்களா ?

தீண்டாமை கொடுமைகள் இல்லாத ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா போன்ற பல நாடுகளில் கிறிஸ்துவத்தை மக்கள் தழுவியிருக்கிறார்கள், இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் அப்படி மாறியவர்களில் எல்லோருமே புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக மங்கோலிய இன (ஆசிய மக்களிடம்) இன வேறுபாடும் குறைவு. சிங்களர்களில் வேற்று மதத்தினர் இருக்கிறார்களா ? என்று எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் தெரியபடுத்துங்கள்.

மதநம்பிக்கை என்பதை அந்த மதங்களைச் சேர்ந்த சடங்குகளின் நம்பிக்கையாகத் தான் பார்க்கிறேன். இறை நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்க. மதமாற்றம் என்பது மன மாற்றம் என்று பலர் சொல்கின்றனர். அப்படி மாறுகிறவர்கள் முழுதும் அந்த மதத்தை (வேத புத்தகத்தைச் குறித்து சொல்லவில்லை) தெரிந்து கொண்டு மாறுகிறார்களா ? என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது முருகன் படங்களில் அதிகம் நடித்து பக்தி பழமாக இருந்த முன்னாள் நடிகர் ஏவிஎம் இராஜன் கிறிஸ்துவ மதத்தை தழுவியது. ஏனென்றால் இவர் வறுமையிலும் வாடியது போல தெரியவில்லை. அதே சமயத்தில் இந்துமத நம்பிக்கையில் இவருக்கு பிடிப்பு இல்லாமல் போனது ஏன் ? என்று தெரியவில்லை. அவர் பணத்துக்காக மாறினார் என்று எவரும் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது நண்பர் ஒருவர் (10 ஆண்டுகளுக்கு முன்) மாற்று மதத்தைப் பற்றி பேசும் போது 'அவுங்க சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும் போல இருக்கு ... அவங்களில் நிறைய பேரு பணக்காரனாக இருக்காங்க பாரேன்' - என்றார். இறை நம்பிக்கை உடையவர்கள் 'அந்த சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும்' என்று நம்புகிறார்கள் என நினைக்கிறேன் உதாரணத்துக்கு திருப்பதியில் கூடும் கூட்டத்தை குறிப்பிடலாம்.

பின்குறிப்பு : மதங்களை குறை சொல்லும் பின்னூட்டங்களை இடாதீர்கள். எல்லா மதத்திலும் குறைகள் இருக்கின்றன.

21 மே, 2007

காலில் விழுவதன் பெருமை மற்றும் மாயாவதி !

சொல்லும் செயலும் வேறு வேறாக இருக்கும் போது சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இதில் சிலருக்கு வருத்தம். இருந்தாலும் மனமாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அல்லது புரியாமல் பேசுகிறார்கள் ? சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சொல்வதற்கு தயக்கமில்லாமல் சொல்கிறேன்.

அது டிஸ்கி :)))

பதிவுக்கு வருவோம்.

நான்கு வருண அமைப்பில் சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்று சொல்லப்படுகிறது. மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளதாகவும் , மேலும் பகவத் கீதை போன்ற நூல்களில் 4 வருண அமைப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் படித்த வேத பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

சமூகத்தில் நிதர்சனமாக (நேரிடையாக) தெரிவது சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களின் வாழ்வியல் நிலை கேள்விக்கு உறியதாகவும், இழிந்தவர்கள் என்று மற்ற பிரிவினர்கள் ( மற்ற மூவர்ணத்தினர்) அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே பார்கின்றனர், நடத்துகின்றனர். இன்னும் நிலை அப்படியே இருக்கிறது என்பதை அண்மையில் திரு ரோசா வசந்த் அவர்கள் சுட்டிக்காட்டியெ எய்ம்ஸ் தீண்டாமை குறித்துப் படித்தவர்கள் ஒப்புக் கொள்ளும் விசயம்.

நண்பர் ஹரிகரன்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்று சொல்வது இழிவல்ல, உடம்பில் காலையே நாம் போற்றி வணங்குகிறோம், அதன்படியே பெரியவர்களையும் இறைவனையும் காலில் விழுந்து வணங்குகிறோம் காலில் இருந்து பிறந்ததால் இழிவு என்று சொல்வது புறந்தள்ளக் கூடியது என்று மிக விரிவாக எழுதி இருந்தார். பாராட்ட வேண்டிய இடுகை.

மிக சமீபத்தில் மாயாவதி அம்மையார் பதவி ஏற்றதும் அவர் காலில் பல்வேறு வகுப்பு எம்.எல்.ஏக்கள் காலில் விழுந்ததாகவும் சிலருக்கு அவ்வாறு செய்ய மனம் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எனக்கு புரியாதது இது,

சூத்திரர்கள் தாழ்ந்தவர் அல்ல ஏனென்றால் நாம் பகவானின் காலில் விழுந்து (சூத்திரனை) வணங்குகிறோம் என்கிறார்கள்.

மாயாவதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. மாயாவதியின் காலில் விழுவது தவாறா ?

பெரியார் சொன்ன சுயமரியாதைப் படி எவர் காலிலும் விழுவது தவறு... அதை சிலர் சில நேரங்களில் மட்டும் கடைபிடிப்பது முரண்பாடாக இருக்கிறது. மாயாவதியின் காலில் விழ தயங்கியவர்கள் வேறு எவருடைய காலிலும் விழாதவர்கள் அல்லர்.

தனிப்பட்ட முறையில் நானும் பெரியவர்களின் காலில் விழ தயங்கியதே இல்லை. எனது அன்புக்குரிய நண்பர் (விஎஸ்கே அவர்களின்) காலில் நான் விழுந்திருக்கிறேன். அவரும் தயக்கமின்றி இசைஞானியின் காலை தொட்டு வணங்கியதாக என்னிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதில் ஒரு குறிப்பிட்ட பின்னோட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

//முதல்வர் காலில் விழுந்த மந்திரிகள் கண்டனத்துக்குறியவர்கள். விழாதவர்கள் பாராட்டுக்குறியவர்கள். பொது வாழ்கையில், மக்கள் தொண்டாற்ற வரும் பிரதிநிதிகள் ஒரு தலைவனின் காலில் விழுந்தால், அவருடைய பிடிப்பு தலைவன் மட்டுமே என்று பொருள்படும். தனிப்பட்ட சந்திப்புகளின் போது காலில் விழுவது என்ன? பாத பூஜை செய்த நீரையே பருகிக் கொள்ளட்டும். இவர்களனைவரும் சேர்ந்து நாட்டிற்காக உழைக்கப் போவதாக எடுக்கும் உறுதிமொழிக்கு பங்கம் வராமல் நடந்து கொண்டாலே போதும்.//


இதை எழுதியவர் எவர் என்பது எனக்கு தெரியாது... அது ஒரு அனானி பின்னூட்டம். காலை நாம் தாழ்வாக நினைப்பதில்லை என்று நண்பர் ஹரிஹரன் அறிந்து வைத்திருப்பதை மாயாவதியின் காலில் விழத் தயங்கியவர்களுக்கும் அவர்கள் செய்தது சரியே என்று சொல்பவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்குமோ ?



முரண்பாடுகளை வைத்துக் கொண்டு சமத்துவம் பேசமுடியும் ? ஆனாலும் பலர் பேசுகிறார்கள். :)))

20 மே, 2007

இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !

தோற்றுவிக்கப்பட்ட என்பதைவிட 'தானாக தோன்றிய' என்பதில் மாற்றங்கள் என்பதும் இயற்கை. இது மதங்களுக்கு பொருத்தமான உண்மை. இந்துமதம் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்துள்ளதாக இந்துமதம் குறித்து ஆன்மிக அன்பர்கள் பல்வேறு மதத்தினர் இந்துமதம் பற்றி குறை கூறும் போது இந்துமத வளர்ச்சி பற்றி கூறி கூறிவருகின்றனர். அதில் உண்மையும் இருக்கிறது.

தோற்றுவிக்கப்பட்ட மதம் என்பதால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தோற்றுவிக்கப்பட்ட பிற மதங்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம் (புத்தமதம் இவற்றில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது). மதங்களில் வளர்ச்சி என்பது அதைப் பின்பற்றுவர்களின் எண்ணிக்கையைக் குறித்தது அல்ல. அது எந்த அளவுக்கு சமூக கட்டுக் கோப்புகளை, நாகரீக வளர்ச்சியையும் உள்வாங்கிக் கொண்டு மக்கள் வாழ்கைக்கு உறுதுணையாக மாறுகிறது என்பதைப் பொறுத்தது. நாகரீக வளர்சி என்று பார்க்கும் போது மதம் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் அதை கடைபிடிக்கும் மக்களால் நாகரீக வளர்சியில் மனம் உவந்து பங்கு பெறவோ, அதை பின்பற்றவோ முடியாமல் போய்விடும். இந்த கண்ணுக்கு தெரியாத காரணங்களால் மதங்களுக்கு இடையே சண்டைகள் எப்போதும் இருந்து வருகின்றன.

இந்து மத வளர்ச்சி என்று நான் அறிந்த வகையில் ... பாம்புகள் தன்னைப் புதுபித்துக் கொள்ள தோலை உறித்துக் கொண்டாலும் விசப்பற்களை மாற்றிக் கொள்ளவோ, கொடிய விஷத்தைத் ஒதுக்குவது தற்காப்புக்கு கேடு என்று நினைத்துக் கொள்வதால் பாம்புகளை ஒழிக்கும் காரணமாக அதுவே அமைந்துவிடுவதைப் போல என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் மாற்றங்கள் மேலும் வேண்டுமென்பதற்கான காரணங்கள் எப்போதும் இருப்பதும் இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள் தெளிந்து கொண்ட உண்மை. அதாவது ஆதிக்கங்களை ஒழிக்க வேண்டும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும், பழமை வாதங்களை ஒழிக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாக ஒழிக்கப்பட்டு வருவதும் தான். இந்து மதம் வளர்ச்சியில் செல்கிறது என்றால் இதுபோன்ற வளர்ச்சிதான் அது. இன்றைய இந்துமதம் இப்படியே இருக்கலாமா ? என்று கேட்டால் 90 விழுக்காட்டினர் இன்னும் மாறவேண்டியதற்கான காரணம் இருக்கிறது, பல்வேறு உரிமைக்காக போராட வேண்டியிருப்பதால் "ஆம்" என்றே சொல்லுவார்கள்.

ஒருகாலத்தில் இந்துமதம் பல பிரிவுகளை கொண்டதாக இருந்தது, ஒரு பிரிவினரின் நம்பிக்கைகளை அடுத்த பிரிவினர் சாடி வந்தனர். உதாரணத்துக்கு சைவம் - வைணவம் சண்டைகள். சைவமும் வைணவமும் ஆதிகாலத்தில் இருக்கவில்லை. சனாதன தருமம் என்ற பெயரில் இருந்த மதமே பின்னாளில் புத்த, சமண மதத்தால் பலத்த அடிவாங்கியபோது மத்வாச்சாரியார், ராமானுஜர், சங்கரர் போன்றவர்களால் உணரப்பட்டு மாற்றம் எதுவும் இன்றி அப்படியே இருந்தால் சனாதன தர்மம் வளரவாய்ப்பே இல்லை என்று மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்று உட் புகுத்தினர்.

இதில் குறிப்பிட்டு செல்ல வேண்டியது இருவருடைய சிறப்பான ஆன்மிகப் பணி. ஒன்று ஆதிசங்கரர் மற்றொருவர் ராமானுஜர். ஆதிசங்கரர் அனைத்து மாந்தர்களும் ஆத்மாக்களே என்றும் ஆத்மாக்கள் தன்னை உணர்ந்துவிட்டால் பரம்பிரம்மம் எனப்படும் மீளாத (பிறவியற்ற) உன்னத நிலையை அடைய முடியும் என்றும் அனைத்தும் ஒன்றே அதுவே பிரம்மம், பிரம்மத்தை அடைவதே ஆத்மாக்களின் குறிக்கோள் என்று அத்வைத தத்துவத்தை தோற்றுவித்தார். இந்த தத்துவம் பெளதீக உலகினரால், உணர்வாளர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது, பின்பற்ற முடியாது என்றும் உணர்ந்தே இருந்தார். எனவே அத்வைத தத்துவத்தை அவரால் வலுயுறுத்த அவர் முயல்வதற்கு உருவ வழிபாட்டுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காகவே அவர் உருவ வழிபாட்டை ஆதரித்து சங்கர மடங்களை இந்தியாவில் ஐந்து இடங்களில் ஏற்படுத்தினார் செளந்தர்ய லகரி போன்ற பக்தி நூல்களையும் எழுதினார். அதாவது மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத தத்துவம் இன்றளவிலும் உயரிய தத்துவம் என்றால் "ஆம்" என்றே ஒப்புக் கொள்வேன். ஆனால் ஆனால் இந்த தத்துவத்தை பரப்பவேண்டிய சங்கரமடாச்சாரிகளின் மக்களிடையே உள்ள உயர்வுதாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதைவிட அதை போற்றிவரும் நடவடிக்கைகளால் அத்வைதம் என்பது ஏட்டளவிலான தத்துவம் என்ற அளவில் இருக்கிறது என்பதும் உண்மை. கதாகலேசேபங்களில் கேட்பதற்கு ஏற்ற ஒரு தத்துவம் என்று தான் அதை வைத்து இருக்கிறார்கள். அந்த அளவில் மட்டும் மதாச்சாரியார்கள் அவற்றை பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக இராமனுஜரை சொல்ல வேண்டும் இவர் வேறு சில சிந்தனைகள் மூலம் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியும் என்று நம்பினார். அதாவது அன்றைய சமூகத்தில் காணப்பட்ட உயர் சாதி - தாழ்ந்த சாதி என்ற ஏற்றத் தாழ்வுகளின் மூலம் இருந்த சமூக சீர்கேடுகளை மாற்ற முயன்றார். இராமனுஜர் உயர்வு - தாழ்வுகளை அகற்ற வேண்டுமானல் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களை உயர்ந்தவர்களால் மாற்றினால் ஏற்றத்தாழ்வுகளை களைய முடியும் என்று நம்பினார். அதன்படி அவர் மீனவர்களை வைணவர்களாக தீட்சைக் கொடுத்து மாற்றினார் என்று சமய மற்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அன்றைய அகன்ற பாரதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் இராமனுஜர் நேரிடியாக அவர் வாழ்ந்த காலத்திலேயே வைணவர்கள் ஆக்குவது இயலாத காரியம் ஆகிவிட்டது.


விளைவு ? அவ்வாறு வைணவர்கள் ஆக மாறிய குறிப்பிட்ட அளவிலான முன்னாள் மீனவர்களுக்கும் தாங்கள் உயர்ந்தவர்கள் மனப்பாண்மைக்கு சென்றாலும் அவ்வாறு மாறதவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்த்து வந்ததால் ஏற்றத் தாழ்வுகள் அப்படியே இருந்துவந்தது. இன்றளவில் கூட இதற்கு உதாரணம் சொல்ல முடியும். அதாவது இந்துமதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறியவர்களே அந்த மதத்தில் பிறந்தவர்களைவிட இந்துமதத்தை அதிகமாகவே எதிர்பவர்கள் ஆக இருக்கின்றனர் என்பதை பார்க்கிறோம். ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கு இன்றைய மதமாற்றம் என்பது எந்த அளவு தவறோ அந்த அளவுக்கு தவறு என்பது போலவே தாழ்த்தப்பட்டவர்கள் என வைக்கப்பட்டவரை குறிப்பிட்ட அளவில் உயர்ந்தசாதிக்காரர்கள் ஆக்குவதும் தவறாகிப் போய்விட்டது. இது உயர்சாதிக்காரர்களின் எண்ணிக்கையை உயர்த்த மட்டுமே பயன்பட்டது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. திரும்பிப்பார்க்கும் போது ராமானுஜர் சீர்த்திருத்தங்களை செய்தார் என்று கண்டு கொள்ளவே வராலாறாக பார்க்கப்படுகிறது.

உயர்ந்தவர்கள் என்று சொல்லுபவர்களின் செயல்களை ஏற்றுக் கொள்ளும் போதும் அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை அவை என்னாளும் உயர்த்தாது. ஏற்றத் தாழ்வுகளை அகற்ற தாழ்வு மனப்பாண்மையையே அகற்றவேண்டும். தாங்கள் எந்தவிதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நினைக்கவேண்டும். இங்கே தான் அம்பேத்கர் மற்றும் நமது பெரியார் போன்றவர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டனர். இன்றைக்கும் கிராமங்களில் தீண்டாமைகள் இரட்டை டம்ளர் முறைகள் இருந்தாலும் நகரத்தில் அவ்வாறு செய்வதற்கு எவரும் துணிவதில்லை. இறைவழிப்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள் கோவிலுக்குள் விடப்படவேண்டும். கதவுகள் திறக்கப்படவேண்டும் என்று போராடியதால் இன்றைக்கு அவை சாத்தியம் ஆகியது.

நாத்திகர்கள் கடவுளை எதிர்ப்பதைவிட மூடநம்பிக்கையை எதிர்த்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். புத்தரும் கூட கடைசிவரை கடவுள் உண்டா ? இல்லையா ? என்ற கேள்விக்கு செல்லவே இல்லை... என்பதை புத்தரின் வாழ்கை வரலாறுகளை படித்தவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். நாத்திகர்களுக்கு எதிராக எல்லா ஆத்திகர்களும் அலறுவதில்லை. தங்களாகவே நினைத்துக்கொண்ட உயரிய நிலையை தாங்கள் இழந்துவிடுவோம் என்ற தேவையற்ற பயத்தின் காரணமாகவே சில அவ்வாறு அலறுகிறார்கள்.


இவர்கள் சமூக மாற்றத்தை என்றைக்குமே விரும்பாதவர்கள் அதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது 'வழிவழி வருவது, ஆகமம், பொதுவிதி, நடைமுறை' என்ற காரணங்களைக் கூறி முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். நாத்திகர்களை இறைமறுப்பாளர்களாக 'ஹைலட்' செய்வதன் மூலம் தங்கள் நிலைக்கு ஆதரவு தேட முயல்கின்றனர். இந்த முட்டுக்கட்டைகள் காலப்போக்கில் உளுத்துப் போகிவிடும் என்று இவர்கள் நினைப்பது இல்லை. அவ்வாறு தான் நடந்துவருகிறது. உயர்வு தாழ்வு தவறு ஆனால் சாதி தவற அல்ல என்ற முரண்பாடான கொள்கையை கொண்டிருக்கும் இவர்களால் சமூக மாற்றம் என்னாளும் ஏற்படாது. இந்துமதத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு இவர்கள் எப்பொழுதும் உறுதுணை புரியமாட்டார்கள். அவர்களின் பழமைவாதத்தினால் ஏற்றத்தாழ்வுகளின் நிலை என்பது காலத்தின் ஊடே வேறுமுகங்களில் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு மாறும் ஏற்றத்தாழ்வுகளின் ஒவ்வொருமுகமாக அழிப்பதற்கான அவசியம்... சமுக ஆர்வலர் மற்றும் ஆன்மிக அன்பர்களால் அவ்வப்போது கட்டாயம் என்று உணரப்பட்டு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்துமத்தில் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்ற அளவில் ஆன்மிக அன்பர்களால் ஆய்ந்து அறியப்பட்டு ஏற்றுக்கொண்டதைப் போலவே, அடியாத மாடு படியாது என்று பழமொழி போல் வேறு வழியின்றியும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

பின்குறிப்பு : எனது பதிவுகளை படித்துவிட்டு நான் சொல்லும் குறைகளில் பிராமனர்களைப் பொருத்திப் பார்த்துவிட்டு நான் 'பார்பன எதிரி' என்பது போல் பலர் கட்டு கட்டாக இட்டுக்கதைகள் சொல்கிறார்கள். உயர்ந்தசாதி மனப்பான்மை பல்வேறு சாதியினரிடமும் இருக்கிறது என்பது பலரும் அறிந்துள்ளதே. ஏற்றத்தாழ்வுகளை எவர் போற்றினாலும் அவை கண்டிக்கத் தக்கதே என்ற நிலையை கொண்டிருப்பவன் நான். ஆத்திகமோ நாத்திகமோ சமூக சீர்த்திருத்ததிற்கு எவை பாடுபட்டாலும் அவற்றைப் போற்றுவதில் தயக்கம் எனக்கு இல்லை. எனது பதிவில் ஆன்மிக அன்பர்களின் பதிவுகளின் இணைப்பு மட்டுமே இருக்கிறது, எனது நண்பர்களில் ஆத்திக நண்பர்களே மிகுந்தவர்கள், நான் விரும்பிப்படிப்வை பலரின் ஆன்மிகப் பக்கங்கள் என்பதும் பலருக்கு தெரியாமல் போனது என்குறை அல்ல. :)


எழுத்துப் பிழைகளை 'பொருட்படுத்திப்' படித்துக் கொள்ளுங்கள் ! :)))

18 மே, 2007

தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !

கோவில் தமிழகத்தில் இருக்கிறது, கோவில் தமிழர்கள் உதிரம் சிந்தி கட்டியது, கோவில் கட்டுவதற்கு உதவியதும் தமிழக மன்னர்கள். ஆனால் தமிழ் தெரியாத ஒரு கடவுளுக்கு ஏன் கோவில் கட்டினார்கள் என்பதே என் ஆதங்கம். ஆம் நான் சிதம்பர நடராஜனைத்தான் சொல்கிறேன். தென்நாடுடைய சிவனோ போற்றி என்று தெரியாமல் எழுதிவிட்டார்கள் போலும். தமிழ் தெரியாத ஒரு கடவுளுக்காக உழைப்பையும் பொருளையும் நம் முன்னோர்கள் வீனடித்திருக்கிறார்கள்.

சிவ பெருமான் உடுக்கை அடித்தும் பிறந்ததாம் தமிழும் வடமொழியும் என்று வடமொழி மறைய ஆரம்பித்தபோது கதை எழுதினார்கள். உடுக்கையின் இடது கைப்பக்கம் இருந்து தமிழ் வந்திருக்கும் போல இருக்கு அதனால் தான் தீண்டத்தகாத மொழி ஆக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். நாம் நினைப்பது போல் தமிழ்மக்கள் கட்டிக் கொடுத்த கோவிலா சிதம்பரம் ? இல்லை தேரேறி வந்தார்களாம் தீட்சிதர்கள் அப்போது அனுமார் சஞ்சீவி மலையை துக்கிவந்தது போல் சிதம்பரம் கோவிலையும் தூக்கிவந்து தமிழகம் விமோசனம் பெற வேண்டும் என்ற நன்மைக்காக கொண்டு வந்திருக்கிறார்கள். இது புரியாத தமிழ் கிறுக்கர்கள் தேவாரத்தை ஓதுவோம், திருவாசகத்தை பாடுவோம் என்று குரல் எழுப்பினால் தீட்சிதர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?

தமிழைத் தீண்டாத கோவில்களை தமிழர்கள் ஏன் தீண்டனும் புரிக்கணியுங்கள் வருமானம் குறைந்தால் வழிக்கு வருவார்கள்ள். அதை விடுத்து போராட்டம் என்ற பெயரில் போலிஸ் காரன் கையில் அடிவாங்கி மிதிபடுவதைவிட மெளன போராட்டமே வெற்றிதரும்.

இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து. இராமர் படத்தை போட்டு உடைத்தார்...பிள்ளையாரை உடைத்தார் என்று பெரியார் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்து 'பெரியார் நாத்திகர்' என்று அவரைப் பற்றி அக்கரையாக புகழ் பரப்பிய குஞ்சுகள்...இறைவனுக்காக பாடப்பட்ட தமிழ்பாடல்களைப் புறக்கணிப்பதற்கு காரணமாக சப்பைக் கட்டு கட்டுவது எந்தவகை ஆத்திகம் என்று தெரியவில்லை.

எனக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது என்றால் 'தமிழ்நாட்டுக் கோவில்களில் கூட பாடமுடியாத தேவரமும் திருவாசகமும் இருந்து என்ன பயன் ? இந்த வருட சொக்கனுக்கான சொக்கபானை எரிப்பின் போது தமிழ் இறை நூல்களை மொத்தமாக போட்டு எரித்துவிட்டு தர்பணம் பண்ணிட்டு திரும்பிப்பார்காமல் போங்கடா' ன்னு சொல்லவருது. மன்னிக்கவும் ! தோடுடைய செவியன் ... தமிழை விரும்பாத செவிடனாகிவிட்டாரே என்ற ஆதங்கம் தான் !


பின்குறிப்பு : தமிழை நீச பாசை என்று தூற்றுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லத் துணிபவர்கள் இந்த இட்டுகை குறித்து மாற்றுக் கருத்து சொல்லலாம். இது 27 ஆவது பின்னூட்டத்திற்கு பிறகு போடப்பட்ட பின்குறிப்பு. எனவே முதல் 27 பின்னூட்டங்கள் பின்குறிப்பிற்கு முன்பே போடப்பட்டது என சொல்லிக் கொள்கிறேன்

17 மே, 2007

பார'தீய' ஜெகதால கட்சி !

மக்கள் ஆட்சியை முடக்கிப் போடவேண்டும் என்பதற்கு ஒரு கட்சி இருக்கிறதென்றால் அது தேசிய(திற்கே) 'வாத' கட்சியான பாஜக தான். நாட்டு நலன் குறித்த பிரச்சனைகள் நதிகள் இணைப்பு, நீர் நிலை மேம்படுத்துதல் போன்ற ஆயிரம் அவசியமான பிரச்சனைகள் இருக்கின்ற போது இராமர் பிறந்த இடம் என்று கூறி சங்கர் பரிவார கும்பலுடன் சேர்ந்து பாபர் மசூதிக்கு வேட்டு வைத்தனர். அன்று முதல் டிசம்பர் 6 என்றாலே பயணம் செல்வோர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலைக்கு அது இந்து வெறி - இஸ்லாமிய வெறி என்ற அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

இந்துக்கள் என்று வெளியில் சொல்வதற்கே கூச்சப்பட வைக்கும் நிலைக்கு மதவாதத்தினால் மற்ற மதங்களை சேர்ந்தவர்களை எரித்தும் கொலை செய்தும் கொடுமைகள் இந்து வெறியர்களால் நடந்து வருகிறது. பிரச்சனைகளுக்கு இவர்களே மூலகாரணம். அதைத் தொடர்ந்து தான் இஸ்லாம் பெயரில் தீவிரவாதிகள் இந்தியாவை குறிவைத்து மும்பை மற்றும் பாராளுமன்ற வெடி குண்டு போன்ற கோர தாண்டவங்களை நடத்திக் காட்டினர்.

கடந்த நூற்றாண்டுகளில் எல்லா மதமும் சேர்ந்து ஒற்றுமையாகத்தான் இருந்தனர். அன்றையபரந்துவிரிந்த இஸ்லாமிய ஆட்சியில் கூட இந்து முஸ்லிம் மோதல்கள் இன்றைக்கு நடக்கின்ற அளவுக்கு நடந்ததாக தெரியவில்லை. இந்துக்கள் பட்டியலில் தலித்துக்களை இணைத்தைத் தவிர மதவாத சக்திகள் இந்துமதம் என்ற பெயரில் தலித்துக்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மதப்பற்றைவிட மதவெறியையே அதிகம் வளர்த்து இருக்கின்றனர்.

இன்றைக்கு இராமர் பாலம் என்ற பெயரில் ஒரு ந(ல்)லத்திட்டத்துக்கு பெரிய ராமமாக போட பாராளுமன்றத்தில் தினம் அமளி ... மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் கண்டங்கள் பிரிந்ததற்கு அடையாளமாகவே சிலபகுதிகளின் தொடர்ச்சிகள் அதை காட்டுகிறது. அதை வெட்டி எடுத்துவிட்டுதான் ஜலசந்திகள் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படுத்தி கடலில் சுற்றிவரும் தூரத்தைக் குறைத்து வியாபாரத்தை பெருக்கி இருக்கின்றன. இலங்கையும் இந்தியாவில் இணைந்த பகுதியாக இருந்து பிரிந்ததற்கு அடையாளமாக கடற்பாறை தொடர்சி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கிறது. கற்பனைக்கு பஞ்சமில்லாத 'இழிகாச'வியாதிகள் நாசா புகைப்படத்தைக் காட்டி இராமர் பாலம் என்று சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்வதே இவர்கள் கொள்கையாக இருக்கிறது.

அது இராமர் பாலம் என்று நம்பினால் அதில் ஒரு பகுதியை உடைத்து எடுத்துச் சென்று இராமர் பாதம் என்று சொல்லி பூஜை செய்வதைப் போல் செய்யலாமே. பூஜை எதுவுமே நடத்த முடியாத ஒருபாலத்தைக் காட்டி மாராடிப்பதால் நாட்டுக்கோ, இந்துக்களுக்கோ என்ன பயன் ? நல்லாட்ட்சி நடத்தாவிட்டால் அரசை அகற்றும் ஜனாதிபதி அதிகாரம் போல் பாராளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகளின் எம்.பி பதவியை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படவேண்டும்.

15 மே, 2007

திராவிட அரசியல் எதிர்ப்பு ஏன் ?

50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் திமுகவின் ஆட்சியும் அதில் பிரிந்துவந்த அதிமுக ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்துவந்திருக்கிறது. ஒரு காலத்தில் தனிப்பெரும்பாண்மை பெற்று இருந்த திமுக கழகம் உடைந்த பிறகும் அதன் கிளைக்கட்சி ஆன அதிமுகவும் அல்லாத சமயங்களில் திமுகவும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றனர். திராவிட கட்சிகள் உடைந்தாலும் திராவிட கட்சிகளுக்கே மாநில அளவில் மக்கள் அங்கீகாரம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று வளர்சியாகவும் கிளைகளாகவும் தான் திராவிடக் கட்சிகள் ஆகி இருக்கின்றனவே அன்றி திராவிட இயக்கங்கள் தமிழ் மண்ணில் மறைந்து போய்விடவில்லை. கொள்கை அளவில் பெரிய மாற்றங்கள் இருந்தாலும் திராவிட என்ற சொல்லை எடுத்துவிட்டு கட்சி நடத்த எம்ஜிஆரும் துணியவில்லை. நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்திற்குக் கூட தன் கட்சிப் பெயரில் திராவிட என்று சொல் அவசியம் என்றே உணர்ந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டு இருந்த மக்கள் தலித் என்ற பெயரில் ஒன்று இணைந்தது போலாவே திராவிட என்ற சொல் தமிழக அனைத்து மக்களையும் ஒன்று இணைக்கும் ஒரு சொல்லாகவே இருந்து வருகிறது

************

சில சமரசங்களையும் அரசியல் லாப நோக்கதிற்கு சில வளைவு சுழிவுகளைக் கொண்டும் திமுக - பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயத்தால் ஒருகாலத்தில் ஏற்பட்டு இருந்தாலும் திராவிட உணர்வு கொண்ட கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் திமுகவும் அதன் தலைவரும் பின்வாங்கியதில்லை என்பதை நடவடிக்கையை வைத்து அறியமுடியாவிட்டாலும் திமுக மற்றும் கருணாநிதிக்கு எதிராக எழுப்பப்படும் அவதூறுகள், விமர்சனங்கள் போன்றவற்றின் மூலம் திமுக மற்றும் கருணாநிதி திராவிட உணர்வாளர்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

திமுக ஆட்சி நடப்பதால் நாடு சுடுகாடு ஆகிவிட்டது, அமைதி பூங்காவான தமிழகம் கோட்டான்கள் குடியிருக்கும் இடமாக ஆகிவிட்டன என்ற கூச்சல் அண்ணா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சொல்லப்படும் குற்றச் சாட்டுகள் ஆகும். திமுக ஒரு மோசமான கட்சி அதனால் தமிழகத்துக்கு விமோசனமே இல்லை என்று பத்தி பத்தியாக எழுதினார்கள். ஆனால் அந்த கட்சியில் முன்பு எம்ஜிஆர் பிரிந்து வந்த போது எம்ஜிஆர் என்ற ஒரு நல்லவரை கருணாநிதி வளரவிடாமல் அமுக்கப் பார்த்தார் என்ற குற்றச் சாட்டை அவர்கள் வெளியேறியதும் சொன்னார்கள். அதுநாள் வரை எம்ஜிஆர் என்பவர் திமுக காரர், திமுக என்பது ஒழுங்கீன கட்சி, மக்கள் விரோத கட்சி அவர்களால் நன்மை இல்லை என்பதே பேச்சாக இருந்தது. எம்ஜிஆர் வெளியேறியதும் அவர் உத்தமராக தெரிந்தார். அது போலவே வைகோ மற்றும் பலரும் வெளியேறும் போதும் கட்டம் கட்டப்படும் போது அவர்களை உத்தமர்கள் ஆக்கிப் பார்கின்றனர். அவர்கள் வெளியே வந்ததும் தான் அவர்கள் உத்தமர்கள் என்று சொல்ல முன்வருகிறார்கள்.

இதே போல நேற்றுவரை தமிழக மத்திய அமைச்சர்களால் தமிழகம் பயன்பெறவில்லை, திமுக ஆட்சி வேஸ்ட், கருணாநிதி ஒரு திருடன், தனது பேரனை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் என்றெல்லாம் பொறிந்-தார்கள். இன்றைக்கு தயாநிதிமாறன் கட்டம் கட்டப்பட்டதும் திடீர் ஞானோதயமாக திமுக எதிர்பாளர்களுக்கு தயாநிதிமாறன் சுறுசுறுப்பாக செயல்பட்டதும் அவரால் தமிழகத்தூக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு கம்பெணிகள் பற்றிய எண்ணிக்கைகளும் தெரியவருகிறது. தயாநிதியை அறிவாளியாக பார்க்கின்றனர். இதே தயாநிதி அன்று மாநகராட்சி தேர்தலில் தேர்தல் அதிகாரியை மிரட்டினார், அவர் ஒரு ரவுடி என்றும் சொல்லி வந்தனர். வைகோவுடன் ஒண்டிக்கு ஒண்டி வரியான்னு கேட்கிறவனெல்லாம் மத்திய அமைச்சராக இருக்கானாம் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தது.

ஆக திமுக என்ற கட்சிக்குள் இருந்து ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது இவர்களுக்கு தெரியாத கண், அவர்கள் வெளியேறும் போதும், கட்டம் கட்டப்படும் போதும் தெரிவது அரசியல் தாண்டிய அதிசியமாக இருக்கிறது. இவர்கள் எதிர்ப்பது திமுக என்ற திராவிட கட்சியையா ? அல்லது கருணாநிதி என்னும் தனிமனிதனையா ? ஒன்றும் தெரியாத தயாநிதியை உருவாக்கியது போல் 10 தயாநிதிகளை கருணாநிதியால் உருவாக்க முடியாதா ?
இவர்கள் எதிர்ப்பு என்ற பெயரில் நடத்துவது வெற்று ... அரசியல் உள்நோக்கம் கொண்டது.


பின்குறிப்பு : திமுகவின் குடும்ப சண்டைபற்றியோ, 3 அப்பாவிகள் கொல்லப்பட்டது பற்றி ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தாகிவிட்டது. இங்கு பேசும் விடயம் முன்னாள் திமுகவினர் பின்னால் எப்படி உத்தமர்கள் ஆகிறார்கள் என்பது பற்றிதான் பதிவின் கருத்து. இதுநாள்வரை திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டவர்களுக்கு திடிர் புகழ்மாலை போடப்படும் புரியாத புதிர்பற்றிதான் பதிவு கேட்கிறது.

வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?

சிவாஜி பட ஸ்டில்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு ! தலைப்புக்கு பதில் சொல்லுங்க !



கரடி வேசத்திற்கு யார் பொருத்தம் ? விஜய டி ராஜேந்தரை ஓரங்கட்ட முயல்கிறார் சூப்பர் ஸ்டார். கெட்டப்புங்கிற பெயரில் ... பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி !
:)))

14 மே, 2007

சன் டிவிக்கு பொன்னான வாய்ப்பு !

இதுநாள் வரை சன் டிவி அறிவிக்கப்படாத திமுக ஆதரவு தொலைகாட்சியாகவே இருந்து வந்தது. நடந்து முடிந்த கருத்து கணிப்பும் அதைத் தொடர்ந்த துயர சம்பவங்களும் சொந்த செலவில் சூனியம். ஊழியர்களை பலி கொடுத்துக் கொண்டதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் பதவியையும் திமுக பறித்ததைத் தொடர்ந்து சன் டிவி இனியாவது கட்சி வேறு தொலைக்காட்சி வேறு என்ற நிலையை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சன் டிவி திமுக தொலைக்காட்சி என்ற முத்திரையை அகற்றிக் கொள்ள வேண்டும்.

ஆதிக்க சக்திகள் லாபம் கொழிக்கும் தொழிலான பத்திரிக்கை துறையை தங்களுக்கு மட்டும் உரித்தான பரம்பரை தொழில் போல் செய்தது மட்டுமின்றி அவர்கள் தருவதுதான் செய்தி என்று சமுக அமைப்பின் தலையெழுத்தை தங்கள் செய்திகளின் மூலம் நிர்ணயம் செய்து வந்தனர். இந்த நிலைமையில் இருந்து வெற்றிகரமாக அதே தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர் தினத்தந்தி மற்றும் மறைந்த கே.பி கந்தசாமியின் தினகரன் பத்திரிக்கைகள். இன்றைய நாளில் மீடியா எனப்படும் தகவல் தொடர்பு துறையில் ஆதிக்க சக்திகளை ஓரளவுக்கு பின்னுக்கு தள்ளி சன் தொலைக்காட்சி மற்றும் பல செய்தி ஊடகங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன.

இந்நிலையில் ஆதிக்க சக்திகள் அல்லாத பிறர் நடத்தும் மீடிய நிறுவனங்கள் தங்கள் மீதான கட்சி சார்பு முத்திரையை விலக்கிக் கொண்டால் மேலும் சிறப்பானதொரு வளர்சியை பெறமுடியும். சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழுக்கு இந்த வேளை ஒரு பொன்னான வேளை தன் மிதான திமுக முத்திரையை அகற்றிக் கொண்டு நடுநிலை நிறுவனங்களாக வளருவதற்கு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

13 மே, 2007

சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !

ஆழமான தூக்கம்... தூக்கத்தில் கனவு ... ஆழமான தூக்கத்தில் கனவு வருமா ? எனக்கு வந்தது ... தங்க அணிகலன்கள் அணிந்த மனிதர்கள் ... இல்லை இல்லை ... அரசர்கள் ... ம் அதுவும் இல்லை ஒருவர் கையில் வேல் இருந்தது ... ஒருவர் பாம்பை அணிந்திருந்தார்.... ஒருவர் கையில் சக்கரம் ... ஆ புரிந்துவிட்டது ... நான் மேல் உலகத்திற்கு வந்திருக்கின்றேன். நான் பார்த்தது முருகன், பரமசிவன் மற்றும் விஷ்ணு ... ஆளுக்கு இரு மனைவிகளுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். சிலர் ஆடிக் கொண்டிருந்தனர் ... வாத்திய இசைகள் ஒலித்துக் கொண்டு இருந்தனர்.

இவங்கெளெல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை போல இருக்கிறது அங்கு நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார் இந்திரன். பிரம்மா சரஸ்வதி தம்பதிகள் சகிதமாக ஆடல்பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தனர். நம்ம நித்ய ரிசி நாரதரும் அழகிகளின் ஆடல் பாடல்களைப் பார்த்து மெய்மறந்து நின்றார். இசை புரிந்தது ... பாடல் ஓரிரு சொற்கள் புரிந்தன ... முழுவதுமாக புரியவில்லை. எனக்கு பக்கத்தில் என்னைப் போல நின்ற ஒரு மானிடரிடம் விசாரித்தேன்... என்ன சாமி பாடுறாங்க ... ஒன்னும் புரியல ... ஓ அதுவா 'இது தேவ லோகம்....இங்கு பேசுவது, பாடுவது எல்லாமே தேவ பாசை ... நேக்கு புரியறது என்றார்.
எங்க ஊர் முருகன் இருக்காரே அவரும் புரியாத பாசைத்தான் பேசுகிறார் என்றேன்... ஆமாம் இங்கே எல்லோரும் ஒரே பாசைதான் பேசுவார்கள்...'நீங்க சொல்றவர் எப்பவோ தேவை பாசைக்கு மாறிட்டார்' என்றார்.


அதன் பிறகு தலையில் கொம்பு வைத்தவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்றார்... அதே புரியாத பாசையில் சித்திர குப்தனுடன் எமதர்மராஜன் என்னைப் பற்றி கணக்கு வழக்குகளை விசாரித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை என்னைக் கைக் காட்டி பேசுவதன் மூலம் அறிந்து கொண்டேன். அங்கேயும் கூடவே அழைத்துவரப்பட்ட மானிடரிடம் கேட்டேன் ... என்ன சாமி சொல்றாங்கே இவிங்க ? '' இது எமதர்ம சபை...உன்னைபற்றி விசாரித்ததில் ... நீ நல்லவன் என்று தெரிந்ததாம் ... அதனால் உன்னை சொர்கம் அழைத்துச் செல்லப் போகிறார்களாம்... ஆனாலும் ஒரு சிக்கல் ! பயந்தபடி கேட்டேன் 'என்ன சாமி சிக்கல் ?' சொன்னார் எல்லாம் சரியாக இருக்கு 'நீ சொர்கம் போனால் அங்கு இருப்பவர்கள் உன்னிடம் பேசவோ, நீ அவர்களிடம் பேசவோ முடியாது அல்லவா ?'

'ம்' - சொல்லுங்க

'அதனால் உனக்கு தேவ பாசை தெரியலங்கிறதால...'

'!????'
'பூமிக்கு உன்னை திரும்பவும் அனுப்பி.... நீயாகவே தேவ பாசை கற்றவுடன் பிறகு உன்னை அழைத்துவந்து சொர்கத்தில் விடுவார்களாம்...இல்லாவிடில் நீ மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பாயாம்... எப்பொழுது உனக்கு தேவ பாசை தெரிகிறதோ அப்போது தான் உனக்கு இங்கே சொர்கம்'

'அடப்பாவமே ...கைக்கு எட்டினது வாயிக்கு எட்டாமல் ஆச்சே'

நினைத்துக் கொண்டிருக்கும் போதே...முதுகு தண்டு சில்லிட்டது...உடலெல்லாம் குளிர்

விழித்துக் கொண்டேன்... நான் கண்டது கனவா ?... பக்கத்தில் படுத்திருந்த குழந்தை படுக்கையை நினைத்த ஈரம் ... என் உடையை நினைத்து ... உடம்பு நினைந்து இருந்தது

ஆனாலும் கனவின் தாக்கம் நீங்கவில்லை...!

நாளைக்கே நூலகத்திற்கு சென்று அந்த புத்தகத்தை எடுக்க வேண்டும்.

'30 நாட்களில் சமஸ்கிரதம் அறிந்து கொள்ளுங்கள்' - பாலாஜி பப்ளிகேசன்.

:)))))))

11 மே, 2007

'ஆ' ன்னா 'உ' ன்னா ஆட்சியைக் கலைக்கனும் !

மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி ... ஓராண்டுகள் உருண்டோடிவிட்டது ... 50 ஆண்டுகால சட்டமன்ற பணிக்காக கலைஞர் பொன்விழா கொண்டாடுகிறார். கலைஞர் தலைமையில் ஒவ்வொரு முறை அரசு அமையும் போதும் கலைஞர் எதிர்பாளர்களுக்கு கண்களை உறுத்துகிறது.

தமிழக மக்கள் என்னமோ அழகிரி நல்லவர் என்ற மாயையில் சிக்கி திமுகவிற்கு வாக்கு அளித்தது அமோக வெற்றி பெறச் செய்ததது போலவும் அழகிரிக்கு தற்பொழுது பெயர் கெட்டுவிட்டதால் திமுக அரசு கலைக்கப் படவேண்டும் என்று மக்கள் கூப்பாடு போடுவது போலவும் சிலர் மனவியாதி காரணமாக புலம்பி வருகின்றனர். இதே போன்று ஆட்சி கலைப்பு கோசம் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தல் வன்முறை நடந்த போதும் எழுந்து அடங்கியது.

இவர்கள் கடந்த கால வரலாறுகளை எல்லோருமே மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பினாத்துகின்றனர். அதே கரத்தே தியாகராஜன் குழுவினர்தான் அதே போல ஒரு அசிங்கத்தை அம்மா ஆட்சியின் போதும் அரங்கேற்றினார்கள் அப்பொழுதெல்லாம் ஆட்சிக் கலைப்பு கோஷ்டியினர் எங்கு ஓடி ஒழிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருக்கிறது என்று சென்னாரெட்டி சுப்பரமணிய சாமிக்கு ஜெ- க்கு எதிராக ப்ளசண்ட் டே வழக்கு தொடுக்க அனுமதி அளித்த போது 'ஆட்சி கலைப்பு' ஆட்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அம்மா மீது உள்ள பக்தியின் காரணமாகவா அல்லது பயம் காரணமாகவா இவர்கள் 'ஆட்சி கலைப்பு' கோசத்தை மறந்து போனார்கள் என்று தெரியவில்லை.

திமுக அரசு மக்கள் ஆட்சியில் நம்பிக்கை வைத்து கடந்த காலங்களில் குறிப்பாக ஜெ - அரசுக்கு எதிராக திமுக அரசு மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் 'ஆட்சி கலைப்பு' கோசத்தை எழுப்பியதே இல்லை. ஆட்சிக் கலைப்பு என்பது ஆடை கலைப்பு போல் அவ்வளவு சுலபமா ? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க விரும்பி வந்து வாக்களிப்பதே அதியம் ஆகிவிட்ட மட்டுமின்றி அரசுக்கு மக்கள் வரி பண வீன்விரயமும் தேர்தலால் ஏற்படும் என்பது இவர்களுக்கு தெரியாதா ?

கலைஞர் அரசுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாது என்று நன்கு தெரியும், ஒரு ஆண்டில் குற்றம் சொல்லும் அளவுக்கு தமிழக அரசு மோசமாக எதுவும் செய்துவிடவில்லை. எதாவது காரணம் வேண்டுமென்றே அழகிரி - தினகரன் செய்தியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கும் முடிச்சு போட்டு எதாவது நடக்காத என்ற அற்ப ஆசையில் புலம்பி வருகிறார்கள். 'ஆட்சி கலைப்பு' என்பதற்கு மதிப்பு என்ன என்றால் அது ஒரு ரெடிமேட் கோஷம் அவ்வளவே. மக்கள் ஆட்சியின் மதிப்பு தெரியாமல் அவ்வப்போது வயிற்றுவலி எடுப்பவர்கள் தேடும் ஒரு அருமருந்து. எந்த ஆட்சியுமே விருப்பப்பட்டு அங்கேயே இருக்க முடியாது என்று இவர்களுக்கு தெரியாதது பரிதாபம்.

அழகிரி - தினகரன் - சன் டிவி நடத்துவது குடும்ப யுத்தம். அதற்கும் திமுக ஆட்சிக்கு முடிச்சுப் போடுபவர்கள் திரும்பவும் 2 ஆவது பத்தியை படியுங்கள்.

10 மே, 2007

மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி

தினகரன்-சன் டிவி மீதான தாக்குதல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு-கருணாநிதி

மே 10, 2007

சென்னை: மதுரையில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, 3 ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறை சம்பவம் எதிரொலித்தது. அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான் கொண்டு வந்தனர்.

அதிமுக சார்பில் பேசிய ஜெயக்குமார், சம்பவம் நடந்தபோது காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது.

கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் அதிகாரப் போட்டி காரணமாகவே வன்முறை நடந்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே சிண்டு முடியும் வேலையில், தினகரன் நாளிதழ் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியபோது, அதை அதிமுக தனது அறிவு முதிர்ச்சியால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.

அதேபோல பாமகவை அவமானப்படுத்தும் வகையில், நடத்திய கருத்துக் கணிப்பால் அக்கட்சி போராட்டம் நடத்தியது.

இப்போது திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்திய கருத்துக் கணிப்பு, வாரிசு அரசியலையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தினகரன் நடத்திய தேவையில்லாத, விஷமத்தனமான கருத்துக் கணிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. அதிமுகவினர் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்ம் நடத்தினால் கைது செய்யும் காவல்துறை, மதுரையில் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. கருணாநிதியின் குடும்பத்தினர் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும், சாதாரண பாமர மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்.

எனவே காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் செய்யத் தவறினால் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரையில் தினகரன் அலுவலகம் மீது நடந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துக் கணிப்பால் பிரச்சினை வரும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் தினகரன் நிர்வாகத்துடன் போனிலும், நேரில் ஆட்களை அனுப்பியும் இதை வெளியிட வேண்டாம் என்றேன். இது அவசியம் இல்லாத கருத்துக் கணிப்பு. ஆனால் எனது பேச்சைக் கேட்காமல் வெளியிட்டு விட்டனர் என்றார் கருணாநிதி.

செய்தி
தட்ஸ் தமிழ்

9 மே, 2007

சன் டிவியின் கழுத்து அறுப்பு :

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கேலிக் கூத்து நடத்திய சன் டிவி குழுமம் அதற்கான நற்பலனை அனுபவித்து இருக்கிறது. மதுரை தினகரனின் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை தூண்டிவிட்டதாக பகிரங்கமாக முக அழகிரி மீது குற்றம் சுமத்தி இருக்கிறது சன் டிவி. இன்றுதான் முதன்முதலாக ...தற்பொழுது அழகிரியைப் பற்றி சன் செய்தியில் சன் டிவி குற்றப் பத்திரிக்கை வாசித்து வருகிறது.

அதாவது த.கி கொலையில் அழகிரியின் பங்கு, மதுரை இட்லி கடையை உடைத்தது, மேலும் பேருந்துகளைக் கொளுத்தியது குறித்து தற்பொழுது தான் சன் டிவி திருவாய் மலர்ந்திருக்கிறது. வாரிசு அரசியல் கருத்துக் கணிப்பில் சிலர் தங்கள் வாரிசுகள் மூவரை இழந்தது தான் சன் டிவியின் கைங்கரியம்.

இதுபோன்ற சர்சைகளைக் (கருத்துக் கணிப்பு ?) கிளப்பி வன்முறை நடப்பதற்கு காரணமான சன் டிவி நிருவனத்தின் மீதும், தூண்டிவிட்டவராக சன் டிவியால் சொல்லப் படுகின்ற அழகிரிக்கும் கடுமையான தண்டனைகளை பெற்று தர அரசு முன்வரவேண்டும்.

வழக்கு முடியும் வரை சன் டிவியை தடை செய்ய அரசு வழக்கு தொடுக்க வேண்டும். ரவுடிகள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் விரோத தொலைக்காட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மதுரை எரிந்துக் கொண்டிருக்கும் போது பீடி தொழிலாளர்களின் போராட்டம் பற்றி எதுவும் நடக்காதது போல சட்டமன்றத்தில் முதல்வர் பேசுகிறார்.

8 மே, 2007

தாத்தா சொத்து பேரனுக்கா ?

சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழும் இணைந்து நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து கணிப்பு ஏ.சி நெல்சன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது நாளை வெளியிடப் படுகிறது.

ஒரிஜினல் கருத்து கணிப்பு கேள்வி : கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ?

செய்தி : இரவு 8 மணி தமிழ் செய்தி - சன் டிவி

5 மே, 2007

நான் 'கண்ட' பெரியார் !

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன், குளிக்காதவன் என்ற சொற்களில் ஒருவருடைய கருத்துக்களை சிதைக்க முனைபவர்களை புறம் தள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது பின்பு புரிந்தது.

பெரியாரின் தந்தையின் வணிக மண்டியில் ஆரம்பித்து படம் பகுத்தறிவு வெடித்துணுக்குகளுடன் தொடர்கிறது. பின்னர் அவரது தங்கைக்கு நடைபெறும் 'பால்ய விவாகமும்' அவர் தங்கை வயதுக்கு வரும் முன்னே கைம்பெண் ஆவதையும், அதன் பிறகு தங்கைக்கு வேறு ஒரு திருமணம் அவரே ஏற்பாடு செய்து நடத்தி வைப்பதையும் காட்டினார்கள். பின்பு முறைபெண் நாகம்மையுடான காதல்... பெற்றோர் எதிர்ப்பு, நாகம்மையின் தற்கொலை முயற்சி அதன் பிறகு பெரியார் - நாகம்மை திருமணம்... தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க கோவில் வாசலில் அவருக்காக காவல் இருப்பது, பின்பு கோவிலுக்குள் நாகம்மையை சில ரவுடிகள் துரத்த... நாகம்மை வெளியில் ஓடிவருகிறார். .. 'ஆண்டவன் ஆயுதங்களுடன் கோவில் முழுதும் நிறைந்திருந்தாலும் ஆபத்துக்கு உதவுபவன் மனிதன் தான்' என்று பெரியார் நாகம்மையிடம் 'நச்'சென்று சொல்லுவார்.

விரத உணவில் கோழி காலை மறைத்து வைத்து பெரியார் அவருடைய அம்மாவை ஏமாற்றுவது போன்றவை சில நகைச்சுவை காட்சிகள். தலைமறைவாக இருக்கும் ஒரு சாமியாரின் தம்பியை நீதிமன்ற நோட்டீஸ் கொடுப்பதற்காக தபேதாருக்கு பெரியார் பிடித்துக்கொடுக்க, உயர்சாதிக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். அவர்கள் முறையிட்டதும் பெரியாரின் தந்தை பெரியாரை செருப்பால் அடித்து வீட்டைவிட்டு வெளியேறும் படி சொல்கிறார். அதன் பிறகு பெரியாரின் பயணம் காசி நோக்கிச் செல்கிறது. அங்கு இரண்டு பிராமணர்களுடன் சேர்ந்து கதா கலேட்சேபம் செய்கிறார் ( இராமர் அணிலுக்கு கோடு போட்ட பாடல்) ஒரு நாள் பசிக் கொடுமையில் காசியில் இருக்கும் செட்டியார் சத்திரத்திக்குள் மூவரும் நுழைகின்றனர். அங்கே பிராமணர்களுக்குத் தான் உணவு என்றதும் பசிக் கொடுமையால் எச்சிலையில் எஞ்சியதை தின்கிறார். பின்பு ஒரு சாமியாருக்கு தேவையான பொருள்களைக் கொண்டுவரும் எடுபிடியாக சேருகிறார். அங்கிருந்த பெரிய சாமியாரின் காம லீலைகளை அறிந்து அங்கிருந்து ஊருக்கு திரும்புகிறார்.

அவருரைய தந்தையாரின் மறைவுக்குப் பின்பு பல்வேறு பொறுப்புகள் அவருக்கு வந்து சேர... அதுவரை நடிப்பது சத்யராஜ் என்று தெரிந்தது... அதன் பிறகு கண்ணாடி, மீசை என வயதிற்குறிய தோற்றம் ஏற... சத்தியராஜின் உருவம் மறைய பெரியார் தோன்ற ஆரம்பிக்கிறார். இடையிடையே ராஜாஜி அவர்களுடன் ஆழமான நட்பு, காந்திஜியுடன் உரையாடல் என செல்கிறது... ராஜாஜியின் வேண்டுகோளுக்கினங்கி... இட ஒதுக்கீடு கோரிக்கையுடன்... காங்கிரசில் பெரியார் சேர்ந்ததும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் உரமாகிறார். கதர் புடவையை தன் அம்மாவை உடுத்த வைக்க பெரியார் சொல்லும் சாமியார் காரணம், 'ஸ்ரீலஸ்ரீ காந்திமகான் சொல்லி இருக்கிறார்' என்று காந்திஜி சொன்னதை பெரிய சாமியார் சொல்லியதாக தனது தாயிடம் சொல்லி அவருடைய ஒப்புமை பெற வைப்பதும் நகைச் சுவை வெடி.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தும், அங்கு எதிர்ப்பு கிளம்ப... அங்குள்ள நம்புதிரிகள் சத்ரூசம்ஹாரம் என்ற பெயரில் பெரியார் அழிவதற்கு நடத்துகின்றனர். திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போகிறார். உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார். மன்னரின் மறைவை ஒட்டி எல்லோரும் விடுதலை பெறவே, வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் வெற்றி பெருகிறது . சிறைசென்று சாதித்து வைக்கம் வீரராக திரும்புகிறார். பின்பு காஞ்சி காங்கிரஸ் மாநாட்டில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் தன் கோரிக்கையை மீண்டும் வலியுருத்த ராஜாஜியும், திலகரும் எதிர்க்க... காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். பின்பு ரஷ்யா சென்று அங்கு மார்கசியத்தின் கொள்கைகள் பிடித்துப் போகவே, மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மார்கசிய கொள்கைகளை ஆதரிக்கிறார். ஒரு நாள் நாகம்மை மறைந்துவிட ... நாகம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். தேவதாசி முறையை தடுத்து நிறுத்துவது... தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர்பிடிக்கும் உரிமை, எழுத்து சீர்திருத்தம் என போராட்டமாகவே செல்கிறது நிகழ்வுகள்.

இடையில் மணியம்மை பெரியாரின் கொள்கைப் பித்தினால் அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க ... ஒரு நாள் பெரியாருக்கும் - மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா வழி உதயமாகிறது. காமராஜருக்கு ஆலோசனை சொல்லி அவரை காங்கிரசுக்கு தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அண்ணா - பெரியாரின் உணர்சி மயமான சந்திப்பு, மணியம்மையை மேடைகளில் விமர்சித்ததற்காக அண்ணா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் மிகச் சிறப்பானவை. அனைவரும் கோவிலில் நுழைந்து அர்சனை செய்யும் உரிமை தன் காலத்தில் நிகழவில்லை ... இது தன் நெஞ்சில் குத்திய முள் என்று சொல்லும் போது உண்மையில் நெஞ்சில் முள்தைக்க மாரடைப்பில் இறக்கிறார். காந்திஜியை தேச தந்தையாக ஏற்று எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை அடக்கம் செய்ததைக் காட்டி எதிர்ப்புகளை சமாளித்து பெரியாருக்கு கருணாநிதி அரசு, அரசு மரியாதையில் அடக்கம் நடைபெறுகிறது.



இந்த இடத்தில் பெரியார் மறைவை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மை காட்சிகளை காட்டினார்கள். படம் முடிந்துவிட்டதா ? என்று நினைக்க வைத்துவிட்டது.

பெரியாரே தமிழக கட்சிகள் (பிஜேபி தவிர) அனைத்திற்கும் சொந்தமானவராக இருக்கிறார். என்பதை படம் சொல்லாமல் சொல்லி இருந்தது. உண்மை தமிழர்கள் தந்தை பெரியார் என்று அழைப்பது ஏன் என்பதை உணரவைத்தது.

படத்தில் எம்ஜிஆருக்கு 1 காட்சி, கலைஞருக்கு 2 காட்சி, வீரமணிக்கு 2 காட்சி என ரொம்பவே சுருக்கி இருந்தார்கள். பெரியாரே படம் முழுவது நிறைந்து இருந்தார்... இன்றைய தலைவர்கள் படத்தை ஆக்கிரமிக்காததற்கு இயக்குனருக்கு பாராட்டுச் சொல்லவேண்டும். இடையில் பெரியார் - அம்பேத்கார் சந்திப்பு. அம்பேத்கார் பெரியாரை புத்தமததை தழுவ சொன்னதும்... இந்து மதத்தில் இருப்பதால் என்னால் அதில் களையெடுக்க முடிகிறது. ..என்று பளிச் பதில் சொல்வார்.

படத்தில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகுதியாகவே இருக்கிறது.

மதன் பாப் (மார்வாடி?), ஒய்ஜி மகேந்திரன், சொர்ணமால்யா, மற்றும் பல நிஜ பிராமணர்கள் நடித்து இருந்தனர். பெரியார் துவேசம் தமிழ்நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதாக நான் அவர்கள் மூலம் கருத்துகிறேன். வரலாற்று நிகழ்வை அழகாக படம் ஆக்கி தொய்வில்லாமல் எடுத்துச் சென்றதில் இயக்குனர் இராஜசேகரன் வெற்றி பெற்றி இருக்கிறார். பெரியார் பற்றி அறியாமையில் எதிர்பவர்கள் (வேண்டுமென்று எதிர்பவர்கள் அல்ல) அவர்களுக்கு பிற்காலத்தில் பெரியாரின் வாழ்வு, போராட்டுக் குறித்து அறிய செய்ய திரைப்பட குறுந்தகடை (வி.சி.டி) வாங்கி பரிசளிக்கலாம்.

வித்யாசகர் திறன் முழுவதையும் இசையிலும், பின்னனி இசையிலும் கையாண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் தன் திறனை மேலும் மெய்பித்து இருக்கிறார்.


படம் வெற்றியா தோல்வியா ?


ம்.... படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ! அவர்களுக்கு இருக்க வேண்டிய கவலை !
:)))

அன்புடன்,
- கோவி.கண்ணன்

4 மே, 2007

தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !

இந்திய இலக்கியத்தின் வேர் தமிழகத்தில்தான் உள்ளது. இந்தியில் வருவது மட்டுமே இலக்கியம் அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதைத் தொகுதிக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இதையொட்டி மேத்தாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நர்மதா பதிப்பகம், திருமகள் பதிப்பகம், கவிதா பதிப்பகம், குமரன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.

இதில் ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல அணலும், ஆணித்தரமும் தெறிக்கப் பேசினார் ஜெயகாந்தன்.

இந்தி இலக்கியங்கள் மட்டுமே இந்திய இலக்கியங்கள் என்று கூறுவோர் வடக்கில் அதிகம் உள்ளனர். ஆனால் அது தவறு. இந்தியாவின் வேர் தெற்கில் தான் உள்ளது. குறிப்பாக தமிழத்தில்தான் உள்ளது.

இமய மலையையும், கங்கை நதியையும் தெற்கில் உள்ளவர்கள் போன்று யாரும் பாடியதில்லை. இவ்வளவு ஏன், இமயமலை அடிவாரத்தில் உள்ளவன் கூட அதைப் பற்றி கவிதை பாடி இருக்க மாட்டேன். ஆனால் நம் பாரதியோ மண்ணும் இமயமலை எங்கள் மாமலையே என்று பாடினான்.

சில விருதுகளால் பெறுபவர்களுக்கு பெருமை. சில நபர்களால் அந்த விருதிற்கு பெருமை. அப்படி விருதிற்கு பெருமை சேர்க்கக் கூடியவராக மேத்தா விளக்குகிறார்.

முன்பு நான், இவர்கள் எல்லாம் புதுக்கவிதை என்ற பேரில் அசட்டுத்தனம் செய்கிறார்கள் என்று கூறியதுண்டு. ஆனால் அக்கருத்தை இன்று நான் மாற்றிக் கொள்கிறேன்.

இங்கே நிறைய கவிஞர்கள் வந்துள்ளனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழால் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார் ஜெயகாந்தன்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வாலி, மு.மேத்தா எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாறு என்ற புதுக்கவிதை நூலை வாசித்த பின்பு தான், எனக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அவதார புருஷன் என்று ராமபிரானை பற்றி புதுக்கவிதை வடிவில் எழுதினேன் என்றார்.

கவிஞர்கள் முத்துலிங்கம், சிற்பி, பாலா, பழனிபாரதி, பா.விஜய் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





'தமிழர்கள் தங்களுக்கு தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்' - பொன் மொழி புகழ் ஜெயகாந்தனுக்கு ஞானம் கிடைத்து இருக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் பலருக்கும் கிடைக்கனும் !

2 மே, 2007

சிரிக்கலாம் வாங்க (1) !


மொழி, கடவுள், அடிமைத்தனம்

மொழிகள் என்பது வெறும் தொடர்பு சாதனாமா ? இல்லை. அது ஒரு இனத்தின் அடையாளம். தனக்கென்று மொழிகள் உள்ள இனங்களே போற்றப்படுகின்றன. தனது மொழியைப் பரப்புவதன் மூலம் அந்த இனம் மற்ற இனங்களைவிட உயர்வானவர்கள், நாகரீகத்தில் முன்னேறியவர்கள் என்று நினைக்க வைத்துவிட முடியும். நமது ஆங்கில மோகமும் அப்படித்தான் வெள்ளைக் காரர்கள் உயர்வானவர்கள், உயர்ந்த பண்பாடுகள் உள்ளவர்கள் என்று நினைக்கிறோம். உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்த வெள்ளையர்கள் செய்தது ஆங்கில மொழியைப் பரப்பியது. ஒரு மொழி நன்கு வேகமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் போது அவ்வின மக்கள் தங்கள் மொழியைக் குறைத்துமதிப்பிடுவர். எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறே இல்லை. ஆனால் தன் மொழியின் பயன்பாட்டைக் குறைக்கும் அளவுக்கு வேற்று மொழியானது ஒரு இன மக்களிடம் புழங்கும் போது பெரும் ஆபத்தை நோக்கியே செல்கிறது, பண்பாடு அழிகிறது முடிவில் தேவையற்றது பயனற்றது என்று தாய்மொழியே அழிகிறது. அடுத்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மொழி இல்லாத இனம் என்று ஏளனம் செய்யப்படுகிறது.

இதேதான் கடவுள், இறைவன், இறைநம்பிக்கை என்ற விசயங்களிலும் நடக்கிறது. நான் இங்கு மதம் என்று பொதுவாக குறிப்ப்பிட வில்லை. சர்சைகளுக்குள் செல்ல விருப்பம் இல்லை. உலகில் ஆதி காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனமும் தத்தம் கடவுளைக் வழிபட்டுக் கொண்டிருக்கின்றன, அது பின்னால் மதம் என ஒருங்கினைக்கப்பட்டு மதநூல்கள் ஏற்படுத்தப்பட்டன. தன்னுடைய நம்பிக்கை சார்ந்த அல்லது கடவுள், இறைநம்பிக்கைகளை மாற்று இனத்தாருக்கு பரப்புவதன் மூலம் தங்கள் இனமே உயர்ந்தது என்று நிறுவமுடியும். ஓரளவு கூர்ந்து பார்த்தால் இது உண்மைதான் என நினைக்க வைக்கிறது. இந்திய மதங்களைவிட மேலை நாட்டு மதங்கள் எல்லாவிததிலும் உயர்ந்தது என்று நினைக்கிறோம், நம்ப வைக்கப் படுகிறோம், அது உண்மையாகக் கூட இருக்கலாம். இந்தியர்கள் மீது ஆசிய நாடுகள் அன்பு வைத்திருப்பதற்குக் காரணம் புத்தர் இந்தியாவில் பிறந்தவர். புத்தம் இந்தியாவில் பரவி இருந்ததல் நாம் உயர்ந்தவர்கள் என்று ஒரு வேளை ஆசிய நாடுகளால் போற்றப்பட்டிருக்கும்

இந்தியாவில் நாட்டார் தெய்வ வழிபாடுகள் காணமல் போனதும், தங்கள் பேசும் மொழியே 'தீண்டத்தகாதவர் பாசை' என்று சொல்லும் போதும் யாருக்கும் சுரனை இல்லாமல் போனதற்கும் தங்கள் தெய்வம், மொழி ஆகியவற்றைவிட மற்றொன்று உயர்ந்தது என்று நினைக்க வைத்து இதுவே தேவ பாசை, நாங்கள் வணங்கும் கடவுள்களே உயர்ந்தது என்று சொல்லியதை நம்பியதால் தான். நீங்கள் தீண்டத்தகாதவர்கள் ஊருக்குள் வரக்கூடாது...உங்கள் சாமிகளும் தீண்டத்தகாதவை ஊருக்கு வெளியில் எல்லையில் நின்று கொண்டு எங்கள் தெய்வங்களுக்கு 'எல்லை சாமிகளாக' காவல், ஏவல் செய்யட்டும் என்று நடந்தேறி இருக்கிறது. ஒரு இனம் அடிமைப் பட இரண்டு விசயங்கள் அழிய வேண்டும் ஒன்று மொழி, இரண்டு வணங்கும் தெய்வங்கள்... இதை இழந்த இனங்களே அடிமையாக ஆகி இருக்கின்றன. இந்தியாவில் வருண அமைப்புகள் தோன்றி மக்கள் பிளவானதற்கும் காரணம் மொழி, தெய்வம் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு அவைகளில் சொல்லப்பட்டது உண்மை, அவை எல்லாம் உயர்ந்தது என்று நினைத்து அவைகளை பின்பற்ற ஆரம்பித்தது தான்.

இதுபற்றி ஆழமாக எவரேனும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.


மாற்றுக் கருத்துடையோர் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்