பின்பற்றுபவர்கள்

மாற்றுக் கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றுக் கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 அக்டோபர், 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பற்றி !

பொதுவாக பாலியல் என்றாலே நம் சமுகம் முகம் சுளிப்பதால், உடல் உறுப்புகள் நூறு விழுக்காடு சரியுள்ளவர்களாலும் முழுதாக புரிந்து கொள்ள இயலாதவை பாலியல் தேவை, அவைபற்றி பருவ வயது ஆண்களுக்கு சொல்லித் தரத்தேவையில்லை, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை என்பதே நமது சமூக நிலைப்பாடு, மாற்றுத்திறனாளிகளை மன அளவில் ஏனையோரைப் போல் தான் நடத்தவேண்டும் என்பதையே நாம் கற்றுக் கொண்டு அவர்களுக்காகக்கான தேவைகளை அமைத்துதருவது தான் அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று புரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ ?

ஆனால் மாற்றுத்திறனாளுக்கும் பாலுறவு வேட்கை உண்டு, அவற்றைப்பற்றிய தெளிந்த அறிவு, அவைகளுக்கான வடிகால் ஏற்படுத்தித்தருவது, அதற்கான பயிற்சிவகுப்புகள் (Sexuality for Disabilities) என்று ஐரோப்பியர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள், இன்னும் நாம் 'உன்னால முடியாத ஒன்றிற்கு ஆசைபடுவதே தவறு, விதி, முன்பிறவி வினை' என்றெல்லாம் கூறிக் கொண்டு அதற்கான சிந்தனைகளையே மறுக்கிறோம், நம்மைப் பொறுத்த அளவில் மாற்றுத்திறனாளியை விரும்பி மணம் செய்து கொள்பவர்களை தியாகி என்ற அளவில் உயர்த்தி வைப்பதுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிந்தனையை வளர்க்க விரும்பவே மாட்டோம், எனது கல்லூரிக்கால நண்பர் ஒருவர், இளம்பிள்ளை வாதத்தில் கால்களில் ஒன்றில் திறனும் போதிய வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்தவர், திருமணம் ஆகும் முன் 26 வயதில் அவரிடம் பேசும் போது 'எனக்கெல்லாம் எங்கேருந்து திருமணம் ? யாராவது உறவுக்காரர்கள் மனது வைத்து பெண் கொடுத்தால் உண்டு, அதற்கு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும்...' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார், பின்னர் அவருடைய உறவுக்காரர்கள் பெண் கொடுத்து அவருக்கு நல்ல உடல் நலத்துடன் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்துவருகிறது.

எதற்காக அவரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், யாராவது மனது வைத்தால் என்ற அளவில் தான் உடல்குறையுற்றோரின் குடும்ப வாழ்கையும் பாலியல் தேவைக்கான தீர்வும் கிடைக்கும், அனைவருக்கும் உடலில் இரத்தம் ஓடுவது போன்றே அவர்களுக்கும் பாலியல் தேவைகள், வேட்கைகள் இருக்கும், தயக்கங்கள் காரணமாக பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களுக்கான அமைப்புகள் ஏற்பட்டால், அதன் மூலம் பாலியல் வேட்கையை தனித்துக் கொள்வது (தன்னின்ப வழி) அல்லது கட்டுபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி, உடலை வருத்திக் கொள்ளாமல் எளிய முறையில் எந்த கோணத்தில் (Positions) அவர்களுடைய வாழ்கை துணையுடன் உறவில் ஈடுபடலாம் என்பற்கான விளக்கங்கள் அல்லது செயற்கை பாலியல்கருவிகள் பற்றி அறிதல் , கூச்சத்தை ஒழித்து குறிப்பாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் அவர்களை அதுபோன்ற அமைப்புகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம்  தான் அவர்கள் ஏனையோரைப் போல் மனத்தடை இன்றி வாழமுடியும்.

15 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில யாகூ குழுமங்களில் (Yahoo Groups / Geo cities) Disabilities and Sexuality பற்றி நிறைய தகவல்கள், இணையப்பக்கங்கள் பேசின, ஆனால் அவைபற்றி இன்னமும் கூட நமது சமூகம் பெரிதாக அக்கறை கொண்டது போலவே தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் பெரிய மூட நம்பிக்கைகளில் ஒன்று எதையும் விதி என்று நம்பி அவற்றைப் பற்றி சிந்திக்க மறுப்பது தான், உடல்குறையுற்றோர்களுக்கு கண்டிப்பாக தனியறையும் தனிமையும் ஏனையோரை விடத் தேவையானதே. உடற்குறையுற்றோர் ஆணோ பெண்ணோ  திருமணமே அவர்களுக்கு கிட்டாத போது அல்லது அவர்கள் விரும்பாதபோது செயற்கை பாலியல் கருவிகள் (Sex Toys) அவர்களுக்கு கிடைக்கும் படி கடைகள் உருவாகவேண்டும், தற்காலத்தில் இணையம் வழி வாங்கிக் கொள்ள வசதிகள் வந்துவிட்டன ஆனாலும் இந்தியாவில் அவற்றை வாங்கிப்பயன்படுத்துவதற்கான தயக்கங்கள் நீங்குவதற்கு மாற்றுத்திறானிகள் அல்லாத பிறர் ஊக்கப்படுத்தினால், கூச்சங்களை கடந்து அவர்கள் வாங்கிப்பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்னும் கூட மணமாகாத விதவைகள் என்ற அளவில் மாற்றுத்திறானிகளை வைத்திருப்பதற்கும் நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

ஓரின சேர்கையாளர்களை அங்கீகரிக்காததால் அவர்கள் பேருந்து நிலைய கழிவறையில் அவர்களுகான ஆட்களைப் பிடிப்பது போல் மாற்றுத்திறானிகளின் பாலியல் தேவைபற்றி நாம் நினைக்க மறுத்தால் தவறான நபர்களை அவர்கள் நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

தைவானில் தன்னார்வ குழுவொன்று கைகள் அற்றவர்களுக்கு சுய இன்பம் செய்துவிடுவதை தொண்டாகக் கொண்டுள்ளனராம், நம்மைப் பொறுத்த அளவில் அது முகம் சுளிக்கக் கூடிய செயல், ஆனால் அந்த சேவைகிடைக்கும் மாற்றுத்திறனாளிகளை பொருத்த அளவில் அந்த தொண்டூழியர்களின் கைகள் கடவுளின் கைகள், பாலியல் வேட்கை தீர்வு என்பதைவிட எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பை உணர்கிறார்கள், மனித மலத்தை அள்ள வைப்பதை முகம் சுளிக்காமல் அதுவும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம் இவற்றையெல்லாம்  அருவெறுப்பாக பார்ப்பதே நகைமுரண் தானே ?

வட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பயிற்சி வகுப்புகள், அமைப்புகள் உண்டு, தென்னிந்தியாவில் ஏற்பட்டது போல் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்

இணைப்புகள்:



http://workshop.sexualityanddisability.org/category/workshops/
http://www.sexualityanddisability.org/
https://en.wikipedia.org/wiki/Sexuality_and_disability
http://marius.sucan.ro/propaganda/sex-without-prejudice/

17 செப்டம்பர், 2008

ரத்னேஷ் அண்ணா...! பெரியாரை விமர்சிக்கும் முன் ...

வழக்கமாக பார்பனிய ஏகாதிபத்யமே மாற்றுப்பார்வை என்கிற கருத்து நுழைத்தலில் கோணல் பார்வையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும். நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவில் பெரியாரை விமார்சிக்கிறீர்களா ? வீரமணியை விமர்சிக்கிறீர்களா ? என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.

பெரியாரை என்றால் அதில் பெரியாரை வடிவேலுடன், வடிவேலின் சினிமா காட்சியுடன் ஒப்பிட்டு இருப்பதே தவறு, இன்னிக்கு வடிவேலுவும் மேலே வந்திருக்கிறார் என்றால் ஆளின் தோற்றத்திற்கு, அவன் எந்த சாதியில் பிறந்திருக்கிறான் என்பதற்கு இல்லாமல் அவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்கிற பெரியாரின் சிந்தாந்தம் பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டதால் தான்.

நீங்கள் சொல்லும் குற்றச் சாற்றை இன்னும் மாற்றிப் போட்டுக் கூடக் கேட்கலாம்

"பெண்ணியம் பேசும் பெரியார், தனது கொள்கைகளை தன் வீட்டுப் பெண்களிடம் வலியுறுத்தி பெண்களிடம் வீரத்தைக் காட்டி இருக்கலாமா ?" இப்படி கேட்டு இருந்தீர்களென்றால் சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, கோவில்களின் புனிதம் களங்கப்பட ஆரம்பித்தது இவர்களின் ஏற்பாடு தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா? அதற்கு முன்பேயே அப்படி இருந்தால் இவர் தனியே ஆட்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே. கோவிலுக்குப் போய்த் திரும்பிய போதெல்லாம் அவர்கள் நொந்திருப்பார்களே. இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? தங்கள் கொள்கையை வலியுறுத்துவதற்காக இவர்கள் எந்த நாடகமும் நடத்துவார்கள் என்பது தானே இதன் மூலம் சொல்லப்படும் செய்தி.

- இது மிதமிஞ்சிய கற்பனையே, இதற்கு நான் பதிலும் அளித்துவிட்டேன்

கோவி.கண்ணன் said...

//இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? //

இது கொஞ்சம் கற்பனையானது தான், பெரியார் குடும்பம் செல்வாக்கு மிக்கது, அவர்கள் வீட்டுப் பெண்களை கோவிலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், மற்ற பெண்களிடம் வைத்துக்கொள்ளும் வம்புகளை இவர்களிடம் செய்ய முயன்றிருக்க மாட்டார்கள்.

முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?

September 17, 2008 11:47 AM

இதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்,

RATHNESH said...

கோவி.கண்ணன்,

//முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?//

எண்ணம் சரியே. நான் கேட்பது, அதனை நிறைவேற்ற பொய் நாடகம்? அதுவும் புனிதமாகக் கருதப்படும் ஓர் இடத்தைக் களங்கம் செய்து?

நான் வீரமணி பொய்சொல்கிறார் என்றே சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கோவில் 'புனிதமாக கருதப்படும்' என்ற கருத்தைச் சொல்லி பெரியார் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.

கோவில்கள் எப்போது புனிதமாக இருந்தது ?

கோவில்களில் தேவதாசிகளின் ஆட்டமும், அவற்றைச் சார்ந்தவர்களின் அந்தபுரமாக இருந்த காலங்களில் கோவில்கள் புனிதமாக இருந்ததா ?

பள்ளன், பறையன் இன்னும் சண்டாளர்கள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்துவைக்கப்பட்டு இருந்ததால் புனிதமாக இருந்ததா ?

தற்பொழுது தான் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டவுடன் அவர் சிந்திய இரத்தத்தால் புனிதம் அடைந்திருக்கிறதா ?

வழக்கமாக புனிதம் பேசிதான் பெண்கள் முதல் மனிதர்கள் வரை தாழ்த்துவது நடந்து ஏறியது, வீட்டில் உள்ளவர்களை வெளி ஆட்களை வைத்தே ... இங்கும் புனிதம் கெடுகிறேதே...? என்பதால் பெரியார் அடவடி செய்தார், அதுவும் புனிதமாக கருதப்படும் கோவிலை வைத்து செய்தார் என்பது தங்களின் கண்டுபிடிப்பா ?

இன்னும் ஒன்றே ஒன்று,

கோவில் உண்மையிலேயே புனிதமானதா ? அல்லது கோவில் புனிதமாக கருதப்படுகிறதா ?

கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்றைய தலைவர்களில் ஒருவர் கூட தங்கள் வீட்டு தென்னை மரங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் வீட்டு பெண்களை அனுப்பியதுமின்றி, தனது தோப்பில் இருந்த அத்தனை தென்னை மரங்களையும் வெட்டி சாய்தார்.

உங்கள் பதிவின் ஆதங்கத்தில் பெரியார் குறித்த ஆதங்கமும் இல்லை, வீரமணி குறித்த குற்றச் சாட்டும் இல்லை. உங்களின் தவறான புரிதலின் எழுத்துவடிவம் மட்டுமே இருக்கிறது.

எந்த சூழலில் பெரியார் தமிழை 'காட்டுமிராண்டி பாஷை' என்று சொன்னார் என்ற சூழலைச் சொல்லாமல் Context ஆக பெரியார் தமிழைத் தூற்றினார் என்று சொல்லும் கூட்டத்திற்கு உங்கள் கருத்து நிச்சயம் பலனும், பயனுமாக இருக்கும்.

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அதே சமயத்தில் நாம் எடுத்துவைக்கும் கருத்தில் எதாவது பொருள் இருக்க வேண்டும். வீரமணி அட்டாக் என்ற பெயரில் பெரியாரை கேவலப்படுத்துவது யார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்