பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2009

வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை !

"வாசகர் பரிந்துரையில் வரனும் என் பதிவுக்கு ஒரு ஓட்டுப் போடுங்க" அப்படின்னு சிலர் வெளிப்படையாக உரையாடியில் கேட்கிறார்கள், எழுதிய பதிவை படிச்சுப் பார்த்துவிட்டு ஓட்டுப் போடுங்க என்று சொன்னாலும் அவர் எழுதியதை அவரே மதிக்கிறார் என்று நினைக்கலாம், எழுதியவர் பெயர் முகப்பில் தெரிய வைக்க வேண்டும் என்கிற அற்ப ஆசையில் தான் பலர் உரையாடியில் கேட்டு வைக்கிறார்கள். வேண்டுமென்றால் பதிவர் சர்வேசனிடம் சொல்லி "வாசகர் பரிந்துரை பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் விழுக்காடு எவ்வளவு ?" என்று கணக்கெடுப்பு நடத்திப் பார்க்கலாம்.

வாசகர் பரிந்துரை பதிவுகள், அதிக ஓட்டு வாங்கும் பதிவுகளில் 70 விழுக்காடு பதிவுகள் இப்படிப்பட்ட வாக்களிப்பில் தான் பரிந்துரை செய்யப்படுகிறது. வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிக்காமல் விடுவதற்கும் இதுவே காரணம், அறிந்து கொள்ள வேண்டிய, நல்ல தகவல் அடங்கியப் பதிவுகளை பதிவர் நண்பர்கள் உரையாடியில் காட்டும் போது படிப்பதுண்டு.

ஒரு நாளைக்கு 500 பதிவுகள் வரையில் வருவது, தவறான பரிந்துரைகள் மூலம் அதில் இடம் பெறும் மொக்கை பதிவொன்றை ஒருவர் படிக்கும் போது, உண்மையிலேயே பிற நல்லப் பதிவுகளை ஒருவர் படிக்கும் நேரம் தேவையின்றி இதில் சென்றுவிடுகிறது, நல்ல சில பதிவுகள் படிக்கப்படாமல் போவதற்கும் இதுவே காரணம்.

நாம படிக்கும் பதிவு மிகவும் சிறப்பானது பிறருக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு அதில் தகவல் உள்ளன என்று அறிந்தால் அதை அவரவர் பதிவு பக்கத்தில் 'படித்ததில் பிடித்தது' என்ற பட்டியல் படுத்தி வைக்கலாம், வாரம் ஒருமுறை அந்த பட்டியலை மாற்றி அமைக்கலாம். ஒவ்வொருவரின் எண்ணம் எழுத்து எவை என்பதை படிப்பவர்கள் அறிந்துள்ளனர், நான் ஒன்றை பரிந்துரைத்தால் அது என் எண்ணப்படித்தான் இருக்கும் என்பதை பலர் அறிவர்

வாக்கு, பரிந்துரை இவைகள் செயல்படும் விதங்களில் திரட்டிகளைக் குறைச் சொல்வதும் தேவையற்றது, அவர்கள் இடம் கொடுக்கிறார்கள், அதைப் பதிவர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை, அதைக் கண்காணிக்கவும் திரட்டிகளால் முடியாது.

இப்போதுமட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக வாசகர் பரிந்துரைகள் யார் விருப்பப் படுகிறார்களோ அவர்களது பதிவுகளை அதில் கொண்டுவர முடியும் என்கிற நிலை இருக்கிறது. அவரவர் திருந்தினால் தான் உண்டு. பரிந்துரைகளை நம்பிப் படிக்கிறவர்களின் நேரம் தான் விரயமாகுது.

புதிதாக பதிபவர்களுக்கு ஒரு மூன்றுமாதக் காலம் பதிவு காற்றுவாங்கும், அவர்கள் பிறருடன் பதிவின் வழியாக தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால் பிறகு அவர்களது பதிவும் எழுத்துச் சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக படிக்கப்படும்.

தொடக்க காலத்தில் ஏறக்குறைய 100 - 150 இடுகைகளே ஒரு நாளில் வெளியாகும் 75 விழுக்காடு இடுகைகள் அனைவராலும் படிக்கப்படும், தற்போதும் ஒரு நாளில் வெளியாகும் இடுகைகள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருக்கும், அனைத்தையும் படிக்க முடியாது. வழக்கமாக நாம படிக்கும் பதிவுகளை வார இறுதியில் படிக்கலாம், புதியவர்களின் இடுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

இது நல்லதொரு பதிவு என்று வரையறை செய்வது கடினம் தான். அதற்கான அளவுகோள் எதுவும் கிடையாது, பதிவர்கள் அனைவருக்குமே வாசிக்கும் அனுபவம் உண்டு, அதனால் தான் எழுதுகிறோம், அந்த அனுபவத்தின் மூலம் நாம் பரிந்துரைக்கும் பதிவுகள் உண்மையிலேயே அனைவரும் அவர்களது நேரங்களை விழுங்கி வாசிப்பதற்கு ஏற்றது தானா என்று எண்ணாமல் வாசகர் பரிந்துரைகள் வாக்குகள் மூலம் ஒரு மறைமுகக் பதிவு திணிப்பை வாசகர்களிடம் திணிப்பது ஏற்கமுடியவில்லை.

பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை, நல்ல எழுத்துவளம் உள்ள பதிவரும் வம்படியாக வாசகர் பரிந்துரையில் போய் உட்கார்ந்து கொள்வது அன்று பரிந்துரைக்கப் பட வேண்டிய ஒரு பதிவின் இடத்தைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிப்பது போல் ஆகும்.

வாசகர் பரிந்துரைக்கும் மிகுதியாக ஓட்டு வாங்கிய பதிவுகளை அது அவ்வளவு ஓட்டு வாங்கி இருக்கிறதா என்று என்னை வியப்படைய வைப்பது கிடையாது, அவற்றை அந்த ஒரு காரணத்திற்க்காக வாசகர்கள் அனைவரும் படிக்கிறர்கள் என்று யாரும் சொல்ல முடியாது

18 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நான் ரீடரில் மட்டுமே படிக்கின்றேன்.

iniyavan சொன்னது…

அருமையான உண்மையான கருத்துக்கள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

’ஓட்டுப் போட்டாச்சு,

அப்புறமா படிச்சுக்கிறேன்’

ஹிஹி இதைப்பத்தி விட்டிட்டீங்களே..!!

கீழை ராஸா சொன்னது…

நல்ல கருத்து, ஓட்டு போட்டு உங்கள் பதிவையும் மற்றவர்கள் படிக்க விடாத படி செய்து விட்டேன்(??) எதோ நம்மால் முடிந்தது

தமிழ் சொன்னது…

நான் செய்தி ஓடையில் படிக்கின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
நான் ரீடரில் மட்டுமே படிக்கின்றேன்.
//

நன்றி !

//'இனியவன்' என். உலகநாதன் said...
அருமையான உண்மையான கருத்துக்கள்.
//

நன்றி !

//நிகழ்காலத்தில்... said...
’ஓட்டுப் போட்டாச்சு,

அப்புறமா படிச்சுக்கிறேன்’

ஹிஹி இதைப்பத்தி விட்டிட்டீங்களே..!!
//

நன்றி !

//கீழை ராஸா said...
நல்ல கருத்து, ஓட்டு போட்டு உங்கள் பதிவையும் மற்றவர்கள் படிக்க விடாத படி செய்து விட்டேன்(??) எதோ நம்மால் முடிந்தது
//
நன்றி நன்றி !

//திகழ்மிளிர் said...
நான் செய்தி ஓடையில் படிக்கின்றேன்.
//

நன்றி !

அப்பாவி முரு சொன்னது…

நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.

மதிபாலா சொன்னது…

அருமையான கருத்துக்கள்..

இருந்தாலும் பரிந்துரைக்கும் முறையைக் கொஞ்சம் சரி செய்யலாம்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சரிதான்,

உடன்பிறப்பு சொன்னது…

என்ன இப்படி உண்மைய சொல்லிட்டீங்க

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல கருத்துக்கள் தமிழ்மணத்தைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நல்ல விளக்கம்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?

நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...

Sanjai Gandhi சொன்னது…

அத்திவெட்டி ஜோதிபாரதி 9:47 PM, July 21, 2009

வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?

நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...//

Same blood. :)

Unknown சொன்னது…

நல்ல அலசல்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பாலிசிதான் இருக்கனும்.எல்லாம் தானே வரும் பதிவில் ச்ரக்கு இருந்தால்.

நான் சொன்னது…

உண்மையாக பேசுகிறீர் நண்பரே(பெரியவரே)

கோவி.கண்ணன் சொன்னது…

//நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.

2:02 PM, July 21, 2009//

நன்றி அப்பாவி

//மதிபாலா said...
அருமையான கருத்துக்கள்..

இருந்தாலும் பரிந்துரைக்கும் முறையைக் கொஞ்சம் சரி செய்யலாம்.

4:29 PM, July 21, 2009//
பரிந்துரைக்கும் முறையை எப்படி மாற்றினாலும், அதிலிருக்கும் ஓட்டை(யை) முறைகேடாகத்தான் பயன்படுத்துவார்கள்


// ஆ.ஞானசேகரன் said...
சரிதான்,

4:36 PM, July 21, 2009
//
நன்றி ஐயா

// உடன்பிறப்பு said...
என்ன இப்படி உண்மைய சொல்லிட்டீங்க

7:06 PM, July 21, 2009//
சொல்ல வேண்டிய நேரம் வந்துட்டு :)

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கருத்துக்கள் தமிழ்மணத்தைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நல்ல விளக்கம்

8:53 PM, July 21, 2009//

தமிழ்மணம் மட்டும் இல்லிங்க, எல்லாத் திரட்டிகளிலும் வாக்களிப்பை முறைகேடாக பயனபடுத்துவது பதிவர்கள் தான்

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?//

மெய் தான் ஆளனும் ! :)

//நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...

9:47 PM, July 21, 2009//

அதுக்கு நான் காரணமில்லை


// SanjaiGandhi said...


Same blood. :)

10:54 PM, July 21, 2009//

அப்பாடா ரத்தம் தேவைப்பட்டால் பரிமாறிக்கலாம் !


//கே.ரவிஷங்கர் said...
நல்ல அலசல்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பாலிசிதான் இருக்கனும்.எல்லாம் தானே வரும் பதிவில் ச்ரக்கு இருந்தால்.

11:10 PM, July 21, 2009//

நன்றி திரு ரவிஷங்கர் !

//கிறுக்கன் said...
உண்மையாக பேசுகிறீர் நண்பரே(பெரியவரே)
//
சரிங்க சின்னவரே !

Radhakrishnan சொன்னது…

எல்லா பதிவுகளையும் படிப்பது என்பது இயலாத காரியம்தான் அதில் வாசகர் பரிந்துரையைப் படிக்கப் போய் வரும் பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். பொதுவாக ஒரு சிலரின் எழுத்துக்களைப் படிக்கும்போது அவரைப் பற்றிய அபிப்ராயம் நமக்கு வந்துவிடுவதுண்டு, அதுபோலவே வாசகர் பரிந்துரைக்கப்படும் எழுத்துக்கும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

நமது மனதில் ஒருவித எண்ணம் ''அவர் எழுதினா நல்லா எழுதுவாரு'' என வரும்போது அவர் எப்படி எழுதியிருந்தாலும் நன்றாகவேத்தான் இருக்கும் என்கிற நிலை வாசகர் பரிந்துரை பதிவுகளுக்கு ஏற்பட்டு இருப்பது வருத்தம் தரும் நிகழ்வே.

நமக்குத் தேவையானதை நாமேப் படித்து பெருமிதம் கொள்வோம், முன்னேற்றம் அடைவோம். மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சரியாச் சொன்னீங்க.

நல்ல பதிவு எங்கிருந்தாலும் படிக்கப்படும்.

நீங்க சொன்ன மாதிரி நாமே நமக்கு பிடித்த பதிவரை நம் பதிவில் குறிப்பிடுவது (பரிந்துரையை விட) ஓரளவு பலன் தரும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்