நம்ம மார்க்க சகோக்கள் விஸ்வரூபம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது, எங்களைப் பற்றி பொது மக்களிடையே தவறாக சித்தரிக்கிறது, எங்கள் சமூகத்தின் பெயருக்கு களங்கம் / வில்லங்கம் என்றெல்லாம் சொல்லி தடை கோரியும், யாரும் பார்க்காதீர்கள் என்று வலைபதில் எழுதி வந்தாலும், ஏற்கனவே திருடி வெளியிடப்பட்ட இணையத்திலிருந்து திருடப்பட்ட படம் வட்டுகளாகப் போடப்பட்டு பர்மா பஜாரில் படுவிறுவிறுபாக வியாபாரம் நடக்கிறதாம் அவ்வாறு விற்பவர்களில் மார்க்க சகோக்களின் சமூகம் சார்ந்தவர்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
எவ்வளவு தான் பணம் கொட்டும் தொழில் என்றாலும் வட்டிவாங்குதல், சாராயம் விற்பது போன்றவற்றில் எங்கள் சமூக ஆட்கள் ஈடுபடமாட்டார்கள் என்று இவர்கள் கூறி வந்தாலும் நிலைமை அதற்கு மாற்றானது தான், அது அவர்களுக்கும் தெரியும், 'இதெல்லாம் எப்படி ?' என்று நாம் சான்றுகளுடன் கேள்வி கேட்டாலும் மார்க்கம் மறுமையில் போடும் மதிப்பெண் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள், நீங்கள் குறிப்பிடுவர்கள் எங்கள் சமூகத்து பெயர் தாங்கிகளே என்பார்கள், பெயர்தாங்கிகளைப் பற்றி பேசினாலோ, படம் எடுத்தாலோ எங்கள் சமூகத்தை தூற்றுகிறார்கள் என்று முரண்பாடாக பேசுவார்கள்.
"புதுப்படங்களை இன்டர்நெட் மூலம் டவுன்லோடு செய்து மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் சிடியில் பதிவு செய்து கொடுத்ததாக குளித்தலை தர்மா (24), பாலக்கரை நிசார் (28), இன்பராஜ் (33), முகமதுஇலியாஸ் (25), ஹபீப் (30), தென்னூரை சேர்ந்த அஷ்ரப்அலி (22), சேட்டு (24), ஆழ்வார் தோப்பு அக்கீம்ராஜா(28), மேலசிந்தாமணி ஜமீர்(21), நாகூர்மீரான் (32), நத்தர்ஷாபள்ளிவாசல் இம்ரான் (22) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனை 2 மணிநேரம் நீடித்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்வரூபம் திரைப்படத்தை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து விற்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விஸ்வரூபம் படத்தை தவிர தற்போது வெளியான அனைத்து படங்கள் மற்றும் ஆபாச படங்களை ரூ.25 முதல் 50 வரை டவுன்லோடு செய்து கொடுத்தது தெரியவந்தது என்றனர்."
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91207
மேற்கண்ட 11 பேரில் மார்க்க பந்துகளின் பந்துகளின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்தது, இவர்களுக்கு தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி பீஜே கட்சியை சார்ந்தவர்கள் செய்யும் அடவாடி தெரியாதா ? அந்தப் படம் அவர்கள் சமூகத்தை இழிவு செய்கிறது என்பதை அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களிடம் சொல்லி இருக்கவே மாட்டார்களா ?
திரைப்படங்களே பார்க்காதவர்கள் கூட இந்தப் படம் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கப்படுகிறது என்று ஆவலுடன் பார்க்கவே ஆசைப்படுவார்கள், பர்மா பஜார் கடைகாரர்களால் அவர்களது ஆசை நிறைவேறும், போறப் போக்கைப் பார்த்தால் விஸ்வரூபம் பார்க்காத தமிழனே இல்லை என்ற நிலை உருவாகலாம், மார்க்க பந்துகளின் போராட்டம் கமலுக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்தாலும் படம் பலரையும் சென்று அடையும் நிலையை ஏற்படுத்தி உள்ளது, படத்தை யாரையும் பார்க்கவிடக் கூடாத என்கிற முயற்சி கிட்டதட்ட தோல்வியே, கமலுக்கு நட்டம் ஏற்படுத்திவிட்டோம் என்று மட்டுமே அவர்கள் மகிழ்ச்சி அடையலாம், ஆனாலும் அவர்களது நோக்கம் ஒரு தனிமனிதனை தண்டிப்பது என்ற அளவில் தான் நிறைவேறி இருக்கிறது, மற்றபடி அவர்கள் எதை முன்னிட்டு குரல் எழுப்பினார்களோ அவற்றை திருட்டு வட்டு வெளியீட்டார்களே தடுத்துவிட்டனர்.
விஸ்வரூப திரைப்படத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் திரையரங்குகளை முற்றுகை இடுவது போல் திருட்டு வட்டுகடைகளை ஏன் முற்றுகையிடவோ, அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ ஏன் முயற்சிக்கவில்லை ?