பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2009

கலவை 21-Jul-2009 !

இடைத்தேர்தல்.

அதிமுக தலைவி ஜெ இடைத் தேர்தல் புறக்கணிப்பு எதிர்ப்பார்த்த ஒன்று தான், எப்படியும் திமுக தான் வெற்றிபெறும் தேவையின்றி போட்டி என்று இறங்கி தொண்டர்களை பலியாவதைத் தடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். தேர்தல் புறக்கணிப்புக்கு எதிர்கட்சிக்கு அழகு இல்லை என்றாலும் இடைத்தேர்கள் நடக்கும் லக்ஷ்ணம் நாடே அறிந்தவை தான், இதற்கு முந்தைய காலகட்டங்களில் ஜே கூட இதுபோன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருகிறார். திமுகவுக்கு தேர்தல் செலவு தொகுதிக்கு 100 கோடி மொத்தம் 400 கோடி மீச்சம். இடைத்தேர்தல் என்றதும் உற்சாகமாக கிளம்பிய தொண்டர்கள் சோர்ந்து இருப்பாங்க. சட்டமன்ற தேர்தல் வரை தொண்டர்களுக்கு வருமானத்துக்கு வழி ? எல்லாம் கலைஞர் ஐயா பார்த்துப்பார்

***

வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது சரி... சூரிய கிரஹணத்தின் போது சாப்பிடலாமா ? கூடாதா ? அமாவாசை அன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்குகிறது, எந்த ஒரு இயக்கங்களின் ஒழுங்கான இயக்கத்தில் எதாவது ஒரு திடீர் தடை / இயற்கைத் தடைகள் ஏற்படும் போது அதன் விளைவுகள் இருக்கத்தான் செய்யும். சூரிய கிரஹணம் போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக பூமியில் இயக்க ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும், ஏனெனின்றால் சூரிய ஒளியே புவியின் அனைத்துவிதமான இயக்கங்களுக்கும் எரிபொருள். மரம் செடிக் கொடிகள், இலைகள் பெரும் பச்சையம் (ஸ்டார்ச்) ஆக இருந்தாலும் சரி ஆவியாகும் நீராக இருந்தாலும் சரி, இவை அனைத்திற்கும் சூரிய ஒளியே எரிபொருளாக இருக்கிறது. சூரிய ஒளி சந்திரன் இருக்கும் இடத்தின் தொலைவில் இருந்து திடீர் தடையாகும் போது சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களில் பாதிப்பு உண்டு. இவற்றின் பாதிப்பு சூரியன் இல்லாத இரவையோ மேகம் மறைக்கும் சூரிய ஒளி அற்ற நிழல் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டது.

அறிவியல் ரீதியாக அளவிட முடியாத பாதிப்புகள் உயிரனங்களின் உடல்களில் ஏற்படலாம். உடலில் சமச்சீரின்மை ஏற்படலாம், கிரஹணத்தின் போது கற்பிணிப் பெண்கள் எதையும் கிழிக்கவோ, வெட்டவோ கூடாது என்பார்கள். அப்படி செய்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பார்கள். இந்துமதம் தவிர்த்து பிற மதங்களில் கிரஹணம் பற்றிய அவ்வளவு முன்னெச்சரிக்கைக் கிடையாது என்பதால் அது தொடர்பான எச்சரிக்கைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இயற்கைக் குறித்த மனித சிந்தனைகள் கிட்ட தட்ட பிற இனங்களிலும் ஒன்று போல் தான் இருக்கும். கடவுள் குறித்த நம்பிக்கைகள் கூட இப்படிதான். கொள்கைகளும் கோட்பாடுகளும் நில அமைப்பு, பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். கிரஹணத்தின் போது உண்வு உண்பது உட்பட விலங்குகளின் நடவெடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் மனிதர்கள் உணவு உண்ணாதிருக்க பெரிய தொரு காரணங்கள் சிந்தித்துப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. கிரஹணம் நேரம் 3 மணி நேரத்திற்குள் முடிந்துவிடுவதால் உணவை தவிர்பவர்களுக்கு பசிப்பிணி நோய் வந்துவிடாது, கிரஹண நம்பிக்கையோடு உணவு தவிர்பவர்களைக் குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. மேலே சொன்னது போல் புவியில் சூரிய கிரஹணத் தாக்கம் நிச்சயம் உண்டு என்று நம்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் யாருக்கும் நட்டமும் இல்லை. தி.கவின் கிரஹண விருந்து கண்டுக் கொள்ளத் தேவை இல்லை.

***

இது கண்டு கொள்ள வேண்டிய ஒன்று...திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்க கடுமையான எதிர்ப்பாம். என்னைக் கேட்டால் சிலைத் திறக்கத் தேவை இல்லை. எதாவது ஒரு கலவரம் என்றால் முதலில் உடைபடுவது திருவள்ளுவர் சிலையாகத்தான் இருக்கும், எதற்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ? தமிழ் நாட்டில் தந்தை பெரியார் சிலைகளுக்கே ஆபத்து என்கிற நிலையில் நாம இருந்து கொண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நினைப்பது நம் பேராசை. தமிழனாக பிறந்த ஒரே காரணத்தினால் திருவள்ளுவர் அவ்வப்போது அவமானப்படனுமா ? திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது.

"இந்திய தேசியம்" என்பது ஒரு மாயச் சொல் என்பதை இப்போதாவது தேசியவியாதிகள் புரிந்து கொண்டால் சரி.

***

மாயச் சொல் பற்றிய ஒரு நகைச்சுவை,

சிஷ்யன் 1 : 'எல்லாம் இன்ப மயம்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு இருந்த நம்ப குரு. கொஞ்ச நாளாக மந்திரத்தை மாற்றிட்டார்

சிஷ்யன் 2 : அப்படியா நான் கவனிக்கவில்லையே

சிஷ்யன் 1: புது சிஷ்யை இன்பா வந்ததிலிருந்து 'எல்லாம் இன்பா மயம்' என்று சொல்கிறார்

36 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

//மேலே சொன்னது போல் புவியில் சூரிய கிரஹணத் தாக்கம் நிச்சயம் உண்டு என்று நம்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் யாருக்கும் நட்டமும் இல்லை. தி.கவின் கிரஹண விருந்து கண்டுக் கொள்ளத் தேவை இல்லை//

புரியலையே...

சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா?

தேவை நேரடி பதில்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//புரியலையே...

சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா?

தேவை நேரடி பதில்!!//

பசிப்பவர்கள் புசிக்கலாம். அதான் பிற மத/ இனங்களில் அப்படி ஒரு நடைமுறை இல்லை என்று சொல்லி இருக்கிறேனே.

Mahesh சொன்னது…

/"இந்திய தேசியம்" என்பது ஒரு மாயச் சொல் என்பதை இப்போதாவது தேசியவியாதிகள் புரிந்து கொண்டால் சரி.//

பாயிண்டு !!

Raghav சொன்னது…

//திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடாரத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது. //

ரொம்பவும் சரி.. நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன். திருவள்ளுவரின் படம் தான் எனது Cubical (தமிழில் என்னன்னு சொல்லுங்களேன்) ல் வைத்துள்ளேன். பற்று இருப்பவர்கள் தங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் சரி. தேவையில்லாமல் பிரச்சனை கிளம்பாமல் இருந்தால் சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரொம்பவும் சரி.. நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன். திருவள்ளுவரின் படம் தான் எனது Cubical (தமிழில் என்னன்னு சொல்லுங்களேன்) ல் வைத்துள்ளேன். பற்று இருப்பவர்கள் தங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் சரி. தேவையில்லாமல் பிரச்சனை கிளம்பாமல் இருந்தால் சரி.//

திரு ராகவ்,

க்யூபிக்கல், அலுவல் தடுப்பறை என்று சொல்லலாம்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கிரஹணங்களை பற்றிய உங்கள் சிந்தனைகள் வரவேற்க்க தக்கது. நிறைய பேர் இப்படித் தான் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்காங்க .

\\\ இது கண்டு கொள்ள வேண்டிய ஒன்று...திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்க கடுமையான எதிர்ப்பாம். என்னைக் கேட்டால் சிலைத் திறக்கத் தேவை இல்லை. எதாவது ஒரு கலவரம் என்றால் முதலில் உடைபடுவது திருவள்ளுவர் சிலையாகத்தான் இருக்கும். ////


ஆ... ஊன்னா உடனே சிலையைத் தான் உடைக்கிறாங்க‌

துபாய் ராஜா சொன்னது…

கலவை கலக்கலா இருக்கு.

'அம்மா'ன்னாலே அதிரடிதானே.

கிரஹண ஆராய்ச்சி அருமை

//திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடாரத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது.//

சிறந்த ஆலோசனை.பல ஆண்டு பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.


//சிஷ்யன் 1 : 'எல்லாம் இன்ப மயம்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு இருந்த நம்ப குரு. கொஞ்ச நாளாக மந்திரத்தை மாற்றிட்டார்

சிஷ்யன் 2 : அப்படியா நான் கவனிக்கவில்லையே

சிஷ்யன் 1: புது சிஷ்யை இன்பா வந்ததிலிருந்து 'எல்லாம் இன்பா மயம்' என்று சொல்கிறார்//

சிஷ்யன் 2: எல்லாம் இன்பா மாயம்.

:)))))))

iniyavan சொன்னது…

திருவள்ளுவர் மேட்டர் அருமை சார்

நிகழ்காலத்தில்... சொன்னது…

மாயச் சொல் பற்றிய ஒரு நகைச்சுவை,

நிகழ்காலத்தில் : 'எல்லாம் இன்ப மயம்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு இருந்த நம்ப குரு.கோவியானந்தா கொஞ்ச நாளாக மந்திரத்தை மாற்றிட்டார்.

ஓம்கார் : அப்படியா நான் கவனிக்கவில்லையே

நிகழ்காலத்தில்: புது சிஷ்யை இன்பா வந்ததிலிருந்து 'எல்லாம் இன்பா மயம்' என்று சொல்கிறார்


:)))

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\இந்துமதம் தவிர்த்து பிற மதங்களில் கிரஹணம் பற்றிய அவ்வளவு முன்னெச்சரிக்கைக் கிடையாது என்பதால் அது தொடர்பான எச்சரிக்கைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். \\

ஒன்றைப்பற்றி எச்சரிக்கை செய்வது என்றால் அதைப்பற்றி உணர்ந்ததன் ஆழத்திற்கேற்பவே சொல்லமுடியும்.. அது எல்லா மதங்களுக்கும் சமமாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...


ஒன்றைப்பற்றி எச்சரிக்கை செய்வது என்றால் அதைப்பற்றி உணர்ந்ததன் ஆழத்திற்கேற்பவே சொல்லமுடியும்.. அது எல்லா மதங்களுக்கும் சமமாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்?//

இயற்கையில் பொதுவாக நடக்கும் மழை, சூரியன், சந்திரன் பற்றி அனைத்து மதங்களும் ஏதோ ஒரு கருத்து கொண்டிருக்கின்றன. சந்திர பிறைக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூரிய சந்திர கிரஹனங்கள் பற்றி இந்திய சமயங்கள் தவிர்த்து யாரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. என்பதால் குறிப்பிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
மாயச் சொல் பற்றிய ஒரு நகைச்சுவை,

நிகழ்காலத்தில் : 'எல்லாம் இன்ப மயம்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு இருந்த நம்ப குரு.கோவியானந்தா கொஞ்ச நாளாக மந்திரத்தை மாற்றிட்டார்.

ஓம்கார் : அப்படியா நான் கவனிக்கவில்லையே

நிகழ்காலத்தில்: புது சிஷ்யை இன்பா வந்ததிலிருந்து 'எல்லாம் இன்பா மயம்' என்று சொல்கிறார்


:)))
//

எனக்கு அதுபோல் சிஷ்யை கிடைத்தால் அப்பறம் நீங்களெல்லாம் எங்கே சிஷ்யராக இருப்பது ? மடத்தவிட்டு துறத்திடமாட்டேனா ?
:)

நிகழ்காலத்தில்... சொன்னது…

:))))))

கிடுகுவேலி சொன்னது…

அருமை..... முடிக்கும் போது இன்னும் அருமை....!!

வலசு - வேலணை சொன்னது…

சிலை வைப்பது பற்றி ஒருமுறை, இடதுசாரி சிந்தனைகள் கொண்ட எழுதுகோல்ப் போராளியான பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார். நேரே அவமானப்படுத்த முடியாததால் சிலை வைப்பதன் மூலம் காக்கா குருவிகளைக் கொண்டு எச்சமிடச் செய்கிறார்கள்.

நாஞ்சில் நாதம் சொன்னது…

:))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடாரத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது. //

repeateyyyy

வால்பையன் சொன்னது…

இது வேற யாரோ எழுதுன மாதிரி இருக்கு!

நீங்க எழுத்துபிழை வராமலும், வடமொழி சொற்கள் கலவாமலும் பார்த்து கொள்வீர்கள்!

வால்பையன் சொன்னது…

கிரகணத்தால் ஈர்ப்பு விசையில் பாதிப்பு ஏற்படுமே தவிர! சாப்பிடுவதாலும் வாந்தி எடுப்பதாலும் பாதிப்பு ஏற்படாது!

யாருக்கும் நட்டமில்லை என்பதற்காக மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பது போல் பேசக்கூடாது!

வால்பையன் சொன்னது…

//பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நினைப்பது நம் பேராசை.//

தமிழ்நாட்டில் தமிழர் சிலை மட்டும் தான் இருக்குதாக்கும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நீங்கள் எந்த வகையில ஜெயலலிதா அம்முனிய ஆதரிக்கிறீங்க...?

அதுசரி...!

கலவை நம்ம,

காம கோடி பீடா அதிபதி சங்கு அராசகாச்சாரியார் போகும் இடமாச்சே...

பாத்து எழுதுங்கப்பா...

காப்பி ரைட் வாங்கிட்டேளா?!

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் 8:58 PM, July 21, 2009

இது வேற யாரோ எழுதுன மாதிரி இருக்கு!//

இல்லை. நான் நானே தான் எழுதினேன்

// நீங்க எழுத்துபிழை வராமலும், வடமொழி சொற்கள் கலவாமலும் பார்த்து கொள்வீர்கள்!//

நீங்கள் சொல்வது சரி, இதில் வடசொற்கள் நிறைய இருக்கிறது. பொதுவாக கட்டுரை எழுதும் போது பொறுமையாக எழுதுவேன். இது கொஞ்சம் விரைவாக ஓடிவிட்டது.

பீர் | Peer சொன்னது…

சிலைகள் எங்கிருந்தாலும் பிரச்சனைதான்.

Nathanjagk சொன்னது…

என்ன இன்னைக்கு இப்படியொரு நால்சுவை விருந்து??? நல்லாயிருக்கு!
சரி,​மேட்டருக்கு வருவோம்..
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
சிலைகள் எங்கிருந்தாலும் பிரச்சனைதான்.

11:46 PM, July 21, 2009
//

இப்படி பொத்தாம் பொதுவில் சொல்லி வம்பில் மாட்டிங்காதிங்க. அரசியல் தலைவர் சிலைகள்னு சொல்லி இருக்கனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நீங்கள் எந்த வகையில ஜெயலலிதா அம்முனிய ஆதரிக்கிறீங்க...?

அதுசரி...!

கலவை நம்ம,

காம கோடி பீடா அதிபதி சங்கு அராசகாச்சாரியார் போகும் இடமாச்சே...
//

போகட்டும் போகட்டும் வாலை இலையோடு யாரும் கூடப் போகாமல் இருந்தால் சரி

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நினைப்பது நம் பேராசை.//

தமிழ்நாட்டில் தமிழர் சிலை மட்டும் தான் இருக்குதாக்கும்!

9:01 PM, July 21, 2009
//

நாமதான் வந்தாரை வாழவைக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கிறோமே, சிலை நின்னா தப்பு இல்லைன்னு நினைக்கிறாங்களோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//Mahesh said...
/"இந்திய தேசியம்" என்பது ஒரு மாயச் சொல் என்பதை இப்போதாவது தேசியவியாதிகள் புரிந்து கொண்டால் சரி.//

பாயிண்டு !!
//

மகேஷ் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கிரஹணங்களை பற்றிய உங்கள் சிந்தனைகள் வரவேற்க்க தக்கது. நிறைய பேர் இப்படித் தான் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்காங்க .//

Starjan, நான் அது மூடநம்பிகையா இல்லையான்னு இதில் எதுவும் சொல்லவில்லை.

//ஆ... ஊன்னா உடனே சிலையைத் தான் உடைக்கிறாங்க‌

4:24 PM, July 21, 2009//

ஆஹா, அவங்களெல்லோரும் குங்க் பூ தெரிஞ்சு வைத்திருக்கிறார்கள் என்று சொல்றிங்களா ? அப்ப தானே ஆ ஊ சவுண்ட் வரும்

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...
கலவை கலக்கலா இருக்கு.

'அம்மா'ன்னாலே அதிரடிதானே.
//

அம்மா அதிரடியாக ஆடுறாங்க அதுக்குத்தான் அவ்வப்போது ஓய்வு எடுக்கிறாங்க போல !
:)

//சிஷ்யன் 2: எல்லாம் இன்பா மாயம்.

:)))))))

5:00 PM, July //

சிஷ்யனும் கெட்டுவிட்டார்

கோவி.கண்ணன் சொன்னது…

// 'இனியவன்' என். உலகநாதன் said...
திருவள்ளுவர் மேட்டர் அருமை சார்
//

நன்றி திரு உலகநாதன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//கதியால் said...
அருமை..... முடிக்கும் போது இன்னும் அருமை....!!
//

மிக்க நன்றி கதியால்

கோவி.கண்ணன் சொன்னது…

//வலசு - வேலணை said...
சிலை வைப்பது பற்றி ஒருமுறை, இடதுசாரி சிந்தனைகள் கொண்ட எழுதுகோல்ப் போராளியான பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார். நேரே அவமானப்படுத்த முடியாததால் சிலை வைப்பதன் மூலம் காக்கா குருவிகளைக் கொண்டு எச்சமிடச் செய்கிறார்கள்.
//

வலசு,

வினுசக்ரவர்த்தி கூட ஒருபடத்தில், நாட்டுக்கு உழைச்ச தலைவருங்க என்ன ஆனாங்க கருப்பா சிலையாகி காக்கா குருவிக்கு கக்கூசானாங்கப்பார். நீங்கள் இங்கே குறிப்பிட்டது அதை நினைவு படுத்திவிட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

//நாஞ்சில் நாதம் said...
:))

8:38 PM
//

ந ன் றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
//திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடாரத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது. //

repeateyyyy
//

இரா.கி சித்தப்பா.....நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
அனைத்தும் அருமை.
//

நன்றி .ந ன் றி..ந ன் றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்