நடுநிலை என்பது ஒரு மாயச் சொல், 'பிரபலம்' பற்றிய சொல்லின் தன்மையை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். :)
*****
நான் இந்த விருதை பலருக்கும் கொடுக்க வேண்டும். நடு இரவு 2 மணிக்கு மேல் யோசித்தால் ஒருவரைத் தவிர சட்டென்று யாருமே நினைவுக்கு வரலை. நேற்று படித்த ஒரு பதிவு மிகவும் மனம் கவர்ந்தது, தமிழ் சமூகத்தில் இருக்கும் போலித் தன்மையை அதாவது, பெண்களின் புடவையில் காக்கப்படும் தமிழ் பண்பாடு குறித்து, கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.
போன நூற்றாண்டில் செத்த மூளை கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்
"அதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின."
*****
மீதியை அவர் பதிவிலேயே படியுங்கள்,

அவர் நகைச்சுவையாக அந்த இடுகையை எழுதவில்லை, அவரது பதிவுகள் பலவற்றில், அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி, நான் வழங்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது, "சொல்வதெல்லாம் உண்மை" என்கிற பதிவில் எழுதும் பதிவர் திரு.அருண்மொழிவர்மன் அவர்களுக்கே.
சுவையார்வ பதிவு/பதிவர் விருது பெரும் திரு.அருண்மொழிவர்மன் அவர் சுவையார்வ பதிவர்களாக கண்டு கொள்ளும் பிறருக்கும் அதைக் கொடுக்க வேண்டும்.
14 கருத்துகள்:
அருண்மொழிவர்மன் ஒரு பிரபலமான, நடுநிலையான பதிவாளர் அவருக்கு விருது கொடுத்ததில் மகிழ்ச்சி கொள்வார். வாழ்த்துக்கள் கோவி.
\\அதில் இருக்கும் தீவிரத் தன்மையின் ஏற்ற இரக்கம் தான் ஒரு வேளை நடுநிலையோ தெரியவில்லை. எனக்கு திமுக / அதிமுக இரண்டையும் பிடிக்கவில்லை என்று மாற்று அரசியல் வாதிக்கு வாக்களிப்பது நடுநிலையா ? அதுவும் ஒரு எதிர்நிலை தானே.\\
அய்யா சாமி, படித்தவுடனே எனக்கும் நடுநிலை பற்றி குழப்பமே வந்துவிட்டது.
ஒரு அரசியல் கட்சி என்ன செய்தாலும் தவறு செய்தால் விமர்சனமும், நல்லது செய்தால் பாராட்டவும் செய்தால் அது நடுநிலை
என்ன செய்தாலும் பாராட்டுவேன், தவறாக நடந்தாலும் சப்பை கட்டு கட்டுதல் ஆதரவு நிலை
என்ன செய்தாலும் எதிர்ப்பது எதிர்நிலை.
அதற்காக எதிர்கட்சியை பாராட்டினால் மாற்றுக்கட்சியை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தமல்ல.
-2,-1, zero +1, +2
நடுவில் பூஜ்யம் இருப்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.
உங்கள் பதிவுகளை நடுநிலையோடு விமர்சிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:)))
கோவி. கண்ணன்.
//அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி,//
என்னைப் போன்ற ஒரு வளரும் பதிவருக்கு இது போன்ற ஊக்கங்கள் மிகப்பெரும் உந்துதலாக அமையும். நன்றிகள்...
முதலில் அருண்மொழிவர்மனுக்கு வாழ்த்துக்கள்....!வீரியம் மிக்க எழுத்துக்கு அவர் சொந்தம். அதை நக்கலாக நையாண்டியாக தரும் பாங்கு அருமை. சமூகம் மீதான அவரின் பார்வை....! சமூகம் மீதான அக்கறை..! சமூகம் மீதான அவரின் ஆத்திரம்...! எல்லாம் எல்லா எழுத்துக்களிலும் பிரதிபலிக்கிறது...! தொடரட்டும் அருண்மொழிவர்மனாகிய சிறினிவாசன் சுதர்சன்...!
ஐயா கோவி.கண்ணன் நடு நிலை என்ற உங்கள் நிலைப்பாட்டில் நான் ஒத்துப்போகிறேன்.....! எனது சிந்தனையும் அதே...!
//
நடுநிலை என்பது ஒரு மாயச் சொல், 'பிரபலம்' பற்றிய சொல்லின் தன்மையை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். :)
//
நடுநிலை என்பது ஒரு கணிதத்தில் வரும் புள்ளி போல ஒரு கற்பனையான விஷயம்... கருத்து என்று வந்தாலே அதில் நடுநிலை போய்விடுகிறது...அணி சேரா நாடுகள் என்று ஒரு அணி அமைந்தது போல, இரண்டு கூட்டணியும் வேண்டாம், மூன்றாவது கூட்டணி என்பது போல!
ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ஒரு ஆஃப்ரிக்கர் எழுதினாலும், அவரது அரசியல் நிலையை ஒட்டியே கருத்து அமையும்..
பிரபலம்?? இது ரிலேட்டிவிட்டி தியரி போல...ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், பழையாறையில் பிரபலமான நாட்டிய பாடலாசிரியர் கூத்துக் கலைஞர் யார்??? கண்டிப்பாக யாரேனும் இருந்திருப்பார்கள்...ஆனால் இன்று இவர்களை யாருக்கு தெரியும்???
ஆனால், ராஜராஜன்? இவர் இன்றும் பிரபலம்...ஆனால், இவரை ஹங்கரியிலோ, ரஷ்யாவிலோ தெரியுமா??
ஆக, பிரபலம் என்பதும் ஒரு விதமான மாய வார்த்தையே...வேண்டுமானால், அந்த பகுதி பிரபலம், அந்த விஷயத்தில் பிரபலம் ("அந்த" விஷயத்தில் அல்ல) என்று சொல்லலாம்...சமமான இன்னொரு வார்த்தை பேட்டை தாதா!
//மணிகண்டன் said...
அருண்மொழிவர்மன் ஒரு பிரபலமான, நடுநிலையான பதிவாளர் அவருக்கு விருது கொடுத்ததில் மகிழ்ச்சி கொள்வார். வாழ்த்துக்கள் கோவி.
//
மணி வழி மொழிந்ததற்கு நன்றி !
//அய்யா சாமி, படித்தவுடனே எனக்கும் நடுநிலை பற்றி குழப்பமே வந்துவிட்டது.
ஒரு அரசியல் கட்சி என்ன செய்தாலும் தவறு செய்தால் விமர்சனமும், நல்லது செய்தால் பாராட்டவும் செய்தால் அது நடுநிலை
என்ன செய்தாலும் பாராட்டுவேன், தவறாக நடந்தாலும் சப்பை கட்டு கட்டுதல் ஆதரவு நிலை
என்ன செய்தாலும் எதிர்ப்பது எதிர்நிலை.
அதற்காக எதிர்கட்சியை பாராட்டினால் மாற்றுக்கட்சியை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தமல்ல.
//
சிவா, நீங்கள் சொல்வது சரிதான் !
எதிர்கட்சியை பாராட்டுபவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களா ?
//உங்கள் பதிவுகளை நடுநிலையோடு விமர்சிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:)))//
ஐயோ, அதுக்கு நான் பொறுப்பு இல்லை :)
//அருண்மொழிவர்மன் said...
கோவி. கண்ணன்.
//அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி,//
என்னைப் போன்ற ஒரு வளரும் பதிவருக்கு இது போன்ற ஊக்கங்கள் மிகப்பெரும் உந்துதலாக அமையும். நன்றிகள்...
3:31 AM, July 19, 2009
//
அருண்மொழிவர்மன், போலி சட்டை அணிந்து தற்பெருமை கொள்ளும் சமூகத்தின் மீது செருப்பு வீசும் தகுதி உங்கள் எழுத்துக்கு இருக்கு. உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
முதலில் வாழ்த்துகள்..
நடுநிலைக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் ஒத்துகொள்ளகூடியதே...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கோவி
உங்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
நல்ல பதிவர் எழுதிய நல்ல பதிவுக்கு நல்ல தேர்வு
சூப்பர் suppper .
வாழ்த்துக்கள் கோவி
உங்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
நல்ல பதிவர் எழுதிய நல்ல பதிவுக்கு தேர்வான நல்ல விருது
சூப்பர் suppper
நடுநிலை குறித்த உங்கள் கருத்தும் ஏற்கத்தக்கதே! நடு நிலை என்பது 'ரிலேடிவ்' சொல். நான் அதை உங்கள் பதிவில் ரிலேட் செய்து பார்க்கிறேன்!.
பதிவர் அருண்மொழி வர்மனுக்கு வாழ்த்துக்கள் பல.
நீங்கள் ஆறு பேருக்கு விருதுகள் வழங்க வேண்டும் !. அப்போது இவரைப் போன்று பலரும் வெளிச்சத்திற்கு வரக்கூடும்!.
வாழ்த்துக்கள்,
பதிவர் சந்திப்பு படங்கள் பார்த்தேன் கலக்கலா இருக்கீங்க.
பார்க் மிகவும் அருமை.
கருத்துரையிடுக