பின்பற்றுபவர்கள்

எதிர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 மார்ச், 2009

பதிவு எழுதுவதால் வரும் பதினோரு சங்கடங்கள் !

1. கண்டிப்பாக பதிவு எழுதுவதில் நமது நேரம் விரையமாகாது என்ற மூட நம்பிக்கையுடனோ, நேரம் விரையமாகும் என்ற நம்பிக்கையுடனோ தான் பதிவு எழுத வருகிறோம், ஆனால் எப்படி நினைத்து எழுதினாலும் நேரம் வெட்டியாக போய்விடும்

2. பதிவு எழுதிய ஒரே நாளில் மீண்டும் இன்னொரு பதிவு எழுத கை அரிக்க ஆரம்பித்துவிடுகிறது

3. எழுதி முடித்ததுமே, இனி எழுதுவதை இன்னும் இரண்டொரு நாளில் நிறுத்திவிடனும் என்று நினைப்போம் - இது பதிவு எழுதும் எல்லோரும் சொல்லும் வரிகள். ஆனால் திரட்டிகளின் முகப்பில் பதிவுகளைப் பார்த்ததுமே இன்னிக்கு, நாளைக்கு, வாரத்தில், மாதத்தில், ஆண்டில், யுகத்தில் என்று எழுதுவதை நிறுத்துவது பற்றிய முடிவு நீண்டு கொண்டே போகிறது

4. எழுதுபவர் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக் கொண்டால் எழுதத்தொடங்கிய ஓரிருவாரங்களுக்குத்தான் மிஸ்டர் எக்ஸ்சாக இருக்கிறார், அதன் பிறகு அவர் மொக்கை பதிவு போடுவதில் முன்னனியில் இருக்கிறார் என்றும், கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் என்றும், இவரு வேலை வெட்டி இல்லாதவர் என்கிற பிம்பம் பலர் மனதில் படிகிறது


5. நாம எடுத்து எழுதிய அதே தகவலை இன்னொருவரும் கிட்டதட்ட அது போலவே எழுதி இருந்தால், இன்னொருவர் ஏற்கனவே எழுதியதை எழுதிவிட்டதாக குழப்பம் அடைகிறோம். அல்லது நாம எழுதியதையேத் தான் அவரும் எழுதி இருக்கிறார் என்கிற பழிச்சொல்லுக்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. எழுதிய பதிவில் சுதந்திரமாக அனானிகள் பின்னூட்டம் இட்டால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் எடுத்துவிடுகிறோம், இப்படியெல்லாம் கமெண்டு போடுறாங்களே, அல்லது பின்னூட்டமே வரவில்லையே என்கிற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்

7. உண்மையிலேயே பதிவை படித்தவர் பின்னூட்டம் போடவில்லை என்பதால், அவர் படித்தேன் பின்னூட்டம் போட நேரமில்லை என்று சொன்னால் அவரைப் பற்றி நாம் தவறாக நினைத்துக் கொள்ள முடிகிறது, உண்மையிலேயே அவர் படிக்கமலேயே அப்படி சொல்வதென்றால் ... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. பின்னூட்டமே வரவில்லை என்கிற சோகத்தில் நாம் இருக்கும் போது வேறொரு நண்பர் உரையாடியில் வந்து அவர் பதிவில் இணைப்பைக் கொடுக்க பின்னூட்டமே வராத கடுப்பில் நாம் அவரது பதிவிற்கு பின்னூட்டம் இடாமல் வர, அவர் நம்மை தவறாக புரிந்து கொள்ள ஏதுவாகிறது

9. பதிவை தீவிரமாக எழுதுவதால் உழைப்பு, நேரம் இரண்டையுமே இழக்க நேரிடுகிறது என்று பட்டறிவு பதிவர்கள் சொன்னது போல அலுவலக நேரத்தில் பதிவு எழுதினால், வேலை, நேரம், ஊதியம் இம்மூன்றையுமே இழக்க நேரிடுகிறது

10. பின்னூட்டம் வரவில்லை என்றால் உடனே அடுத்த பதிவு எழுதவேண்டும் என்ற ஆவல் வராது. அதுவே பின்னூட்டம் குவிந்தால் உடனே எழுதவேண்டும், நம்மை பலர் படிக்கிறார்கள் (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. நல்ல பதிவுகளை படிக்கிறோம், அதில் சில நல்ல பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை என்றால் எழுதியவருக்கு கிடைக்கும் வெளிப்படையான பாராட்டுகளுக்கு தடையாக இருக்கிறோம்

நன்றி : பரிசல்காரன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்