அண்மையில் நானும் பதிவுலகம் சாராத நண்பர் ஒருவரும் ஜாய் டூராக தாய்லாந்து சென்ற போது, பேங்காகில் உள்ள புத்தர் கோவில்களை சுற்றிப் பார்க்க டாக்சி தேடினோம், ஒரு ஆட்டோகாரர், அவராகவே முன் வந்து அழைத்துச் செல்வதாக கூறினார், ஆட்டோ கட்டணம் எப்படி மீட்டரா ? என்று கேட்க, அதெல்லாம் வேண்டம் வெறு 20 பாட் கொடுங்க போதும் என்றார். 20 பாட் இந்திய ரூபாய் மதிப்புக்கும் 20 ரூபாய்தான். 'வெரீ சீப்' என்று அகமகிழ்ந்து ஏறி அமர்ந்தோம். நிற்கும் புத்தர், படுத்திருக்கும் புத்தர், எமரால்ட் புத்தர், பலிங்கு புத்தர் என விதவிதமான புத்தர் கோவில்களுக்கு கூட்டிச் செல்வதாக சொன்னார். சொன்னபடி முதலில் பலிங்கு புத்தர் கோவிலுக்கு கூட்டிச் சென்றார். பெரிய விகார் அதனுள்ளே ஒரு அடி உருவ வெள்ளை பலிங்கில் செய்யப்பட்ட புத்தர். கோவில் மூடி இருந்ததால் ஜன்னல் வழி தரிசனம் தான் கிடைத்தது. அங்கு வந்த வெள்ளைக்காரனிடம் இந்திய பெருமைகளை பேசிவிட்டு ஆட்டோவுக்கு திரும்பினோம்.

அடுத்து 'நிற்கும் புத்தரை' பார்க்கப் போவதாக சொன்னார் ஆட்டோகாரார். ஆட்டோகாரரிடம் அந்த ஜூவல்லரி கடையில் உங்களுக்கு கமிசனா ? என்று கேட்டேன், ஒப்புக் கொண்டார். ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போதே...'இதைவிட பெரிய கடை ஒன்று இருக்கிறது, அதில் வெளிநாட்டினருக்கு ஸ்பெசல் ப்ரோமசனில் கற்கள் விற்கிறார்கள்' என்று சொன்னார். 'ஐயோ சாமி ஆளை விடுங்க' என்று சொல்லியும் கெஞ்சாத குறையாக, 'நான் அங்கு சென்றால் எனக்கு இலவச பெட்ரோல் என்றார். சரி பொழைச்சு போகட்டும் என்று அங்கும் சென்றோம். அங்கு ஒரு சிறிய கல்லை 300 பாட்-க்கு வாங்கிவிட்டு திரும்பினோம், இந்த முறை 'நிற்கும் புத்தர் கோவிலுக்குச்' சென்றார்.

வாங்கி வந்த கற்கள் இப்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. வாங்கி கடாசியதோடு சரி.
*****
பெயர் ராசி, ராசி கற்கள், ஜோசியம் பார்த்து பரிகாரம் செய்வது இவையெல்லாம் வாழ்கையை மாற்றுதாம். நம்புறாங்க. அப்பறம் ஏன் சாமி.....'சாமி நம்பிக்கை எல்லாம் வைக்கிறீங்க ?' கேட்கத்தான் ஆசை. சாமிகளை விட கற்கள் சக்தி படைத்ததா ? ம் கல்லும் சாமியும் ஒன்னுதான்னு கல்லில் சிலை வடித்திருக்கிறார்கள் போலும்.
ராசி கற்கள் அணிவதிலும் தவறான கற்களை அணிந்துவிட்டால் அதிர்ஷ்டம் ரிவர்சில் காணாமல் போய்...பெரும் துன்பம் நேர்ந்துவிடுமாம். அப்படியும் அடம்பிடித்து ராசி கற்களை அணிய விரும்பினால், கீழே இருக்கு கற்களின் பட்டியல், உங்க பிறந்த தேதிக்கு எந்த கல்லு நல்ல கல்லுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்.

சொடுக்கிப்பார்த்தால் விவரம் பெரியதாக தெரியும்.
*****
பேங்காக் செல்பவர்கள் குறைந்தவிலையில் நிறைந்த சவாரி செய்ய ஆட்டோ வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
இந்த இடுக்கை பாச மலர் மொக்கை TAG க்காக எழுத அழைப்பு விடுத்தைத் ஏற்றுக் கொண்டு எழுதியது. இடுகை மொக்கையாக இல்லை என்று வருத்தப்பட்டால், பின்னூட்டத்தை மொக்கையாக போடுங்க. அட்ஜிஸ்டு பண்ணிக்கிடுவோம்.
நான் யாரை மொக்கை TAG க்கு கூப்பிடுவது ?
ஏற்கனவே பலர் மொக்கைதான் போடுகிறார்கள் ( அடிக்கவர்றாதிங்க என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) அப்பறம் தனியாகவேற மொக்கை பதிவா ?
பாவம் விட்டுடுவோம். பதிவர் பாவம் பொல்லாதது !!!
:)))
பின்குறிப்பு : முதல் புகைப்படத்தில் ஆட்டோவினுள் இருப்பது நான் அல்ல. எனது நண்பர் ஜெ.கண்ணன்.