பின்பற்றுபவர்கள்

23 ஜூலை, 2009

பதிவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு !

பதிவர்களுக்குள் விருது வழங்குவது பற்றி குறைப் பட்டுக் கொண்டு 'பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ? ' ஒரு பதிவை எழுதி இருக்கிறீர்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது,

"இன்று பல்கலைகழகங்களின் விருதே கேலிக்கூத்தாகி விட்டது.(கூத்தாடிகளுக்கு கொடுத்து) ஒரு காலத்தில் முனைவர் என்றால் எங்கோ ஒன்றோ இரண்டோ பேர் இருப்பார்கள். உண்மையிலே அவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் என்று அரசியல்வாதிகளுக்கும், திரைப்படத்துறையினருக்கும் பட்டம் கொடுத்தார்களோ! அன்றே அது கேலிக்கூத்தாகி விட்டது"

அங்கீகாரம் பெற்றப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் கேலிக் கூத்துகள் உங்களுக்குத் தெரியாதா ? "டாக்டர்" பட்டம் பெற்ற கலைச் சேவை நடிகர்களின் கலைத் திறன் தரம் பற்றி இந்தப் பல்கலைக் கழகங்கள் என்ன வகையான ஆய்வுகள் இதுவரை நடத்தி இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் வழங்குகிறது என்பதைத் தவிர்த்து அந்த பட்டங்களுக்கு ஏதேனும் பொருளோ மதிப்போ உண்டா ? - என்று கேட்கிறீர்கள், அது முறைகேடு. அவ்வாறு நடக்கக் கூடாது. ஒப்புக் கொள்கிறேன்.

அங்கீகாரம் பெற்றவர்கள் தான் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் பொதுமக்களால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக பிரதமர் யார் வரவேண்டும் என்று ஓட்டளிப்பதையெல்லாம் மக்கள் ஆட்சி கேலிக் கூத்து என்பீர்களா ?

வலைப்பதிவார்கள் தங்களுக்குள் விருது கொடுப்பது சிலப் பதிவர்களின் எழுத்திறன் தனிப்பட்ட வகையில் அவர்களுக்கு பிடித்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக மட்டுமே. அந்த விருதை வைத்துக் கொண்டு யாரும் பெரிய ஊடகங்களில் காட்டி ஏமாற்றி எந்தப் பதவியையும் அடைய முடியாது என்கிற அறிவு அற்று நடந்து கொள்வதில்லை. விருது பெற்றவர்கள் அப்படி எதும் முறைகேடடக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக்காட்டினால் உங்கள் குற்றச் சாட்டுகளில் ஞாயம் இருக்கிறது எனலாம்.

இப்போது இந்த நோய் பதிவுலகில் பரவி இருக்கிறது. இதை ஒரு ஆரோக்கியமான அமைப்பின் கீழ் கொண்டு வருவது மிகவும் அவசியம். குறைந்த பட்சம் இதை "தமிலிஷ்" "தமிழ்மணம்" மற்றும் இப்போது புதிதாக வந்திருக்கும் தமிழ் திரட்டிகள் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு பட்டாம் பூச்சி விருது, கரப்பான் பூச்சி விருது, வெண்டைக்காய் விருது, சுண்டைக்காய் விருது என கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வாங்குபவர்களும் "பத்மஸ்ரீ" பட்டம் கிடைத்ததைபோல பெருமைப்பட்டுக்கொண்டு, அவர்களுக்கு உடனே ஒரு நன்றி பதிவு வெளியிட்டு தாங்களும் அதற்கு தகுதியானவர்போல காட்டிக்கொள்கிறார்கள். ஏன்? இப்படி பூச்சி விருது கொடுப்பவர்கள், அதன் கூட பணமும் கொடுக்கவேண்டியதுதானே? ஏனெனில் கௌரவமான விருதுகளுடன் பணமும் வழங்கப்படுகிறது என்பதை ஏன் மறக்கிறீர்கள் அல்லது மறைக்கிறீர்கள்?

வலைப்பதிவினரிடையே புரிந்துணர்வையும் எழுத்துத் திறணையும் ஊக்கப்படுத்த பதிவர்களுக்குள் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை மனம் திறந்து பாராட்டுவதே சரியாகும். திரட்டிகள் எதுவும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பெரிய ஊடகம் சாராத எழுத்தார்வமிக்கவர்கள் குறிப்பாக பதிவர்கள் தான் அல்லது பதிவர்கள் துணையுடன் தான் திரட்டிகள் நடக்கிறது. நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இதுவரை அனைத்து திரட்டிகளும் சேவை மனப்பாண்மையால் தான் இயங்குகின்றன. மாதம் 5000 முதல் ஆண்டுக்கு 1 லட்சம் வரை திரட்டி நடத்துபவர்கள் செலவு செய்கிறார்கள். அதில் அவர்களுக்கு இணைய ஊடகப் புகழ் என்பதைத் தவிர்த்து எந்த ஒரு பொருள் லாபமும் கிடையாது. அவர்கள் மட்டும் தான் விருதுகள் வழங்க வேண்டுமென்றால் தனி நபர்களாக இன்னும் எவ்வளவு செலவுகளை அவர்களால் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முடியும். அப்படியே நடத்தினாலும் அதுவும் குழுசார்ப்பில் இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரு தேன்கூடு சாகரன் இருக்கும் வரை இயன்றவரை போட்டிகள் நடத்தினார். அவரும் ஒரு பதிவர் தான். தமிழ்மணம் திரட்டி சென்ற ஆண்டு போட்டி அறிவித்தது, வழி நடத்த ஆள் பற்றாக்குறையும், நேரமும் இல்லாததால் போட்டிப் போக்கை மாற்றி திடிரென முடிவுகள் அறிவித்தார்கள். திரட்டிகள் அனைத்தும் நிர்வாக அடிப்படையில் இயங்கினாலும் பகுதி நேரமாகத்தான் அதனை ஒரு சேவையாக நடத்துகிறார்கள். பதிவர்களும் திரட்டிகளின் சேவையைத் தவிர்த்து பெரிததாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

பதிவர்கள் ஒருவருகொருவர் புரிந்துணர்வை வளர்க்க வேறு வழி இல்லாமல் தங்களுக்குள் விருதுகளை அறிவித்துக் கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு பதிவரும் 'விருது' களை எடுத்துக் கொண்டு போய் மார்வாடிக் கடையில் அடகு வைத்ததாகவோ, அதைக் கேவலப்படுத்தியதாகவோ தெரியவில்லை.

விருதும் பணமும் கொடுக்க திரட்டிகள் முன்வருவதற்கு நீங்கள் ஆதங்கப்படுவதற்கு பதிலாக ஒரு குழுவை அமைத்து அந்த நடவடிக்கையில் நீங்கள் அவர்களுக்கு உதவலாமே. பதிவர்கள் நடத்தும் போட்டிகள் பற்றி அபி.அப்பா ஏற்கனவே எழுதி இருக்கிறார். அதை மீண்டும் இங்கே சொல்வதைத் தவிர்க்கிறேன். பதிவர் ஒருவர் "சிறப்பாக எழுதுபவர் யார் ?"" என்பதை பலருக்கு அடையாளம் காட்ட யாருடைய அங்கீகாரம் பெற வேண்டும் ?

குறை சொல்லும் முன் எதாவது செய்துவிட்டு சொன்னால் நீங்கள் சுட்டும் குறைகள் புரிந்து கொள்ளப்படும். எதுவுமே செய்யாமல் குறைச் சொல்வது ஞாயமே இல்லை. உங்கள் குற்றச் சாட்டுகள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இல்லை.

25 கருத்துகள்:

Raju சொன்னது…

சிங்கம் களமிறங்கிருச்சுடோய்ய்ய்ய்.........!

நர்சிம் சொன்னது…

ரைட்டு...

cheena (சீனா) சொன்னது…

இரு இடுகைகளையும் படித்தேன் - விவாதத்திற்குரிய இடுகைகள்

எனக்கென்னவோ - பதிவர்கள் விருதுவழங்குவது தவறில்லை எனத் தான் தோன்றுகிறது

பார்க்கலாம்

அபி அப்பா சொன்னது…

நல்ல அருமையான பதிவு கோவியாரே!!!

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏதோ எங்களை போன்றோருக்கு விருதுகள் ஒரு ஊக்கமே!.

போற்றுவார் போற்றட்டும் ...

அப்பாவி முரு சொன்னது…

நம்மாளுக கடப்பாரை சுத்தியலூடதான் கருத்து சொல்றாங்க.

படிக்கிறதுக்கே பயமா இருக்கு.

கருத்து கானாப்போயிடுது..

Unknown சொன்னது…

நல்ல அருமையான தெளிவான பதிவு!!

வெங்கடேஷ்

அறிவிலி சொன்னது…

நீங்கள் சொல்வது முழுவதையும் வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

நாம் விரும்பும் பதிவுகளை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தும் ஒரு வழியாகவே இந்த விருதுகள் இருக்கின்றன.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சிங்கை சிங்கம் களத்துள இறங்கிடுச்சா?

எதாவது நல்ல சண்டையாத் தான் இருக்கும்.

எதுக்கும் உக்காந்து வேடிக்கை பாக்க நாற்..காலி... போட்டா நல்லா இருக்கும்...
:):ப

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

>//நட்புடன் ஜமால் said...
ஏதோ எங்களை போன்றோருக்கு விருதுகள் ஒரு ஊக்கமே!.

போற்றுவார் போற்றட்டும் ...//


பிரபல பதிவர் நட்புடன் ஜமால் சொல்வதையும் அப்படியே ஆதரிக்கிறேன்.

வால்பையன் சொன்னது…

அந்த சொம்பவிட இந்த சொம்பு லேச நசுக்குன மாதிரி தெரியல!

எல்லாம் மன”பிராந்தி”யா இருக்கும்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிநேகிதன் அக்பர் சொன்னது…

முழுமையான கருத்து சுதந்திரமும், நட்பும் வலையுலகை தவிர்த்து நிஜத்தில் வேறு எங்கும் காண முடியாது.

நாம் என்னதான் சமத்துவம் பேசுபவராக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் அதை கடைப்பிடிப்பது கடினம்.

ஆனால் இங்கு யாரும் தொழில், ஜாதி, மதம், சம்பளம், வீடு இது எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. எல்லோருக்கும் பார்ப்பது அடுத்தவரின் எழுத்துக்களை மட்டுமே.

என‌வே பிடித்த‌வ‌ர்க‌ள் கொடுக்க‌லாம் பிடிக்காத‌வ‌ர்க‌ள் ஒதுங்கிவிட‌லாம்.

நல்ல பதில் கோவி.

நிகழ்காலத்தில்... சொன்னது…

விருது கொடுப்பது என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டமான விசயம்.

விசயம் இருக்கிறதா, இல்லையா என்பதை விட மகிழ்ச்சிதான் முக்கியம்

விருதுகள் தொடரட்டும், அதில் உள்ள நிபந்தனைகள் வேண்டுமானால் பொருந்தாமல் இருக்கும், அதை விட்டு விடலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

விருது கொடுக்கும் அனைவருமே பதிவர் செல்வராஜ் அவர்களுக்கும் ஒரு விருது கொடுக்க வேண்டுமென்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
காரணம் சரியோ தப்போ மனதுள் புழுங்காமல் தன் கருத்தைத் துணிந்து கூறியுள்ளார்.
பாராட்ட வேண்டாமோ??
கோவியார்...உங்கள் பக்க நாயத்தை மென்மையாகக் கூறியுள்ளீர்.;தொடரவும்

Radhakrishnan சொன்னது…

இதுபோன்ற அங்கீகாரம் எழுதுபவரை உற்சாகப்படுத்தும் என்பதில் மறுகருத்து இல்லை.

தனது மனதில் தோன்றியதை செல்வராஜ் சொல்லியிருக்கிறார், அவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை மறுக்க இயலாது, ஆனால் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் எழுதிவிட முடியாது என நீங்கள் சொன்னதை மறுபரீசிலனை செய்து பாருங்கள் எனும் கோவியாரின் பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஒன்று இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...
இதுபோன்ற அங்கீகாரம் எழுதுபவரை உற்சாகப்படுத்தும் என்பதில் மறுகருத்து இல்லை.

தனது மனதில் தோன்றியதை செல்வராஜ் சொல்லியிருக்கிறார், அவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை மறுக்க இயலாது, ஆனால் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் எழுதிவிட முடியாது என நீங்கள் சொன்னதை மறுபரீசிலனை செய்து பாருங்கள் எனும் கோவியாரின் பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஒன்று இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

மிக்க நன்றி.
//

திரு இராதாகிருஷ்ணன் ஐயா,

யாரையும் இதையெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது பதிவர்களுக்கு அழகல்ல, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகளைப் பலரும் விரும்புகிறார்கள்.

நான் அவரது கருத்துக்கு எதிர்வினையாகத்தான் எழுதினேன். அப்படி ஒரு கருத்தைச் சொல்லக் கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. அவரது கருத்தை ஏற்கமுடியாது என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்

க.பாலாசி சொன்னது…

//பதிவர்கள் ஒருவருகொருவர் புரிந்துணர்வை வளர்க்க வேறு வழி இல்லாமல் தங்களுக்குள் விருதுகளை அறிவித்துக் கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.//

உண்மைதான், இதுபோன்ற வழிகளிலேயே என்போன்றோர்களுக்கிடையேயான நட்பு தொடர்கிறது.

Radhakrishnan சொன்னது…

//யாரையும் இதையெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது பதிவர்களுக்கு அழகல்ல, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகளைப் பலரும் விரும்புகிறார்கள்.

நான் அவரது கருத்துக்கு எதிர்வினையாகத்தான் எழுதினேன். அப்படி ஒரு கருத்தைச் சொல்லக் கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. அவரது கருத்தை ஏற்கமுடியாது என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்//

விளக்கத்திற்கு நன்றி கோவியார் அவர்களே.

துபாய் ராஜா சொன்னது…

அப்படி போடு அரிவாளை.....

கிடுகுவேலி சொன்னது…

இங்கே இந்த விருதுகள் ஒன்றும் கேலிக்கூத்து விழாவாக இல்லை. எனது பதிவே சிறந்தது என்றில்லாமல் மற்ற பதிவருடைய பதிவை ஏற்று அங்கீகரித்து மதிப்புடன் விருது வழங்கும் அந்த மனப்பாங்கு சிறந்ததுதானே. "..போற்றுவார் போற்றட்டும்..".
ஐயா பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் பட்டங்கள் (படித்துப்பெறாத) அனைத்திலும் உடன்பாடில்லை. எழுதிய அவரும் உணருவார்.

priyamudanprabu சொன்னது…

அவருக்கும் ஒன்னு கொடுங்க கோவி அண்ணா

ARV Loshan சொன்னது…

நாங்களே விருது வாங்கும்போதும், வழங்கும்போதும் என்னவோ எதோ, ஏற்பார்களோ என்று பயந்து தயங்கும்போது, இதென்ன புதுக் கூத்து?

இதை விருது, பொற்கிழி, மட்டை,மண்ணாங்கட்டி என்று பெரிதாக்காமல் அன்புப் பரிசாக எடுக்க வேண்டியது தானே..

இதுக்கெல்லாம் ஆதங்கம்,ஆட்சேபனை என்று தேவையா?

கோவியார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்..

கோவியார் சொன்னதை நான் மிக உறுதியாக வழிமொழிகிறேன்..

Admin சொன்னது…

நல்லதொரு பதிவு.........

விருதுகள் புதிய பதிவர்களை ஊக்கப் படுத்துவதாக அமைந்துள்ளன...

Joe சொன்னது…

விருதோட 5000$ பரிசுத் தொகை கொடுக்கச் சொன்னேன், பதிலே வரல.

என்ன அநியாயம்? ;-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்