இந்தப் பதிவைப் படித்ததும், அந்த பதிவரை (ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்) எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. நம் கண்ணுக்கு முன்பே நடக்கும் பொறுப்பற்ற செயல்களை தட்டிக் கேட்கும் துணிவு ஒரு சிலருக்குத்தான் வரும், அதை திரையில் காட்டும் போது அதில் நடித்தவர்களை உண்மையான நாயகர்களாகப் பார்த்து ரசிகர் மன்றம் அமைத்து, 'உயிர் மண்ணுக்கு, உடல் தலைவனுக்கு' என்கிறார்கள். அந்த பதிவில் கண்டபடி எதாவது ஒரு உண்மைச் சம்பவம் இதுவரை படமாக்கப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை, 'அஞ்சு' பைசாவின் மதிப்பு குறித்து 'அன்னியன்' படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் போன்றோருக்கு இது போன்ற உண்மைச் நிகழ்வுகள் நல்லதொரு படம் எடுக்கும் வாய்ப்பாக அமையும். ஒரு அரசு அலுவலர் கடமையை சரியாக செய்யாமல் விடுவதாலும், பொறுப்பற்றவர்களின் செயல்களாலும் அலைக்கழிக்கப்படும் தனிமனிதன் படும் துன்பங்கள் பற்றி தெரியவந்தால் முடிந்த வரைக்கும் பாலிஷ் போட்டு படம் எடுப்பாங்க, ஆனால் உண்மையிலேயே அவற்றின் தீர்வுகள் தான் என்ன ? தீர்வு கிடைக்குமா ?
அதை நீங்களே படிங்க.... கிணறு வெட்ட பூதம்...! (கதையல்ல உண்மை, கொஞ்சம் நீளமான பதிவு)
பின்பற்றுபவர்கள்
17 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
16 கருத்துகள்:
தீர்வு கிடைக்காது - அப்படியே கிடைத்தாலும் மிக மிகத் தாமதமாக - பாதிக்கப்பட்ட மனிதருக்கு மட்டுமே கிடைக்கும்
Thanks for sharing such a fantastic writing & blog.
Raja
// Raja said...
Thanks for sharing such a fantastic writing & blog.
Raja
//
திரு இராஜா,
நாளை சிங்கையில் பதிவர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது, நீங்களும் கலந்து கொள்ளலாம். அது பற்றிய விவரங்கள் இங்கே
திரு இராஜா,
நாளை சிங்கையில் பதிவர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது, நீங்களும் கலந்து கொள்ளலாம். அது பற்றிய விவரங்கள் இங்கே//
Thanks Mr.Govi,
But I am just reader only, not a blogger. Anyway, if time permits, will join with you team.
Raja
//Raja said...
திரு இராஜா,
நாளை சிங்கையில் பதிவர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது, நீங்களும் கலந்து கொள்ளலாம். அது பற்றிய விவரங்கள் இங்கே//
Thanks Mr.Govi,
But I am just reader only, not a blogger. Anyway, if time permits, will join with you team.
Raja
//
இராஜா,
பதிவர் சந்திப்பில் வலைப்பதிவு வாசகர்கள் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. நேரம் ஒதுக்கி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
//cheena (சீனா) said...
தீர்வு கிடைக்காது - அப்படியே கிடைத்தாலும் மிக மிகத் தாமதமாக - பாதிக்கப்பட்ட மனிதருக்கு மட்டுமே கிடைக்கும்
//
சீனா ஐயா,
நம்பிக்கையோடு முயற்சிப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடி என்கிற வகையில் வாழ்த்துவோம், பாராட்டுவோம்
கோவியார் அவர்களே,
உங்களுக்கு சுவாரசியமான பதிவர் விருது கொடுத்துள்ளேன். சுட்டி
http://ilayapallavan.blogspot.com/2009/07/blog-post_16.html
வாங்கிக்கிட்டு கொடுங்க!!!
திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு வணக்கம். நண்பரே, என் பதிவுக்கு தாங்கள் தந்த இந்த ஆதரவுக்கு என் உயிரிலிருந்து நன்றிகள் பல சொல்கிறேன். பின்னூட்டங்கள் என் பதிவில் குவிகின்றன. மனிதர்கள் மீதான என் நம்பிக்கை புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. நன்றி நண்பரே. மிக்க நன்றி.
//shri ramesh sadasivam said...
திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு வணக்கம். நண்பரே, என் பதிவுக்கு தாங்கள் தந்த இந்த ஆதரவுக்கு என் உயிரிலிருந்து நன்றிகள் பல சொல்கிறேன். பின்னூட்டங்கள் என் பதிவில் குவிகின்றன. மனிதர்கள் மீதான என் நம்பிக்கை புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. நன்றி நண்பரே. மிக்க நன்றி.
//
மிக்க நன்றி சார்,
அதன் தொடர்பில் நீங்கள் அலைந்து கொண்டி இருப்பதால் பிரச்சனைகள் தீர்ந்ததும் என்றாவது ஒருநாள் வலையுலகில் உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது, பக்கபலமாக பலர் இருக்கிறார்கள் என்று அறிந்தால் பெருமகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைத்தேன். இன்றே உங்கள் கண்ணில் பட்டது, உங்களுக்கு மிக்க உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கையில் உள்ளம் உவகை கொள்கிறது.
உங்கள் போராட்டத்திற்கு உடனடியாக வெற்றிகிட்ட வேண்டும், உங்களுக்கு மேலும் பல புகழ்கள் வந்து சேரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நீங்கள் தான் உண்மையான ஹீரோ !
கோவி கண்ணன் இதை பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி
சொல்ல வார்த்தைகளேயில்லை அவரது முயற்சியை வாசித்தபின். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் பல.. :)
அவரிடத்தில் நான் இருந்திருந்தால் இவ்வளவு துணிவோடிருந்திருப்பேனா என்பது அய்யமே.
முதலில் வந்த போது முழுமையாகப் படிக்க முடியவில்லை.
தன் உரிமையைக் கேட்கக் கூட மனிதன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?
என்னால் இப்படிப் போராட முடியாது என்றே தோன்றுகிறது.
\\நம்பிக்கையோடு முயற்சிப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடி என்கிற வகையில் வாழ்த்துவோம், பாராட்டுவோம்\\
பாராட்டுகிறேன்
வாங்க நம்ம பக்கத்துக்கு
சுட்டிக்கட்டப்பட்டுள்ள பதிவைப் படித்ததும் என் மனதில் தோன்றியவை:
காவல்துறை செய்த தவறாக நான் பார்ப்பது, கேவலம் 'டீ'க்காகவோ, பணம் பெற்றுக்க் கொண்டோ புகார் கொடுக்க வந்தவரை அடித்தும், இரவு 9:30 மணி வரை காவல் நிலயத்தில் வைத்திருந்தது மட்டும் தான். இப்பிரச்சனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ஒன்றே தீர்வு. அதுவும் உடனடியாகக் கிடைக்காது.
"Physical Injury" இல்லாத பட்சத்தில், அமெரிக்கா போன்ற மிக அதிக அளவு காவல்துறையினரைக் கொண்ட நாட்டிலேயே, காவல்துறையினர், இம்மாதிரியான விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.
கருத்துரையிடுக