பின்பற்றுபவர்கள்

வயிற்றெரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயிற்றெரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஏப்ரல், 2009

யார் வைத்த ஒப்பாரி இனிமையாக இருந்தது ?

ஈழத்தமிழர்களின் வாழ்வாதரத்தில் தலையிட்டு இந்திய அரசு செய்தது மன்னிக்க முடியாது வரலாற்று பிழை. இந்தியா இதில் தலை இடாமல் இருந்தால் அவர்கள் வழியில் அவர்கள் போராடிக் கொண்டு இருப்பார்கள், இருந்த கொஞ்சம் நிலப்பகுதியையும் இலங்கை அரசிடம் இழந்து, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறார்கள் தமிழர்கள். ஈழத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் உடலில் இருப்பது சிவப்பு ரத்தமா, உயிர் வலி இருக்கிறதா என்று பார்க்காமல் ஓயாது சிங்களவெறி, இதற்கு வயிற்றில் வளரும் கருவும் விதி விலக்கு இல்லை.

கொலையில் வீழும் பிணங்களுக்கு சிறப்பாக ஒப்பாறி வைப்பவர் யார் ?

ஜெ- இராமதாஸ் கூட்டணியின் உண்ணாவிரதமா ? கருணாநிதியின் தந்தி,தபால், மனித சங்கிலி, பந்த் ?


நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று அழுதுக் கொண்டு அவிழ்ந்த கூந்தலை முடிக்க கணவர் உயிருக்காக தமிழர்கள் உயிரெடுக்கப் போவதாக சபதம் செய்த இத்தாலி அம்மையாரா ?




*****



இத்தாலி பெண்ணுக்கு தமிழர் உயிர்பற்றி என்ன கவலை வந்துவிடும் ? மன்மோகன் தான் ஆளுறாரு அந்த அம்மா வெறும் காங்கிரசு தலைவலி தான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுறானுங்க ? பிறகு எதற்கு அரசை விட்டுவிட்டு தலைவலியிடம் போய் முறையிடனும் ?

உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்.



அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, இன்றைய தமிழ் சிறுவர்கள் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு நாளைக்கு இதில் தொடர்புடையவர்கள் அனைவரையுமே பலிவாங்க தொடங்கினால் அப்போதும் ஞாயம் தருமம் பேச ஒருத்தனுக்கும் அருகதையே இல்லாமல் போய்விடும். ஈழத்தில் உள்ள தமிழர்களை அழித்துவிடலாம், ஆனால் இன்று உலகமெங்கும் பரவி இருக்கும் அவர்களது சொந்த பந்தம் இவற்றை உன்னிப்புடன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. புஷ்சுக்கு நாடுவிட்டு நாடு வந்த போது கிடைத்த செருப்படிகள் முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங் செருபால் அடித்தான் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

19 ஜனவரி, 2009

போர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி !

கலைஞர் : மிஸ்டர் சிங், எங்க கூட்டணிக் கட்சிகளின் போர் நிறுத்த கோரிக்கை என்ன ஆச்சு ?

சிங் : அதைப் பரிசீலித்து தான், இந்திய கிரிக்கெட் அணியை இலங்கை அனுப்புறோம்

கலைஞர் : அவங்க பேச்சு வார்த்தை நடத்தப் போறாங்களா ?

சிங் : கலைஞர் ஜி, அவங்க பேச்சு வார்த்த நடத்த போகலை, விளையாடப் போறங்க, இவங்க அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை இலங்கை இராணுவம் அவ்வப்போது போரை நிறுத்திவிட்டு பார்ப்பாங்க.

கலைஞர் : சோனிய ஜி வாழ்க.


பின்குறிப்பு : இலங்கையில் நடக்கும் தமிழின துடைத்தொழிப்பை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இலங்கையுடன் இந்திய உறவு உறுதிப்பட்டு கிடக்கிறது என்று உலக நாடுகளுக்கு காட்டவே இந்த இலங்கை - இந்திய கிரிக்கெட் ஆட்டம் இந்த வேளையில் நடக்கிறது. சிங்களர்களுக்கு உற்சாகம் தர இந்திய அணியை அனுப்பும் சோனிய காங்கிரஸ் கட்சியும், அவர்தம் தமிழக கூட்டணி கட்சிகளும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்