பொத்தி பொத்தி வைக்கப்படும் எதுவும் பயன்படாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமஸ்கிரதம் எனப்படும் வடமொழி. சமஸ்கிரதம் புழக்கத்தில் இருந்து மறைந்து போனதற்கு முழுப் பொறுப்பும் பார்பனர்களுடையது. இன்றைய ஆங்கிலத்தில் நூல்கள் எழுதுபவர்கள் அனைவருமே வெள்ளைக்காரர்கள் கிடையாது. பிறமொழிகளை தாய்மொழியாக் கொண்ட ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் எழுதும் நூல்கள் வெள்ளைக்காரர்கள் எழுதும் நூல்களை விட மிகுதியானவை.
பிராகிரதம் எனப்படும் வேதமொழி கிட்டதட்ட ஐரோப்பிய மொழிகளின் ஒலியமைப்பையும் இலக்கணத்தையும் ஒத்திருந்ததை வரலாற்று மொழி ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. ஐரோப்பிய மொழி ஒப்புமைகள் பழைய சமஸ்கிரத மொழியில் இருந்ததை வைத்துதான், சமஸ்கிரதம் இந்தியாவின் மொழி அல்ல, வெளியில் இருந்து வந்தது என்று குறிப்பிட்டு ஆரியர்கள் வருகைப் பற்றிய கருத்துகள் எழுந்தன.
விக்கிபீடியாவில் இருந்து,
Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan.[9] Within the wider Indo-European language family, Sanskrit shares characteristic sound changes with the Satem languages (particularly the Slavic and Baltic languages), and also with Greek.[10]
In order to explain the common features shared by Sanskrit and other Indo-European languages, many scholars have proposed migration hypotheses asserting that the original speakers of what became Sanskrit arrived in what is now India and Pakistan from the north-west some time during the early second millennium BCE.[11] Evidence for such a theory includes the close relationship of the Indo-Iranian tongues with the Baltic and Slavic languages, vocabulary exchange with the non-Indo-European Finno-Ugric languages, and the nature of the attested Indo-European words for flora and fauna.[12]
The earliest attested Sanskrit texts are Hindu texts of the Rigveda, which may be located in the Punjab region and dated to the mid-to-late second millennium BCE. No written records from such an early period survive.
இன்றைய தேதியில் ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலப்படுத்திக் கொள்கிறதோ அதே போன்றே பழைய சமஸ்கிரதமும் பல்வேறு திராவிட மொழிகளின் சொற்களை சமஸ்கிரத ஒலிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிரதம் லட்சக்கணக்கில் சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டிருந்தது. அதை முறைப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பனானி என்கிற பண்டிதரால் சமஸ்கிரதத்திற்கு இலக்கணம் எழுதப்பட்டு, எழுத்து வழக்கிற்கு பயன்படும் ஒரு மொழியாகியது. கிமு 5 ஆம் நூற்றாண்டு வரை காலத்தில் சமஸ்கிரத்திற்கு எழுத்துகள் தோன்றி அல்லது அமைப்பட்டு இருக்கவில்லை. புத்தரின் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது, அதற்கு முன்பு எழுத்தில் இருந்தவை திராவிட மொழிகளும், பாலி மொழியும் தான். அசோகர் தனது கல்வெட்டுகள் அனைத்தையும் பாலி மொழியில் தான் எழுதினார். நாளந்தா போன்ற பழைய பல்கலைக் கழகங்களில் பாலி மொழியில் பயிற்றுவிக்கப்பட்டது. புத்த மதத்தை தகர்க்க மாற்று வேண்டும் என்று முன்னின்றவர்கள் மாற்றுமொழியாக அதுவும் எழுத்து வழக்கு மொழியாக முன்வைக்கப்பட்டது தான் சமஸ்கிரதம். பார்பனர் மட்டுமல்லாது பவுத்த மதத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் சமஸ்கிரத்தில் எழுதுவது பாரதம் முழுதும் பரவும் என்கிற கருத்தில் சமஸ்கிரத்தில் எழுதத் தொடங்கினர். சமஸ்கிரத நூல்களில் பார்பனர்களின் பங்களிப்பை விட பார்பனர் அல்லோதோரின் பங்களிப்பே மிகுதி.
மனு ( நான்காம் நூற்றாண்டு) க்கு பிறகு பார்பனர்கள் இந்து சமயத்தை வருண பேதத்தின் சாக்கிட்டு கையில் எடுத்துக் கொண்டபடியால், ஆளுமை செலுத்தும் நோக்கில் பிற மொழியை தாய் மொழியாக உடையவர்களுக்கு சமஸ்கிரதம் பயிற்றுவிப்பதைத் தவிர்த்தனர். பார்பனர் அல்லாதோரின் பங்களிப்புகளும் குறைய தொடங்கியது. ஞானசம்பந்தர் காலத்தில் பக்தி இயக்கம் வளர்க்கிறேன் என்ற பெயரில் புத்தமததினருக்கு எதிராக தமிழ் மொழியை பலரும் முன்னெடுக்க, தமிழ்நாட்டில் சமஸ்கிரத பயன்பாட்டிற்கும் சேர்த்தே ஆப்பு வைத்துவிட்டனர். இருந்தாலும் முடிந்தவரை வடமொழி தமிழில் கலக்கச் செய்ய மணிப்ரளவம் என்னும் உத்தி கையாளப்பட்டது, அதன் தாக்கமாக மலையாளம் என்னும் புதிய மொழிப் பிறந்ததைத் தவிர்க்க முடியாமல் போனது.
இவை பழைய வரலாறு என்ற போதிலும், மறைமலை அடிகள் காலத்தில் தமிழின் தூய்மை படுத்த தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தமிழில் வடமொழிக்கலப்பு மிகுதியாகவே களையப்பட்டது.
வெள்ளைக்காரர்கள் வடமொழியின் மூலம் குறித்து ஆராய்ந்த போது, அடி மடியில் கைவைக்கிறார்களே என்கிற பதற்றத்தில் வடமொழி தேவ பாஷை என்னும் கட்டுக்கதைகளெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பி விடப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு பழைய இலக்கியத்திலும் வடமொழி குறித்து அப்படி ஒரு கருத்து இருந்தது இல்லை.
வடமொழி புழக்கம் குறைந்ததற்கு அது பொத்தி வைக்கப்பட்டதும், மிகவும் உயரியதாக காட்ட பிற மொழிகளை தூற்றியதே வடமொழி மீதான பிறர் வெறுப்புக்காரணம். என்னைக் கேட்டால் உலக அளவில் பலரின் நாக்கு, தொண்டை இவற்றின் ஒலிக்கு ஏற்ப பேசப்படும் ஆங்கிலத்துக்கு மாற்றாக முன்வைக்க் கூடிய தகுதிகள் உடைய சிறந்த மொழிகளில் சமஸ்கிரதமும் ஒன்று. மிகவும் புனிதம் பூசி மறையச் செய்துவிட்டார்கள்.
இப்பவும் கூட வடமொழியின் மேன்மை என்கிற பெயரில் பரப்பரப்படும் கருத்துகளில் ஒன்று, 'ஆங்கிலத்தில் மிகுதியான சமஸ்கிரதச் சொல் இருக்கிறது, ஆங்கிலமே சமஸ்கிரத்தில் இருந்து பிறந்தது, சமஸ்கிரதம் உலக மொழிகளின் மூலம்' - இது எப்படி இருக்கிறதென்றால் தன்னைப் போல் இருப்பவன் ஒருவனைப் பார்த்து வியப்பது போல் ஆகும், இருவரின் பெற்றோர்கள் பற்றி தீரக் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அவர்களின் பெற்றோர் இருவரும் எதோ காரணங்களினால் முன்பே பிரிந்த அண்ணன் தம்பிகள் என்றும் இவர்கள் இருவரும் வாரிசுகள் என்கிற உண்மை. அதாவது சித்தப்பா மகனைப் பார்த்து அவன் சித்தப்பா மகன் என்று அறியாமல் தன்னைப் போலவே இருக்கிறான் என்கிற வியப்பும், ஒருவேளை தந்தையின் இரத்தத்தில் பிறந்தவனோ என்கிற ஐயம் ஏற்படுவது போல் ஆகும். ஆனால் சமஸ்கிரதம் - ஆங்கில ஒப்பீட்டில் இவை ஆங்கிலத்தில் பலசொற்களில் வடமொழி சொற்கள் இருப்பதால் இருப்பதால் அது வடமொழியில் இருந்து பிறந்ததாகக் பெருமையாகப் பேசப்படுகிறது.
இன்றைய ஆங்கிலம் என்பது லத்தீன், கீரேக்க மொழிகளின் கலவை, கூடவே உலக மொழிகளின் சொற்களை ஏற்றுக் கொள்கிறது, அதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது சமஸ்கிரதம், தமிழில் மிகுதியான (தேவையான என்ற பெயரில் சொல்லப்படும்) பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் போல் ஏற்றால் என்னவாகும் என்பதை சற்றேனும் சிந்தித்து பாருங்கள். பிறமொழியில் இருக்கும் அனைத்து சொற்களையும் ஏற்கவேண்டுமென்றால் அதை அந்த மொழியிலேயே படித்துவிடலாம், அதை ஏன் தாய்மொழியிலும் சேர்க்க வேண்டும் ?
வெள்ளைக்காரர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆங்கிலம் வெள்ளையர்களின் மொழி என்று கூறி பிறர் படிப்பதைத் தடுத்தால் ஆங்கிலம் வளருமா ? மறையுமா ? பிறர் படிக்கக் கூடாது என பார்பனர்களால் சமஸ்கிரதம் இவ்வாறு தான் தடுக்கப்பட்டது.
இணைப்புகள் : சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்
Sanskrit - From Wikipedia, the free encyclopedia
பின்பற்றுபவர்கள்
16 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
20 கருத்துகள்:
கோவி.கண்ணன் ஒரு பல்கலைக்கழகம்.
அருமையான அலசல்
நல்ல தொகுப்பு.
செங்கிருதம் பற்றிய தகவல்களும் விமர்சனமும் அருமை.
புழக்கத்தில் இல்லாதது வழக்கொழிந்து போகும் என்பது 100 % சரி.
நல்ல பதிவு கோவி.
mr .no will come
மிஸ்டர் எஸ் கருத்து :
சிங்கைபிடியா கோவி அவர்களே.
உங்கள் பதிவில் இருக்கும் கருத்துக்கள் தமிழ் இந்து எனும் வலைதளத்தின் கட்டுரைக்கு எதிர் சார்ப்பு சொல்லவேண்டும் என்றே இருக்கிறது.ஆய்வு சார்ந்து இல்லை.
மொழி என்பது வர்ண, மத மற்றும் ஜாதி தன்மைகளை கலக்காமல் ஆய்வு செய்ய வேண்டும்.
//இன்றைய தேதியில் ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலப்படுத்திக் கொள்கிறதோ அதே போன்றே பழைய சமஸ்கிரதமும் பல்வேறு திராவிட மொழிகளின் சொற்களை சமஸ்கிரத ஒலிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டது.//
பிற மொழி சொற்களை ஆங்கிலம் போன்று சமஸ்கிருதம் ஏற்றுக்கொண்டது என்பது உங்கள் கருத்து.
//அதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது சமஸ்கிரதம், தமிழில் மிகுதியான (தேவையான என்ற பெயரில் சொல்லப்படும்) பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் போல் ஏற்றால் என்னவாகும் என்பதை சற்றேனும் சிந்தித்து பாருங்கள்.//
மேலே இருக்கும் முரண்களை கவனியுங்கள். சமஸ்கிரதமும் ஆங்கிலமும் பிற மொழி சொல்லை ஏற்றதால் இந்த நூற்றாண்டிலும் அதை பற்றி பேச முடிகிறது.
அதை போல தமிழும் இருக்கட்டுமே?
ஆங்கிலம் எப்படி வளர்ந்ததோ அதுபோல வளரும் சிந்திக்க என்ன இருக்கிறது?
இன்றும் ,18ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய தமிழ் எழுத்து உரு மற்றும் தமிழின் சொல்லாடல்களை தான் பயன்படுத்துகிறீர்களா?
ஐயன்மீர் சிந்திப்பீர்..!
இதனால் தமிழ் இரண்டு நூற்றாண்டுகளாக வழர்ந்ததா? தேய்ந்ததா?
அரசியல்வாதிகள் மொழிக்கு திராவிட சாயம் பூசிவிட்டார்கள் நீங்களும் அவர்கள் பாணியில் அரசியல் செய்யாதீர்கள்.
அப்புறம் சிங்கை 'ஆதீனம்' கோவி என்றே கூப்பிட வேண்டிவரும் :)
//ஐயன்மீர் சிந்திப்பீர்..!
//
இதுல சிந்தக்க ஒன்றும் இல்லை,
மிகவும் மிகுதியான சொற்களை கடன்வாங்கி இருப்பதால், ஆங்கிலத்துக்கே எளிமையான ஆங்கில அகராதி இல்லை என்றால் படிக்க முடியாது என்கிற நிலை சென்று கொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையா ?
பயிற்சி இல்லாமல் பழகினால் ஆங்கிலம் பேச முடியும், ஆனால் ஒரு ஆங்கில நூலை வாசிக்க வெறும் பேச்சு வழக்கு ஆங்கிலம் போதாது.
ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திற்கு வரவேற்ப்பு குறைவுதான். எந்த ஒரு காலத்திலுமே அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி உருவாகிவிட முடியாது. ஏனெனில் தொண்டை, உள் நாக்கு, மூக்கு, நாக்கு, அடி நாக்கு இத்தனையும் பேச்சின் போது செயல்படுகின்றது, அந்த அந்த இன மக்களின் இந்த உறுப்பு அமைப்பிற்கு ஏற்பத்தான் அவர்களது மொழிகளின் எழுத்தொலிகள் அமைந்திருக்கும். இந்த உண்மை புரியாதவர்கள் மொழி பற்றி முற்போக்கு என்ற பெயரில் எல்லா மொழியின் ஒலிப்பையும் ஏற்கச் சொல்லுவார்கள். நீங்களுமா ?
ஜப்பான் காரன் ஆங்கிலம் பேசுவான் உங்களுக்குத்தான் புரியாமல் போகும்.
இங்கே சிங்கையில் ஆங்கிலம் பேசுவாங்க அதுக்கு பேரு சிங்கிலீஸ், அது வெள்ளைக்காரனுக்கு புரியாது.
//மேலே இருக்கும் முரண்களை கவனியுங்கள். சமஸ்கிரதமும் ஆங்கிலமும் பிற மொழி சொல்லை ஏற்றதால் இந்த நூற்றாண்டிலும் அதை பற்றி பேச முடிகிறது.
அதை போல தமிழும் இருக்கட்டுமே?//
இந்த நூற்றாண்டிலும் அதைப் பற்றிதான் பேச முடியுது, அதையே பேச வைக்க முடியலையே, :) எந்த மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில அல்லது ஒரு வட்டாரவழக்கு என்கிற அளவிலாவது வடமொழி பேசப்படுகிறதா ?
தமிழுக்கும் அந்த நிலை வரவேண்டும் என்பது உங்கள் ஆசையா ? அவ்வ்வ்வ்
//பிற மொழி சொற்களை ஆங்கிலம் போன்று சமஸ்கிருதம் ஏற்றுக்கொண்டது என்பது உங்கள் கருத்து.//
விக்கிபீடியா இணைப்பு கொடுத்து இருக்கிறேன் படித்து பாருங்கள்.
வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள் இது பற்றி தனி அகராதியே போடலாம்
//விக்கிபீடியா இணைப்பு கொடுத்து இருக்கிறேன் படித்து பாருங்கள்.
வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள் இது பற்றி தனி அகராதியே போடலாம்//
விக்கிபீடியா என்பது அனைத்துக்கும் சான்று என சொல்லிவிட முடியாது. சில நாட்களில் கருத்துக்கள் தவறு என மாற்றம் செய்யக்கூடிய பகுதி அது. ஆதாரமாக கொள்ளக்கூடாது.
உங்களிடம் ஒரு கேள்வி, உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா?
கோவி.கண்ணன் said...
//உங்களிடம் ஒரு கேள்வி, உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா?//
மொழி அரசியல் தெரியும். மொழிகள் பற்றிய பொதுப் புரிந்துணர்வு இருக்கிறது. இசையை ரசிக்க இசை அமைபபளராக அல்லது சங்கீத 'ஞானம்' தெரிந்தவராக இருக்கனும் என்று சொல்ல வந்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு 'விடை' கொடுக்கிறேன்.
//விக்கிபீடியா என்பது அனைத்துக்கும் சான்று என சொல்லிவிட முடியாது. சில நாட்களில் கருத்துக்கள் தவறு என மாற்றம் செய்யக்கூடிய பகுதி அது.//
அப்படி என்றால் Father - பித்ரூ, Mother - மாத்ரூ ஒலியும் பொருளும் இன்னும் பல நூறு சொற்கள் ஆங்கிலத்திற்கும் வடமொழிக்கும் பொதுவாக இருப்பதற்கு விளக்கம் கேட்டு சொல்லுங்க.
/கோவி.கண்ணன் said...
//உங்களிடம் ஒரு கேள்வி, உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா?//
மொழி அரசியல் தெரியும். மொழிகள் பற்றிய பொதுப் புரிந்துணர்வு இருக்கிறது. இசையை ரசிக்க இசை அமைபபளராக அல்லது சங்கீத 'ஞானம்' தெரிந்தவராக இருக்கனும் என்று சொல்ல வந்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு 'விடை' கொடுக்கிறேன்.//
இசையை 'ரசிக்க' யாருக்கும் இசை அமைப்பாளர் அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இசையை ‘விமர்சிக்க' கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
தெரியாத ஒன்றை பற்றி கருத்து கூறுவது, தமிழக அரசியல்வாதிகள் ஈழ மக்களின் துயரை பற்றி கூறுவதற்கு சமம். அங்கே சென்று அவர்களுடன் உறவாடி நிலைகண்டு கருத்து சொன்னால் உணர்வு பூர்வமாக இருக்கும். டீவியில் பார்த்துவிட்டு கதறினால் அது அரசியல் மட்டுமே.
ஆகவே நீங்கள் சொல்லுவது சரி. உங்களுக்கு மொழி 'அரசியல்' தெரிந்திருக்கிறது..!
பாரதி கூட தமிழ் உயர் மொழி என சொல்லும் பொழுது என்ன சொன்னான் ? யாம் அறிந்த மொழிகளிலே..(அவருக்கு 8 மொழிக்கு மேல் பேச எழுத தெரியும்) அதனால் தான் பாரதியின் கவிதைகளில் உயிர் இருக்கிறது.
/அப்படி என்றால் Father - பித்ரூ, Mother - மாத்ரூ ஒலியும் பொருளும் இன்னும் பல நூறு சொற்கள் ஆங்கிலத்திற்கும் வடமொழிக்கும் பொதுவாக இருப்பதற்கு விளக்கம் கேட்டு சொல்லுங்க.//
பசுமாடு ‘மா' என கத்துகிறது அதனால் அது இந்தி மொழியில் கத்துகிறது என சொல்லுவதற்கு சமம்.
பித்ரூவுக்கும் பாரன்ஸ்க்கும் தான்
உறவு உண்டே தவிர father -க்கு இல்லை.
ஒலி என்பது அடிப்படையானது. அனைத்து சங்கீத முறையிலும் 8 அலகுகளே இருப்பது போல.
அதனால் சங்கீதம் இங்கிருந்து சென்றது நாங்கள் தான் சப்த ஸ்வரத்தின் அத்தாரட்டி என சொல்லக்கூடாது.
கருத்துக்களை இருபுறமும் உணர்ந்து கூறுங்கள்.
உங்களுக்கு தமிழ் தெரியும்- ஆங்கிலம் தெரியும். இதை ஒப்பிடுங்கள்.
சமஸ்கிருதத்திற்கு நான் 'வக்காலத்து'(இது அரேபிய சொல்) வாங்கவில்லை. கருத்தை கருத்துடன் சொல்லுங்கள் கந்த சாமி என்கிறேன்..:)
//இசையை 'ரசிக்க' யாருக்கும் இசை அமைப்பாளர் அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இசையை ‘விமர்சிக்க' கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
//
:) ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய இயக்குனராக இருக்கனும் என்று சொல்ல வர்றீர்களா ?
அவ்வ்வ்வ்வ்வ்
விமரசனம் செய்யும் அளவுக்கு மொழிகள் பற்றி அறிந்திருக்கிறேன். சமஸ்கிரதம் பற்றி விமர்சிக்கும் ஒருவர் அதில் புலமை பெற்றிருந்தாலும் அவரை ஆங்கிலேய கைக்கூலியாகத் தூற்றுவது தானே ஸ்வாமி சமஸ்கிரத பற்றாளர்களின் செயல் ?
இதோ இதைப் படிங்க
எனக்கு வடமொழியின் முழு அறிவு தேவையில்லாத ஒன்று. வடமொழியில் சிறப்பை அறிந்த தாங்கள் முடிந்தால் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றியும் கொஞ்சம் படியுங்கள்.
//பித்ரூவுக்கும் பாரன்ஸ்க்கும் தான்
உறவு உண்டே தவிர father -க்கு இல்லை.//
இதுக்கு பதிலாக Father க்கும், Motherக்கும் உறவு இருக்குன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம். ஏனெனில் வெள்ளைக்காரர்கள் ஐரோப்பியர்கள் கிடையாது :)
//ஒலி என்பது அடிப்படையானது. அனைத்து சங்கீத முறையிலும் 8 அலகுகளே இருப்பது போல.//
எங்க ஊர் கிராமத்தில் சிவாஜியை சிவாசின்னும் எம்ஜிஆரை எம்சிஆர்ன்னும் தான் சொல்லுவாங்க. ஒலிப்பு முறைகள் அனைவருக்கும் ஒன்றே கிடையாது. இருந்தாலும் 8 கட்டையில் பாடுபவர்கள் உண்டு, அவங்களக்கு 'ஸ'ங்கீதம் தெரியாது.
மேல்நாட்டு ஆய்வாளர்களை வைத்து இதை முடிவு செய்ய முடியாது. காரணம் அவர்களுக்கு நாகரீகத்தின் முன்னோடி ஐரோப்பா தான் என்ற எண்ணம் உண்டு. அதனால் அனைத்தும் அங்கிருந்து வந்ததாக சொல்லுவார்கள்.
திராவிட கலாச்சாரத்தின் மறுமுகம் என்ற தலைப்பில் ஒரு ஐரோப்பியர் எழுதிய புத்தகம். ஐரோப்பியர்கள் எப்படி தங்களை உயர்வாக சொல்லிகொள்ள பிற நாகரீகத்தை சொன்னார்கள் என்பதை வெளிச்சமிட்டது. அந்த புத்தகமும் தடைசெய்யப்பட்டது.
மேல்நாட்டுக்காரர்களின் கருத்தை கொண்டு உள்நாட்டு மொழியை முடிவு செய்யலாமா? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
//எங்க ஊர் கிராமத்தில் சிவாஜியை சிவாசின்னும் எம்ஜிஆரை எம்சிஆர்ன்னும் தான் சொல்லுவாங்க. ஒலிப்பு முறைகள் அனைவருக்கும் ஒன்றே கிடையாது. இருந்தாலும் 8 கட்டையில் பாடுபவர்கள் உண்டு, அவங்களக்கு 'ஸ'ங்கீதம் தெரியாது.//
சங்கீதம் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அது ஸ-என ஆரம்பிக்கிறது என்பதால் அதற்கு ஸங்கீதம் என பெயர்.
எப்புடீ...? :))
ஸ்வாமி,
இசையை விமர்சிப்பவர் எல்லோருமே சுப்புடுவாக இருக்கனும்னு எதிர்பார்க்கிறிங்க :) பாமரர்களின் விமர்சனம் அந்த இசையை புறக்கணிப்பது தான், அதை மெளனமாகச் செய்வார்கள். ஒரு பாட்டு ஹிட்டா இல்லைன்னு தீர்மானிக்கிறது இசை விமர்சகர்கள் இல்லை :)
//ஸ்வாமி ஓம்கார் said...
மேல்நாட்டு ஆய்வாளர்களை வைத்து இதை முடிவு செய்ய முடியாது. காரணம் அவர்களுக்கு நாகரீகத்தின் முன்னோடி ஐரோப்பா தான் என்ற எண்ணம் உண்டு. அதனால் அனைத்தும் அங்கிருந்து வந்ததாக சொல்லுவார்கள்.//
ஆஹா ஆஹா, யோகவுக்கு 'வெள்ளைக்காரனே' போற்றுகிறான் என்று சொல்லும் (நீங்கள் அல்ல) போது அவனோட அங்கீகாரம் கிடைத்தை பெருமையாகச் சொல்லும் போது வெள்ளைக்காரன் உயர்ந்தவன் ஆகிறான். அதையெல்லாம் வெள்ளைக்காரன் சொன்னால் அது சிறந்ததாகிறது. அதே வெள்ளைக்காரன் கொள்ளைக்காரர்களைச் சொன்னால் மட்டும் கிறித்துவ மிசனறி பார்வையாகிறது. 'ஹிந்து'க்களின் முரண்பாடு அப்படித்தான் தொடங்குகிறது ஸ்வாமி.
//திராவிட கலாச்சாரத்தின் மறுமுகம் என்ற தலைப்பில் ஒரு ஐரோப்பியர் எழுதிய புத்தகம். ஐரோப்பியர்கள் எப்படி தங்களை உயர்வாக சொல்லிகொள்ள பிற நாகரீகத்தை சொன்னார்கள் என்பதை வெளிச்சமிட்டது. அந்த புத்தகமும் தடைசெய்யப்பட்டது//
கால்டுவெல் புத்தகம் தடைசெய்யப்படலை, அதே வெள்ளைக்க்காரர்கள் சிந்துசமவெளி உலக நாகரீகத்தின் முன்னோடிகள் என்று சொல்வதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பிங்க ?
கருத்துரையிடுக