பின்பற்றுபவர்கள்

24 பிப்ரவரி, 2013

பாம்பும் பார்பானரும் -> இஸ்லாமிய திரித்தல்


....ஸப்பா ரொம்ப நாளாச்சு பெரியார் குறித்த அவதூறுகளுக்கு மறுப்பு எழுதி, மற்றபடி நான் திக தொண்டனோ, திராவிட போர்வாளா இல்லை, தமிழகத்தில் எண்ணற்றோர் பகுத்தறிவு பெறவும், பெண் கல்வி முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்டோர் இந்து இழி நிலைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்து பிற :"மதங்களுக்கு" மாற பெரியாரின் அறிவுரைகள் பெரும் துணையாக இருந்தன என்பதால் பெரியார் மீது வேறெந்த தமிழக தலைவர்களை விட மிகுந்த ஈடுபாடும் பற்றுதலும் உண்டு.

இன்றைக்கு ஒரு இஸ்லாமிய பதிவர் பதிவு என்ற பெயரில் பெரியார் பார்பனர்களைக் கொல்லச் சொன்னார் என்கிற முஸ்தீபுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார், நாமெல்லாம் இஸ்லாம் தொடர்பில் ஏங்க உங்க மதம் போரில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது, குரான் ஹதீது என்று எதையெடுத்தாலும் போர் பற்றி நிறைய வருகிறதே.......என்று கேட்டால் அப்படியில்லை எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இஸ்லாம் என்றாலே அமைதி நீங்கள் படித்த ஹதீது தகவல் அல்லது குரான் வசனம் போர் நடந்த காலத்தில் வெளிப்பட்டதாக இருக்கக் கூடும், என்றே மழுப்புவார்கள். அதாவது இவங்க சொல்லும் விளக்கம் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்து வந்து கேட்காதீர்கள், அதில் தொடர்புடையதையும் படித்தால் தான் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு வெளங்கும் என்பதே இவர்கள் அத்தகைய வசனங்களுக்கு கொடுக்கும் மாபெரும் விளக்கம்.

பெரியார் பாம்பையும் பார்பானையும் ஒன்றாக கண்டால் பார்பானை அடி என்று சொன்னார் என்ன ஒரு வெறுப்புணர்வு ? ஒட்டு மொத்த பார்பனர்களையும் அடிக்கச் சொல்லுவதா ? தடித்தனமான பேச்சு, துவேசம், ஆவேசம், கொலைவெறி என்றெல்லாம் அறைகுறையாக ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு 'திடீர் பார்பன ஆதரவாளர்களாக மாறி இருக்கும் இவர்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருது, இதை நாசுக்காக சொல்ல ஆடு நனைவதற்கு ஓநாய் ஒப்பாறி வைப்பதைத் தான் சொல்ல முடியும் ? காலம் காலமாக இஸ்லாமியர்களுக்கும் பார்பனர்களுக்கும் உள்ள ஒற்றுமை நமக்கு தெரிந்தவையே, இந்துத்துவா என்றால் அதை பின்னால் இருந்து வழிநடத்தும் பார்பனர்கள் என்றே எந்த ஒரு இஸ்லாமியர்களும் நம்புவர், இவர்களுக்கு பார்பனர்கள் மீதான திடிர் கரிசனம் நகைச்சுவை, எங்காவது குண்டு வெடித்தால் காவிக் கும்பல்களை விட வேகமாக 'இது காவிக் கும்பலின் கைங்கர்யமாக இருக்கும், அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து தண்டிக்காமல் அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும், என்று முந்திக்  கொண்டு கருத்து சொல்லிவிடுவார்கள், 

இப்ப பெரியார் - பாம்பு - பார்பானர் - அடி கதைக்கு வருவோம்.

பெரியார் சொன்னதாக குறிப்பிட்ட "பாம்பையும் பார்பனரையும் கண்டால் பாம்பை விடு பார்பானை அடி" - இந்த வரிகள் பெரியாரின் எந்த பேச்சு தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கவில்லை, ஆனாலும் பெரியார் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை எல்லா தி.க தொண்டர்களும் ஒப்புக் கொள்வர். இன்றைய தேதிக்கு பொதுக் கூட்டங்கள் ப்ளக்ஸ் போர்ட் வைத்து அரசு மின்சாரத்தை திருடி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கட் அவுட்டுகள், தோரணங்கள் களைகட்ட இரவை பகலாக்க்கும் ஒளியில் 80 - 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதில்லை. பெட்ரொமாக்ஸ் விளக்குகளின் ஒளி, கூட்டம் ஏற்பாடு செய்பவர்களின் வசதிக்கேற்ற ஒலிப்பெருக்கி என்ற அளவில் தான் பொதுக் கூட்டங்கள் நடைபெறும், ஆட்சியும் அதிகாரமும் பார்பனர்கள் கையில் இருந்த காலங்களில் பெரியார் கூட்டங்களுக்கு காவல் துறையில் பெரிய ஒத்துழைப்பும் கிடையாது, முடிந்த அளவில் கூட்டங்களில் கலகம் விளைவிப்பதையே தொழிலாக வைத்திருந்தனர், 

பெரியார் கூட்டங்களில் பார்பனர்களும், அவர்கள் ஏற்பாடு செய்த ஆட்களும் ஊடுருவி செருப்பு வீசுவது, அழுகிய முட்டைகளை வீசுவது, மலம் வீசுவது, பாம்புகளை வீசுவது உள்ளிட்டவைகள் எல்லா கூட்டங்களின் நிகழ்வாகவே இருந்தது, பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று தெரிந்ததால் அதுவும் இரவு நேரத்தில் அவற்றை கூட்டங்களினிடையே விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை பெரியார் எதிர்ப்பு பார்பனர்கள் நன்றாகவே தெரிந்து அதன் படி பாம்புகளை விட ஆட்களையும் ஏற்பாடு செய்திருந்தனர், பாம்பை பார்பனர் கையால் பயமில்லாமல் தொடுவார்களா ? என்கிற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம்,. ஏற்பாடு செய்த  ஆட்கள் பாம்புகளை கூட்டத்தில் விடுகிறார்களா என்று  கூட்டத்தின் அருகில் இருந்தே  கண்காணிப்பர், இது பெரியாரின் காதுகளுக்கும் சென்றது, கூட்டம் நடக்கும் பொழுது பாம்புகள் விடப்பட்டு கூடியிருப்பவர்கள் அலறிய பொழுது பேசிக் கொண்டிருந்த பெரியார் 'பாம்பையும் பார்பானையும் கண்டால் பாம்பைவிடு பார்பானை அடி' என்று கூறி இருக்கிறார். கூட்டத்தில் பாம்புவிட ஏற்பாடு செய்த பார்பனர் பெயர் தெரியாத நிலையில் பெரியாரால் அவ்வாறு தான் சொல்லி இருக்க முடியும், பாம்பு ஏற்பாடு செய்தவன் தேவதநாதன் என்ற பெயர் கொண்ட பார்பனர் என்றால் பாம்பையும் தேவநாதனையும் கண்டால் தேவநாதனை அடி என்று கூறி இருப்பார் :) எந்த பாவமும் அறியாத பாம்பு என்ன செய்தது அதை ஏன் கொல்ல வேண்டும் என்று பெரியார் நினைத்திருக்கக் கூடும்.

சிந்திக்க வேண்டாமா ? இதை மதப் புத்தகத்தில் மனப்பாடமாக படித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா ? பெரியாரின் உற்ற தோழர் இராஜாஜி என்றும் அவர் ஒரு பார்பனர் என்று அனைவரும் அறிந்த தகவல் தான், பெரியார் பார்பனர்களை அழிக்கச் சொல்லுவது உண்மை என்றால் கொள்கைக்கு முரணாக இராஜாஜியை கடைசி வரை தோழராக கொன்டிருப்பாரா ? அல்லது அவர் தலைமையில் தான் மணியம்மையை அவர் மணந்திருப்பாரா ? பெரியாரின் பார்பன வெறுப்பு என்பது பார்பனர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் அகற்றப்பட வேண்டும், பார்பனர்களின் தீண்டாமைக் கொள்கை அழித்தொழிக்கப்பட வேண்டும், அவர்களால் கதைக்கப்படும் மூட நம்பிக்கைகள், மனுதர்மம், வருணாசிரமக் கோட்பாடுகள் அழிக்கப்பட வேண்டும் என்பதே, மற்றபடி பார்பனர்களை தமிழ் நாட்டை விட்டே துறத்துங்கள் என்று அவர் சொல்லி இருக்கவில்லை, 

சிந்திக்க வேண்டாமா  ? இஸ்லாமிய நண்பர்களுக்கு இன வெறுப்பு என்றால் என்பதை குரானும் ஹதீசும் பாடமாகவே நடத்துகிறது, அவற்றை ஏக காலத்திற்கும், எந்த இனத்தவருக்கும் பொருந்தும் வசனம் என்று அன்றாடம் கூறும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டாமா ? 


யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
• நூல்: புகாரி 2926

யூதர்களுடன் உங்கள் போரின் வெற்றி அறிவிக்கப்படாதவரை உலக முடிவு நாள் வராது என்பதே அதன் சாரம், அதாவது நீங்களும் யூதர்களும் நண்பர்களாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதைக் குறிப்பிடுவதுடன் அதனை தீர்ப்பு நாளுடனும் முடிந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கேயெல்லாம் நீங்கள் என்பது அரேபியர்களைக் குறிப்பிடும் சொல் என்றெல்லாம் இவர்கள் சொல்லமாட்டார்கள், ஏனெனில் இவர்களின் நம்பிக்கை இஸ்லாமின் போதனைகள் ஒட்டுமொத்த உலக நன்மைகானது என்பதே, இந்த ஹதீதில் இருப்பது யூத வெறுப்பா ? அல்லது அணைப்பா ?

முகமது நபியின் கடைசி கூட்டத்தில் முகமது நபி கூறியவையாகக் கூறப்படுவது 

"யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்."

அதாவது அரேபியா அரேபியர்களுக்கானது, அதில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இடமில்லை, அவர்களை வெளியேற்றுவது உங்களுக்கு கடமையாகிறது என்கிற அளவுக்கு அதனை விளங்கிக் கொள்ள முடியும், இதில் கிறிஸ்துவ வெறுப்பும் யூத வெறுப்பும் இல்லையா ? இறைத்தூதர் என்றால் பிறர் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவ்வாறு கூறிக் கொள்கிறவர் உலக மக்கள் அனைவருக்கும் தாம் பொதுவானவர் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும், அந்த நம்பிக்கையை மேற்கண்ட வாசகத்தின் பொருள்  தந்துள்ளதா ?

பெரியாரைத் தூற்றும் முன் ஹதீதுகளை முழுதாகப் படித்துவிட்டு வரலாமே, இப்போதெல்லாம் குரான், ஹதீதுகள் பற்றி பிறரும் (இஸ்லாமியர் அல்லாதவர்களும்) அறிந்துள்ளனர் என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ளட்டம்

சிலைவணங்கிகள், காபிர்கள் என்றெல்லாம் அடைமொழியுடன் இவர்களது அல்லாவை நம்பாதவர்கள் மீது வெறுப்புணர்வை விதைத்துள்ளதாக குரான் மீதும், ஹதீது மீதும் பிறர் குற்றம் சொன்னால் அதை இவர்களால் மறுக்க முடியுமா ? பிறகு ஏன் இவர்கள் யாரையோ திருப்திப் படுத்த பெரியார் மீது கல்லெறிகிறார்கள் ?

பெரியார் பேச்சின் ஒரு பகுதியை பிடித்துத் தொங்கி குழப்பம் ஏற்படுத்து முயற்சி செய்யும் இவர்களே வேண்டுமென்றால் வெட்கமில்லாமல் அவர் ஒரு இறைமறுப்பாளர் என்று நன்கு தெரிந்தும் (மார்க்க விரோதமாகவே) 'பெரியார் எங்கள் மதத்தை சமத்துவம் போற்றும் மதம் என்று சான்றிதழ் தந்துள்ளார்' என்று எழுதுபவர்கள் என்பது முரண் நகை

யாரோ ஒருவர் எழுதியதை ஏன் 'இஸ்லாமிய திரித்தல்' என்று எழுதியுள்ளீர்கள், இவர்கள் தான் இஸ்லாமியரின் ஒட்டுமொத்த அடையாளமா ? என்று கேட்பவர்கள் உண்டென்றால்,   எழுதுபவர்கள் அப்படித்தான் தங்களை எண்ணிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கவே அவ்வாறு வைத்துள்ளேன்.

PJ வையும் BJP யவையும் கண்டால் PJ....  ன்னு கூட ஒரு தளத்தில் எதோ எழுதி இருக்கிறார்கள், லிங்கெல்லாம் கொடுக்க முடியாது, கூகுள் இட்டு தேடிக் கொள்ளவும். :)

56 கருத்துகள்:

Unknown சொன்னது…

இன்றும் அப்பதத்தை சொல்லியெ..பெரியார் சீடர்களின் அரசியல் நகர்கிறது ..என்பது கண்கூடு!

Unknown சொன்னது…

முதல் முறையாக புதிய விளக்கத்தை தெரிந்துகொண்டேன்...மிக்க நன்றி..

தருமி சொன்னது…

//இன்றைக்கு ஒரு இஸ்லாமிய பதிவர் பதிவு என்ற பெயரில் பெரியார் பார்பனர்களைக் கொல்லச் சொன்னார் என்கிற முஸ்தீபுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார், //

இப்படி எழுதும்போது தொடுப்பு கொடுத்தால் நலம். (இதற்குப் பதிலாக //லிங்கெல்லாம் கொடுக்க முடியாது, கூகுள் இட்டு தேடிக் கொள்ளவும். :)// என்று சொல்ல மாட்டீர்களென நம்புகிறேன்!!!!

குலசேகரன் சொன்னது…

முதன் முறையாக அறிகிறேன்.

இது இசுலாமியரை விட தமிழ்ப்பார்ப்ப்னர்கள் படிக்கவேண்டிய பதிவு. குறிப்பாக இன்றைய தலைமுறை.

தருமி சொன்னது…

//...என்று கேட்டால் அப்படியில்லை எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இஸ்லாம் என்றாலே அமைதி நீங்கள் படித்த ஹதீது தகவல் அல்லது குரான் வசனம் போர் நடந்த காலத்தில் வெளிப்பட்டதாக இருக்கக் கூடும், //

இந்த ஜோக் எனக்கு இப்போதெல்லாம் ரொம்ப பிடித்த ஜோக்காகிப் போச்சு!!

தருமி சொன்னது…

என்னங்க ... கீழ்க்கண்டவாறெல்லாம் சொல்லியிருக்குல்ல ....!

//உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும்.// (குர்ஆன் 60:7)//

அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். -- இதை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்க்றீங்க ...?!!

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி எழுதும்போது தொடுப்பு கொடுத்தால் நலம். (இதற்குப் பதிலாக //லிங்கெல்லாம் கொடுக்க முடியாது, கூகுள் இட்டு தேடிக் கொள்ளவும். :)//

தமிழ்மணத்தில் இருக்கு, தேடிப் படிங்க, பதிவுக்கு இணைப்புக் கொடுப்பது அந்தப் பதிவுக்கு வெளம்பரமாக அமையும் என்பதால் கொடுப்பதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

////உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும்.// (குர்ஆன் 60:7)//

அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். -- இதை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்க்றீங்க ...?!!//

:)

அதுவும் அண்டை வீட்டுக்காரர்கள் போல் நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஒருவேளை ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்பவர்கள் இஸ்லாமியர் என்று புரிந்து கொள்ள வேண்டுமோ ? :) இதுக்கெல்லாம் ஏன் ப்ராகெட் விளக்கமெல்லாம் இல்லை ?

ssk சொன்னது…

எது எப்படியோ, பெரியார் என்ற பெருமான் இல்லாவிடில் தமிழகத்தில் இன்றும் பல்லாயிரம் மக்கள் குல தொழில் செய்து அவமான படுத்தப்பட்டு கொண்டு இருப்பர். அதில் பயனடைதவன் என்ற முறையில் , எந்த மதமும் கடவுளும் என்னை காப்பாற்றாத போது பெரியார் மட்டுமே என்னை காப்பாற்றி கை தூக்கி விட்டார் அறிவை கொடுத்து ... பார்பான் அப்படி தான் இருப்பான் ..நாம் தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

நல்ல பதிவு. ஆப்பசைக்கும் குரங்கு என்பதற்கு இன்னொரு பெயர் என்றால் வஹாபிகள் என்றால் மிகையாகாது!!.

இந்துத்வ அரசியலை அஞ்சி விமர்சிக்கு தவிர்க்கும் வஹாபிகள் ,தங்களை ஆதரிக்கும் திராவிட நாத்திகர்களை விமர்சிப்பதை இப்படி மட்டுமே பார்க்க முடியும்!!.

சரிங்க பெரியார் பார்ப்பானை அடி என்று சொன்னார் , அதுவும் எல்லா பார்பானையும் அடிக்க சொன்னார் எனவே வைப்போம். அதனால் எல்லா தமிழர்களும் அடித்தாரா ?/ அவ்வளவுதான்.

ஆகவே பெரியார் பார்பானை அடி என்று சொல்வது திராவிட தீவிர வாதம் எனில்.
குரானில் 109 வசனம் பிற மதத்தவருடன் வெறுப்பு, போர் புரிய சொல்கிறது!!
http://en.wikipedia.org/wiki/Quran_and_violence

According to Dipak Gupta, "(m)uch of the religious justification of violence against nonbelievers (Dar ul Kufr) by the promoters of jihad is based on the Quranic “sword verses.” [9] The Quran, and the Hadith (biographies of Muhammad) contain passages that glorify or endorse violence.[10]
http://www.thereligionofpeace.com/quran/023-violence.htm

அப்போது இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடிப்படை குரானா??

நாங்கள் பெரியார் சொன்னாலும், இப்போது என்ன சூழலோ அதற்கு சிந்தித்தே முடிவெடுப்போம்.

குரானில் வெறுக்க கொல்ல சொன்னாலும், பிற மததத்வரின் உரிமைகளை பாதுகாப்போம் என முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் சொல்வது இல்லையே!!

நேரடி செயல் ஆற்றுங்கள் என முக்மது அலி ஜின்னாவின் அறைகூவலால் இறந்தவர்கள் எந்த கண்க்கில் சேர்ப்பது?

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே பிரிவினை போது வன்முறை நடக்கவில்லை!! ஏன்?

வஹாபிகளை திராவிட சகோக்கள் ஆதரிப்பதை கைவிட வேண்டுகிறோம்.
மதவாதிகளைப் புறக்கணிப்போம்!!!

Thank you!!

sultangulam@blogspot.com சொன்னது…

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.

திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.

------------ 31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959

சார்வாகன் சொன்னது…

சகோ முகமது சுல்தான்,

வெட்டி ஒட்டுவது பெரிய விடயம் அல்ல என்ன சொல்ல் வருகிறீர்கள் என்பதே முக்கியம்!!.
இஸ்லாமின் யூத வெறுப்புடன் ஒப்பிட்டார் பார்ப்பன எதிர்ப்பு ஒன்றுமே இல்லை!!
இஸ்லாமில் யூத ,கிறித்த்வ,காஃபிர் வெறுப்பும் ஒரு பங்கு ஆகும்!!

சரி எதையோ வெட்டுங்க ஒட்டுங்க!!!. நாம் மார்க்கம் பேசுவோம். முகம்து(சல்) கால யூதர்கள் இவர் சொல்லும் வஹி கதைகளை நம்பவில்லை, வெதங்களில் கரை கண்ட யூதர்களிடம் பாச்சா பழிக்கவில்லை என்றவுடன் த்ன்னை ஏற்காத யூதர்களை ஒழிப்பதையும் அல்லாஹ் கூறியதாக கதை விட்டு அரேபியாவில் இருந்தே கொலை,கொள்ளை, செய்து மிஞ்சியவர்களின் நிலத்தை பிடுங்கி விரட்டி விட்டார்.

அப்படி முகமது(சல்) யூதர்களுக்கு செய்த்தை த்வறு என அரபுகள்(முஸ்லிம்கள்) ஒத்துக் கொண்டு இஸ்ரேலை அங்கீகரித்தால் உலகின் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் ஆனால் செய்ய மாட்டார்கள்!!


பாருங்கள் முகமது(சல்) யூதர்களுக்கு செய்த கொடுமையை!!
கொலையடிப்பதையும் நாசூக்காக சொல்வதே மார்க்கம்!!!
3152. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர்வாசிகளை வென்றபோது அவர்களை கைபரிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். அவர்கள் அதை வென்றபோது அந்த நிலப்பரப்பு யூதர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாக இருந்தது. யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'அவர்கள் அதில் உழைத்துப் பயிரிடுவார்கள்; அவர்களுக்கு விளைச்சலில் பாதி தரப்பட வேண்டும்' என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களை (அங்கேயே தங்கி வகித்துக் கொள்ள)விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நாங்கள் விரும்பும் வரை அதே நிபந்தனையின் படி நாங்கள் உங்களைவிட்டு வைப்போம்' என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள தம் ஆட்சிக் காலத்தில் அவர்களை தைமா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தும் வரை அவ்வாறே அவர்கள் அங்கே வசித்து வர அனுமதிக்கப்பட்டார்கள்.
Volume :3 Book :57


ஆகவே இஸ்ரேலை காஃபிர்கள் யாரும் எதற்காகவும் விமர்சிக்காதீர்கள்!!!

இப்படி எதுவுமே செய்யத த்ந்தை பெரியாரைத் தூற்றும் மூமின்கள் முகமது(சல்) ஐ தூக்கி பிடிப்பார்கள்!!

தந்தை பெரியார் காலத்து ஆதிக்க சாதி பார்ப்பனர்கள் ,ஆகவே சொற்களால் திட்டினார் அவ்வளவுதான், பெரியார் செய்தது 0.0001% தவறு என்றால் முகமதுவின் யூதர்களின் மேலான இனப்படுகொலை,கொள்ளை ஆக்கிரமிப்பு 100% தவறு!!

டிஸ்கி: இந்த வஹாபிகளின் பெரியார் மீதான திடீர் பதிவுலக விமர்சனம் , ஹைத்ராபாத் குண்டு வெடிப்பு குறித்த விவாதங்களை நீர்த்து போக மாற்று பிரச்சினை என பட்சி சொல்கிறது ஹி ஹி

நன்றி

பெயரில்லா சொன்னது…

இந்த விடயத்தில் முஸ்லீம்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்கள். மனிதநேயத்தைப் பற்றி முஸ்லீம்கள் அதிலும் வஹாபிஸ்டுக்கள் பேசுவதைப் பார்த்தால் எங்கேயாவது முட்டிக் கொள்ளத்தான் தான் தோன்றுகிறது. :)

திருக்குரான் வாசகங்கள்
8:12! இதோ! நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”

.... I will cast terror into the hearts of those who have disbelieved, so strike them over the necks, and smite over all their fingers and toes." This is the torment, so taste it, and surely for the disbelievers is the torment of the Fire.


வவ்வால் சொன்னது…

மார்க்கப்பந்துக்களுக்கு நிலையான கொள்கைனே எதுவும் இல்லை போல ,கொஞ்ச நாளூக்கு முன்ன பெரியாரே இஸ்லாம் தான் நல்ல மார்க்கம்னு சொன்னார்னு ,பெரியாரை இஸ்லாத்தின் பிராண்ட் அம்பாசடர் ஆக்கி கூவுனாங்க,நான் கூட அப்போ விவாதம் செய்தேன்,இப்போ திடீர்னு பெரியார் வேண்டாதவர் ஆகிட்டாரா என்ன?

சரி மார்க்குகள் இதற்கு என்ன சொல்கிறார்கள் எனப்பார்ப்போம்.

//Muhammad was enraged at their criticism. When he heard the versescomposed byAsma Bint Marwanhe was infuriated and screamed aloud,"Will no one rid me of this daughter of Marwan!" That very night a gang of Muslims set out to do the dirty deed. They broke into the poets' house. Shewas lying in her bedroom suckling her newborn child, while her other smallchildren slept nearby. The Muslims tore the newborn infant off her breastand hacked it to pieces before her very eyes. They then made her watch themurder of all four of her children, before raping and then stabbing her repeatedly to death. After the murder when the Muslims went to inform theProphet, he said
"You have done a service to Allah and his Messenger, her life was not worth even two goats!//

http://www.scribd.com/doc/22347656/The-Battles-Ghazwa-of-the-Prophet-Muhammad

முகமது அய்யா அவர்கள் மார்க்கவெறிக்கொண்டு செய்த கொலைகள் மற்றும் படை எடுப்புகள் பற்றி விரிவாக மேற்க்கண்ட சுட்டியில் உள்ள நூலில் சொல்லப்பட்டுள்ளது.

அஸ்மா பிந்த் மர்வான் என்ற அரேபிய பெண்க்கவிஞரையும்,குழந்தைகளையும் கொன்றுவிட்டு,இரண்டு ஆடு அளவுக்கு கூட ஒர்த் இல்லை,அல்லாவுக்கு தொண்டு செய்தீரிகள் என கொன்றவர்களை பாரட்டியுள்ளார்.

பெரியார் இப்படி எத்தினி பேரை ஆள் வச்சு கொன்னார்?

தருமி சொன்னது…

எனக்கு வர வர பீஜே பிடிச்சிப் போச்சு. இவர் இப்படியெல்லாம் தர்ம நியாயம் பேசப்போகத்தானே வவ்வால் மேலே சொன்ன நல்ல வசனங்களும் செய்திகளும் எல்லா காபிர்களுக்கும் போய்ச்சேருது .. நமக்கும் இஸ்லாம் எப்படிப்பட்ட “அமைதி மார்க்கம்” அப்டின்னு நல்லா புரியுது. இப்படி ஒரு கடவுள் .. இப்படி ஒரு தூதுவர்!!!

இல்லீங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//mohamed sultan சொன்னது…
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.

திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்//

இஸ்ரேலிய மற்றும் யூத வெறுப்பு இல்லாத இஸ்லாமியரைக் காட்டிவிட்டு நீங்கள் இதையெல்லாம் எடுத்துக் காட்டலாம்.

பெரியார் தன்னை தீர்க்கதரிசி, இறைத் தூதன் என்று சொல்லிக் கொள்ளவில்லை, பெரியார் தாமே என்ன சொன்னாலும் அவை காலத்திற்கு ஏற்றதா என்று பகுத்தறிவைக் கொண்டு "சிந்திக்கவும்" என்றும் கூறி இருக்கிறார். அந்த புரிதலையும் பெரியாரால் வளர்த்தெடுக்க முடிந்தது.

காலத்திற்கும் ஏற்றவை, அனைத்து இனங்களுக்குமானது என்று சொல்லும் உங்கள் மதப்புத்தகத்தில் இனத் துவேசம் பின்பற்றக் கூடிய பாடாமாகவும் கடமையாகவும் ஆக்கப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க பெரியார் முழக்கமெல்லாம் தமிழ்நாட்டை விட்டுக் கூட தாண்டாது என்பது உங்களுக்கு தெரியாததும் அல்ல.

கொல்லத்தெருவில் ஊசி விற்க முயற்சிக்கலாம் ஆனால் துருப்பிடித்த ஊசியை விற்க முயற்சிகலாமா ? சிந்திக்கவும்

வருண் சொன்னது…

சம்மந்தப்பட்ட வலைதளத்தில் என்னுடைய பின்னூட்டத்தின் நகல் இங்கே!

***"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்ற ஓர் உலகமகா பயங்கரவாத விஷக்கருத்தை ஓர் ஒட்டுமொத்த சமூகத்தார் மீது சொன்னவர் ஈ.வே.ரா.பெரியார் மட்டுமே..! இந்த வாதம் எப்படி பயங்கரமாகாது..?***

பெரியார் தொண்டர்கள் பயங்கரவாதம் செய்ததாக எனக்குத் தெரிய யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்து அப்படி யாரும் தீவிரவாதம் செய்து, குண்டு வைத்து ஏழை பார்ப்பனர்களை கொன்னதாக ஏதாவது "டேட்டா" இருந்தால் தரவும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் செய்வதெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். பயங்கரவாதம் செய்து குண்டு வைக்கிறவன், அப்பாவிகளை கொல்றவன் எல்லாம் கடவுள் பக்தன்கள் தான் ஒரு லிஸ்டே தரமுடியும்!

அதனால பாம்பை விட்டுப்புட்டு பார்ப்பானை அடினு சொன்னவன் எல்லாம் பயங்கரவாதியும் இல்லை அப்படி சொல்லாதவன் எல்லாம் பார்ப்பானை வணங்குறவனும் இல்லை, யோக்கியனுளும் இல்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//பயங்கரவாதம், தீவிரவாதம் செய்வதெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். பயங்கரவாதம் செய்து குண்டு வைக்கிறவன், அப்பாவிகளை கொல்றவன் எல்லாம் கடவுள் பக்தன்கள் தான் ஒரு லிஸ்டே தரமுடியும்!//

அதுக்கெல்லாம் நாங்க வெளக்கம் வச்சிருக்கோம். எங்க மதம் அமைதி மதம், அதைப் புரிந்து கொள்ளாதவர் எங்கள் மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும் அவர்களுடைய தவறுகளுக்கு எங்கள் மதம் பொறுப்பேற்காது. ஆனால் அவங்க செத்துப் போனால் வருந்தி வருந்தி நாங்கள் பிராத்தனை நடத்துவோம்.

:)வருண் சொன்னது…

பெரியார், தாழ்த்தப் பட்டவர்கள் இந்துமத்தில் ஓடிப்போயி இஸ்லாத்தை தழுவச் சொன்னாருனு பார்ப்பான்பூராம் பெரியாரை திட்டிக்கிட்டு இருக்காணுக!

இங்கே என்னடானா அயோக்கியத்தனம் செய்ற இந்துக்களை கடுமையாக விமர்சிச்சதுக்காக ஒரு இஸ்லாமியர் பார்ப்பானுகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு பகுத்தறிவுவாதிகளை எல்லாம் பயங்கரவாதிகள்னு பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டு அலைகிறாரு!! :)))

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி கண்ணண் & சார்வாகன்!

பெரியாரின் கொள்கையோடு இணைந்து செயலாற்றிய கஸ்தூரி என்ற வழக்கறிஞர் பிராமண அடைமொழியைக் கொண்டவர்.

முந்தா நாள் வரை பெரியார் இஸ்லாமியத்தை ஆதரித்தார் என்ற வாய்கள் இப்பொழுது அரேபிய வெயிலில் மண்டை காய்ந்து உளறுகின்றன.இஸ்லாமிய தீவிரவாதம் ஏற்கனவே உலகளாவிய அளவில் ஏற்கனவே நீரூபிக்கப்பட்ட ஒன்று.தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்குபவைகளே இங்கே சில இணையத்தில் சுற்றித்திரிகின்றன.திராவிட பயங்கரவாதம் என்ற புரளியை கிளப்பும் குண்டு கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்ட கலாச்சார பயங்கரவாதிகள் ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து இப்பொழுது பெரியாரையும் கடிக்க வந்து விட்டார்கள்.

Robin சொன்னது…

//திராவிட பயங்கரவாதம் என்ற புரளியை கிளப்பும் குண்டு கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்ட கலாச்சார பயங்கரவாதிகள் ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து இப்பொழுது பெரியாரையும் கடிக்க வந்து விட்டார்கள்.// எல்லாரையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்துவிட்டால் தாங்கள் தப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

வவ்வால் சொன்னது…

தருமிய்யா,

மதுரக்காரய்ங்க நக்கலே ஒரு மார்க்கமாத்தேன் இருக்கும்னு சொல்லுறது சரியாத்தேன் இருக்கு :-))

நீங்க சொல்லுறதும் வாஸ்தவம் தான் மார்க்குகள் சும்மா இருக்கிறவங்களை சொறிஞ்சு விடுறதால தான் நம்ம தேடலும்,வாசிப்பும் விஸ்தாரமாகுது :-))

அரசியல்வாதிகள் தான் தங்கட்சிப்பெருமையை சொல்லி ஓட்டுக்கேட்க வக்கில்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளரின் குறைகளை பூதாகரமாக்கி ஓட்டுக்கேட்பாங்க, பின்ன சொல்லிக்கிறமாதிரி சாதனை இருந்தா சொல்லிக்க மாட்டாங்களா,அதே போல மார்க்கப்பந்துக்களும் சொல்லிக்க பெருமையா எதுவும் இல்லாததால் அடுத்தவங்களை குற்றம் சொல்லி தங்களை புனிதராக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்,ஆனால் பதிவர்கள் வாக்காளர்கள் போல வாயப்பொளந்துக்கிட்டு கேட்கமாட்டாங்க, பொளந்துக்கட்டிருவாங்கன்னு புரிஞ்சுக்கலை :-))

------------

ராச நட,

தெளிவா வந்திருக்கீங்க போல :-))

சரி 100வது நாள் ஓட்டுற வரைக்கும் உத்துப்பாருங்க :-))

வவ்வால் சொன்னது…

ஹி...ஹி இப்போ மார்க்கப்பந்துக்கள் எப்புடி குமுறிக்கிட்டு ஓடி வருவாங்க பாருங்க,

முகமது அய்யாவே ஒரு இறைமறுப்பாளர் தான், கடவுள் இல்லைனு சொல்லி இருக்கார்,ஆனால் அப்படி சொன்னா முட்டசனங்கள் லேசுல ஒத்துக்காதுன்னு, கடவுள் இல்லைனு சொல்லலை இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன் போல குழப்பமா சொன்னது ..

"Lā ʾilāha ʾillā l-lāh, Muḥammadun rasūlu l-lāh""

அப்படினா "கடவுள் என்பவரே இல்லை ஆனால் முகமது ஒரு இறைத்தூதர்" :-))

எனக்கு குழந்தை இல்லை ஆனால் இவர் தான் என் குழதையின் அம்மானு சொல்லுறாப்போல சொல்லுறாங்களே என்ன கொடுமை சார் இது :-))

ஆனாலும் சூப்பர ஒரு இடைச்சொருகல் போட்டு வேற விளக்கம் சொல்லுவாங்க :-))

-------------

வஹாபிக்கள் என்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, Muhammad ibn Abd al-Wahhab என்பவரை பின்ப்பற்றுபவர்கள், இஸ்லாமியர்களை முகம்மதியன் என சொல்லக்கூடாது சொல்வது சரியானால் ,வஹாப் என்பவரை பின்ப்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வகாபிக்களும் இஸ்லாமியர்கள் என சொல்லிக்கொள்ள முடியாது :-))

உண்மையான மார்க்கப்பந்துக்களே இனிமே யாராவது வஹாபினு சொன்னா வாயிலயேப்போடுங்க!!!

ராஜ நடராஜன் சொன்னது…

ராபின்!அது ஏன் முந்தா நாள் ஹைதராபாத்தில் குண்டு வைச்ச பயல்கள் முதல் கொண்டு பின் லேடன் வரை இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்?

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்வால்!நம்ம ஆட்டத்தை அங்கே வச்சுக்கலாம்:)

தருமி சொன்னது…

//பதிவர்கள் வாக்காளர்கள் போல வாயப்பொளந்துக்கிட்டு கேட்கமாட்டாங்க, பொளந்துக்கட்டிருவாங்கன்னு புரிஞ்சுக்கலை :-))//

வவ்ஸ்,
இதெல்லாம் இப்போ ஏறத்தாழ ஒரு வருஷமாத்தான். அதிலும் அந்த ‘சாந்தின்’ மேட்டரு .. தமிழ்மணத்திலிருந்து கூண்டா போயிருவோம் ... மத்திய கிழக்கு நாட்டுல தமிழ்மணம் வராமல் பண்ணிடுவோம் ...இப்படியெல்லாம் சொன்ன பிறகுதான் (என்னைப் பொறுத்தவரை) பதிவர்கள் ’பொளந்து கட்ட’ ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு முந்தி நிறைய ‘voice in wilderness' ஆக இருந்ததாக நினைவு. எப்படியோ வண்டி இப்போ நல்லா போகுது!

தருமி சொன்னது…


//"கடவுள் என்பவரே இல்லை ஆனால் முகமது ஒரு இறைத்தூதர்" :-))//

இது என்னங்க .. கொஞ்சம் விளக்கமா (கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்துக்கிறாது பத்தி) சொல்லுங்களேன்.

Robin சொன்னது…

//ராபின்!அது ஏன் முந்தா நாள் ஹைதராபாத்தில் குண்டு வைச்ச பயல்கள் முதல் கொண்டு பின் லேடன் வரை இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்?// ஏனென்றால் அவர்கள் பின்பற்றும் புத்தகத்தை யாராவது தவறாகப் புரிந்துகொண்டால் தீவிரவாதியாக மாறிவிடுவார்களாம். அந்த அளவு அபாயகரமான புத்தகம் அது.

R.Puratchimani சொன்னது…


கோவி, நல்ல பதிவு.
நான்கூட இந்த விடயத்தில் பெரியாரை தவறாக நினைத்திருந்தேன். விளக்கத்திற்கு நன்றி.

@ வவ்வால்

நான் ஏற்க்கனவே குரான் படித்து அதை படித்து விட்டு பதிவிட்டுவிட்டேன்....இப்ப இந்த மாதிரி கொலை சம்பந்தப்பட்ட புத்தகம் கொடுத்து ஏன் என்னை தவறான பாதையில் செலுத்துகிறீர்கள்?
அமைதி மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அலப்பறை வேறு....இந்த உலகம் அழிந்தே தீரும் போல.....

@தருமி
செம மூட்ல இருக்கீங்க போல....நடத்துங்க...

பெயர் சொல்லாத அனைவரது பின்னூட்டமும் அருமை

R.Puratchimani சொன்னது…

அக்பருதின் ஒவைசி சொன்னதன் மூலம் இதோ உள்ளதே
//Koran 8:65
"O Prophet exhort the believers to fight. If there be of you 20 steadfast,they will overcome 200 and if there be of you a 100, they shall overcome a1000, because the disbelievers are a folk without intelligence"//

//8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).//

எல்லாம் அல்லாவின் திருவிளையாடல்.....(வவ்வால் இந்த வசனத்தை நான் அறிய நீங்கள்தான் காரணம் :) :(

R.Puratchimani சொன்னது…

அடைப்புக்குறியை மாற்றி படித்தால் உண்மை தெரிகிறதோ

///8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்கள்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்)//
இதுதான் ஒருவேளை உண்மையோ?

தருமி சொன்னது…

வவ்ஸ்,

Lā ʾilāha ʾillā l-lāh, Muḥammadun rasūlu l-lāh""

There is no god but God, Muhammad is the messenger of God.

வவ்வால் சொன்னது…

தருமிய்யா,

நீங்க சொல்வதும் சரி தான் சாந்தி சமாச்சாரத்துக்கு அப்புறம் ,பதிலுக்கு பதில் கொடுக்க நிறையப்பேர் முன்வர ஆரம்பித்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் கொள்கையை சொல்வதாக நினைத்து சும்மா இருந்தார்கள்,ஆனால் கூடாரத்தில் தலையைவிட்ட ஒட்டகமாய் ஆனதும் மக்களும் விழிப்படைந்துவிட்டார்கள்.

# கடவுள் இல்லைனு சொல்லிட்டு இறைத்தூதர்னு சொல்வது எல்லாம் வஹியின் வேலை, வலிப்பு வந்த நிலையில் சிந்தனைகள் எப்படி கோர்வையாக இருக்கும், இப்படி குரான் முழுக்க நிறைய முரண்கள் உள்ளது எனவே தேவைக்கு அடைப்பு குறியைப்போட்டு நல்லவிதமாக விளக்கிக்கொள்கிறார்கள், அடைப்புக்குறி விளக்கம் இல்லையானால் ,சப் டைட்டில் இல்லாமல் விஷ்வரூபம் படம் பார்க்கிறாப்பொல கொழப்பிடாது :-))

சமூது இனத்தினர் நபினு ஏற்றுக்கொள்ளவில்லைனு சொல்லி ஒரு "சதிக்கதையை சொல்லி" அவர்கள் அனைவரையும் சபிக்கப்பட்டவர்கள்னு குற்றம் சுமத்தி மொத்தமாக அழிச்சவர் தானே.

அந்த காலத்தில் அரேபிய பகுதியில் நிறைய பேர் மனப்பிழழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், உலகிலேயே மனநோயை வகைப்பிரித்து பட்டியலிட்டது அரேபிய ஹக்கிம் எனப்படும் மருத்துவர்களே, எனவே அரேபிய மருத்துத்தையே மனவியல் வகைப்படுத்தலின் மூலம் என்கிறார்கள்.

அதனால் தான் இன்றளவும் தர்க்காக்களில் மனநலம் குன்றியவர்களை கட்டி வைத்தால் குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது என நினைக்கிறேன்.

வலிப்பு வந்து உளருவதெல்லாம் இறைவேதம் என நம்பினால் இறைவேதமே :-))
-----------

புரட்சிமணி ,

கடைசில என் தலையை உருட்டுறிங்களே ,அவ்வ்!

அமைதியை ஏற்படுத்தனும் என்றால் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் ,அல்லது சத்தம் போட யாரும் இல்லாமல் செய்ய வேண்டும், எனவே சத்தமிடுபவர்களை(எதிர்ப்பவர்கள்) போட்டு தள்ளிவிட்டால் ,சத்தமிட யாரும் இருக்கமாட்டார்கள், அமைதி உருவாகிவிடும் அல்லவா ,அதான் அமைதி மார்க்கம் :-))

"ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு

கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு

சுத்தமாக சொன்னதெல்லாம் போதலையா

மொத்தமாக காதுல தான் ஏறலையா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா

அந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா"

ஹி...ஹி சிந்திக்க வேண்டிய சினிமா பாடல்!


வவ்வால் சொன்னது…

தருமிய்யா,

நீங்க சொல்வது போல தான் சொல்லிக்கிறாங்க,அதில் ஏன் ஆனால் என ஒரு கண்டிஷன் போட்டு கடவுள்னு சேர்க்கணும்.

கடவுள் இல்லை ,ஆனால் கடவுள் (இருந்தால்), கடவுளின் தூதர் முகமதுன்னு சொல்லிக்கிறார் :-))

அதைத்தான் லோகநாயகர் போல குழப்பி இருக்கார்னு சொன்னேன்,

கடவுளின் இறைத்தூதர்னு நேரடியாக சொல்லிக்காம ஏன் இப்படி சொல்லவேண்டும் என நிறைய பேர் ஆய்வு கட்டுரைலாம் எழுதி விவாதம் எல்லாம் செய்து இருக்காங்க.

குரானில் இருக்கும் முரண்கள்னு நிறைய சொல்லுறாங்க, அதில நான் சொன்னதும் ஒன்னு.

தருமி சொன்னது…

//ஏன் ஆனால் என ஒரு கண்டிஷன் போட்டு கடவுள்னு சேர்க்கணும்.//

இதுக்குத் தான் அல்லாவே ‘என் நடை மாதிரி ஒரு பத்தி எழுதுங்க பார்ப்போம்’னு சாலஞ்ச் விடுறார். என்ன நடை ...!

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் சொன்னது…
பெரியார், தாழ்த்தப் பட்டவர்கள் இந்துமத்தில் ஓடிப்போயி இஸ்லாத்தை தழுவச் சொன்னாருனு பார்ப்பான்பூராம் பெரியாரை திட்டிக்கிட்டு இருக்காணுக!

இங்கே என்னடானா அயோக்கியத்தனம் செய்ற இந்துக்களை கடுமையாக விமர்சிச்சதுக்காக ஒரு இஸ்லாமியர் பார்ப்பானுகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு பகுத்தறிவுவாதிகளை எல்லாம் பயங்கரவாதிகள்னு பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டு அலைகிறாரு!! :)))//

அதைத் தான் நான் முதல் பத்தியில் சொல்லியுள்ளேன்.

பெரியார் சொன்னதன் ஆதாரம் சேதாரம் என்று பெரியாரை தூற்ற முனைந்தவர், பெரியார் சொன்னதாக குறிப்பிட்ட கருத்து குறித்து பெரியார் எதிர்ப்பு வலைத்தளம் ஒன்றின் சுட்டி கொடுத்துள்ளார், இவர்கள் நேர்மை இம்புட்டு தான்.

http://www.facebook.com/notes/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-11-13/10150235517427968

இஸ்லாமிய படுகொலைகளுக்கு ஆதாரங்கள் என்று நாம இவர்களுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களில், நே.குமார் கட்டுரைகளில் இவற்றில் இருந்து சுட்டி கொடுத்தால் வானத்திற்கும் பூமிக்குமாக குதிப்பார்கள்.

எவனோ ஒரு கிறுக்கன் ஆதாரமின்றி எழுதுவது இவர்களுக்கு ஆதாரமாம், இதனால் தான் வலைப்பதிவில் கிறுக்கும் பொழுது ஆதாரபூர்வமாக கிறுக்குவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கும் என்று நம்புகிறோம்

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஹதீது ஆதாரம், மற்றும் முகமதுவின் கடைசி பேச்சுகள் இஸ்லாமிய ஆதாரவு இணையத் தளத்தில் இருந்து எடுத்தவை

kamalakkannan சொன்னது…

பெரியார்தசன் தழுவிய இனிய மதம் இஸ்லாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பெரியார்தசன் தழுவிய இனிய மதம் இஸ்லாம்//

முந்தா நேற்றுக்கு இறைமறுப்பை தழுவினார் பின்னர்
நேற்றைக்கு பவுத்தைத்த தழுவினார்
இன்னிக்கு இஸ்லாத்தை தழுவினார்
நாளைக்கு எதை தழுவுவாரோ ?

பெரியார்தாசன் வீட்டில் அதையெல்லாம் வரவேற்கிறார்களா ? பெரியார்தாசன் பேரக் குழந்தைகள் பர்தாவுக்கு மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை
:)

R.Puratchimani சொன்னது…

@வவ்வால்
அமைதி மார்க்கத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் யோசிக்க வைக்கிறது. அப்புறம் அந்த பாட்டு அருமை..

//சமூது இனத்தினர் நபினு ஏற்றுக்கொள்ளவில்லைனு சொல்லி ஒரு "சதிக்கதையை சொல்லி" அவர்கள் அனைவரையும் சபிக்கப்பட்டவர்கள்னு குற்றம் சுமத்தி மொத்தமாக அழிச்சவர் தானே.//
இது பற்றி சுட்டி இருந்தால் தாங்கள்....உங்கள் தலைய உருட்ட மாட்டேன் :)

@தருமி
//There is no god but God, Muhammad is the messenger of God.//
உண்மை இதுவல்ல
//There is no god but allaah, Muhammad is the messenger of allah.//
இதுவே சரியான மொழிபெயர்ப்பு .....
அல்லா என்பதற்கு இறைவன் என்ற பொருள் இல்லை. இலாஹ் என்பதே இறைவன் என பொருள்படும் என எங்கோ படித்தது. அப்ப இலாஹ் இறைவன் என்றால் அல்லாஹ் யாரு என்ற சந்தேகம் எழுகிறது....

R.Puratchimani சொன்னது…

@வவ்வால் @தருமி
இதை படிக்கவும்
http://wikiislam.net/wiki/Allahu_Akbar

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுக்குத் தான் அல்லாவே ‘என் நடை மாதிரி ஒரு பத்தி எழுதுங்க பார்ப்போம்’னு சாலஞ்ச் விடுறார். என்ன நடை ...!//

அந்தகாலத்தில் அரபுகள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியாதவங்களோ என்னவோ, அதனால் தான் அப்படி ஒரு சவால் போல.

வவ்வால் சொன்னது…

தருமிய்யா,

ஹி...ஹி நல்லாத்தான் சவால் விடுறாங்க, நம்ம சித்தர்ப்பாடல்கள் போல இன்னொருத்தரால் எழுத முடியுமா? அப்போ அதெல்லாம் இறைவசனம் தான் :-))

அப்புறம் ஆரம்ப காலத்தில் குரானை எழுதாமலே வாயால் தானே சொல்லிக்கிட்டு இருந்தாங்க, மேலும் குரான் அப்போ அரபியில இல்லை, இப்போ இருக்கும் சொல்,எழுத்துக்கள் எல்லாம் ஆரம்பத்தில் இருந்த குரானில் இருந்தது என சொல்லவே முடியாது.

அக்காலத்தில் அராமைக்,அக்காடியன் மொழிகளே எழுத்து வடிவத்தில் இருந்தது,அரேபிய மொழிகள் வட்டார மொழி என எழுத்தே இல்லாமல் இருந்தது. அப்போ எப்போ அரபியில் எழுதி வச்சாங்கன்னு யாருக்குமே தெரியாது,எனவே அரேபிய குரான் என இப்போ காட்டுவதெல்லாம் தோராயமாக இவங்களா சொல்லிக்கிறது தான்.

முகமது அய்யா காலத்து குரானின் எழுத்து வடிவம்னு சொன்னால் அது அராமைக்,அக்காடியன் மொழியில் தான் இருக்க வேண்டும்,அப்படி ஒரு பிரதியும் கண்டு எடுத்துள்ளார்கள்,ஆனால் அதை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளார்கள்.

இப்போ அரபினு சொல்லிக்கிட்டு இருப்பதன் இலக்கணம், எழுத்து வடிவம்(லிபி) எல்லாம்ம் அராமைக்,அக்காடியன் பாரசீகம் இவற்றின் கலவையே.இவ்வடிவை அரபி மொழி முகமது அய்யா காலத்தில் பெற்றிருக்கவே இல்லை.

யாரும் திருத்தாத புனித நூல்னு அடிக்கடி சொல்லிக்க்கொள்ள காரணமே, யாரோ திருத்திட்டாங்கன்னு அவங்களுக்கே உண்மை தெரிவதால் தான் :-))
----------

புரட்சிமணி,

சமூது சமூக மக்களை நபி சாலே அழித்தார்னு கதை குரானில் வருமே அதான், ஆனால் அழித்தது முகமது என ஒரு தளத்தில் முன்னர் படித்தேன், தேடிக்கிடைத்தால் சொல்கிறேன்.

உங்க சுட்டி பார்த்தேன், இதை போல தான் நானும் படிச்சேன், எல்லாம் வார்த்தை விளையாட்டு தான்,அதான் கடவுள் இல்லைனு சொல்லிக்கிட்டு ,கடவுளின் தூதர்னு சொல்வதாக சொன்னேன்.

காபாவில் 64 சிலைகள் முன்னர் இருந்ததாம், அதில் ஒரு சிலை முகமது அய்யாவின் குல தெய்வம், ஆனால் அது பெண்க்கடவுளாம், அதை தான் கொஞ்சம் மாத்தி அல்லாவாக்கியதாக படித்தேன்.

முகமது அய்யாவுக்கு எழுதப்படிக்க தெரியாது என சொன்னாலும் அவர் மதஅறிவு பெற்ரவரே, சிலை வணக்கம் இருந்த போது காபாவின் ஹசரத் வேலை செய்தது முகமது அய்யா தான், அதாவது எல்லாரும் கும்பிட வாங்கன்னு அழைப்பு விடுவிக்கும் பணி, எனவே தான் இன்றும் இஸ்லாம் மதத்திலும் ஹசரத் என்ற பொறுப்பினை மசுதீகளில் வைத்துள்ளார்கள்.

இஸ்லாமுக்கு முன்னர் சிலைவணங்குதல் செய்த காலத்தில் இருந்த பலவற்ரை சீர்ப்படுத்தி தான் புதியக்கொள்கையில் சேர்த்துள்ளார், கூடவே யூதம், கிருத்துவம், சொராஷ்ட்ரம் ஆகியவற்றின் கொள்கைகளும் சேர்த்தால் புதிய ஃபார்முலாவில் ஒரு மதம் ரெடி :-))

R.Puratchimani சொன்னது…

வவ்வால்
//காபாவில் 64 சிலைகள் முன்னர் இருந்ததாம்,//

360 இருந்ததாக தெரிகிறது. ஒரு நாளைக்கு ஒரு சிலை என 360 நாளைக்கு வணங்குவார்களாம்.
ஒருவேளை நீங்கள் உள்ளே இருந்த கணக்கை மட்டும் சொல்கிறீர்களோ......

மேலதிக தகவலுக்கு நன்றி வவ்வால்

கோவி.கண்ணன் சொன்னது…

//காபாவில் 64 சிலைகள் முன்னர் இருந்ததாம்,//

ஒரு மூலவர் + 63 ஞாயன்மார்களா ?

:)

வவ்வால் சொன்னது…

புரட்சிமணி,

நீங்க சொன்னது போல 360 சிலைகள் தான் 64 என்பது முக்கியமான ,பெரிய அரபிய டிரைப்களின் கடவுள், அரேபிய மக்கள் எல்லாம் நொமாடிக் டிரைப்ஸ் ஏகப்பட்ட உப குழுக்கள்,ஆளுக்கு ஒரு குல தெய்வம், சிலை எல்லாம் வானத்தில் இருந்து விழும் விண்கற்கள் .

முழுசா பெயருடன் எல்லா கடவுளும் குறிப்பிடப்படவில்லை, பெரும்பாலும் மேஜர் டிரைப்களின் கடவுள் பேரை தான் எழுதி வச்சிருக்காங்க.

இப்போ காபாவில் இருப்பதும் ஒரு விண் கல் தான்.

முகமது அய்யா இப்படி எல்லாம் தனியா பிரிந்து இருக்கக்கூடாதுனு சேர்த்து வைக்க ஏக இறைவன் என சொல்லி அவரோட குல தெய்வத்தை முன்னிறுத்திட்டார், அதனால் தான் முதலில் மெக்காவில் இருந்து விரட்டப்பட்டார்.

முகமது குரைஷி இனக்குழு ,அது தான் அப்போ கொஞ்சம் பெரிய குழு,குரைஷி இனக்குழுவின் முதன்மை கடவுள் ஹுபல், பெண்கடவுள் நிலா அதனை அரபியில் அல்லத் (Al-lat)என்பார்கள்,இப்போ புரியுதா அல்லாஹ் என்ற பெயர் எப்படி உருவாச்சுன்னு :-))

அல்லாஹ் என்ற சொல் முகமது அய்யாவின் காலத்திற்கு முன்பே புழக்கத்தில் உண்டு, ஹி...ஹி முகமது அய்யாவின் தந்தை பெயர் அப்த் அல்லாஹ் :-))

இதன் பொருள் அல்லாவின் அடிமை,சேவகன், அது எப்படி முகமது அய்யா அல்லா தான் ஏக இறைவனு கண்டுப்பிடிக்கும் முன்னரே அவங்க அப்பாவுக்கு அப்படி பேரு வச்சாங்க :-))

பின்னாடி எல்லாரையும் அல்லா வை மட்டும் ஏகக்கடவுள்னு ஏற்க வச்சுட்டார். எல்லாம் ஏக இறைவனின் திருவிளையாடல் :-))
---------

கோவி,

நீங்க சொன்னது கூட பொருந்தும் 63+1 என , எப்படினா அரபிய இனக்குழுக்களில் யார் வலிமையாக இருக்காங்களோ அவங்க சிலையை தூக்கி நடுவில் வச்சிடுவாங்க, இதுக்காக அப்போ அடிக்கடி சண்டை நடக்கும் , முமது அய்யா காலத்தில் குரைஷிக்கள் காபாவை கட்டுப்பாட்டில் வச்சிருந்தாங்க எனவே அப்போ ஹீபல் என்ற கடவுளில் சிலை மையமாக்கிட்டாங்க.

அங்கே பூசாரியா(ஹசரத்) வேலை செய்தவர் தான் அய்யா.

உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படையே சிலைவணங்கிகளின் கொள்கை தான்.

முகமது அய்யா செய்தது என்னவெனில் எல்லா சிலையும் தூக்கிட்டு, சிலைவணங்கி கொள்கைகளை மட்டும் அப்படியே வச்சிக்கிட்டது தான்,ஆனால் இன்னும் குரைஷிகளின் புனித விண்கள் தான் அங்கே இருக்கு.அரபியர்கள் வானத்தில் இருந்து விழும் விண்கள் கடவுளால் அனுப்பப்பட்டது என எனக்கருதி வணங்கும் வழக்கம் கொண்டவர்கள்.

இன்னும் நிறைய சமாச்சாரம் இருக்கு, நான் பதிவா போடலாம்னு இருந்து அப்படியே தள்ளிப்போயிட்டு இருக்கு,விரிவா பதிவில் சொல்கிறேன்.

சார்வாகன் சொன்னது…

சகோ வவ்வால் அருமை,
நம் பங்கிற்கு சில விள்க்கங்கள்.

இந்த ஓரிறைக் கொள்கை என்பது பல் தெய்வ வழிபாட்டின் ,பரிணாம வளர்ச்சியே.
ஓரிறைக் கொள்கையிலும் தேவதூதர்கள் போல் சிலர் இருப்பதை , எதிர் இறைவன்(சாத்தான்) இன்றும் மறுப்பது இல்லை. ஆகவே ஓரிறை என்பதே உண்மையில் ஓரிறை இல்லை. ஒரு குழு தெய்வங்களின் த்லைவன் ஏக இறைவன், அவருக்கு மட்டும் சில தனித்துவ குணம் என்பதே!!

ஆகவே ஏக இறைவன் என்பதை விட முழுமுதற் கடவுள் என்னும் சொல்லே சரியானது!!!!!!!!!!!
**
இந்த முழுமுதல் கடவுள் அடிக்கடி அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறுவார்.
இந்து வேதங்களின் முழு முதல் கடவுள் இந்திரன், இழிவு படுத்தப் பட்டு, அத்னை மும்மூர்த்திகள் பிடித்தார், அதிலும் இபிரம்மாவை இழிவு படுத்தி, சிவன், விஷ்ணு மட்டுமே கடவுள் ஆனார். அவர்களுக்குள் உள்ள போட்டி யார் முழுமுதல் கடவுள் என‌ இன்றுவரை தொடர்கிறது!!.
**
பைபிளிலும் ஏல் என்னும் குடும்பஸ்த கடவுள் யாவே என்னும் முழுமுதல் கடவுளாகி, மூவரின் ஒருவராக பரிணமிக்கிறார். பல் கடவுள்களின் பெயர்கள் கர்த்தர்[ ஆங்கிலத்தில் லார்ட்] என மட்டுமே மொழி பெயர்க்கப் படும்!!
http://en.wikipedia.org/wiki/Names_of_God_in_Judaism

http://en.wikipedia.org/wiki/Names_of_God_in_Christianity
***
இந்தக் கண்ணோட்டத்தில் 6 ஆம் நூற்றாண்டு அரேபியாவைப் பார்க்க வேண்டும்.

அதே போல் முகமது(சல்) தன சாதி குரெசிக் கடவுள் அல்லாஹ் மட்டுமே முழுமுதல் கடவுள் எனக் காட்டி மற்ற தெய்வங்களின் பெயர்கள் ,அவரின் குணம்[ இங்கே தான் தனித்து நிக்கிறார் நபி(சல்)]
http://en.wikipedia.org/wiki/Names_of_God_in_Islam


இதனை மறைக்க சிலைகளை ஒழிக்க வேண்டும் என்பதனால் உருவ வழிபாடு
எதிர்க்கப் படுகிறது!!!

சான்றுகளை,[எல்லாம்தான் ஹி ஹி] அழிப்பதில் இஸ்லாமுக்கு நிகர் எவரும் இல்லை!!!

இன்றும் கூட தர்காக்களை தகர்த்து எரிவது, வஹாபியம் என்பது இரு நூற்றாண்டு முன் உருவான மதம் என்பதை மறைக்கவே!!

நன்றி!!

R.Puratchimani சொன்னது…

@வௌவால் @சார்வாகன்
தங்கள் விளக்கங்கள் அருமை....நன்றி

nagoreismail சொன்னது…

Your post is insulting islamic faith and against Singapore racial harmony, thinking of complain to muis

கோவி.கண்ணன் சொன்னது…

// nagoreismail கூறியது...
Your post is insulting islamic faith and against Singapore racial harmony, thinking of complain to muis//

வாங்கோ, வாங்கோ, திராவிட வெறியன் என்று நாங்கள் போறும் பெரியாரைத் நீங்கள் தூற்றுவதையும் சேர்த்தே சொல்லி முறையிடுவோம்

தருமி சொன்னது…

பயங்கர பயமுறுத்தலா ...?
அதென்னங்க muis ??

their routine thing ..? இதுவே வெறுப்பின் முதல் படி என்பது இவர்களுக்குப் புரியவே புரியாதோ?

வவ்வால் சொன்னது…

கோவி,

என்ன கொடுமை இது?

தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு பெரியார் முதல் கொண்டு அனைத்து தமிழர் சார்பான கொள்கை ,நம்பிக்கைகளை தூற்றுவார்களாம் ஆனால் பதில் சொல்லிட்டா இவங்க புகார் கொடுப்பாங்கலாம் ,

ஓய் நாகூர் இஸ்மாயில் பதிலுக்கு புகார் கொடுக்க கிளம்பினால் நீர் எல்லாம் இங்கே இருக்வே முடியாது அரேபியாவுக்கு தான் ஓடனும்.இன்னொருக்கா இப்பிடி பேசிட்டு இந்தப்பக்கம் வராதீர்.

nagoreismail சொன்னது…

"வாங்கோ, வாங்கோ, திராவிட வெறியன் என்று நாங்கள் போறும் பெரியாரைத் நீங்கள் தூற்றுவதையும் சேர்த்தே சொல்லி முறையிடுவோம்"

- neengal endraal... yaarai solreenga... please specify... ennai solreengalaa


"பயங்கர பயமுறுத்தலா ...?
அதென்னங்க muis ??
their routine thing ..? இதுவே வெறுப்பின் முதல் படி என்பது இவர்களுக்குப் புரியவே புரியாதோ?"

- muis endraal majlis ugama islam singapura


"கோவி,

என்ன கொடுமை இது?

தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு பெரியார் முதல் கொண்டு அனைத்து தமிழர் சார்பான கொள்கை ,நம்பிக்கைகளை தூற்றுவார்களாம் ஆனால் பதில் சொல்லிட்டா இவங்க புகார் கொடுப்பாங்கலாம் ,

ஓய் நாகூர் இஸ்மாயில் பதிலுக்கு புகார் கொடுக்க கிளம்பினால் நீர் எல்லாம் இங்கே இருக்வே முடியாது அரேபியாவுக்கு தான் ஓடனும்.இன்னொருக்கா இப்பிடி பேசிட்டு இந்தப்பக்கம் வராதீர்."

- tamil naattil iruppavargalai pathi pesa villai, inge singapore il irukkum pothu thaan thodarchiyaaga islamiyargal patri pesi varuvathai thaan solgiren..

கோவி.கண்ணன் சொன்னது…

//- neengal endraal... yaarai solreenga... please specify... ennai solreengalaa //

மிரட்டல் விடுக்கும் நபரையெல்லாம் நான் மதிப்பதே கிடையாது.

உங்களைப் போன்ற நபர்களுக்கு தான் வேஷ குமார் நேச குமார் என்ற புனைப் பெயரில் எழுதுகிறார்கள் போல. உங்கப் பிரச்சனை பெயருடன் புகைப்படத்துடன் ஒருவர் விமர்சனம் செய்வது உங்களைப் போன்றோருக்கு பொறுக்காது, இங்கே எழுதுவது போல் வேறு பெயரில் வேறு நாட்டில் இருந்து எழுத முடியாதா ? கூகுளில் புதிய பதிவு திறக்க கட்டணம் எதுவும் வாங்குவதில்லையே.

நிற்க.

உங்களைப் போன்று வஹாபிகளை குறிப்பிட்டு 'பாத்தியா சோறு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஒப்பாரி... கோமாளி வகையாறா' என்ற ரீதியில் நான் எதையும் எழுதவில்லை.

ஒரு வகாபியைப் (பீஜே ?) பார்த்து நாகூர் இஸ்மாயிலாகிய நான் இவ்வாறு சொன்னேன் எனக்கு பரிசளிக்கிறிங்களா என்று நீங்கள் சொல்லும் இஸ்லாமிய அமைப்பிடம் சொன்று சொல்லிவ்ட்டு வந்து அவர்கள் என்ன சொன்னார்கள் என கேட்டுவரவும்.

சிங்கப்பூரில் எதை எழுதவேண்டும் எதை எழுதக் கூடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம், வழியில் எங்காவது என்னைப் பார்க்க நேரிட்டால் தயவு செய்து அறிமுகம் செய்து கொள்ளாதீர்கள், எனக்கு சந்திக்கும் விருப்பமெல்லாம் எதுவும் கிடையாது, வலையுலகில் சிங்கப்பூரில் சலாஹுதின், உதயத்துல்லா போன்ற நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், உங்களைப் போன்ற மிரட்டல் பேர்வழிகளுக்கும், முகமது படத்தை வரைந்த ஆசிரியர் ஒருவரை கையை வெட்டிய மதவெறியனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

R.Puratchimani சொன்னது…

//nagoreismail சொன்னது…
Your post is insulting islamic faith and against Singapore racial harmony, thinking of complain to muis//

My dear brother,
I can understand your feelings. But please you also try to understand why someone is commenting about islam. If you understand that you will not get angry about Govi. If you feel something wrong in his writing, try to tell him that this is wrong.
This would be helpful for all, to understand everybody's perspective.

May Peace be upon you.
Your loving brother
R.Puratchimani

கோவி.கண்ணன் சொன்னது…

// If you feel something wrong in his writing, try to tell him that this is wrong.
This would be helpful for all, to understand everybody's perspective.//

ஆமாம் பதிவில் தவறாக அல்லது உண்மைக்கு புறம்பாக எதையாவது எழுதி இருந்தால் சுட்டலாம், இங்கு கொடுத்திருக்கும் ஹதீஸ் இஸ்லாமிய தளத்தில் இருந்து எடுத்தவை. உண்மையை நாம எடுத்து எழுதுவதால் காழ்புணர்வில் மிரட்டல் விடுக்கும் இந்த நபரின் பின்னூட்டங்களுக்கு நான் இனி பதில் சொல்லப் போவதில்லை மணி.

R.Puratchimani சொன்னது…

கோவி.கண்ணன்
//காழ்புணர்வில் மிரட்டல் விடுக்கும் இந்த நபரின் பின்னூட்டங்களுக்கு நான் இனி பதில் சொல்லப் போவதில்லை மணி.//
உங்களின் நிலைப்பாடு எனக்கு புரிகிறது கோவி . நாம் பதில் சொல்லாமால் விட்டுவிட்டால் மட்டும் அவரின் காழ்ப்புணர்வு நீங்கிவவிடுமா? சிந்தித்து பாருங்கள். முடிந்தவரை நாம் அவர்களுக்கு உண்மையை புரியவைப்போம்.
உண்மை கசக்கும். அதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும் காலம் செல்ல செல்ல இவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். வருங்கால சந்ததிகளும் உண்மையை புரிந்துகொள்வார்கள். எனவே காழ்ப்புணர்வில் உள்ளவர்களுக்கும் உங்களது நியாயத்தை புரியவைக்க் முயலுங்கள் கோவி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்