ஆர்காடு நவாப்புகள் யார் ? தமிழகத்தில் இவர்கள் எப்படி கால் ஊன்றினார்கள் என்று தகவல்களைத் தேடிப் பார்க்கும் பொழுது, வரலாற்றில் கொடுங்கோலன் மற்றும் கடைசி காலத்தில் கையால் குரான் எழுதி தன்னை திருந்தியவன் என்று காட்டிக் கொள்ள முயன்றவன் என்றெல்லாம் வருணீக்கப்படும் பேரரசர் ஒவுரங்க சீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சித்தன் விளைவாக கிபி 1692ல் வரிவசூல் செய்ய தென்னிந்தியாவிற்கு அனுப்பட்டவர்களே நவாப்புகள். அவ்வாறு முதலாவதாக தென்னிந்தியாவிற்கு வந்த நவாப் சுல்பிகர் அலி என்பவர், இவர் விஜய்நகர மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து கிபி 1736ல் மதுரைவரை முகலாய அரசை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாற்று குறிப்புகள். சுல்பிகர் அலிக்கு பிறகு பொறுப்பேற்றவர் அலி வாலாஜா, சுல்பிகரின் ஆட்சி காலம் 1732 - 1740 வரையில் 8 ஆண்டுகள் நீடித்து பின்னர் 1749 ஆம் ஆண்டு அலி வாலாஜா பொறுப்பெற்க இடைபட்ட 9 ஆண்டுகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை
அலி வாலாஜா ஓரளவு நேர்மையான ஆட்சி நடத்தினார் என்றும் அனைத்து மதத்தினரையும் மதித்தார், கிடைத்த வரி வருமானங்களில் இருந்து இந்து கோவில்களுக்கும் மானியம் வழங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. இவர் 1765ல் மொகலாய பேரரசிற்கு கப்பம் கட்ட மறுத்து தென்னிந்திய பகுதிகளை தனியாக ஆளுவதற்காக இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நவாப்பு அரசாகவும், சுதந்திரம் பெற்றதாகவும் அறிவித்தார், இவரது ஆட்சி ஆர்காட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதால் பின்னர் வந்த நவாப்புகள் ஆர்காடு நவாப்புகள் என்று பெயர் பெற்றனர், இவர்களது ஆட்சி கர்நாடகம் கிருஷ்ணா ஆறுவரை உட்பட்ட பகுதிகளாக இருந்தது. இடையே பிரஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைய இருவருக்கும் மைசூரில் போர் மூண்ட சூழலில் மைசூர் மற்றும் திண்டுகல் பகுதியை விஜய நகர அரசுகளுடன் இணைந்து ஆண்டு வந்த ஹைதர் அலி பிரஞ்சுகாரர்களுக்கு போரில் உதவ, நவாப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஆதாரவுடன் செயல்பட்டனர். பின்னர் தமது ஆளுமைகளுக்கு உட்பட்ட சமஸ்தானங்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய படைகளை நவாப்புகள் பயன்படுத்த அதுவே அவர்களுக்கு ஆப்பாக அமைந்ததாம். இதன் காரணமாக ஆங்கிலேயர்களிடம் தனது ஆளுமைகளை கொஞ்சம் கொஞமாக இழந்ததுடன் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆழமாக கால் ஊன்ற காரணமாக இருந்தவர்கள் என்பதுடன் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற பெயரை நவாபுகள் பெற்றனராம்.
"இதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825 - 1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.
இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆர்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆர்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994-ல் பட்டத்துக்கு வந்தார்".
- விக்கிப் பீடியா
******
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு இருக்காவிட்டாலும், பல்வேறு நாடுகளில் நடந்தது போல் காலத்தின் கட்டாயம் என்ற அளவில் மன்னர் ஆட்சிகள் ஒழிந்திருக்கும், ஆனால் இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்திருக்குமா ? காங்கிரசு அரசு போன்ற ஒற்றைத் தலைமைக்கு மொத்த மாநிலங்களும் கட்டுப்பட்டு இருக்குமா என்பது ஐயமே.
இந்தியா என்கிற நாடு உருவாக ஆங்கிலேயர்களும் அவர்களுடன் கைகோர்த்த நவாப்புகளுமே காரணம், மொகலாய அரசர்கள் இந்தியாவெங்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள் என்பதைவிட இந்தியாவின் பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர் என்பதும் பிறகு அதுவே அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்ககாரணமாக அமைந்ததும் வரலாறாக ஆகி இருக்கிறது.
வியாபாரம், வேட்டை என்ற அடிப்படையில் வெள்ளைக்காரர்கள் கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு திரும்பச் சென்றிருந்தாலும் மொகலாய மன்னர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லவில்லை, முகலாயர்கள் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற அடைப்படையில் அவர்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்பும் இருக்கவில்லை என்பது உண்மை,
ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று போற்றபடுகிறார்கள், மைசூரில் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், நாவாப்புகளின் வாரிசுகளை இளவரசர்கள் என்ற அங்கீகாரம் மட்டுமே அளித்து அவர்களுக்கு மானியம் வழங்குகிறது இந்திய அரசு, சொல்லப் போனால் மொகலாய ஆட்சியை துடைத்தொழித்த வெள்ளைக்காரர்கள் காலூன்ற காரணமாக இருந்து, இந்தியா என்ற நாடு உருவாக காரணமாக இருந்தவர்கள் நவாப்புகள், இதன்காரணமாக தமது ஆட்சியையும் இழந்து இவர்கள் இந்துக்களால் போற்றப்பட வேண்டியவர்கள், தமிழகத்தின் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தியவர்கள் என்ற முறையில் நவாப்புகள் தமிழக மக்களால் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தக்கவர்கள்.
இணைப்புகள் : (விக்கி)