பின்பற்றுபவர்கள்

12 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 6

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5
பாலியல் தொடர்பில் ஆண்களின் நடவெடிக்கை தனிப்பட்ட அவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆண்கள் அதில் ஆர்வத்துடன் செயல்படுவது, தொடர்வது யாருக்கும் தெரியாமல் செயல்படுவதும் எளிது. ஏனெனில் பாதுகாப்பற்ற என்பதில் இருக்கும் பாலியல் நோய் தாக்கம் தவிர்த்து ஆண்கள் உடல் ரீதியாக பாதிப்பு அடைவதில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நாடுகளில் அது நடைபெறுவதே இல்லை, குறைவு என்பதெல்லாம் வெறும் கணக்கியல் கூறுகள் தான். பலருக்கு வாடிக்கையாக இருக்கும் ஒருவர் அல்லது குழு , திருமணம் பந்தம் இல்லாது ஒருவரின் ஆளுமையில் 'வைத்து இருப்பதும்' என்பதாக படுக்கை அறை என்பது கண்காணிக்கக் கூடியதல்ல என்கிற சமூகப் புரிந்துணர்வின் சாதகத்தை மூலதனாமாக வைத்து அங்கீகாரம் இல்லாத பாலியல் தொழில்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆண் சமூகத்தில் திருமணம் மூலம் உடலின்பத் தேவை தடையில்லாது கிடைக்கும் சூழல் உள்ளவர்கள் பாலியல் தொழிலை அரும்வெறுப்பாகத்தான் பார்பார்கள். தேவையான போது உடலின்பம் பெற வாய்பில்லாதவர்கள் அனைவரும் முனிவர்கள் கிடையாது, கட்டுக்குள் வைத்திருக்க எந்த ஒரு பயிற்சியும் இல்லாத ஆண் சாமியாராகவே தொடரவேண்டும் என்கிற சமூக எதிர்பார்ப்பு அவர்களுக்கு என்ன தீர்வை சொல்லிவிட முடியும் ? தன்னின்பம், இதற்கும் மதவாதிகள் தடா போடுகிறார்கள். ஒரு ஆண் சட்ட சிக்கல் இல்லாத பாலியல் வேட்கைத் தனிப்பு என்றால் பாலியல் தொழிலாளியைத் தான் நாடவேண்டும் என்கிற சூழல் இருப்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இது வெளியே சுதந்திரமாக இருப்பவர்களுக்கு ? ஆனால் ஆண்களுடனேயே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்போர்கள் சக ஆண்களை நாட வேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது, குறிப்பாக கப்பலில் பணியாற்றுபவர்கள், இராணுவவீரர்கள், சிறைக் கைதிகள் இவர்களிடையே தற்பால் சேர்க்கை மிக இயல்பாக நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு சமூகமும், மதமும் என்ன வகையாக தீர்வு சொல்கிறது என்றே தெரியவில்லை. பாலியல் தேவை கட்டுப்படுத்தியக் கூடியதென்றாலும் அனைவருமே புலனடக்கத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா ?

பல ஆண்கள் தற்பால் சேர்க்கை விருப்பில் செல்வதற்கு சூழல் காரணமாக அமைந்துவிடுகிறது, நான் பட்டயப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கும் போது என்னுடன் படிக்கும் வெளியூர் மாணவர்கள் வீடு எடுத்து தங்கிப் படிப்பது வழக்கம், அவர்கள் அறைக்கு வெளியூரில் இருந்து தங்கி பாடம் நடத்தும் விரிவுரையாளரும் வருவார், அவருக்கும் மாணவர்களுக்கும் ஒரு 6 வயது தான் வேறுபாடு, அப்படி வரும் அந்த விரிவுரையாளர் மாணவர்களுன் மாணவராக பழகுபவர், தேவையான நேரத்தில் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு கொடுத்து உதவுவார், திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உடையவர். மாணவர்கள் அனைவருக்குமே அவரை மிகவும் பிடிக்கும். மாணவர்களுடன் இரவு படம் பார்த்துவிட்டு சில வேளைகளில் அவர்களுடன் படுத்துவிடுவார்.

பலநேரங்களில் வெளியூர் மாணவர்களுடன் சேர்ந்து படிப்பேன். தேர்வு நெருங்கும் போது, ஒரு நாள் எனக்கு நண்பனான ஒரு மாணவன் மிகவும் மன அழுத்ததில் பாதிக்கப்பட்டவனாக இருந்தான், படிப்பில் கவனம் செலுத்தமால் இருந்தான், என்ன நடந்தது ஏன் இப்படி இருக்கிறான் என்று அறிந்து கொண்டு ஆறுதல் படுத்தலாம் என தனியாக அழைத்து விசாரித்த போது, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பலமுறைக் கேட்டுக் கொண்டு, சத்தியம் வாங்கிக் கொண்டு, விரிவுரையாளரின் பெயரைக் குறிப்பிட்டு, போனவாரம் இரவு தூங்கும் போது, அவரு 'அங்கு' கைவச்சிட்டார், அந்த நேரத்தில் எனக்கு தடுக்க முடியாமல், பக்கத்தில் இன்னும் இரண்டு ரூம் மெட் நல்ல தூக்கத்தில் இருந்தாங்க, வாத்தியார் மேல் வைத்திருந்த மரியாதையில் அவர் அப்படி செய்யும் போது தட்டிவிட முடியவில்லை, அந்த நேரத்தில் அது எனக்கு தேவையாக இருந்தது, அன்னிக்கு காலையில் இருந்து மனசே சரி இல்லை, அவரு அப்படி நடந்து கொள்வார்னு நான் எதிர்பார்க்கவில்லை, நானும் அவரது செயலை தடுக்க முயற்சிக்கல' என்றான். வாத்தியார் இப்படிபட்டவரா எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது, வாத்தியாரிடம் போய் கேட்க அந்த வயதில் அச்சமாக இருந்தது.
என்னிடம் சொல்லிவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பழைய நிலைக்கு திரும்பிவிட்டான். வாத்தியாரும் அதன் பிறகு அங்கு போனதில்லை, அவரை கல்லூரியில் பார்க்கும் போது எப்போதும் இருப்பது போல் வெகு இயல்பாகவே இருந்தார். அவரிடம் பிறரும் பாதிக்கப்பட்டார்களா ? பாதிக்கப்படவில்லையா ? அவர் அன்று மட்டும் தான் உணர்ச்சிவசப்பட்டவராக நடந்து கொண்டாரா ஊகித்துப் பார்த்தால் அவரது நடவடிக்கை தொடர்ந்திருந்தால் பலருக்கும் அவரைப் பற்றி தெரியவந்திருக்கும் என்பதால் தொடர்ந்திருக்க மாட்டார் என்றே கருத முடிகிறது.

மாணவவிடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் தங்கும் ஆண்கள் நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்து எதிர்பாராதவிதமாக தற்பால் சேர்க்கை விருப்பிற்குள் விழுந்துவிடுகிறார்கள். நெடும் தொலைவு இரவு பேருந்துப் பயணங்களில் நடுத்தரவயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அருகில் அமர்ந்திருக்கும் பருவ வயது இளைஞர்களை சீண்டுவார்கள், பலருக்கும் இது போன்ற பாலியல் தொல்லை அனுபவங்கள் இருக்கும். ஆனால் இப்படி நடப்பது தற்காலிகம், அதை இடம்மாறி உட்கார்ந்து அல்லது கூச்சல் போட்டு தவிர்க்கமுடியும், உடன் தங்கி இருக்கும் நண்பர்கள், அறையை பகிர்ந்து கொள்பவர்களினால் ஏற்பட்டால் விருப்பம் இல்லை என்றால் அவர்களிடையே நட்பு கெடும், விருப்பம் இருந்தால் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். இந்திய ஆசிய நாடுகளைப் பொருத்த அளவில் தற்பால் சேர்க்கை நாட்டம் பிறப்பிலேயே மனதில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு, நமது கலாச்சாரத்தின் மரபு கூறுகளும் அத்தன்மை வாய்ந்தது இல்லை. பிறரின் தூண்டுதலால் அந்தப் பழக்கத்தை ஏற்று தொடர்பவர்களே மிகுதி, இவர்களின் விழுக்காடுகளில் திருமணம் ஆன ஆண்கள் பெரும்பகுதியாக இருப்பர், திருமணம் தவிர்க்க ஆண்கள் இந்தக்காரணத்தைச் சொன்னால் பெற்றோர்களுக்கு பெருத்த அவமானமாகிவிடும் என்பதால் திருமணம் செய்து கொண்டும் தொடர்கிறார்கள் என்றே ஊகிக்கிறேன்.

சூழலால் அல்லாது பிறப்பிலேயே தற்பால் நாட்டம் அமையப்பெற்றவர்கள் அதுபற்றிய புரிந்துணர்வுகள் இல்லாத சமூகத்தில் வளர்ந்தால் தன்னை எதிர்பாலினம் என்று நினைத்து, அதாவது மன அளவிலும் ஆணாகவே இருப்பவர் பருவ வயதில் தனக்கு ஏற்படும் ஆண்கள் மீதான நாட்டம் குறித்து எண்ணும் போது தான் ஒரு பெண்ணோ என்று திருநங்கைகளைப் போல் நினைத்துவிட்டால் அப்படியே மாறிவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதி. திருநங்கைகளாக மாறியவர்களில் சிலர் ஆண் நாட்டம் கொண்ட ஆண்களாக இருந்து பாலியல் நாட்டம் (Sexual Orentation) பற்றிய (தவறான) சமூகப் புரிந்துணர்வு படி, தன்னையும் மாற்றிக் கொண்டவர்களாகவோ, மாற்றப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண் உடலில் பெண்ணாக தன்னை நினைக்கும் திருநங்கைகளும் ஓர்பால் சேர்க்கை நாட்டம் உள்ளவர்களுக்கும் மன அடைப்பிடையிலான பாலியல் விருப்புகள் முற்றிலும் வேறானவை. திருநங்கைகள் தான் ஆண் என்று மன அளவில் நினைப்பதையே வெறுப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது, அதனால் தான் அவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள். தற்பால் புணர்ச்சியனர் பாலின்பத்திற்கு ஒத்த பாலினர் மீது நாட்டம் கொண்டவர்கள்.
உடலளவிலும், மன அளவிலும் தன்னை மாறுபட்ட பாலினமாக நினைப்பது இல்லை.

சட்ட அங்கீகாரம் இருந்தால் தற்பால் சேர்க்கை விருப்பர்களாக புதியவர்கள் மாறும் / விழும் வாய்பு குறையும். சட்ட அங்கீகரம் இல்லாததால் ரகசியமாக செயல்பட வேண்டி இருப்பதால் புதியவர்கள் அதில் சிக்க வைக்கப்படுகிறார்கள். தற்பால் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வரவேற்கப்படக் கூடியதே. மற்றபடி பாலியல் வன்கொடுமை, குழந்தைகளிடம் (சிறுமி/சிறுவர்களிடம்) சில்மிஷம் இதை அனைத்துத் தரப்பும் செய்கிறது என்பதால் அதைத் அவர்கள் மீதான தனிப்பட்ட குற்றச் சாட்டாக பார்க்க முடியவில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைவு. குறிப்பாக தாய்லாந்து போன்ற நாடுகளில் பெண்களை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்வது அன்னாட்டின் அன்றாடச் செய்தி கிடையாது.

தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

11 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

பிரம்மிப்பாய் இருக்கு!! உங்கள் எழுத்து/எண்ணம்.
எண்ணம் முதலில் இருக்கனும் அல்ல?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? //

தேவை அவர்களுக்கு ஆலோசனையும்(கவுன்சிலிங்) சமுக பயிற்சியும்... இது இயற்கை அல்ல அபந்தமான நிகழ்வு

Colvin சொன்னது…

இயற்கைக்கு முரண்பட்ட இந்த உறவு அவசியமில்லையே. நாளேயே குழந்தை திருமணம், மகள்- தந்தை உறவு, சகோதர உறவுமுறைக்கும் சட்ட சந்தஸ்து கோரும் அபாயம் எழும்.

புனிதமான ஒருவன் ஒருத்தி உறவுமுறை பற்றி பாடசாலைகளில் பொருத்தான வயதில் போதிக்கப்பட்டால் இத்தகைய அவல நிலைகளை தவிர்த்துக் கொள்ளலாமே!

அன்புடன்
கொல்வின்
இலங்கை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நீங்கள் குறிப்பட்ட மாதிரி சமுகத்தில் சிலர் இருக்கின்றனர்.
எனக்கென்ன்வோ இது ஒரு ம‌னோ வியாதியாக‌த்தான் ப‌டுகிற‌து.

ந‌ல்ல‌ அல‌ச‌ல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
தேவை அவர்களுக்கு ஆலோசனையும்(கவுன்சிலிங்) சமுக பயிற்சியும்... இது இயற்கை அல்ல அபந்தமான நிகழ்வு
//

நீங்க சொல்வது சரிதான். அது பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// colvin said...
இயற்கைக்கு முரண்பட்ட இந்த உறவு அவசியமில்லையே. நாளேயே குழந்தை திருமணம், மகள்- தந்தை உறவு, சகோதர உறவுமுறைக்கும் சட்ட சந்தஸ்து கோரும் அபாயம் எழும்.
//

இயற்கை செயற்கை என்று சொல்வதைவிட உடலின்பம் தனிமனித விருப்பாக அமையப்பெற்றிருக்கிறது என்பதே சரி, முந்தைய பகுதிகளில் எழுதி இருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் ரத்த உறவு திருமணங்ளுக்கு யாரும் இதுவரை அங்கீகாரம் கோரவில்லை என்பதால் அதை இங்கு சொல்வது பொருத்தமானதாக தெரியவில்லை
அப்படி யாராவது கேட்டால் அப்போது அதையும், இதையும் ஒப்பிட்டு பேசமுடியும். தற்போதைக்கு இல்லாத வழக்கத்தைப் பற்றி பேச ஒன்றும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் 2:40 PM, July 12, 2009
// வடுவூர் குமார் said...
பிரம்மிப்பாய் இருக்கு!! உங்கள் எழுத்து/எண்ணம்.
எண்ணம் முதலில் இருக்கனும் அல்ல?
//

பாராட்டுக்கு மிக்க நன்றி குமார் அண்ணா,

எண்ணம் எழுத்து வேறாகுமா ?

எழுத்து என்று சுறுக்கமாக சொல்வது எண்ணம் தானே ? :)

எண்ணத்தில் உள்ளதை எழுத்தில் கொண்டுவருவற்கு எழுத்துப் பயிற்சி தேவை. அப்படி செய்து கொண்டால் எல்லோருமே சிறப்பாக எழுத முடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
நீங்கள் குறிப்பட்ட மாதிரி சமுகத்தில் சிலர் இருக்கின்றனர்.
எனக்கென்ன்வோ இது ஒரு ம‌னோ வியாதியாக‌த்தான் ப‌டுகிற‌து.

ந‌ல்ல‌ அல‌ச‌ல்.
//

மனவியாதி என்று உளவியல் மருத்துவர்கள் கூட ஒப்புக் கொள்வதில்லை என்கிறார்கள். ஏற்படுத்திக் கொண்ட பழக்கமாக மாறியவர்களுக்கு கவுன்சிலிங்க் கொடுத்து மாற்றலாம்.

வெளிநாட்டினர் இதை மனவியாதியாக ஒப்புக் கொள்வதில்லை, அதற்காகத் தான் திருமண அங்கீகாரமெல்லாம் கேட்டு இவை நார்மல் என்று காட்ட முயற்சிக்கிறார்கள், உளவியல் சிக்கல்.

பீர் | Peer சொன்னது…

//உடலளவிலும், மன அளவிலும் தன்னை மாறுபட்ட பாலினமாக நினைப்பது இல்லை//

ரெண்டும் கெட்டானாக நினைக்க வாய்ப்புண்டு. :)

//சட்ட அங்கீகாரம் இருந்தால் தற்பால் சேர்க்கை விருப்பர்களாக புதியவர்கள் மாறும் / விழும் வாய்பு குறையும்.//

அங்கீகாரம் இருக்கும் மற்றும் அது கொடுக்கும் தைரியத்தில் தற்பால் சேர்க்கை விருப்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். பேருந்துகள், திரைஅரங்குகள் போன்ற பொது இடங்களிலும் அவர்கள் கை இன்னும் நீளும்.

//பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைவு.//

அதற்காக ஆண் தன் உடலின்பத் தேவைகளுக்கு பெண்களை நாடாமல், அவர்களையும் தற்பால் சேர்க்கைக்கு தள்ளிவிடும் சூழலும் சரி என்கிறீகளா? ஒரு வகையில் அதுவும் வன்கொடுமைதான் சார்.

விளைவாக, இயற்கையான எதிர்பால் ஈர்ப்பு அற்றுபோய் (சென்ற இடுகையில் பின்னூட்டியது போல்) பெண் இனப்பெருக்க (மட்டும்) இயந்தரம் ஆக்கப்படும் அபாயமும் உள்ளது.

//தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? தொடர்ந்து பேசுவோம்//

அப்படியே திருமணம் என்றால் என்ன என்பதையும் சற்று விளக்கிவிடுங்கள்.

பீர் | Peer சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

//தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? //

தேவை அவர்களுக்கு ஆலோசனையும்(கவுன்சிலிங்) சமுக பயிற்சியும்... இது இயற்கை அல்ல அபந்தமான நிகழ்வு//

அண்ணன் ஆ.ஞானசேகரனுக்கு ஒரு ரிப்பீட்டு.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

\\\ சூழலால் அல்லாது பிறப்பிலேயே தற்பால் நாட்டம் அமையப்பெற்றவர்கள் அதுபற்றிய புரிந்துணர்வுகள் இல்லாத சமூகத்தில் வளர்ந்தால் தன்னை எதிர்பாலினம் என்று நினைத்து, அதாவது மன அளவிலும் ஆணாகவே இருப்பவர் பருவ வயதில் தனக்கு ஏற்படும் ஆண்கள் மீதான நாட்டம் குறித்து எண்ணும் போது தான் ஒரு பெண்ணோ என்று திருநங்கைகளைப் போல் நினைத்துவிட்டால் அப்படியே மாறிவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதி. ////



நல்ல தெளிவான கருத்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்