பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2006

உலகமயமாக்கல் ...

உலகமயமாக்கல், நன்மையா தீமையா, கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் காரர்களும் சிண்டை பிடித்து சண்டை செய்யும் வேளையில், நாமும் எதாவது எடுத்துவிடுவோம், என்று நினைத்தேன், யார் கண்டது? இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு? ச்சே காங்கிரஸ் ஆட்சி அல்லவா நடக்கிறது, யாராவது வந்து லாடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்து எழுதினேன்

சரி கருத்து சுதந்திரம் என்று சமாளித்து வைப்போம். ரொம்ப எதிர்பார்க்காதீர்கள், ஒரு மூன்று வரி புதுக் கவிதை.

உலகமயமாக்கல் :ஏழைகளும் கூட பயனடைகிறார்கள் !
ஆம் ! மானத்தை மறைத்தது
சீனக் கோவணம் !

(கம்யூனிஸ்ட் பார்டிங்களெல்லாம் ஜோரா கைத்தட்டுங்க)

10 கருத்துகள்:

கலை அரசன் சொன்னது…

சிறிய கவிதை தான். ஆனால் சிந்தனையைத் தூண்டுகின்றது.

கலை அரசன் சொன்னது…

சிறிய கவிதை தான். ஆனால் சிந்திக்கத் தூண்டுகின்றது.

நாகை சிவா சொன்னது…

இதிலுமா........

Chameleon - பச்சோந்தி சொன்னது…

:-))

Chameleon - பச்சோந்தி சொன்னது…

நான் தங்களை அழைத்திருக்கிறேன்.

:)

http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html

கோவி.கண்ணன் சொன்னது…

//
கலை அரசன் said...
சிறிய கவிதை தான். ஆனால் சிந்தனையைத் தூண்டுகின்றது.

//
கலையரசன்,
அவர்களே உங்கள் ரசனைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா சைட்...
இதிலுமா........
//
சீனாவின் வளர்ச்சி வியக்கை வைக்கிறது... அதற்காகவும் தான் 'சீன' என்று எழுதினேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// Chameleon - பச்சோந்தி said...
:-))
//
உங்களுக்கு இந்தமாதிரி கவிதைகள் பிடிக்குமென்றால் கைவசம் நிறைய இருக்கிறது. ஒன்னு ஒன்னா எடுத்துவிடுகிறேன்

சந்திப்பு சொன்னது…

கோவி கண்ணன் நீங்க சிங்கப்பூர்ல இருக்கிறதுனால, தமிழகத்தில் நடப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அமெரிக்க பெர்முடாவும், டீ சர்ட்டும், ரி°ட் பிராண்டும் என எல்லாம் அமெரிக்க மயமாகிப் போயுள்ளதெல்லாம் நிச்சயம் தங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்திப்பு said...
கோவி கண்ணன் நீங்க சிங்கப்பூர்ல இருக்கிறதுனால, தமிழகத்தில் நடப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அமெரிக்க பெர்முடாவும், டீ சர்ட்டும், ரி°ட் பிராண்டும் என எல்லாம் அமெரிக்க மயமாகிப் போயுள்ளதெல்லாம் நிச்சயம் தங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
//

சந்திப்பு,
சிங்கையில் பிறந்து வளரவில்லை, பொழைக்க பொட்டியத்தூக்கிக்கிட்டு வந்தே(ரினே)ன்.

நான் சொல்வது கோவணம் கட்டுபவர்களைப் பற்றி, மேல்வர்கத்திற்கு தான் தாங்கள் சொல்வது பொருந்தும்.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்