நேற்று விஜய் தொலைகாட்சியின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய சூடான வாக்கு வாதங்களை கேட்க நேர்ந்தது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அதில் பலர் பேசத் துணிந்த உள் ஒதுக்கீடு என்னைக் கவர்ந்தது. உள் ஒதுகீடு என்றால் சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாதிகளில் பிறந்த பெண்களுக்கான ஒதுக்கீடுகள். 33 விழுக்காடு கொடுக்கலாமா வேண்டாமா என்பதில் பல்வேறு கருத்துகள் ஒலிக்கின்றன. தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் பார்பனிய சிந்தனைவாதிகளின் ஒட்டு மொத்தக் குரல் பெண்களுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதே.
விஜய் நிகழ்ச்சியில் முற்போக்கு வாதியாக தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் இரு இளைஞர்கள் பெண்களுக்கு அத்தகைய இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதை வழியுறுத்தினர். அது கிட்டதட்ட சோ இராமசாமி உதிர்த்தவற்றை டோண்டு இராகவன் வலைப்பதிவில் (பெண்களுகான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத கூத்து) மறுபதிவு செய்ததைப் போன்றே இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதை விபச்சரத்துடன் ஒப்பிட்ட பெரியவாள்களின் குரலுக்குள் 'அடக்கமானவர்கள்' இவர்கள். இவர்களால் இப்படித்தான் பெண்களின் இட ஒதுக்கீட்டை 'கூத்து' என கேலி செய்து விமர்சனம் செய்ய முடியும். இவர்களின் வாதம்,
33 விழுக்காடு என்று ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள், இட ஒதுக்கீடே இல்லை என்றால் அவர்களால் 100 விழுக்காட்டில் கூட போட்டி இட முடியும் அல்லவா என்பது தான்.
இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக திணிக்க நினைக்கும் கருத்துகள் 33 விழுக்காட்டிற்கு மேல் பெண்களால் போட்டி இட முடியாது என்பதைத்தான். இட ஒதுக்கீடு என்பது அவ்வாறு 33 விழுக்காட்டிற்குள் பெண்களுக்கான வாய்ப்பைச் சுறுக்கவில்லை, ஆனால் குறைந்த அளவாக 33 விழுக்காடு கண்டிப்பாக உண்டு என்பதை வழியுறுத்துகிறது. இதை யாருமே விவாதத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
33 விழுக்காடு என்பது அவர்களுக்கு மட்டும் அதற்குமேல் உள்ள 67 விழுக்காடு அனைவருக்குமானது இதை சோ இராமசாமி போன்றோர் பேசுவதில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் பெண்களுக்கு 33 விழுக்காடு கிடைத்து விடக் கூடாது என்பதே. இந்த வாதத்தை மேலும் திரித்தலாகவும், மேலும் ஆணிய கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்த மற்றொரு பார்பனிய சிந்தனைவாத இளைஞர்
"ஒரு பெண்ணுக்கு ஒரு இடத்தை ஒதுக்குகிறோம் என்றால்....அதைவிட தகுதியான ஆண் ஒருவன் இருந்தால்......அவன் புறக்கணிக்கப்படுகிறான், இது சமூக விரோதச் செயல்....எனவே இட ஒதுக்கீடுகள் கூடாது.பெண்கள் போட்டி போட வேண்டுமென்றால் ஆண்களுக்கு நிகரான தகுதிகளை வளர்த்துக் கொண்டு போட்டி இடலாமே....இந்திரா, மார்க்ரட் தார்சர்.......இன்னும் எத்தனையோ பெண்கள் அப்படித்தானே வந்தார்கள் என்றெல்லாம் பொதுப்புத்திப் புரிதலாக பேசினார். எழுத்தாளர் ஞானி அதை உடனடியாக மறுத்தார், நீங்கள் சொல்லும் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஒட்டு மொத்த ஆண் அரசியவாதிகளை ஒப்பிடுகையில் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவர்கள், தனிப்பட்ட ஒரு சிலரின் முயற்சியால் கிடைத்த பலனை ஒட்டுமொத்த பெண்களின் சாதனைக்கான அளவுகோளாக்கி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது தவறு என்று சுட்டினார்.
அந்த இளைஞர்கள் மேலும் உள்ரலாக...'நான் இந்தியா முன்னேற்றத்தைத்தான் நினைக்கிறேன்......எனவே தகுதி உடையவர்களுக்கு கொடுப்பது தான் இந்தியா வளர்ச்சிக்கு பயன்படும்' என்றெல்லாம் கூறினார். இவர்கள் தகுதி என்று கூறுவது என்ன ? தேர்வில் பெற்ற மதிப்பெண்ணா ? அறிவா ?
மக்களாட்சியில் தன்னை யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்குமே உண்டு, படிக்காதவர்கள் நிறைந்த சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களின் நலனுக்காக பாடுபடுபவர் எவரோ அவருக்கு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி இருக்கிறது, கட்சிகளால் மக்களாட்சி தேர்தல் முறை குட்டிச்சுவர் ஆகி இருந்தாலும் கூட மக்களாட்சி நாட்டின் தேர்தல் முறை இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் முறையே முதல்வர், பிரதமர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் அந்த இளைஞரும், பொது புத்தியாளர்களும் கூறும் தகுதி என்பதற்கான அளவுகோள் வேறு என்ன இருக்கிறது.
தகுதி என்ற சொல்லாடலே ஒரு ஏமாற்று மற்றும் பம்மாத்து, இவர்கள் சொல்லும் தகுதி என்பது மன்னர் ஆட்சி காலத்தில் கூட இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட, நாடு மொகலாய மன்னர்களிடமோ, அதன் பிறகு வெள்ளைக்காரனிடமோ அடிமையாக ஆனது ஏன் ? ஒட்டுமொத்த அறிவாளிகளால் முன்பு ஆளப்பட்ட நாடு அடிமை பட்டது ஏன் ? அவ்வாறு அடிமைப்பட்ட நாட்டை மீட்பதற்கு தகுதியாளர்களாக இவர்கள் கற்பிதம் செய்து கொண்டவர்களால் மட்டும் தான் முடிந்ததா ?
தகுதி பற்றிய உளரல்கள் அவ்வப்போது அங்கங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக பார்பனிய சிந்தனையாளர்களிடமும் அவர்களின் நரித்தனம் அறியாத அடிவருடிகளிடமும் அந்தக் குரல் பலமாகவே ஒலிக்கிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை பெற்று வருபவன் ஊழல் செய்கிறான், லஞ்சம் வாங்குகிறான் என்கிறார்கள் இவர்கள். ஊழல், லஞ்சம் இவையெல்லாம் தனிமனித தவறுகள் இவை நடைபெறாத காலமே இல்லை. முன்பெல்லாம் ஊடகங்களினால் வெளிப்படுத்தப்படாதவை தற்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது அவ்வளவு தான்.
குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவன் இட ஒதுக்கீடு வழியாக மேற்கல்வி கற்றால் அவனால் பிற்காலத்தில் வேலையில் சிறப்பாக இயங்க முடியாது என்றும் உளறுகின்றனர். என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற எத்தனையோ பேர் நிறுவன முதலாளிகளாக நான் பார்த்திருக்கிறேன். படிப்பில் தங்கபதக்கம் பெற்ற மாணவன் தனியார் நிறுவனத்தில் உயர்பதிவியில், அதைவிட சற்று குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மேலாளர் என்ற அளவில் தான் பதவியில் இருக்கின்றனர். அவர்களின் ஒரு சிலர் நிறுவனம் நடத்துகின்றனர். இட ஒதுக்கீடோ, குறைந்த மதிப்பெண்ணோ சமூக பொருளாதாரத்தை குறைத்துவிடும் அல்லது சீரழித்துவிடும் காரணியும் அல்ல. இட ஒதுக்கீடு என்பவை ஏற்றிவிடும் ஏணி என்ற அளவிற்கு தான் பயன்படுகிறதே அன்றி முழுக்க முழுக்க அதை வைத்துக் கொண்டு யாரும் வாழ்நாள் சாதனையாளர்கள் என்கிற உயரத்தின் அளவுகோள் ஆக்கிக் கொள்வது கிடையாது, அவையெல்லாம் தனிப்பட்ட மனிதரின் முயற்சி. பின் தங்கிய கிராமத்தில் பிறந்த கலாம் ஜனாதிபதியாகியது அவரது தனிப்பட்ட உழைப்பின் பயனேயன்றி, அவரைப் போல் எல்லோருமே ஆகமுடியும் அதனால் இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பது வெறும் பொதுப்புத்தி புரிதலே. அப்துல்கலாம் என்பவர் இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் தூண்டுகோல் அன்றி இளைஞர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய அடி ஒற்றி பின்பற்றக் கூடிய அளவுகோல் இல்லை. அத்தனை பேரும் அப்துல்கலாம் ஆகுவதற்கு அத்தனை ஜனாதிபதி பதவிகள் நாட்டில் இல்லை என்பது சிந்திக்கக் கூடிய ஒன்று. எனவே அவரைப் போல் நீயும் மாறு என்று மேடையில் பேசுவது பிரச்சனையை திசை திருப்பும் பம்மாத்து மற்றும் பிரச்சனையின் தீவிரம் தெரியாத உளரல்கள் மட்டுமே.
இட ஒதுக்கீடுகளே இல்லை என்றால் பெண்களுக்கு 100 விழுக்காட்டிலும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதும் 33 விழுக்காடு பெண்களை சுறுக்குகிறது என்று கூறுவோர் குறுகிய மனம் படைத்த ஆணிய சிந்தனைவாதிகள். 33 விழுக்காடு பெண்களின் போட்டித்தன்மையை சுறுக்கவில்லை, 33 விழுக்காட்டு இடத்தை உறுதிப்படுத்துகிறது, அதற்குமேல் விழுக்காட்டை கூட்டுவது பெண்களின் முன்னெடுப்புகளினால் கண்டிப்பாக ஏற்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். பார்பனிய சிந்தனைவாதிகளின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய கருத்துகள் புறக்கணிக்கக் கூடியது. மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்குள்ளேயான உள் ஒதுக்கீட்டுடன் கிடைக்கும் பொழுது அது அனைத்துப் பெண்கள் சமூகத்திற்கும் பெரும்பயனாக அமையும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
43 கருத்துகள்:
//33 விழுக்காடு என்று ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள், இட ஒதுக்கீடே இல்லை என்றால் அவர்களால் 100 விழுக்காட்டில் கூட போட்டி இட முடியும் அல்லவா என்பது தான்.//
மீதி 67 விழுக்காட்டிலும் பெண்கள் தாராளமாக நிற்கலாம், ஆனால் 33-ல் அவர்கள் மட்டும்தான் நிற்கலாம் என்பதை நானும் கூறியுள்ளேனே, பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/blog-post.html
ஏதோ ஒரு க்வாலிஃபிகேஷன் இல்லாது யாருமே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, சட்டசபைக்கு வரமுடியாது. அதை அவர்கள் சரியாக மக்கள் நலனுக்கு பிரயோகம் செய்வதில்லை என்பதுதான் நிஜம். பெண்கள் மட்டும் இதில் என்ன ஸ்பெஷல்?
பாலிடிக்ஸ் என்றாலே அடித்து ஆடுவதுதான். இங்கு போய் இட ஒதுக்கீடு என்றால் அடாவடிக்காரர்கள் மற்றும் அவர்களது பினாமி பெண்பதிவர்கள் வருவதுதான் அதிகம் நடக்கும்.
அதை இப்போதே ஊகிக்க முடிகிறது. மேலும் சலுகை என வந்த பிறகு அதை விலக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தேவையற்று லாபிகள்தான் அதிகரிக்கும்.
அரசியல் நிர்ணயச்சட்டம் வரையப்பட்டபோது தலித்துகள் பழங்குடியினர் ஆகியோர் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை ஊக்குவித்து, முன்னால் கொண்டுவர வெறும் பத்தாண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அதுவும் மத்திய மாநில சட்டசபைகளில் சீட்டுகளுக்காகத் தரப்பட்டது. அது ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு, பிரமோஷன்களுக்கும் இட ஒதுக்கீடு என்றெல்லாம் போய் அடையாளம் காண முடியாத வழியில் விரிவடைந்துள்ளது.
ஓட்டு அரசியலால் கிரீமி லேயரைக் கூட அமுல்படுத்த இயலவில்லை. ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவரது பிள்ளைகளுக்கு படிப்புக்கு ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை. நடைமுறையில் சக மாணவர்களிடையே எத்தன எதிர்மறையான எண்ணங்களை இது உருவாக்குகிறது என்பதை அறிவீர்களா?
அதெல்லாம் விடுங்கள். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு வருவோம். இதுவும் அதே மாதிரித்தானே திசை திருப்பப்படும்? அதிலும் அதன் தேவையே இல்லை என்றுதான் கூறுவேன். தலித்துகளை செய்தது மாதிரி பெண்களை யாரும் எப்போதும் முன்னுக்கு வரவிடாமல் செய்ததில்லை.
அவ்வளவாக பிரதிநிதுத்துவம் இல்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மேலே சொன்னது போல அவர்களை யாரும் தடுக்கவில்லை.
இட ஒதுக்கீடு கொடுத்தால் டம்மி பீஸ்களை நிறுத்துவார்கள் அவ்வளவுதான்.
யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்.
பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_10.html
மேலே குறிப்பிட்ட பதிவில் பெண்கள் யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது கொசுறு செய்தி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்கள் இட ஓதுக்கீடு என்று சொல்பவர்கள் சம காலத்தில் பதவியில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள் பின்னால் நிற்பவர்கள், இயக்குபவர்கள் அத்தனை பேர்களும் யாராக இருக்கீறார்கள்?
அரசியல் பதவி இல்லாத தளங்களில் அருந்ததிராய், மேதா பட்கர், சிவகாமி,சிறுதுளி வனிதா போன்றவர்கள் தான் உண்மையிலேயே தங்கள் உழைப்பை முழுமையாக அளித்துக்கொண்டுருப்பவர்கள்.
எனக்குத் தெரிந்தவரையிலும் பதவியில் அமர்ந்த தமிழரசி போன்றவர்கள் கூட டோண்டு சொன்னது போல டம்மி தான்.
//ஏதோ ஒரு க்வாலிஃபிகேஷன் இல்லாது யாருமே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, சட்டசபைக்கு வரமுடியாது. பெண்கள் மட்டும் இதில் என்ன ஸ்பெஷல்?//
பெண்கள் மட்டுமே என்ன ஸ்பெசலா ? அப்படி என்றால் நான் கருவரையில் எந்த ஒரு பெண் அர்சகரையும் பார்பனிய ஆகமவிதிகளுடன் கூடிய கோவில்களில் பார்க்கவில்லை. ஆக பெண்களுக்கான தகுதி இங்கெல்லாம் இல்லை என்றும் நீங்களே தான் கூறுகிறீர்கள். பெண்கள் அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், முன்னேறிய பெண்கள் தனிப்பட்ட பெற்றோர்களின் உறவுகளின் ஆதரவினால் முன்னேறியவர்கள் மட்டுமே. அதற்கான வழிகளை சமூக அரசியல் அமைப்பு மறைத்து வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
//அதை அவர்கள் சரியாக மக்கள் நலனுக்கு பிரயோகம் செய்வதில்லை என்பதுதான் நிஜம்.//
நீங்கள் சொல்வது அரசியல், அவர்கள் செயல்படுகிறார்களா இல்லையா என்பது வேறு விசயம். அது பற்றிய விவாதம் பெண்கள் சட்டசபையில், பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுகிறார்களா இல்லையா என்கிற கேள்வி எழுப்பும் போது நீங்கள் விமர்சனம் செய்யலாம். நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் ஆண் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஊழல் செய்யும் உரிமை பெண் அரசியல்வாதிகளுக்கும் இருக்கக் கூடாதா ? என்றே கேட்பேன்.
// இங்கு போய் இட ஒதுக்கீடு என்றால் அடாவடிக்காரர்கள் மற்றும் அவர்களது பினாமி பெண்பதிவர்கள் வருவதுதான் அதிகம் நடக்கும்.//
அது பெண்களின் பிரச்சனை அதை சரி செய்ய முடியுமா முடியாதா என்பது பற்றி அவர்கள் தான் முடிவு செய்ய முடியும். ஒவ்வொருவருக்கும் மரணம் உறுதி என்பதால் இன்றே செத்துப்போ என்பது போன்று உங்கள் கருத்து ஒரு தவறான வாதம். ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் மழைபெய்யலாம் என்பது புரிதல், அதனால் எப்போதும் கக்கத்தில் குடை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது என்றோ மழையில் சளிபிடித்தவரின் போபியா.
உங்கள் கருத்து ஒரு பொது புத்தி புரிதல்.
//அதை இப்போதே ஊகிக்க முடிகிறது. மேலும் சலுகை என வந்த பிறகு அதை விலக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தேவையற்று லாபிகள்தான் அதிகரிக்கும்.//
ஊகம் ?
அத்தைக்கு மீசை முளைத்துவிட்டால் சித்தாப்பா ஆகிவிடுவார், நான் இன்னிக்கே அத்தையை சித்தப்பா என்று கூப்பிடப் பழகுகிறேன் என்கிறீர்களா ? அத்தையை தேவைப்பட்டால் சித்தப்பா என்றும் கூப்பிடலாம் என்கிறீர்களா ?
ஏன் சார் நீக்க முடியாது, நீங்களும் வருணம் ஆயிரம் என்பது போல் வருணத்தை ஆதரித்து பேசிவருகிறீர்கள், அவையெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதா ? தேவையும் சூழலும் தானாகவே அமையும். தேவைப்படுவதால் கேட்கிறார்கள் அமையக் கூடிய சூழல் இருக்கிறது கிடைக்கப் போகிறது. நாளைக்கு தேவை இல்லை என்றால் மறைந்து போகும். மாறாதது எதுவும் இல்லை.
உங்கள் வாதப்படியே இட ஒதுக்கீடு பார்பனர்களின் பொருளாதரத்தை சீர்குலைத்துவிட்டது என்று சொல்ல முடியுமா ? வேறு வழியில் போட ஜாட்டான் என்று போய் கொண்டு தானே இருக்கிறார்கள் என்று தானே கூறுகிறீர்கள். பிறகு எதற்கு லாபிகள் தொடரும் என்கிற அலறல்.
//அரசியல் நிர்ணயச்சட்டம் வரையப்பட்டபோது தலித்துகள் பழங்குடியினர் ஆகியோர் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தனர்.//
ஆங்கிலேயா ஆட்சிக்கு முன்னும் பின்னும் தலித்துகளின் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொல்லவில்லை. மிக்க மகிழ்ச்சி.
//அவர்களை ஊக்குவித்து, முன்னால் கொண்டுவர வெறும் பத்தாண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அதுவும் மத்திய மாநில சட்டசபைகளில் சீட்டுகளுக்காகத் தரப்பட்டது. அது ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு, பிரமோஷன்களுக்கும் இட ஒதுக்கீடு என்றெல்லாம் போய் அடையாளம் காண முடியாத வழியில் விரிவடைந்துள்ளது. அரசியல் நிர்ணயச்சட்டம் வரையப்பட்டபோது தலித்துகள் பழங்குடியினர் ஆகியோர் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை ஊக்குவித்து, முன்னால் கொண்டுவர வெறும் பத்தாண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அதுவும் மத்திய மாநில சட்டசபைகளில் சீட்டுகளுக்காகத் தரப்பட்டது. அது ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் வேலைகளுக்கும் இட ஒதுக்கீடு, பிரமோஷன்களுக்கும் இட ஒதுக்கீடு என்றெல்லாம் போய் அடையாளம் காண முடியாத வழியில் விரிவடைந்துள்ளது.//
தேசிய அரசியல் உயர்பதவியில் இருப்பவர்கள் யார் ? அவர்கள் ஏன் வளைந்து கொடுக்கிறாகள் ? உயர்வர்க்கம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு போடும் தூண்டில் ஒதுக்கீடுகளை அப்படியே வைத்துக் கொள்ளுதல் என்றும் சொல்லலாம் அல்லவா. இட ஒதுக்கீடுகள் தொடர்வதற்கான தேவை இன்றும் இருக்கிறது. அப்படி நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட அதனை தொடர்ந்து வைத்திருக்கும் நிலையை உயர்வர்க்க அரசியல்வாதிகள் 'ஓட்டு பிச்சைக்காக' தொடர்கிறார்கள் என்று நீங்கள் கூறலாமே. தவறுகள் இருந்தாலும் கூட அதுவும் அதிகார உயர்வர்க்க அரசியல்வாதிகளால் தொடர்வது தான்.
நாளைக்கு படிச்சு மேலே வந்துவிட்டால் என்னை மதிக்கமாட்டான் இவனெல்லாம் படிக்கவே கூடாது என்று சொல்லும் பண்ணையார் தனமான சிந்தனை 'கொடுத்தால் தொடர்வார்கள்' என்கிற உங்களது சிந்தனை.
//33 விழுக்காடு என்பது அவர்களுக்கு மட்டும் அதற்குமேல் உள்ள 77 விழுக்காடு அனைவருக்குமானது//
77 விழுக்காடு ????
//அதெல்லாம் விடுங்கள். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு வருவோம். இதுவும் அதே மாதிரித்தானே திசை திருப்பப்படும்? அதிலும் அதன் தேவையே இல்லை என்றுதான் கூறுவேன். தலித்துகளை செய்தது மாதிரி பெண்களை யாரும் எப்போதும் முன்னுக்கு வரவிடாமல் செய்ததில்லை.//
இன்றும் கூட காவி சேலையில் மொட்டையடிக்கப் பட்ட பார்பனப் பெண்களை ஒரு சில இடங்களில் பார்க்கலாம். வெள்ளை சீலை அணிவித்துள்ள பெண்களை மதுரைக்கு அந்த பக்கம் பார்க்கலாம். கிறித்துவகள் தவிர்த்து யாரும் பெண்களின் நலனின் 50 ஆண்டுக்கு முன்பு அக்கரை காட்டியிருக்கவில்லை. பெண்களெல்லாம் முன்பு படிக்காமல் இருந்தார்கள், இப்போது தானாகவே படிக்கிறார்கள் என்கிறீர்களா ?
// T.V.ராதாகிருஷ்ணன் said...
//33 விழுக்காடு என்பது அவர்களுக்கு மட்டும் அதற்குமேல் உள்ள 77 விழுக்காடு அனைவருக்குமானது//
77 விழுக்காடு ????//
67 என்று வாசிக்கவும்.
//
இட ஒதுக்கீடு கொடுத்தால் டம்மி பீஸ்களை நிறுத்துவார்கள் அவ்வளவுதான்.//
இது வேறு அரசியல், நாம் பேசுவது அடிப்படை உரிமை. அந்த உரிமை தட்டிப்பறிக்கப்படுகிறதா என்பது பற்றிய விவாதம் இல்லை. முதலில் பெண்கள் முன்னேறிவர வழிவிடுவோம், அதன் பிறகு செயல்பாட்டின் மீதான விமர்சனத்தை செய்யலாம்.
//யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள்,//
திருநங்கைகள் மட்டுமல்ல விளிம்பு நிலையில் இருக்கும் அனைவருக்குமே அவரவருக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும்.
பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்.//
இது உங்கள் ஊகம். திருநங்கைகளுக்கும் சேர்த்து 34 விழுக்காடுகளாகவே இட ஒதுக்கீடு கொடுக்கலாம். பெண்கள் யாரும் எதிர்க்காத போது எதிர்பார்கள் என்று சொல்வது உங்கள் ஊகம்
//பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_10.html
மேலே குறிப்பிட்ட பதிவில் பெண்கள் யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது கொசுறு செய்தி.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
பெண்களுக்கு எதிரான பதிவை பெண்கள் புறக்கணிப்பதில் தவறு இல்லை.
கோவி அண்ணா,
ம்... ஆட்டம் களை கட்டுகிறதே...
பெரியவாள் பேசும்போது வேடிக்கை பார்த்து, தெரிந்து தெளிந்து கொள்ள தான்...
பிரபாகர்...
கொஞ்சம் விவகாரமான சப்ஜெட், நானும் உங்க பிலாக்கை படித்துவிட்டேன் அண்ணா பை பை.
இட ஒதுக்கீடு தேவைதான்.
//இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக திணிக்க நினைக்கும் கருத்துகள் 33 விழுக்காட்டிற்கு மேல் பெண்களால் போட்டி இட முடியாது என்பதைத்தான். இட ஒதுக்கீடு என்பது அவ்வாறு 33 விழுக்காட்டிற்குள் பெண்களுக்கான வாய்ப்பைச் சுறுக்கவில்லை, ஆனால் குறைந்த அளவாக 33 விழுக்காடு கண்டிப்பாக உண்டு என்பதை வழியுறுத்துகிறது. இதை யாருமே விவாதத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. //
I agree with this
//ஏதோ ஒரு க்வாலிஃபிகேஷன் இல்லாது யாருமே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, சட்டசபைக்கு வரமுடியாது. அதை அவர்கள் சரியாக மக்கள் நலனுக்கு பிரயோகம் செய்வதில்லை என்பதுதான் நிஜம். பெண்கள் மட்டும் இதில் என்ன ஸ்பெஷல்? //
If so no need for the concept of reservation. Don't agree
//அதெல்லாம் விடுங்கள். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு வருவோம். இதுவும் அதே மாதிரித்தானே திசை திருப்பப்படும்? அதிலும் அதன் தேவையே இல்லை என்றுதான் கூறுவேன். தலித்துகளை செய்தது மாதிரி பெண்களை யாரும் எப்போதும் முன்னுக்கு வரவிடாமல் செய்ததில்லை.
அவ்வளவாக பிரதிநிதுத்துவம் இல்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மேலே சொன்னது போல அவர்களை யாரும் தடுக்கவில்லை.
இட ஒதுக்கீடு கொடுத்தால் டம்மி பீஸ்களை நிறுத்துவார்கள் அவ்வளவுதான்.
யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்.//
Sorry this is totally ..... sorry dondu
//மக்களாட்சியில் தன்னை யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்குமே உண்டு//
இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த உரிமையே போய்விடுகிறதே?
மேலும் ஆண்களுக்கு அவர்களுடைய தொகுதியில் (அந்த தொகுதி இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தால்) போட்டியிடும் உரிமை மறுக்கப்படுகிறதே.
இதற்கு பதிலாக பெண்கள் பி்ன் தங்கியுள்ள தொகுதிகளை பட்டியலிட்டு அவற்றில் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். ஒரு உறுப்பினர் சாதாரண தேர்தல் முறையிலும் மற்றவர் பெண்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் பெண் உறுப்பினராகவும் இருக்கலாம்.
There is perhaps a need to switch over to List system, if we want to effectively use the reservation: each party will publish a list, in fact two lists, one of men and another of women, and number of persons commensurate with the percentage of votes polled by each party will go to the House; with reservation, the number of women can also be accordingly chosen. Present first to hit the post system, compounded by the reservation for women, will not be representative of the voting.
One small submission: for heaven's sake, please do not take it that what Cho or Dondu says is the opinion of brahmins. They have freedom to have their own foolish ideas; not all brahmins have perverted thinking of Cho.
//அறிவிலி said...
இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த உரிமையே போய்விடுகிறதே? மேலும் ஆண்களுக்கு அவர்களுடைய தொகுதியில் (அந்த தொகுதி இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தால்) போட்டியிடும் உரிமை மறுக்கப்படுகிறதே.//
தற்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அவர்களைச் சார்ந்த சமூகத்தை நிறுத்துவதற்கு பிற சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
என்பதால் அதே நடைமுறையில் பெண்கள் முன்னேற வேண்டிய தொகுதிகள் என்ற கணக்கெடுப்பில் அப்படியான தொகுதியை அறிவிப்பதில் பிரச்சனை ஒன்றும் இருக்காது.
அல்லது பெண்களுக்கான தொகுதிகள் என்று சுழற்சி முறையில் தேர்தலுக்கு தேர்தல் தொகுதியை மாற்றினால் பிரச்சனை ஒன்றும் இருக்காது.
மேலும் நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனை எதிர்ப்பு இல்லாத ஒரே ஒரு (unopposed) வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் நடக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அவை விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையே.
//இதற்கு பதிலாக பெண்கள் பி்ன் தங்கியுள்ள தொகுதிகளை பட்டியலிட்டு அவற்றில் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.//
பெண்களுக்கான தொகுதி என்று அறிவித்தால் போதும் எத்தனை பேர் போட்டி இடலாம் என்பதில் வரைமுறை தேவையில்லை, போட்டி இடுபவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது மக்களின் வேலை.
//ஒரு உறுப்பினர் சாதாரண தேர்தல் முறையிலும் மற்றவர் பெண்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் பெண் உறுப்பினராகவும் இருக்கலாம்.
//
யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதில் ஆண்/பெண் பாகுபாடு தேவை இல்லை. தொகுதி பெரும்பான்மை நலன் சார்ந்த மனதே அதை முடிவு செய்யும்.
//எனக்குத் தெரிந்தவரையிலும் பதவியில் அமர்ந்த தமிழரசி போன்றவர்கள் கூட டோண்டு சொன்னது போல டம்மி தான்.
10:05 AM, April 26, 2010//
டம்மி பீஸ்கள் ஆண் அரசியல்வாதிகளிலும் கூட உண்டு. உங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் என்கிற நபரைப் பற்றி தெரியுமா ?
:)
எனவே இதையெல்லாம் காரணம் காட்டி ஒரு திட்டத்தை மறுப்பது தவறு.
//பிரபாகர் said...
கோவி அண்ணா,
ம்... ஆட்டம் களை கட்டுகிறதே...//
:)
// பெரியவாள் பேசும்போது வேடிக்கை பார்த்து, தெரிந்து தெளிந்து கொள்ள தான்...
பிரபாகர்...//
இப்ப பெரிய வாள் என்பேள், பிறகு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு என்பேளா ?
:)
//பித்தனின் வாக்கு said...
கொஞ்சம் விவகாரமான சப்ஜெட், நானும் உங்க பிலாக்கை படித்துவிட்டேன் அண்ணா பை பை.//
நல்லதாப் போச்சு. உங்கள் கருத்து வேற திருவாளர் உங்கள் சீனியர் டோண்டு கருத்து வேறா ?
:)
// அக்பர் said...
இட ஒதுக்கீடு தேவைதான்.//
இதயத்தில் இடம் கொடுத்தால் மட்டும் போதாது என்பதை ஏற்கிறீர்கள்.
:)
//யாசவி said...
//இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக திணிக்க நினைக்கும் கருத்துகள் 33 விழுக்காட்டிற்கு மேல் பெண்களால் போட்டி இட முடியாது என்பதைத்தான். இட ஒதுக்கீடு என்பது அவ்வாறு 33 விழுக்காட்டிற்குள் பெண்களுக்கான வாய்ப்பைச் சுறுக்கவில்லை, ஆனால் குறைந்த அளவாக 33 விழுக்காடு கண்டிப்பாக உண்டு என்பதை வழியுறுத்துகிறது. இதை யாருமே விவாதத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. //
I agree with this
//
டோண்டு பதிவை பெண்கள் புறக்கணித்ததற்கு அவர் எழுதியது பெண்களுக்கு எதிரானவை என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அந்த கருத்தை உங்கள் பின்னூட்டம் மெய்ப்பிக்கிறது. மிக்க நன்றி.
//One small submission: for heaven's sake, please do not take it that what Cho or Dondu says is the opinion of brahmins. //
Small correction, i don't agree that parpanars called as Brahmins. 'Brahmins' - No such characteristic person exist any one time in the past history.
//They have freedom to have their own foolish ideas; not all brahmins have perverted thinking of Cho.//
Then parpanar community must reject their comments, so that public will ignore them.
//தகுதி பற்றிய உளரல்கள் அவ்வப்போது அங்கங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக பார்பனிய சிந்தனையாளர்களிடமும் அவர்களின் நரித்தனம் அறியாத அடிவருடிகளிடமும் அந்தக் குரல் பலமாகவே ஒலிக்கிறது.//
ஒரேயடியாக போட்டு தாக்குறீங்க
//இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை பெற்று வருபவன் ஊழல் செய்கிறான், லஞ்சம் வாங்குகிறான் என்கிறார்கள் இவர்கள்.//
இந்திய ராணுவ ரகசியத்தை விற்றவர்களில் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு சொல்லவும்
கேதான் தேசாய் இட ஒதுக்கீட்டில் படித்தவரா .... !!!
//குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவன் இட ஒதுக்கீடு வழியாக மேற்கல்வி கற்றால் அவனால் பிற்காலத்தில் வேலையில் சிறப்பாக இயங்க முடியாது என்றும் உளறுகின்றனர். //
நம்ம பதிவு பக்கம் வந்து பார்க்க சொல்லுங்கள் ;) ;)
//இட ஒதுக்கீடுகளே இல்லை என்றால் பெண்களுக்கு 100 விழுக்காட்டிலும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதும் 33 விழுக்காடு பெண்களை சுறுக்குகிறது என்று கூறுவோர் குறுகிய மனம் படைத்த ஆணிய சிந்தனைவாதிகள். //
கோவியாரே
இந்த முட்டாள்தனமான வாதங்களுக்கு நான் கூறும் எளிய பதில் இது தான்
லேடிஸ் ஸ்பெஷல் (மகளிர் சிறப்பு) பேரூந்து விடப்படுவதால் பிற பேரூந்துகளில் பெண்கள் ஏற கூடாது என்று கிடையாது :) :)
//புருனோ Bruno said...
ஒரேயடியாக போட்டு தாக்குறீங்க//
தனிமனித மற்றும் ஆபாசமில்லாத பொதுத் தாக்குதலை 'போட்டு தாக்குவது' என்று சொல்லலாமா ?
:) பொதுப்படையாக தாக்குவதில் வசதி 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கட்டுமே' :)
// இந்திய ராணுவ ரகசியத்தை விற்றவர்களில் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு சொல்லவும்
கேதான் தேசாய் இட ஒதுக்கீட்டில் படித்தவரா .... !!!//
இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் துக்ளக் பதில் சொல்லாது டோண்டு சொல்லிவிடுவிரா ? இதை தனிமனித செயல் என்று திரிப்பார்கள். இன்னும் 100க் கணக்கானோர் உண்டு. அர்ஷத் மேத்தாவை மறந்திருக்க முடியாது, பங்கு சந்தையில் மாபெரும் ஊழல் செய்தவன், அவன் இட ஒதுக்கீட்டில் படித்தவன் இல்லை
//லேடிஸ் ஸ்பெஷல் (மகளிர் சிறப்பு) பேரூந்து விடப்படுவதால் பிற பேரூந்துகளில் பெண்கள் ஏற கூடாது என்று கிடையாது :) :)
9:36 AM, April 27, 2010//
அவர்கள் கேள்வியே பெண்கள் ஏன் பொதுப் பேருந்தில் ஏறி ஆண்களிடம் இடிபடக் கூடாது, இடிபடுவது பொதுவான ஒன்று தானே, இடிக்கும் ஆண்களை பெண்கள் மிதிக்கலாமே என்பது போன்ற சொத்தை வாதங்கள் தான். இவர்கள் வாதப்படி மகளிர் காவல் நிலையம், மகளிர் பேருந்து, மகளிருக்கான தொடர்வண்டியில் தனிப்பெட்டி அனைத்தும் தேவை இல்லாத ஒன்று.
பெண்களுக்கெதிரான கருத்துகளை பெண்கள் தொடர்ந்து நிரகரிப்பதுடன் கண்டிக்கவும் வேண்டும்.
//புருனோ Bruno said...
//குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவன் இட ஒதுக்கீடு வழியாக மேற்கல்வி கற்றால் அவனால் பிற்காலத்தில் வேலையில் சிறப்பாக இயங்க முடியாது என்றும் உளறுகின்றனர். //
நம்ம பதிவு பக்கம் வந்து பார்க்க சொல்லுங்கள் ;) ;) //
:) என்ன தலைவரே.... நாம என்னதான் எழுதினாலும் கூட... பொதுப்புத்தி புரிதல் இன்னும் தொடர்கிறது, அதை பரப்பவும் செய்கிறார்கள்.
சென்றவாரம் என்னிடம் ஒரு நண்பர்
'பார்டர் மார்க் வாங்கிறவன் மருத்துவ சீட் வாங்கிடுறான், 98 எடுத்தவனுக்கு கிடைக்கமாட்டேன்கிறது' என்றார்
'நண்பரே நீங்க 1947க்கு முன்னால் பிறந்திருக்கிங்க, இன்னிக்கு தேதிக்கு கட் ஆப் மார்க் எந்த ஒரு இட ஒதுக்கீட்டு பிரிவிலும் 90 விழுக்காட்டிற்கு குறைவானதாக இல்லை, எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள், நீங்க தான் இட ஒதுக்கீட்டின் வழியாக இலவச சீட் கொடுப்பதாக பினாத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பதில் சொன்னேன். உண்மை தானே.
நிலவரமே தெரியாமல் இன்னும் கூட பார்டர் மார்க் எடுத்த தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பதாக பரப்பி வருகிறார்கள்.
:(
//இட ஒதுக்கீடு கொடுத்தால் டம்மி பீஸ்களை நிறுத்துவார்கள் அவ்வளவுதான்.//
பெண்களை பீஸ்கள் என்ற அளவிலே மதிப்பிடும் இவரிடம் வேற என்ன கருமத்தை எதிர்பார்க்க முடியும் கோவியாரே?. பெண்களை ஒதுக்கி”யே” வைப்பது தான் பார்பப்னீயத்தின் முதல்வரிசை முன்னுரிமைகள்.. குறிப்பாக வேறு சாதியப் பெண்கள். 33ல் சில சதவீதம் ப்ராமணர்களுக்கு என்று அறிவிப்பு வந்திருந்தால் கதையே வேற.. இப்போ உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் அதை எதிர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
//33 விழுக்காடு என்று ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள், இட ஒதுக்கீடே இல்லை என்றால் அவர்களால் 100 விழுக்காட்டில் கூட போட்டி இட முடியும் அல்லவா என்பது தான்.//
இதப்பார்ரா.. யாருக்குமே தெரியாத உண்மை..:))
//நிலவரமே தெரியாமல் இன்னும் கூட பார்டர் மார்க் எடுத்த தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பதாக பரப்பி வருகிறார்கள்.
:(//
ஹாஹா.. இப்போ பயலுக பின்னிப் பெடலெடுக்கிறானுங்க.. இட ஒதுக்கீடே தேவை இல்லைன்னு சொல்ற அளவுக்கு படிக்கிறாங்க.. சமீப ஆண்டுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் ஐயர் ஆத்து பசங்க ரொம்ப குறைவு.. இட ஒதுக்கீடு என்பது ஸ்டெப்னி ஆய்டிச்சி :)
அந்த 33 சதவிகிதத்திற்கு மறைமுகமாக எதிர்ப்பு கொடுக்கும் லல்லு மற்றும் ஜனதா தளம் கட்சியினர் பார்பனியவாதிகளா என்று தெரியவில்லை. அவர்கள் இதிலும் தாழ்த்த பட்டவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்பது இதை மறைமுகமாக எதிர்ப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. 33 சதவிகிதத்தை எதிர்ப்பது ஆண் ஆதிக்கமே (MALE DOMINATION ) தவிர இதில் பார்பனீயத்துக்கு சம்பந்தம் இல்லை. எல்லாவற்றிற்கும் பார்பனீயம் என்று சொல்லுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் பார்பனீ எதை எதிர்க்கும் கட்சிகள் எதாவது ஒன்றிலாவது 33 சதவிகிதத்தை பின் பற்ற வேண்டியது தானே . சட்டம் வந்தால் தான் செய்வேன் அது வரை செய்ய மாட்டேன் என்பது மட தனமானது.
//Kesavan said...
அந்த 33 சதவிகிதத்திற்கு மறைமுகமாக எதிர்ப்பு கொடுக்கும் லல்லு மற்றும் ஜனதா தளம் கட்சியினர் பார்பனியவாதிகளா என்று தெரியவில்லை. அவர்கள் இதிலும் தாழ்த்த பட்டவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்பது இதை மறைமுகமாக எதிர்ப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. 33 சதவிகிதத்தை எதிர்ப்பது ஆண் ஆதிக்கமே (MALE DOMINATION ) தவிர இதில் பார்பனீயத்துக்கு சம்பந்தம் இல்லை. எல்லாவற்றிற்கும் பார்பனீயம் என்று சொல்லுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் பார்பனீ எதை எதிர்க்கும் கட்சிகள் எதாவது ஒன்றிலாவது 33 சதவிகிதத்தை பின் பற்ற வேண்டியது தானே . சட்டம் வந்தால் தான் செய்வேன் அது வரை செய்ய மாட்டேன் என்பது மட தனமானது.//
தம்பி கேசவா,
பார்பனீயம் for dummies என்று கூகுளில் தேடினால் அது பற்றி அறிந்து கொள்ள முடியும். இங்கே பார்பனீயம் என்பது பார்பனர்களை மட்டுமே குறித்தது அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
உயர்சாதிய, ஆணாதிக்க, மதவாதிய சிந்தனைகளின் தொகுப்பே இந்திய சித்தாந்திகளால் பார்பனீயம் என்று சொல்லப்படுகிறது. லல்லுவானாலும் லொள்ளுவானாலும் அந்த சிந்தனை உடையவர்கள் பார்பனியவாதிகளே
//உயர்சாதிய, ஆணாதிக்க, மதவாதிய சிந்தனைகளின் தொகுப்பே இந்திய சித்தாந்திகளால் பார்பனீயம் என்று சொல்லப்படுகிறது. லல்லுவானாலும் லொள்ளுவானாலும் அந்த சிந்தனை உடையவர்கள் பார்பனியவாதிகளே //
உங்கள் கருத்து படி உயர் சாதிய , மத வாத்திய , ஆணாதிக்க தொகுப்பாக இருக்கலாம். ஆனால் இதில் மதமோ உயர் சாதியோ எதற்கும் இதில் சம்பந்தம் இல்லை . ஒன்லி ஆணாதிக்கம் மட்டுமே . நீங்கள் பார்பனீயம் என்று எழுதுவீர்கள் , அதற்கு பின்னூட்டமாக வேறு ஒருவர் பார்பனர் என்று எழுதுவார் .இதெல்லாம் தேவையே இல்லையே :)
//நீங்கள் பார்பனீயம் என்று எழுதுவீர்கள் ,
அதற்கு பின்னூட்டமாக வேறு ஒருவர் பார்பனர் என்று எழுதுவார் .இதெல்லாம் தேவையே இல்லையே :)//
அதெல்லாம் படிப்பவரின் தவறான புரிதல். சோ இராமசாமியின் உளரல்கள் கூடத்தான் எனக்கு பிடிக்கவில்லை, அதற்காக அவர் எழுதக் கூடாதுன்னு நான் சொல்லவில்லையே. அதை புறக்கணியுங்கள் என்று தான் சொல்ல முடியும். நீங்கள் இதை எழுதுங்கள் இதை எழுதாதீர்கள் என்று சொல்வது தான் தேவையற்றது.
// SanjaiGandhi™ said...
சமீப ஆண்டுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் ஐயர் ஆத்து பசங்க ரொம்ப குறைவு.. இட ஒதுக்கீடு என்பது ஸ்டெப்னி ஆய்டிச்சி :)//
ஐய்யர் 'ஆத்து' பசங்க இப்போதெல்லாம் படிப்பில் 'மூழ்குவதில்லை' என்று சொல்கிறீர்கள். சரிதான்.
:)
டோண்டு சார் ,
//ஏதோ ஒரு க்வாலிஃபிகேஷன் இல்லாது யாருமே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, சட்டசபைக்கு வரமுடியாது. //
பூனைக்குட்டி வெளியவந்துருச்சே.. திருத்தவே முடியாது சார் உங்களையெல்லாம்.
தேர்தல்ல நின்னு ஜெயிக்காட்டி என்ன உங்களாவா ஆட்சி தானே நடக்கு (செக்ரட்ரிங்க வடிவத்துல)
கோவி அண்ணே,
உள் ஒதுக்கீடு உங்களைகவர்ந்ததா சொல்லியிருக்கிங்க. என்னோட ஸ்டாண்டும் அதான்(சைக்கிள் ஸ்டாண்ட் இல்லிங்கோ) .ஆனால்
எல்லா கமெண்டுகளையும் படிக்கிற அளவுக்கு கண்ணு ஒத்துழைக்கலை. கண்ட்ரோ ஃபைண்ட் அடிச்சு பார்த்துட்டன். உள் ஒதுக்கீடுங்கற வார்த்தையே இல்லையே.. ஒரு வாக்கெடுப்பு நடத்தி பார்த்துர கூடாது..
ஏறக்குறைய நானும் உங்க டோன்ல தான் எழுதியிருக்கேன். உள் ஒதுக்கீடு இருக்கும்னா மகளிர் மசோதாவுக்கு நானும் ஜெய் தான்
என்ன சில காலம் தாய்குலத்தை புருசன், அண்ணன், தம்பி, அப்பா பினாமியா யூஸ் பண்ணுவாங்க. காலப்போக்குல பாட்டில்ல இருந்து பூதம் வெளிய வந்துராதா?
என் பதிவுக்கான சுட்டி இதுதான்
http://kavithai07.blogspot.com/2010/03/blog-post_08.html
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது யார்?
இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீட்டை இரு பிரிவினர் எதிர்க்கின்றனர்.
1. மனுதர்மத்தை வெளிப்படையாக வலியுறுத்தும் சிலர் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை, அது ஆபத்தானது என்கின்றனர். இதில் முதன்மையானவர் 'துக்ள்க்' சோ.
2. சூத்திரர்களுக்கு அதிகாரம் தேவை இல்லை என்போர் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இரண்டாவது கூட்டம். இதில் வெளிப்படையானது பி.ஜெ.பி., மறைமுகமாக எதிர்ப்போர் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.
மற்றபடி முலாயம், லாலு, மாயாவதி, மம்தா போன்ற யாரும் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் "உள் ஒதுக்கீடு" தான் கேட்கின்றனர். உள்ஒதுக்கீடு என்பதும் பெண்களுக்காகவே கேட்கப்படுவதால், அதனை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு என்பது திசைதிருப்பும் வாதமாகும்.
என்னோட பதிவிலும் இதை பத்தி எழுதியிருக்கேன்.
http://arulgreen.blogspot.com/2010/04/blog-post_10.html
மகளிர் இடஒதுக்கீடு: வழிகாட்டும் உலக நாடுகள்
நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.
• தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் மேர்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றசாட்டுகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவிக்கிறது.
• ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவதர்க்காக இந்திய அமைச்சகங்களுக்கும், பெண்ணுரிமை வாத அமைப்புகளுக்கும் 2010-2011 ஆண்டிற்காக ரூபாய் 67,749.80 கோடி பண பட்டுவாட செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நமது நாட்டு மக்கள் ஊழல் பெருச்சாளிகளை தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு வியாபார உலகின் திருடர்கள் லஞ்சத்தை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இந்த பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை தங்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.
ஏமாற்று பிரசாரங்களை செய்து எத்தகைய பொருட்களையும் விற்று தீர்க்கும் வல்லமை படைத்த வியாபார உலகம், பலகாலமாக ஆண்களை தங்கள் வியாபார இலக்காக கொண்டு விரும்பத்தகாத மணமுடைய சிகரேட், பீடி, மற்றும் மது வகைகளையே ஆண்மையின் அடையாளம் என்று விற்று வந்தது. ஆண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் விற்று ஒரு உச்சபட்ச நிலையை ( saturation ) அடைந்த நிலையில், ஆண்களை குறிவைத்து ஒரு சில பொருட்களையே வியாபாரம் செய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், பெண் இனத்தை தங்கள் வியாபார இலக்காக கொண்டால் கணக்கிலடங்காத பொருட்களை சந்தை படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உணர்ந்தது. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு பொருளாதார நாடுகளிலும் ஊழல் பெருசாளிகலான அரசியல் வாதிகளை லஞ்ச லாவண்யங்கள் மூலம் அடக்கி நாட்டை தங்கள் மறைமுக கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதன்பிறகு பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவது மட்டுமல்ல தங்கள் வியாபாரத்திற்கு தடையாக பெண்களை கட்டுபடுத்தும் ஆண்களை ஒடுக்கும் பணிகளையும் ஒருசேர செய்துவந்தனர். அவர்கள் நவீன யுகத்தில் சொந்த மண்ணில் பிறந்த ஆண்களை தொலைவிலிருந்து ஒடுக்கும் ரிமொட்கான்ரோல்களாக செயல்படுகின்றனர்.
அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார நாடுகளை பதம் பார்த்து, அங்கு மனநல மருத்துவர்களுக்கு பற்றாகுறை ஏற்படுமளவுக்கு மனநல நோயாளிகளை உருவாக்கி சமூகத்தை சீரழித்த இந்த பன்னாட்டு வியாபார சக்திகளின் தற்போதைய இலக்கு தற்பொழுது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நம் இந்திய நாடு.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் தாராளமயமாக்கல் கொள்கையின் முழு பலனையும் அடைய விரும்பும் வியாபார சக்திகள், இந்திய பெண் இனத்தை முழுமையாக பயன்படுத்த தலைப்பட்டுவிட்டன. பெண்களுக்கான சமூக கட்டுபாடுகளை நீக்கி, பெண்களின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதற்க்கு ஆண் இனத்தை அடி பணிந்து போகும் படியான அபாண்டமான சட்டங்களை பெண்ணுரிமை என்னும் பெயரால் அரங்கேற்றி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையோடு, வியாபார சக்திகளின் சேவகனான நம் நாட்டு ஊழல் அரசியல்வாதிகள் அரங்கேற்றி வருகிரார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கலாக ஊடகங்கள் தன் பங்கை செய்கிறது.
அணைவரும் அறிந்த ஒரு புகழ் பெற்ற கதையை இங்கு காண்போம் .
ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே. விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும்.
18 ம் நூற்றாண்டில் தொடங்கி இந்தியாவை அடிமைபடுத்தி சுரண்டிவந்த மேற்கத்தியர்களிடமிருந்து விடுதலை அடைந்த நம்மை நமது ஊழல் அரசியல்வாதிகள் “பெண் அடிமை” என்னும் மாயை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் மேற்கத்தியர்களின் “ அடிமை தேசமாக “ மாற்றிவருகிறார்கள்.
மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்கள் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.
ஆண்களுக்கு சமம் பெண்கள் என்று வாயில் மட்டும் கூறிக்கொண்டு, பணிகளும், பதவிகளும் பெண்கள் தங்களுக்கு ஊதியங்களும் சலுகைகளும் ஈட்டிக்கொல்வதற்காக, தங்கள் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகல்தான் என்றும், கடினமான பணிகளை எல்லாம் ஆண்கள்தான் செய்யவேண்டும் என்றும் சாதுரியமாக நலுவிக்கொள்கிறார்கள்.
உண்மையில் அணைத்து பணிகளும் பதவிகளும் மக்களுக்கான சேவையை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவைகளே. பாதுகாப்பிற்கே பஞ்சமில்லாத முப்படைகளுக்கே தலைவரான ஜனாதிபதி முதல் போர்முனையில் துப்பாக்கி ஏந்தி மரணத்தை மலர்மாலையாக எண்ணி ஏற்க்க தயாராக இருக்கும் போர் வீரன் வரை அணைவரும் வெவ்வேறு மக்கள் சேவைகளை நோக்கங்களாக கொண்ட இயந்திரங்களே. இந்த இயந்திரங்கள் இடங்க தேவைப்படும் பெற்றோலை போன்றதே ஊதியங்களும் சலுகைகளும். ஒரு இயந்திரம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை இலக்காக கொள்ளாமல் பெற்றோலை உறிஞ்சுவதை மட்டுமே இலக்காக கொண்டால் அதை எந்த பொறுப்புள்ள மனிதனாவது வைத்திருப்பானா ? மக்களுக்கான சேவை உணர்வு இல்லாமல் சம்பளத்தையும் சலுகைகளையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பெண்களை மக்கள் ஆதரிப்பது சரியா ?
பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அனுபவத்தின் பேரில், சமூக நன்மையை கருதி, கற்றுணர்ந்த சான்றோர்களால் பரிந்துரைக்கப்பட்டவைகளே.
பெண்பாற் புலவரான ஔவையார் “ தையல் சொல் கேளேல் “ என்று அதாவது பெண்களின் சொற்க்களை கேட்டு நடக்க வேண்டாம் என்று ஆண்களுக்கு அறிவுரித்தியுள்ளார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி “ பெண்வழிச் சேறல் ” என்ற தனது 91- வது அதிகாரத்தில் பெண்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை 10 குறள்களில் பட்டியலிடுகிறார்.
ஆனால் இன்றைக்கு ஊழலில் கைதேர்ந்த அரசியல்வாதிகளும்,கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களும் தங்கள் சுயநலனுக்காக மக்கள் நலனையும், நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்கும் மகா பாதக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பு தான் தேவையே தவிர பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகள் இல்லாத பாதுகாப்பு என்பது சமூகத்தில் தடைசெய்யப்பட்ட போதைபோருட்களை தடையின்றி புழக்கத்தில் விட்டால் ஏற்படும் பேராபத்தை விட பெறும் நாசங்களையே ஏற்படுத்தும்.
ஒழுக்கம் கெட்ட பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கமுள்ள ஆண்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு ஒழுக்கமுள்ள பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கம் கெட்ட ஆண்களை ஒடுக்குவதே அறநெறி செயலாகும்.
ஒரு பெண்ணாக, பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக, அக்கா தங்கைகளுக்கு சகோதரனாக உங்கள் மனதில் “ பெண்கள் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படுவது குற்றம்” என்று தோன்றினால் அது
முழுக்க முழுக்க சுயநலத்தின் வெளிப்பாடே !
சமூக அழிவிற்கான வழியே !!
தனது சுயநலனுக்காக தேசத்தை அழிக்கும் தேச துரோக செயலே !!!
இராணுவ படையின் தளபதியே ஆனாலும் அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதே தேசத்திற்கு நன்மை பயக்கும் வழியாகும்.
கருத்துரையிடுக