பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2013

குடுமி !

ளிவழி (சேனல்)  மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ஒரு காலத்தில் நாயகன் வேடம் கட்டியவரா இவர் என்று வியப்படைய வைத்தது, காலம் எவ்வளவு விரைவாக தோல் சட்டைகளை சுருங்க வைக்கிறது. நான் சிறுவயதில் நட்டுத்தரவயதினராக பார்த்தவர்களெல்லாம் இன்று முதியவர்கள் ஆகிவிட்டனர். பாலச் சந்தர், பாரதி ராஜா போன்றவர்களுக்கு விரைவாக தோற்றம் மாறாவிட்டாலும் ஒரு சிலரின் முகத் தோற்றம் முற்றிலும் மாறிப் போவது மரபுக் கூறுகள் என்பது தவிர்த்து வேறு எதுவும் சொல்ல இயலவில்லை. 

ழமைக்கும் புதுமைக்கும்  என்று எதோ ஒரு தலைப்பில் விசு மக்கள் அரங்கம் நடத்திக் கொண்டிருந்தார், பெரிதாக ஈர்க்கும் படி எதுவும் இல்லை, அரைச்ச மாவிலும் புளித்த மாவைப் போட்டு ஆட்டினர், பேசியவர்களின் பேச்சில் பெரும்பாலும் பார்பன சொல் வழக்கு வாடை. எனக்கு அவை தவறாக தெரியவில்லை, அவரவர் அறிந்தவற்றை, வளர்ந்த விதத்தில் கற்றுக் கொண்டவற்றைத் தானே வெளிப்படுத்த முடியும், பெரியவர்கள் சரியாக சொல்லாததால் நாங்கள் கேட்கவில்லை என்று இளையோர் சார்பாக ஒரு சிற்பி (ஸ்தபதி என்று எழுத்து போட்டார்கள்) பேசினார், தோப்புகரணம் போடுவதற்கு, நெற்றியில் சந்தனம் குங்குமம் வைப்பதற்கும், உச்சி குடுமி வைப்பதற்கும் அறிவியல் காரணங்கள் உள்ளன, அவற்றை சரியாக விளக்காததால் நாங்கள் செய்யவில்லை என்று கூறி அறிவியல் காரணம் என்று கூறி எதோ விளக்கினார், இவர் தெரிந்து கொண்டவற்றை தெரியாதது போல் பேசி விளக்க முயற்சித்தார் என்றே சொல்ல வேண்டும். தோப்புக் காரணம் போடுவதால் காது நரம்பு செயல்பட்டு மூளையை இயக்குமாம், விட்டால் கணிணிக்கே காது வைத்தால் விரைவாக செயல்பட வைக்கும் சேமிப்பு சில் (மெமரி) கூட்டத் தேவை இல்லை என்பார்கள் போல. காதில் பூ வைத்துக் கொள்வதற்கும் அறிவியல் விளக்கம் இருக்குமோ ?

நெற்றியில் குங்குமம் வைத்தால் என்ன நன்மை என்று மற்றும் எதோ ஒரு விளக்கம் கொடுத்தார், நான் அங்கிருந்தால் அப்பறம் அதையெல்லாம் ஏன்யா கைம் பெண்களிடம் இருந்து பறித்தீர்கள் என்று கேட்டு வைத்திருப்பேன், அப்பறம் உச்சிக் குடுமி வைப்பதால் அது குடுமியின் எடை மூளைச் செல்களை இழுத்து இழுத்து செயல்பட வைக்குமாம், மாணவிகள் மிகுதியான மதிப்பெண் பெற அது கூட காரணமாக இருக்கலாம் என்றார். என்ன ஒரு அறிவியல் விளக்கம், நூறாண்டுகளுக்கு முன்பு வரை ஆண்களில் பார்பனர்கள் மட்டுமின்றி இந்தியர்கள், தமிழர்கள் அனைவருக்குக்குமே தலை முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்றைக்கு இருப்பது போல் க்ளீன் சேவிங்க், கட்டிங் இவற்றிற்கெல்லம் வாய்ப்பு இல்லை, முடித்திருத்தகங்கள் இல்லை என்று சொல்வதுடன் அத்தகைய தொழில் செய்பவர்களும் குறைவு என்றே சொல்ல வேண்டும், எனவே வளர்ந்த தலைமுடிகளை எல்லா ஆண்களும் முடிந்தே வைத்திருந்தனர் (பரதேசி படம்), எளிதில் பழமையை மாற்றிக் கொள்ளாத பார்பனர்களில் சிலர் இன்றும் தொடர்ந்து முடி வளர்த்து கொண்டை போட்டுக் கொள்வதை அறிவியல் விளக்கம் என்று சொல்லி வந்தால் நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை, இப்படியே விட்டால் சிங் தலைப்பாகை அணிவதற்கும், இஸ்லாமியர் தாடி வைத்துக் கொள்வதற்கும், அதில் சாயம் பூசிக் கொள்வதற்கும், பெளத்தர்கள் மொட்டை அடித்துக் கொள்வதற்கும், பேராயர்கள் தலையில் குல்லா வைப்பதற்கெல்லாம் கூட அறிவியல் விளக்கம் வரும் போல.

டலில் மயிர்கால்களின் வழியாக வியர்வை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உறுப்புகளில் (தலை, அக்குள், பிறப்புறுப்பு) இயற்கை அமைப்பாக முடி வளர்ச்சி உள்ளது, கூடுதலாக ஆண் / பெண் சுரப்பு (ஆண்டோஜன், ஈஸ்ட்ரோஜன்) தன்மைக் காரணமாக ஆண்களுக்கு தாடி மீசை வளர்வதுண்டு, அவை உடல் சார்ந்த பாலியல் அடையாளங்களில் ஒன்று என்பது தவிர்த்து முடிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, தலையில் முடி இல்லாதவர்களுக்கு மூளை செயல்படாது என்பது போல், தாடி வைக்காதவர்களுக்கு தாடை இயங்காது என்பது போலும், குடுமி வைக்காதவர்களுக்கு மூளைத் திறன் கூடாது என்பது போல் கருத்து சொல்வது ஒரு மலிவான, அறிவற்ற ஒரு விளக்கம். தலை மற்றும் முக முடிகளை உடல் அழகு சார்ந்த விதமாக மாற்றிக் கொள்வது தவிர்த்து முடி கருப்பாக இருப்பதாலோ, வெள்ளையாக இருப்பதாலோ அல்லது முடியே இல்லாது சோ இராமசாமி போல் இருப்பதாலோ எதாவதை இழந்துவிடுவோமா என்ன ?

கொண்டைப் போட்டவருக்கு தான் அறிவு வளர்ச்சி இருக்கும் என்றால் மொட்டைத் தலையுடன் காட்சி தரும் ஆதிசங்கரருக்கு, சோ இராமசாமிக்கு அவை குறைவு என்று சொல்ல முடியுமா ? அரித்தால் முதுகு சொறிவது மற்றும் சாவியைத் தொங்கவிடுவது தவ்ர்த்து பூணூலின் நன்மைகள் இவை இவை என்று ஏதோனும் ஒன்று உண்டா ?ஆவற்றை விற்பவருக்கு அது வியாபார பலன், நான் பூணூல் அணிவது தவறு என்று சொல்லவரவில்லை, ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் விளக்கம் என்று கடைவிரித்து குழப்பாதீர்கள், குடும்ப வழக்கம், சாதி வழக்கம் என்பது தவிர்த்து அவற்றில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதே நான் சொல்ல வருவது. பூணுல் போட்டுக் கொள்வது போலவே, இடுப்பில் அறைஞான் போடுவதால் கோவணம் கட்டுவதற்கான வசதி என்பது தவிர்த்து ஏதேனும் உண்டா ? நாமெல்லாம் ஜட்டிக்கு மாறிய பிறகும் அறைஞான் அணியும் வழக்கத்தில் வேறு பயன் என்று எதுவும் இல்லை. 

நிகழ்ச்சியில் ஒரு பாட்டி, இன்னிக்கு எல்லாம் பிஸ்ஸா, பர்கர்னு சாப்பிடுறா..பொங்கல் முந்திரி, நெய் போட்டு செய்வதால், அவற்றை உண்ணுவதால் உடலுக்கு என்னனென்ன நன்மை என்று நியுட்ரிசியன் போல்  சொன்னதில் உணமை கூட இருக்கலாம், ஆனால் நாம் இன்று உண்ணும் பொங்கல் ஒரு 100 ஆண்டுகளுக்குள் வந்த உணவே, நெல் அரிசியை நாம் அன்றாட உணவாக்கிக் கொண்டு முழுதாக ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை, அவ்வாறு இருக்கையில் பொங்கலை பாரம்பரிய உணவு போன்று பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இதற்கு பதில் கம்பங்கூழ் கேப்பக் கூழ் பற்றி கூறி இருந்தாலும் அவை இனிப்பு குறைவான, புரத சத்து மிக்க உணவு என்று கூறலாம், 

நாமெல்லாம் என்னதான் பழம்பெருமை பேசினாலும் அறிவியலிலும், சமூக நலன் சார்ந்த அக்கறைகளுக்கும் வெளிநாட்டினரிடமே, குறிப்பாக வெள்ளைக்காரர்களிடமே பாடம் படிக்க வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்,


ந்த ஒரு இனம், சாதி அல்லது மதம் சார்ந்த பழக்கம் வழி வழி வந்தவை, மாற்றிக் கொள்ள விரும்பாதவை என்பது தவிர்த்து அவற்றில் எல்லோருக்குமான பொது நன்மைகள் எதுவும் கிடையாது. மதவாதிகளும், சாதி பற்றாளர்களும் அவற்றை நம்புவதுடன் நிறுத்திக் கொண்டு அவற்றிற்கு அறிவிலி விளக்கம் கொடுக்காமல் இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எழுத்து வேலை எதுவும் இருக்காது.


*********

முன்பைப் போல் பதிவெழுத நேரமில்லை, இருந்தாலும் அவ்வப்போது வாசிப்பதுண்டு, இயக்குனர் மணி வண்ணன் மறைவு மிகவும் வருத்தம் அடைய வைத்தது, சிறந்த ஈழப்பற்றாளர். அவரது உடலில் புலிக் கொடி, அம்மா ஆட்சியில் இல்லை என்றால் அதற்கும் வாய்ப்பிருக்காது.

ணிவண்ணன் தனது சாவையும் அதற்கு கூடும் மாபெரும் கூட்டத்தையும் , அழுகையையும் ஏற்கனவே பார்த்தவர் தான். எந்த மனிதனுக்கும் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காது. - படம் சங்கமம் http://youtu.be/8zKNIWHvwWI

99 கருத்துகள்:

bandhu சொன்னது…


நான் விசுவின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை. ஆனால், நீங்கள் சொன்னபடி பார்த்தால் தோப்புக்கரணம் super brain யோகாவைத்தான் சொல்லியிருக்க வேண்டும்! here is the link for that.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் விசுவின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை. ஆனால், நீங்கள் சொன்னபடி பார்த்தால் தோப்புக்கரணம் super brain யோகாவைத்தான் சொல்லியிருக்க வேண்டும்! here is the link for that.//

குணிஞ்சு நிமிந்து, கழுத்தை வலப்புறம், இடப்புறம் திருப்பி தொழுகை நடத்தினால் அதற்கு என்ன யோகான்னு பேரு ?


:)

பெயரில்லா சொன்னது…

//உச்சிக் குடுமி வைப்பதால் அது குடுமியின் எடை மூளைச் செல்களை இழுத்து இழுத்து செயல்பட வைக்குமாம்//

உச்சி குடுமி எடைக்கே மூளை இவ்வளவு வேலை செய்கிறது என்றால், ஒரு 10 கிலோ எடை கல்லை permanent ஆக உச்சி மண்டையில் கட்டிவைத்து விடலாம் போலிருக்கே. மூளை படு பயங்கரமாக வேலை செய்யும். தெருவில் கூடையை தலையில் வைத்து காய்கறி விற்கிற அம்மாவுக்கு தான் உலகத்திலேயே அதிகமாக மூளை செயல்பட வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படி ஏதாவது விளக்கம் சொல்லியே வளர்ந்து விட்டன... வளர்ந்து கொண்டிருக்கின்றன... (?)

மணிவண்ணன் - நல்ல படைப்பாளி.. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

பார்த்தி சொன்னது…

// நான் அங்கிருந்தால் அப்பறம் அதையெல்லாம் ஏன்யா கைம் பெண்களிடம் இருந்து பறித்தீர்கள் என்று கேட்டு வைத்திருப்பேன்//

இதற்கும் எதாவுது அறிவியல் விளக்கம் தந்தாலும், ஆச்சர்ய பட தேவையில்லை.

மதமே மூட நம்பிக்கை, இதுல அறிவியல் விளக்கம் வேறு. தாங்க முடியல

பெயரில்லா சொன்னது…

பழசுகள் பலரும் உலகம் பூராவும் பொய்யறிவியலை லாவகமாக பரப்பி வருகின்றனர், அதனை பல மக்கு சாம்பிராணிகளும் நம்புகின்றனர். கூற்றுக்களுக்கு தக்க ஆதாரமில்லையேல் அவை எவ்வகையில் மெய்யறிவியலாகும்? கேட்கிறவன் கேணை என்னில் கேப்பையில் நெய் வடியும் என்ற பழமொழியை இத்தகையோருக்குத் தான் சொல்லி வைத்தனர் போலும்.

கும்மாச்சி சொன்னது…

அறிவியல் விளக்கம் என்று சொல்லி மூடநம்பிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள், கையிலே மைக் கிடைத்தால் யார் வேண்டுமென்றாலும் எதற்கு வேண்டுமென்றாலும் விளக்கமளிக்கலாம்.

ஆராமுதன் சொன்னது…

ஏன்டா ங்கோத்தா தேவ்டியா பயலே. 10 பிராம்னாள் சேர்ந்து உன் அம்மாவின் புண்டையை நக்கி பிறகு ஒன்றன் பின் ஒருவராக தங்கள் சுன்னிகளை உன் அம்மா புண்டை பருப்பில் வைத்து தேய்த்து பின் உள்ளே விட்டு குத்தி அனைவரும் உன் அம்மாவின் புண்டைக்குள் விந்துவை வடித்ததன் காரணமாக பிறந்த விபச்சாரியின் மகனே கோவி.கண்ணா? உனக்கேன் இந்த வேலை

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

[[நெல் அரிசியை நாம் அன்றாட உணவாக்கிக் கொண்டு முழுதாக ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை,]]

முழுக்கத் தவறான கூற்று.

மனித சமுதாயம் முதலில் பயிர் செய்யக் கற்றுக் கொண்டது நெற்பயிரே..குறைந்தது 13000 ஆண்டுகளுக்கு முன்னரே அரிசி மனிதனால் பயிரிடப் பட்டு விட்டது..

தென்னிந்தியர்கள் கிமு 4000 வாக்கிலேயே அரிசியை உணவாகப் பயன்படுத்தியதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன.

தோப்புக் கரணம் போடுவதனால் மூளை தூண்டப் படுவதும் உண்மையே..த்ரீ இடியட்ஸ் படத்தில் கூட ஒரு வசனத்தின் மூலம் இந்த செய்தி சொல்லப்பட்டது.

போகிற போக்கில் தவறான கருத்துக்களை எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள்?

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//முழுக்கத் தவறான கூற்று.

மனித சமுதாயம் முதலில் பயிர் செய்யக் கற்றுக் கொண்டது நெற்பயிரே..குறைந்தது 13000 ஆண்டுகளுக்கு முன்னரே அரிசி மனிதனால் பயிரிடப் பட்டு விட்டது..//

நான் நெற்பயிர் 100 ஆண்டுகளுக்குள் உருவானது என்று சொல்லவரவில்லை, ஆனால் அவை அன்றாட உணவாக இருந்ததில்லை என்பது மட்டுமே எனது கருத்து, எனக்கு தெரிந்து சிறுவயதில் கேப்பை கஞ்சி தான் குடித்து வளர்ந்துள்ளேன். அதன் பிறகே அரிசி சோறு எல்லோரையும் போல் வீட்டில் சமைக்கத்துவங்கினர்.

//தோப்புக் கரணம் போடுவதனால் மூளை தூண்டப் படுவதும் உண்மையே..த்ரீ இடியட்ஸ் படத்தில் கூட ஒரு வசனத்தின் மூலம் இந்த செய்தி சொல்லப்பட்டது.//

கையை குறுக்காக மடித்து தோப்புக்கரணம் போடுவதற்கும் விளக்கம் இருக்கா ? கூகுள் இலவசமாக இடம் கொடுக்கிறான் என்பதற்காக எதோ ஒன்றை ஏற்றிவிட்டு அதை ஆதாரமாகவும் திரைப்படத்தை ஆதாரமாகவும் காட்டுவதை என்னால் ஏற்க இயலாது, மற்றபடி அவற்றை நம்புவது உங்கள் விருப்பம்.

தோப்புகரணத்தை விட நீளமாக காது வளர்த்துக் கொள்வதில் மிகுதியான நன்மையோ ? காது பெரிதாக இருக்க இருக்க காது கேட்கும் திறன் கூடும் (?)என்பதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏன் புத்தருக்கும் கூட நீளமான காதுகள் இருந்தன ?

தோப்புகரணத்தைவிட காதில் தண்டட்டிக் கட்டிக் கொண்டால் எப்போதும் காதை இயக்கும் மூளை இன்னும் சுறு சுறுப்பாக இருக்குமே !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

மிஸ்டர் செல்வராஜி என்பவருக்கு, உமது பின்னூட்டம் குறித்து உமது தமிழ் ஆசிரியர் பெருமைபடுவார், கொடுக்கும் ஒன்று வாங்கப்படவில்லை என்றால் அது கொடுப்பவருக்கே சொந்தம், நானும் பின்னூட்டதை அழிக்கப்போவதில்லை, பெரியாருக்கு விழுந்த கல்லடியும் சொல்லடியும் ஒப்பிட இவை உதிர்ந்த மயிருக்குக் கூட சமமில்லை, மேலும் மேன்மையாளர்களின் மேன்மை பண்பை பலரும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக பின்னூட்டம் அப்படியே தான் இருக்கும்

Jayadev Das சொன்னது…

தலை மற்றும் முக முடிகளை உடல் அழகு சார்ந்த விதமாக மாற்றிக் கொள்வது தவிர்த்து முடி கருப்பாக இருப்பதாலோ, வெள்ளையாக இருப்பதாலோ அல்லது முடியே இல்லாது சோ இராமசாமி போல் இருப்பதாலோ எதாவதை இழந்துவிடுவோமா என்ன ?\\ முடி இருப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கும். முடி உடலின் குறிப்பிட்ட பாகங்களில் நமக்குத் தேவை. காரணமில்லாமல் அது இல்லை


நாமெல்லாம் என்னதான் பழம்பெருமை பேசினாலும் அறிவியலிலும், சமூக நலன் சார்ந்த அக்கறைகளுக்கும் வெளிநாட்டினரிடமே, குறிப்பாக வெள்ளைக்காரர்களிடமே பாடம் படிக்க வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்\\ அறிவியல் கண்டுபிடிப்புகளால் அழிவுதான். நல்லது எதுவும் இல்லை.


கோவி.கண்ணன் சொன்னது…

/முடி இருப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கும். முடி உடலின் குறிப்பிட்ட பாகங்களில் நமக்குத் தேவை. காரணமில்லாமல் அது இல்லை//

நானே காரணம் குறித்து பதிவில் சொல்லி இருக்கிறேன், அது தவிர்த்து வேறு காரணம் இருக்கும் என்று சொல்லுங்க, அப்பறம் ஏன் வேண்டுதலுக்காக மொட்டை அடித்துக் கொள்கிறார்கள் ?


நாமெல்லாம் என்னதான் பழம்பெருமை பேசினாலும் அறிவியலிலும், சமூக நலன் சார்ந்த அக்கறைகளுக்கும் வெளிநாட்டினரிடமே, குறிப்பாக வெள்ளைக்காரர்களிடமே பாடம் படிக்க வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்\\ அறிவியல் கண்டுபிடிப்புகளால் அழிவுதான். நல்லது எதுவும் இல்லை.//

அறிவியல் இல்லை என்றால் மனித இனமே கூட அழிந்து போய் இருக்கலாம், எளிதில் பரவும் தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் காணமல் போனது எதனாலே ?

குடும்பக்கட்டுப்பாடு, ஆணுறைகள் இவைகள் இல்லை என்றால் ஏற்படும் மக்கள் நெருக்கத்திற்கும், கருக்கலைப்பு சாவுகளுக்கும், பாலியல் நோய் தொற்றிற்கும் அறிவியல் தவிர்த்து வேறு ஏதேனும் தீர்வு உண்டா ?

அறிவியலால் நன்மை தீமை என்பவை எல்லாம் கத்தியை வைத்து பழம் நறுக்கிறோமோ, விரலை வெட்டிக் கொள்கிறோமா என்பது போன்றவையே.

வருண் சொன்னது…

****கோவி.கண்ணன் கூறியது...

மிஸ்டர் செல்வராஜி என்பவருக்கு, உமது பின்னூட்டம் குறித்து உமது தமிழ் ஆசிரியர் பெருமைபடுவார், ***

செவராஜ்னு சொல்லிக்கிட்டு இங்கே வந்து குரைக்கும் நாய்க்கு பொறந்த தேவடியாள் மகனுக்கு இவ்ளோ மரியாதையா?

நாந்தான் கண்டு பிடிக்க முடியாதபடி பொய் பேரு பொய் ஐ பி லதான் வர்ரேன்.. என்னை என்ன பண்ணமுடியும்னு இந்தத்தேவடியா மகன் நெனைக்கலாம்.

ஆனால் திடீர்னு ஒரு நாள் இவன் தலை மட்டும் அவன் ஆத்தா அப்பனுக்கு அனுப்பப்படும். எவன் வெட்டினான்? எப்படி? னு எல்லாம் யாருக்கும் தெரியாது! அவன் பகவானுக்கும் சேர்த்துத்தான்.

பெயரில்லா சொன்னது…

// அறிவியல் கண்டுபிடிப்புகளால் அழிவுதான். நல்லது எதுவும் இல்லை.//

தாஸ்,
நீங்கள் ஒரு மாதம் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதையும் உபயோகிக்காமல் இருந்துவிட்டு இதை கூறினால் நலம். இவ்வளவு ஏன்? அறிவியல் கண்டுபிடிப்பாகிய, Rice Mill Machines இல்லாமல் உங்களால் வெறும் கையாலேயே நெல்லிலிருந்து அரிசியை எடுக்க முடியுமா? நீங்கள் ஒருவேளை சாப்பாடிற்கு அரிசியை சேர்ப்பதற்குள் ஒரு வருடம் ஆகிவிடும். இப்போது கூறுங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உபயோகமானதா இல்லையா?

பெயரில்லா சொன்னது…

வருண், உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது. நானும் இதைத்தான் நினைத்தேன். இருந்தாலும் எழுதுவதற்கு தைரியம் வரவில்லை.

What a gentle reply by Kovi to the idiot Selvaraj!!!!!!. You are a Gentleman.

Jayadev Das சொன்னது…

@Alien A

\\நீங்கள் ஒரு மாதம் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதையும் உபயோகிக்காமல் இருந்துவிட்டு இதை கூறினால் நலம்.\\ நீங்க அவ்வளவெல்லாம் போக வேண்டியதில்லை, "இந்த பதிலை போடவே அறிவியல் கண்டுபிடிப்பான கம்பியூட்டரைத் தானே பயன்படுத்துகிறீர் ஏன் ?" என்று கேட்டாலே போதும் என்னை மடக்கி விடலாம் ஆனால் உண்மை என்று இருக்கிறதல்லவா? இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாமல் மக்கள் வாழ வில்லையா? இவை இல்லாவிட்டால் அழிந்திருப்போம் என்றால், பல மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் எப்படி வாழ்ந்து வந்தது? மனிதன் மட்டும் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறான் கரப்பான் பூச்சி, பல்லி, கொசு இதெல்லாம் எந்த அறிவியலைப் பயன்படுத்துகிறது அழித்தாலும் அழியவே மாட்டேன்கிறதே? அப்படியே அறிவியல் உங்களைக் காக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் இந்தப் பூமியை உங்களால் இப்போது உள்ள நிலையில் இருந்து காப்பாற்ற முடியுமா?

பெயரில்லா சொன்னது…

//இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாமல் மக்கள் வாழ வில்லையா?//

தாஸ்,
வாழ முடியும். I accept this. But, எந்த சொகுசு வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாது. எந்த அறிவியல் கண்டுபிடிப்பையும் உபயோகப்படுத்தாமல் இருந்தால், நம் கைகளால் வெறும் பழங்களையும், பச்சை காய்கறிகளையும் மட்டும் தான் பறித்து உண்ண முடியும். வேறு எந்த உணவும் கிடைக்காது. உடுத்திக்கொள்ள துணி கிடைக்காது. இரவு குளிரில் போர்த்திகொள்ள போர்வை கூட கிடைக்காது. பூமி அறிவியல் கண்டுபிடிப்புகளால் வதைக்கப்படாமல் இருந்து, மனிதன் இவ்வாறு கஷடபட்டால் என்ன பிரயோஜனம். இவ்வாறு வாழ்ந்தாலும் அதுவும் கொஞ்சம் நாட்கள் தான். மக்கள் தொகை பெருகும்போது, பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பஞ்சம் ஏற்படும்.
அறிவு மற்றும் அறிவியலின் வளர்ச்சியை ஒருவராலும் கட்டுபடுத்தமுடியாது. இது காலத்தின் கட்டாயம். கோவி. சரியாகத்தான் வலைப்பக்கத்தின் பெயரை select பண்ணியிருக்கார். "காலம்" என்று.

Jayadev Das சொன்னது…

@ Alien A


ஆடை இல்லாமல் வாழ முடியுமா?

பனி பிரதேசத்தில் ஆடையில்லா மனிதன் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நமக்கெல்லாம் கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணத் தொலைகாட்சி செல் பொன், கணினி போன்றவை இன்றைக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. பணக்காரர்களுக்கு மட்டும்தான் என்ற கார் கூட இன்று நடுத்தர மக்களுக்கு கிட்டும் நிலை உள்ளது. இத்தனை இருந்தாலும் இவையெல்லாம் இல்லாத கால கட்டம் நன்றாக இருந்ததா இல்லை இப்போது பரவாயில்லையா என்றால் முந்தைய கால கட்டத்தைத்தான் எல்லோரும் தேர்ந்தெடுப்பார்கள். இவை வந்தது, ஆனால் மனதில் இருந்த சந்தோசம் நிம்மதி பறிபோய்விட்டது கண்கூடு.


நீங்க சொல்லும் வசதியோடு வெறும் நூறாண்டுகள் மனித குலம் வாழ்ந்த பின்னர் , செவ்வாய் கிரகத்தைப் போல புல் பூண்டு கூட இல்லாமல் பூமி போவதற்குப் பதில் மனிதன் இடுப்பில் இலைகளைச் சுற்றிக் கொண்டு கூரான கற்களை எடுத்துக் கொண்டு மிருகங்கள் பின்னால் ஓடிக் கொண்டே இருந்திருக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

//........மனிதன் இடுப்பில் இலைகளைச் சுற்றிக் கொண்டு கூரான கற்களை எடுத்துக் கொண்டு மிருகங்கள் பின்னால் ஓடிக் கொண்டே இருந்திருக்கலாம்.//

நீங்கள் இப்படி வாழ ready என்றால், உங்கள் mindset படி நீங்கள் correct தான். I appreciate you. ஆனால் சிலபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா அறிவியலின் சுகத்தையும் அனுபவித்து விட்டு, அறிவியலை குறை கூறுகிறார்கள். இதைத்தான் என்னால் ஏற்றுகொள்ள முடியாது.

Jayadev Das சொன்னது…

\\ஆனால் சிலபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா அறிவியலின் சுகத்தையும் அனுபவித்து விட்டு, அறிவியலை குறை கூறுகிறார்கள். இதைத்தான் என்னால் ஏற்றுகொள்ள முடியாது.\\ அறிவியலின் சுகத்தைப் பார்த்தாச்சு. இப்போ, இதல்லாம் இல்லாத அந்த பழைய நாட்களே பரவாயில்லையே, அவை திரும்ப வராதா என்ற ஏக்கம் மனதில் வருகிறது.

இயற்க்கை அன்னை பொன் முட்டையிடும் வாத்து அவள் வயிற்றை அறுக்கும் வேலையைச் செய்தது அறிவியல். மொத்தமா கூண்டோடு காலி.............

வருண் சொன்னது…

***இவை வந்தது, ஆனால் மனதில் இருந்த சந்தோசம் நிம்மதி பறிபோய்விட்டது கண்கூடு.****

அந்தக்காலத்தில் வாழ்ந்தவனெல்லாம் நிம்மதியா வாழ்ந்தான். இப்போத்தான் நீம்மதி போயிடுத்துனு யார் சொன்னது உங்களுக்கு?

புத்தர் ஏன் போதிமரத்தைத் தேடி ஓடினார்?

நீங்க மில்லியன் ஆண்டுகளால மனுஷன் வாழ்றான்னு சொல்வதே அறிவியல் கண்டுபிடிப்பால்தான்.

அந்தக்காலட்தில் நிம்மதி இருந்துச்சு, காலரா, பெரியம்மையில் சாவெல்லாம் நல்ல சாவுனு நீங்க சொல்லிக்க வேண்டியதுதான்.

இன்ம்பம் துன்ம்பம் நிம்மதியின்மை எல்லாம் அறிவிய்ல கண்டுபிடிப்புகளால் இழக்கப்படவில்லை!

Jayadev Das சொன்னது…

\\அந்தக்காலத்தில் வாழ்ந்தவனெல்லாம் நிம்மதியா வாழ்ந்தான். இப்போத்தான் நீம்மதி போயிடுத்துனு யார் சொன்னது உங்களுக்கு?\\ கணினி/இணையம், செல் போன், வண்ணத் தொலைகாட்சி, கார் இவையெல்லாம் இல்லாமல் வாழ்ந்த காலம் எனக்கே தெரியும். அப்போ இருந்த மகிழ்ச்சி இவை வந்த பின்னர் இல்லை. இதை மாலையில் நான்கு மணி நேரம் சீரியல் பார்க்கும் பெண்களே ஒப்புக் கொள்வார்கள்

\\புத்தர் ஏன் போதிமரத்தைத் தேடி ஓடினார்?\\ உங்களுக்கு கற்ப்பிக்க.

\\நீங்க மில்லியன் ஆண்டுகளால மனுஷன் வாழ்றான்னு சொல்வதே அறிவியல் கண்டுபிடிப்பால்தான்.\\ நான் சொல்வதற்கு மட்டும் தான் அறிவியல் தேவை, அவன் உண்மையில் வாழ்ந்ததற்க்கல்ல.

\\அந்தக்காலட்தில் நிம்மதி இருந்துச்சு, காலரா, பெரியம்மையில் சாவெல்லாம் நல்ல சாவுனு நீங்க சொல்லிக்க வேண்டியதுதான்.\\ அமாமம் கொஞ்சம் கோசமா செத்தான் இப்போ மொத்தமா போட்டு அவிக்கப் போறீங்க.

\\இன்ம்பம் துன்ம்பம் நிம்மதியின்மை எல்லாம் அறிவிய்ல கண்டுபிடிப்புகளால் இழக்கப்படவில்லை!\\ கனவு காணுங்க, ஆனா இந்த மாதிரி கனவு பிரயோஜனப் படாது.

வருண் சொன்னது…

புத்தர் போனது அவருக்கு நிம்மதி இல்லாமல்னு கூட உங்களுக்கு இன்னும் புரியலையா? நீங்க என்னத்தை ஆன்மீத்தை புரிஞ்சிக்கிட்டீங்களோ என்னவோ..

ஆமாம் உங்க பொன்னான காலத்தில் வெறிநாய் கடிச்சால் அதுக்கு மந்திரிச்சு 40 நாட்களில் நாய் மாரி கொரச்சி சாவது தவிர்க்க முடியாது கடவுளே நாயா வந்து அவன் செஞ்ச பாவத்துக்கு அவன கொன்னுபுட்டு அவரும் பூட்டாருனு ஏதாவது சொல்லுவீங்க..

போலியோ வைரஸால் வந்த இளம்பிள்ளை வாதம் நோயை, இருளடிச்சுருச்சுனு சொல்லிக்கிட்டு அலையிறதுதான் புத்திசாலித்தனம்.

உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. போலியோ வைரஸ், rabies வைரஸ், ஸ்மால் பாக்ஸ் வைரஸ் எல்லாம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உருவானதுனு சொன்னாலும் சொல்லுவீங்க

பெயரில்லா சொன்னது…

//இதல்லாம் இல்லாத அந்த பழைய நாட்களே பரவாயில்லையே, அவை திரும்ப வராதா என்ற ஏக்கம் மனதில் வருகிறது.//

நீங்கள் பழைய காலத்துக்கு போக ஆசைப்படுகிறீர்கள். நான் அப்படியே உங்களுக்கு நேர் எதிர் தாஸ். எனக்கு 1000 வருடங்களுக்கு பின்னால் வரப்போகிற (3000 AD) future-க்கு போக ஆசை. அப்போது உள்ள நம்முடைய future generation குழந்தைகள் எல்லாம் நம்மைப்பார்த்து ஆதிவாசிகள் என்று சொல்லும். அப்போது Car, Flight எல்லாம் தேவை இல்லை. நினைத்த அடுத்த நிமிடம் பூமியின் அடுத்த மூலைக்கு செல்ல முடியும். அப்போது இருக்கப்போகிற டெக்னாலஜி-ஐ எல்லாம் தெரிந்து கொள்ள மிக ஆர்வம்.

பெயரில்லா சொன்னது…

//ஆனால் மனதில் இருந்த சந்தோசம் நிம்மதி பறிபோய்விட்டது கண்கூடு.//
தாஸ்,
இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும், நீங்கள் சந்தோஷம் அடைய முடியவில்லை என்றால், problem உங்களிடத்தில் தான் இருக்கிறது. நீங்கள் எதிலும் திருப்தி படாதவர். உங்களை திருப்தி படுத்த முடியாது. உங்களுடைய பழைய காலமும் உங்களை சந்தோஷ படுத்த முடியாது. அதற்கு எந்த guarantee-யும் இல்லை.Suppose, நீங்கள் பழைய காலத்திற்கு போனாலும் அதிலும் நீங்கள் திருப்தி அடையபோவதில்லை. வருண் கூறியது போல, உங்கள் குழந்தையை ஒரு வெறிநாய் கடித்தால் போதும், நீங்கள் அலறி அடித்துக்கொண்டு இந்த காலத்திற்கே வந்து விடுவீர்கள். இக்கரைக்கு அக்கறை எப்போதுமே பச்சைதான்.சந்தோசம் எல்லாம் பழைய காலத்திலிருந்தோ நிகல்காலத்திலிருந்தோ வருவது இல்லை. அது உங்கள் மனதிலிருந்து வர வேண்டும்.

Good Night to all friends. See you tomorrow.

Jayadev Das சொன்னது…

\\இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும், நீங்கள் சந்தோஷம் அடைய முடியவில்லை என்றால், problem உங்களிடத்தில் தான் இருக்கிறது. \\

நஞ்சு கலவாத உணவு தூய காற்று நல்ல குடி நீர் இவையெல்லாம் தொலைத்து விட்டு, பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று தெரியாமல் ஊர் பேர் தெரியாதவனிடம் பேஸ் புக்கில் அவனுக்காக உயிரைக் குடுப்பது போல உறவாடுவது நகைப்புக்குரியது, இந்த வசதி வாய்ப்புகள் சந்தோஷத்தை கொடுப்பவை என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமை. அரைகுறை ஆடைகளை அட்டைப் படத்தில் போட்டு வியாபாரம் பண்ணி வந்த குமுதம் போன்ற பத்திரிகள் கூட "பக்தி ஸ்பெஷல்" போட்டு காசை அல்ல ஆரம்பித்து விட்டனர், தற்போது பக்தி சம்பந்தமாக தனி பத்திரிக்கை வெளியிடாத முன்னணி பத்திரிகைகளே இல்லை. மக்கள் மனதில் ஏற்ப்பட்டுள்ள விரக்தி, பக்தி பக்கம் திரும்பியுள்ளார், என்ன காரணம் ?
யோசியுங்கள் விடை தெரியும்.

Jayadev Das சொன்னது…

\\நீங்கள் பழைய காலத்துக்கு போக ஆசைப்படுகிறீர்கள். நான் அப்படியே உங்களுக்கு நேர் எதிர் தாஸ். எனக்கு 1000 வருடங்களுக்கு பின்னால் வரப்போகிற (3000 AD) future-க்கு போக ஆசை. \\ First of all think if you can see your own grandson gets sufficient food, water and air.

Jayadev Das சொன்னது…

வருண்,

நீங்க வரவு செலவு ரெண்டையும் பார்க்கணும். போலியோ, வெறிநாய் க்கடி இதுல சில பேருதான் சாவான். ஆனால், அறிவியலால் மொத்தமா கூட்ட சாவான். அறிவியல் இல்லாதிருந்தால் இன்னும் பல கோடி வருடங்கள் உயிரினம் வாழ்ந்திருக்கும் ஆனால் இப்போது,,,,,,,,,???? அடிப்படை உணவு, காற்று, நீர் இவையெல்லாம் இன்னும் ஒரு தலைமுறைக்காவது கிடைக்குமா? ஆம் என்று பதில் தைரியமாக சொல்ல முடியுமா? அப்புறம் அறிவியல் என்ன வளர்ந்து என்ன பயன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க வரவு செலவு ரெண்டையும் பார்க்கணும். போலியோ, வெறிநாய் க்கடி இதுல சில பேருதான் சாவான். ஆனால், அறிவியலால் மொத்தமா கூட்ட சாவான். அறிவியல் இல்லாதிருந்தால் இன்னும் பல கோடி வருடங்கள் உயிரினம் வாழ்ந்திருக்கும் ஆனால் இப்போது,,,,,,,,,???? அடிப்படை உணவு, காற்று, நீர் இவையெல்லாம் இன்னும் ஒரு தலைமுறைக்காவது கிடைக்குமா? ஆம் என்று பதில் தைரியமாக சொல்ல முடியுமா? அப்புறம் அறிவியல் என்ன வளர்ந்து என்ன பயன்? //

ஜெயதேவ் தாஸ், வருண் என்ன சொல்லுவாருனு எனக்கு தெரியாது. காலம் காலமாக இயற்கையை வெல்லும் முயற்சி மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் கைகூடியுள்ளது. விமானம் குறித்து புராணங்கள், மதப்புத்தகங்கள் நிறையவே கற்பனை செய்துள்ளன. முடியாததால் முடங்கிக் கிடந்தனர், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் எல்லாம் என்ன ஆனது, அதற்கும் அறிவியல் தான் காரணமா ? தற்பொழுது பூமியை நெருங்கும் விண்கல் வாய்ப்பு குறித்து தெளிவாகவே சொல்லிவிடுகிறார்கள், பூமியெங்கும் வெள்ளம் சூழ்ந்து தண்ணீராக இருந்தாலும் சாட்டிலைட்டில் கொஞ்ச நாளாவது ஒரு சிலரையாவது வசிக்க வைக்க முடியும். அதெல்லாம் விடுங்க. நான் கேட்டக் கேள்விக்கு பதிலே இல்லை, ஆணுறைகள், குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் இல்லை என்றால் இன்றைய 700 கோடி மக்கள் தொகை 20 ஆண்டுகளுக்கு முன்பே பெருகி இருக்கும், இன்றைக்கு 1500 கோடியாகக் கூட ஆகி இருப்பார்கள். உணவு பஞ்சம், காற்று நீர் இவற்றிற்கெல்லாம் அறிவியலைக் குறைச் சொல்லாம, இவற்றின் அடிப்படைத் தேவைகளை சரியாக வழங்காத பரமரிக்காத அரசியல் வாதிகள், ஆயுத வியாபாரிகள், போர் விரும்பிகளைத்தான் குறைச் சொல்ல முடியும், உங்களிடம் கணிணி இருக்கிறது, அதில் நல்லதையும் தெரிந்து கொள்ளலாம், ஆபாசங்களையும் தெரிந்து கொள்ளலாம், பழமை வாதிகள் எப்பொழுது ஆபாசங்களைக் குறிப்பிட்டு மட்டும் தான் பேசுவார்கள். கருவிகளை சரியாக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்துவது கருவியின் குற்றமல்ல.

எல்லாவற்றையும் படித்துவிட்டு மனிதன் ஒழுக்கம் கெட்டதற்கு கருத்தடை சாதனங்கள் தான் காரணம் என்று கூறாதீர்கள், எல்லா காலத்திலும் எல்லா ஒழுக்கமும் கெட்டும் இருக்கிறது, வளர்ந்தும் இருக்கிறது, அப்போது உலகாளாவிய ஊடகங்களும்,வீட்டுக்குள் தொலைகாட்சியில் இல்லாததால் அவை செய்தியாக்கப்படவில்லை, காதுகளுக்கும், கண்களுக்கும் வரவில்லை

பெயரில்லா சொன்னது…

//நஞ்சு கலவாத உணவு தூய காற்று நல்ல குடி நீர் இவையெல்லாம் தொலைத்து விட்டு, பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று தெரியாமல் ஊர் பேர் தெரியாதவனிடம் பேஸ் புக்கில் அவனுக்காக உயிரைக் குடுப்பது போல உறவாடுவது நகைப்புக்குரியது, இந்த வசதி வாய்ப்புகள் சந்தோஷத்தை கொடுப்பவை என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமை. //

அறிவியல் எப்போதுமே கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் விரும்பினால் மட்டுமே உபயோகபடுத்த முடியும். இப்போதும் நீங்கள் நினைக்கிற வாழ்க்கையை வாழலாமே. ஊட்டிக்கு போகிற மலையில் மலை வாழ் மக்கள் இருக்கிறார்களே. அவர்கள் இப்போதும் அறிவியலை உபயோகப்படுத்தாமல், ஆடை அணியாமல் தங்கள் கைகளை நம்பி, சுத்தமான காற்று, நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் நாளைக்கே அங்கே போய் settle ஆகி விடுங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை. நீங்கள் நினைக்கிற கற்கால வாழ்க்கையை almost வாழலாம்.

//அறிவியலால் மொத்தமா கூட்ட சாவான். அறிவியல் இல்லாதிருந்தால் இன்னும் பல கோடி வருடங்கள் உயிரினம் வாழ்ந்திருக்கும் ஆனால் இப்போது,,,,,,,,,????//

சுனாமியால் மற்றும் பூகம்பத்தால் லட்சகணக்கான பேர் சாகிறார்களே? அதற்கு அறிவியல் அல்ல உங்கள் கடவுளே காரணம்.

வருண் சொன்னது…

***Jayadev Das சொன்னது…

வருண்,

நீங்க வரவு செலவு ரெண்டையும் பார்க்கணும்.***

நீங்க பார்க்கிற "வரவு செலவு கணக்கு"! மற்றும் உங்க கணக்குப் படி, "அறிவியல்லாத. அறியாமையில் வாழ்ந்த பழமை வாழ்க்கை" யில் தான் வரவு அதிக செலவு கம்மினு சொல்வது "உங்க நம்பிக்கை" அவ்ளோதான்! உங்க நம்பிக்கை "உண்மை" ஆகாது!

***போலியோ, வெறிநாய் க்கடி இதுல சில பேருதான் சாவான். ஆனால், அறிவியலால் மொத்தமா கூட்ட சாவான். அறிவியல் இல்லாதிருந்தால் இன்னும் பல கோடி வருடங்கள் உயிரினம் வாழ்ந்திருக்கும் ஆனால் இப்போது,,,,,,,,,????****

உயிரினம் எல்லாம் செத்தால் என்ன இப்போ? மனித இனமே அழிந்தால்தான் என்ன இப்போ? நம்ம இன்னும் கோடி ஆண்டுகள் வாழ்ந்து என்னத்தைக் கிழிக்கப்போறோம்? னும் யோசிக்கலாம்!

அப்படியெல்லாம் யோசிப்பீங்களா?

***அடிப்படை உணவு, காற்று, நீர் இவையெல்லாம் இன்னும் ஒரு தலைமுறைக்காவது கிடைக்குமா? ஆம் என்று பதில் தைரியமாக சொல்ல முடியுமா? அப்புறம் அறிவியல் என்ன வளர்ந்து என்ன பயன்?***

அடிப்படை உணவு கிடைக்காமல்ப்போனால் அது அறிவியளாலன் தவறா? இல்லை அறிவீனர்களின் தவறா?

-----------------------

குயில் இருக்கு தெரியுமா? அது என்ன பண்னுமாம், காக்கா தன் முட்டைகளை அடைகாக்கும்போது, அதனுடன் சண்டை இழுத்து, காக்கையை அங்கிருந்து அக்ற்றி, அதன் கூட்டில் தன் முட்டைகளை இட்டுவிடுமாம். குயிலோட வேலை முடிஞ்சது.

கணக்குத் தெரியாத காக்கா, குயில் முட்டையையும் தன் முட்டையாக பாவித்து, குயில் குஞ்சுகளை தன் குஞ்சாக வளர்த்து விடுமாம்!

Is this fair? Who gave the parasitic lifestyle to "kuyil"?

Not the scientists. It is natural. You might say your GOD did this unfair judgment to one bird and he can not do anything about it.

In your God creation, life is NOT FAIR! எளியவனை வலியவன் ஏமாற்றி வாழ்வதைத்தான் உங்க கடவுளே ரசிக்கிறார். நீங்க ஏன் விஞ்ஞானிகளையும் மனிதனையும் போட்டு குற்றம் சாட்டிக்கிட்டு. உங்க கடவுளை நாலு அறை அறைய வேண்டியதுதானே?

உனடே பகவத் கீதை படிங்க. வாழ்க்கையை புரிஞுக்கோங்கனு எதையாவது சொல்லுவீங்க். :)))

Jayadev Das சொன்னது…

@ கோவி.கண்ணன்


\\காலம் காலமாக இயற்கையை வெல்லும் முயற்சி மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் கைகூடியுள்ளது. \\ இயற்கையை வெல்ல வேண்டும் என்றால் அது உங்க எதிரியா என்ன? அப்படிப் பார்த்ததால்தான் மரங்களை வெட்டியும், ஆறுகளில் விஷத்தைக் கலந்தும் காற்றில் கார்பன் மோனாக்சைடையும் கலந்தும் அதைக் கொன்று உங்கள் வெற்றியை நிர்ணயிக்கப் பார்க்கிறீர்களோ?


\\பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் எல்லாம் என்ன ஆனது, அதற்கும் அறிவியல் தான் காரணமா ? \\ அழிந்த உயிரினத்தைத் தவிர மற்றவை வாழ்ந்தன அல்லவா? இப்போ மனிதன் எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டானே? மற்ற உயிர்கள் வாழ்வைப் பறிக்க, எதிர்கால சந்ததிகளுக்கு வேண்டியதுமான இயற்கையை பாழாக்க இவன் யார்?


\\நான் கேட்டக் கேள்விக்கு பதிலே இல்லை, ஆணுறைகள், குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் இல்லை என்றால் இன்றைய 700 கோடி மக்கள் தொகை 20 ஆண்டுகளுக்கு முன்பே பெருகி இருக்கும், இன்றைக்கு 1500 கோடியாகக் கூட ஆகி இருப்பார்கள். \\ அப்படி சாத்தியமென்றால் எப்போதோ ஆகியிருக்க வேண்டும், நடக்கவில்லை, இயற்கையில் இனம் பெருகுதல் அழிதல் என பேலன்ஸ் ஆகியே வந்துள்ளது.


\\உணவு பஞ்சம், காற்று நீர் இவற்றிற்கெல்லாம் அறிவியலைக் குறைச் சொல்லாம, இவற்றின் அடிப்படைத் தேவைகளை சரியாக வழங்காத பரமரிக்காத அரசியல் வாதிகள், ஆயுத வியாபாரிகள், போர் விரும்பிகளைத்தான் குறைச் சொல்ல முடியும், \\ பணக்கார நாடுகள் குப்பைகளை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கொட்டித்தான் அவனை சுத்தமாக வைத்திருக்கிறான். அறிவியல் வளர்ச்சி இயற்க்கை பாழ் இது இரண்டும் ஒன்றாகத்தான் வரும். சீனாவில் தொழிர்ப்புரட்சியல் அவர்கள் சுற்றுப் புறச் சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே இதற்க்கு சான்று.


\\உங்களிடம் கணிணி இருக்கிறது, அதில் நல்லதையும் தெரிந்து கொள்ளலாம், ஆபாசங்களையும் தெரிந்து கொள்ளலாம், பழமை வாதிகள் எப்பொழுது ஆபாசங்களைக் குறிப்பிட்டு மட்டும் தான் பேசுவார்கள். கருவிகளை சரியாக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்துவது கருவியின் குற்றமல்ல.\\ இப்படியெல்லாம் யோக்கியனாய் காந்தி, புத்தர் இயேசு என்று மூனே பேரால் மட்டும் தான் இருக்க முடியும்.

\\ எல்லா காலத்திலும் எல்லா ஒழுக்கமும் கெட்டும் இருக்கிறது, வளர்ந்தும் இருக்கிறது, அப்போது உலகாளாவிய ஊடகங்களும்,வீட்டுக்குள் தொலைகாட்சியில் இல்லாததால் அவை செய்தியாக்கப்படவில்லை, காதுகளுக்கும், கண்களுக்கும் வரவில்ல.\\ ஒழுக்கக் கேடு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது, ஆனால் எத்தனை சதவீதம்? முன்பு நூற்றில், ஆயிரத்தில் ஒன்று என தவறுகள் நடக்கும். ஒரு தலைமுறை முன்பு கூட சமுதாயம் இவ்வளவு சீர் கெட்டதில்லை. தற்போது ஒழுக்கமாய் இருக்கும் ஆண்/பெண்களை பார்ப்பதே அரிதிலும் அரிதாகி வருகிறது.காரணம் டெக்னாலஜி, அந்நிய தொலைகாட்சி ஊடகங்கள். நீங்க சொல்ற மாதிரி ஊடகங்களால் ஒண்ணுமே ஆகாது என்றால் கோலாக் கம்பனிக்காரர்கள் எதற்காக கோடி கோடியாக கூத்தாடிகளுக்கும் கிரிக்கெட் ஆட்டக்கார சூதாடி நாய்களுக்கும் பணத்தைக் கொட்டி விளம்பரத்தில் நடிக்க வைக்க வேண்டும்? யோசிங்க.

Jayadev Das சொன்னது…

@ Alien A

\\இப்போதும் நீங்கள் நினைக்கிற வாழ்க்கையை வாழலாமே. ஊட்டிக்கு போகிற மலையில் மலை வாழ் மக்கள் இருக்கிறார்களே. \\ நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை. ஊட்டியில் தேயிலைத் தோட்டங்களைப் போட்டு அவர்களது வழக்கமான பயிர்களை ஒழித்து, தேயிலை கூலி வேலை இல்லை என்றால் பட்டினிச் சாவு என்ற நிலையில் தள்ளி விட்டுள்ளார்கள். வடகிழக்கு மாநிலங்களில், மலைவாழ் மக்களை அங்கு கிடைக்கும் தனிமங்களை வெட்டி எடுக்க அரசே அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதை எதிர்த்து அவர்கள் போராடி வருகிறார்கள் ஆயினும் ஆதரவில்லை. ஒரு அம்மா தொடர்ந்து உன்ன விரதம் இருந்து வருகிறார். எந்த கனவுலகில் நீர் வாழ்கிரீரோ தெரியவில்லை

\\அவர்கள் இப்போதும் அறிவியலை உபயோகப்படுத்தாமல், ஆடை அணியாமல் தங்கள் கைகளை நம்பி, சுத்தமான காற்று, நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் நாளைக்கே அங்கே போய் settle ஆகி விடுங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை. நீங்கள் நினைக்கிற கற்கால வாழ்க்கையை almost வாழலாம்.\\ இப்போ கையில் இருக்கும் காசுக்கு அங்கே செட்டில் ஆகா முடியுமென்றால் போகத் தயார். [அடி நிலம் கூட வாங்க முடியாது]

\\சுனாமியால் மற்றும் பூகம்பத்தால் லட்சகணக்கான பேர் சாகிறார்களே? அதற்கு அறிவியல் அல்ல உங்கள் கடவுளே காரணம்.\\ லட்சம் போனால் இன்னும் பல லட்சம் வரும். அனால் மொத்தமா காலி பண்ணிட்டா திரும்ப வருமா? யோசிக்கவே மாட்டீங்களா?

Jayadev Das சொன்னது…

\\நீங்க பார்க்கிற "வரவு செலவு கணக்கு"! மற்றும் உங்க கணக்குப் படி, "அறிவியல்லாத. அறியாமையில் வாழ்ந்த பழமை வாழ்க்கை" யில் தான் வரவு அதிக செலவு கம்மினு சொல்வது "உங்க நம்பிக்கை" அவ்ளோதான்! உங்க நம்பிக்கை "உண்மை" ஆகாது! \\ காசி வரைக்கும் நடந்து போனாலும் உணவைப் பற்றி கவலைபப் பட வேண்டியதில்லை. இரவில் யார் வீட்டுத் திண்ணையிலும் தூங்கலாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். இது எப்படி, இன்றைக்கு தண்ணீரே லிட்டட் 20 ரூபாய், இது எப்படி? இதற்குப் பெயர் முன்னேற்றமா?

\\உயிரினம் எல்லாம் செத்தால் என்ன இப்போ? மனித இனமே அழிந்தால்தான் என்ன இப்போ? நம்ம இன்னும் கோடி ஆண்டுகள் வாழ்ந்து என்னத்தைக் கிழிக்கப்போறோம்? \\ எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் கும்மாளம் அடிச்சா சரி. நல்ல பாலிசி.

\\அடிப்படை உணவு கிடைக்காமல்ப்போனால் அது அறிவியளாலன் தவறா? இல்லை அறிவீனர்களின் தவறா?\\ பைத்தியக்காரன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றால் அவனிடம் கத்தி துப்பாக்கியை கொடுப்பீர்களா? அணு குண்டை எவன்யா அமரிக்காவுக்கு செஞ்சு கொடுத்தது யாரு? அது என்ன மக்களை குளுகுளுன்னு வச்சிருக்கும் அயிட்டமா? அது என்ன பண்ணும்னு தெரியாத முட்டாப் பசங்களா இவனுங்க?

-----------------------

\\குயில் இருக்கு தெரியுமா? அது என்ன பண்னுமாம், காக்கா தன் முட்டைகளை அடைகாக்கும்போது, அதனுடன் சண்டை இழுத்து, காக்கையை அங்கிருந்து அக்ற்றி, அதன் கூட்டில் தன் முட்டைகளை இட்டுவிடுமாம். குயிலோட வேலை முடிஞ்சது.\\

நீர் ஆடு, கோழி, மீனு எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு முதல் parasite ஆக இருந்துகிட்டு, ஏதோ வேற கூட்டில் முட்டையை போட்ட குயிலை குற்றவாளியா கூட்டில் அடிச்சு பார்க்க நினைக்கிரீரே!!! you shuld have put forth yourself as the worst example of a parasite, but you comfortably pushed it under the carpet!! என்ன உலகமடா இது?!!

வருண் சொன்னது…

***காசி வரைக்கும் நடந்து போனாலும் உணவைப் பற்றி கவலைபப் பட வேண்டியதில்லை. இரவில் யார் வீட்டுத் திண்ணையிலும் தூங்கலாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம்.***

அட அட அடா! ஏதோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாரியே கதை விடுகிறீர்.. பாவம், போற வழியிலே எவன் எவன் தண்ணி கெடைக்காமல் செத்து டைரெக்ட்டா சொர்க்கத்துக்கு போனானோ?

வருண் சொன்னது…

****இன்றைக்கு தண்ணீரே லிட்டட் 20 ரூபாய், இது எப்படி? இதற்குப் பெயர் முன்னேற்றமா?***

ஓசி ல இப்படியே பொழைப்பை ஓட்டி பழகிவிட்டதால்தான் இந்தியா இந்த நிலைமையில் வந்து நிக்கிது.

எல்லாமே ஓசில கெடச்சா எவன் உழைக்கிறது???

வருண் சொன்னது…

***பைத்தியக்காரன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றால் அவனிடம் கத்தி துப்பாக்கியை கொடுப்பீர்களா? அணு குண்டை எவன்யா அமரிக்காவுக்கு செஞ்சு கொடுத்தது யாரு? அது என்ன மக்களை குளுகுளுன்னு வச்சிருக்கும் அயிட்டமா? அது என்ன பண்ணும்னு தெரியாத முட்டாப் பசங்களா இவனுங்க?****

நரபலி எல்லாம் கொடுத்து உங்க சாமிய சந்தோஷப்படுத்தினாளாமே? அணுகுண்டை வச்சா கொன்னு கொடுத்தேள்?

விதவைக்கு மொட்டை யடிச்சி விடுறது. உப்புப் போடாமல் சாப்பிடுனு சொல்றது. இவனுக வப்பாட்டினு வச்சுக்கிட்டு என் அப்பன் முருகனுக்கே ரெண்டு பொண்டாட்டினு தத்துவும் பேசுறது! :))

வருண் சொன்னது…

****\\குயில் இருக்கு தெரியுமா? அது என்ன பண்னுமாம், காக்கா தன் முட்டைகளை அடைகாக்கும்போது, அதனுடன் சண்டை இழுத்து, காக்கையை அங்கிருந்து அக்ற்றி, அதன் கூட்டில் தன் முட்டைகளை இட்டுவிடுமாம். குயிலோட வேலை முடிஞ்சது.\\

நீர் ஆடு, கோழி, மீனு எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு முதல் parasite ஆக இருந்துகிட்டு, ஏதோ வேற கூட்டில் முட்டையை போட்ட குயிலை குற்றவாளியா கூட்டில் அடிச்சு பார்க்க நினைக்கிரீரே!!! you shuld have put forth yourself as the worst example of a parasite, but you comfortably pushed it under the carpet!! என்ன உலகமடா இது?!!***

நாங்க என்னைக்குமே யோக்கியன் பட்டம் கட்டிக்கிட்டு அலைவதில்லை!

"உங்க ஆண்டவனுக்கு ஏன் அறிவில்லை? நியாயம் அநியாயம் தெரியவில்லை?, னு கேட்டால்.. "நீதான் அயோக்கியன்" நான் புல்லைத்திண்ணே வாழ்ந்துடுவேன்" எதையாவது சொல்லிக்கிட்டு சப்பைக்கட்டு கட்டுறது?

வருண் சொன்னது…

பொருள்

நரபலி(பெ)

(கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தும்) மனித உயிர்ப்பலி; ஆட்பலி

மொழிபெயர்ப்புகள்

human sacrifice

விளக்கம்
பயன்பாடு

சிந்துவேளி நாகரீகத்தில் கோவில் வழிபாடு இருக்கவில்லை. ஆனால் இலட்சிணை ஒன்றில் ஒருவன் கையில் வாளேந்தி நிற்பது போலவும் அவனுக்கு அடியில் ஒரு பெண் முழங்கால்படியிட்டு இருப்பதுபொலவும் உருவகம் காணப்படுவதால் அக்காலப்பகுதியில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது எனலாம் (இந்தியமதங்களும் கிறிஸ்தவமும்)

(இலக்கியப் பயன்பாடு)

இச்சையி னரபலி யிட்ட தலையை (அரிச். பு. விவாக. 121).;

நரபலி (சொற்பிறப்பியல்)

வருண் சொன்னது…

உங்க பொற்காலத்தில்

ஒருத்தியை 5 பேர் கட்டி வாழ்ந்தார்கள்னு உங்க மஹாபாரதம் சொல்லுது..

ராமர் தம்பி லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுத்தாரா இல்லை மார்பகத்தை அறுத்தாரா?னு தெரியலை எனக்கு .. வால்மீகி ராமாயணம்தான் இதையும் சொல்லுதாம்..

ராமர், வாலியை நேரிடையா சண்டை போட்டு ஜெயிக்க முடியாதுனு மறைந்திருந்தே "வீரமாக" கொன்னாருன்னு உங்க இதிகாசம்தான் சொல்லுது..

ஆனால் நீங்க, காசி போறவரை வந்து உங்களுக்கு ஊட்டி விட்டார்கள்.. ஓசிலயே பொபொழைப்பை ஓட்டிறல்லாம்.. னு சொல்றீங்க..

இப்போ நான் குடிக்கிறத சுத்தமான தண்ணிக்கு நான் காசு கொடுக்க வேண்டியிருக்கு.. ஊருப்பயலுக இல்லை கொடுக்கணும். நான் எதுக்கு கொடுக்கணும்னு .. உங்களை கிணற்ருத்தண்னியை இல்லைனா குளக்கரைல போயி தண்ணியக்குடிக்கக் கூடாதுனு எவன் தடுத்தான்???

பெயரில்லா சொன்னது…

//இப்போ கையில் இருக்கும் காசுக்கு அங்கே செட்டில் ஆகா முடியுமென்றால் போகத் தயார். [அடி நிலம் கூட வாங்க முடியாது]//
ஐயா தாஸ்,
ஊட்டி என்றதும் Tea Estate மற்றும் பங்களா ரேஞ்சுக்கு நீங்க போய்டீங்க. நான் சொன்னது காட்டுவாசி வாழ்க்கையைப்பற்றி. காட்டுவாசிகள் லட்சம் கோடி கொடுத்து வீடு வாங்குவதில்லை. முழு காடும் அவர்களுக்கு வீடு தான். எங்கே உணவு கிடைக்கிறதோ, அங்கே தான் அவர்கள் வீடு. ஊட்டியை ஒரு உதாரனத்துக்காகத்தான் சொன்னேன். கர்நாடகா மற்றும் இந்தியா முழுவதும் நிறைய காடுகள் உள்ளன. அறிவியல் வந்து எல்லா இயற்கையும் அழித்துவிட்டது என்று சும்மா சொல்லக்கூடாது. நான் கூட கடந்த வருடம் கர்நாடகா காட்டிற்கு போயிருக்கிறேன். இப்போது கூட இந்த இயற்க்கை காடுகளெல்லாம் இருக்கின்றன. அதில் பழங்குடி மக்களும் வாழ்கிறார்கள். நீங்கள் இதை வாசித்து முடித்தவுடனே, காட்டில் போய் உங்களுக்கு பிடித்த அறிவியல் இல்லாத காட்டுவாசி வாழ்க்கையை வாழுங்கள். All the Best.

பெயரில்லா சொன்னது…

//காசி வரைக்கும் நடந்து போனாலும் உணவைப் பற்றி கவலைபப் பட வேண்டியதில்லை. இரவில் யார் வீட்டுத் திண்ணையிலும் தூங்கலாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம்.//

நீங்கள் பரதேசி படத்தை பாருங்கள். எவ்வளவு பஞ்சம். தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு கால்நடையாய் நடந்து போவதற்குள் எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு பட்டினிகள். இவ்வளவு ஏன், நீங்கள் இன்று கூட சென்னையிலிருந்து கன்யாகுமரிக்கு, உணவு எதுவும் parcel எடுத்துகொண்டு போகாமல் உங்களால் நடந்து போக முடியுமா? இதுவே முடியாது. அதற்குள் நீங்கள் காசி வரைக்கும் போய்விட்டீர்கள்.

வருண் சொன்னது…

தாஸு, கங்கையில் நீராடப்போகும்போது ஊட்டிவிட்டவா, தண்னி கொடுத்தவா எல்லாம் பெண்களை என்ன செஞ்சா னு பார்ப்போம்..

"சதி" ஒரு பழக்கவழக்கம் சம்பிரதாயம் இருந்ததாக சொல்லப்படுகிறது.. சதினா என்ன???

***Sati (Devanagari: सती, the feminine of sat "true"; also called suttee)[5] was a social funeral practice among some Indian communities in which a recently widowed woman would immolate herself on her husband’s funeral pyre.[1] The practice was banned several times, with the current ban dating to 1829 by the British.[2]

The term is derived from the original name of the goddess Sati, also known as Dakshayani, who self-immolated because she was unable to bear her father Daksha's humiliation of her (living) husband Shiva. The term may also be used to refer to the widow. The term sati is now sometimes interpreted as "chaste woman". Sati appears in both Hindi and Sanskrit texts, where it is synonymous with "good wife"; the term suttee was commonly used by Anglo-Indian English writers.[3]***

நல்ல மனைவினா என்ன? ஆம்படையான் போயிட்டான்னா, அவனோட சேர்ந்து போயிடணும்..

இதை யாரு மிருகத்தனம்னு சொல்லி தடுத்தது..

****By the end of the 18th century, the practice had been banned in territories held by some European powers. The Portuguese banned the practice in Goa by about 1515. [20] The Dutch and the French banned it in Chinsurah and Pondichéry, their respective colonies. The British, who by then ruled much of the subcontinent, and the Danes, who held the small territories of Tranquebar and Serampore, permitted it until the 19th century.

The British, following the example of the early Moghuls, for a while tried to regulate it by requiring that it be carried out in the presence of their officials and strictly according to custom.[18] Attempts to limit or ban the practice had been made by individual British officers in the 18th century, but without the backing of the British East India Company. The first formal British ban was imposed in 1798, in the city of Calcutta only. The practice continued in surrounding regions. Toward the end of the 18th century, the evangelical church in Britain, and its members in India, started campaigns against sati. Leaders of these campaigns included William Carey and William Wilberforce, and both appeared to be motivated by their love for the Indian people and their desire to introduce Indians to Christianity. These movements put pressure on the company to ban the act. The Bengal Presidency started collecting figures on the practice in 1813***

எனக்கு தண்ணி கொடுத்தான், சோறு கொடுத்தான்.. அவனோட சேர்ந்து அவன் பொண்டாட்டியை கொளுத்தினால் எனக்கென்னனு சொல்வாரு தாஸு!!! :)

கொஞ்சம்கூட கண்னைத் திறந்து, மூளையை கசக்கி, எப்படி இவருடைய மூதாதையர் வாழ்ந்தார்கள், காட்டுமிராண்டிகளாக னு தெரியாமலே வாழ்கிறார், அறியாமையில்..

என்னவோ என்ரிக்கோ ஃபெர்மியே வந்து நீங்க இந்தியாவில் அணுகுண்டு தயாரிச்சே ஆகணும்னு சொன்னப்புறம்தான் இவங்க தயாரிச்சமாரி! பேசுவதெல்லாம் எடக்கு ம்டக்கா, உண்மையை எங்கேயாவது விட்டுவிட்டு..

Jayadev Das சொன்னது…

\\அட அட அடா! ஏதோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாரியே கதை விடுகிறீர்.. \\ நீங்க சிந்து சமவெளி நாகரிகம், பொந்து சமவெளி நாகரிகம் அப்படின்னு சந்துல சிந்து பொஆடிகிட்டு இருக்கீங்க இதெல்லாம் போய்ப் பார்த்திட்டு வந்தா சொன்னீங்க? இல்லைதானே, நாங்க கேள்விப் பட்டதைச் சொன்னா மட்டும் தப்பா? உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?

\\பாவம், போற வழியிலே எவன் எவன் தண்ணி கெடைக்காமல் செத்து டைரெக்ட்டா சொர்க்கத்துக்கு போனானோ?\\ அதுவாச்சும் பரவாயில்லை, சம்பந்தமில்லாத வெளியூரு, இப்போ சொந்த ஊரிலேயே பட்டினியால் சாகிறார்களே?

\\\ஒருத்தியை 5 பேர் கட்டி வாழ்ந்தார்கள்னு உங்க மஹாபாரதம் சொல்லுது..

ராமர் தம்பி லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுத்தாரா இல்லை மார்பகத்தை அறுத்தாரா?னு தெரியலை எனக்கு .. வால்மீகி ராமாயணம்தான் இதையும் சொல்லுதாம்..

ராமர், வாலியை நேரிடையா சண்டை போட்டு ஜெயிக்க முடியாதுனு மறைந்திருந்தே "வீரமாக" கொன்னாருன்னு உங்க இதிகாசம்தான் சொல்லுது..\\
இராமாயணம், மகாபாரதம் பத்தியோ அதை நம்பனும்னோ இங்கே நான் எதையாவது சொன்னேனா? இல்லாத டாபிக்கை எதுக்கு இங்கே இழுத்து திசை திருப்பனும்?

\\உங்களை கிணற்ருத்தண்னியை இல்லைனா குளக்கரைல போயி தண்ணியக்குடிக்கக் கூடாதுனு எவன் தடுத்தான்???\\ என்னது கிணறு, குளமா? எல்லாத்தையும் மண்கொட்டி நிரப்பி பிளாட் போட்டு வித்து தின்னு ஏப்பம் விட்டு முப்பது வர்ஷமாகுது, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?

Jayadev Das சொன்னது…

\\"சதி" ஒரு பழக்கவழக்கம் சம்பிரதாயம் இருந்ததாக சொல்லப்படுகிறது.. சதினா என்ன???\\ இது ஒழிக்கப் பட வேண்டியது தான். இதில் சில பெண்கள் நெருப்பால் வெந்து செத்தார்கள், அதுக்கு நீங்க துடி துடிச்சுப் போயிட்டீங்க. அது சரி, ஜப்பான் மேல போட்டானுங்களே அணுகுண்டு, அது எப்படி இருந்திருக்கும் தெரியுமா? குளுகுளுன்னா இருக்கும்? அது நெருப்பை விட பல்லாயிரம் மடங்கு வெப்பமானதுதானே? அதில பெண்கள் மட்டுமா செத்தாங்க? குழந்தைகள், முதியவர்கள், அப்பாவி பொதுமக்கள் பத்துலட்சம் பேரு செத்தாங்க தானே? அதில் ஐஞ்சு லட்சம் பெண்கள் செத்திருப்பாங்க இல்லையா? அது உங்க கண்களுக்கு இனிமையா தோணிச்சோ? அதையும் சொல்ல வேண்டியதுதானே? அங்க மட்டும் நீங்க ஊமையாகப் போவது ஏனோ?

Jayadev Das சொன்னது…

\\ஊட்டி என்றதும் Tea Estate மற்றும் பங்களா ரேஞ்சுக்கு நீங்க போய்டீங்க. \\ அப்போ ஊட்டி பணக்காரனுக்கு மட்டும் தானா? Estate -ம் வேணாம் பங்களாவும் வேணாம், எனக்கு நான் இப்போ வசிப்பது போலவே சாதாரண வீடு சாதாரண இடம் போதும்.


\\நான் சொன்னது காட்டுவாசி வாழ்க்கையைப்பற்றி. \\ அந்தந்த பகுதியும், அந்தந்த இன மக்களுக்கு மட்டுமே சொந்தம், வெளியாட்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். இந்த அடிப்படை கூடவா உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டும்?


\\கர்நாடகா மற்றும் இந்தியா முழுவதும் நிறைய காடுகள் உள்ளன. அறிவியல் வந்து எல்லா இயற்கையும் அழித்துவிட்டது என்று சும்மா சொல்லக்கூடாது. \\ நீங்க சொல்லுவது அழிக்கப் பட்டுக் கொண்டே இருப்பதில் இன்னமும் மிச்சம் மீதி இருக்கு, என்கிறீர்கள். கவலை வேண்டாம் அதையும் சீக்கிரம் முடித்து விடுவார்கள்.


பெயரில்லா சொன்னது…

//அது சரி, ஜப்பான் மேல போட்டானுங்களே அணுகுண்டு, அது எப்படி இருந்திருக்கும் தெரியுமா? குளுகுளுன்னா இருக்கும்? அது நெருப்பை விட பல்லாயிரம் மடங்கு வெப்பமானதுதானே? அதில பெண்கள் மட்டுமா செத்தாங்க? குழந்தைகள், முதியவர்கள், அப்பாவி பொதுமக்கள் பத்துலட்சம் பேரு செத்தாங்க தானே?//

கோவி.கண்ணான் ஏற்கனவே கூறியுள்ளார். அறிவியல் கத்தி போல. கையும் வெட்டலாம். காய்கறியையும் வெட்டலாம். அது மனிதன் கையில் தான் இருக்கிறது. ஜப்பான் மேல அணுகுண்டு போட்டாங்கன்னா, அது மனித தவறு. அறிவியல் தவறல்ல. ஆகையால் நீர் மனிதனை குறை கூறும் ஒத்துகொள்கிறேன். அறிவியலை குறை கூறாதிரும்.

பெயரில்லா சொன்னது…

//எனக்கு நான் இப்போ வசிப்பது போலவே சாதாரண வீடு சாதாரண இடம் போதும்.//

நீர் இப்போது குகையிலா குடியிருக்கிரீர்? செங்கல், சிமெண்ட் வீட்டில் தானே? இந்த cement செய்வதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது. அறிவியலால் எந்த உபயோகமும் இல்லை என்று கூறுகிற நீர், எதற்காக வீட்டை எதிர் பார்க்கிறீர்? நாய், பூனை போல வெட்ட வெளியில் தங்க வேண்டியது தானே?

Jayadev Das சொன்னது…

\\கோவி.கண்ணான் ஏற்கனவே கூறியுள்ளார். அறிவியல் கத்தி போல. கையும் வெட்டலாம். காய்கறியையும் வெட்டலாம். அது மனிதன் கையில் தான் இருக்கிறது. ஜப்பான் மேல அணுகுண்டு போட்டாங்கன்னா, அது மனித தவறு. அறிவியல் தவறல்ல. ஆகையால் நீர் மனிதனை குறை கூறும் ஒத்துகொள்கிறேன். அறிவியலை குறை கூறாதிரும்.
\\

சரி அணுகுண்டை செய்தவன் யாரு? அரசியல்வாதியா? விஞ்ஞானி தானே? அணுகுண்டை ஏதாவது நகரத்து மேல போடத்தானே முடியும்? வேறென்னத்துக்கு அது? போட்டா விளைவு தெரியுமல்லவா? அனுகுடை செய்யச் சொல்லி ரெக்கமண்டு செய்து ரூஸ்வெல்ட் என்ற அரசியல்வாதிக்கு கடிதம் எழுதியவர் பேரு தெரியுமா உமக்கு? அவர் பெயர் ஐன்ஸ்டீன். அவர் என்ன மாங்கா வியாபாரமா செய்துகிட்டு இருந்தாரு? என்ன ஐயா எங்களை கேனைகள் என்று நினைக்கிறீரா?

http://www.fdrlibrary.marist.edu/archives/pdfs/docsworldwar.pdf

Jayadev Das சொன்னது…

அணுகுண்டை விடுங்க, இந்த காரெல்லாம் ஓடுதே, அது என்ன பச்சைத் தண்ணீரிலா ஓடுது? டீசல், பெட்ரோலில் தானே? அதனால் வெளியாகும் கார்பன் மோனாக்சைடு காற்றில் ஏற்ப்படுத்தும் விளைவு பற்றி தெரியுமல்லவா? அப்படின்னா காரை எப்படி சுற்றுப் புறச் சூழலுக்கு கேடில்லாம ஓட்டுவீங்க?

உரம் பூச்சி மருந்துகளை எப்படி நிலத்தை நீரை உணவை விஷமாகாமல் லிமிட்டா பயன் படுத்துவீங்க? விடும் கதைகளுக்கு அளவே இல்லையா?

Jayadev Das சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Jayadev Das சொன்னது…

\\நீர் இப்போது குகையிலா குடியிருக்கிரீர்? செங்கல், சிமெண்ட் வீட்டில் தானே? இந்த cement செய்வதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது. \\ வெறும் அறிவியல் எனச் சொல்ல வேண்டாம், நவீன அறிவியல் என்று சொல்லுவோம். உம்முடைய நவீன அறிவியலின் துணை இல்லாமல் கட்டப் பட்ட தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் வருடங்களாக நிற்கிறது.

நான் குடியிருக்க மண் சுவரும் அதற்க்கு ஓலை கூறையுமே போதும், அதில் வசிக்க நான் தயார், ஆனால் பாழ்படுத்திய இயற்கையை சீர்படுத்தி பழைய நிலைக்கு உம்மால் மீட்டுத் தர இயலுமா?

பெயரில்லா சொன்னது…

//சரி அணுகுண்டை செய்தவன் யாரு? அரசியல்வாதியா? விஞ்ஞானி தானே? அணுகுண்டை ஏதாவது நகரத்து மேல போடத்தானே முடியும்? வேறென்னத்துக்கு அது? போட்டா விளைவு தெரியுமல்லவா? //

விஞ்ஞானி மேல் கொலைவெறி கோபத்தில் இருக்கிறீர் நீர். சரி இருக்கட்டும்.

உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் நினைத்தால், அணுகுண்டையோ அல்ல அரியிவியலினால் ஏற்படுகிற சேதத்தையோ 100% தடுக்க முடியும். ஆனால் நீர் பிடித்து தொங்குகிற இயற்க்கையாகிய சுனாமியையும் பூகம்பத்தையும் 100% தடுத்து நிறுத்த guarantee கொடுக்க முடியுமா? முடியும் அல்லது முடியாது என்று நேரடி பதில் கொடுக்கவும். முடியாது என்றால், எதுக்குய்யா அறிவியலை குறை கூறுகிறீர்? உம் இயற்கையை முதலில் சரி பண்ணும். அப்புறம் அறிவியலைப் பற்றி பேசலாம்.

பெயரில்லா சொன்னது…

//இந்த காரெல்லாம் ஓடுதே, அது என்ன பச்சைத் தண்ணீரிலா ஓடுது? டீசல், பெட்ரோலில் தானே? அதனால் வெளியாகும் கார்பன் மோனாக்சைடு காற்றில் ஏற்ப்படுத்தும் விளைவு பற்றி தெரியுமல்லவா? அப்படின்னா காரை எப்படி சுற்றுப் புறச் சூழலுக்கு கேடில்லாம ஓட்டுவீங்க?//

வேகமாக இன்னொரு இடத்திற்கு செல்லவும், மழையில் நனையாமல் போகவும் இயற்க்கை எங்களுக்கு எந்த வசதியையும் செய்து தரவில்லை. அதனால் தான் நாங்கள் அறிவியலை (கார்) நாடுகிறோம்.இந்த வசதி எல்லாம் இயற்கையே எங்களுக்கு செய்து கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் அறிவியல் பக்கம் போகப்போகிறோம்?

Jayadev Das சொன்னது…

\\விஞ்ஞானி மேல் கொலைவெறி கோபத்தில் இருக்கிறீர் நீர். சரி இருக்கட்டும்.\\ நீங்க கண்மூடித்தனமான நம்பிக்கையை நவீன விஞ்ஞானத்தின் மீது வைத்திருக்கீங்க அது உண்மையைப் பார்க்க விடாமல் உங்க கண்ணை மறைக்குது.

\\உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் நினைத்தால், அணுகுண்டையோ அல்ல அரியிவியலினால் ஏற்படுகிற சேதத்தையோ 100% தடுக்க முடியும்.\\ கார் மற்றும் தொழிற்சாளைகளில் இருந்து கக்கக்ப் படும் விஷப் புகையை என்ன செய்வீங்கன்னு கேட்டேன், பதிலே இல்லியே? அதை 100% பாதுகாப்பானதாக ஆக்க முடியுமா?

\\ஆனால் நீர் பிடித்து தொங்குகிற இயற்க்கையாகிய சுனாமியையும் பூகம்பத்தையும் 100% தடுத்து நிறுத்த guarantee கொடுக்க முடியுமா? முடியும் அல்லது முடியாது என்று நேரடி பதில் கொடுக்கவும்.\\ அறிவியலும் இயற்க்கை விதிகளை நம்பித்தான் உள்ளது, குவாண்டம் விதிகளை மனிதன் படைக்க வில்லை என்பதையும் மறக்க வேண்டாம். நான் பிடித்துத் தொங்கும் இயற்கையின் தாக்குதல் ஏற்ப்படுத்தும் பாதிப்பு repairable. ரப்பர் மாதிரி மீள முடியும். பழைய நிலைக்கு வரவும் முடியும். ஆனால் நீர் பிடித்து தொங்குவது நீண்ட பின்னர் பழைய நிலைக்கு வராது. போனால் போனதுதான். It is irreparable, irreversible, takes all of you to grave once for all.

Jayadev Das சொன்னது…

\\வேகமாக இன்னொரு இடத்திற்கு செல்லவும், மழையில் நனையாமல் போகவும் இயற்க்கை எங்களுக்கு எந்த வசதியையும் செய்து தரவில்லை. அதனால் தான் நாங்கள் அறிவியலை (கார்) நாடுகிறோம்.இந்த வசதி எல்லாம் இயற்கையே எங்களுக்கு செய்து கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் அறிவியல் பக்கம் போகப்போகிறோம்?\\ மில்லியன் கணக்கான ஆண்டுகள் கார் இல்லாமல் மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான். அவன் ஒன்றும் அழிந்து போய்விடவில்லை. ஆனால், நீர் ஓட்டும் கார் கக்கும் கார்பன் மோனாக்சைடு உயிர் தப்ப முடியாதபடிக்கு உமக்கே பெரிய ஆப்பு வைக்கும். ஓரிரு வாரங்களில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் சக்தியை பறவைகள் இயல்பில் பெற்றுள்ளன. எனவே இயற்க்கை தரவில்லை என்பது தவறு அது உமக்குத் தேவையில்லை என்பது தான் உண்மை. மனிதனைத் தவிர மற்றவை எதுவும் வீடு கட்டுவதில்லை மழையில் நனைகின்றன, அந்த இனம் ஒன்றும் அழிந்து விடவில்லை. மாறாக மனிதன் காட்டை அழிப்பதால் தான் அவை அழிகின்றன.

பேராசை பிடித்த மனிதா நீ திருந்து, நீயும் வாழ், மற்ற உயிர்களையும் வாழ விடு, உன் சந்ததிகளுக்கு தண்ணீரும் உணவும் கிடைக்காமல் செய்து விடாதே. இயற்க்கை பொன் முட்டையிடும் வாத்து உன் பேராசையால் அதை அறுத்துப் பார்க்க நினைக்காதே, நீ இயற்கையை காப்பாற்றினால் அது உன்னை காப்பாற்றும் நான் இயற்கையை வெள்ளப் போகிறேன் என்று கொக்கரித்தால் அது உனக்கே ரிவிட்டாகப் போய் விடும். முதலில் நீ திருந்து.

பெயரில்லா சொன்னது…

//நான் பிடித்துத் தொங்கும் இயற்கையின் தாக்குதல் ஏற்ப்படுத்தும் பாதிப்பு repairable. ரப்பர் மாதிரி மீள முடியும். பழைய நிலைக்கு வரவும் முடியும். //

நான் கேட்டது இயற்கை சீரழிவுகளை தடுக்க முடியுமா அல்லது முடியாதா என்ற நேரடி பதில். அதை நீங்கள் இன்னும் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட பின், repairable-ஆ or irrepairable-ஆ என்பது கேள்வி அல்ல.

உங்கள் இயற்கையாகிய Tsunami fucked up more than 1,00,000 people's lives. அதில் இறந்த அனைவரின் உயிரையும் மீட்டு திருப்பி கொடுங்கள் பாப்போம். (உங்கள் repairable formula-வை பயன்படுத்தி)

பெயரில்லா சொன்னது…

இந்த argument நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க கடைசி idea உங்களுக்கு. உங்கள் கடவுள் தன் சக்தியை எல்லாம் பயன்படுத்தி, அறிவியலையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அழித்து விடட்டும். இயற்கையை காப்பாற்றட்டும். நான் அடுத்த நிமிடமே தலை கீழாக நின்று உங்கள் கடவுளை கும்பிடுகிறேன்.

வருண் சொன்னது…

****இது ஒழிக்கப் பட வேண்டியது தான். இதில் சில பெண்கள் நெருப்பால் வெந்து செத்தார்கள், அதுக்கு நீங்க துடி துடிச்சுப் போயிட்டீங்க. அது சரி, ஜப்பான் மேல போட்டானுங்களே அணுகுண்டு, அது எப்படி இருந்திருக்கும் தெரியுமா? குளுகுளுன்னா இருக்கும்?***

தாஸ்: ஒரு பெண் தன் கணவனை இழந்த நிலையில் அவளை கொளுத்துவது, அல்லது அவளே செத்தால்தான் அவள் நல்ல மனைவி என்கிற பழக்கவழக்கம் உங்அ பழமைக் கலாச்சாரத்தில் இருந்தது என்பதை நீங்க மறுக்க முடியாது.

அதைச் சமாளிக்க நீங்க அமெரிக்காக்காரன் அணுகுண்டைப் போட்டு அப்பாவி ஜப்பான்காரனை கொன்னது அதைவிட பயங்கரம்னு சொல்றீங்க.

அமெரிக்காக்காரன், எப்போ அணுகுண்டை பயன்படுத்தினான்?

ஜப்பான்காரன் எதற்காக உலக ஆளவேண்டுமென்ற வெறிபிடித்து பேர்ல் ஹார்பரில் குண்டுக்களை போட்டான்?

இவன் சும்மா இருந்த அமெரிக்காவின்மேல்குண்டு மழை பொழிந்தான்.. அதற்கு பதிலடிதான் அணுகுண்டு..

சதியில் அப்படியில்லை. அப்பாவி மனைவியை, எரிச்சே கொன்னு இருக்கானுக.

ஜப்பான்காரன் அப்பாவியல்ல! அவன் அடுத்த நாட்டில் குண்டுபோட்ட அயோக்கியன்னு புரிஞ்சுக்கோங்க!

வருண் சொன்னது…

****நீங்க சிந்து சமவெளி நாகரிகம், பொந்து சமவெளி நாகரிகம் அப்படின்னு சந்துல சிந்து பொஆடிகிட்டு இருக்கீங்க இதெல்லாம் போய்ப் பார்த்திட்டு வந்தா சொன்னீங்க? இல்லைதானே, நாங்க கேள்விப் பட்டதைச் சொன்னா மட்டும் தப்பா? உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?****

சிந்தெல்லாம் இங்கே யாரும் பாடவில்லை. பழமைனு பேசினால் சிந்து சமவெளி நாகரிகம், இதிகாசம் எல்லாவற்றையும் பேசித்தான் ஆகணும்.

இதிகாசங்கள் கட்டுக்கதைனு நீங்க சொன்னால் ஏற்க தயார்!

நீங்க அப்படி சொல்லத் தயாரா?

நீங்க எட்டுலயும் சேரமாட்டேனிறீங்க, எழவுலயும் சேரமாட்டேன்கிறீங்க. சும்மா காசி போரவரை ஊட்டிவிட்டான், நன்னாரி சர்பத் கொடுத்தான்னு சொல்றீங்க.

அப்படியே ஊட்டிவிட்டு இருந்தால், அவன் ராமேஸ்வர்ம் போகும்போது நீங்க ஊட்டிவிடனும்!

ஒண்ணு தெரிஞ்க்கோங்க!

Nothing is free in the world. Paying for the water and food is better than getting that as free! Because you owe nothing to him then. The account is settled!

கோவி.கண்ணன் சொன்னது…

// நீர் ஓட்டும் கார் கக்கும் கார்பன் மோனாக்சைடு உயிர் தப்ப முடியாதபடிக்கு உமக்கே பெரிய ஆப்பு வைக்கும்//

டயனசர்களையும், ஐஸ் ஏஜ் விலங்குகளையும் எந்த அறிவியல் அழித்தது என்று தெரியவில்லை, ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்க முடியுமா ? என்று அறிவியலாளர்கள் முயற்சிக்கிறார்கள்,

பசுமை புரட்சி பற்றி இணையத்தில் தேடிப்பார்க்கவும், பெருகிய மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளும், விவசாய எந்திரங்களும் இல்லை என்றால் இன்றைய மக்கள் தொகையில் பாதிக்குமேலானவர்கள் பசியால் என்றோ பரலோகம் போய் இருப்பார்கள். தவிர இன்றைய சூழலில் இருக்கும் மக்களின் துணித்தேவையையாவது விஞ்ஞான வளர்ச்சி இன்றி ஈடு செய்திட முடியுமா என்று எண்ணிப்பார்க்கவும், விதண்டாவாதமாக எல்லாம் முன்னால் நல்லா தான் இருந்தது இப்போ போச்சு என்று முறையோன்னு ஓலமிடுவர்களில் பலர் மன்னர் ஆட்சியில் நாடுகளெல்லாம் காடுகளை அழிக்காமல் தானாகவே உருவானது என்றே நம்புகிறார்கள்.

இரண்டு மாடிகளுக்கு நடுவே கயிற்றின் மேல் நடப்பவன் எளிதாக நடப்பது போல் நமக்கு தெரியும், கீழே விழுந்தால் மரணம் என்கிற அச்சம் அவனுக்கு போய் இருக்கும் அவ்வளவு தான். நீங்கள் பார்க்காத காலத்தில் மக்கள் சுபிட்சமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று நம்புவதும் அப்படித்தான், அவர்களுக்கு தாங்கள் துன்பப்படுகிறோம் என்ற உணர்வே இருந்திருக்காது. இன்னிக்கு கிராமங்களில் துண்டை கக்கத்தில் கட்டிக் கொண்டு காலில் செருப்பில்லாமல் கும்பிடுறேன் சாமி என்று கூழை கும்பிடுபோடுபவர்கள் உண்டு, அவர்களை பணிவானவர்கள் என்று சொல்லமுடியாது, மானம் என்றால் என்ன என்கிற உணர்ச்சி முற்றிலும் அழிக்கப்பட்டவர்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இராமயண காலத்தில் கெமிக்கல் வெப்பன்ஸ் இருந்தது என்றால் நம்புவீர்கள், அது அவையெல்லாம் இயற்கை மூலப் பொருள்களால் ஆனது என்று சொல்லத்துணிவீர்கள, என்னது இராமயணத்தில் கெமிக்கல் வெப்பன்ஸா ? என்று வியப்படையாதீர்கள், லட்சுமணன் மூர்ச்சை அடைந்தது எதனால் அனுமார் ஏன் சஞ்ஞீவி மலையை பெயர்த்து வந்தார் ? என்று சிந்திக்கவும்.

:)

திறந்த 'வெளிக்கு' போனோம், இப்ப முடியவில்லை என்று விஞ்ஞானத்தை குறை சொல்லாதீர்கள், தேவைகள் மிகும் பொழுது இயற்கைதான் மனிதனுக்கு அறிவியலையும், அதன் அறிவையும் வழங்குகிறது.

வெறென்ன சொல்ல ?

வருண் சொன்னது…

***// நீர் ஓட்டும் கார் கக்கும் கார்பன் மோனாக்சைடு உயிர் தப்ப முடியாதபடிக்கு உமக்கே பெரிய ஆப்பு வைக்கும்//***

கார்பன் மோனாக்ஸைட்னு இவருக்கு சொல்லிக்கொடுத்தது விஞ்ஞானி. அது விஷ வாயுனு சொல்லிக் கொடுத்தது விஞ்ஞானி! கார்பன் னா என்ன? ஆக்ஸிஜன்னா என்ன? கார்பன் மோனாக்ஸைனா என்ன கார்பன் டைஆக்ஸைனா என்ன? எலக்ட்ரான் என்றால் என்ன? எல்லா மண்ணாகட்டியும் சொல்லிக் கொடுத்தது அறிவியல் மற்ரும் அறிவியலாளன்.

இவரு வந்துட்டாரு விஞஞானத்தை விமர்சிக்க வெட்கமே இல்லாமல், ஆப்பூ, கீப்புனு வார்த்தை ஜாலங்களுடன்!!!

தூங்கிறவனை எழுப்பலாம்!

Jayadev Das சொன்னது…

\\கார்பன் மோனாக்ஸைட்னு இவருக்கு சொல்லிக்கொடுத்தது விஞ்ஞானி. அது விஷ வாயுனு சொல்லிக் கொடுத்தது விஞ்ஞானி! கார்பன் னா என்ன? ஆக்ஸிஜன்னா என்ன? கார்பன் மோனாக்ஸைனா என்ன கார்பன் டைஆக்ஸைனா என்ன? எலக்ட்ரான் என்றால் என்ன? எல்லா மண்ணாகட்டியும் சொல்லிக் கொடுத்தது அறிவியல் மற்ரும் அறிவியலாளன்.\\ அதாவது வீட்டை உடைச்சி அதில் இருக்கும் நகை பணம் எல்லாத்தையும் அடிச்சிட்டு, திருடன் நான் தான் அப்படின்னு சொல்லிட்டா அவன் "ரொம்ப நல்லவன்" ன்னு அர்த்தம் அப்படித்தானே? இது நல்லாயிருக்கே!

Jayadev Das சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Jayadev Das சொன்னது…

\\ஒண்ணு தெரிஞ்க்கோங்க!

Nothing is free in the world. Paying for the water and food is better than getting that as free! Because you owe nothing to him then. The account is settled! \\ எங்க ஊரில் எந்த கிணற்றுக்கு சென்றாலும் வேண்டிய அளவு நீரை எடுத்துக் கொண்டு வரலாம் யாரும் எதுவும் மாட்டார்கள். தண்ணீரை எடுத்ததால் அததற்கு நீ கடன் பட்டாய் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். Water was free because it was available in plenty. சவூதி அரேபியாவில் தண்ணீர் லிட்டருக்கு பத்து ரூபாய் என்று படித்ததுண்டு. ஒரு போதும் நம்மூரில் அதே மாதிரி தண்ணீரை விற்ப்பார்கள் என்று கனவிலும் எண்ணியதில்லை. தற்போது இங்கே லிட்டர் 15 ரூபாய்!! இதே மாதிரி முன்னர் உணவு எங்கேயும் தாரளமாக கட்டணமின்றி வழங்கப் பட்டு வந்தது. சத்திரங்கள் இருக்கும், யார் வேண்டுமானாலும் தங்கலாம் என கதைகளில் படிக்கிறோம். அப்போது உணவு ஒரு காலத்தில் விற்கப் படும் என்று யாரோ சொன்னால் அட அப்படியா என்று அதிசயமாக கேட்ட காலமும் இருந்திருக்கிறது. தற்போது உணவு விற்கும் கடைகள் பெரிய பிசினஸ் ஆகி விட்டது. அடுத்து தற்போது தண்ணீர் பெரிய இலாபம் தரும் வியாபாரம். துன்பம் இத்தோடு முடியவில்லை தற்போது சீனாவில் ஒரு டப்பாவில் தூய காற்றை விர்க்கிரார்கலாம் விரைவில் காற்றுக்கும் காசு கொடுப்பீர்களோ என்னவோ. அப்போது "நாங்க எல்லாம் காற்றை இலவசமாகவே சுவாசிச்சோம்" என்றால், கேட்பவர்கள் அப்படியா என்று வாயைப் பிளக்கக் கூடும் நீங்கள் அதையும் அறிவியலில் சாதனையாக சொல்லி அதுக்கு சிங்க...ஜாக் என ஜால்ரா அடிக்கலாம்.

வருண் சொன்னது…

உங்களை யாருங்க இந்தத்தண்ணிய நீங்க வாங்கி குடிச்சே ஆகணும்னு சொன்னா?

வீட்டிலிருந்து மண்பாணையில் உங்க கிணற்றுத்தண்ணியை வைத்துக் கொண்டு ஒரு மாட்டுவண்டில உக்காந்துகொண்டு "தேவுடா தேவுடா"னு பாடிக்கிட்டு காசி, ராமேஸ்வரமெல்லாம் போனால் எவன் என்ன சொல்ல முடியும்?

உங்களை, காரைபயன்படுத்தணும், கணிணியை பயன்படுத்தணும்னு யாஅரும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்களாப் போயி கணிணி வாங்குறீங்க, ஆண்லைன் வர்ரீங்க, இதுபோல் பழமைவாதினு புதிய புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி கலந்துரையாடல் எல்லாம் செய்றீங்க்.

இது பரந்த உலகம். இன்னும் காடுகள் எல்லாம் அழியாமல் இருக்கு. போதிமரம் ஒண்ணு தேடிப் போயி மெடிட்டேஷன் செய்தால் எவனும் "என்னனு" கேக்கமாட்டான்.

It's your life, you could live as it pleases you! :)

வேகநரி சொன்னது…

மணி வண்ணன் -//சிறந்த ஈழப்பற்றாளர். அவரது உடலில் புலிக் கொடி. அம்மா ஆட்சியில் இல்லை என்றால் அதற்கும் வாய்ப்பிருக்காது//
தேசப்பற்றாளர், தமிழ்பற்றாளர்கள் இனபற்றாளர்கள் சரி.அது என்ன ஈழப்பற்றாளர் கோவி? நீங்க இந்தியாவில் இருந்து போனாலும் சிங்கபூர் நாட்டுகாரர் தான். நீங்க சிங்கபூர்பற்றாளர் என்பதை புரிஞ்சுக்கலாம்.
நாம் தமிழர் கட்சி கொடியை போர்த்துவது அந்த கட்சியை சேர்ந்தவருக்கு நியாயம். ஆனால் இலங்கை எல்ரிரிஈ கொடியை போர்த்துவதெல்லாம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தன்னை பாகிஸ்தான்பற்றாளர் என்பதும் தனக்கு பாகிஸ்தான் கொடியை போத்துவதற்கும் எந்த வேறுபாடுமில்லை. இப்படியெல்லாம் இந்தியாவை தவிர வேறெங்கும் நடக்காது.

பெயரில்லா சொன்னது…

//ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் சக்தியை பறவைகள் இயல்பில் பெற்றுள்ளன. எனவே இயற்க்கை தரவில்லை என்பது தவறு அது உமக்குத் தேவையில்லை என்பது தான் உண்மை. மனிதனைத் தவிர மற்றவை எதுவும் வீடு கட்டுவதில்லை மழையில் நனைகின்றன, அந்த இனம் ஒன்றும் அழிந்து விடவில்லை.//

மனிதனை மிருகங்களோடு ஒப்பிடுகின்றீரே, என்ன மனிதனைய்யா நீர்? மிருகங்கள் மழையில் நனையும் தான். அதேபோல், ஒரு மிருகம் தன்னை பெற்ற தாயிடமே xxx "அது " பண்ணும். உம்மால் முடியுமா? கொஞ்சம் விட்டால் கற்கால மனிதனை போல் இதையும் encourage பண்ணுவீர் போல் தெரிகிறதே.

Jayadev Das சொன்னது…

\\மனிதனை மிருகங்களோடு ஒப்பிடுகின்றீரே, என்ன மனிதனைய்யா நீர்? \\ அமாமம், மிருங்கங்களை அந்த அளவுக்கு மட்டம் தட்டி கேவலப் படுத்தக் கூடாது, தவறுதான்.


\\அதேபோல், ஒரு மிருகம் தன்னை பெற்ற தாயிடமே xxx "அது " பண்ணும். உம்மால் முடியுமா?\\ ஒரு பசு கருவுற்றிருந்தால், அதன் மீது காளை புணராது, மிருகம், பறவை என மனிதனைத் தவிர மற்றவை, தேவைக்கு மீறி உண்ணாது, சேர்த்து வைக்காது, தன்னுடைய இனத்தை தானே அழிக்காது. பசியில்லாத சிங்கத்தின் பக்கத்தில் மான் சென்றால் கூட அது ஒன்றும் செய்யாது. இப்படி எவ்வளவோ நாகரீகம் மிருங்கங்களுக்கு உண்டு. அடேய் மனிதா, நீ 90 வயதில் சாகப் போகும் போதும் உன் சுவிஸ் பேங்கில் முப்பாதாயிரம் கோடி இருக்கனுமாடா? அந்த பணம் ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணம். அதனால் எத்தனை ஏழைகள் சாவார்கள் தெரியுமாடா? டெல்லி பேருந்தில் நீ பெண்ணுக்கு செய்த கொடுமையை எந்த மிருகமாவது பெண் மிருகத்துக்கு செயுமாடா?

டேய் வெறி பிடித்த மனிதா உன்னை மிருகத்தோடு ஒப்பிட்டால் அதை விட கேவலம் அந்த மிருகத்து வராதுடா. தூ................

பெயரில்லா சொன்னது…

//டேய் வெறி பிடித்த மனிதா உன்னை மிருகத்தோடு ஒப்பிட்டால் அதை விட கேவலம் அந்த மிருகத்து வராதுடா. தூ................ //

ஹா....ஹா....ஹா.....நல்ல காமெடி. நான் சொன்ன அர்த்தமே வேறு. நீர் புரிந்துகொண்டது வேறு. 2013-இல் வாழ்கிற நாங்கள் சொன்னால், மனதளவில் கற்காலத்தில் வாழ்கிற உமக்கு புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இருக்காது.

பெயரில்லா சொன்னது…

//டெல்லி பேருந்தில் நீ பெண்ணுக்கு செய்த கொடுமையை எந்த மிருகமாவது பெண் மிருகத்துக்கு செயுமாடா?//

சின்னபிள்ளதனமா பேசுகிறீரே!!!!! எதோ ஒரு நாய்க்கு பொறந்த பொறம்போக்கு செய்த குற்றத்திற்கு ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஏன்யா வம்புக்கு இழுக்குரீர்?
எதோ ஒரு அர்ச்சகர் சாமி கருவறையில் செய்த குற்றத்தை, அந்த ஒட்டுமொத்த ஜாதியும் செய்கிறது என்று கூறினால் நீர் ஒத்துகொள்வீரா?

பெயரில்லா சொன்னது…

//ஒரு பசு கருவுற்றிருந்தால், அதன் மீது காளை புணராது, மிருகம், பறவை என மனிதனைத் தவிர மற்றவை, தேவைக்கு மீறி உண்ணாது, சேர்த்து வைக்காது, தன்னுடைய இனத்தை தானே அழிக்காது. பசியில்லாத சிங்கத்தின் பக்கத்தில் மான் சென்றால் கூட அது ஒன்றும் செய்யாது. இப்படி எவ்வளவோ நாகரீகம் மிருங்கங்களுக்கு உண்டு. அடேய் மனிதா, நீ 90 வயதில் சாகப் போகும் போதும் உன் சுவிஸ் பேங்கில் முப்பாதாயிரம் கோடி இருக்கனுமாடா? அந்த பணம் ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணம். அதனால் எத்தனை ஏழைகள் சாவார்கள் தெரியுமாடா? டெல்லி பேருந்தில் நீ பெண்ணுக்கு செய்த கொடுமையை எந்த மிருகமாவது பெண் மிருகத்துக்கு செயுமாடா?

டேய் வெறி பிடித்த மனிதா உன்னை மிருகத்தோடு ஒப்பிட்டால் அதை விட கேவலம் அந்த மிருகத்து வராதுடா. தூ................ //


சரி உம்முடைய வாதத்தின் படியே வருகிறேன். தமிழ்நாட்டில் ஒரு பையன் இருக்கிறான் என்று வைத்துகொள்ளும். அவன், நீர் சொன்ன இயற்கையின் படி வாழ்கிற ஒரு மனிதன். அவன் தன் தேவைக்கு மீறி உன்னமாட்டான். சேர்த்து வைக்க மாட்டான். அவன் தன் இனத்தை அழிக்க மாட்டான். பசி இல்லாதபோது வேறு மிருகத்தை கொள்ள மாட்டான். இப்படி நீர் மெச்சுகிற இயற்கையான அனைத்தையும் செய்கிறான். தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே. இப்படிப்பட்ட சுத்தமான இயற்கையான பையனுக்கு உம் பொண்ணை திருமணம் செய்து கொடுப்பீரா????????????????

சொல்லுமையா சொல்லும்.

பார்த்தி சொன்னது…

ஒவ்வொரு கோயில்களிலும் லட்சம் முதல் கோடி வரை புரல்கிறது. சில சாமியார்கள் கோடி கணக்கான பணம் வைத்துக்கொண்டு (அனைத்தும் அப்பாவி மக்களிடம் அவர்கள் அறியாமையை பயன்படுத்தி புடுங்கிய பணம்) சுகபோகமாக வாழ்கின்றனர் (சொகுசு கார்கள் வேறு). இப்படி இவர்களுக்கு வரும் பணத்தை நல்ல காரியத்திற்கு பயன்படுத்துவதாக தெரியவில்லை. முதலில் இந்த கடவுளையும் சாமியாரையும் துரத்திவிட்டு பின் அறிவியலை துரத்தலாம்.

Jayadev Das சொன்னது…

\\தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே.\\ இதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீறோ தெரியவில்லை. ஒருவேளை......... சரி வேண்டாம் விட்டுத் தள்ளும்.

\\எதோ ஒரு நாய்க்கு பொறந்த பொறம்போக்கு செய்த குற்றத்திற்கு ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஏன்யா வம்புக்கு இழுக்குரீர்?\\ what is reported is just the tip of the iceberg. தெரிஞ்சது ஒன்னே ஒன்னு. வெளிச்சத்துக்கு வராத கொடுமைகள் எத்தனை ஆயிரமோ?

வருண் சொன்னது…

**** Jayadev Das கூறியது...

\\தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே.\\ இதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீறோ தெரியவில்லை. ஒருவேளை......... சரி வேண்டாம் விட்டுத் தள்ளும்.****

நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.

மிருகம்னா என்ன? அது என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..

இதையே ஏன் சொல்கிறீர்னு உண்மையைச்சுட்டிக்காட்டும் எங்களை அயோக்கியன் போலவும் மிருகத்தின் குணமறியாமல் அறியாமையில் வாழும் நீங்கள், இப்படியெல்லாம் குதற்கமாக சுட்டிக்காட்டி யோக்கியன் பட்டம் பெறமுடியாது! என்பதை தெளிவாக புரிந்துகொள்ளணும் நீங்க!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

***what is reported is just the tip of the iceberg. தெரிஞ்சது ஒன்னே ஒன்னு. வெளிச்சத்துக்கு வராத கொடுமைகள் எத்தனை ஆயிரமோ?***

அதேபோல்தான் மிருகங்களும்! அவைகள் வாழ்க்கை முறைகள் தெரியாமல் அறியாமையில் நீங்க வாழ்ந்துகொண்டு இருக்கீங்க!

உங்க பழைய பொறகாலத்தில், ஒரு சில சாதிப் பெண்கள் மேலாடை அணிக்கூடாதுனு சொல்லி அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்க்கிற ஈனக்கலாச்சாரம்தான் உங்க பழமையான கலாச்சாரம்னு தெரிந்து கொள்ளுங்க!

காசிக்கு போறவர எல்லாமே ஃப்ரீ என்றும் பிதற்றும் நீங்கள், தென் தமிழ்நாட்டில் நடந்த, உங்க பழமைவாதிதிகள் புடுங்கிய புடுங்கையும் பற்றியும் அறிந்து கொண்டு உங்க அறியாமையைப் போக்குது நலம்!

Jayadev Das சொன்னது…


\\நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.

மிருகம்னா என்ன? அது
\\நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.

மிருகம்னா என்ன? அது என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..\\ எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது தான் ஆறறிவு கொண்டவன் செய்யணும் அதை விட்டுட்டு ஏழாம் அறிவு பகுத்தறிவு, பன்னாடை அறிவு எல்லாம் இருப்பதாக சொல்லிட்டு மிருகத்திலும் கீழ்த் தரமா நடப்பதால் என்ன பயன்? என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..\\ எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது தான் ஆறறிவு கொண்டவன் செய்யணும் அதை விட்டுட்டு ஏழாம் அறிவு பகுத்தறிவு, பன்னாடை அறிவு எல்லாம் இருப்பதாக சொல்லிட்டு மிருகத்திலும் கீழ்த் தரமா நடப்பதால் என்ன பயன்?

Jayadev Das சொன்னது…

\\உங்க பழைய பொறகாலத்தில், ஒரு சில சாதிப் பெண்கள் மேலாடை அணிக்கூடாதுனு சொல்லி அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்க்கிற ஈனக்கலாச்சாரம்தான் உங்க பழமையான கலாச்சாரம்னு தெரிந்து கொள்ளுங்க!

காசிக்கு போறவர எல்லாமே ஃப்ரீ என்றும் பிதற்றும் நீங்கள், தென் தமிழ்நாட்டில் நடந்த, உங்க பழமைவாதிதிகள் புடுங்கிய புடுங்கையும் பற்றியும் அறிந்து கொண்டு உங்க அறியாமையைப் போக்குது நலம்! \\அன்றைக்கு ஏதோ ஓரிரு அநியாயங்கள் நடந்திருக்கலாம் இன்றைக்கு கடவுள் இல்லை என்பவன் அடித்த கொள்ளையோ கொள்ளையில் மொத்த பெண்களின் சேலையையும் உருவி விட்டான், விளைவு போகப் போகத் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

தாஸ்,

அறிவியல் என்றா எதோ இயந்திரங்களைப் பயன்படுத்தி இயற்கையை அழிப்பது என்பது மட்டும் தான் என்பது போல் நீங்கள் தொடர்ந்து வாதங்களை வைத்ததால் நான் சளிப்படைந்து விவாதம் செய்வதை நிறுத்திவிட்டேன். மனிதன் இயற்கையை எதிர்க்கத் துவங்கியது முதல் அறிவியல் துவங்குகிறது, ஆடை இல்லாமல் தான் பிறந்தோம் பின்பு ஏன் ஆடை அணிகிறோம், நான் இயற்கையாக வாழ்கிறேன் என்று இருந்து இருந்துவிட முடியுமா ? இனப்பெருக்க சுழற்சிக்காக தாவரங்கள் வழங்கும் காய்கறிகளை அப்படியே உண்ணாமல் மரங்களை வெட்டி விறகாக்கி அதனை ஏன் நாம் சமைத்து உண்ணுகிறோம் ? மரங்களை வெட்டுவதும் (உடனே சுள்ளி பெருக்கி அடுப்பு எரிப்பதற்கு சென்றுவிடாதீர்கள்) அதனை கொளுத்துவதும் கூட அது எவ்வளவு சிறிய அளவென்றாலும் அதுவும் பாதிப்பே. விலங்குகளைப் போல் அனைத்து சூழலிலும் ஆடை இல்லாமல் மனிதன் வாழ முடியாது, என்பதற்காக மரபட்டையை மனிதன் அணிந்து கொண்டான், அத்துடன் முடிந்திருந்தால் நாம் பருத்தி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, அந்த மரப்படையும் தானாக உறிந்து விழுந்து எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வில்லை மனிதன், மரத்தில் இருந்து பெயர்த்து தான் எடுத்திருப்பான், ஒரு வேலை இலை ஆடையை நீங்கள் பரிந்துரைத்தாலும் பச்சை இலையை மரத்தில் இருந்து பறிப்பது மரத்திற்கும் கேடு, காய்ந்து விழுந்த இலையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்டால், அதுவும் மரத்திற்கான அடிஉரம், அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் மரத்திற்கான சத்தும் மரத்திற்கு கிடைக்காது.

இன்றைய அறிவியல் என்பது மின்சாரத்தின் மூலம் திறன் மாற்றி முன்பு செய்து கொண்டிருந்தவற்றை மாறிவரும் மக்கள் தொகைக்கேற்ப உற்பத்திப் பெருக்கத்திற்காக ஏற்படுத்திக் கொண்டது, அதற்கான அறிவையும் வழங்கியது இயற்கை தான், திடிரென்று ஞானம் வந்தது போல் அறிவியலே அழிவுக்கு காரணம் என்றால் மிகப் பெரிய கோபுரங்களையெல்லாம் எதனை அழித்துக் கட்டினார்கள் ? அதுவும் எதையாவது அழித்து உருவாக்கியவையே, நவீன எந்திரங்கள் அவர்கள் கையில் கிடைத்திருந்தால் நாம் இன்று பார்ப்பது போல் மிகப் பெரிய வழிபாட்டுத் தளங்களை லட்சக்கணக்கில் பார்த்திருக்க முடியும், மனிதன் சந்தர்பத்திற்காக காத்திருப்பவன், அந்த வாய்ப்பு அவனுக்கு இந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாய்திருக்கிறது, அதற்கு முன்பு இருந்தவர்கள் இன்றைய் அறிவியலின் அழிவு தெரிந்து தான் அவற்றை கண்டுபிடிக்காமல் எல்லாம் கைவினையாகவே செய்தார்கள் என்ற எண்ணம் நீங்கள் கொண்டிருந்தால் இந்த விவாதத்தில் நான் உங்களுக்கு எழுதிய அனைத்தும் வீன்.

Unknown சொன்னது…

Selvaraj (proxy bastard), All your comments go to your real father Deva nathan,kanchipura.

Show your comments to your momm and daddy , they will be delighted to replay your birth !!

Jayadev Das சொன்னது…

@ கோவி.கண்ணன்


உலகத்தில் ஓடும் வாகனங்களில் கார்பன் மோனாக்சைடு, அதன் தீய விளைவுகளும் சுள்ளி, விறகு எரிப்பதால் ஏற்ப்படும் விளைவுகளும் ஒன்றா? உருகும் பணியால் உயரும் கடல் மட்டம், அணு உலைகளால் ஏற்ப்பட்டுள ஆபத்து, அமில மழை நிலம், நீர் காற்று எல்லாம் பாழ்................ இதையெல்லாம் சுள்ளி பொருக்கி எரித்ததொடு ஒப்பிடுவது சரியா?

பருத்தி பட்டு துணிகளாலும் பண்டைய சாய முறைகளாலும் நொய்யல் ஆறு உருவாகியதா என்ன?

\\அதற்கு முன்பு இருந்தவர்கள் இன்றைய் அறிவியலின் அழிவு தெரிந்து தான் அவற்றை கண்டுபிடிக்காமல் எல்லாம் கைவினையாகவே செய்தார்கள் என்ற எண்ணம் நீங்கள் கொண்டிருந்தால்\\ கருத்து திணிப்பு வேண்டாம் அவர்கள் அறியாமையில் வாழ்ந்த வாழ்வே மேல், ஏனெனில் அறிவியல் செய்திருப்பது தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்த்தது. மொத்தமா கூண்டோட கைலாசம் போக வேண்டியதுதான் .

சில நூறு வருடங்களுக்கு முன்னர் எங்கோ சிலரை துன்பப் படுத்தியதற்காக குதியாய் குதிக்கும் உங்களைப் போன்றோர், ஜப்பானில் குண்டு போட்டதையும் மேலே சொன்ன வகையில் மொத்த இனத்தையும் தீத்துக் கட்டிய புண்ணியத்தை தேடிக் கொண்ட அறிவியலுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையிலும் வேடிக்கை. உங்களுக்கு உண்மை தேவையில்லை உங்களது வறட்டு வாதமே உங்களுக்கு முக்கியம். This is unfortunate.


நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.

பெயரில்லா சொன்னது…

சிறப்பாக எழுதுகிறீர்கள். பல நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருகிறேன் . உங்கள் தளத்தில் உரையாடுவோர் பலரும் நல்ல தர்க்க அறிவோடு உள்ளனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.//

வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.

நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ?

குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள்.

இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டி

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.//

வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.

நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ?

குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள்.

ஒருவேளை இயந்திரங்களே இல்லை என்றால் இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டியில் பயணம் செய்தால் இயற்கையை காப்பற்றலாம் என்று கூறி எத்தனை பேருக்கு நெடும் தொலைவு பயண வாய்ப்பை உங்களால் பெற்று தரமுடியும் ? நிலாவில் பாட்டி வடை சுடும் கதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் இயற்கையை வாழ வைத்திருக்காலம் அதை தாண்டி நிலவு சென்றதால் தான் மனிதன் இன்று துன்பப்படுகிறான் என்று நீங்கள் நம்புங்கள்.

அறிவியல் இல்லை என்றால் அறுவை சிகிச்சைக்குக் கூட வாய்ப்பிருந்திருக்காது, பழங்காலத்தில் மக்கள் வாழவில்லையா ? என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், பிறவியிலேயே கண் தெரியாவதர்களுக்கு அழகான ஓவியம் குறித்து விளங்கிக் கொள்ள வாய்பிருந்திருக்கவில்லை என்றே கூற முடியும், இருட்டுக்கு பயந்தே மனிதன் பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு இருந்தான், மூன்று கால் உள்ள முயல் கூட நொண்டி நொண்டி ஓடும், அதற்காக முயலுக்கு நான்கு கால்கள் தேவையற்றது என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனம்.

அறிவியலுக்கான ஆற்றலை விண்ணில் இருந்து கொண்டு வரவில்லை, அவற்றை குவித்து பிரிதொரு ஆற்றலாக பயன்படுத்துகிறார்கள், அதனால் உற்பத்தி திறன் மற்றும் பல்வேறு வசதி வாய்ப்புகளை பெருக்கியுள்ளனர், ஜப்பான் மீது அணுகுண்டு போட்டுவிட்டான் என்பதே உங்கள் ஆதங்கள், ஜப்பான் மீது அணுகுண்டு போடவில்லை என்றால் அவனது நாடுபிடிக்கும் பேராசை நாசமாகி இருக்காது, ஆக ஒரு அழிவின் மூலம் அவர்களை அடக்க பயன்பட்டது அறிவியல். ஜப்பான் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் / அவன் செய்த கொடுமைகள் குறித்து சயாம் மரண ரயில் என்கிற நூல் கிடைத்தால் வாங்கிப்படிக்கவும், கூடவே ஹிட்லரின் ஆட்சியையும் அறிவியல் ஆயுதம் துணை கொண்டு தான் வெற்றிபெற்றார்கள் என்று உங்கள் அடுத்த வாதத்தை வைக்கவும்.

இருதய மாற்றுசிகிச்சை, மூளைச் சாவில் இறந்தவர்களின் உறுப்புகளை அது தேவைபடுபவர்களுக்கு பயன்படுத்துதல் என்று எவ்வளவோ அறிவியல் புரட்சியும் மனித வாழ்நாள் நீட்டிப்பிற்கும் மனித அறிவியலை நன்றியுடனேயே பார்க்கிறான், நீங்கள் அணுகுண்டைப் பிடித்து தொங்குகிறீர்கள், உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு இயற்கை அழித்த உயிரினங்களைவிட அறிவியல் காலத்தில் நடக்கும் அழிவுகள் குறைவு காரணம் அறிவியல் அதனை முன்கூட்டியே எச்சரிக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையே அழிவிற்கும் துணைபோன பொழுது என்ன விதமான சுற்றுச் சூழல் பாதிப்பில் இருந்தது ? லெமுரியா அழிந்த பொழுது எந்த அறிவியல் சாதனம் அதற்கு துணையாக இருந்தது ?

மனிதனின் பேராசையால் அறிவியலும் கருவியாகிறதன்றி, அறிவியலே சென்று நானே முடிவெடுத்து அழிக்கிறேன் என்று கிளம்பிவிடவில்லை.

Jayadev Das சொன்னது…

\\வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.\\ அப்படியா ? இப்போ யாரும் புயல், சுனாமியால் சாவதே இல்லையா ? இப்போ வடமாநிலங்களில் அடிச்ச மழையால் ஆயிரம் பேருக்கும் மேல் காலியாமே?


\\நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ? \\ நீங்க யோசிக்கவே மாட்டீங்களா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா தெரியலை. இந்த பிரச்சனைகளை உயிர் தோன்றியதில் இருந்து இருநூறு வருஷம் முந்தி வரை எப்படி சமாளிச்சாங்க யோசிங்க. மனித இனம் அழிந்து போச்சா என்ன?


\\குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், \\ தற்போதும் குழந்தை இல்லாதோர் எண்ணற்றோர் உள்ளனர் என்ன பண்ணப் போறீங்க? முக்கியமா மலடாவதர்க்கு காரணமே ரசாயன உராங்களும் பூச்சி மருந்துக்களும்தான். சொல்லப் போனால் செயற்கை கருத்தரிப்புக்கு போவதே இந்த மாதிரி விந்து குறைவதால் தான். [பெண்கள் பிரச்சினை வேறு].


\\நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள்.\\ அறிவியலால் நன்மை போலத் தெரிவது நன்மையே அல்ல ஆனால் வெளிப்படையாக விளம்பரப் படுத்தப் படுகிறது ஆது மனித குலத்துக்கும் புவி உயிரினத்துக்கும் மொத்தமாக வைத்த ஆப்பு மறைக்கப் படுகிறது. இது போல படித்தவர்கள் ஏமாற்றும் வேளையில் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டம்.

Jayadev Das சொன்னது…

\\ஒருவேளை இயந்திரங்களே இல்லை என்றால் இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டியில் பயணம் செய்தால் இயற்கையை காப்பற்றலாம் என்று கூறி எத்தனை பேருக்கு நெடும் தொலைவு பயண வாய்ப்பை உங்களால் பெற்று தரமுடியும் ?\\அந்த காலத்தில் இந்தியா முழுவதும் நடந்து போக முடிந்திருக்கிறது வேறு என்ன வேண்டும்?


\\நிலாவில் பாட்டி வடை சுடும் கதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் இயற்கையை வாழ வைத்திருக்காலம் அதை தாண்டி நிலவு சென்றதால் தான் மனிதன் இன்று துன்பப்படுகிறான் என்று நீங்கள் நம்புங்கள். \\ நிலவுக்கு போனார்களா என்பதே விவாதத்துக்குரியது அப்படியே போயிருந்தாலும் அதனால் என்ன நன்மையோ, அங்கிருந்து கொண்டு வந்தது என்னவோ?

\\அறிவியல் இல்லை என்றால் அறுவை சிகிச்சைக்குக் கூட வாய்ப்பிருந்திருக்காது, பழங்காலத்தில் மக்கள் வாழவில்லையா ? என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், பிறவியிலேயே கண் தெரியாவதர்களுக்கு அழகான ஓவியம் குறித்து விளங்கிக் கொள்ள வாய்பிருந்திருக்கவில்லை என்றே கூற முடியும், இருட்டுக்கு பயந்தே மனிதன் பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு இருந்தான், மூன்று கால் உள்ள முயல் கூட நொண்டி நொண்டி ஓடும், அதற்காக முயலுக்கு நான்கு கால்கள் தேவையற்றது என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனம்.\\ அறிவியலால் பெற்றது என்ன இழந்தது என்ன என்று கூட்டி கழித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். முன்னர் ஒரு பெண் அயராமல் பத்துக்கும் மேல் பிள்ளை பெறுவாள் தற்போது ஒரே பிள்ளை அதுவும் செயக்கை கருவூட்டலில் அப்புறம் வயிற்ற்றை கிழித்து இது முன்னேற்றமா? அவள் முப்பது மைல் கைக்குழந்தை விறகுச் சுமையுடன் நடப்பாள் இப்போ காபி குடிச்சதுக்கு ரெஸடு எடுப்பால் இதெல்லாம் முன்னேற்றமா?

\\அறிவியலுக்கான ஆற்றலை விண்ணில் இருந்து கொண்டு வரவில்லை, அவற்றை குவித்து பிரிதொரு ஆற்றலாக பயன்படுத்துகிறார்கள், அதனால் உற்பத்தி திறன் மற்றும் பல்வேறு வசதி வாய்ப்புகளை பெருக்கியுள்ளனர், \\ கண்ணை விற்று ஓவியம் வாங்கிய கதை இது.

\\ஜப்பான் மீது அணுகுண்டு போட்டுவிட்டான் என்பதே உங்கள் ஆதங்கள், ஜப்பான் மீது அணுகுண்டு போடவில்லை என்றால் அவனது நாடுபிடிக்கும் பேராசை நாசமாகி இருக்காது, ஆக ஒரு அழிவின் மூலம் அவர்களை அடக்க பயன்பட்டது அறிவியல்.\\ ஒரு நாட்டின் அரசு செய்த தவறுக்கு அதன் அப்பாவி மக்களைக் கொள்வதா? கொஞ்சமாவது ஈவு இறக்கம் உமது நெஞ்சில் இருக்காதா?

\\கூடவே ஹிட்லரின் ஆட்சியையும் அறிவியல் ஆயுதம் துணை கொண்டு தான் வெற்றிபெற்றார்கள் என்று உங்கள் அடுத்த வாதத்தை வைக்கவும்.\\ ஹிட்லர் ஆட்டம் போடவும் அதே அறிவியல் ஆயுதம் உதவியிரூக்கே?

\\இருதய மாற்றுசிகிச்சை, மூளைச் சாவில் இறந்தவர்களின் உறுப்புகளை அது தேவைபடுபவர்களுக்கு பயன்படுத்துதல் என்று எவ்வளவோ அறிவியல் புரட்சியும் மனித வாழ்நாள் நீட்டிப்பிற்கும் மனித அறிவியலை நன்றியுடனேயே பார்க்கிறான்,\\ இதை நீட்டுவான் அடுத்த ஐம்பது வருஷத்தில் எல்லாம் சாம்பல் ரொம்ப பேஷா இருக்கு.


\\உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு இயற்கை அழித்த உயிரினங்களைவிட அறிவியல் காலத்தில் நடக்கும் அழிவுகள் குறைவு காரணம் அறிவியல் அதனை முன்கூட்டியே எச்சரிக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையே அழிவிற்கும் துணைபோன பொழுது என்ன விதமான சுற்றுச் சூழல் பாதிப்பில் இருந்தது ? லெமுரியா அழிந்த பொழுது எந்த அறிவியல் சாதனம் அதற்கு துணையாக இருந்தது ?\\ இயற்க்கை அழிவால் எத்தனை கண்டம் அழிந்தாலும் உயிரினம் அழிந்திருந்தாலும் தொடர்ந்து உயிர் வாழ்ந்தே வந்திருக்கிறது. எந்த மடையனாவது ஆற்றி விஷத்தை கலப்பானா? விலை நிலத்தை பிலாட்டாகவே போட்டு விர்ப்பானா, சுவாசிக்கும் காற்றை அழிப்பானா?

\\மனிதனின் பேராசையால் அறிவியலும் கருவியாகிறதன்றி, அறிவியலே சென்று நானே முடிவெடுத்து அழிக்கிறேன் என்று கிளம்பிவிடவில்லை.\\ ஒரு பிரச்ச்சினை என்றால் அதற்குத் தீர்வும் வேண்டும், உமது அறிவியல் பிரச்ச்சினைகளை அழிவை மட்டுமே தரும் தீர்வை அல்ல. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனும் செய்யாது

கோவி.கண்ணன் சொன்னது…

//நிலவுக்கு போனார்களா என்பதே விவாதத்துக்குரியது அப்படியே போயிருந்தாலும் அதனால் என்ன நன்மையோ, அங்கிருந்து கொண்டு வந்தது என்னவோ?
//

நிலாவில் பாட்டி வடை சுட வில்லை என்பது கிரகணத்தின் போது நிலவையும் சூரியனையும் பாம்பு விழுங்கவில்லை என்றாவது தெரிகிறதா இல்லையா ?

//பெண் அயராமல் பத்துக்கும் மேல் பிள்ளை பெறுவாள் // எந்த பெண்ணும் விரும்பி 10 வரை பெற்றுக் கொள்ளவில்லை வாய்ப்பில்லாத்தால் அவர்களுக்கு கையறு நிலை, கூடவே பிரசவ சாவு.

//ஒரு நாட்டின் அரசு செய்த தவறுக்கு அதன் அப்பாவி மக்களைக் கொள்வதா? கொஞ்சமாவது ஈவு இறக்கம் உமது நெஞ்சில் இருக்காதா?//

நாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் ஆட்சி நடத்தப்படுவது, ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் சரியாக இருந்தால் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள், ஜப்பானியர் தவிர்த்து ஏனையோர்களை மனித பிறவியாகவே நினைக்காத ஜப்பான் இரணுவம் தங்கள் மக்களுக்கு மட்டும் தான் உயிர் மற்றெதால் மயிர் என்ற எண்ணத்தை அந்த நிகழ்வின் பிறகு தான் மாற்றிக் கொண்டது. அதில் 10,000 பேட் கொல்லப்படவில்லை என்றால் ஜப்பான் காரன் 100,000 அப்பாவிகளை கொன்றிருபான், ஜப்பான் காரன் கொன்று போட்டது அப்பாவிகளைத்தான் என்பது மட்டும் ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியாமல், ஜப்பான் மக்கள் இறந்தார்கள் என்று பொய்யாக ஒரு நீலிக்கண்ணீர் வடிக்கின்றீர்கள். ஒரு நாடு வெற்றிபெரும் பொழுது அதே அப்பாவி பொது மக்கள் கொண்டாடுவது இல்லையா ? ஈழத்தில் கொல்லப்படும் உயிர்களுக்காக கண்ணீர் வடிக்கும், இராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடாத அப்பாவி சிங்களன் எத்தனை பேர் என்று எண்ணிக்கை தெரிந்தால் சொல்லுங்களேன் எனக்கு ஈவு இரக்கம் பற்றி நான் பிறகு தற்சோதனை செய்து கொள்கிறேன்.

//நீங்க யோசிக்கவே மாட்டீங்களா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா தெரியலை. இந்த பிரச்சனைகளை உயிர் தோன்றியதில் இருந்து இருநூறு வருஷம் முந்தி வரை எப்படி சமாளிச்சாங்க யோசிங்க. மனித இனம் அழிந்து போச்சா என்ன? //

உலகம் தோன்றிய நாளில் இருந்து எந்த காலத்தில் 700 கோடி (ஆணுறைகள் இல்லை என்றால் 1000 கோடி) மக்கள் தொகை இருந்தது என்ற விவரங்களை கொடுத்துவிட்டு பிறகு சொல்லலாமே, நான் சொல்வதே மக்கள் தொகை கணக்கில்லாமல் செல்வதால் தான் அதன் தேவைகளை நிறைவு செய்ய அறிவியலை தேடினான் மனிதன் என்பதே.

Jayadev Das சொன்னது…

\\\நிலாவில் பாட்டி வடை சுட வில்லை என்பது கிரகணத்தின் போது நிலவையும் சூரியனையும் பாம்பு விழுங்கவில்லை என்றாவது தெரிகிறதா இல்லையா ?\\ அவன் தெரியாமல் வாழ்ந்தாலும் நூறு வருஷம் வாழ்ந்திருப்பான். இப்போ தெரிஞ்சு போச்சு. அதனால வாழவே வேண்டியதில்லை மொத்தமா சாவுங்கடா அப்படின்னு சொல்றீங்க, ரைட்டு.

\\எந்த பெண்ணும் விரும்பி 10 வரை பெற்றுக் கொள்ளவில்லை வாய்ப்பில்லாத்தால் அவர்களுக்கு கையறு நிலை, கூடவே பிரசவ சாவு.\\ அந்த உடல் வலிமை எங்கே போச்சு என்பதை உங்க சவுகரியத்துக்கு மூடி மறைக்கிறீங்க. மருத்துவம் வளர்ந்தது என்றால், ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். எத்தனை ஆஸ்பத்திரி வந்தாலும் நோயாளிங்க அதிகரிச்சுகிட்டீதான் போறாங்க எல்லா வியாதிகளும் வரலாது காணாத அளவுக்கு புழுத்து போச்சு, எவனைப் பார்த்தாலும் கேன்சர் என்கிறான், இதற்க்கு பேரு வளர்ச்சியான்னு தெரியலை


\\நாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் ஆட்சி நடத்தப்படுவது, ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.\\ நீங்க சொல்வது தத்துவம். இதுபடி பார்த்தால் அவங்க அங்கே பிறந்ததே பாவம் என்பது போல இருக்கிறது. ஆட்சியாளன் செய்த தவறுக்கு அப்பாவி மக்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள்?

\\மக்கள் சரியாக இருந்தால் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.\\ பல சமயம் இது கைகூடாமல் போகலாம் [தமிழ்நாடு மாதிரி]. சில சமயம் சர்வாதிகாரிகளால் நாடு கைப்பற்றப் படலாம். அப்போதெல்லாம் அப்பாவி மக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள். ஒருத்தன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களை கொலை செய்வது என்ன நியாயமோ தெரியவில்லை.


\\ஜப்பானியர் தவிர்த்து ஏனையோர்களை மனித பிறவியாகவே நினைக்காத ஜப்பான் இரணுவம் தங்கள் மக்களுக்கு மட்டும் தான் உயிர் மற்றெதால் மயிர் என்ற எண்ணத்தை அந்த நிகழ்வின் பிறகு தான் மாற்றிக் கொண்டது. அதில் 10,000 பேட் கொல்லப்படவில்லை என்றால் ஜப்பான் காரன் 100,000 அப்பாவிகளை கொன்றிருபான், ஜப்பான் காரன் கொன்று போட்டது அப்பாவிகளைத்தான் என்பது மட்டும் ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியாமல், ஜப்பான் மக்கள் இறந்தார்கள் என்று பொய்யாக ஒரு நீலிக்கண்ணீர் வடிக்கின்றீர்கள். \\ கொலை யார் செய்தாலும் கொலைதான். உமது அறிவியல் உதவியால் அப்பாவிகளும் கொள்ளப் படுகிறார்கள், mass killing செய்வதற்கு அது துணை போகிறது. அணுகுண்டு கொடியது என்பது தான் பாயிண்டே தவிர அதை யார் போட்டான் எதற்காகப் போட்டான் என்பதல்ல.

\\ஒரு நாடு வெற்றிபெரும் பொழுது அதே அப்பாவி பொது மக்கள் கொண்டாடுவது இல்லையா ? ஈழத்தில் கொல்லப்படும் உயிர்களுக்காக கண்ணீர் வடிக்கும், இராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடாத அப்பாவி சிங்களன் எத்தனை பேர் என்று எண்ணிக்கை தெரிந்தால் சொல்லுங்களேன் எனக்கு ஈவு இரக்கம் பற்றி நான் பிறகு தற்சோதனை செய்து கொள்கிறேன்.\\ நீங்க ஜப்பானில் செத்தவங்களைப் பார்த்து கொக்கரிக்கும் போது அவனும் அதையே செய்தால் குற்றமாகத் தெரிகிறதா? அணுகுண்டு பயன்படுத்தியது தவறுதான் என்ற வார்த்தை உமது வாயிலிருந்து வரவில்லையே, ஜப்பானில் செத்தவன் மட்டும் மனிதன் இல்லையா?


\\உலகம் தோன்றிய நாளில் இருந்து எந்த காலத்தில் 700 கோடி (ஆணுறைகள் இல்லை என்றால் 1000 கோடி) மக்கள் தொகை இருந்தது என்ற விவரங்களை கொடுத்துவிட்டு பிறகு சொல்லலாமே, நான் சொல்வதே மக்கள் தொகை கணக்கில்லாமல் செல்வதால் தான் அதன் தேவைகளை நிறைவு செய்ய அறிவியலை தேடினான் மனிதன் என்பதே.\\ உமது கூற்றுப் படி ஆணுறை இல்லாத காரணத்தால் முன்னாரே 1000 கோடி, பத்தாயிரம் கோடி எல்லாம் ஆகியிருக்க வேண்டும். நீர் ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் தரவும்.

திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம், அதை எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் பொய் சரிதான் என்று வாதிடுவான். நீரும் அதையே செய்கிறீர். உமக்கு விஞ்ஞானிகள் என்ற ஜாதியை பிடிக்கிறது. அவர்கள் செய்வது அத்தனையும் சரி என்று தோன்றுகிறது. அதற்க்கு நீர் கொடுக்கும் நியாயம் எல்லாம் ரஞ்சிதானந்தா கொடுத்தது போலவே தான் உள்ளது. நடுவு நிலை உம்மிடம் இல்லை. சுத்தமாக இல்லை. கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்பது நலம்.

பெயரில்லா சொன்னது…

தாஸ்,

1). நீர் நாளையே ஒரு மண் வீட்டைக்கட்டி, இலையை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும்.

2). நான் மேலே சொன்ன இயற்கையான பையனுக்கு உம் மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்.

3). சுனாமி மற்றும் உத்தர்காண்ட் இயற்க்கை அழிவினால் மாண்ட அனைவரையும் உமது repairable formula வை பயன்படுத்தி திருப்பி கொண்டு வரவேண்டும்.

இந்த மூன்று பாயிண்டையும் செய்து முடிக்கும் வரை உமக்கு இயற்க்கைப்பற்றி பேச தகுதி இல்லை. நீங்கள் மற்றவர்களை குறை கூறுமுன் உங்களை இயற்கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். இதை செய்த பின் இயற்க்கையைபற்றி பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம்.

Jayadev Das சொன்னது…

மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது உங்கள் வாதம்.


\\1). நீர் நாளையே ஒரு மண் வீட்டைக்கட்டி, இலையை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும்.\\ உம்மைப் போல அறிவியல்/தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழைகள் காசை வஞ்சகமாக பிடுங்கி சொகுசு வாழ்க்கி வாழ்வோர் மிகச் சிலரே. இன்றைக்கும் 80% மக்கள் மண் வீடுகளில் தான் வாழ்கிறார்கள், ஆடையும் எளியதே.

\\2). நான் மேலே சொன்ன இயற்கையான பையனுக்கு உம் மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்.\\ " உமது மகளை/பேத்தியை பஞ்சாப் காரனுக்கோ மணிப்பூர் காரனுக்கோ திருமணம் செய்து கொடுக்க மாட்டீர். அதற்காக அவங்க கேவலம் என்று அர்த்தம் அல்ல. அதே மாதிரி டாடா, பிர்லா வீட்டில் இருந்து மாப்பிள்ளை உம வீட்டிற்கு வர மாட்டான். வசதி வாய்ப்பு, கலாசாரம் இதைப் பொறுத்து அவரவர் தகுதிக்கேற்ப திருமணம் செய்து கொள்கிறார்கள் இலைதழைகளை சுற்றிய காலத்தில் பிறந்திருந்தால் அதே மாதிரி ஒருத்தனோடு ஏன் குழந்தைகள் வாழ்ந்திருக்கும். இங்கு அது கேள்வி அல்ல. அறிவியல் வளர்ச்சி பொதுவாக மனிதனுக்கு வரமா சாபமா? என்றால் கொடிய சாபம், தட்'ஸ் ஆல்.

\\3). சுனாமி மற்றும் உத்தர்காண்ட் இயற்க்கை அழிவினால் மாண்ட அனைவரையும் உமது repairable formula வை பயன்படுத்தி திருப்பி கொண்டு வரவேண்டும்.\\ ஏன் உம அறிவியல் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது? அதை வச்சு இதெல்லாம் பண்ணிடுவீரா என்ன? சரி வருமுன்னராவது எச்சரிக்கை செய்து காப்பாத்தியிருக்கலாமே?

இந்த மூன்று பாயிண்டையும் செய்து முடிக்கும் வரை உமக்கு இயற்க்கைப்பற்றி பேச தகுதி இல்லை. நீங்கள் மற்றவர்களை குறை கூறுமுன் உங்களை இயற்கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். இதை செய்த பின் இயற்க்கையைபற்றி பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

//இன்றைக்கும் 80% மக்கள் மண் வீடுகளில் தான் வாழ்கிறார்கள், ஆடையும் எளியதே. //

80% மக்கள் வாழ்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் cement வாழ்ந்து கொண்டு, அறிவியலை குறை கூறுகிறீர்கள்? போய் மண் வீட்டில் வாழ வேண்டியது தானே. ஏன் அவ்வாறு வாழவில்லை?//உமது மகளை/பேத்தியை பஞ்சாப் காரனுக்கோ மணிப்பூர் காரனுக்கோ திருமணம் செய்து கொடுக்க மாட்டீர். அதற்காக அவங்க கேவலம் என்று அர்த்தம் அல்ல. அதே மாதிரி டாடா, பிர்லா வீட்டில் இருந்து மாப்பிள்ளை உம வீட்டிற்கு வர மாட்டான். வசதி வாய்ப்பு, கலாசாரம் இதைப் பொறுத்து அவரவர் தகுதிக்கேற்ப திருமணம் செய்து கொள்கிறார்கள் இலைதழைகளை சுற்றிய காலத்தில் பிறந்திருந்தால் அதே மாதிரி ஒருத்தனோடு ஏன் குழந்தைகள் வாழ்ந்திருக்கும். இங்கு அது கேள்வி அல்ல. அறிவியல் வளர்ச்சி பொதுவாக மனிதனுக்கு வரமா சாபமா? என்றால் கொடிய சாபம், தட்'ஸ் ஆல்.//

இதெல்லாம் கரெக்டா தான் பேசுறீங்க. ஆனா main மேட்டரை கோட்ட விட்டுர்றீங்க. நான் கேட்டது, இந்த 2013-இல் நான் மேல் சொன்ன இயற்க்கை பையன் இருந்தால் [Please note, "If any such boy is available today"] திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா? அவ்வாறு செய்து வைத்தால், அவர்களுக்கு பிறக்கப்போகிற 10 குழந்தைகள் நீங்கள் விரும்புகிற இயற்கையின் படி வாழுமே? இப்படி இயற்க்கை வாழ்க்கையை பெருக்கலாமே!!! என்பதே. Tell me "YES" or "NO".//ஏன் உம அறிவியல் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது? அதை வச்சு இதெல்லாம் பண்ணிடுவீரா என்ன? சரி வருமுன்னராவது எச்சரிக்கை செய்து காப்பாத்தியிருக்கலாமே? //

10,000 பேர்களுக்கு மேல் இன்று காப்பாற்ற பட்டிருக்கிறார்கள். அது அறிவியலால் தான். இயற்கையால் அல்ல.

Jayadev Das சொன்னது…


\\ 80% மக்கள் வாழ்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் cement வாழ்ந்து கொண்டு, அறிவியலை குறை கூறுகிறீர்கள்? போய் மண் வீட்டில் வாழ வேண்டியது தானே. ஏன் அவ்வாறு வாழவில்லை? \\ அந்த மாதிரி குடும்பத்தில் பிறந்திருந்தால் அப்படித்தான் இருந்திருப்பேன். நான் சூழ்நிலைக் கைதி பாஸ், நான் நினைப்பதெல்லாம் இஷ்டத்துக்கும் செய்துவிடமுடியாது. அறிவியல் பண்ணும் அழிவிற்கு நிச்சயம் மாற்று தேவை, இப்போது எல்லாம் கைமீறிவிட்டது, தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது.


\\ இதெல்லாம் கரெக்டா தான் பேசுறீங்க. ஆனா main மேட்டரை கோட்ட விட்டுர்றீங்க. நான் கேட்டது, இந்த 2013-இல் நான் மேல் சொன்ன இயற்க்கை பையன் இருந்தால் [Please note, "If any such boy is available today"] திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா? அவ்வாறு செய்து வைத்தால், அவர்களுக்கு பிறக்கப்போகிற 10 குழந்தைகள் நீங்கள் விரும்புகிற இயற்கையின் படி வாழுமே? இப்படி இயற்க்கை வாழ்க்கையை பெருக்கலாமே!!! என்பதே. Tell me "YES" or "NO".\\ அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன ஆகும் என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தனப்பனாவன் என்பதே பதில். நீர் எதற்காக காட்டுவாசியை புடிச்சு தொங்கிகிட்டு இருக்கீரோ தெரியவில்லை. அவன் மட்டும் தான் இயற்கையாய் வாழ்ந்தான் என்று நீர் நினைப்பது உமது கூமுட்டைத் தனம். எங்க பாட்டனார் காலத்தில ஒரு அறிவியல் மசிரும் இல்லை கலப்பை மாட்டு விவசாயம் நல்ல பால் உறமில்லாத பயிர், இது போதும். அதில் திருமணத்தை எதற்கு மிக்ஸ் பண்ணி சாகிரீரோ தெரியவில்லை. காட்டு வாசி இங்க எதற்கு வரான் என்பதும் விளங்க வில்லை. நான் எந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் பிறக்கிறேனோ அதன் நம்பிக்கைகள் தகுதி, கால சூழ்நிலையைப் பொறுத்து பந்தங்கள் அமையும் காட்டுவாசி மத்தியில் பிறந்திருந்தா அங்கே சம்பந்தம் நடக்கும் இவ்வளவு பேசும் நீர் ஏதாவது ஏழைப் பெண்ணை மனது வாழ்க்கை கொடுத்திருப்பீரா? தெரியவில்லை.\\10,000 பேர்களுக்கு மேல் இன்று காப்பாற்ற பட்டிருக்கிறார்கள். அது அறிவியலால் தான். இயற்கையால் அல்ல.\\ அறிவியலை வச்சு எச்சரிக்கை குடுப்பேன் தடுப்பேன் என்பதெல்லாம் டுபாக்கூர் தானா? உசிர் பிழைச்சவன் அவன் சாமர்த்தியத்தால் பிழைச்சான் நீர் பொய் கூட்டி வந்தீர் அங்கே ஆபத்து போகவே வேண்டாம்னு தடுத்திருந்தா பாராட்டலாம், ஆயிரம் போனம் விழுந்த பின்னர் இவரு வருவாராம். காப்பாத்துவாராம். ஐயோ.........ஐயோ........

பெயரில்லா சொன்னது…

//நான் சூழ்நிலைக் கைதி பாஸ், நான் நினைப்பதெல்லாம் இஷ்டத்துக்கும் செய்துவிடமுடியாது. //

அப்படிஎல்லாம் சொல்லி escape ஆகக்கூடாது. கீழே படியுங்கள்.

//எங்க பாட்டனார் காலத்தில ஒரு அறிவியல் மசிரும் இல்லை கலப்பை மாட்டு விவசாயம் நல்ல பால் உறமில்லாத பயிர், இது போதும். //

நான் 2 வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பாட்டனார் மாதிரி தான் வாழுகிறார்கள். இயற்க்கை விவசாயம் தான். அந்த கிராமத்திற்கு பஸ் இருமுறை தான் (காலை & மாலை) வரும். அப்படியே ஒரு 50 வருடத்திற்கு முன்பு உள்ள வாழ்க்கையைப் பார்த்தேன். நீங்கள் அங்கு சென்று உங்கள் இயற்க்கை வாழ்க்கையை வாழலாம். 1 acre 1 லட்சம் தான். நீங்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு பெங்கலூருவையே இயற்கையாக மாற வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இது நடக்காது. உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கை இன்றும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு செல்லலாம். அறிவியலை பிடித்தவர்கள் பெங்களூருவில் வாழ்ந்துவிட்டு போகட்டும். இப்போது நீங்கள் சூழ்நிலை கைதி என்று எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாதே.......

Jayadev Das சொன்னது…

@ Alien A

பொதுவா வேலை நிமித்தமாக ஊர் மாறுவது நடக்கும். அது முடிந்தால் நாம் சொந்த ஊரில் வாழத்தான் மனம் இடம் தரும். சொர்க்கமே ஆனாலும் நம்மூரைப் போலாகுமா?

Anyway, நீர் முழு விவரமும் தராமல் மொட்டையாக கிருஷ்ணகிரி பக்கம் ஒரு ஊர் என்றால் எப்படி?

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்,//

//திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்,//

இங்கே அருவெறுக்கத் தக்க வகையில் பின்னூட்டிய ஒரு பதருக்கு கூட நாகரீகமாகவே பின்னூட்டினேன், நீங்கள் ஒருமைக்கு மாறிய பின்பு உங்களுக்கெல்லாம் மதித்து பின்னூட்டம் போட எனக்கு மனமில்லை.

இருந்த போதிலும் உங்கள் மறுமொழிக்கெல்லாம் சேர்த்தே.....உங்களின் பின்னூட்டம் வாயிலாக நான் அறிந்தவை

1. மனித இனம் இன்றிருக்கும் மக்கள் தொகையை மிஞ்சி ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும், ஆனால் அவை ஏன் அழிந்து சுருங்கியது என்பதற்கு உங்களிடம் ஊகமாகக் கூட விடை இல்லை, ஒருவேளை இது போன்ற அறிவியல் தான் அப்போதும் மனித இனத்தை அழித்ததோ, அல்லது இப்போதிருக்கும் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஆணுறை கண்டுபிடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.

2. மூக்கு கண்ணாடி என்கிற வஸ்து கண்டுபிடித்த பிறகே மனிதர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது

3. காது கேட்கும் திறன் குறைவை சரி செய்யும் மெசின் கண்டுபிடிக்கும் முன் மனிதர்களுக்கு குண்டு ஊசி விழும் சத்தம் கூட கேட்டுக் கொண்டு இருந்தது.

3. திறந்த வெளியில் மலம் கழித்து பழகிய பொழுது மனிதன் சுகாதாரத்தில் மேம்பட்டவனாகவும், தொற்று நோய் என்றால் என்னவென்றே தெரியாதவனாகவும் இருந்தான்.

4. தட்டம்மை, பெரியம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம் ஆகியவை அறிவியல் ஆக்கங்கள் மனிதனிக்கு கொடுத்த பக்க விளைவுகள், அதை அறிவியலே கட்டுப்படித்தியதாக கூறுவது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம்.

5. ஆஞ்சியோகிராம் என்னும் மாரடைப்பு மருத்து முறை வரும் முன் மனிதர்களுக்கு மாரடைப்பே ஏற்பட்டது இல்லை.

6. சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் முறை அறிமுகப்படுத்தும் முன்பு பெண்களுக்கு எங்கும் எப்போதும் சுகப் பிரசவம், 15 பிள்ளைகள் வரையிலும் முக்கி முக்கியே பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், பிரசவசாவு என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.

6. பல்லு இல்லாதவன் பக்கோடோவிற்கு ஏங்கும் நிலை பன்னெடுங்காலத்தில் இல்லை ஏனென்றால் அவர்களுடைய பற்கள் ஆலம் விழுதைப் போன்று உறுதியாக இருந்தது, பல்வலி என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.

யப்பா ..........முடியல.

Jayadev Das சொன்னது…

\\நீங்கள் ஒருமைக்கு மாறிய பின்பு உங்களுக்கெல்லாம் மதித்து பின்னூட்டம் போட எனக்கு மனமில்லை.\\ தங்களை ஒருபோதும் ஒருமையில் அழைக்கவில்லை தவறான புரிதல்.

\\1. மனித இனம் இன்றிருக்கும் மக்கள் தொகையை மிஞ்சி ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும், ஆனால் அவை ஏன் அழிந்து சுருங்கியது என்பதற்கு உங்களிடம் ஊகமாகக் கூட விடை இல்லை, ஒருவேளை இது போன்ற அறிவியல் தான் அப்போதும் மனித இனத்தை அழித்ததோ, அல்லது இப்போதிருக்கும் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஆணுறை கண்டுபிடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.\\ காட்டில் மரங்கள் அதிகமாகும். காட்டுத் தீ காட்டை அழிக்கும். மீண்டும் மரங்கள் வளரும். அதே மாதிரி மனிதன் உட்பட ஒவ்வொரு இனத்துக்கும் நோய்கள் வந்து அழிக்கும், மீண்டும் இனம் பெருகும். ஒரேயடியாக அழிந்து போயிருந்தால் இன்றைக்கு மனிதன் இருந்தேயிருக்க மாட்டான். அதில் மனிதன் அறிவியலை வைத்து மாற்றத்தை ஏற்ப்படுத்தினான். ஒரு பக்கம் சாவை நிறுத்தினான், ஜனத் தொகை புழுத்தது. இதைத் தடுக்க மற்றொரு பக்கம் காண்டம்களைக் கொடுத்தான். அப்புறம், கொலை கொள்ளை அதிகமானது. அணுகுண்டு செஞ்சு வச்சிருக்கான். ஒரு விண்கல் வந்தாலும் ஆட்டம் காலி. காற்றில் கார்பன் மொனாக்சைடு. சீக்கிரம் எல்லோருக்கும் சங்கு. சந்தோஷமா சுடுகாட்டுக்கு நீங்களே போயிடுங்க ஏன்னா தூக்கறதுக்கு ஆள் இருக்க மாட்டான். எல்லாம் போயிட்டா சுடுகாடு எதுக்கு, அவனவன் வீட்டிலேயே படுத்துக்கிட்டு மண்ணை போட்டு மூடிக்கோங்க.


\\3. காது கேட்கும் திறன் குறைவை சரி செய்யும் மெசின் கண்டுபிடிக்கும் முன் மனிதர்களுக்கு குண்டு ஊசி விழும் சத்தம் கூட கேட்டுக் கொண்டு இருந்தது.\\ எங்க பாட்டிக்கு தொண்ணூறு வயதிலும் காது துல்லியமாக கேட்கும், எங்க பெரியம்மாவுக்கு 50 வயதில் காது அவுட், ஏன்னா அவங்க வீடு இரயில்வே டிராக் பக்கம். கண்ணா!! ஊருபட்ட நாய்ஸ் pollution பண்ணிட்டு காரணத்தை வேறெங்கோ தேடாதீங்க.

\\3. திறந்த வெளியில் மலம் கழித்து பழகிய பொழுது மனிதன் சுகாதாரத்தில் மேம்பட்டவனாகவும், தொற்று நோய் என்றால் என்னவென்றே தெரியாதவனாகவும் இருந்தான்.\\ திறந்த வெளியில் மலம் கழித்தாள் பண்ணி வந்து சுத்தம் பண்ணும் அப்புறம் அதுவே உமக்கு உணவும் ஆகும். உமது அறிவால் கூவத்தைத்தான் உருவாக்க முடியும். ஜீவ நதிகளான கங்கை யமுனை இப்போதைய நிலை என்ன? யோசியுமைய்யா?

\\4. தட்டம்மை, பெரியம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம் ஆகியவை அறிவியல் ஆக்கங்கள் மனிதனிக்கு கொடுத்த பக்க விளைவுகள், அதை அறிவியலே கட்டுப்படித்தியதாக கூறுவது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம்.\\ எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆஸ்பத்திரிகள் நோய்கள் மருந்துகள் புழுத்துக் கொண்டே போகிறதேயொழிய குறைந்த பாடில்லை. புதுசு புதுசா தினசரி நோய் வந்துகிட்டே இருக்கே? அப்படி நோயை வென்றாகிவிட்டது என்றால் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் குறைய வேண்டும். ஆனால் அது புழுத்துப் போய்க் கிடக்கே? வாழ்நாள் முழுசும் செர்த்தைதை டாக்டரே பிடுங்கித் தின்னுரானே? என்ன பண்ணுவீங்க?

\\5. ஆஞ்சியோகிராம் என்னும் மாரடைப்பு மருத்து முறை வரும் முன் மனிதர்களுக்கு மாரடைப்பே ஏற்பட்டது இல்லை.\\உழைக்காம உட்கார்ந்து தின்னா ஹார்ட் அடாக் வராம வேறென்ன பண்ணும். நல்லா உழைக்கிறவனுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் வராது.

\\6. சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் முறை அறிமுகப்படுத்தும் முன்பு பெண்களுக்கு எங்கும் எப்போதும் சுகப் பிரசவம், 15 பிள்ளைகள் வரையிலும் முக்கி முக்கியே பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், பிரசவசாவு என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.\\ எங்க நாய் மூணு மாசத்துக்கு ஒருவாட்டி ஆறு குட்டி போடுது, எனக்குத் தெரிஞ்சு எந்த பசுமாட்டுக்கும் சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து கன்றை எடுத்ததில்லை. முன்னாடி சிசேரியன் அங்கொன்னு இன்கொன்னா இருந்தது. இப்போ 80% வயிற்றைக் கிழித்து தான் எடுக்கணும். நல்ல முன்னேற்றம்டா சாமி.........

\\6. பல்லு இல்லாதவன் பக்கோடோவிற்கு ஏங்கும் நிலை பன்னெடுங்காலத்தில் இல்லை ஏனென்றால் அவர்களுடைய பற்கள் ஆலம் விழுதைப் போன்று உறுதியாக இருந்தது, பல்வலி என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.\\அன்னைக்கு கூல் குடித்தாலும் விஷமில்லாம குடித்தான், இன்னைக்கு கோடி கோடியா இருந்தாலும் உண்ணும் அத்தனையும் விஷம். அபாரமான முன்னேற்றமல்லவா?

திருவாளர் கண்ணன், உமது பதில்கள் மேல் எமக்கு எந்த ஆசையுமில்லை, ஆனால் நீர் கொஞ்சம் நேர்மை, நடுவு நிலைமை இவற்றை எந்த கடையிலாவது கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்தவும். நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் நமது தளத்தில் உரித்து தொங்கவிடப் படும் சற்றே பொரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் நமது தளத்தில் உரித்து தொங்கவிடப் படும் சற்றே பொரும். //

நல்லா நல்லா......குடுமியை அவிழ்த்தால் ஈரும் பேனும் இருக்குமா இருக்காதான்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்