பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2010

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3

இதன் முந்தைய பகுதிகள் சுட்டி 1 | சுட்டி 2

இடம் பெயராத சமூகம் முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை, உலகில் மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் என்றால் அது சீனராகவோ, இந்தியராகவோ இருக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் உலகிலேயே மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பியர்கள் அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் தான். காரணம் இயற்கை வளம் உடைய பகுதிகளுக்குச் சென்று தங்கள் ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டு எப்போதும் முதலாளிகளாகவே வாழவேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் வெள்ளைக்காரர்கள். இந்தியர் குறிப்பாக தமிழர்கள் உட்பட பிற இனங்கள் வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததற்குக் காரணம் அவர்களை சென்ற நூற்றாண்டுக்கு முன்பே வெள்ளைகாரர்களால் தோட்டத் தொழிலாளியாக அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களாக செல்லாமல் இடம் பெயர்ந்த பிற சாதியினரும் உண்டு, ஆனால் அவர்கள் மற்றவர்களை விட எண்ணிக்கையில் குறைவு. கடந்த 50 ஆண்டுகளில் பலரும், குஜராத்திகள், பஞ்சாபிகள் உட்பட வட இந்தியர்களும் கனிசமான அளவில் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவிற்குள் ஆரியர்கள் பல்வேறு தென்னிந்திய மாநிலங்களுள் புலம் பெயர்ந்ததும் வேலை வாய்ப்புத் தேடி என்பதைவிட வெள்ளைக்காரர்களைப் போல் அல்லாமல் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடைப் பட்ட வர்க்கமாக வாழுவதற்கான வாய்ப்புகள் அன்றைய மன்னர் ஆட்சியில் அமைந்திருந்ததால் மன்னர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாகவும், பல்வேறு புதிய கோவில்கள் ஏற்படும் போது அவற்றில் புரோகிதம் செய்வதற்காகவும் இடம் பெயர்ந்தனர். கோவில்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அந்த அந்த ஊர்களில் பார்பனர்களின் எண்ணிக்கையும் இருந்தது, குறிப்பாக கும்பகோணம் காஞ்சிபுரம் ஆகிய சிறு நகரங்களில் பார்பனர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் உண்டு. மற்ற ஊர்களில் பார்பனர்களிடம் நிலம் இருந்தாலும் பெரும்பாலும் குத்தகை சாகுபடியாகத்தான் நில மேலாண்மை செய்து வந்தார்கள். மக்கள் தொகை உயர உயர அனைத்து பார்பனர்களுக்கும் கோவில்களில் வேலை வாய்ப்பு என்பது கூட்டுக் குடித்தனம் போல் கோவில் வருமானத்தை பிரித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதில் நிகர வருமானம் குறையவே வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது அவர்களுக்கு உயர் அதிகாரியாக ஆகுவதன் மூலம் கனிசமான வருமானம் வரவே படித்த பார்பனர்களில் பலர் வெள்ளைக்காரர்கள் தலைமைகளாக செயல்பட்ட சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் வெள்ளைக்காரர்களின் கீழ் வேலை செய்ய இறங்கிவிட்டனர். அதுவரை அக்ரகாரங்களில் சூழ்ந்திருந்த பார்பனர்கள் நகரங்களுக்கு தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டார்கள். புரோகிதம், நிலமேலாண்மை இது தவிர்த்து வேறெந்த தொழிலும் தெரியாத பார்பனர்கள் (உடலைத் தொட்டு செய்யும்) மருத்துவம், இராணுவம் மற்றும் ஏனைய அரசு உயர் பதவிகளில் போய் அமர்ந்து கொண்டது இப்படித்தான். இதற்கு விலையாக அதுகாரும் அவர்கள் கட்டிக்காத்துவந்த தீண்டாமை மற்றும் ஏனைய சமூகத் தீட்டுகளை புறம் தள்ள வேண்டி இருந்தது.


திருவாளர் சோ இராமசாமி என்ன சொல்கிறார் என்றால்

"புரோகிதத் தொழிலில் வருமானம் இல்லை, முன்பிருந்த கௌரவமும் இல்லை ஆகவே புரோகிதர்கள் இம்மாதிரி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு. அப்படியிருந்தும் தொழில் செய்யும் புரோகிதர்கள் வணக்கத்துக்குரியவர்களே. புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை. ஆனால் புரோகிதர் அதையும் செய்கிறார் என்கிறார் சோ." - நன்றி திருவாளர் டோண்டு

தேவநாதன் கூட புரோகிதம் தான் செய்தான், அவனெல்லாம் வணக்கத்துக்கு உரியவனா ? புரோகிதத்தொழில் வருமானம் இல்லாமல் இல்லை, ஆனால் அது போதும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பார்பனர்கள் புரோகிதம் பார்ப்பது மிகச் சிறிய கோவில்களோ, பாழடைந்த கோவில்களோ அல்ல, பெரும்பாலும் ஆறுகால பூசைக்கு வருமானம் உள்ள கோவில்களில் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். சோ இராமசாமியின் கூற்று படி "டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு" ஆக பார்பனர்கள் இது காரும் கூறி வந்த குல கவுரவம், வேதம் வேதாந்தம் இத்யாதிகள் யாவும் வருமானம் இல்லை என்றால் அவற்றைக் கட்டிக்காக்க தேவை இல்லை என்கிற ஒப்புதல் போலவே உள்ளது. ஏனெனில் டாக்டர், வக்கில், அரசியல் ஆகியவற்றில் கனிசமான அளவு பார்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் சோ இராமசாமியின் கூற்றுபடி, மலம் அள்ளுபவன் கவுரப்படுத்தப்பட்டு நல்ல வருமானமும் கிடைக்கப்பெற்றால் மலம் சுமப்பதும் தவறு அல்ல என்றும் பார்பனர்களும் அள்ளலாம் என்றே சொல்லுவார் போல் தெரிகிறது. எல்லாம் பிழைப்பு வாதத்திற்கான வேசமே என்று திருவாய் மலர்ந்துவிட்டு 'வேதந்த விளக்கப்படி அனைத்து அம்சங்களு நிறைந்த பிராமணன் என என்றுமே இல்லாத பிராமணனை எதற்கு தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. சோ இராமசாமி குறிப்பிட்ட படி ஈமச் சடங்குகள் செய்யும் பார்பனர்கள் மிக மிகக் குறைவு, அதைச் செய்யும் பார்பனர்கள் பார்பனர்களுக்குள்ளேயே விலக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களை சவுண்டி பார்பான் என்று சொல்வது ஒரு சிலருக்கு தெரியலாம்.

இன்றும் சாதிக் கொடுமை கிராமங்களில் இருக்கிறது, இரட்டை குவளை முறைகள் கூட அமுலில் இருக்கின்றன அது தொடர்வதற்கு பார்பனர்கள் காரணமில்லை என்பது போலவே அவர்கள் அந்த கிராமங்களை விட்டு எப்போதோ வெளி ஏறிவிட்டார்கள் என்பதும் உண்மை தான். நினைவுச் சின்னங்கள் / அவமானச் சின்னங்கள் அதைக் கட்டியவர்கள் இருக்கும் வரை தான் காப்பாற்றப்பட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான உலக வரலாறுகள் குறைவு, சமூக (சாதி) அமைப்புகளிலும் அப்படித்தான் ஒரிரு ஆண்டுகளில் மாற்றம் ஏற்பட்டுவிடாது.

சோ இராம்சாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் படி ஒரு பார்பனர் தன்னை பிராமணன் என்று நம்பினால் பிச்சை எடுத்து உண்ண வேண்டுமாம். பிற்போக்கு வாதிகளை பின்பற்றினால் பிச்சை எடுக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பார்பனர்கள் தம்மை பிராமணர்கள் என்று கருதிய காலங்களில் தீண்டாமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் தலைவிரித்து ஆடின, சோ இராமசாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் கூட அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்கிற கெடுதலான எண்ணமோ !

31 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இப்ப வெளிய கிளம்புறேன்!

வந்து மறுமொழியிடுகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இப்ப வெளிய கிளம்புறேன்!

வந்து மறுமொழியிடுகிறேன்!//

போயிட்டு வாங்க ஐயரே !

TBCD சொன்னது…

எங்கே பிராமணன் என்று தேடும் சோ, தாம்பிராசு (Tamil Brahmins Association) அமைப்பை கலைக்க சொல்லுவாரா.

இணையத்தில் கூட பல இடங்களில் ஐயர்,ஐயங்கார் சமூகத்தினர் Tam Brahm, Tamil Brahmins என்று இணைய குழுமம் நடத்துகின்றார்கள். பேசுகிறார்கள். அதையும் சோ அவர்கள் தடை செய்ய பரிந்துரை செய்ய வேண்டூம் என்று கேட்டுக்கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

/TBCD said...

எங்கே பிராமணன் என்று தேடும் சோ, தாம்பிராசு (Tamil Brahmins Association) அமைப்பை கலைக்க சொல்லுவாரா.

இணையத்தில் கூட பல இடங்களில் ஐயர்,ஐயங்கார் சமூகத்தினர் Tam Brahm, Tamil Brahmins என்று இணைய குழுமம் நடத்துகின்றார்கள். பேசுகிறார்கள். அதையும் சோ அவர்கள் தடை செய்ய பரிந்துரை செய்ய வேண்டூம் என்று கேட்டுக்கொள்கிறேன்//

அதற்கெல்லாம் வர்க பிராமணன் வருண பிராமணன் என்கிற சொல்லாடல் வைத்திருக்கிறாரே. வர்க பிராமணன் என்றால் பிறப்பு வழியாக பிராமணனாக அறியப்படும் பார்பனராம் (பிரித்து படிக்க வேண்டாம்).

அப்பாவி முரு சொன்னது…

//புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை//

கௌரவம் ஒன்னும் ---- வேண்டாம். எங்கள் குடும்ப, குல அமைப்பில் கல்யாணத்திலும் சரி, கருமாதியிலும் சரி பிராமணர் இல்லாமல் தான் நடக்கின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

//புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை//

கௌரவம் ஒன்னும் ---- வேண்டாம். எங்கள் குடும்ப, குல அமைப்பில் கல்யாணத்திலும் சரி, கருமாதியிலும் சரி பிராமணர் இல்லாமல் தான் நடக்கின்றது.//

பொதுவாக 'பருப்பு இல்லாமல் கல்யாணமா ?' என்கிற பழமொழி உண்டு. இப்பதான் பொருள் புரிகிறது. உங்கள் ஊர்பக்கமெல்லாம் கல்யாணத்துக்கு கடா கறி போடுபவர்கள் ஆயிற்றே

அப்பாவி முரு சொன்னது…

//பொதுவாக 'பருப்பு இல்லாமல் கல்யாணமா ?' என்கிற பழமொழி உண்டு. இப்பதான் பொருள் புரிகிறது. உங்கள் ஊர்பக்கமெல்லாம் கல்யாணத்துக்கு கடா கறி போடுபவர்கள் ஆயிற்றே//

இல்லை...இல்லை...

இது மிகச்சமீபத்தில் வந்த பழக்கம் தான். முகூர்த்தநாளில் காய்கறியின் விலை விண்ணைத் தொட்டுவிடுகிறது. ஆனால் இறைச்சியில் விலை மாறாததினால், கல்யாணத்தில் இறைச்சியை போட்டுவிடுகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

//பொதுவாக 'பருப்பு இல்லாமல் கல்யாணமா ?' என்கிற பழமொழி உண்டு. இப்பதான் பொருள் புரிகிறது. உங்கள் ஊர்பக்கமெல்லாம் கல்யாணத்துக்கு கடா கறி போடுபவர்கள் ஆயிற்றே//

இல்லை...இல்லை...

இது மிகச்சமீபத்தில் வந்த பழக்கம் தான். முகூர்த்தநாளில் காய்கறியின் விலை விண்ணைத் தொட்டுவிடுகிறது. ஆனால் இறைச்சியில் விலை மாறாததினால், கல்யாணத்தில் இறைச்சியை போட்டுவிடுகிறார்கள்.//

நல்ல லாஜிக் முரு, கெடாவை வெட்டி சாப்பிடுவதால் கெடா சாப்புடுகிற இலை தலைகள் கீரைவகைகள் மிச்சமாகி காய்கறி விலை குறையும் ! :)

பரணீதரன் சொன்னது…

பார்பான் சொல்லுவது போல் சாவு சடங்குல சொல்லுற மந்திரம் வருமாறு

யன்மேமாத பிப்ர மமாத
யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா

இதன் பொருள்:-

"எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்"

தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா - இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

மாடல மறையோன் சொன்னது…

//தேவநாதன் கூட புரோகிதம் தான் செய்தான், அவனெல்லாம் வணக்கத்து உரியவனா ? //

Irrelevant.

Why do you drag his case here?

So is correct to say the priests are worthy of social respect. Correct from the standpoint of an average Hindu if such a Hindu follows or accepted Vedic Hinduism.

Priests are worthy of respect by such Hindus, because they are essential to carry forward the tradtions of the religion. Thus, they help the religion for which such Hindus need to treat the priests with due respect.

Unknown சொன்னது…

முதலில்: மறுபடியுமா?

இரண்டாவது: நான் இதை படிக்க வில்லை...

மூன்றாவது: தலைப்பை பார்த்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

நாலாவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, நூறாவது, ஆயிரமாவது: ஏன் கோவிஜி ஏன்???

கொடுரமான கேள்விகளுடன்
--மஸ்தான்

மாடல மறையோன் சொன்னது…

//மேலும் சோ இராமசாமியின் கூற்றுபடி, மலம் அள்ளுபவன் கவுரப்படுத்தப்பட்டு நல்ல வருமானமும் கிடைக்கப்பெற்றால் மலம் சுமப்பதும் தவறு அல்ல என்றும் பார்பனர்களும் அள்ளலாம் என்றே சொல்லுவார் போல் தெரிகிறது//

Yes, he means that. He is correct.

The scavenging (cleaning toilets, carrying night soil) raises our revulsion. But the scavengers do it, because they have internalised the process for thousands of years.

Only during modern times, scavenging has somewhat modernised in cities. If the modernisation gets quick and a scavengers dont live in their cheris, and are paid handsomely, and further, their work is thoroughly modernished with modern technology, scavenging will become a decent profession. And, no doubt, it wont raise any revulsion. People will clamour to enter that profession. As of now, Rlys select Sanitory Inspectors to supervise the work of scavnegers.

Tamil brahmins will tke up that work as their ancient tradition of priestcraft has fallen into decay. In fact, like scavengers are treated with disrespect, society treat the priests, not with disrespect, but with indifference and neglect. பணம் இல்லானை எவரும் கிட்டச்சேர்க்க மாட்டார்கள்.

Money is the deciding factor.

மாடல மறையோன் சொன்னது…

//அவர்களை சவுண்டி பார்பான் என்று சொல்வது ஒரு சிலருக்கு தெரியலாம்.//

You mean the brahmins dicriminate their brethren performing last rites.

This is a common nature of all humanbeings, to associate death with fear and premonition of death.

So, if a single paappanar crosses you in the street when you step down from your house, the superstition that it is an ill omen, is understandable for the reasons given in the second para above.

Single parpanar goes to perform last rites.

ஒத்தைப்பார்ப்பான் வழியிலே வந்தால் வீட்டுக்குள்ளே ஓடிவந்துவிடு.

You are, therefore, treating common phobia as special.

மாடல மறையோன் சொன்னது…

//எல்லாம் பிழைப்பு வாதத்திற்கான வேசமே என்று திருவாய் மலர்ந்துவிட்டு 'வேதந்த விளக்கப்படி அனைத்து அம்சங்களு நிறைந்த பிராமணன் என என்றுமே இல்லாத பிராமணனை எதற்கு தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை.//

This is the lait motif in your three blogposts on the same subject.

I think it should be understood in a different way. People or a group of people look back on those days when they lived differently. For e.g the tribals, when they moved to cities to live like others there, still long for the ancient tribal ways; so keep some memorablia at home to constantly remind them of their earlier style of life; or retain some of the rituals even in cities.

Similarly, the Tamil brahmins. The Tamil brahmins are notorious in following orthodox ways. They are proud of such ways. Of course, they conned the religion to creat their culture, but that matters little here.

It is not possible to bring back the proud past. So, they dream of it, they remind themselves of it, in various ways.

Brahmins like So serve them by writing on it.

//தேடல் கூட அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்கிற கெடுதலான எண்ணமோ !//

Dont harbor such pessimism. The brahminsm is in its last breath. Tamil brahmins, as you said, are avaricious people. They possess tremendous zest for life. Their spirirtuality is opportunistic, in the sense, when spirituality is paying, they take it. If not, drop it.

Now life is lived so materilalistically that TBs want to get everything from it. Therefore, whatever So writes, they are like inhaling aroma or living in imagination.

As I wrote somewhere, the Brahmins as an group of people, will disappear because they will hve integrated with others, by marriages etc. as anglo indians and parsis have done.

கோவி.கண்ணன் சொன்னது…

//
Single parpanar goes to perform last rites.

ஒத்தைப்பார்ப்பான் வழியிலே வந்தால் வீட்டுக்குள்ளே ஓடிவந்துவிடு.

You are, therefore, treating common phobia as special.//

மறைமுகக் காரணமே ஒற்றைப் பார்பனர் எங்காவது சிக்கிவிட்டால் அவரை பாதுகாக்கும் நோக்கில் பார்பனர்களாலேயே கிளப்பிவிடப் பட்டது தான் 'ஒற்றை பாப்பான்' பற்றிய பழமொழி.

இதிலிருந்து அன்றைய காலத்தில் பார்பனர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றே தெரிகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//தேவநாதன் கூட புரோகிதம் தான் செய்தான், அவனெல்லாம் வணக்கத்து உரியவனா ? //

Irrelevant.

Why do you drag his case here?
//

பின்லேடன் எப்படி முஸ்லிம் இல்லை என்று சொல்ல முடியாதோ, அதே போன்று தான் தேவநாதன் பார்ப்பான் இல்லை என்று சொல்வதும்.

தீவிரவாதிகளுக்கு முஸ்லிம் சாயம் பூசும் போது தேவநாதனின் பூணூல் பற்றிப் பேசக் கூடாதா என்ன ?

//So is correct to say the priests are worthy of social respect. Correct from the standpoint of an average Hindu if such a Hindu follows or accepted Vedic Hinduism.
//
வேதத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட இந்துக்கள் தான்.

//Priests are worthy of respect by such Hindus, because they are essential to carry forward the tradtions of the religion. Thus, they help the religion for which such Hindus need to treat the priests with due respect.//

அதான் சோ இராமசாமி தெளிவாக சொல்லி இருக்கிறாரே புரோகிதம் பார்பதால் வருமானமும் புகழும் தற்போது கிடைப்பதில்லை என்று அப்படி என்றால் முன்பு கிடைத்தது என்று பொருள். பணத்துக்கும் புகழுக்கும் செய்யும் வேலைக்கு மதிப்பும் மரியாதையும் கேட்பதும், கொடுப்பதும் கூட இழுக்கு தான். மரியாதைகள் செயலால் கொடுக்கப்படுவது அன்றி அதை ஒருவருக்கும் அடிப்படை பிறப்பு உரிமை தகுதியாக்கிவிட முடியாது என்றே இதன் மூலம் தெரிகிறது.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//மரியாதைகள் செயலால் கொடுக்கப்படுவது அன்றி அதை ஒருவருக்கும் அடிப்படை பிறப்பு உரிமை தகுதியாக்கிவிட முடியாது //

நீங்க எழுதினதுல ரொம்ப பிடிச்சது இதுதான். கலக்குங்க அண்ணா.

அடுத்த கோவியர் கூற்று ரெடி.

Chittoor Murugesan சொன்னது…

எல்லாரும் செல்ஃப் ஷேவ் தான் பண்றோம்(சில சமயமாவது) , நம்ம வீட்டு கம்மோடை நாமதான் ஆசிட் ஊத்தி கழுவுறோம், நம்ம துணிய நாம தான் துவைக்கிறோம், இஸ்திரி பண்றோம் இந்த இழவுல எங்க சாதியிருக்கு? பார்ப்பனர்கள் மதியில் இருக்கிறது. கடந்த காலத்தில் அவர்கள் போட்ட ஆட்டம் ஏற்படுத்திய வடுக்களில் இருக்கிறது. கீழ் காணும் கமெண்டை படித்தால் தெரியும் பார்ப்பனர் மதியில் எத்துணை விஷமிருக்கிறது என்று.
https://www.blogger.com/comment.g?blogID=6738494465220368703&postID=1154784569306428606


இது பழைய கமெண்ட் . லேட்டஸ்டாகவும் 3 கமெண்டுகள் போடப்பட்டிருக்கின்றன. நான் இவற்றை நீக்குவதாக இல்லை. என்னில் , என் மனதில் பார்ப்பனர்கள் பால் எங்கேனும் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு மி.கி கருணை மிச்சமிருந்திருந்தால் அதுவும் போச்.. போயே போச்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

எங்கே செல்லும் இந்த பாதை ...

நிறைய தகவல்கள் திரட்டி இருக்கீங்க கண்ணன் அண்ணே !

பித்தனின் வாக்கு சொன்னது…

இப்போ எதுக்கு எடுத்தாலும் தேவனாதனை உதாரனமாக காட்டுவது உங்களுக்கு வழக்கமாக போய்விட்டது. பகுத்தறிவு திருமணம் செய்வபர், பகுத்தறிவு கருமாதியும் செய்வாரா என்பதுதான் கேள்வி. இதுக்கு உடனே தேவனாதன் யோக்கியமா என்பது பசப்பு பதில். இதுக்குத்தான் பலரும் பகுத்தறிவாளர்களிடம் வாதம் செய்வது இல்லை என்ற உண்மையை நான் அண்மையில் உணர்ந்தேன். நன்றி. அடுத்து ஒரு பார்ப்பான் கிடைக்கும் வரை நாங்கள் மறந்து ஒதுக்கினாலும் நீங்கள் அந்தக் கழிசடை தேவனாதனை மறக்க மாட்டீர்கள் போலும். நன்றி. அய்யா நான் தேவனாதன் தன் கடமை தவறியதால் பார்ப்பான் இல்லை, புனிதனும் இல்லை என்றுதான் சொல்கின்றேன். உடனே பார்ப்பானுக்கு சப்போட் பண்ண ஓடி வந்த பதிவர் என்று சொல்லாதீர். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

// எங்கே பிராமணன் என்று தேடும் சோ, தாம்பிராசு (Tamil Brahmins Association) அமைப்பை கலைக்க சொல்லுவாரா. //
எல்லா ஜாதிக்கட்சிகளையும் கலைத்தால் இதையும் கலைக்கலாம். தேவர் பேரவையைக் கலைக்கக் கோரும் ஆண்மைத்திறம் இந்தப் பதிவரிடம் இருந்தால் விலாசத்துடன் அவர்களுக்கு இதுபோல ஒரு மனு அனுப்பவும். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

// கௌரவம் ஒன்னும் ---- வேண்டாம். எங்கள் குடும்ப, குல அமைப்பில் கல்யாணத்திலும் சரி, கருமாதியிலும் சரி பிராமணர் இல்லாமல் தான் நடக்கின்றது. //
உங்கள் குடும்பம் மட்டும் இல்லை, நிறைய தமிழ் குடும்பங்களில் அவர்கள் வீட்டுப் பொரியோர்களின் முன்னிலையில் தான் நடக்கின்றது.
மற்ற சிலர் வீட்டில் பண்டாரங்கள் தான் திருமணம் செய்விப்பார்கள். செட்டிமார், பிள்ளைமார் ஆகியோர் மட்டும் ஜயருங்களைக் கூப்பிடுவார்கள். மற்ற எல்லாரும் வெறும் புன்னியாஜனை செய்ய்த்தான் கூப்பிடுவார்கள். இப்ப எல்லாம் கருமாதி செய்யக் கூட ஜயருங்க கிடைப்பதில்லை. எங்க அப்பாவின் இறுதிக் காரியத்துக்கு நான் ஒரு ஜயர் கிடைக்க ஜந்து மணி நேரம் அலைந்தேன். வேறு எதுக்கும் இவ்வளவு காலம் செலவு செய்யவில்லை.

பித்தனின் வாக்கு சொன்னது…

// ஒத்தைப்பார்ப்பான் வழியிலே வந்தால் வீட்டுக்குள்ளே ஓடிவந்துவிடு. //
ஒத்தைப்பார்ப்பான் என்றால் காரியங்கள் செய்யும் அல்லது சவுண்டிப் பார்ப்பான் அல்ல. மனைவியயை இழந்த விடேயர் என்று சொல்லும் பார்ப்பான். பிராமன சமுகத்தில் கிரகஸ்த்தம் என்னும் நிலையில் உள்ள பார்ப்பானுக்கும், மனைவிக்கும்தான் மரியாதை. திருமணம் செய்யாத, அல்லது மனைவி இழந்த பார்ப்பான் ஒத்தைப்பார்ப்பான். இவன் அமங்கலியாக கருதப்பட்டான்.

சிங்கக்குட்டி சொன்னது…

என்ன சொல்ல வாதமா, விவாதமா, வீண்விவாதமா!?!?

TBCD சொன்னது…

// /பித்தனின் வாக்கு said...

எல்லா ஜாதிக்கட்சிகளையும் கலைத்தால் இதையும் கலைக்கலாம். தேவர் பேரவையைக் கலைக்கக் கோரும் ஆண்மைத்திறம் இந்தப் பதிவரிடம் இருந்தால் விலாசத்துடன் அவர்களுக்கு இதுபோல ஒரு மனு அனுப்பவும். நன்றி.
///

சாதியயை வைத்து அரசியல் நடத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

பிராமணர் என்பது சாதி இல்லை. வர்ணம். பிராமணர் என்று ஒருவர் இருந்தால், மற்றவர் சூத்திரர். தீண்டாமையயை ஒழித்துவிட்ட இந்த காலத்திலும் நான் பிராமணர் என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள கூடாது.

பிறரைப் போல அவர்களும் சாதி பெயரை வைத்து சங்கம் நடத்திக்கொள்ளட்டுமே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

PM, January 07, 2010

பித்தனின் வாக்கு said...
இப்போ எதுக்கு எடுத்தாலும் தேவனாதனை உதாரனமாக காட்டுவது உங்களுக்கு வழக்கமாக போய்விட்டது. பகுத்தறிவு திருமணம் செய்வபர், பகுத்தறிவு கருமாதியும் செய்வாரா என்பதுதான் கேள்வி. இதுக்கு உடனே தேவனாதன் யோக்கியமா என்பது பசப்பு பதில். இதுக்குத்தான் பலரும் பகுத்தறிவாளர்களிடம் வாதம் செய்வது இல்லை என்ற உண்மையை நான் அண்மையில் உணர்ந்தேன். நன்றி. அடுத்து ஒரு பார்ப்பான் கிடைக்கும் வரை நாங்கள் மறந்து ஒதுக்கினாலும் நீங்கள் அந்தக் கழிசடை தேவனாதனை மறக்க மாட்டீர்கள் போலும். நன்றி. அய்யா நான் தேவனாதன் தன் கடமை தவறியதால் பார்ப்பான் இல்லை, புனிதனும் இல்லை என்றுதான் சொல்கின்றேன். உடனே பார்ப்பானுக்கு சப்போட் பண்ண ஓடி வந்த பதிவர் என்று சொல்லாதீர். நன்றி.
//

//தேவனாதன் தன் கடமை தவறியதால் பார்ப்பான் இல்லை//

இதுதான் நற்குடி மாஸ்டர் பீசு!

இதே மாதிரி எல்லா சாதிக்காரங்களும் தப்பு பண்ணிட்டு சாதிய விட்டு விலகிக்கலாம்னு விதி இருக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

////தேவனாதன் தன் கடமை தவறியதால் பார்ப்பான் இல்லை//

தீண்டாமையைக் கூட கடமையாகத்தான் பார்பனர்கள் செய்து கொண்டிருந்தார்கள், அதை மற்றவர்களும் தற்போதும் செய்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கக்குட்டி said...
என்ன சொல்ல வாதமா, விவாதமா, வீண்விவாதமா!?!?
//

வாதம் பித்தம் கபம் !

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

// ஒத்தைப்பார்ப்பான் வழியிலே வந்தால் வீட்டுக்குள்ளே ஓடிவந்துவிடு. //
ஒத்தைப்பார்ப்பான் என்றால் காரியங்கள் செய்யும் அல்லது சவுண்டிப் பார்ப்பான் அல்ல. மனைவியயை இழந்த விடேயர் என்று சொல்லும் பார்ப்பான். பிராமன சமுகத்தில் கிரகஸ்த்தம் என்னும் நிலையில் உள்ள பார்ப்பானுக்கும், மனைவிக்கும்தான் மரியாதை. திருமணம் செய்யாத, அல்லது மனைவி இழந்த பார்ப்பான் ஒத்தைப்பார்ப்பான். இவன் அமங்கலியாக கருதப்பட்டான்.//

அதுக்காக சுதாகர் எதிரே தனியாக வந்தால் ஓடி ஒளிவது தவறு என்பது புரிகிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

இப்போ எதுக்கு எடுத்தாலும் தேவனாதனை உதாரனமாக காட்டுவது உங்களுக்கு வழக்கமாக போய்விட்டது.//

பாரதியாரைப் பார்பன சின்னமாக மாற்றிக் கொண்டவர்களைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்க மாட்டீர்கள், தேவநாதன் பார்பானன் இல்லைன்னு சொல்வதில் அக்கரை காட்டுவிங்க. சரியா ?

// பகுத்தறிவு திருமணம் செய்வபர், பகுத்தறிவு கருமாதியும் செய்வாரா என்பதுதான் கேள்வி.//

பகுத்தறிவுவாதிகளுக்குத்தான் சொர்கம் நரகமே கிடையாதே அவர்கள் எப்படி கருமாதிக்கும் சடங்கு செய்வார்கள்

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்