பின்பற்றுபவர்கள்

1 பிப்ரவரி, 2010

குன்றத்திலே குமரனுக்கு (சிங்கை தைப் பூசம்) !

சிங்கை மலேசிய நாடுகளில் தைப் பூசம் களை கட்டும், மலேசியாவில் தைப்பூசம் கொண்டாடும் மாநிலங்களில் பொது விடுமுறை, வழக்கத்துக்கு மாறாக இந்த முறை மலேசிய பிரதமர் திரு நஜீப் பத்துமலை சென்று தைபூச நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சிங்கையில் வழக்கம் போல் தைபூச கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து துவங்கியது, மாலை 7 மணிக்கு மேல் செரங்கூன் சாலையில் இருந்து டேபிகாட் தெண்டாயுதபாணி கோவில் வரை சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி சாலை பிரிக்கப்பட்டு அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் வழித்தடம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தைபூசத்திற்கு வரும் மிகச் சில வெளி நாட்டினர் வருகை என்பது தவிர்த்து இவ்வாறு வசதிகள் ஏற்படுத்தித்தர சிங்கப்பூர் அரசுக்கு பெரிய வருமானம் எதும் இல்லை என்றாலும் இந்துக்களுக்காக இந்த வசதியை ஏற்படுத்தித் தருகின்றனர். பாராட்டத்தக்கது.

மாலை 8 மணி அளவில் நானும் வெற்றிக் கதிரவன் (விஜய்) காவடிகள் புறப்படும் பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தோம். பெருமாளுக்கும் தைப்பூசத்திற்கும் தொடர்ப்பு எதுவுமில்ல்லை என்றாலும் காவடிகள் கட்டிச் செல்ல அந்த கோவில் வளாகம் எல்லாவிததிலும் வசதியாக இருக்கிறது மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு நடைபயணமாக முருகன் கோவில் நோக்கிச் செல்ல அங்கிருந்து புறப்படுவது சரியானதாக இருக்கும் என்பதால் பெருமாள் கோவில் காவடி புறப்படும் இடமாக முடிவு செய்திருக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்(ஊகம் தான்) . காவடிச் சீட்டு மற்றும் அர்சனை சீட்டு விற்பனையில் அடியார்களுக்கான குளிக்கும் நீர் உட்பட வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.


நாங்கள் சென்ற போது காவடி எடுக்கும் அடியார்கள் தங்கள் அமர்ந்து காவடி கட்டுவதற்கான இடங்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார்கள், அதன் அடையாளமாக பை மற்றும் பால் உறைகள் ஆகியவை இருந்தன. கோவிலுக்குள் அடியார்கள் வந்த வண்ணம் இருந்தனர். அப்படியே நோட்ட(நாட்டம், நோட்டம் > Note)மிட்டு வந்தேன். பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது. கடவுளுக்கு மொழி பேதம் இல்லை என்று சொல்வது போல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் சுற்றை (பிரகாரம்) சுற்றி வர அங்கங்கே பால் குடக் காவடிக் கட்டுவதற்க பலர் முனைப்புடன் பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். கோவில் வளாகத்தை அடுத்து இருக்கும் அவை (மண்டப) வளகாத்திற்கு வந்தோம். அங்கு தூக்கிச் செல்லும் ஒப்பனை (அலங்கார)க் காவடி வகைகள் வைக்கப்பட்டு அருகே ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். இரவு 11 மணிக்கு மேல் பால்குடமும் அதன் பிறகு ஒப்பனைக் காவடிகள் செல்லும், அங்கிருந்து முருகன் கோவில் ஏறக்குறைய (சுமார்) 4 கிமி தொலைவு. பின்னிரவு அல்லது அதிகாலையில் முருகன் கோவில் திறந்ததும் பால் முழுக்கு (அபிசேகம்) நடைபெறும்.


அவை வளாகத்தின் அருகே இருந்த பூக்கொல்லை (நந்தவனம்) அருகே அழகான இரு பெரிய மயில்களின் சிலைகள்( சிமெண்ட் சிற்பங்கள்) இருந்தன. அதற்கு கொஞ்சம் தள்ளி அவை கட்டிடத்தின் இடது பக்கம் பின் நுழைவாயிலுக்கு அருகே இரு யானைச் சிலைகள் முக்காடிட்டு இருந்தன. பெருமாள் கோவிலில் முக்காடிட்ட யானைகள், ஒருவேளை பெருமாளின் மனைவியரில் ஒருவராக கருதப்படும் துலுக்க நாச்சியார் வளர்த்த நற்குடியானைகளோ என்று நினைக்க... வந்த சிரிப்பை வெற்றிக்கதிரவன் அடக்கவில்லை.


அங்கிருந்து கோவில் நுழைவாயிலுக்கு வலப்புறம் இலவச உணவு வழங்கப்பட்டுக் கொண்டு இருந்தன, தாய்லாந்து மல்லிகை வாடையுடன் சிறிது இனிப்பு சுவையுடைய வெள்ளைச் சோறு கொஞ்சம் காய்கறிக் குழம்புடன், அப்போதே பொறித்து தரும் அப்பளத்துடன், பால்கலக்காத இஞ்சித் தேனிருடன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உணவு வழங்கல் ஸ்ரீலங்கன் வெஜிடேரியன்' ஏற்பாடு என்று போட்டிருந்தது, சில பவுத்த சாமியார்கள் நின்று கொண்டிருந்து உணவு வழங்கிக் கொண்டிருந்தனர், அவர்களில் சீனரும் அடக்கம்.

'ஸ்ரீலங்கன் சைவ உணவு' அங்கிட்டு பாவம் செய்துட்டு இங்கிட்டு புண்ணியம் தேடுறானுங்களோ என்று நினைக்க வைத்தது. ச்சே அதெல்லாம் இருக்காது இவிக வேறய இருக்கும், 'அண்ணே நாம இதைச் சாப்பிடலாமா ?' ன்னு தம்பி கதிரவன் கேட்டான். அவர்கள் நன்மை(புண்ணியம்) பெற செய்யப்படும் செயல்களின் நாம பங்கு எடுத்துக் கொண்டால் அவர்களின் தீமை(பாவப்) பங்கு நமக்கும் சேரும் என்று பெரியவர்கள் (மைனஸ், ப்ளஸ் கணக்கு) சொன்னதையெல்லாம் புறத்தே வைத்துவிட்டு, கோவிலில் சமயப்பணி ஆற்றுகிறார்கள் நாமும் அதற்கு ஒத்துழைப்போம் என்பதாக உண்டுவிட்டு வந்தோம்.

அருகே காவடிக்கான பால் விற்பனையும் நடந்தது, விஷ்ணு பால் நிறுவனத்தின் பால் புட்டிகள், ஒரு லிட்டர் அளவானவை. கோவிலுக்குள் நேராக வந்து காவடி கட்டுவதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கான பால், மாலை, பூசை பொருள்கள் அனைத்தும் கோவில் வளாகத்தினுள்ளேயே கிடைத்தன, சென்னை லெஷ்மி நரசிம்மன் கோவில் போல் மறு சுழற்சி விற்பனையெல்லாம் கிடையாது. கோவில் அமைப்பினர் (நிர்வாகம்) நன்றாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அங்கிருந்து மீண்டும் கோவில் வளாகத்தினுள் வர முன்பே பிறகு பார்க்கலாம் என விட்டுச் சென்ற இடம். காளைமீது அமர்ந்த உருத்ரன்,பார்வதிக்கு பூசைகள் நடைபெற்றிருந்தது,

முருகன் கோவில் காவடிக்கு இவர்கள் ஆசி கூறி அனுப்புவது தானே முறை, ஏனெனில் கோவில் பெருமாள் கோவில், அதனால் காவடிக்காக உருத்ரன்,பார்வதியையும் கோவினுள்ளே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் . அதை படம் எடுக்கவும் இசைகிறார்கள் (அனுமதி) . அங்கிருந்து கிளம்பிச் செல்ல இரவு 9:30 ஆகி இருந்தது. காவடி புறப்பாடுகளைப் அன்று பார்க்க முடியவில்லை.

மறுநாள் மாலை 7:00 மணி வரையிலும் காவடிகள் சென்று கொண்டிருந்தன. கூட்டத்திற்கும் குறைவில்லை, கூட்டமும் குறையவில்லை. ஒரு சில காவடிகளை படம் எடுத்து வந்தேன்.

அரோகரா.......அரோகரா !

20 கருத்துகள்:

ILA(@)இளா சொன்னது…

அரோகரா.......அரோகரா

துளசி கோபால் சொன்னது…

என்ன.....பார்வை கோவில் பக்கம் திரும்பி இருக்கு?????

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

என்ன.....பார்வை கோவில் பக்கம் திரும்பி இருக்கு?????//

பெயரிலேயே இருக்கு..கோவி..........ல் !
:)

ஷண்முகப்ரியன் சொன்னது…

பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது. கடவுளுக்கு மொழி பேதம் இல்லை என்று சொல்வது போல் இருந்தது. //

நிகழ்ச்சித் தொகுப்புடன், உங்கள் கருத்துத் தொகுப்பும் சுவையாக இருந்தது,கண்ணன்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

நேரில் பார்த்த திருப்தி..

இடுகை லைவ் ஆக இருக்கிறது

வாழ்த்துகள்..

பித்தனின் வாக்கு சொன்னது…

கட்டுரை மிகவும் அருமை. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம் அல்லவா. நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

கட்டுரை மிகவும் அருமை. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம் அல்லவா. நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.நன்றி.//

எதுவும் சாடல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வரும் !
:)

வெள்ளிக்கிழமை உங்களுக்கும் பலப்பல வேலைகள் இருக்கும், இவன் கூப்பிடுகிறானேன்னு மற்றதை விட்டுவிட்டு கிளம்பிவிடப் போகிறீர்கள் என்று விட்டுவிட்டேன். விஜய் கூப்பிட்டதால் நான் போனேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...

நேரில் பார்த்த திருப்தி..

இடுகை லைவ் ஆக இருக்கிறது

வாழ்த்துகள்..//

சிவா,

உங்கள் பதிவுகளையே காணுமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷண்முகப்ரியன் said...

பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது. கடவுளுக்கு மொழி பேதம் இல்லை என்று சொல்வது போல் இருந்தது. //

நிகழ்ச்சித் தொகுப்புடன், உங்கள் கருத்துத் தொகுப்பும் சுவையாக இருந்தது,கண்ணன்.//

நன்றி ஐயா,

மற்றவர்கள் பாராட்டும் போது மகிழும் மனம், உங்களைப் போன்றவர்கள் பாராட்டும் போது மனம் நிறைவாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA(@)இளா said...

அரோகரா.......அரோகரா//

வேலும் மயிலும் துணை !
:)

ராமலக்ஷ்மி சொன்னது…

படங்களும் பதிவும் நல்ல பகிர்வு. நன்றி.

துளசி மேடம் கேள்வியும்..
உங்கள் பதிலும்..:)!

ராமலக்ஷ்மி சொன்னது…

தமிழ்மணம் விருது 2009-க்கு பதில் 10 என இருக்கிறது, கவனியுங்கள். எட்டுக்கும் பத்துக்கும் இடையில் உங்களுக்கான விருது எங்கே என தேடிய போதுதான் தெரிந்தது:)! பத்திலும் விருதுகள் தேடிவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோவி சார்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம் விருது 2009-க்கு பதில் 10 என இருக்கிறது, கவனியுங்கள். எட்டுக்கும் பத்துக்கும் இடையில் உங்களுக்கான விருது எங்கே என தேடிய போதுதான் தெரிந்தது:)! பத்திலும் விருதுகள் தேடிவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோவி சார்!//

நன்றி மேடம். போட்டி நடந்த ஆண்டை மறந்துவிட்டு பரிசு பெற்ற ஆண்டை நினைவு வைத்து தவறாக குறிப்பிட்டுவிட்டேன். சரி செய்தாகிவிட்டது.

மீண்டும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமலக்ஷ்மி said...

படங்களும் பதிவும் நல்ல பகிர்வு. நன்றி.

துளசி மேடம் கேள்வியும்..
உங்கள் பதிலும்..:)!//

பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம் !

நிஜமா நல்லவன் சொன்னது…

photos ellaam iphone la edutha maathiri irukku:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நிஜமா நல்லவன் said...

photos ellaam iphone la edutha maathiri irukku:)//

பாம்பறியும் கால்கள் !!!

:)

நிஜமா நல்லவன் சொன்னது…

/கோவி.கண்ணன் said...

// நிஜமா நல்லவன் said...

photos ellaam iphone la edutha maathiri irukku:)//

பாம்பறியும் கால்கள் !!!

:)/

avvvvvvvvvvvvvvvv......

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி......

கட்டபொம்மன் சொன்னது…

நமது தேசத்துக்கு வாங்க‌

இது கட்டபொம்மனின் ஆணை

:‍))).

மயிலை கூட்டிக்கொண்டு வரவும் .

ஜோதிஜி சொன்னது…

தமிழர்கள் குறித்து யோசிக்கும் போது இலங்கையைப் போல இந்த சிங்கப்பூரும் தீராத ஆச்சரிய தேடலாகவே இருக்கிறது. மலேசியா விட்ட குறை தொட்ட குறையாக ஒரு முழுமை இல்லாதமாதிரியே தான் இன்றும் இருந்து வருகிறது. மற்றபடி துளசி கேட்டது போல் என் கேள்வியும்?

உங்கள் எழுத்துக்கு நான் தனியாக பாராட்ட வேண்டுமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்