ஒரு ஊரில் பழுத்த ஆன்மிகவாதி என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த பக்தன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் விஷ்ணு பூஜை செய்த பிறகே உணவு எடுப்பது வழக்கம். ஓரளவு தானம் செய்யும் பழக்கம் உள்ளவன். கிருஷ்ணா இராமா என்று சொல்லிவிட்டு உதவி கேட்டால் உடனே இய்ன்றதை செய்துவிடுவானாம்.
ஒருநாள் 75 வயது மதிக்கத் தக்க கிழவர் நடந்து வந்தவர் இந்த ஆன்மிக வாதியின் வீட்டின் முன் பசி மயக்கத்தால் விழுந்துவிட்டாராம். உடனடியாக பதறிய அந்த ஆன்மிகவாதி, அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து விட்டு,
"பகவானே இந்த முதியவருக்கு உதவி செய்ய எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, பெரியவரே பாருங்கள், கடவுள் இருக்கிறார், இல்லை என்றால் நீங்கள் என்வீட்டு வாசலில் விழுந்து இருக்காமாட்டீர்கள், உடனடியாக உங்களுக்கு உதவியும் கிடைத்திருக்காது" என்றானாம்
இதைக் கேட்டப் பெரியவர் திடுக்கிட்டார், காரணம் அவர் ஒரு நாத்திகர்.
"ஐயா நான் நாத்திகன், நீங்கள் ஒரு மனிதனாக என்னை மதிப்பதாக இருந்தால் நீங்கள் தரும் உணவை ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் கொள்கைக்கு எதிரானவன், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது" என்றாராம்
இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட ஆன்மிகவாதி, மேலே கைக்கூப்பி
"நான் ஒரு நாத்திக மூடனுக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, உன்னை நிந்திப்பவருக்கு உணவு அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்த பெரியவரை நோக்கி,
கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக
"உன்னைப் போன்ற நாத்திக மடையர்களுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்குஉதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்கு பாவம் நீங்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட
பெரியவர் வசைகளால் குறுக்கிப் போய்......மெளனமாக வெளி ஏறிவிட்டாராம்.
இன்னும் கோவம் தீராத, அந்த ஆன்மிகவாதி புலம்ப ஆரம்பித்து
"கடவுளே இது என்ன சோதனை, ஒரு நாத்திகனுக்கு உணவு அளித்து தவறு செய்ய இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் ஒளி வெள்ளம்.
அந்த ஆத்திகனுக்கு முன்னால் பகவான் கிருஷ்ணர் தோன்றி,
"முட்டாளே ! தினமும் என்னை நிந்தித்தாலும் அந்த முதியவனுக்கு 75 வயது வரை எவர் மூலமாவது தொடந்து உணவு அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாக சென்ற போது மயங்கி விழுந்த காரணத்தினால் கிழவனை பட்டினி போட்டுவிட்டாயே, கிழவனுக்கான இன்றைய உணவு உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "
என்றாராம்.
பேச்சே எழாமல் தன் தவறை உணர்ந்த ஆத்திகன் கண் முன்னே நிற்கும் கடவுளைப் பார்க்கக் கூட வெட்க்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்து தலைகுணிந்தானாம்.
குறிப்பு: இந்த கதை ஜக்கிவாசுதேவ் அவர்களின் நூலில் இருந்து படித்தது, பேச்சுரையில் சிறுது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு ஆன்மிக அரும்பெரும் வியாதி, என்கிற நினைப்பில் நாத்திகம் குறித்து தூற்றுவேர்க்கு அர்பணமாக்குகிறேன்.
உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் ஆன்மிகம் பேசலாம். பகவான் புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தான் இந்துவா ?
இது இந்தப் பதிவின் கதைக்கு எதிரானது அல்ல
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
16 கருத்துகள்:
கடவுளுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு.கடவுள் வேறு ஆன்மீகம் வேறு என்பது என் கருத்து
:)
கடவுளுக்கு காப்பி போட தெரியுமா!?
அப்படி போடுவதென்றால் கொட்டையை எங்கே அரைப்பார்!?
//உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால்//
மேலே சொன்ன 3ன்றிலும் “தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால்“ இதை எப்படி சேர்த்துள்ளீங்கள்.
உங்கள் உதவியால் இன்னொரு நல்ல கதை படித்த வாய்ப்பும் கிடைத்தது. அதற்கும் நன்றி.
"கடவுள் மீதான வேண்டுதலுடன் ஒரு குழுவினர் தீ மிதிக்கிறார்கள்; அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு எதிரே, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு குழுவினரும் தீ மிதிக்கிறார்கள். இருவருக்குமே எதுவும் ஆவதில்லை; இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்கிற கேள்விக்கு, "கடவுளின் இருப்பு தீ மிதித்தல் போன்ற சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று தெரிகிறது" என்று ஒரு பதில் படித்த ஞாபகம் வருகிறது.
கடவுளுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு.கடவுள் வேறு ஆன்மீகம் வேறு என்பது என் கருத்து
//RAHAWAJ said...
கடவுளுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு.கடவுள் வேறு ஆன்மீகம் வேறு என்பது என் கருத்து
//
ஆன்மிகமும் கடவுளும் வேறு அல்ல மதமும் கடவுளும் வேறு வேறு. ஆன்மிகவாதிகளின் கடவுள் குறித்த கட்டமைப்புகள் தான் வேறு.
அவரவர் மதங்களுக்கு வேறு வேறு கடவுள்கள். அடிப்படையே தவறாக இருப்பதே ஆன்மிகத்தின் முன்னேற்றத் தடை
//வால்பையன் said...
:)
கடவுளுக்கு காப்பி போட தெரியுமா!?
அப்படி போடுவதென்றால் கொட்டையை எங்கே அரைப்பார்!?
//
வெவகாரமான கேள்வியாக இருக்கே.
:)
//பாலாஜி said...
//உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால்//
மேலே சொன்ன 3ன்றிலும் “தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால்“ இதை எப்படி சேர்த்துள்ளீங்கள்.
//
தாழ்த்தப்பட்ட ஒருவரின் நிலை அன்றாடம் இறைச் சிந்தனை கொண்டு கிருஷ்ணா இராமா என்று கவலைகள் மறந்து இருக்கும் நிலை எங்காவது இருக்கிறதா ? அன்றாடம் பிழைத்ல் தான் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு கடவுள் துதி பற்றி நினைப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா ?
எந்த கவலையும் இல்லாதவர் வேண்டுமானால் எப்போது இறை புகழ்பாட முடியும்
//RATHNESH said...
உங்கள் உதவியால் இன்னொரு நல்ல கதை படித்த வாய்ப்பும் கிடைத்தது. அதற்கும் நன்றி.
"கடவுள் மீதான வேண்டுதலுடன் ஒரு குழுவினர் தீ மிதிக்கிறார்கள்; அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு எதிரே, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு குழுவினரும் தீ மிதிக்கிறார்கள். இருவருக்குமே எதுவும் ஆவதில்லை; இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்கிற கேள்விக்கு, "கடவுளின் இருப்பு தீ மிதித்தல் போன்ற சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று தெரிகிறது" என்று ஒரு பதில் படித்த ஞாபகம் வருகிறது.
12:22 AM, July 10, 2009
//
அப்பாற்பட்டது இல்லை என்றால் கடவுளின் விருப்பம் இது என்று லஞ்சம் கொடுக்க முயல்வார்களே !
திருப்பதி செல்லும் பக்தர்கள் அப்படி நினைக்கிறார்களோ ?
:)
// பிரியமுடன் பிரபு said...
கடவுளுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு.கடவுள் வேறு ஆன்மீகம் வேறு என்பது என் கருத்து
//
கடவுள் ஆன்மிகத்தின் வேர் !
:)
:)
உணவு என்பதே தெய்வ சொருபம்!
அதை ஒரு நாத்திகருக்கு அளித்து, நாத்திகருக்கும் தெய்வத்தை அறிமுகப் படுத்தினோம்-ன்னு மகிழ்வதை விட்டுவிட்டு, இப்படியா??? :)
சரி, நான் சிங்கை வந்தா உங்க வீட்டில் சோறு கிடைக்கும் தானே கோவி அண்ணா? :)
100% ஆத்திகன் என்று எவருமே இல்லீங்க-ண்ணா!
"உள்ளது" என்பது தானே ஆத்திகம்?
எங்கும் "உளன்",
எப்போதும் "உளன்",
எவரிடத்தும் "உளன்"
என்று ஆகும் போது தான் ஆத்திகம் சாத்தியம் ஆகிறது!
அதனால் தலைப்பை அரைவேக்காடு நாத்திகன்-ன்னு மாத்திக்கோங்க! :))
கடவுள் மட்டுமே உண்மையான ஆத்திகன்!
ஏன்-ன்னா அவருக்குத் தான், நாம் எல்லாரும் "உள்ளோம்" என்று நம் மேல் திடமான நம்பிக்கை! :)
பக்தன் உணவளிக்காததால் தான் அவனுக்கு விஷ்ணுவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் சொல்லலாம் அல்லவா
//கடவுளுக்கு காப்பி போட தெரியுமா!?
அப்படி போடுவதென்றால் கொட்டையை எங்கே அரைப்பார்!?//
இது மாதிரி கேள்வி கேக்க வால்பையன் போன்றோரால் மட்டுமே முடியும். கடவுள் என்ன ஈரோட்டில் பிறந்து மொக்கை நாத்திக பதிவும் போடும் வால்பையன் அளவுக்கா மூளையை வைத்திருப்பார்?
கருணாநிதி போன்றோர் எல்லாம் காபி குடிக்கிறார்களே? அவர்கள் எங்கு போய் காப்பி கொட்டை அரைக்கிறார்கள்?
:)
முட்டாள் ஆத்திகனும் இருக்கான்...நாத்திகனும் இருக்கான்..
OSHO words:
“From where comes belief? And from where unbelief? They are not different, they come from the same source; the hypocrite's heart.
You can see the hypocrites in the temples, mosques and churches. You can see them in so many shapes and so many sizes with so many different kinds of words, but it is the same source: hypocrisy.
Why is hypocrisy the source of belief and unbelief? A man says "I believe in God" without knowing anything about God. Without have ever experienced God, without having ever tasted God, he says, "I believe in God." From where is this belief coming? It is hypocrisy. He is pretending; he is deceiving others, he is deceiving himself.”
“The man who says, "There is no God" -- has he known? Has he enquired? Has he explored the whole existence and FOUND that there is no God? No, he has not explored it, this again is out of hypocrisy.
So remember: belief and unbelief, howsoever contradictory they look, the theist and the atheist, howsoever antagonistic they look, are the same. They come from the same source. Without knowing anything, without experiencing anything on their own, they go on believing, they go on declaring.
That's what hypocrisy is all about: to say something that you don't know, to utter something that is not your own authentic experience. To live in borrowed knowledge is hypocrisy. Deep down you are something, on the surface you pretend something else. This is hypocrisy.”
- Unio Mystica, Vol 1, Chapter #7
கருத்துரையிடுக