விடாகண்டன் : சென்ற மாதத்தில் ஒரு நாள் கோகோ கோலா வெண்டிங் பெட்டியில் காசுகளைப் போட்டுவிட்டு கோகோ கோலா வரும் என்று பார்த்தால் வரவே இல்லை. வெயில் நேரம் எரிச்சலானதே மிச்சம். இரண்டு மூன்று முறை தட்டிப் பார்த்தேன், காசுகளும் திரும்ப வரவில்லை. பெட்டி கோளாறு இல்லை என்பதற்கு சாட்சியாக விளக்குகள் எரிந்ததை வைத்துத் தான் காசுகளைப் போட்டு குளிர்பானம் எடுக்க முயன்றேன். என்ன செய்வது இதை இப்படியே விட்டு விட்டுச் செல்வதா ? என்று நினைத்து பின்வாங்கும் முன் அந்த குளிர்சாதன் பெட்டியில் பழுது அடைந்தால் தொடர்பு கொள்ள 'எண்' இருந்தது, அழைத்து விவரம் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள், உங்கள் காசுகளை (ஒருவெள்ளி 20 பைசா) உங்களுக்கு காசோலை அனுப்பி வைக்கிறேன் என்றார்கள். சரி என்று விவரங்கள் கொடுத்தேன், மறு நாள் அலைபேசியில் அழைத்து, காசோலைக்கு பதிலாக உங்களுக்கு பரிசு கூப்பன் தருகிறேன், அதைக் கொண்டு போய் நீங்கள் பெர்கர் கிங்கில் குளிர்பானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர், எப்படியோ போட்ட காசு எந்த வடிவத்தில் கிடைத்தால் என்ன ? சரி என்றேன். சொன்னபடியே இரண்டு குளிர்பானங்களுக்கான பரிசு கூப்பனை அனுப்பினார்கள், அதை குளிர்பானமாக மாற்றிக் குடித்தும் விட்டேன். வெண்டிங் பெட்டி வாடிக்கையாளர்கள் ஒரு வெள்ளி தானே என்று சிறிய தொகைக்கு மதிப்புக் கொடுக்காவிட்டால், பெட்டிகளை உடனே சரி செய்யவும் மாட்டர்கள், மேலும் பலர் நட்டம் அடைவார்கள். நமக்கும் நட்டமே. அடுத்த முறை வெண்டிங் பெட்டியில் போட்ட காசு சிக்கிக் கொண்டால் போனைப் போடுங்க. சிங்கையில் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும், சென்னையில் என்றால் கஸ்மாலம், சாவு கிராக்கி 40 ரூபாய்க்கு கணக்கு பார்க்கிறது பாரேன் என்று திட்டிவிட்டு போனை வைத்துவிடுவார்கள். ஆதங்கத்தை தினமணிக்கு கடிதமாக எழுதி தீர்த்துக் கொள்ள முடியும்.
பழைய நண்பன் : தொடர்பு விட்டுப் போன என்னுடைய கல்லூரி கால நண்பர் ஒருவர் 'தி ஹிந்துவில்' வேலை பார்க்கிறார் என்ற தகவல் கிடைக்க, அங்கு வேலை செய்த மங்களூர் சிவாவை தொடர்பு கொண்டேன். அண்ணே எந்த டிவிசன் என்று சொல்லுங்க என்று கேட்டார், அப்போது முழுவிவரம் தெரியவில்லை. இது நடந்து 2 ஆண்டுகள் ஆச்சு, மீண்டும் ஊருக்கு சென்ற போது நண்பர் திருச்சி ஹிந்துவில் பணி புரிகிறார் என்கிற விவரம் மட்டும் கிடைத்தது, சென்றவாரம் மறுபடியும் நண்பரின் அலைபேசி எண்ணைப் பெற்றுத் தர செல்வேந்திரனையும் மங்களூர் சிவாவையும் தொடர்பு கொண்டு கேட்க, மறு நாள் பெற்றுத்தருவதாக செல்வேந்திரன் கூறினார். மறுநாள் சிவாவே நண்பரின் அலைபேசி எண்ணைப் பெற்றுத் தந்தார். அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தேன், 'நண்பருக்கு என் குரல் அடையாளம் தெரியவில்லை, ஒருவழியாக பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு நான் தாண்டா..' என்றே பிறகு பேசினார். அன்னிக்கு என்று பார்த்து அவருக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவ விடுப்பில் இருந்தாராம். எப்படியோ வலையுலக நண்பர்களால் ஏற்படும் பல பயன்களில் அறுந்த தொடர்பை மீட்டுக் கொள்ளவும் முடிகிறது.
சானியாவுக்கு திருமணம் ஆச்சு : இந்த ஊடகங்கள் சானியா திருமணத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்று தெரியவில்லை. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்பிள்ளை என்பார்கள், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு அதெல்லாம் கிடையாது, பொண்டாட்டி உயிரோடு இருக்கும் போதே சர்சை எழுப்பினால் தலாக், இல்லாட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சிலரால் நடத்திக் கொள்ளப் படுகிறது. முகமது நபி காலத்தில் கட்டற்ற திருமணங்களின் கட்டுப்பாட்டிற்காக உயர் எல்லையாக நான்கு மனைவிகள் வரை மட்டுமே ஒருவர் திருமணம் செய்ய சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது, சிலர் அதை நான்கு வரையிலும் அனுமதி கொடுத்திருப்பதாக இன்றும் புரிந்து கொள்கிறார்கள் என்பது ஆணாதிக்க மன நிலைதான். பல தார மண சமூகத்தில் முகமது காலத்தில் நான்கு வரை என்பது கட்டுபாடு, அதை சட்டத் தளர்ச்சியாக இஸ்லாமியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள், இஸ்லாம் நல்ல மதம், பின்பற்றுபவர்கள் தான் மோசமானவர்கள் என்று பெர்னாட்ஷா சொன்னாராம், உண்மை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அபகரித்திருக்கிறார் சானியா என்பதையெல்லாம் சானியாவோ, சோயாப் மாலிக்கோ கண்டு கொள்ளவில்லை. சானியாவுக்கு வாழ்த்து சொல்லி வழியனுப்புவோம். "நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லை, விவாகரத்து செய்துவிட்டு ஒராண்டுக்கும் மேலாக வாய்தா வாங்க்கிக் கொண்டு அலைகிறேன், கேஸ் இழுத்தடிக்குது இன்னும் முடிந்தபாடில்லை, இனிமே நான் என்னத்த இன்னொரு கல்யாணம் செய்து...." பல இந்து நண்ப/நண்பிகளின் புலம்பல் இது. எனது சீன நண்பரான மலேசியர், என் மகள் எந்த இன வாலிபனை காதலித்தாலும் அனுமதிப்பேன் மலாய்காரனைத் தவிர, என்றார். ஏன் என்று கேட்டேன். நாளைக்கே அவன் இன்னொரு திருமணம் செய்து எம் மகளை கைவிட்டான் என்றால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. பரவலாக நடக்கிறது என்றார். கஷ்டம் தாங்க. மணமான பெண்ணுக்கு விவாகரத்து செய்யும் உரிமை மட்டுமே உண்டு, அவளால் வேறு என்ன செய்தாலும் தலாக் நிகழ்வை தடுக்க முடியாது. தமிழ் முஸ்லிம்கள் பலதார மணத்தை விரும்புவதில்லை என்பது ஆறுதலானது, இதற்கு காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு.
தமிழ்வெளி - என்ன ஆச்சு ?
தமிழ்வெளி திரட்டி வேலை செய்யலையே... என்ன ஆச்சு ? தொடர்பு கொண்டு கேட்டேன். மூன்றாம் ஆண்டு நிறைவிற்காக புதுப் பொலிவுடன் அணியம் (ஆயத்தம்) ஆகிறதாம். தமிழ்வெளி நிறுவனர் தெரிவித்தார்.
***********
சிஷ்யர் : சாமியை இப்ப பாக்க முடியாது, நித்ய பூஜையில், சமாதி நிலையில் இருக்கார்
ஒரு பெண் : சாமி கூடவே சமாதி நிலையில் இருக்கும் சிஷ்யயின் அம்மா வந்திருக்கேன் என்று சொல்லுங்க, அவளை சீக்கிரமாக வரச் சொல்லுங்க, நான் பார்த்துட்டு கிளம்பனும்.
(இவனால் பிரம்மச்சாரியம், சமாதி எல்லாத்துக்கும் பொருள் மாறிப் போச்சு)
57 கருத்துகள்:
நல்லாக் கலந்து கட்டுன கலவையா இருக்கு.
சமாதி.....ஜோர்
:)))
\\ஒரு வெள்ளி தானே என்று சிறிய தொகைக்கு மதிப்புக் கொடுக்காவிட்டால், பெட்டிகளை உடனே சரி செய்யவும் மாட்டர்கள், மேலும் பலர் நட்டம் அடைவார்கள்\\
பிறர் துன்பம் அடையக்கூடாது என்ற வகையில் செயலாற்றிய உங்களை பாராட்டுகிறேன் கோவியாரே !!
//துளசி கோபால் said...
நல்லாக் கலந்து கட்டுன கலவையா இருக்கு.
சமாதி.....ஜோர்//
நன்றி அம்மா !
// T.V.ராதாகிருஷ்ணன் said...
:)))//
நன்றி சித்தப்பா !
//பிறர் துன்பம் அடையக்கூடாது என்ற வகையில் செயலாற்றிய உங்களை பாராட்டுகிறேன் கோவியாரே !!//
நன்றி சிவா.
சானியா மிர்சா திருமணம் குறித்து ஏன் குதிக்கிறோம், கவலை படுகிறோம் என்றால் , எங்கள் வரி பணத்தை இந்திய அரசு செலவழித்து சானிய மிர்சா விற்கு பயிற்சி கொடுத்தது, பயணப் படி கொடுத்தது.
இன்று பயிற்சி எல்லாம் முடித்து விட்டு, இந்தியாவிற்கு டாடா சொல்லி போகிறாரே என்ற வருத்தம் தான்.
பயிற்சிக்காக இந்திய அரசு செலவு செய்த பணத்தை எல்லாம் அவர் திரும்பி கொடுத்தால், அவரின் பெருந்தன்மையை, காதலை போற்றுவோம்.
//(இவனால் பிரம்மச்சாரியம், சமாதி எல்லாத்துக்கும் பொருள் மாறிப் போச்சு)///
உங்களின் கவலையயைப் பார்த்தால் நீங்க சந்நியாசம் வாங்குவதாக இருந்தீங்களோ என்ற ஐயம் வருகின்றது :-)
//Blogger TBCD said...
//(இவனால் பிரம்மச்சாரியம், சமாதி எல்லாத்துக்கும் பொருள் மாறிப் போச்சு)///
உங்களின் கவலையயைப் பார்த்தால் நீங்க சந்நியாசம் வாங்குவதாக இருந்தீங்களோ என்ற ஐயம் வருகின்றது :-)//
ஆமாம் தம்பி நானும் ஒரு நித்யாவாக.......ஆசைப்பட்டேன்.
:)
////கோவி.கண்ணன் said...
//Blogger TBCD said...
//(இவனால் பிரம்மச்சாரியம், சமாதி எல்லாத்துக்கும் பொருள் மாறிப் போச்சு)///
உங்களின் கவலையயைப் பார்த்தால் நீங்க சந்நியாசம் வாங்குவதாக இருந்தீங்களோ என்ற ஐயம் வருகின்றது :-)//
ஆமாம் தம்பி நானும் ஒரு நித்யாவாக.......ஆசைப்பட்டேன்.
:)////
அத்தனைக்கும் ஆசைப்"படு" என்று இறங்கிட்டீங்களா :-)
//ராம்ஜி_யாஹூ said...
சானியா மிர்சா திருமணம் குறித்து ஏன் குதிக்கிறோம், கவலை படுகிறோம் என்றால் , எங்கள் வரி பணத்தை இந்திய அரசு செலவழித்து சானிய மிர்சா விற்கு பயிற்சி கொடுத்தது, பயணப் படி கொடுத்தது.//
அமெரிக்க குடிமகள் ராக்கெட்டில் போனால் நமக்கு பெருமைங்கிறோம். நாம அவர்களுக்காக எதாவது செலவு செய்திருக்கிறோமா ?
// இன்று பயிற்சி எல்லாம் முடித்து விட்டு, இந்தியாவிற்கு டாடா சொல்லி போகிறாரே என்ற வருத்தம் தான்.//
வேண்டுமென்றால் 'அம்பானி' சொல்லச் சொல்லுவோம். சும்மா தமாஷு :)
// பயிற்சிக்காக இந்திய அரசு செலவு செய்த பணத்தை எல்லாம் அவர் திரும்பி கொடுத்தால், அவரின் பெருந்தன்மையை, காதலை போற்றுவோம்.//
நாடாளுமன்றக் கூட்டத்தில் ரகளை செய்து மக்களின் வரிப்பணத்தை டன் கணக்கில் வீணாக்குகிறார்கள். நம்ம சானியாதானே விடுங்கள்.
:)
//TBCD said...
அத்தனைக்கும் ஆசைப்"படு" என்று இறங்கிட்டீங்களா :-)//
நீதான் எனக்கு சிஷ்யனாக இருக்க முற்றிலும் தகுதியானவன், பெங்களூர் கிளை உன்னுடையது.
/// கோவி.கண்ணன் said...
//TBCD said...
அத்தனைக்கும் ஆசைப்"படு" என்று இறங்கிட்டீங்களா :-)//
நீதான் எனக்கு சிஷ்யனாக இருக்க முற்றிலும் தகுதியானவன், பெங்களூர் கிளை உன்னுடையது.///
பெங்களூர் பிடதியில் பின்னங்கால் பிடறியில் படுமளவிற்கு ஏற்கனவே சாமியார்கள் ஓட்டமாம்.
இதுலே நான் வேறையா..
ஆளை விடுங்க !
//பெங்களூர் பிடதியில் பின்னங்கால் பிடறியில் படுமளவிற்கு ஏற்கனவே சாமியார்கள் ஓட்டமாம்.
//
அவங்க தான் நம்முடைய குறி.
:)
//இதுலே நான் வேறையா..
ஆளை விடுங்க !//
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, பெங்களூர் வந்து ஒரு 10 நாள் பயிற்சி தருகிறேன். அப்பறம் ஓஹோன்னு வருவோம்.
அருமையான பதிவு
// சானியா திருமணம் //
விளையாட்டு வீரர்கள்
விளையாண்டு விட்டார்கள்
அவ்வளவு தான்
சூப்பர் தல
உங்களின் தளத்திற்கு வந்துள்ளேன் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்
// பாலாஜி said...
உங்களின் தளத்திற்கு வந்துள்ளேன் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்//
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
நன்றி யோகி
கோவி கண்ணன் நீங்க வெண்டிங் இயந்திரம் பற்றி கூறியவுடனே நினைத்தேன் அவர்களுக்கு தொலைபேசியில் அழைக்காமலே என்று! :-) சரியாகத்தான் செய்துள்ளீர்கள் :-) நானாக இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பேன்.
எனக்கு சிங்கையில் பிடித்த விசயமே எதை கேட்டாலும் பொறுப்பாக பதில் சொல்வது அதை செயலிலும் காட்டுவது. இவர்கள் முன்னேற்றத்திற்கு இது முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.
மட்டுறத்தல் நீக்கப்பட்டு விட்டாதா ;-)
//எனது சீன நண்பரான மலேசியர், என் மகள் எந்த இன வாலிபனை காதலித்தாலும் அனுமதிப்பேன் மலாய்காரனைத் தவிர, என்றார். ஏன் என்று கேட்டேன். நாளைக்கே அவன் இன்னொரு திருமணம் செய்து எம் மகளை கைவிட்டான் என்றால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. பரவலாக நடக்கிறது என்றார்.//
பொதுவாகவே சீனர்கள் மலாய்காரர்களோடு மணம் செய்வதை வெறுக்கிறார்கள் - மலேசியாவில்.
விரும்புகிறார்கள் (வேற வழியில்ல) - இந்தோனோசியாவில்
\\ தமிழ் முஸ்லிம்கள் பலதார மணத்தை விரும்புவதில்லை என்பது ஆறுதலானது, இதற்கு காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு. \\
நல்ல புரிதல் நன்றி..
இதை வீட இன்னேரு நல்ல விஷயம் சீனர்கள் சில்லறை பாக்கி தருவது. இரண்டு கைகளாலும் நோட்டைப் பிடித்து பவ்யமாக தருவார்கள். நம்ம ஆளுக மாதிரி டேபிள் மேல வீசியடிக்க மாட்டார்கள். நல்ல பதிவு அண்ணா.
ஜோக் நல்லாயிருக்கு!
//அடுத்த முறை வெண்டிங் பெட்டியில் போட்ட காசு சிக்கிக் கொண்டால் போனைப் போடுங்க. சிங்கையில் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும், சென்னையில் என்றால் கஸ்மாலம், சாவு கிராக்கி 40 ரூபாய்க்கு கணக்கு பார்க்கிறது பாரேன் என்று திட்டிவிட்டு போனை வைத்துவிடுவார்கள். ஆதங்கத்தை தினமணிக்கு கடிதமாக எழுதி தீர்த்துக் கொள்ள முடியும்.//
:)
பல தார திருமணம் பற்றி குரான் கூறுவது என்னவென்றால்
நீங்கள் திருமணம் செய்ய ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக, மூன்று மூன்றாக செய்து கொள்ளுங்கள் என்று. அப்புறம் முகமதுவே கூட தன் மகள் பாத்திமா(?)கூட ஹுசைனுக்கு இரண்டாவதாக தர பாதி மணதோடுதான் ஒப்புக் கொண்டார் என்று அதிஸ் சொல்லவதாக ஒரு பழைய முஸ்லீம் நண்பர் சொன்னதாக ஞாபகம்.
நல்ல புரிதலுடன் கூடிய பதிவு அண்ணா.
இங்கு சவுதியிலேயே குறைவான சிலரை தவிர ரெண்டு திருமணம் செய்தவரை நான் பார்த்ததில்லை. மேலும் அவ்வாறு செய்தாலும் பெண் தரப்புப்புக்கு கொடுக்க வேண்டிய தொகையை செட்டில் செய்த பின்பே முடிக்க முடியும்.
மண விசயத்தில் பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளன.
இன்னும் சிலர் வருமானம் குறைவாக இருப்பதால் திருமணம் செய்யாமலே இருக்கின்றனர். (ஏன்னா பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும்)
//ராஜரத்தினம் said...
பல தார திருமணம் பற்றி குரான் கூறுவது என்னவென்றால்
நீங்கள் திருமணம் செய்ய ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக, மூன்று மூன்றாக செய்து கொள்ளுங்கள் என்று. அப்புறம் முகமதுவே கூட தன் மகள் பாத்திமா(?)கூட ஹுசைனுக்கு இரண்டாவதாக தர பாதி மணதோடுதான் ஒப்புக் கொண்டார் என்று அதிஸ் சொல்லவதாக ஒரு பழைய முஸ்லீம் நண்பர் சொன்னதாக ஞாபகம்.
//
உங்களுக்கெல்லாம் கட்டை பிரம்மச்சாரி என்றுக் கூறிக் கொள்ளும் சாமியார்களின் நாட்டுக்கட்டை தேடல் கதைகளைவிட இது போன்ற கதைகள் தான் யார் யாரோ சொன்னாலும் மனதில் நிற்கும் போல.
கோக்குல ஆரம்பிச்சி கோக்குமாக்கு வரைக்கும்...கலவை கலக்குது :)))
விடாகண்டன்
///
உபயோகமான தகவல்
சானியாவுக்கு திருமணம் ஆச்சு : இந்த ஊடகங்கள் சானியா திருமணத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.
///
ரொம்ப முக்கியம்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கலந்து கட்டியிர்ருகீங்க கலவையில்
பொண்டாட்டி உயிரோடு இருக்கும் போதே சர்சை எழுப்பினால் தலாக், //
இருக்காதா பின்னே!?
பொண்டாட்டி உயிரோட இருக்கையில ஏன் சரசை போய் எழுப்ப வேண்டும்?
சரசு யாரு வைப்பாட்டியா?
:))))
எனக்கு சிங்கையில் பிடித்த விசயமே எதை கேட்டாலும் பொறுப்பாக பதில் சொல்வது அதை செயலிலும் காட்டுவது. இவர்கள் முன்னேற்றத்திற்கு இது முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.//
உங்கள் கூற்றும் சரியே!
காத்தோங் சாப்பிங் செண்டர் எங்க இருக்குன்னு கேட்டேன்!
No Idea என்று மிகவும் பொருப்பாக, பொறுமையாகச் சொன்னார் அங்கு கடை வைத்திருக்கும் ஒரு சீன ஆடவர்.
அங்கங்க தேடிப்பாத்துட்டு திரும்ப வந்து அதே பில்டிங்க அன்னாந்து பாத்தா அதுதான் காத்தோங் சாப்பிங் செண்டர்.
:))))
//No Idea என்று மிகவும் பொருப்பாக, பொறுமையாகச் சொன்னார் அங்கு கடை வைத்திருக்கும் ஒரு சீன ஆடவர்.
அங்கங்க தேடிப்பாத்துட்டு திரும்ப வந்து அதே பில்டிங்க அன்னாந்து பாத்தா அதுதான் காத்தோங் சாப்பிங் செண்டர்.
:))))//
நீங்க சைனா மேனிடம் ஆங்கிலத்தில் கேட்டால் அவன் அப்படித்தான் பதில் சொல்லுவான், அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
//பலதார மணத்தை விரும்புவதில்லை ... காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு.//
LoL!!
தமிழ்ப் பண்பாட்டில் ஒரு தாரம்தான் மணந்துகொள்ள வேண்டும் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? தமிழ்ப் பண்பாடுக்கென்று தனி சட்டதிட்ட நூல் எதுவும் இருக்கிறதா?
தமிழ்த் தாயின் தலைமகன் கருணாநிதி முதல் அவர்தம் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் முதல் இளையவரான என்.கே.கே.பி.ராஜா வரை (குறைந்தது) இருதார மணம் புரிந்தவர்களே!! அரசியல் கலக்காத பெரிய மனிதர்கள் கூட இரண்டாவது மனைவி அல்லது தொடுப்பு வைத்திருக்கிறார்கள். சரவணபவன் அண்ணாச்சி நினைவு உங்களுக்கு வரும் நிச்சயம்.
எழுத்தாளர் பாலகுமாரன்? நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன்?
அந்தக் கால கோவலன், அதான் கற்புக்கரசி கண்ணகியின் கணவன்? அன்று அரசாண்ட எல்லா தமிழ்மன்னர்களின் அரண்மனையிலும் அந்தப்புரம் என்று இருந்ததே, அதில் இருந்தவர்கள் எல்லாம் யார்?
தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகன்?
// ஹுஸைனம்மா said...
//பலதார மணத்தை விரும்புவதில்லை ... காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு.//
LoL!!//
விரும்புகிறார்கள் என்று சொல்லவருகிறீர்களா ? LoL க்கு காரணம் புரியவில்லை. பெற்றோர்கள் எதிர்க்கவில்லை என்றால் வசதி உள்ள முஸ்லிம் ஆடவர் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்தால் யாராவது தடுக்க முடியுமா ? இஷ்டப்பட்டால் இருக்கலாம் என்பது தானே முதல் மனைவியின் நிலை.
// தமிழ்ப் பண்பாட்டில் ஒரு தாரம்தான் மணந்துகொள்ள வேண்டும் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? தமிழ்ப் பண்பாடுக்கென்று தனி சட்டதிட்ட நூல் எதுவும் இருக்கிறதா?
//
கம்பராமாயணம் வெற்றிகரமாக தமிழர்களால் பேசப்படுவதற்குக் காரணம் அதன் ஒருதார வழியுறுத்தல் தான். சமஸ்கிரத மூல இராமயணத்தில் ஒருதார மணம் புரிதலுக்கான அழுத்தம் எதுவும் கொடுக்கப் படவில்லை.
//தமிழ்த் தாயின் தலைமகன் கருணாநிதி முதல் அவர்தம் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் முதல் இளையவரான என்.கே.கே.பி.ராஜா வரை (குறைந்தது) இருதார மணம் புரிந்தவர்களே!! அரசியல் கலக்காத பெரிய மனிதர்கள் கூட இரண்டாவது மனைவி அல்லது தொடுப்பு வைத்திருக்கிறார்கள். சரவணபவன் அண்ணாச்சி நினைவு உங்களுக்கு வரும் நிச்சயம். //எழுத்தாளர் பாலகுமாரன்? நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன்?//
//
பிரபலங்கள் இரு மனைவிகள் உடையவராக அறியப்படுவதற்குக் காரணம் அவர்கள் பிரபலம் என்பதால் தான், பொதுமக்களாக அவர்கள் இருந்தால் இது வெளியே தெரியாது. நான் அறிந்த பொது மனிதர்களில் 1 - 2 பேரைத்தான் இரண்டு பெண்டாடிக்காரர்களாக பார்த்திருக்கிறேன்.
//அந்தக் கால கோவலன், அதான் கற்புக்கரசி கண்ணகியின் கணவன்? அன்று அரசாண்ட எல்லா தமிழ்மன்னர்களின் அரண்மனையிலும் அந்தப்புரம் என்று இருந்ததே, அதில் இருந்தவர்கள் எல்லாம் யார்?//
அதெல்லாம் பழைய காலம், இப்போது இரண்டாம் மணம் குறித்து யாரும் நினைப்பதே இல்லை.
//தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகன்?//
இச்சா சக்தி, கிரியா சக்தி என மனைவிகளாக குறிப்பிட்டு இருப்பது ஒரு உருவகம் என்று தான் சொல்கிறார்கள்.
ஒருதார மணத்துக்கு பெரும் காரணம் பொருளாதாரமும், ஒருதார புடுங்கலே தாங்க முடியாமையும் தான் எல்லா மதத்திலும் இருக்குமே தவிர, தமிழர் பண்பாடு என பிரிப்பது உண்மையில் நகைப்புகுறியது தான் கோவி!
2000 ஆண்டுகளுக்கும் முன் திருகுறளில் கூட பெண் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்காக சால்ஜாப்பு காட்டி பிறன்மனை நோக்காமை எழுதியது போல் தான் தெரிகிறது!
\\இதற்கு காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு\\
தமிழ் பண்பாட்டில் பல தார மணம் இல்லையா? பிரபலங்கள் மட்டும் இல்லை இன்னும் பல கிராமங்கள்ல பலதார மணம் நடைமுறையில இருக்கு.. இதை நான் ஏனோ தானோன்னு சொல்லல, அவுட்லுக் பத்திரிக்கையின் கட்டுரை:
Where Three Is A Couple
In Tamil Nadu, the establishment of a second wife in an alternate household is an accepted, and resp ected, social phenomenon
And celebrity Chinnaveedus abound. Chief Minister M. Karunanidhi has two wives.
Former chief minister M.G. Ramachandran was known to keep the company of more than one woman. Strangely enough, this aspect of his private life did not in any way take away from his popularity or status as a politician. This was perhaps because even while he was a film star MGR was known for the female company he kept.
Notes MGR's biographer, former DGP K. Mohandas in MGR:The Man and the Myth: "It is often considered a matter of prestige to have one or more lady friends. MGR was honest about it and did not hide it."
Justified as tradition handed down from an era when it was not deemed improper for the landed gentry to keep more than one woman, a way of life also immor-talised in verse by early Tamil poets, the second woman in the Tamil man's life is supposed to signify male virility.
Popular script writer Balakumaran, who has penned many Tamil hits, takes great pride in the fact that he has another woman in his life. His second wife, Sharada, was a fan and when they met, it was love at first sight. Initially, he kept his second wife separately but soon talked it over with his first wife who accepted her husband's new relationship. Now the two wives live together and, as Balakumaran says, in perfect harmony: "Both the women are friends. So we live happily." Much like his films.
In the villages close to the temple city of Thanjavur, bigamy is fairly common and has social sanction
Annadurai hails from the same district as AIADMK leader S. Thirunavukkarasu, who has also married two sisters. Another AIADMK leader, S. Kalimuthu, a minister in MGR's cabinet, has two wives—one is an active member of the AIADMK while the other swears by the DMK.
Those who see nothing wrong in the second woman concept point out that monogamy is a recent phenomenon and that if one dips into Tamil literature there are enough references to the 'other woman'. In the Sangam period, as many as 342 poems dealt with the 'other woman'—though there isn't a single one on the 'other man'.
http://www.outlookindia.com/article.aspx?202433
// நாஸியா said...
\\இதற்கு காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு\\
தமிழ் பண்பாட்டில் பல தார மணம் இல்லையா? //
ஏற்கனவே ஹுசைனம்மாவிற்கு கொடுத்த பதில் தான்.
இருதார மணம் என்பதே ஆணாதிக்கம் அதற்கு மதம் ஆதரவு கொடுக்குது என்பது தான் கட்டுரையின் புரிதல். மற்ற மதங்களில் இருதார மணம் தனிமனித செயல் அதற்கு மதங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்ற விதத்தில் எழுதி இருக்கிறேன்.
நான்கு மனைவிகளை சமமாக நடத்த முடியுமென்றல ஒரு இஸ்லாமிய ஆடவனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்ள தடை இல்லை. பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ள மட்டுமே அனுமதி.
ஒருவரின் செல்வ நிலை என்றும் ஒன்று போல் இருப்பதில்லை, நாலாவது மனைவியை கட்டிய பிறகு அவன் நொடித்துப் போனால் அவனது வாரிசுகளுக்கும், மனைவிகளுக்கும் மதம் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை அனுமதியுடன் அவை முடித்துக் கொள்கின்றன என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
நான் இஸ்லாமுக்கு எதிராகவே எழுதியதாக தாங்கள் நினைத்தாலும் இங்கு பெண்ணுரை பேசி இருப்பது உங்கள் இருவருக்குமே தெரியாமல் போவது எனக்கு வியப்பாக இருக்கிறது. தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் எந்த ஒரு முஸ்லிம் தகப்பனோ, அல்லது பிற மதத்தகப்பனோ தன் மகளின் இடத்தை இன்னொருவர் பங்கு போட்டுக் கொள்வதை விரும்ப மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இதற்கு மேலும் இதை வெறும் மதவெறுப்பாக எழுதப்பட்டு இருப்பதாகவே தாங்கள் உணர்ந்தால் உங்கள் விருப்பப்படியே பொருள் வைத்துக் கொள்ளுங்கள்
//
ஒருதார மணத்துக்கு பெரும் காரணம் பொருளாதாரமும், ஒருதார புடுங்கலே தாங்க முடியாமையும் தான் எல்லா மதத்திலும் இருக்குமே தவிர, தமிழர் பண்பாடு என பிரிப்பது உண்மையில் நகைப்புகுறியது தான் கோவி!
2000 ஆண்டுகளுக்கும் முன் திருகுறளில் கூட பெண் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்காக சால்ஜாப்பு காட்டி பிறன்மனை நோக்காமை எழுதியது போல் தான் தெரிகிறது!//
திருவள்ளுவர் ஏன் குழந்தை திருமணங்களை தடுக்கவில்லை, அது பற்றி எழுதவில்லை என்று கேட்பீர்கள் போலும், அன்றைய பண்பாட்டுச் சூழலில் சமூகக் கேடுகள், பயன்கள் என்ற அளவில் தான் திருக்குறளை புரிந்து கொள்ள முடியும், திருக்குறள் மட்டும் இல்லை, மத(வாத) புனித நூல்களும் அப்படியே.
//திருக்குறள் மட்டும் இல்லை, மத(வாத) புனித நூல்களும் அப்படியே.//
அப்படியே ஏற்று கொண்டாலும் ஒருதார மணத்துக்கு காரணம் தமிழ்பண்பாடு அல்ல என்பதற்க்கு சரியான விளக்கம் இல்லையே!
ஆண்டாண்டு காலமாக ஆண்கள் நலன் கருதியே சட்டமும், மதமும் இயங்கி வந்திருக்கிரதே தவிர விதவை பெண்கள் மறுமணத்திற்கு எந்த பண்பாடு வாசல் வைத்திருக்கிறது!?
@ கோவி அண்ணா.
தமிழர் பண்பாடு என்பதை நிர்ணயிப்பது எது?? நடத்தையா? அல்லது பழக்க வழக்கமா??
நடத்தை என்றால் அந்த நடத்தையை பண்பாடாக நிர்ணயிப்பது காலம்தானே. ஆக ஒரு நடத்தை எத்தனை ஆண்டுகள் பழக்கத்தில் இருந்தால் அது பண்பாடாக கருதப்படும் என்று ஏதேனும் கணக்கு வழக்கு இருக்கின்றதா???
காரணம் சற்றொப்ப 80 ஆண்டுகளுக்கு முன்வரை பலதார மணம் தமிழ் சமூகத்தில் பரவலாக அனைத்து பிரிவினரிடமும் இருந்தது. வசதி படைத்த தமிழ்ச் சாதியினர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை ஊரறிய செய்து கொண்டனர். சற்றே வசதி குறைந்த சாதியினர் ஊரறிய கோவிலில் உள்ள பரத்தையரோடு உறவு கொண்டனர் (Temporary commetment). தாழ்த்தப்பட்டோருக்கு இந்த Temporary commetment வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் மனிதர்களாக இருக்கவே வாய்ப்பு மறுக்கப்பட்ட காலம். ஆனால் அவர்களிலும் பலதார மணம் இருந்தது. ஆக அனைத்து தமிழ்சாதிகளிலும் பரவலாக பலதாரமணம் இருந்தது. தமிழ் சாதிகளில் ஒன்றான தமிழ் இஸ்லாமியர்களிடமும் இருந்தது. இப்போது எந்த தமிழ்சாதியிடமும் பலதாரமணம் இல்லை. தமிழ் இஸ்லாமியர்களிடமும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் இலக்கியங்களில் இருந்தது. எதார்த்த வாழ்வில் இல்லை. எப்படி ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் இருந்தும் தமிழ்நாட்டில் முக்காவாசி பேர் ஹெல்மட் போடுவதில்லையோ அப்படி. எழுத்தில் இருப்பதை வைத்து ஹெல்மட் அணிவது தமிழர்களின் பண்பாடு என்று சொன்னால் நகைப்பிற்கு இடமாகும்.எனவே ஒருதார மணம் தமிழர் பண்பாடு என்று நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியாது.
கம்ப ராமாயணத்தின் மூலம் வடநாட்டில் இருந்து வந்தது. எனவே அதை தமிழர்களின் பண்பாடாக கருத முடியாது.
இப்போது தமிழகத்தில் மட்டும் அல்ல பரவலாக நான் அறிந்தவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பலதாரமணம் ஹிந்து,முஸ்லிம்,கிருத்தவர்,சீக்கியர்,ஜெயின் என அனைத்து சமுதாயங்களில் இருந்தும் விடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
//வால்பையன் said...
அப்படியே ஏற்று கொண்டாலும் ஒருதார மணத்துக்கு காரணம் தமிழ்பண்பாடு அல்ல என்பதற்க்கு சரியான விளக்கம் இல்லையே!//
தமிழர்கள் ஒருதார மணத்தை நோக்கிய நகர்வு அல்லது ஏக்கம் தான் கம்பராமயணம் தோற்றத்திற்கான காரணம் என்று நினைக்கிறேன். கம்பராமாயணம் இன்றும் போற்றப்படுவதற்கு இலக்கியம் என்கிற காரணம் தவிர்த்து ஒருதார மண வழியுறுத்தலும் மற்றொரு காரணம். மக்கள் விரும்பும் ஒன்றைத்தான் போற்றுவார்கள்.
// ஆண்டாண்டு காலமாக ஆண்கள் நலன் கருதியே சட்டமும், மதமும் இயங்கி வந்திருக்கிரதே தவிர விதவை பெண்கள் மறுமணத்திற்கு எந்த பண்பாடு வாசல் வைத்திருக்கிறது!?//
அதற்கு காரணம் ஆண்களின் மண நிலைதான். தனக்கு பிறந்தது மட்டுமே வாரிசு என்பதாக ஆண் நினைப்பதால் விதவைகள் மறுமணம் பெண்களுக்கு தடையாக இருந்திருந்திருக்கிறது. திருமணம் என்பதே வாரிசுகளை பெற்றுக் கொள்ள என்பது தானே புரிதல், மற்ற இல்லர இன்பமெல்லாம் அதன் நோக்கத்தில் பங்கு பெறுபவை மட்டுமே என்பது தானே இன்றைய தேதியிலும் நடைமுறை.
சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகம் திருமணத்தையோ, வாரிசுகளையோ பற்றி கவலைப்படுவதில்லை. வாரிசுகளை மையப்படுத்தி திருமண நிகழ்வுகள் இருந்த படியால் ஆணாதிக்க சமூகம் விதவைகளை மணம் புரிய நினைக்கவில்லை என்றே கருதுகிறேன்.
//கம்ப ராமாயணத்தின் மூலம் வடநாட்டில் இருந்து வந்தது. எனவே அதை தமிழர்களின் பண்பாடாக கருத முடியாது.//
வட மொழி இராமயணத்திற்கும் கம்ப இராமயணத்திற்கும் பெரிய வேறுபாடு கம்பராமாயணம் ஒருதார மணத்தை மையப்படுத்தி இருக்கும்.
//எம்.எம்.அப்துல்லா said...
@ கோவி அண்ணா.
தமிழர் பண்பாடு என்பதை நிர்ணயிப்பது எது?? நடத்தையா? அல்லது பழக்க வழக்கமா??//
இங்கு கட்டுரையில் ஒரு மலாய் (இஸ்லாமிய) இனம் பற்றி பிற இனத்தின் கருத்தும், அதற்கு தமிழ் இஸ்லாமியர்கள் பற்றிய எனது கருத்தையும் பதித்து இருக்கிறேன்.
இருவரின் பழக்கவழங்கள் / நடத்தை அமைவது அவர்கள் வாழ்வை ஒட்டிய சூழலைப் பொருத்தது. இருந்தாலும் மதம் அனுமதி கொடுக்கிறது என்பதை ஒப்பமாக தமிழ் இஸ்லாமியர்கல் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது.
தமிழ் இந்துக்கள் உயர்வானவர் என்று எங்கும் குறிப்பிட வில்லை. இன்னொமொரு பதிவில் ஏற்கனவே ஒருவனுக்கு ஒருத்தி என்பது கிறித்துவ கலாச்சாரம் வெள்ளைக்காரர்களைப் பார்த்து நாம் பின்பற்றுகிறோம் என்று எழுதி இருக்கிறேன். அதில் மாற்றம் இல்லை. தமிழர்கள் (அனைவரும்) ஒருதார மணத்தை விரும்புவர்கள் என்பதற்கு கம்பராமயண உதாரணம் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்.
அம்புட்டு தான் ஆளை விடுங்க
@ சகோதரிகள் ஹூசேன் அம்மா, நாஸியா.
கோவியார் இதை மதரீதியாக அணுகியதாக நான் உணரவில்லை. இரண்டாம்தாரமாக செல்லும் பெண்களின் மனநிலை மற்றும் உரிமைசார்ந்து அவர் எழுதியதாகவே நான் உணர்கின்றேன்.
//கம்பராமாயணம் இன்றும் போற்றப்படுவதற்கு இலக்கியம் என்கிற காரணம் தவிர்த்து ஒருதார மண வழியுறுத்தலும் மற்றொரு காரணம். மக்கள் விரும்பும் ஒன்றைத்தான் போற்றுவார்கள்.//
வடமொழி ராமாயணத்தில் ராமனுக்கு நாலு பொண்டாட்டியா இருந்துச்சு!
ராமனின் அப்பனுக்கு மூணு பொண்டாட்டி என்பது அனைவருக்கும் தெரியும், இந்துமதத்தின் முக்கிய அவதாரமான ராமன், அப்பேற்பட்ட அப்பனுக்கு மகனாக பிறந்து தன் பிறப்பை கேவலபடுத்தி கொண்டார் என்பதே கருத்து! மேலும் காட்டுக்கு போகும் போது பொண்டாட்டிடை அழைத்து போன ராமனை விட லட்சுமணனே சிறந்தவன் என்கிறேன் நான்!
//தனக்கு பிறந்தது மட்டுமே வாரிசு என்பதாக ஆண் நினைப்பதால் விதவைகள் மறுமணம் பெண்களுக்கு தடையாக இருந்திருந்திருக்கிறது.//
ஒருவகையில் உண்மை தான்!, ஆனா, ஒரே நேரத்தில் பல கணவர்கள் என்கிற போது பிரச்சனை வரலாம், ஒரே கணவன் என்ற போது ஏன் பிரச்சனை! பண்டைய காலத்தில் வெற்றியடைந்த அரசனுக்கு ராஜ்ஜியத்தோடு மனைவிமார்களும் அடிமை என்பது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்!, விதவை மணம் என்பது விதியின் ரீதியாக முடிவு எடுக்க வேண்டியது என அனைத்து சமூகமும் நம்பியதால் மறுக்கப்பட்டது! பெண்ணின் விதியே அவளது நிலைக்கு காரணம் என இன்றும் பல பிற்போக்குவாதிகள் சொல்வது கண்கூடு!
//சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகம் திருமணத்தையோ, வாரிசுகளையோ பற்றி கவலைப்படுவதில்லை.//
அதைவிட ஒருதரப்பு நியாயத்திற்கும் செவி சாய்க்கிறது என்பதே என் கருத்து! மணமுடிந்த பின் ஆணுக்கு நாலு வருசத்துக்கு குழந்தை வேணாமுன்னு பொண்டாட்டி காப்பர்-டி போட்டுக்கனும், குழந்தை வேணும்னா உடனே பெத்துக்கனும்! பரஸ்பர புரிதல் எந்த மதமும் சொல்லிதரவில்லை!
//மதம் அனுமதி கொடுக்கிறது என்பதை ஒப்பமாக தமிழ் இஸ்லாமியர்கல் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது.//
தமிழர்களுக்கு மதமே இல்லை! ஊர்பிடாரி வந்து ஒட்டி சென்றது தான் இந்துமதம்!
//ஒருதார மணத்தை விரும்புவர்கள் என்பதற்கு கம்பராமயண உதாரணம் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்.//
ஒருதாரமாக இருந்தாலும் நம்பிக்கையில்லாமல் தீகுழிக்க சொன்ன ராமனை ரோல்மாடலாக ஏற்று இருக்கும் தமிழ் பண்பாட்டை அதே போல் சிதையில் ஏற்ற வேண்டும் என்கிறேன்!
நீ கல்யாணம் பண்ணு, இல்ல பண்ணாம நாசமாப்போ, ஆனா உன் பொண்டாட்டியிடம் என்ன எதிர்பார்க்கிறாயோ, அதையே அவளுக்கும் கொடு என்கிறேன் நான்! நீ ரெண்டு பொண்டாட்டி கடினா நானும் ரெண்டு புருஷன் கட்டுவேன்னு முறத்தால் புலி விரட்டிய தமிழ் பரம்பரையில் வந்த எதோ வீரதமிழச்சி சொன்னது தான் ஒருதார மணத்திற்க்கு காரணம்!
விட்டுட்டா எப்படி, வாங்க உரையாடலாம்!
&&&
கம்பராமாயணம் இன்றும் போற்றப்படுவதற்கு இலக்கியம் என்கிற காரணம் தவிர்த்து ஒருதார மண வழியுறுத்தலும் மற்றொரு காரணம்.
&&&
கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டாரே :)-
இஸ்லாம் மதத்துல நாலு பெண்கள் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி இருக்கான்னு எனக்கு தெரியாது. முதல் பொண்டாட்டியின் அனைத்து தேவைகளையும் (emotional / economical) satisfy பண்ணாம அடுத்த கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு தெரியும் !
//கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டாரே :)-
இஸ்லாம் மதத்துல நாலு பெண்கள் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி இருக்கான்னு எனக்கு தெரியாது. முதல் பொண்டாட்டியின் அனைத்து தேவைகளையும் (emotional / economical) satisfy பண்ணாம அடுத்த கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு தெரியும் !//
தார நிலைகள் மாறினாலும் பொருளாதார நிலை அப்படியே இருக்கும் என்பதற்கு மதம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளில் அவனுக்கு சமாளிக்க முடியாமல் போனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலைக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வதுன்னும் சொல்லவில்லை
:)
//ஒருதாரமாக இருந்தாலும் நம்பிக்கையில்லாமல் தீகுழிக்க சொன்ன ராமனை ரோல்மாடலாக ஏற்று இருக்கும் தமிழ் பண்பாட்டை அதே போல் சிதையில் ஏற்ற வேண்டும் என்கிறேன்!//
தீக்குளிக்கச் சொன்னதால் கோவித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்ற சீதையை கணக்கில் யாருமே எடுப்பது இல்லையே.
எப்படி ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் இருந்தும் தமிழ்நாட்டில் முக்காவாசி பேர் ஹெல்மட் போடுவதில்லையோ அப்படி. எழுத்தில் இருப்பதை வைத்து ஹெல்மட் அணிவது தமிழர்களின் பண்பாடு என்று சொன்னால் நகைப்பிற்கு இடமாகும்.//
இதுவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமைக்கு முதன்மையான காரணமாக இருக்கும். பண்பாடு என்று இதை எப்படிச் சொல்ல முடியும்?
:))))))))))
:)
//தார நிலைகள் மாறினாலும் பொருளாதார நிலை அப்படியே இருக்கும் என்பதற்கு மதம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளில் அவனுக்கு சமாளிக்க முடியாமல் போனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலைக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வதுன்னும் சொல்லவில்லை//
முதல் வரியிலேயே பதில் இருக்கிறதே, எந்த தாரத்திற்கும் யாரும் உத்திரவாதம் தரமுடியாதென்று.
BTW பெண்களும் அடுத்த திருமணம் செய்துகொள்ள அனுமதி இருக்கிறது.
//முதல் வரியிலேயே பதில் இருக்கிறதே, எந்த தாரத்திற்கும் யாரும் உத்திரவாதம் தரமுடியாதென்று.
BTW பெண்களும் அடுத்த திருமணம் செய்துகொள்ள அனுமதி இருக்கிறது.//
2ஆம் மூன்றாம் நான்காம் மனைவிகள் பொருள் இருப்பதால் தான் ஒருவனை மணம் புரிய முன் வருகிறார்கள், இல்லை என்றால் வேறுரொருவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்பதன் அதன் புரிதலாகக் கொள்ளலாமா ?
2-4 மனைவிகளின் புள்ளைக் குட்டிகளுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது யார் ? மதமா ? அப்ப பணக்காரனாக இருந்தேன், இன்னிக்கு கடனாளியாக இருக்கிறேன் என்றால் மனைவிகள் இளமையாக இருந்தால் விவாகரத்து செய்து விட்டு வெறுருவரை திருமணம் செய்து கொள்வார், ஏனெனில் பலதார மணம் என்பது இளமைக்கும் பணத்துக்கும் இடையேயான பரிவர்தனை மட்டுமே.
******
நான் திரும்ப சொல்கிறேன். முகமது நபி காலத்தில் நான்கு என்பது அதற்கும் மேல் போகாமல் இருக்க கட்பாடு, அன்றைய வரையறுத்தல் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் அன்றைய அரபுகளிடம் கணக்கு வழக்கே கிடையாது, முகமது நபிக்கே 11 என்று உங்களுக்கு தெரியும். எனவே நான்கு வரை என்பது அன்றைக்கு கடுமையான கட்டுபாடு. அதை இன்றைய புரிதலில் நான்கு வரை அனுமதிப்பதாக எடுத்துக் கொள்கிறார்கள்.
//தீக்குளிக்கச் சொன்னதால் கோவித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்ற சீதையை கணக்கில் யாருமே எடுப்பது இல்லையே. //
அந்த மாதிரி சைக்கோக்கள், தூங்கும் போது தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்னாலும் கொன்னுபுடும்! அம்மா வீட்டுக்கு போறதே நல்லது!
//அந்த குளிர்சாதன் பெட்டியில் பழுது அடைந்தால் தொடர்பு கொள்ள 'எண்' இருந்தது, அழைத்து விவரம் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள், உங்கள் காசுகளை (ஒருவெள்ளி 20 பைசா) உங்களுக்கு காசோலை அனுப்பி வைக்கிறேன் என்றார்கள். சரி என்று விவரங்கள் கொடுத்தேன், மறு நாள் அலைபேசியில் அழைத்து, காசோலைக்கு பதிலாக உங்களுக்கு பரிசு கூப்பன் தருகிறேன், அதைக் கொண்டு போய் நீங்கள் பெர்கர் கிங்கில் குளிர்பானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்//
ஒன்றை கவனித்தீர்களா? கோக் நிறுவனம் தனியாக ஆட்களை வைத்து வெண்டிங் மெஷின்களைப் பராமரிக்க வேண்டியதில்லை. அதாவது, வாராவாரம் அல்லது மாதாமாதம் டெக்னீஷியன் எல்லா மெஷின்களையும் சோதனை செய்ய வேண்டியதில்லை. வெண்டிங் மெஷின் பழுதடைந்தால் வாடிக்கையாளரே அழைத்து தெரிவிப்பார். டெக்னீஷியன் செலவு குறைவு. வாடிக்கையாளருக்கான நட்ட ஈட்டுத்தொகை குறைவு (இரு கோக்குக்கான கட்டணம்). இதுதான் win-win strategy in business.
கருத்துரையிடுக