பின்பற்றுபவர்கள்

10 செப்டம்பர், 2009

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் ! கூடவே....

வீட்டைக் கட்டிவிட்டு தான் கல்யாணம் செய்யனும் என்று சொல்லி வைத்தார்களோ, ஆனால் இரண்டுமே மிகவும் கடினமான செயல், ஈடுபடுத்திக் கொள்ளுதல் (கமிட்மெண்ட்) மிகுதி. நடுத்தரவாசிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு திட்டமிட்டெல்லாம் வீடு கட்டுவதையோ, திருமணம் செய்வதையோ செய்துவிட முடியாது. இரண்டுக்குமே கடன் வாங்கனும். அதைத் தவிர்த்து அதற்கான தேவையும் நெருக்குதலும் இருக்கனும், ஆனால் இவை பொதுவாக அனைவருக்குமே ஏற்பட்டுவிடும். வெளிநாட்டில் நீண்ட நாள் வாழ்ந்தாலும் அந்நாட்டின் குடிமகனாக மாறாமல் திரிசங்கு சொர்கமாக நின்று கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு பிறந்த ஊரில், மாநிலத்தில் வீடு ஒன்றை கட்டுவது தவிர்க்க முடியாத செலவினங்களில் ஒன்று. கட்டுவதற்கு நிறைய மெனக்கட வேண்டி இருக்கும், என்பதால் கட்டிய வீட்டை வாங்குவதே சரி எனப்பட்டது. அதுவும் விற்கிற விலையில் நகரத்தினுள் இடம் வாங்கி, ஒரு கட்டிட பொறியாளரிடம் பொறுப்பு கொடுத்து வீடு கட்டி முடிப்பது மிகவும் சிக்கலான ஒன்று, அதற்கு பதிலாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாங்குவது எளிதானது, இடம் வாங்கி வீடு கட்டுவதை விட செலவினம் குறைவானது. பல மனப் போராட்டங்களுக்கு பிறகு கையிருப்பு, கடன் என வாங்கி சென்னை புறநகர் தொடங்கும் முன் போருர் அருகே புதிதாக கட்டப்பட்ட ஆறுவீடுகள் அமைந்த அடுக்கு மாடி குடி இருப்பு ஒன்றில் ஒரு இருபடுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை வாங்கினேன்.


வீட்டுக்கு முறைப்படி புது மனை பூசை செய்வது பற்றி பேசி கொண்டிருக்கும் போது 'ஐயர்' வைத்து 'ஹோமம்' வளர்த்து செய்ய வேண்டும் என்று மனைவி மற்றும் பெரியோர்களால்(மனைவி தான் பெரியோரான்னு கேட்டால் பதில் இல்லை) முடிவு செய்யப்பட்டது. எனக்கு பூசை இவற்றில் விருப்பம் இல்லை, ஆனால் புதுமனை புகுவிழாவென்றால் இப்படியெல்லாம் இருந்தால் தான் உறவினர்களை அழைக்க அவர்களும் வந்து வாழ்த்திவிட்டுச் செல்வார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். 'சமஸ்கிர மந்திரத்தால் நல்ல அதிர்வு ஏற்படும்' என்று சொல்லிவிட்டு மனைவி வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை. சரி உன் விருப்பப் படி செய் என்று சொல்ல, ஐயர் ஒருவரை உறவினர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். மாடு மாடி ஏற முடியாதே, நானே ஒரு மந்திரத்தால் (மகி)மை ஊட்டப்பட்ட பொம்மை மாடு ஒன்றை எடுத்துவருவதாக ஐயர் கூறி இருந்தார். வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல மாட்டை ப்ளாட் கார் பார்க்கில் கொண்டு வந்து நிறுத்தி பூசை செய்வோம், என்று சொல்லி அதற்கு 500ரூபாய் ஆகும் என்று சொல்லி அதை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சமஸ்கிரத வழிபாடு, பூசை முடிந்ததும், என் பங்குக்கு தமிழ்வழி பூசைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன், அதிலும் அதிர்வு வருகிறதா ன்னு பாரு என்று சொல்ல, மனைவி மனப்பூர்வமாக சம்மதித்தார். சைவ சமயமன்றம் சார்ந்த ஓதுவார் (சிவாச்சாரியார்) ஒருவரை தமிழ்வழி பூசைக்காக ஏற்பாடு செய்தேன். அதிகாலையை ஐயருக்கும், அதன் பிறகு சிறுது இடைவெளி விட்டு ஓதுவார் (சிவாச்சாரியார்) பூசை செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 5 மணிக்கு ஐயர் வந்தார், ஓம குண்டங்களை அமைத்து பூசை சாமான்களை எடுத்து வைத்து, கலசங்களுக்கு நூல் சுற்றி முடிக்க, மணி 6 ஐ தொட்டது, அதன் பிறகு கோமாதா பூசைக்கு ஆயத்தமானார், சொல்லி இருந்த இடத்தில் இருந்து மாடு வரவில்லை, வேறொருவரிடம் மாடு - கன்று வரவழைத்து பூசையை தொடங்கினார். அவர் மந்திரம் சொல்ல சொல்ல மாட்டுக்கு நானும் மனைவியும் மகளும் பூசை செய்யனும், செய்தோம். அந்த காலத்தில் இருந்தே மாடுகள் பொருளியல் கூறுகளில் ஒன்று என்பதால் மாடு செல்வம், லட்சுமி என்றெல்லாம் சொல்லப்பட்டு அதற்கு பூசை செய்வது முதன்மையாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கோமாதா பூசையில் மாட்டுக்கு முன்பக்கம் இல்லாது பின்பக்கம் தான் பூசை செய்யச் சொல்கிறார்கள். செய்கிறார்கள். செய்தோம். இனவிருத்தி உறுப்புக்கு பூசையாம், அது எனது புரிதல். அவ்வளவு நேரடியாகச் சொல்லாமல், பின்பக்க பூசை என்று ஐயர் கொஞ்சம் டிசண்டாக சொன்னார். அது ஒரு 5 - 10 நிமிடம் இருக்கும், வாழைப்பழம் ஒவ்ஒன்றை கொடுக்க பசுவும், கன்றும் தின்று விட 500 ரூபாயுடன் அழைத்துச் செல்லப்பட்டது, எங்க பக்கத்தில் மாட்டுக்கு 1000 ரூபாய் வரை வாங்குகிறார்கள் என்று ஐயர் சொன்னார்.
அதன் பிறகு சுமார் ஒரு மணிநேரம் சமஸ்கிரத மந்திரத்துடன் வேள்வித் தீ என ஐயரால் நடந்தது. வாங்கம்மா வாங்க ... காலம் மாறிவிட்டது (கைம் பெண்கள் என்று சொல்லாமல்) முன்பு போல் மூத்தவர்கள் மறைவாக நிற்காமல் முன்னுக்கு வந்து தம்பதிகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று ஐயர் அழைத்தார். அந்த ஐயரின் செயல் வரவேற்கத் தக்கது, பாராட்டத் தக்கது.

புது மனை புகுவிழாவுக்கு எனக்கு நன்கு அறிமுகமான பதிவர்கள் சிலரையும் அழைந்திருந்தேன். அன்று திங்கள் கிழமை ஆகையால் பணிக்கு செல்லவேண்டிய கடமை இருப்பதால் அதிலும் சிலர் வர இயலாமல் போனது. துளசி அம்மா தனது கணவர் திரு கோபாலுடன் வந்திருந்தார். துளசி அம்மா வரும் போது சமஸ்கிரத வழிபாடு முடியும் தருவாயில் இருந்தது. அதன் பிறகு ஓதுவார் வந்தார். காலை 7:30 - 9.00 இராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் ஐயர் ஏற்கனவே அமைத்திருந்த அதே ஓமகுண்டத்தில் ஓதுவார் பூசையைத் தொடங்கினார். வடமொழி, தமிழ் முறை வழிபாடு இரண்டுக்கும் பூசை முறைகளில் ஒரு சில வேறுபாடுகளத் தவிர வேறெதுவும் இல்லை, தமிழ் வழி வழிபாட்டில் என்ன சொல்கிறார்கள் என்பது நன்றாக புரிந்தது. 'தமிழில் மந்திரம் சொல்லி வழிபடுவது இழிவு அல்ல, வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது', ஆனால் பலர் ஒரு கண்ணில் சுண்ணாம்பை தடவுகிறார்கள், நீங்கள் இரண்டையுமே செய்ய விரும்பி இருக்கிறீர்கள், ரொம்ப மகிழ்ச்சி' என ஒரு குட்டி பிரசங்கம் செய்தார் ஓதுவார். பதிவர் யுவகிருஷ்ணா வந்திருந்தார். அன்றைக்கு முதல்நாள் முதல் என்னுடன் இருந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் நிழல்படங்கள், அசைபடங்கள் எடுத்து தந்தார்.


இருமடங்கு செலவுகள் என்றாலும், இரண்டு வகை பூசைக்கும் ஏறக்குறைய செலவுகள் ஒன்று தான். வந்திருந்தவர்களில் பலர் தமிழ் முறை பூசையும் சிறப்பாகவே அமைந்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.


எதற்காக இந்த பதிவு ? சுயபுராணத்திற்காக அல்ல.

வடமொழி வழியாக நடத்தப்படும் அத்தனை வகை இல்ல நிகழ்ச்சி, கோவில் நிகழ்ச்சி அனைத்தையும் தமிழ் வழியாகவும் நடத்த முடியும், அதற்கான அனைத்து தகுதிகளும் தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் அசை, இசை, ஓசை நயம்பட அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழனே தமிழை புறக்கணித்து மட்டுமின்றி, 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்று தமிழுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தமிழில் பூசை செய்வதால் தவறாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை, வடமொழியால் மட்டுமே வழிபாடு செய்வதால் உழைப்பும் முயற்சியும் இல்லாமல், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேர்ந்துவிடப் போவதில்லை. அவை எல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைகளில் தமிழுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காவிட்டால் தெலுங்கர்களோ, கன்னடர்களோ கொடுப்பார்களா என்ன ? தமிழை முன்னிருத்தும் பொறுப்பு தமிழர்களிடம் மட்டும் தான் இருக்கிறது.

வீட்டைக் கட்டிப்பாருங்கள், (ஒருமுறை) கல்யாணம் செய்து பாருங்கள், அதற்கான வழிபாட்டு முறைகளை தமிழ்மறை வழி செய்தும் பாருங்கள், கொஞ்சம் பேர் முகம் சுளிப்பார்கள் பிறகு தமிழர் வழக்கமாகிவிடும். சென்ற ஆண்டு எங்கள் அக்கா மகளுக்கும் தமிழ்மறை வழி திருமணம் தான் செய்தோம், சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். எல்லோரும் தமிழ்வழியாக செய்தால், பார்பனர்கள் தமிழ் வழியாக நடத்திக் கொடுக்க முன்வருவார்கள். நம்மால் விரும்பி வாங்குகிற பொருள் தான் விற்கப்படனும். வழியில்லாமல் விற்பதைத் தான் நாமெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். நாம் முதலில் மாறுவோம், தமிழர் உலகம் தானாய் மாறும். புதுசாக திருமணம் செய்து கொள்ளப் போகிற அதிசா போன்ற கன்னிப் பசங்க தமிழ்மறை வழி திருமணத்துக்கு மாறனும் :)

84 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

சகல ஐஸ்வர்ய கிரஹ பிரப்தி ரஸ்து.

புதிய வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி சொன்னது…

சபாஷ் கோவியாரே!

நாமக்கல் சிபி சொன்னது…

அதுவும் சரிதான்!

நாம வலிந்து கேக்காதவரை அவங்க சொல்லுறதைத்தானே கேட்டாகணும்!

எல்லா இடத்திலயும் தமிழ்தான் வேணும்னு கேட்டா அவங்களே மாறிடப் போறாங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
சகல ஐஸ்வர்ய கிரஹ பிரப்தி ரஸ்து.

புதிய வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றிங்க ஸ்வாமி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
அதுவும் சரிதான்!

நாம வலிந்து கேக்காதவரை அவங்க சொல்லுறதைத்தானே கேட்டாகணும்!

எல்லா இடத்திலயும் தமிழ்தான் வேணும்னு கேட்டா அவங்களே மாறிடப் போறாங்க!
//

மிக்க நன்றி. நான் இல்ல நிகழ்வுகளில் பார்பனர்களை புறக்கணிக்கச் சொல்லவில்லை. அவர்களையும் தமிழ்மறை வழி செய்துத் தரச் சொல்லலாம் என்பதையே சொல்லி இருக்கிறேன்.

நாமக்கல் சிபி சொன்னது…

//அவர்களையும் தமிழ்மறை வழி செய்துத் தரச் சொல்லலாம் என்பதையே சொல்லி இருக்கிறேன்.
//

அதே அதே!

நாமக்கல் சிபி சொன்னது…

புது வீடு வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்!

Ravichandran Somu சொன்னது…

வாழ்த்துக்கள்....

நாமக்கல் சிபி சொன்னது…

நீங்களாச்சும் மத்த வீட்டு ஓனருங்க மாதிரி இல்லாம புரோக்கர் இல்லாம நேரடியா ஏதாவது நடுத்தர குடும்பத்துக்கு நியாயமான வாடகைக்கு வீட்டை கொடுத்து, கரண்ட் பில் கார்டை அவங்க கைலயே கொடுத்துடணும்னு கேட்டுறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
புது வீடு வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்!

6:01 PM, September 10, 2009
//

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கு நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிச்சந்திரன் said...
வாழ்த்துக்கள்....
//

ரவிச்சந்திரன் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி !

ஜோ/Joe சொன்னது…

வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
நீங்களாச்சும் மத்த வீட்டு ஓனருங்க மாதிரி இல்லாம புரோக்கர் இல்லாம நேரடியா ஏதாவது நடுத்தர குடும்பத்துக்கு நியாயமான வாடகைக்கு வீட்டை கொடுத்து, கரண்ட் பில் கார்டை அவங்க கைலயே கொடுத்துடணும்னு கேட்டுறேன்!
//

அக்கம் பக்கம் வீடுகளிடம் நன்கு பழகக்கூடிய நல்ல வாடகைதாரர் கிடைக்கனும் என்று தான் நான் விரும்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள் கோவி.
//

மிக்க நன்றி சித்தப்பா !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
வாழ்த்துகள்!
//

மிக்க நன்றி ஜோ.

நாமக்கல் சிபி சொன்னது…

//அக்கம் பக்கம் வீடுகளிடம் நன்கு பழகக்கூடிய நல்ல வாடகைதாரர் கிடைக்கனும் என்று தான் நான் விரும்புகிறேன்.
//

நமக்கு வேண்டப்பட்டவரு ஒருத்தரு இருந்தாரு! ஆனா இப்ப சென்னைய காலி பண்ணிட்டு நாமக்கல்லுக்கே வந்தூட்டாரு!

நையாண்டி நைனா சொன்னது…

வாழ்த்துக்கள்... அண்ணா.... வாழ்த்துக்கள்.

அப்பாவி முரு சொன்னது…

மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்கண்ணா

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்கண்ணா
//

60 ஆம் கல்யாண மாப்பிள்ளையா ?

அவ்வ்வ்வ்வ்வ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
வாழ்த்துக்கள்... அண்ணா.... வாழ்த்துக்கள்.
//

நன்றி தம்பி !

அப்பாவி முரு சொன்னது…

ஏன் 60?

35 - 40 ல

கூட பண்ணலாமே...

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
ஏன் 60?

35 - 40 ல

கூட பண்ணலாமே...
//

ஏற்கனவே திருமணம் செய்தவர்களுக்கு 60ல் தானே மீண்டும் நடக்கனும் ?
:)

அப்பாவி முரு சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//அப்பாவி முரு said...
ஏன் 60?

35 - 40 ல

கூட பண்ணலாமே...
//

ஏற்கனவே திருமணம் செய்தவர்களுக்கு 60ல் தானே மீண்டும் நடக்கனும் ?
:)//


என்னது உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

ஆனாலும்,

ஆனாலும்,


மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்கண்ணா

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னது உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

ஆனாலும்,

ஆனாலும்,


மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்கண்ணா//

கழுத்துல மாலை போட்டு, நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டுக் கொண்டால் நீங்களும் அப்படித்தான் இருப்பிங்க

அப்பாவி முரு சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//என்னது உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

ஆனாலும்,

ஆனாலும்,


மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்கண்ணா//

கழுத்துல மாலை போட்டு, நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டுக் கொண்டால் நீங்களும் அப்படித்தான் இருப்பிங்க//


பலியாடு?

VSK சொன்னது…

புதுமனை புதுவிழா [கிருஹப் ப்ரவேசம்] வாழ்த்துகள் கோவியாரே!

ஸ்வாமிஜியிடம் ஒரு கேள்வி.
க்ருஹம் என்பதுதானே வீடு.
க்ரஹம் என்பது கோள் அல்லவோ!

தருமி சொன்னது…

புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்..

Radhakrishnan சொன்னது…

இனிய வாழ்த்துகள் கோவியாரே. தமிழ் மேல் தாங்கள் கொண்ட பற்று பாராட்டுக்குரியது.

துபாய் ராஜா சொன்னது…

புதுவீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

சி தயாளன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவிஜி...:-)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் ஆகட்டும்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

என்ன இது புது வீட்டுக்கு க்ரஹ பிரவேசம் பண்ற நேரத்துல கூட வீட்டுக்காரம்மா 'வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை'?

சம்சாரமா வந்ததுனாலேயே இந்த மாதிரி நிறைய அதிர்வுகளைத் தாங்கிக்கறாங்கன்னா?

புதுமனை கண்டதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

//அந்த நம்பிக்கைகளில் தமிழுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காவிட்டால் தெலுங்கர்களோ, கன்னடர்களோ கொடுப்பார்களா என்ன ? தமிழை முன்னிருத்தும் பொறுப்பு தமிழர்களிடம் மட்டும் தான் இருக்கிறது.//

சிந்திக்க வேண்டிய கருத்து

வாழ்த்துக்கள் நண்பரே, மிகுந்த மகிழ்ச்சி வீடு வாங்கியதற்கு,

புருனோ Bruno சொன்னது…

புதுமனை புகு விழா வாழ்த்துக்கள்

--

எதிர்பாராத அவசர நிகழ்வுகளினால் வர இயலவில்லை

அன்புடன்
புருனோ

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

///ஸ்வாமிஜியிடம் ஒரு கேள்வி.
க்ருஹம் என்பதுதானே வீடு.
க்ரஹம் என்பது கோள் அல்லவோ!//

க்ரஹம் என்றால் தங்கும் இடம். பிரபஞ்ச ஆற்றல் தங்குவதால் அதற்கும் க்ரஹம் என்றே பெயர்.

க்ரஹா என்பதன் தமிழ் திரிபு கிரஹம்.

வடுவூர் குமார் சொன்னது…

புதிய வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே!

வாஸ்துகள்!

வஸ்துகள்!

எல்லாம் சரியாக செய்திருப்பதாக அறிகிறேன்!

உங்கள் உழைப்பு போற்றத்தக்கது!

தழைத்துக் கிடப்பீர்கள்!

அறிவிலி சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் -புது வீட்டுக்கு வாழ்த்துகள்


//காலம் மாறிவிட்டது//

ஆம்.

//இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்று தமிழுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறோம். //

கோவில்களிலும் இரண்டாமிடம்!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வெளிநாட்டில் நீண்ட நாள் வாழ்ந்தாலும் அந்நாட்டின் குடிமகனாக மாறாமல் திரிசங்கு சொர்கமாக நின்று கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு //

அது சரி!

நீங்க இங்க குடிமகனா ஆயிருந்திங்கன்னா நீங்க எங்கையும்(எந்த நாட்டுலயும்) வீடு வாங்க முடியாது.

ஏன் தெரியுமா?

உங்கள்ட்ட தான் பணம் இருக்காதே!
:)

முகவை மைந்தன் சொன்னது…

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!

பதிவுக்கும் பூசெஞ்சீங்களோ! அதிர்ற மாதிரி இருக்கு :-)

பூசெய்ன்னு வந்ததுக்கு அப்புறம் மொழில ஒண்ணும் பெருசா பாக்க வேண்டியது இல்லை. உணர்வால தான் கட்டி அமைக்க முடியும். வற்புறுத்ததல் வேலைக்காகாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். //

அவ்வ்வ்!

எங்கள் கிராமத்தில் ஏறக்குறைய 80 விழுக்காடு தமிழ்த் திருமணம் தான் சாமியோவ்!

அதனால் எனக்கு இது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.

எனக்கும் தமிழ்த் திருமணம் தான்!
புரோகிதரும் கிடையாது!
தமிழில் ஓதுவாரும் கிடையாது!

கோயம்புத்தூர் பகுதிகளில் தமிழ் ஓதுவார்களை வைத்து திருமணம் நிகழ்வதாக அறிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

எங்கள் புது வீட்டுக்கும் தமிழ் முறைப்படிதான் புதுமனை புகுவிழா நடந்தது. அப்பாவே தமிழ் திருமுறைகள் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரே செய்து வைத்தார்.

புது வீடு உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும். வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) சொன்னது…

புது வீட்டை வாங்கியதற்கு வாழ்த்துகள் கண்ணன்.

வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது - இதை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? :-)

அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த போது கவனித்தேன். இப்போதெல்லாம் கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்று எழுதியிருக்கவில்லை; 'தமிழ் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகைகள் இருந்தன.

உங்க அக்கா பொண்ணு பேரு ஜோதிகாவா? அந்த வரியை நிறுத்தாமல் படித்துக் கொண்டு வந்த போது ஒரு நொடி அப்படி ஒரு மயக்கம் தோன்றியது. :-)

தமிழ் மறை வழி வழிபாட்டிற்கு வாழ்த்துகள்.

புது மண மாப்பிள்ளை மாதிரி இருப்பதென்னவோ உண்மை தான். :-)

ILA (a) இளா சொன்னது…

சகல ஐஸ்வர்ய/சுருதி/அக்சரா/செளந்தர்ய கிரஹ பிரப்தி ரஸ்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு பலியாடு?//

அதிலென்ன ஐயம் ? திருமணம் ஆனவுடன் தெரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
புதுமனை புதுவிழா [கிருஹப் ப்ரவேசம்] வாழ்த்துகள் கோவியாரே!
//

நன்றிங்க சாரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்..
//

நன்றிங்க ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...
இனிய வாழ்த்துகள் கோவியாரே. தமிழ் மேல் தாங்கள் கொண்ட பற்று பாராட்டுக்குரியது.
//

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...
புதுவீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.
//

மிக்க நன்றி ராஜா !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
வாழ்த்துக்கள் கோவிஜி...:-)
//

மிக்க நன்றி தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் கோவி. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் ஆகட்டும்.
//

வாழ்த்துக்கு நன்றி அண்ணாச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
என்ன இது புது வீட்டுக்கு க்ரஹ பிரவேசம் பண்ற நேரத்துல கூட வீட்டுக்காரம்மா 'வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை'?

சம்சாரமா வந்ததுனாலேயே இந்த மாதிரி நிறைய அதிர்வுகளைத் தாங்கிக்கறாங்கன்னா?//

:)

//புதுமனை கண்டதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
//

வாங்க ஐயா, வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சிந்திக்க வேண்டிய கருத்து

வாழ்த்துக்கள் நண்பரே, மிகுந்த மகிழ்ச்சி வீடு வாங்கியதற்கு,//

மிக்க நன்றி சிவா.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
புதுமனை புகு விழா வாழ்த்துக்கள்

--//

வாழ்த்துக்கு நன்றி !

//எதிர்பாராத அவசர நிகழ்வுகளினால் வர இயலவில்லை

அன்புடன்
புருனோ
//

திங்கள் கிழமை வேலை நாள் அதனால் வர இயலாது என்பதை புரிந்து கொண்டேன். அதனாலென்ன எனக்கு வாங்கி வைத்த அன்பளிப்பை பத்திரமாக வையுங்க, அடுத்த முறை பார்க்கும் போது வாங்கிக் கொள்கிறேன் :P)

கோவி.கண்ணன் சொன்னது…

//க்ரஹா என்பதன் தமிழ் திரிபு கிரஹம்.//

ஸ்வாமி, இந்த திரிபு கிரிபு வேண்டாம்னு தான் வீடு, மனைன்னு எளிமையாகச் சொல்லலாம். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
புதிய வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்
//

நன்றி அண்ணே !

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வாழ்த்துகள் கோவியாரே!

வாஸ்துகள்!

வஸ்துகள்!//

வாஸ்து வஸ்தெல்லாம் குடியிருப்பு கட்டிவியலாளர் பார்த்து தான் கட்டி இருப்பார்.

//எல்லாம் சரியாக செய்திருப்பதாக அறிகிறேன்!

உங்கள் உழைப்பு போற்றத்தக்கது!
//

:) உழைப்பா அப்படின்னா ?

//தழைத்துக் கிடப்பீர்கள்!

9:56 PM, September 10, 2009
//

மிக்க நன்றி வெளிச்சப் பதிவரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் -புது வீட்டுக்கு வாழ்த்துகள்
//

மிக்க நன்றி அண்ணாத்தே !

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...


அது சரி!

நீங்க இங்க குடிமகனா ஆயிருந்திங்கன்னா நீங்க எங்கையும்(எந்த நாட்டுலயும்) வீடு வாங்க முடியாது.

ஏன் தெரியுமா?

உங்கள்ட்ட தான் பணம் இருக்காதே!
:)
//

அதென்னவோ 'வாஸ்து'வம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!

பதிவுக்கும் பூசெஞ்சீங்களோ! அதிர்ற மாதிரி இருக்கு :-)//

பதிவுக்கு பூசையை நான் செய்யவில்லை. எல்லோரும் செய்கிறார்கள்.

//பூசெய்ன்னு வந்ததுக்கு அப்புறம் மொழில ஒண்ணும் பெருசா பாக்க வேண்டியது இல்லை. உணர்வால தான் கட்டி அமைக்க முடியும். வற்புறுத்ததல் வேலைக்காகாது.
//
வற்புறுத்தல் கிடையாது வழியுறைத்தல், பரிந்துறைத்தல் செய்யலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
புது வீட்டை வாங்கியதற்கு வாழ்த்துகள் கண்ணன்.
//

நன்றி குமரன்.

//வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது - இதை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? :-) //

உங்களுக்கு முன்று கண்கள், மூன்றாம் கண் அது உங்கள் வீட்டுக்குள் பயன்படும் தாய்மொழி !

//அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த போது கவனித்தேன். இப்போதெல்லாம் கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்று எழுதியிருக்கவில்லை; 'தமிழ் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகைகள் இருந்தன. //

நல்ல மாற்றம்.

//உங்க அக்கா பொண்ணு பேரு ஜோதிகாவா? அந்த வரியை நிறுத்தாமல் படித்துக் கொண்டு வந்த போது ஒரு நொடி அப்படி ஒரு மயக்கம் தோன்றியது. :-) //

சூர்யா - ஜோதிக தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்த அதே ஓதுவார் தான் அக்கா மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அவருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தோம், சென்னையில் இருந்து வரவழைக்க போக்குவரத்து செலவுகளுடன், குறிப்பிடக் கூடிய அளவுக்கு அன்பளிப்புத் தொகை என காஸ்ட்லியான தமிழ்மறை ஓதுவார் :)

//தமிழ் மறை வழி வழிபாட்டிற்கு வாழ்த்துகள்.//

நன்றி !

//புது மண மாப்பிள்ளை மாதிரி இருப்பதென்னவோ உண்மை தான். :-)//

திருமணம் ஆகி இந்த ஆண்டோடு 10 ஆண்டு ஆச்சு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
சகல ஐஸ்வர்ய/சுருதி/அக்சரா/செளந்தர்ய கிரஹ பிரப்தி ரஸ்து.

8:52 AM, September 11, 2009
//

நன்றிங்க இளா !

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
எங்கள் புது வீட்டுக்கும் தமிழ் முறைப்படிதான் புதுமனை புகுவிழா நடந்தது. அப்பாவே தமிழ் திருமுறைகள் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரே செய்து வைத்தார்.//

அப்படியா மிக்க மகிழ்ச்சி !

//புது வீடு உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும். வாழ்த்துக்கள்
//

வாழ்த்துக்கு நன்றி சின்ன அம்மிணி

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். //

அவ்வ்வ்!

எங்கள் கிராமத்தில் ஏறக்குறைய 80 விழுக்காடு தமிழ்த் திருமணம் தான் சாமியோவ்!//

ஹலோ ! சரியாச் சொல்லுங்க, தமிழ்முறை திருமணமா ? சீர்திருத்த திருமணமா ? இரண்டுக்கும் வேறு பாடு உண்டு. தமிழ்முறை திருமணத்தில் ஓமகுண்டம், வேள்வி இருக்கும்.

//அதனால் எனக்கு இது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.

எனக்கும் தமிழ்த் திருமணம் தான்!
புரோகிதரும் கிடையாது!
தமிழில் ஓதுவாரும் கிடையாது!//

நீங்களே புரோகிதர் மாதிரிதானே இருக்கிங்க ! வெளிச்சம் வேறு அடிக்கும் அதனால் வேள்வி தேவை இருக்காது !

பாராட்டுக்கள் !

//கோயம்புத்தூர் பகுதிகளில் தமிழ் ஓதுவார்களை வைத்து திருமணம் நிகழ்வதாக அறிகிறேன்.
//
ஓஹோ !

பித்தனின் வாக்கு சொன்னது…

புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்பரே, இந்த இருமுறை வழிபாடு ஒன்றும் புதியது அல்ல, வைனவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தபம் தான் வேதம் ஆகும். எங்கள் வீட்டில் எல்லா சுபநிகழ்வுகள், மற்றும் அனைத்தும் இந்த பிரபந்தம் படிக்கப்படும். நாம் மாறினால் அந்தனர்கள் மாறுவார்கள் என்பது உன்மை, அதனுடன் மந்திரங்களுக்கு அந்த சவுண்ட் பவர் இருப்பதும் உன்மை.

TBCD சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

கிரி சொன்னது…

கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் பிடிக்க போறாங்கோ! ;-)

கிரி சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)

TBD சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!

வாழ்க உமது தமிழ் பற்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//PITTHAN said...
புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்பரே, இந்த இருமுறை வழிபாடு ஒன்றும் புதியது அல்ல, வைனவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தபம் தான் வேதம் ஆகும். எங்கள் வீட்டில் எல்லா சுபநிகழ்வுகள், மற்றும் அனைத்தும் இந்த பிரபந்தம் படிக்கப்படும். நாம் மாறினால் அந்தனர்கள் மாறுவார்கள் என்பது உன்மை, அதனுடன் மந்திரங்களுக்கு அந்த சவுண்ட் பவர் இருப்பதும் உன்மை.
//

:) மந்திரங்களுக்கு பவர் இருக்கிறதான்னு தெரியாது, அதிகாரவர்கமும், ரவுடிகளும் 'அவனை வெட்டுன்னு' சத்தமாக பேசினால் அந்த மந்திர சொல் பழிக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

10:33 AM, September 11, 2009
//

நன்றிங்க தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் பிடிக்க போறாங்கோ! ;-)
//

இதெல்லாம் ஓவரு ஒரு சின்ன வீடு வாங்கியதுக்கு இம்புட்டு கெலாட்டாவா ? நான் பொதுப் போக்குவரத்தில் தான் சென்று வருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)
//

நன்றிங்க சின்ன ரஜினி

கோவி.கண்ணன் சொன்னது…

// TBD said...
வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!

வாழ்க உமது தமிழ் பற்று.
//

வாழ்த்துக்கு மிக்க நன்றி !

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி சார்.

16 பேறுகளில் அனைத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

எங்களுக்கு அழைப்பே இல்லையே ஏன்??? :( இப்படி செஞ்சுட்டீங்களே..

கோவி.கண்ணன் சொன்னது…

// Mãstän said...
வாழ்த்துக்கள் கோவி சார்.

16 பேறுகளில் அனைத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

எங்களுக்கு அழைப்பே இல்லையே ஏன்??? :( இப்படி செஞ்சுட்டீங்களே..
//

மஸ்தான் ஐயா,
சென்னையில் இருக்கும் வெகு சிலரை அழைத்தேன். மற்றபடி தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிக்கு எந்த முதன்மைத்துவமும் கிடையாது. பதிவில் சொல்லப்பட்டது தமிழ்மறை வழிபாடு

Unknown சொன்னது…

அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம் வேணாம். :(

சும்மா மஸ்தான்னே கூப்பிடுங்க

Logan சொன்னது…

தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் கோவி அவர்களே

கோவி.கண்ணன் சொன்னது…

// Mãstän said...
அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம் வேணாம். :(

சும்மா மஸ்தான்னே கூப்பிடுங்க
//

சரிங்க ஐயா......சாரி

சரிங்க மஸ்தான் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Logan said...
தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் கோவி அவர்களே

4:15 AM, September 15, 2009
//

வாழ்த்துக்கு நன்றி திரு லோகன்

Thekkikattan|தெகா சொன்னது…

கோவியாரே,

அசத்தல் போங்க. பின்ன என்ன சிங்கையில இருந்து எப்ப வேணாலும் மூட்டை கட்டலாம் :))

வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் சேர்த்தே... (புது வீடு, மொழி சார்ந்த தொண்டு...)

இவன் சொன்னது…

நானும் தமிழ்முறையில் புதுமனை புகுவிழா நடத்தவிரும்புகிறேன் எனக்கு ஓதுவாரின் கைபேசி எண் கிடைக்கும்மா?

பாரதிதாசன் சொன்னது…

I also want to perform house warming ceremony through Tamil tradition procedure for my new home at Chennai. Could you please assist me? and request you to contact me bharathidhasan.a@gmail.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்