தினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை(?) என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாததை அங்கே பரப்ப(ரப்பாக்க)லாம். முழுச்சுதந்திரம் இருக்கும் போல இருக்கிறது.
படித்ததில் சிலவற்றை தருகிறேன்.
GENERAL
071203.சபரிமலை!! (Babu Vinothkumar,India,Coimbatore)
சபரிமலை!! போனவாரம் பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் போவதுதான்.. இந்த முறை எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு.. சில விசயங்களை இங்கே அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம்.. சுகாதாரம்: சுட்டுப்போட்டாலும் சுகாதாரத்தை பற்றிய எண்ணம் இந்த கேரள மக்களுக்கு வரவே வராது.. பம்பா நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் குளித்து உடை மாற்றி, துணிகளை துவைத்து மாசு விளைவிக்கிரார்கள். தெளிந்த நீராய் வரும் நதி சில நிமிடங்களில் சாக்கடையாய் மாறும் அதிசயத்தை இங்கே காணலாம். ஒருவழியாக குளித்து( புனித நதியாயிற்றே) மலைக்கு புறப்பட தயாராணோம். வரிசையாய் கடைகள்.. விற்பது என்னோவோ சாதாரண அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்தான். விலை மட்டும் MRP இல் 75% (கூட்டி) கொடுக்கணும். உதாரணமாக 1 லிட்டர் மீனரல் வாட்டர் ரூபாய் 15 ?! தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3 ரூபாய்?! கோல்ட் ஃபில்டர் 5 ரூபாய்?! கிங்ஸ் 7 ரூபாய்?! இப்படியாக ஒரு புது உலகத்துக்கு வந்த பின்னர், நமது வயிறு சிறிது கலக்கமடையவே.. கழிப்பிடம் தேடினோம். இருந்தது!!! 2ரூபாய் கொடுத்து நுழைவு பெற்று உள்ளே போனால் அடங்கப்பா.. உள்ளே போனால் குடலை பிடுங்கும் நாற்றம்.. பீடி சிகரெட் துண்டுகள் மூலையில் குவீயலாய்...
மேலும் அங்கே படிங்க....
ஐயப்ப சாமிகள் பீடிக் குடிக்கலாம் ...பீர் தான் குடிக்கக் கூடாது
POLITICS
061207.reply to 281107.Thaslima nasreen should be throw away from india (kannal,india,madras) (FRANKLIN ANTONY,INDIA,TIRUNELVELI)
திரு கண்ணால் அவர்களே உங்களின் வாதத்தை பார்த்து மிகவும் வெட்கப்டுகேறேன். என்றாவது நீங்கள் சுதந்திரத்தின் போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று சேர்த்த பாகிஸ்தானியாரிடம் பேசியத்ுண்டா ? பாகிஸ்தானில் எவ்வாறு நடத்தப்படுகிறாக்காள் என்று கேளுங்கள் அப்போதுதான் என் தாய்னும் மேலான என் இந்திய தேசம் என்னையும் உங்களையும் எவ்வளாய் நேசிக்கிராள் என்று புரியும். நீங்கள் நினைப்பது போல் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் இந்து காட்சிக்கு ஒட்டு போடவேண்டும் என்று நினைத்தால் பிரதமர் நார்கலில் இந்து காட்சியை தவிர வேறு யாராவது அமர முடியுமா. பிராமணர்களை ஒற்றர்கள் என்று ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையும் சொல்ல உங்களிலுக்கு துணிவு உண்டென்றால் ,அவர்களுக்கு உங்கள் சமூகத்தை சொல்ல எவ்வளவு எந்ரம் ஆகும் , தரம் தாழ்ந்து போக எல்லா இந்தியந்நும் கண்ணால் அல்ல சுந்தந்திர போராட்ட தியகிகளையே சமூகத்தின் பேரால் பிரிதித்த நீங்கள்,.....
மேலும் அங்கே படிங்க..
புரியுதுங்க இந்தியா - இந்து - இந்தி ... இதில் இந்தி மிஸ்ஸிங் அடுத்த தடவை சேர்த்து 'கொல்லுங்கள்'
GENERAL
061203.பெரியார் சிலை (BHARATH,INDIA,CHENNAI)
பெரியாருக்கு 95 அடி உயர சிலை வைக்கப்போகிறதாம் தமிழக அரசு. 95 அடி உயர சிலை என்றால் பீடம் பெரியதாயிருக்கும். எனவே அந்த பீடத்தில் பெரியார் கூறிய 1)தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி 2)திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உதவாக்கரை.3)தமிழில் கற்பதால் எந்தப்பயனுமில்லை;ஆங்கிலம் கற்பதே சிறந்தது.4)ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது.அப்படியே கொடுத்தாலும் தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும்.5)பெண்கள் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் 6)பத்தினியாயிருப்பது முட்டாள்தனம் 7)நபிகள் நாயகம் ஒரு மகான் அல்ல 8)குடிப்பது தவறில்லை 9)அண்ணா பணம் சம்பாதிப்பதற்காகவே தி.மு.க.வை ஆரம்பித்தார் 10)சுதந்திர தினம் துக்க தினம் போன்ற கருத்துகளையும் பொறித்து வைக்க வேண்டும். இவைகள் எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் பெரியார் ஒரு தமிழரே அல்ல.அவர் எப்படி தமிழர்களுக்கு தலைவராக முடியும்?
சரிதான்... சு.சாமியையும், மணிசங்கர் ஐய்யரையும் தமிழர் தலைவராக ஆக்கிடுவோம், அவா தான் தமிழர்.. நன்னாவும் தமிழ்பேஷுராள்
GENERAL
051207.கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு தேவையா ? (BHARATH,INDIA,CHENNAI)
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. உலக அரங்கில் முதன்மை இடத்தை பிடிக்க தகுதியுடைய நாடு. இதன் அயலுறவுக்கொள்கை சுயச்சார்புடையதாக இருக்க வேண்டும்.அதே வேளையில் எந்த நாட்டிடமும் தீண்டாமையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்றைய உலகின் மிகப்பெரும் ஆபத்து அமெரிக்கா என்பதை விட பெருகி வரும் பயங்கரவாதம் என்பதே சரி . இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சரி போய் குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையை படிச்சுட்டு வாங்கோ
GENERAL
021206.தமிழில் டைப் செய்ய (manikandan,india,kudanthai)
தமிழில் டைப் செய்ய www.quillpad.com/tamilக்கு செல்லவும்.
உண்மையிலேயே இது மேட்டர், நாங்கள் லிங்கை ப்ளாக்கில் சேர்த்துக் கொள்கிறோம்
GENERAL
011208.are we against hindi? (ilanchelvi selvamani, trichy) (ilanchelvi selvamani,india,tiruchirappalli)
நண்பர் ஒருவர் இந்தி படிக்காதது தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அவருக்கு இதோ என் பதில். தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பாளர் எவருமில்லை. இந்தி திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். இந்தி படிப்பதற்கு மிகவும் எளிமையானது. அதில் கற்று கரை தேற ஒன்றுமே இல்லை. இந்தி பல பள்ளிகளில் 2ஆம் மொழியாக உள்ளது. தனியார் பலர் இந்தி பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள். இந்தி பிரசார சபா என்று ஒன்று தென்னிந்திய மாநிலங்களில் இருக்கிறது. எல்லா மாட்டங்களிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. தேவை உள்ளோர், இந்தி ஆதரவு காட்டுவோர் தாராளமாக இந்தி படிக்கலாம். இது வரை இந்தி கற்க கூடாது என்றோ பயிற்றுவிக்கக்கூடாது என்றோ யாரும் தடை சொல்லவில்லை. இந்தி மட்டுமல்ல எந்த மொழியை கற்றுக்கொன்டாலும் அது வசதிதான். கூடுதல் தகுதிதான். ஆனால் இலக்கிய சிறப்பு வாய்ந்த பழமையான தம் தாய் மொழியாம் தமிழை நல்ல படியாக கற்றுத் தேற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இந்திக்கு வக்காலத்து வாங்கும் நண்பரை எனென்பது? சமஸ்கிருதத்திற்கு கால் வருடியதில் நம் மொழி தேய்ந்து தேய்ந்து பிரித்துணர முடியாத அளவிற்கு சிதைந்து கிடக்கிறதே அது போதாதா? இந்திக்கு வேறு காவடி தூக்கி உள்ளதையும் இழக்க வேண்டுமா?=== இளஞ்செல்வி செல்வமணி,திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. குறித்து
இது உச்சந்தலையில் நச் ..
301108.முடி ஆசை. (astromaniam,india,Chennai)
ஒருவரைப் பற்றி அறிய அவரது கை ரேகைகளையும் மச்சங்களையும் பெயரையும் பார்த்து பலன் சொல்கின்றனர். கையில் ஒரு குச்சியை பிடித்து ஆட்டியபடி குறி சொல்கிறார்கள். கிளிகளை பழக்கி ஒருவது எதிர்காலத்தை கிளி எடுத்துப் போடும் அட்டையிலிருந்து படித்து சொல்கிறார்கள். ஒருவரது தலை முடியை பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் சிலர் கண்டு பிடித்து பலன் சொல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு அரசியல் வாதியும் எத்தனை மனைவிகள் வைத்துள்ளார் எவ்வளவு ரொக்க கையிருப்பு சொத்து சேர்த்து வைத்துள்ளார். பணம் சம்பாதிப்பதில் எவ்வளவு தில்லு முல்லுகள் செய்துள்ளார் என்பதை யாராலும் இதுவரை சரியாக கணித்து சொல்லமுடியவில்லை. சிக்கல் சுருட்டைகள் இல்லாமல் தலை முடி மிருதுவாக உள்ளவர் மிருதுவான சரீரத்துடன் உறுதியான உள்ளம் உடையவர். அடர்ந்த செம்பட்டை முடி உள்ளவர் உலகாயத அனுபவமுள்ளவர். அவர் பொறுமைக்கும் பதட்டமின்மைக்கும் சொந்தக்காரர். கருத்த (முடிக்கு மை அடிப்பவர்கள் தவிர )அடர்ந்த முடி உடையவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். முடி அழுத்தமாகவும் கருமையுடன் தடித்து உள்ளவராயின் அவரது வெளித்தோற்றம் முரடாகவும் உள்ளம் கோழைத்தனமாகவும் இருப்பார். அவருக்கு எதிலும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். சுருள் முடிக்காரர் அவரது தோற்றத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமில்லாதவர். பார்த்தால் சாது பாய்ந்தால் புலி. ஆனால் வழுக்கை தலையர்களுக்கு மட்டும் முடி ஜோசியம் கண்டு பிடிக்கப்படவில்லை.
- இதை படிச்சவுடனே சிரிப்பை அடக்க 'முடி'யில்லை....
291110.கருப்பில் வெள்ளை. (astromaniam,india,Chennai)
பெங்களூர் பிரேம். அரசியல் வாதிகள் வெள்ளை நிற வேட்டி ஷர்ட் அணிவது கொள்ளை அடிக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க.
- இது புதுக்கவிதை
GENERAL
271105.பணம் இல்லாதவன் சாக வேண்டும்? (hayyram,india,chennai)
சென்னை தற்பொழுது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாத நகரமாக மாறிவருகிறது. மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே வாழ முடியும் நாடாக நகரங்களை மாற்றிவருகின்றனர். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்ப வர்கத்தினர் அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்ற கதையில் தான் விலைவாசி மற்றும் வீட்டுவாடகை ஏறிப்போகிறது. மனிதத் தன்மையற்ற இந்த வாடகை விலையேற்றம் பெருத்த துன்பத்திற்கு ஆளாக்கியிறுக்கிறது. 2000 வாடகை கொடுத்து வந்தவர்களிடம் கூசாமல் 5000 கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் காலி செய்யுங்கள் என்று சொல்லும் நிலைமை அதிகமில்லை ஒரே வருடத்தில் உண்டாகியிருப்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய சமூக அவலம். அரசாங்கம் நடத்துவது தொழிலாகி விட்டது. அரசியல் லாபம் தரும் வியாபாரமாகி விட்டது. இனி மக்களுக்காக யோசிக்க யாருமே இல்லை. பணமிருப்பவன் தான் வாழமுடியும், இல்லாதவன் எங்காவது ஓடிப்பொகவேண்டும் இல்லை சாக வேண்டும். கேட்பார் யாரும் இல்லை. இது தான் இன்றைய நாட்டின் நிலை, இதை எழுதும் எனது நிலையும் கூட!.
சென்னை தற்பொழுது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாத நகரமாக மாறிவருகிறது. இதற்கு காரணம் திமுக ஆட்சி என்று சொல்வார் என்று பார்த்தேன் ஏமாற்றிவிட்டார் :))
POLITICS
271103.தி.மு.க. அரசின் சாதனை (BHARATH,INDIA,CHENNAI)
தமிழக மக்கள் விரைவில் மின்சார வெட்டை அனுபவிக்கப்போகிறார்கள் . தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சார அள்வில் சுமார் 1500 மெகா வாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கோடை காலத்தில் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம். கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மின்சார வெட்டு என்பதே இல்லாமல் இருந்தது . தமிழக மக்களுக்கு இந்த வருட கோடை காலம் அனலாய் இருக்கப்போகிறது . இது தி.மு.க. அரசின் பரிசு.
மேலே இருந்த ஆசையை பாரத்(இந்திய புதல்வன்) நிறைவேற்றிவிட்டார்.
இன்னும் நிறைய இருக்கு அங்கேயே படிங்க, முடிஞ்சா ஆட்டையில் அங்கே கலந்துகொள்ளுங்க
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
'நாய்'டு தெரியாமத்தான் கேக்குறேன் உனக்கு வேலை வெட்டியே இல்லையா தினமும் இப்படி கிறுக்குதமனா ஏதாச்சு எழுதி ஏண்டா நான் கிறுக்கன் எனக்கு வெட்டி இல்லைன்னு வடிவேல் பாணியில் ஏதாச்சும் எழுதி சாவடிக்கிறே போடா போய் தூங்கு நீயும் என்னை போல ஒரு கைநாட்டு இதுல இன்சினியர் பட்டம் வேற
1 Comment - Show Original Post
//Gurujeeth said...
'நாய்'டு தெரியாமத்தான் கேக்குறேன் உனக்கு வேலை வெட்டியே இல்லையா தினமும் இப்படி கிறுக்குதமனா ஏதாச்சு எழுதி ஏண்டா நான் கிறுக்கன் எனக்கு வெட்டி இல்லைன்னு வடிவேல் பாணியில் ஏதாச்சும் எழுதி சாவடிக்கிறே போடா போய் தூங்கு நீயும் என்னை போல ஒரு கைநாட்டு இதுல இன்சினியர் பட்டம் வேற
//
தேங்காய் ஆடலாம்... தேங்காய் 'குடுமி' ஆடலாமோ ? எதுக்கு ஓய் தேடிப்படிக்கிறீர். நான் எதையாவது கிறுக்கிட்டுப் போறேன். பொறுப்பானவாராக இருங்கோ, அவிழ்ந்துவிழுந்துட்டு பாருங்கோ, அள்ளி முடிங்கோ.
பெங்களூர், கர்நாடகாவில் இருந்து பின்னூட்டம் வந்தால் வெளி இடப்பட மாட்டாது.
கோவி,
தினமலரில் இதெல்லாம் வேற இருக்கா பார்க்கவே இல்லை! சொன்னதுக்கு நன்றி! ஆன் லைன் பதிப்பில் உள்ளதா இது? அச்சுப்பதிப்பில் இப்படி இல்லை அதான் கேட்டேன்.
ஆனாலும் சிலது படா தமாஷா தான் கீது :-))
//சுருள் முடிக்காரர் அவரது தோற்றத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமில்லாதவர். பார்த்தால் சாது பாய்ந்தால் புலி. //
நான் பார்த்தாலே மகா முரடன் மாதிரி இருக்கேன் சொல்வாங்க( ஏன்னா எனக்கும் சுருட்டை முடிதான், அதை வேற முடி வெட்டாமல் காடு மாதிரி வைத்திருப்பேன்)
உள்ளமும் முரடா தான் இருக்கு(அதை நான் சொல்லாமலே தெரிந்து இருக்கும்) :-))
சொட்டை தலையர்களுக்கும் ஒரு ஜோசியம் இருக்கு, அவர்கள் பாலியல் சமாச்சாரத்தில கில்லாடியா இருப்பாங்களாம்!(உங்களுக்கு மண்டைல முடி இருக்குல) :-))
கோவி.கண்ணன்,
தினமலரின் "தகவல் பலகை" (OPEN PAGE) தளம் பல ஆண்டுகளாகவே இருக்கிறது. NRI Question Page என்று பெயர் இருந்தாலும் கூட அதில் எழுதுவோர் மிகப்பெரும்பாலும் இந்தியத் தமிழர்கள் தான். அதில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் (2007 ஆகஸ்ட் வரை) நான் நிறைய எழுதி இருக்கிறேன். சுமாராக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதில் எழுதுவோர் இடம் பெயர்ந்து விடுகிறார்கள். இப்போது தங்கள் பதிவைப் படித்த பிறகு மீண்டும் ஒருமுறை அங்கே சென்று பார்த்தேன். அப்போது என்னுடன் எழுதிக் கொண்டிருந்தவர்களில் நான்கைந்து பேர் தான் இன்னும் எழுதுகிறார்கள். மற்ற எல்லோரும் புதிதாகத் தெரிகிறார்கள்.
கருத்து மோதலை விடக் கருத்து சொல்வோர் மோதல் அதிகமாக இருக்கும். கருணாநிதியைத் திட்டினால் பிரசுரம் உத்தரவாதம். "ஜனநாயக பாலன்ஸுக்காக" ஜெ எதிர்ப்பு கருத்துக்களும் அவ்வப்போது பிரசுரம் பெறும். பிரசுரமான கடிதங்கள் திடீரென்று காணாமலும் போய் விடும். தனியே எழுதி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இன்றி நேரடியாகவே எழுதி விடலாம் என்பது நேர மிச்ச சௌகரியம். ஆனால், அந்தத் தளத்தின் பழைய பக்கங்களைப் படிக்க இயலாது என்று தெரியாததால் அப்போது எழுதிய விஷயங்களுக்கு என்னிடம் பிரதி இல்லாமல் போய் விட்டது. அரசியல் தவிர மற்ற விஷயங்கள் எழுதுவோர் மிகக் குறைவு. எழுத்துப் பயிற்சிக்கு ஓர் அருமையான வித்தியாசமான தளம் என்பதை மறுப்பதற்கில்லை..
அந்தத் தளத்துடனான என் அனுபவங்களைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். அந்தத் தளத்திற்கு ஒரு விளம்பரம் செய்திருக்கிறீர்கள்.அதன் பழைய பங்களிப்பாளன் என்கிற முறையில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மன்னிக்கவும்.... இது போன்ற பதிவுக்கு போடவேண்டிய பின்னூட்ட டெம்ப்ளேட்டை குசும்பன் இன்னும் வெளியிடவில்லை.. அவர் வெளியிட்ட பின் பின்னூட்டுகிறேன்... நன்றி..
/////
கோவி.கண்ணன் said...
பெங்களூர், கர்நாடகாவில் இருந்து பின்னூட்டம் வந்தால் வெளி இடப்பட மாட்டாது.
/////
உங்களின் இந்தப் பாசிசப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறேன்!!!!!
:)
தினமலர் கும்மிகள் பலவிதமாகத்தான் இருக்கிறது...கும்மிக்கு நீங்கள் அடித்த கும்மி இன்னும் சுவாரசியம்
கருத்துரையிடுக