பின்பற்றுபவர்கள்

16 டிசம்பர், 2007

நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)

மாலை 6.30 மணி மகாபலிபுரம் கடற்கரை மணலில் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள் சிவாவும், சித்ராவும்.

3 வருடமாக காதலிக்கிறார்கள், சித்ரா நெருப்பு மாதிரி இதுவரை அவனை நெருங்க விட்டதே இல்லை. அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்தான் சிவா... சித்ரா ரொம்ப ஓவர் ... முத்தத்துக்காக அவ்வப்போது அவளுடன் சினுங்குவதைக் கூட அனுமதிக்கமாட்டாள்.

'ஒரு முத்தம் தானே கொடுத்துடலாம்னு நினைப்பேன்...' - சித்ரா

'அப்பறம்....ஏன் விலகி விலகி ஓடினாய்?' - சிவா

'அது இல்லேடா...அப்பறம் ஒண்ணு ஒண்ணாக ..தவறில்லைன்னு நினைக்க ஆரம்பிச்சு எல்லை மீறிடுவோம்...'

கோபமாக சிவா 'அப்படியே மீறினால் தான் என்ன ? ... ஏய் என்னை சந்தேகப்படுறியா...எல்லாம் முடிஞ்சு உன்னை விட்டுடு...'

அவன் வாயை தன் கையால் பொத்தினாள்

'நம்ம கல்சருக்கு சரிவராது சிவா...இதெல்லாம் தெரிஞ்சா என் பேரண்ட்ஸ் வெட்டி போட்டுடுவாங்க...எனக்கும் விருப்பம் இல்லை'

எப்போதாவது சிவா உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் இதுபோன்று எதாவது பேசி சமாளித்துவிடுவாள்

*****

மூன்றுமாதமாக ப்ளான் பண்ணி இன்னிக்கு மகாபலிபுரம் கூட்டி வந்திருக்கிறான். மேலே சொன்னது போல் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவள் தோள் மீது சாய முற்பட்டான்

'சிவா...பப்ளிக் ப்ளேஸ்...அங்க பாரு நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்' கண்களால் காட்டினாள்

'பார்த்தால் பார்கட்டும்..நாம...'

'நீ ஆண் உனக்கு கூச்சம் இருக்காது...எனக்கு உடல் கூசுகிறது...வா...நாம் போய்டலாம்...'

'ம்...சரி..ஹோட்டல் ரூமுக்கே போய்டலாம்' என்று கண்ணடித்து எழுந்து அவளுக்கு கைகொடுக்க இருவரும் எழுந்தார்கள்

'சீ...போடா' என்று வெட்கத்துடன் சொன்னாள் ஆனால் அவளால் தட்ட முடியவில்லை.அவனது கைகளைப் பற்றிக் கொண்டு அவன் பின்னே பழகிய நாய் குட்டிப் போன்று சென்றாள்

ஹோட்டல் அறைக்கு சென்று

இருவரும் குளித்துவிட்டு...கட்டிலில் அமர்ந்தார்கள்...

டிவியை ஓடவிட்டு...

அவளது மடிமீது தலைவைத்தான் அவன்...சிவா...இனிமேல் அவளால் செய்வதற்கென்று எதுவும் இல்லை என்று நினைத்தவளாகவும்...விருப்பத்துடனும்

ஆதரவாக அவன் தலையை கோதிவிட்டாள்

இருவரும் மெல்ல மெல்ல நெருங்கி....

அதன் பிறகு அவளால் எதையும் பேசவோ...தட்டவோ முடியவில்லை...

'டேய் லைட்டையாவது ஆப் பண்ணேண்டா...ஒரே வெட்கமாக இருக்கிறது'

'இன்னும் உனக்கு வெட்கமா ?'

அவர்கள் இருந்த மன நிலையினை கெடுப்பது போல் அவளது செல்போன் ரிங்கானது

'உன் போனா ... இந்த நேரத்தில்...?' அலுப்பாக அவன் சொல்லி முடிக்கும் போது

அருகில் வைத்திருந்த்த செல்போனை ஒரு கையை நீட்டி எடுத்தாள்,

'ஹலோ'


'ம் சரி...புரியுது...சீக்ரம் வந்திடுறேன்...ம் சரிப்பா'

'சித்ரா போனில் யாரு..?'

ஒரு கையால் போனை பொத்திக் கொண்டு

'அப்பா...தான் உங்க கிட்ட பேசினுமாம்'

அந்த நேரத்து படபடப்பிலும் வாங்கி பேசினான்

'சரிங்க மாமா...' தொடர்ந்தான்

'கல்யாண பத்திரிக்கை எடுத்து வந்திருக்கிறோம்...அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை ஆகாது... காலையில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துடுறோம்...நானே ட்ரைவ் பண்ணி வந்துடுறேன் யாரையும் அனுப்ப வேண்டாம்'

பேசி முடித்ததும்...போன்களையும்...லைட்டையும் ஆப் பண்ணிவிட...அறையில் மிதமான இருட்டும் மனதில் புத்துணர்வும் இருவருக்கும் பிறக்க...

ஹோட்டல் நிர்வாகத்தால் நன்கு அலங்கரிகப்பட்ட கட்டிலில் இருவரும்...(போதும் வேண்டாம்...ச்சீ)

அவர்களுக்கு இன்று காலை தான் திருமணம் நடந்தது. இன்னிக்கு அவங்களுக்கு...முதல் பகல் முடிஞ்சு 3 மணிநேரம் ஆச்சு

16 கருத்துகள்:

SurveySan சொன்னது…

நல்ல நச்சு!

VSK சொன்னது…

'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து விட்டது!

நல்ல திருப்பம்!

:))

குசும்பன் சொன்னது…

அனானி ஆப்சனை மூடிய உங்களை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் ஆரம்பிக்க கூடாது?:))

இந்த கதையை காலை சாப்பாட்டுக்கு பிறகு படிச்சேன். இன்னும் இரண்டு வேலை சாப்பாட்டுக்கு பிறகு அல்லது சாப்பாட்டு முன் என்று வீதம் வைத்து சிறுகதை எழுதும் படி கேட்டுக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

கதை நன்றாக உள்ளது...

மங்களூர் சிவா சொன்னது…

//
குசும்பன் said...
அனானி ஆப்சனை மூடிய உங்களை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் ஆரம்பிக்க கூடாது?:))

//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா சொன்னது…

//
இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.
//

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
இந்த கதையை காலை சாப்பாட்டுக்கு பிறகு படிச்சேன். இன்னும் இரண்டு வேலை சாப்பாட்டுக்கு பிறகு அல்லது சாப்பாட்டு முன் என்று வீதம் வைத்து சிறுகதை எழுதும் படி கேட்டுக்கிறேன்.
//

அப்படின்னா...மருத்துவர் பற்றிய சிறுகதைதான் எழுதனும்...வீஎஸ்கே இருக்கார் அவரைப் போட்டு கும்மிடுவோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து விட்டது!

நல்ல திருப்பம்!

:))
//
வீஎஸ்கே ஐயா,

கதையில் திருப்பம் எதுவும் இல்லை. நடையில் மட்டும் தான் இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
நல்ல நச்சு!
//

'நச்சு' என்றால் நஞ்சு என்ற பொருளுண்டு.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
கதை நன்றாக உள்ளது...
//

பாச மலர்,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//
இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.
//

சிவா,

இது என்னோட காபி ரைட் பின்குறிப்பு. எனக்கே வா ?
:)

மங்களூர் சிவா சொன்னது…

//
கோவி.கண்ணன் said...
//
இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.
//

சிவா,

இது என்னோட காபி ரைட் பின்குறிப்பு. எனக்கே வா ?
:)

//
உங்கள் காப்பி ரைட் பின்னூட்டத்தை உபயோகபடுத்தவில்லை நன்றாக கவனிக்கவும்!!!
(மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது!!!)

Doctor Bruno சொன்னது…

This is regarding Compulsary Service and your comment on vovval's blog.


Please see the following posts
http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
http://bruno.penandscale.com/2007/11/compulsary-rural-service-for-doctors.html
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_13.html


If you have any queries or doubts, leave a comment in http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
and I am ready to explain
--

ஜெகதீசன் சொன்னது…

//(adults only)//

இந்த வரி சூப்பர்.... :))

அடல்ட்ஸ் ஒன்லி ன்னு போட்டுருக்கதால கதையப் படிக்கலை.. பின்னூட்டம் மட்டும் போடுறேன்... கதை நல்லா இருக்கு(கதை தான எழுதீருக்கீங்க? கட்டுரை இல்லையே)...
:PPP

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

இந்த வரி சூப்பர்.... :))

அடல்ட்ஸ் ஒன்லி ன்னு போட்டுருக்கதால கதையப் படிக்கலை.. பின்னூட்டம் மட்டும் போடுறேன்... கதை நல்லா இருக்கு(கதை தான எழுதீருக்கீங்க? கட்டுரை இல்லையே)...
:PPP
//

ஜெகதீசன்
புரியல்ல...கட்டுரை கதை மாதிரி எழுதமுடியுமா ?

ஜெகதீசன் சொன்னது…

//
ஜெகதீசன்
புரியல்ல...கட்டுரை கதை மாதிரி எழுதமுடியுமா ?
//
நான் தான் சொன்னேனுங்களே... அடல்ட்ஸ் ஒன்லி ன்னுறதால "பதிவைப் படிக்கலைன்னு..." அப்புறம் எப்படித் தெரியும் கதையா கட்டுரையான்னு???
:P

ஒரு வேளை கட்டுரையா இருந்தா அதுக்கு "கதை நல்லா இருக்கு"ன்னு பின்னூட்டம் போடக்கூடாதுல்லயா... அதான் கதைதானான்னு கன்பர்ம் பண்ணிக்கிறதுக்காகக் கேட்டேன்...
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்