குடிசைத் தொழில்களை விட சாமியார் தொழில்கள் தமிழகத்தில் மலிந்துவிட்டது, ஒருத்தன் சொல்கிறான், 'இரண்டு பொண்டாட்டி கட்டினேன், ஒன்னுஞ் சரியில்லை சாமியாராக போய்டேன்' சாமியாராக போவதற்கு இதெல்லாம் காரணமாம். இவன் உடலில் பெருமாள் சாமி வந்து இறங்கி 'உலகை காப்பது இனி உன்பொறுப்பு' என்று சொல்லி உடலில் தங்கிவிட்டதாம்.
சாமியார்களின் வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும், வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், அரசர்களைப் போலவே 'அந்த' புரங்கள், ஐ மீன் ஓய்வெடுக்கும் தனி பங்களாக்கள் என அனைத்தும் உழைக்காமலேயே ஈஸ்வரனோ, கிருஷ்ணனோ எவன் பெயரையோ சொல்லி, அது தான் தான் என்று சொல்லி அவதாரம் ஆகிவிடுகின்றனர். உலக அளவில் ஹைடெக் விபச்சார கூடம் எது என்றால் அது சாமியார்களின் ஆசிரமங்கள் தான்.
பிரேமனந்தா மாதிரி நீதித்துறையால் கவனிக்கப்பட்ட ஆட்கள் மிகக் குறைவு, பிரேமனந்தா கூட போட்டியாக இருப்பதால் ஒரு சில சாமியார்களே அவரை உள்ளே வைப்பதற்கு எல்லா பேருதவிகளும் செய்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனென்றால் பணபலம் படைத்த சாமியார்கள் யாரும் அவ்வளவு சுலபமாக பிடிபட்டு விடமாட்டார்கள்.
துறவறம் என்ற வாழ்க்கை முறை, ஒரு காலத்தில் தமிழரிடையேவும் உண்டு. துறவறம் என்றால் வயதான காலத்தில் மனைவியுடன் சேர்ந்தே புன்னியதலங்களுக்கு சென்றுவிடுவார்கள் சிலர் சென்று வருவார்கள். குடும்ப பொறுப்பை வாரிசுகளிடம் விட்டுவிடுவார்கள். ஆனால் இன்று பெண்ணாசை, மண்ணாசை அனைத்தையும் வைத்திருக்கிறான் அவனும் துறவறமாம் சாமியாராம். இல்லறவாசிகளே தேவலை, ஒரு மனைவி ஒரு சிறிய குடும்பத்துடன் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எல்லா சாமியார்களும் அப்படியா ? ன்னு கேட்காதீர்கள் புல்லுறுவிகள் தான் அதிகம், சாமியார் என்றாலே கேவலமாக நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
//போலி சாமியார்கள்-உளவுப் பிரிவு ரகசிய சர்வே
புதன்கிழமை, டிசம்பர் 26, 2007
சென்னை: தமிழகத்தில் போலி சாமியார்களால் பெண்கள் ஏமாற்றப்பட்டு வருவதும் கற்பழிப்புகள் நடந்து வருவதையும் தொடர்ந்து போலிகளை அடையாளம் காணுமாறு போலீசாருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் போலிச் சாமியார்கள் குறித்த கணக்கெடுப்பு ரகசியமாக நடந்து வருகிறது.
இந்தப் பணியில் உளவு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். போலி சாமியார்கள் எனக் கருதப்படுவோர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் உள்ளனவா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உளவுப் பிரிவினர் தரும் தகவல்களின் அடிப்படையில் போலிகள் மீது அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.//
இது செய்தி.
போலி சாமியார் யார் என்று கண்டு பிடிக்க இவ்வளவு கஷ்டப்படனுமா ?
சில நடைமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தி அதை அரசாங்க விதியாக வைத்திருந்தால் ஒரு பயலும் சாமியார் ஆக மாட்டான்
* சாமியார்கள் எல்லோரும் ஆசிரமம் நடத்த முறைப்படி இந்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்
* சாமியார்கள் அனைவரின் வருமானத்தை முறைப்படி அரசாங்கத்துக்கு செலுத்தி, அதன் அடிப்படையில் அரசு தரும் மடங்களில் தான் சாமியார்கள் தங்கி இருக்க வேண்டும்
* சாமியார்கள் 'திக்' விஜயம், வெளியூருக்கு சென்றால் அங்கு இருக்கும் காவல் நிலையத்திலும், செல்லும் ஊரில் உள்ள காவல் நிலையத்திலும் இரண்டு நாளைக்கு முன்பே தகவல் கொடுக்க வேண்டும்.
* சாமியார்கள் எவரும் குடும்ப உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருக்கக் கூடாது
* எந்த சாமியாரும் பெண்களை மாலை ஆறுமணிக்கு மேல் சந்திக்கக் கூடாது, பகலில்
* பெண் பக்தைகள் சாமியாரை சந்திக்க விரும்பினால் போலிஸ் லாக்கப்பினுள், அரசு பாதுகாப்பில் தான் சந்திக்க வேண்டும்.
* கஞ்சா பொட்டலங்கள் சாமியார் வசிக்கும் ஏரியாவில் விற்பது தெரிந்தால், அந்த சாமியார்கள் உடனடியாக போலிசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்
* ஒவ்வொரு சாமியாரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஹெஐவி பாசிடிவ் சோதனை மேற்கொள்ள வேண்டும்
* இதையெல்லாம் விட முக்கியமாக சாமியார்களாக மாற விரும்புவர்கள் அனைவரும் 'ஆண்மை' நீக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கண்டிசனுக்கெல்லாம் ஒப்புக் கொண்டால் சாமியார், இல்லை என்றால் மாமியார் வீடு என்று அரசாங்கம் அறிவிக்கலாம், அதை விட்டு போலி சாமியார் யார் ? நல்ல சாமியார் யாரு எப்படி கண்டுபிடிப்பது, எல்லா சாமியார்களுமே பழனி சித்தனாதன் விபூதியைத்தான் பூசி இருக்கானுங்க. மாட்டுற வரைக்கும் நல்ல சாமியார்தான் :)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
46 கருத்துகள்:
:)
நல்ல கன்டீஷன்கள்.அண்டி வாழும்
பல பேர் பிழைப்பில் மண் விழும்,இதெல்லாம் அமல்படுத்தினால்.
திருந்த வேண்டியது நம் மக்கள்.
Postukku oru :)
Superb post! & Good Ideas!
//ப்ளாக்கர் கணக்கு வைத்திருக்கும் அனானிகள் மன்னிக்கவும்.
//
:(
என்னங்க கோவி,
விவரம் புரியாதவராவே இருக்கிங்க , ஒரு சாமியார் ஆசிரமத்தை தொரந்ததும், அவர்கிட்டே போற முதல் ஆளே அந்த பகுதி காவல்துறையினர் தான், போய் ஆசி வாங்கிட்டு , அப்படியே அங்கே வர அரசியல் பிரபலத்துக்கிட்டே சொல்லி , புரோமோஷன் வாங்கித்தாங்கனு சொல்வாங்க. இப்படி செல்வாக்கான சாமியார்கள் மூலம் வாழ்க்கையை ஓட்டும் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும், கண்டிஷன் போடும்!
நம்ம சங்கராச்சாரி மத்திய அமைச்சரவைலவே இடம் வாங்கி தந்தவர், அவரை எல்லாம் காவல் துறை கண்டுக்குமா என்ன, ஏதோ அவர் அம்மையாரை மொறைச்சுக்கிட்டதாலே கம்பி எண்ணும் பாக்கியம் பெற்றார். இல்லைனா எல்லா சாமியார்களும் ராஜ குரு போல தான்!
அந்த கால ராஜாக்களின் வாழ்க்கையைப்பார்த்தாலே தெரியும், ராஜ குரு என்பவர் சாமியார் போல இருப்பார், ஆனால் அரண்மனை வாசம், பதவில இல்லாமலே எல்லாம் செய்வார் , அது போல தான் இப்போதைய சாமியார்களும். என்ன இப்போ மந்திரிகள் போய் மாட்டிக்கிறாங்க!
சூப்பர்ங்க..
அதுசரி .. போலி சாமியார் சாமியார் என்று சொல்கிறீர்களே அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் . எந்தெந்த காரணங்களுக்காக மதங்கள் உருவாக்கப்பட்டதோ, அதனை அப்பழுக்கில்லாமல் செய்தால் நீங்கள் அவர்களை போலிச்சாமியார்கள் என்று சொல்கிறீர்கள். அவர்கள்தான் உண்மையான சாமியார்கள் ..;)
//
TBCD said...
:)
//
டிபிசிடி ஐயா,
சாமியார் ஆகனும் என்ற ஆசை போய்விட்டதா ?
//நாமக்கல் சிபி said...
Postukku oru :)
Superb post! & Good Ideas!//
நன்றி
////ப்ளாக்கர் கணக்கு வைத்திருக்கும் அனானிகள் மன்னிக்கவும்.
//
:(
////
அதுவா ? பதிவு இல்லாமல் வெறும் புரைபைல் வச்சி பின்னூட்டம் போடுவதும் அனானி கமெண்டும் ஒண்ணுதான்.
:)
//வவ்வால் said...
என்னங்க கோவி,
விவரம் புரியாதவராவே இருக்கிங்க , ஒரு சாமியார் ஆசிரமத்தை தொரந்ததும், அவர்கிட்டே போற முதல் ஆளே அந்த பகுதி காவல்துறையினர் தான், போய் ஆசி வாங்கிட்டு , அப்படியே அங்கே வர அரசியல் பிரபலத்துக்கிட்டே சொல்லி , புரோமோஷன் வாங்கித்தாங்கனு சொல்வாங்க. இப்படி செல்வாக்கான சாமியார்கள் மூலம் வாழ்க்கையை ஓட்டும் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும், கண்டிஷன் போடும்!
நம்ம சங்கராச்சாரி மத்திய அமைச்சரவைலவே இடம் வாங்கி தந்தவர், அவரை எல்லாம் காவல் துறை கண்டுக்குமா என்ன, ஏதோ அவர் அம்மையாரை மொறைச்சுக்கிட்டதாலே கம்பி எண்ணும் பாக்கியம் பெற்றார். இல்லைனா எல்லா சாமியார்களும் ராஜ குரு போல தான்!
அந்த கால ராஜாக்களின் வாழ்க்கையைப்பார்த்தாலே தெரியும், ராஜ குரு என்பவர் சாமியார் போல இருப்பார், ஆனால் அரண்மனை வாசம், பதவில இல்லாமலே எல்லாம் செய்வார் , அது போல தான் இப்போதைய சாமியார்களும். என்ன இப்போ மந்திரிகள் போய் மாட்டிக்கிறாங்க!
//
நீங்க எப்படி இருந்தாலும் மடக்கிடுவிங்களே, மனுசன் ஒரு கற்பனையில் இதெல்லாம் நடந்தால் பெண்கள் நிம்மதியாக நடமாடமுடியும்னு நினைத்தால் நீங்களே இப்படிச் சொன்னால் என்னத்த செய்றது.
சாமியார்களுக்கு *களி* காலம் வரவே வராதுன்னு சொல்றிங்களா ?
:)
கோவி. கண்ணன், உங்க ஆதங்கம் ரொம்ப நியாயமானதுதான். முக்காவாசிப் பேர் இப்படித்தான் இருக்காங்க - எப்போ எல்லாத்தையும் துறக்க வேண்டிய துறவி புகழ், காசு, அதிகாரம் எல்லாத்தையும் ஒரு இல்லறத்தானை விட அதிகமா சேர்க்க நினைக்க ஆரம்பிக்கறாங்களோ அப்பவே தெரிஞ்சுடுதே அவங்க துறவி இல்லைன்னு. இப்ப இருக்கற நிலமைல உங்களோட கடைசி கண்டிஷன் ரொம்ப அருமையான டெக்னிக் - அரசாங்கம் கண்டிப்பா இதை அமுல் படுத்திட்டா நாட்டுல பல் பெண்கள் காப்பாற்றப்படுவாங்க. :) Jokes apart, ஒரே ஒரு விளக்கம் மட்டும் - கடைசி காலத்துல பொறுப்பை வாரிசுகளிடம் விட்டுவிட்டு மனைவியோடே கொஞ்சம் விலகி(காட்டுக்குள்ளோ அல்லது ஏதேனும் புனித தலத்திலோ) வசிப்பதும், இல்லற பற்றுகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதுமான பிரிவு வானப்பிரஸ்டதம் எனப்படும் -அது வேறு துறவு வேறு. துறவி என்பவன் எல்லா கர்மங்களையும் துறக்க வேண்டும், ஜாதியையும் துறக்க வேண்டும்(பிராமணர்கள் துறவறம் மேற்கொள்கையில் பூணூலை கட்டாயம் கழட்டி எறிய வேண்டும்). கையால் நெருப்பை தொடக்கூடாது. (அதாவது தானே சமைத்து உண்ணவோ அல்லது ஹோமம் போன்ற கர்மாக்களை செய்யவோ கூடாது). உணவு உட்கொள்ளும் முறை பற்றி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது - எதெதெல்லாம் உண்ண வேண்டும் என்றல்ல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று. இதுல எதயாவது ஒன்னை, ஒன்னே ஒன்னை கடைபிடிக்கற ஒரு சாமியாரை கண்டுபிடித்து தருபவர்க்கு லட்ச ரூபாய் வேணுமானாலும் கொடுக்கலாம்... ஏன்னா, அது சாத்தியமே இல்லாத ஒன்னாச்சே.. :)
//L-L-D-a-s-u said...
சூப்பர்ங்க..
அதுசரி .. போலி சாமியார் சாமியார் என்று சொல்கிறீர்களே அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் . எந்தெந்த காரணங்களுக்காக மதங்கள் உருவாக்கப்பட்டதோ, அதனை அப்பழுக்கில்லாமல் செய்தால் நீங்கள் அவர்களை போலிச்சாமியார்கள் என்று சொல்கிறீர்கள். அவர்கள்தான் உண்மையான சாமியார்கள் ..;)
8:28 PM, December 27, 2007
//
தாஸ்,
இல்லற கடமை ஒரு மனைவி மற்றும் சில குழந்தைகள், இவனுங்க போலிச்சாமியாருங்க மாற்றான் மனைவி, விதவைகள் ஆகியோரையல்லாவா அடைய நினைக்கிறானுங்க.
:)
//வடுவூர் குமார் said...
நல்ல கன்டீஷன்கள்.அண்டி வாழும்
பல பேர் பிழைப்பில் மண் விழும்,இதெல்லாம் அமல்படுத்தினால்.
திருந்த வேண்டியது நம் மக்கள்.
//
குமார்,
போலி சாமியார்களை, புளிய மரத்தில் கட்டிவைத்து சுளுக்கெடுத்தால் ஜனங்களும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்துடுவாங்க. அதன் பிறகு அந்த சாமியார்களுக்கு காயடிக்கனும்
:)
//சாமியார்களுக்கு *களி* காலம் வரவே வராதுன்னு சொல்றிங்களா ?
:)//
கோவி,
உங்களை எல்லாம் மடக்க முடியுமா, நீங்க யாரு...? :-))
பிக்பாக்கெட் தொழிலில் 100 பேர் இருந்தா... எவ்வளவு தான் கில்லாடியானாலும் ஒரு முறையாவது சிறைவாசம் பார்க்காம இருக்க முடியாது. ஆனால் போலிச்சாமியார்கள் 100 பேர் இருந்தா அதில் ஒரு சிலர் தவிர மீதி எல்லாம் ராஜ போகம் தான்,சிறை வாசப்படியை கூட மிதிக்காமல் காலம் தள்ளுவோர் அதிகம். அதனால் தான் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் துணிந்து இறங்குகிறார்கள்.
அப்படியே உள்ளே போய் வந்தவர்கள் , அது அவர்கள் ஜாதகப்பலன், தவரே செய்யவில்லை என்று சால்ஜாப்பு சொல்வார்கள்.
சதுர்வேதி என்ற காமந்தக சாமியார் அம்மா, பொண்ணு என்று இரண்டுப்பேரையும் கடத்திப்போய் கசமுசா செய்து சிறை சென்றார். ஆனால் ஜாமினில் வந்தவர் நடத்திய ஒரு விழாவில் சி.பி.ஐ முன்னால் இயக்குனர் கார்த்திகேயன்(இராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர்) போய் கலந்துக்கொள்கிறார். ஏன் இப்படிக் கேட்டால் , குற்றம் தானே சுமத்தப்பட்டிருக்கு, நிருபனம் ஆகவில்லை என்பார்கள்.
"களி"காலம் பார்த்தாலும் அவர்கள் வாழ்வு ராஜ வாழ்வு தான். "காலம்" போனக்கோலத்தை பாருங்க!(உங்க காலம் அல்ல இது)
மக்கள் இறைவனை தாங்களே காண முடியும் என்று நம்ப வேண்டும் ஏன் இந்த இடைத்தரகர்கள்!கடவுளின் ஆசியை வாங்கி தரும் ஏஜெண்ட்களா இந்த சாமியார்கள்.யார் அப்படி ஒரு அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது.
கோயிலுக்கு போனாலும் அர்ச்சனை , ஆராதனை எல்லாம் இல்லாமல் மனதால் வணங்கலாமே மக்கள்.மக்கள் மாறனும், இதெல்லாம் சொன்னால் நம்பிக்கை வைக்கனும் சொல்வார்கள் மேதாவிகள்.
// வவ்வால் said...

வவ்வால் சார் நீண்ட இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி.
:)
பெரியவா உள்ளே போன போதே பல சாமியார்களுக்கு கிலி பிடித்துவிட்டது. அந்த சூட்டோடு சூடாக மாட்டியவர் தான் சதுர்வேதி.
பகுத்தறிவு பாடம் இறை நம்பிகையற்றோர் சொன்னால் மக்கள் ஏற்பது கடினம் தான். போலி சாமியார்களை பிடித்துக் கொடுக்க வேண்டியது உண்மையான ஆன்மிக வாதிகளின் வேலை, ஆனால் வெளியே தெரிந்தால் ஆன்மிகத்துக்கே அவமானம் என்று காலம் காலமாக பித்தலாட்டங்களை பக்தியாளர்கள் மூடிமறைத்தே வந்திருக்கின்றன.
பிரேமானந்த கூட பூர்வ ஜன்ம பாவத்தை இப்போது அனுபவித்துவருவதாகவும், திருநாவுக்கரசருக்கே சோதனை வந்து சுண்ணாம்பு காலவாயில் சுடப்படலையான்னு, இதெல்லாம் ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று உபன்யாசம் செய்து கொண்டு இருக்காராமே.
:)
Thanks . Good ideas for Govt to implement .
Fake spritual leaders are here to staty as long as Society never say no to Dowry . Dowry is making our society ill than caste injustice in my opinion .
Provide free education to all . So instead of we fighting with each other .
is there any website to link all fake guys ?
கோவி,
நன்றி, பெருசா பின்னூட்டம் போட்டு கொடுமை பண்றேன்னு திட்டாம விட்டதுக்கு.
//பிரேமானந்த கூட பூர்வ ஜன்ம பாவத்தை இப்போது அனுபவித்துவருவதாகவும், திருநாவுக்கரசருக்கே சோதனை வந்து சுண்ணாம்பு காலவாயில் சுடப்படலையான்னு, இதெல்லாம் ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று உபன்யாசம் செய்து கொண்டு இருக்காராமே.
:)//
இதான் அவங்க தந்திரமே ... மக்களும் முட்டாள் தனமா நம்புதுங்க. கடவுள் இல்லை என்று சொல்வதை விட இருந்தாலும் அடுத்தவர் துணையின்றி நீயே வழிப்படு என்று சொல்ல ஆள் வேண்டும்.
அப்படி மக்கள் மாறிட்டாலே பலருக்கும் பிழைப்பு நாறிடும்.
மக்கள் வந்து கடவுள் என்ற பெயரை வைத்து சொல்லும் மோசடியை நம்பாமல் அது ஏதோ தெய்வக்குற்றம் என்று இருக்கிறார்கள்.
//வவ்வால் said...
கோவி,
நன்றி, பெருசா பின்னூட்டம் போட்டு கொடுமை பண்றேன்னு திட்டாம விட்டதுக்கு.
//
வவ்வால் சார்,
உண்மையை சொல்லிடுறேன், அங்கே 'பெருசா' பின்னூட்டம் போட்டு இருக்கிங்கனு சொன்னதற்கு காரணமே நீங்க திட்டாமல் இருக்கனும் என்பதற்குத்தான்.
எதோ ஒரு பதிவில் (என்னுடையது அல்ல) பின்னூட்டம் போட்டல் மறுமொழி கூட போடமாட்டேன்கிறார்கள், நன்றி கெட்டவர்கள் என்று நீங்கள் சொல்லி இருந்த அதைப்பார்த்து எனக்கும் நடுக்கம் வந்துட்டு, எனக்கு மறுமொழி உடனடியாக போடுவதில் கொஞ்சம் சுனக்கம் தான்.
:)
அதைப்படிச்சதிலிருந்து யாருக்கு மறுமொழி போட்டாலும் போடாவிட்டாலும் வவ்வால் பின்னூட்டினால் உடனே மறுமொழி போட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.
என்ன எல்லாம் ஒரு பயம் தான்.
:))
//இதான் அவங்க தந்திரமே ... மக்களும் முட்டாள் தனமா நம்புதுங்க. கடவுள் இல்லை என்று சொல்வதை விட இருந்தாலும் அடுத்தவர் துணையின்றி நீயே வழிப்படு என்று சொல்ல ஆள் வேண்டும்.
அப்படி மக்கள் மாறிட்டாலே பலருக்கும் பிழைப்பு நாறிடும்.
மக்கள் வந்து கடவுள் என்ற பெயரை வைத்து சொல்லும் மோசடியை நம்பாமல் அது ஏதோ தெய்வக்குற்றம் என்று இருக்கிறார்கள்.//
நீங்க சொல்வது சரிதான்,
அரிசி பருப்பு போல் ஆன்மிகம் கடையில் கடைப்பது போல் தான் மக்கள் நினைக்கிறார்கள், போனால் வாங்கிட்டு வந்திடனும், வாங்கியது கையில் இருக்கா இல்லையா கவலைப்பட மாட்டார்கள், செய்யலை என்றால் தெய்வ குத்தம் - அடிப்படை பயம். எனவே உணர்ந்து அறிந்து கொள்வதற்கெல்லாம் எவருக்கும் விருப்பம் இல்லை. இதை சாமியார்கள் பிஸ்னஸ் ஆக ஆக்கிக் கொள்கிறார்கள்.
மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு ஆன்மிகம் எளிமையாக்கப்படவில்லை என்றால் எந்த காலத்திலும் சாமியார் திருடனுங்களை தடுக்கவே முடியாது.
தலை சூப்பர் பதிவு!!!
//
TBCD said...
:)
//
ரிப்பீட்டேய்
இத ரிப்பீட்டேய்னு போடறதவிட ஒரு ஸ்மைலி போட்டிருக்கலாம் ஆனா ராத்திரி தூக்கம் வராது அதுக்குதான்!!
//
எதோ ஒரு பதிவில் (என்னுடையது அல்ல) பின்னூட்டம் போட்டல் மறுமொழி கூட போடமாட்டேன்கிறார்கள், நன்றி கெட்டவர்கள்
//
செம ஷாட்
கோவி,
//எதோ ஒரு பதிவில் (என்னுடையது அல்ல) பின்னூட்டம் போட்டல் மறுமொழி கூட போடமாட்டேன்கிறார்கள், நன்றி கெட்டவர்கள் என்று நீங்கள் சொல்லி இருந்த அதைப்பார்த்து எனக்கும் நடுக்கம் வந்துட்டு, எனக்கு மறுமொழி உடனடியாக போடுவதில் கொஞ்சம் சுனக்கம் தான்.//
அது பொதுவாக பதிவர்களை கூட சொல்லவில்லை. நடுவர்களாக சிலர் அறிவிக்கப்பட்டப்போது சொன்னது. அவர்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கே அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தான் பதில் சொல்வார்கள், மற்றவர்களை எல்லாம் என்னனு கூட கண்டுக்கமாட்டார்கள், அப்புறம் எங்கே இருந்து நடுநிலைமையாக ஒரு தேர்வில் செயல்படுவார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னது.
மற்றப்படி பின்னூட்டத்தை கண்டுக்கிட்டா என்ன இல்லைனா என்ன, எத்தனையோ பின்னூட்டங்களை வெளியிடாமலே இருக்காங்க, ஆனால் பேசும் போது மாவீரர்கள் போல பேசுவாங்க!
நம்ம வேளை பதிவின் கருத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்வது, புடிச்ச சரி, இல்லைனா இல்லை. அது வேற சந்தர்ப்பத்துக்கு சொன்னது.
நாளு பேரை தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி பராபட்சம் அற்றவர்களா இருக்கனும், நாளும் தெரிந்தவர்களா இருக்கனும்னு எதிர்ப்பார்ப்பது தவறா?
இது பதிவைவிட்டு விலகிப்போகிறது, ஆனாலும் நான் சொன்னது பொதுவான அர்த்தத்தில் அல்ல என்று சொல்லவே விளக்கினேன்.
---------------
//மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு ஆன்மிகம் எளிமையாக்கப்படவில்லை என்றால் எந்த காலத்திலும் சாமியார் திருடனுங்களை தடுக்கவே முடியாது.//
இப்படித்தான் தடுக்க முடியாமல் போய்க்கிட்டு இருக்கு சாமியார் தொழில்!
க்ரிமினல் என்பவன் எந்த ரூபத்திலும் இருக்கலாம். அதன் ஒரு வடிவம் அவன் சாமியாராகவும் இருக்கலாம்.
ஆசிரியர் வடிவில் மாணவி கற்பை சூரையடுபவனும், காக்கி உடையில் அரசியல்வாதிக்கு குண்டாவாக செயல் படுபவனும் இருப்பதால் ஆசிரியர், மற்றும் காவல்துறை அதிகாரியின் தொழில் பற்றியும் சமூகத்தில் அவர்தம் பங்கு பற்றியும் தவறாக சித்த்தரிக்க முடியாது.
எனவே ஆன்மீகம் பற்றிய தவறான புரிதல்கள் படும்படியான பின்னூட்டங்களை நண்பர்கள் தவிர்க்கும்படியாய் கேட்டுக்கொள்கிறேன்.
அடர்ந்த காட்டுக்கு நடுவே மின் வேலியிடபட்ட சரணாலயம் அமைத்து அங்கு அனுப்பி நிம்மதியாக தவம் தவம் செய்ய விடலாம். மாதம் ஒரு முறை மக்களை video முன்னிலையில் சந்திக்க விடலாம்
// KARMA said...

12:31 AM, December 28, 2007
//
கர்மா ன்னு பேரு வச்சிருப்பதற்காக கருத்து சொல்லவே கூடாது, காரணம் எல்லாம் கர்ம விதிப்படி நடக்கிறது என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு உலகியல் வினைகளுக்கான கருத்தோ எதிர்கருத்தோ இருக்க முடியாது. எல்லாம் அவன் செயல் அல்லது விதிப்பயன் அல்லது செய்ததற்காக அனுபவிக்கிறோம் இவ்வளவுதான் உங்கள் எல்லை.
:)
சரி உங்க கருத்துக்கு வருவோம், அரசியிலவாதி, காவல்துறை ஆசிரியர் இவர்கள் எல்லோரும் சபலம் ஏற்படக் கூடிய சாதாரண பிறவிகள். ஆனால் சாமியார்கள் அப்படியா தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் ?
மக்களில் ஆன்மிக உணர்வை வியாபாரமாக்கி மோசடி செய்பவர்களுக்கு மற்ற எல்லோரைவிட அதிக தண்டனைகள் கொடுக்க வேண்டும். சதுக்க பூதம் சொல்லி இருக்காரு பாருங்க, சாமியாராக ஆசைப்பட்டால் 'காடு கடத்தனும்' அங்கே போய் இரு, வீடியோ கான்பிரசிங்க வச்சுதருகிறோம், அதன் வழியாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி, லோக ஷேமத்துக்காக பாடுபடுன்னு சொன்னா அப்பறம் ஒரு பய சாமியாராக மாறி ஏமாற்ற மாட்ட்டான்.
எனக்கும் ஒரே ஆச்சரியம்தாங்க....எப்படி மக்கள் இந்த 'சாமியார்'களை நம்பறாங்கன்னு. இதுலே இன்னும் விசேஷம் என்னன்னா...மெத்தப் படிச்சவுங்களும் இதில் அடக்கம்!!!!
'நான் சாமியைப் பார்த்தேன், நாந்தான் சாமி'ன்னு சொல்ற எவரையும் நம்பவே கூடாது
நாளை பாசிர்-ரிஸ் சில் புதிய ஆசிரமம் திறக்கப் படுகிறது....
கோவி.கண்ணானந்தா ஆசிரமம், பாசிர்-ரிஸ் முதல் குறுக்குச் சந்து, பாசிர்-ரிஸ், சிங்கப்பூர்..
திறந்து வைப்பவர்: பினாங்கு அரவிந்தானந்தா ஆசிரமத்தின் தலைமை ஸ்வாமி டிபிசிடியானந்தா..
ஸ்வாமிகள் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனைவரும் நாளை பாசிர்-ரிஸ் வரலாம்.... கட்டணம் 500வெள்ளி மட்டுமே!!!
//லக்ஷ்மி said...
கோவி. கண்ணன், உங்க ஆதங்கம் ரொம்ப நியாயமானதுதான். முக்காவாசிப் பேர் இப்படித்தான் இருக்காங்க - எப்போ எல்லாத்தையும் துறக்க வேண்டிய துறவி புகழ், காசு, அதிகாரம் எல்லாத்தையும் ஒரு இல்லறத்தானை விட அதிகமா சேர்க்க நினைக்க ஆரம்பிக்கறாங்களோ அப்பவே தெரிஞ்சுடுதே அவங்க துறவி இல்லைன்னு. இப்ப இருக்கற நிலமைல உங்களோட கடைசி கண்டிஷன் ரொம்ப அருமையான டெக்னிக் - அரசாங்கம் கண்டிப்பா இதை அமுல் படுத்திட்டா நாட்டுல பல் பெண்கள் காப்பாற்றப்படுவாங்க. :) Jokes apart, ஒரே ஒரு விளக்கம் மட்டும் - கடைசி காலத்துல பொறுப்பை வாரிசுகளிடம் விட்டுவிட்டு மனைவியோடே கொஞ்சம் விலகி(காட்டுக்குள்ளோ அல்லது ஏதேனும் புனித தலத்திலோ) வசிப்பதும், இல்லற பற்றுகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதுமான பிரிவு வானப்பிரஸ்டதம் எனப்படும் -அது வேறு துறவு வேறு. துறவி என்பவன் எல்லா கர்மங்களையும் துறக்க வேண்டும், ஜாதியையும் துறக்க வேண்டும்(பிராமணர்கள் துறவறம் மேற்கொள்கையில் பூணூலை கட்டாயம் கழட்டி எறிய வேண்டும்). கையால் நெருப்பை தொடக்கூடாது. (அதாவது தானே சமைத்து உண்ணவோ அல்லது ஹோமம் போன்ற கர்மாக்களை செய்யவோ கூடாது). உணவு உட்கொள்ளும் முறை பற்றி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது - எதெதெல்லாம் உண்ண வேண்டும் என்றல்ல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று. இதுல எதயாவது ஒன்னை, ஒன்னே ஒன்னை கடைபிடிக்கற ஒரு சாமியாரை கண்டுபிடித்து தருபவர்க்கு லட்ச ரூபாய் வேணுமானாலும் கொடுக்கலாம்... ஏன்னா, அது சாத்தியமே இல்லாத ஒன்னாச்சே.. :)
//
லக்ஷ்மி அம்மா, கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பார்பனர்களுக்கு திருமணத்திற்கு முன்பு பிரம்மச்சாரி, பிறகு வயதான காலத்தில் வானபிரஸ்தம் என இரு முறை துறவு வாழ்வு உண்டு என்று அறிந்திருக்கிறேன். உண்மையான சாமியார்களின் உணவுக்காக மஞ்சள் அதிகம் போட்டு சமையல் செய்வார்களாம், காரணம் காம இச்சையை மஞ்சள் கட்டுப்படுத்துமாம், அது போல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் தவிர்பார்களாம்.
//சதுக்க பூதம் said...
அடர்ந்த காட்டுக்கு நடுவே மின் வேலியிடபட்ட சரணாலயம் அமைத்து அங்கு அனுப்பி நிம்மதியாக தவம் தவம் செய்ய விடலாம். மாதம் ஒரு முறை மக்களை video முன்னிலையில் சந்திக்க விடலாம்
//
சதுக்க பூதம்,
மொத்ததில் காடு கடத்தச் சொல்கிறீர்கள், புழல் சிறை மாதிரி காட்டுக்குள் அமைத்து சாமியாராகப் போகிறவர்களை அங்கு அனுப்பினால் நலம்.
அதற்குள்ளே டிபார்ட் மெண்ட் வைத்துவிடாலாம்
பிள்ளை வரம் தருபவர்
பில்லி சூனியம் எடுப்பவர்
ஓடிப்போன கணவனை கண்டுபிடிப்பவர்
...
:)
//ஜெகதீசன் said...
நாளை பாசிர்-ரிஸ் சில் புதிய ஆசிரமம் திறக்கப் படுகிறது....
கோவி.கண்ணானந்தா ஆசிரமம், பாசிர்-ரிஸ் முதல் குறுக்குச் சந்து, பாசிர்-ரிஸ், சிங்கப்பூர்..
திறந்து வைப்பவர்: பினாங்கு அரவிந்தானந்தா ஆசிரமத்தின் தலைமை ஸ்வாமி டிபிசிடியானந்தா..
ஸ்வாமிகள் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனைவரும் நாளை பாசிர்-ரிஸ் வரலாம்.... கட்டணம் 500வெள்ளி மட்டுமே!!!
9:49 AM, December
//
ஜெகதீசன்,
சிங்கையெல்லாம் ரொம்ப ஸ்டிரிட்டுப்பா, சமீபத்தில் பேய் ஓட்டும் வழக்கில் ஒரு கிறித்துவ சாமியார் மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்ர். உங்க யோசனையை ஆழ்ந்து பரிசீலிக்கனும்.
:)
//துளசி கோபால் said...
எனக்கும் ஒரே ஆச்சரியம்தாங்க....எப்படி மக்கள் இந்த 'சாமியார்'களை நம்பறாங்கன்னு. இதுலே இன்னும் விசேஷம் என்னன்னா...மெத்தப் படிச்சவுங்களும் இதில் அடக்கம்!!!!
'நான் சாமியைப் பார்த்தேன், நாந்தான் சாமி'ன்னு சொல்ற எவரையும் நம்பவே கூடாது
8:42 AM, December 28, 2007
//
ஹூம்,
என்னத்த சொல்ல மருத்துவராக ஆன பெண்ணே சமீப கஞ்சா சாமியாரின் மோசடி சிக்கி மூன்றாவது மனைவியாக ஆகி, இன்னும் தெளியாமல், நானும் அவரும் முற்பிறவியில் ராமகிருஷ்ணர், சாரதாதேவின்னு சொல்லுதாம்
கோவி.கண்ணன் said...
//Raveendran Chinnasamy said...
Thanks . Good ideas for Govt to implement .
Fake spritual leaders are here to staty as long as Society never say no to Dowry . Dowry is making our society ill than caste injustice in my opinion .
Provide free education to all . So instead of we fighting with each other .
is there any website to link all fake guys ?
//
Raveendran Chinnasamy,
The spritual leaders, who ever having Asrama and websites are almost fake guys, there is no separate list available.
:)
கர்மா குறித்த உங்கள் புரிதல் தவறானது.
அது கிடக்க.
ஆன்மீகத்தில் தேடல் ஏற்பட்டு அதன் காரணமாக சாமியாரிடம் செல்பவர்கள் ஒன்றும் ஏமாறுவதில்லை. பெறும்பாலும் வாழ்கையில் பண ரீதியகவோ அல்லது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு 'எதை தின்னால் பித்தம் தெளியும்' என போகிறவர்கள் தான் ஏமாறுகிரார்கள்.
தவிர சிறிது விழிப்புனர்வு இருந்தால் எவர் உண்மை எவர் போலி என்பது விளங்கிடும். பத்து வருடஙலுக்கு முன்னமே கான்ஞி ஜெயேந்திரர் அரசியல்வாதிகளுடன் அதிகம் பழகுகிறார், இதுவே அவருக்கு பிரச்சனை கொடுக்கும் என பேசியவன் நான். சதுர்வேதி சாமியாரை ஒரு முறை பார்த்தாலே பொலி என விளங்கிவிடும்.
எல்லாவரற்றிர்கும் அரசாஙகம் சட்டம் போட வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
//எல்லாவரற்றிர்கும் அரசாஙகம் சட்டம் போட வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.//
நந்தன்,
வருமானம் உள்ள கோவில்களையெல்லாம் அரசாங்கம் தன் வசப்படுத்தி முறை படுத்துவது போல் ஏன் சாமியாரின் 'ஆ'சிரமங்கள் மீது கை வைக்கக் கூடாது, பொதுமக்கள் நாடும் மருத்துவர்கள், காவல் துறை, அங்ககடிகள் மற்றும் பலபலவற்றில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் அறிவிக்கும் போது நடவடிக்கை எடுக்கும் அரசு சாமியார்களின் நடவடிக்கையை கட்டுக்குள் கொண்டு வருவதில் என்ன தவறு ? சீன அரசாங்கம் தலாய்லாமா யார் என்று முடிவு செய்யும் போது, நமது அரசு சாமியார்களின் நடவடிக்கையை கண்காணிப்பதில் என்ன தவறு. மக்கள் தானாகவே விழிப்பாக இருக்க மாட்டார்கள், அப்படி எல்லாம் இருந்தால் கொலைகாரன் கொள்ளைக் காரன், மதவெறியன் இவர்களெல்லாம் மந்திரி ஆக மாட்டார்கள்.
குடும்ப வாழ்கையில் ஈடுபடுவதைப் பொல சிலர் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். மற்றவர்களுக்கு பிரச்சனை வரும் வரை அவர்கலள் முற்றும் துறந்த பின் சாமியாராகிறார்களா இல்லையா என்பதெல்லாம் தேவை இல்லாதது.
கோவில்களை நிர்வகிப்பதும் ஆசிரமங்களை நிர்வகிப்பதும் ஒன்றா?? நாத்திகம் பேசும் முதல்வரைக் கொண்ட அரசு எப்படி இதை செய்ய முடியும்?
பெரிதாக வருமானம் வரும் ஆசிரமங்கள் தங்கள் வரவு செலவுகளை அரசுக்கு சமர்பிக்க வேண்டுமென்ற சட்டம் இப்போதே இருப்பது தான்.
புகார் வந்தால்,ஆசிரமத்தின் மேல் நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயஙகுகிறது?
தனக்கு வேண்டுமென்றால் எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் ஆசிரமத்திற்குள்ளே போலீசை விடுபவர்கள் தானே அவர்கள்?
எல்லா சாமியார்களையும் ஒழித்து விட்டால் சமூகம் முன்னேறிவிடும் என்பது உங்கள் கருத்தா? இல்லை என்கிறேன் நான்.
//nandan said...
குடும்ப வாழ்கையில் ஈடுபடுவதைப் பொல சிலர் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். மற்றவர்களுக்கு பிரச்சனை வரும் வரை அவர்கலள் முற்றும் துறந்த பின் சாமியாராகிறார்களா இல்லையா என்பதெல்லாம் தேவை இல்லாதது. //
நந்தன் சார்,
தாரளமாக,
ஆனால் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வைத்து காமக் கூடங்களாக ஆ'சிரமம்' நடத்துபவர்கள் குறித்துதான் பேசுகிறோம், அரசு முறைபடுத்தினாலும் நல்ல சாமியார்கள் அலற தேவையே இல்லை. சாதுக்களுக்கு என்ன சங்கடம் வந்துவிடப் போகிறது.
//கோவில்களை நிர்வகிப்பதும் ஆசிரமங்களை நிர்வகிப்பதும் ஒன்றா?? நாத்திகம் பேசும் முதல்வரைக் கொண்ட அரசு எப்படி இதை செய்ய முடியும்?//
நீங்க எதும் ஆசிரமம் நடத்துகிறீர்களா ? எனக்கு ஒரு உறுப்பினர் அட்டை போடுங்கள்
:) ஆ'சிரமம்' அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும், நாளைக்கு உலகம் அழியப் போகிறது என்று கூறி கூட்டமாக மக்களை தற்கொலை செய்யச்சொல்லி செய்துகொண்ட 'மட'சாமியார்களும் இருக்கிறாகள்.
//பெரிதாக வருமானம் வரும் ஆசிரமங்கள் தங்கள் வரவு செலவுகளை அரசுக்கு சமர்பிக்க வேண்டுமென்ற சட்டம் இப்போதே இருப்பது தான். //
நீங்க குறைந்த வருமானம் உள்ள ஆசிரமங்களைக் குறித்து கவலை கொள்கிறீர்களா ? அப்போ அந்த சாமிக்கு மேஜிக் தெரியவில்லை என்று பொருள்.
//புகார் வந்தால்,ஆசிரமத்தின் மேல் நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயஙகுகிறது?
தனக்கு வேண்டுமென்றால் எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் ஆசிரமத்திற்குள்ளே போலீசை விடுபவர்கள் தானே அவர்கள்? //
ஏன் தயங்குகிறது ? சாமியாரை கைது செய்தால் சுனாமி வந்துடும் என்று பொதுமக்கள் பீதி ஊட்டப்படுவார்கள் என்ற தயக்கமாக இருக்கும்.
//எல்லா சாமியார்களையும் ஒழித்து விட்டால் சமூகம் முன்னேறிவிடும் என்பது உங்கள் கருத்தா? இல்லை என்கிறேன் நான்.
//
எல்லா சாமியார்களையும் ஒழிக்க வேண்டாம், திருத்தினால் போதும், அப்பறம் சாமியாரைப் பார்த்து மக்கள் திருந்திடுவாங்க, முன்னேறிடுவாங்க.
அண்ணன் திரு கோவியாரே..... வணக்கம்.
நான் மேலும் சில தீர்மாணங்களை சொல்கிறேன்
1. எல்லா சாமியார்களும் இரத்த தானம் செய்ய வேண்டும். ( பரிசோதித்த பிறகு)
2. கண்டிப்பாக கண் தானம் செய்யப்பட்டு ஒரு கண் நீக்க பட்டிருக்க வேண்டும்
3. சிறு நீரக தானமும் செய்யப்பட்டு ஒரு சிறு நீரகம் நீக்க படவேண்டும்.
4. இறந்த பின் உடல் தானம் கண்டிப்பாக்க பட வேண்டும்.
//Goli Soda Goyindan said...
அண்ணன் திரு கோவியாரே..... வணக்கம்.
நான் மேலும் சில தீர்மாணங்களை சொல்கிறேன்//
வணக்கம் வணக்கம் !
//
1. எல்லா சாமியார்களும் இரத்த தானம் செய்ய வேண்டும். ( பரிசோதித்த பிறகு)
//
(போலி) சாமியார் உடம்பில் நல்ல ரத்தம் ஓடும் என்று நினைக்கிறீர்களா ?
பாவங்க அதை எடுத்துக்கிட்டவங்களுக்கும் சாமியார் ஆகனும் என்று ஆசை வந்தால், பயமாக இருக்கு. :)
//2. கண்டிப்பாக கண் தானம் செய்யப்பட்டு ஒரு கண் நீக்க பட்டிருக்க வேண்டும்
//
அவர்களுக்குத்தான் ஞான கண் இருக்கே ஊனக்கண் எதற்கு 2 கண்ணையும் எடுக்கனும் என்று ரெகமெண்டேசன் இல்லையா ?
//3. சிறு நீரக தானமும் செய்யப்பட்டு ஒரு சிறு நீரகம் நீக்க படவேண்டும்.//
சாமியார்கள் புனிதர்கள், அவர்களுக்கு மலம், சிறுநீரெல்லாம் வராது அதனால் எடுத்து யாருக்காவது பயன்படுத்தலாம்னு சொல்ல வர்றீங்கா ?
//
4. இறந்த பின் உடல் தானம் கண்டிப்பாக்க பட வேண்டும்.
//
அவர்கள் உடலில் வாழவில்லை, ஆத்மா சுய தரிசனத்திலேயே இருக்கிறார்கள். எப்போ வேண்டுமானாலும் உடலை எடுத்துக் கொள்ளலாம் தானே.
:)
உங்கள் பதிவை மிகவும் ரசித்து படிப்பவன் நான். ஆனால் கடைசியாக நீஙள் எழுதிய பின்னூட்டம் அரைவேக்காடானது. துறவறம் பற்றி சிரிதும் புரிதல் இல்லை என தெரிகிறது.
எல்லோரும் டி.வி. தயாரிக்கத் தெரிந்திருக்கத் தேவை யில்லை. ரிமோட்டை எப்படி இயக்க வேண்டும் என்று தெரிந்தால் போதும்.
யாரோ ஒருவர் மேலே எழுதியிருந்தார் ஆன்மீகம் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று. ரொம்பவும் எளிமைப்படுத்தினால் உங்கள் பிரச்சனை எல்லாருக்கும் வந்துவிடும்.

உங்கள் பதிவை மிகவும் ரசித்து படிப்பவன் நான். - மிக்க நன்றி.
கூடவே முட்டாள் தனம், மடத்தனம் என்று சொல்லியதற்கும் நன்றி. ஒவ்வாத கருத்துக்கு ஏற்ற சொல் "ஏற்புடையது அல்ல" என்று சொல்வதுதான் பொருத்தம். உங்க கருத்து சுதந்திரத்தில் தலையிடவிரும்பவில்லை.
போலி சாமியார்களைப் பார்த்து மக்கள் தான் விலகனும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சகல பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு சொய்யச் சொல்லி ஒரு அதற்கான காரணங்களை எழுதுகிறேன் தனிப்பதிவாக போட்டுவிடுகிறேன். என் பதிவை படிக்கும் உங்களைப் போன்றோர்களை இழக்க விரும்பாமல் ஒரு கைமாறு செய்துடுறேன்.
இதற்குக்கு "லுசுத்தனமான பதில்" என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்
கோவி அண்ணா
போஸ்ட் கலக்கல்!
பத்திரிகையில் இது போன்ற "சாமியார்களைப்" பற்றிச் செய்திகள் வந்த பின்னும் கூட, இவர்கள் பின்னால் சில ஆட்கள் வெட்கமில்லாமல் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்!
இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள்-ன்னு பல பேர் அடக்கம்!
கண்ணை மறைக்கும் சுயநலம், எதையும் செய்யத் தூண்டுகிறது. இதைக் கரெக்டாப் புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்காங்க இது போன்ற "சாமியார்கள்"!
வந்ததுக்கு என் பங்குங்கும் ஒரு ஐடியா கொடுத்துட்டுப் போறேன்!
எப்பவெல்லாம் இது போன்ற "சாமியார்கள்" மேல் பெரிய புகார் வருதோ,
அப்பவெல்லாம் இவிங்க தீக்குளிச்சி தாங்கள் கபடமற்றவர்கள்-ன்ன்னு நிரூபிக்கணும்! குறைந்தபட்சம் தீ மிதிக்கவாவது செய்யணும்-னு! சாத்திர விதின்னு சொல்லுங்க! எவனும் "சாமியாராக" முன் வர மாட்டான். அப்படியே வந்தாலும் புகார் வந்த பின் ஓடியே போயிடுவான்! ஒன் டைம் "சாமியார்கள்" எண்ணிக்கை கணிசமாக் குறையும்! :-)
அருள் உடைமை
புலால் மறுத்தல்
தவம்
கூடா ஒழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னா செய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய் உணர்தல்
அவா அறுத்தல்
இன்னான்னு பாக்குறீங்களா? குறளில் ஐயன் சொன்னது, துறவறவியல் தலைப்பின் கீழ்! :-))
புலால் மறுத்தல்
சிக்கன் பிரியாணி சப்ளை அடியோடு நிறுத்தப்படும், கண்காணிக்கப்படும்-னு சட்டம் வந்தாலே பாதி ஆசிரமங்கள் மூடப்பட்டு விடும்! வேறு தொழில் பாக்க கெளம்பிடுவாய்ங்க! :-)
அது சரி, சாமியார்கள் பத்திச் சொன்னீங்க! சாமியாரிணிகள் பத்தி சொல்லவே இல்லையே! ஓரவஞ்சனையா? இல்லை அடுத்த பதிவா? :-))
நந்தன் நீங்கள் அக்கறையுடன் எழுதிய உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு ( வெளி இடவேண்டாம் என்பதால் வெளியிடவில்லை)எனது நீண்ட பதில் ஏற்கனவே பல இடுகைகள் பதிலாக இருக்கிறது.
நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
http://govikannan.blogspot.com/2007/04/blog-post_26.html
http://govikannan.blogspot.com/2007/04/2.html
இந்த இடுகை வந்த உடனே படித்தேன் கோவி.கண்ணன். அப்போது பின்னூட்டம் இட நேரமில்லாததால் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டேன். இன்று மீண்டும் இடுகையைப் பின்னூட்டங்களுடன் சேர்த்துப் படித்தேன். நல்ல அலசல். படித்துக் கொண்டே வரும் போது யாருமே பெண்சாமியார்களைப் பற்றி பேசவே இல்லையே. இப்போது அண்மையில் பெங்களூருவில் ஒரு பெண் சாமியாரிணி மேல் புகார் எழுந்தது என்று சன் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் சேர்த்தே பேசவேண்டும். குறி சொல்லும் சாமியாரிணிகளும் மிகுந்து போய்விட்டார்கள். இவர்கள் விதிவிலக்காய் இருந்த நிலை போய் நல்லவர்கள் விதிவிலக்காக ஆகிவிட்டார்களோ இல்லை நல்லவர்களே நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டதோ தெரியவில்லை.
// பெண் பக்தைகள் சாமியாரை சந்திக்க விரும்பினால் போலிஸ் லாக்கப்பினுள், அரசு பாதுகாப்பில் தான் சந்திக்க வேண்டும்//
police lockup -safe place for girls bakthais? aiyo.. aiyo...
அந்த குஞ்ச வெட்டிக்கற கன்டிஷன் சூப்பர். செயல்படுத்தலாம்
சாமியார் என்பதால், பலரை நம்பவைத்ததால் இந்த நிகழ்வு நமக்கு வியப்பாகத் தெரிகிறது, தவறாகவும் தெரிகிறது.
ஆனால்,
இந்த சாமியார் செய்ததில் தவறே இல்லை!
இதில் ஒன்றே ஒன்றுதான் எனக்குத் தெரிகிறது, காசு கொழுத்த பணக்காரன்(சாமியாரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி) காசு கொடுத்து விலைமாதரிடம் செல்கிறான். இதில் தவறு கண்டால் ஏறக்குறைய எல்லா சாமியார்களும்,அரசியல்வாதிகளும், நடிகர்களும்,தொழில் அதிபர்களும், பணக்காரர்களும் இப்போது இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. அதனால் இது சதாரண நிகழ்வுதான்!
இதை வைத்து பிழைப்பு நடத்துவது நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் தான்!
சாமியாரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, காமம் என்பது பொதுவானது, அந்த அடிப்படை அற்று பீடாதிபதிகளும் சாமியார்களும் காமக்களியாட்டம் போடுகிறார்கள் என்பது பிம்பத்தை தூக்கிப் பிடித்து பின் கிழே போட்டு உடைத்து அதைச் செய்தியாக்கி பணம் பார்க்கும் ஊடகத் தந்திரம்.
நாம் நீதிமன்றங்களை மதிக்கிற அதே நேரத்தில்,
இன்னொன்று,
பணக்காரச் சாமியார்களை, சாட்சி பல்டி அடிக்கும் தருணத்தில் நம் நீதிமன்றம் தண்டிக்காது. ஏழைகளை நின்று கொல்லும் நம் நீதிமன்றம்.
(இதுக்கு என்ன சொன்னாலும் தகும்)
இந்த சாமியார் செய்ததில் தவறே இல்லை! இந்த சாமியார் செய்ததில் தவறே இல்லை!
இவரை சாமியார், முற்றும் துறந்த முனிவர் என்று கருதி வழிபட்டவர்கள் மீது தான் தவறு!
அல்லது அவர்களின் அறியாமை என்று சொல்லலாம்.
தேவனாதன் என்கிற ஏழை குருக்களுக்கு வேண்டுமானால் தண்டனை கிடைக்கலாம்.
பிரதமரில் இருந்து குடியரசு தலைவர் வரை வந்து கால் தொட்டு வணங்கும் சாய்பாபா என்னும் தந்திரக்காரரையும்,
காம கோடி பீடை(அவர் பேருக்கு முன்னாலயே காமம் கோடின்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் அங்க போறாங்க) அதிபதி ஜெயேந்திரனையும்
நம் நீதிமன்றம் தண்டிக்குமா?
மீண்டும் சொல்கிறேன்
இந்த சாமியார் செய்ததில் தவறே இல்லை! இந்த சாமியார் செய்ததில் தவறே இல்லை!
சாமியாரைத் தண்டிக்க முடியுமா?
என்னைப் பொருத்தவரை,
எல்லா தனிமனிதர்களின் படுக்கை அறையில் வீடியோ காமிரா பொருத்த சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில், சாமியாரையும், நடிகையையும் தண்டிக்கலாம்.
அது சாத்தியப்படாத பட்சத்தில்!
அந்த நடிகை புகார் அளிக்க வேண்டும், அவர் புகார் அளித்தால் யாரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த காணொளி இல்லை.
அதுவும் சாத்தியப் படாத பட்சத்தில், சாமியார் இது போன்ற நிகழ்வெல்லாம் நடக்காது என்று இதற்கு முன்னர் எதாவது,யாரிடமாவது டாக்குமெண்ட் எழுதிக் கொடுத்து கையொப்பமிட்டிருந்தால் சாத்தியம்.
அல்லது
தனிமனித சுதந்திரம் பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட நக்கீரன், சன் டிவியின் மீது நடவடிக்கை எடுக்கலாம். முடிந்தால் தடை செய்யலாம். அல்லது வயது வந்தவர்களுக்கு மட்டும் தொலைக்காட்சி, பத்திரிக்கை(அடல்ட்ஸ் ஒன்லி) நடத்தப் பணிக்கலாம்.
காமிரா பொருத்திய சிகாமணியைக் கண்டு பிடித்து தண்டிக்கலாம்.
வேறு என்ன செய்யலாம் அல்லது முடியும்? சட்டப்படி...
:)))
யப்பா சாமீ, தாங்கல உங்க கண்டிஷன்கள் :-))) //.......சாமியார்கள் அனைவரின் வருமானத்தை முறைப்படி அரசாங்கத்துக்கு செலுத்தி, அதன் அடிப்படையில் அரசு தரும் மடங்களில் தான் சாமியார்கள் தங்கி இருக்க வேண்டும்/// இப்படியெல்லாம் சொன்னா எப்புடீ... வயித்தில புளீயைக் கரைக்கிறீங்களே
{துறவறம் என்ற வாழ்க்கை முறை, ஒரு காலத்தில் தமிழரிடையேவும் உண்டு. துறவறம் என்றால் வயதான காலத்தில் மனைவியுடன் சேர்ந்தே புன்னியதலங்களுக்கு சென்றுவிடுவார்கள் சிலர் சென்று வருவார்கள். குடும்ப பொறுப்பை வாரிசுகளிடம் விட்டுவிடுவார்கள். ஆனால் இன்று பெண்ணாசை, மண்ணாசை அனைத்தையும் வைத்திருக்கிறான் அவனும் துறவறமாம் சாமியாராம்.}
கண்ணன்,
நீங்கள் குறிப்பிட விழைந்தது வானப்பிரஸ்த வாழ்வு;எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு வாழும் வாழ்வு.
துறவறம் என்பது குடும்ப வாழ்வை மறுத்து இளவயதிலேயே மேற் கொள்ளும் துறவற வாழ்வு.அதில் கிருகஸ்த வாழ்வு வருவதில்லை.
எனவே துறவறமும்,வானப்பிரஸ்தமும வேறு வேறு,குழம்பி,குழப்புகிறீர்கள்.
போகிற போக்கில் தவறான தகவல் தரும் உங்களது பழக்கம் நீண்ட நாட்களது என்பது இப்போது புரிகிறது!
:))
இந்தப் பதிவு இப்போதுதான் கண்ணில பட்டது!எல்லாம் நித்யானந்த மகிமை'.
ஆனா,வழிகள் எல்லாம் படா படா வழிகளாக இருக்கின்றன !
கருத்துரையிடுக