பின்பற்றுபவர்கள்

26 டிசம்பர், 2007

சர்வேசனால் சோதனைமேல் சோதனை :)

உங்க சிறு கதையை நீங்களே "இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)" என்று சிரிப்பானோட சர்வேசன் பின்னூட்டத்தில் சொன்னாரு,

ஏன் அனுப்புவாங்களாம், ஐயா சாமி போட்டின்னு சொன்னிங்க எழுதினோம், அனுப்பினோம் வேற என்ன காரணம் இருக்கும் ? கதையை படிச்ச தண்டனைப் போதாத்துன்னு காரணத்தையும் நீங்களெல்லாம் படிக்கனுமாம். உங்க மேலெல்லாம் அவருக்கு எம்புட்டு கோவம் இருக்கனும். அண்ணாச்சி ஆசைப்படுறார், எழுதாங்காட்டி போட்டியில் இருந்து நீக்கிடுவார் இல்லாங்காட்டி ஒரு வேளை சிறந்த கதைன்னு தேர்ந்தெடுத்திருந்தால் கமுக்கமாக அமுக்கிடுவாறோன்னு பயம் வந்துட்டு. :)

*********
காதல் காதல் காதல் - இதைத்தவிர வாழ்க்கையில் முக்கியமாக ஒண்ணுமே இல்லிங்க. காதலிக்கும் திறமையோ அதற்கான வாய்ப்போ கிடைக்காத என்னிய மாதிரி ஆளுங்க காதல் என்றால் மிகப்பெரிய உணர்வு, கடவுள் வரம் அது இதுன்னு ஏகப்பட்டதை கற்பனை பண்ணி வச்சிருப்போம். காதலித்து கலியாணம் பண்ணிக்கிட்டவங்காளைக் காட்டிலும் காதலுக்கு அல்லது காதல் மீது பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள் என்னிய மாதிரி பெத்தவங்களா பாத்து கல்யாணம் கட்டிவைக்கப்பட்ட ஆளுங்கதான். காதல் கதை எழுதுகிறவர் எவருமே காதலித்திருக்க மாட்டார்கள். :)

சரி கதைக்கு வருவோம்...

காதல் குற்றமா ? இல்லவே இல்லைங்க, கல்யாணம் ஆகாத ஆளுங்க கல்யாணம் ஆகாத எதிர்பாலினரை காதலிப்பது தப்பே இல்லிங்க. திருமணம் ஆகாத ஆண்கள், மறு திருமணத்துக்கு சம்மதம் சொல்லக் கூடிய கைம்பெண்களைக் கூட காதலித்து திருமணம் செய்யலாங்க, பலரது ஆசிர்வாதம் கிட்டுங்கோ.

காதல்னா எதோ முகம் தெரியாதவர்களிடம் 100 / 1000 மைல்களுக்கு அப்பால் இருக்கிறவர்களிடம் வராதுங்க, தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, அடுத்த தெரு, பக்கத்து தெரு, பஸ்ஸில் பயணம் செய்யும் ஜன்னல் ஓர நிலா இது மாதிரி தெரிஞ்ச வட்டாரத்தில் தானுங்க காதல் வரும். அதுக்காக கார் டிரைவர் முதலாளி பெண்ணை காதலிக்கலாமா ? அவளை சந்தோசமாக வைத்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் காதலிக்கலாமுங்க இல்லாட்டி அந்த பொண்ணு வாழ்நாள் முழுவதும் மூக்கு சிந்தியே சாகடிச்சிடும். அவ்வை சண்முகி படம் பார்த்திங்கல்ல... காதலிக்கும் சூழல் வேறு..அது வெறும் கனவு, உணர்வு, ஆனா எதார்த்த வாழ்க்கையில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சங்கடம் இல்லாமல் இருக்கனும்...அப்படி இருந்தால் காதல் அந்தஸ்தெல்லாம் பார்க்காது. ரொம்ப அறுக்கிறனோ ?

கதைபடி இருநண்பர்கள் ஒரு நண்பர் மற்றவரின் தங்கையை காதலிக்கிறார். இருவருமே அடுத்தவரின் தங்கையை காதலிக்கிறார்கள் என்று முடிவில் 'நச்' வைத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. நண்பனின் தங்கையை காதலிப்பதால் இரு அட்வாண்டேஜ் ஒண்ணு நண்பன் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் உறவு காரணாக மாறிவிடுவான், இரண்டாவது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட காதலின்பம், வேறென்ன வேண்டும்.
சும்மா மச்சி, மாப்ளன்னு கூப்பிட்டுக் கொள்வதைவிட இது ரியாலாக மாறுச்சுன்னா சந்தோசம் தானே. தப்பாக சொன்னேன்னு நினைச்சா விஜய் - சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் பாருங்க, அப்பறம் கதையிலேயே சொல்லி இருக்கிறேன் 'கண் எதிரி தோன்றினால்' அதே போன்று கதைதான்.

நண்பனின் தங்கையை காதலிப்பது சரிதான், அதுக்கு அவ 'சிம்ரன்' போல இருக்கனும் என்று சொன்னால் அடிதான். காதல் முகத்தை பார்த்து வரக்கூடாது, மனசை பார்த்து வரனும், கண்கள் சந்திந்தித்து காதல் வெளிப்பட்டாலும் அது இதயத்தை மட்டுமே பார்த்ததாக இருக்கனும். தத்துவம் ஓகேவா ?

கல்யாணம் ஆகாத சின்னப்பசங்களே, உங்க வீட்டில் கல்யாணம் ஆகும் வயதில் தங்கை இருந்தால் தங்கை உள்ள நண்பர்கள் இருந்தால் மட்டுமே நட்பு வச்சிகுங்க.

இடுகையின் தலைப்பு ?? எனக்கு அல்ல உங்களுக்குத்தான் :)))

3 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

நஒக விட விளக்க பதிவு பெரிதாக இருப்பதால் உங்கள் கதை போட்டியிலிருந்து நிராகரிக்கப்படுகிறது!!


-மங்களூர் சிவா,
தலைவர், இந்தியா பிரிவு
த.ம.பா.க.போ.சங்கம்(தலைப்பு மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்)

மங்களூர் சிவா சொன்னது…

//
This blog does not allow anonymous comments.

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
//
என்ன கொடுமை இளமதி இது!!!

SurveySan சொன்னது…

//உங்க சிறு கதையை நீங்களே "இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)" என்று சிரிப்பானோட சர்வேசன் பின்னூட்டத்தில் சொன்னாரு,
//

இம்பூட்ட் கதை எழுதினீயளே, இந்த கதைய போட்டிக்கான கதையா அனுப்புனதுக்கு என்னா காரணம்னு கேட்டேன். மத்தபடி இத்த மீன் பண்ணல ;)

வெற்றி பெற வாழ்த்துக்கள்! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்