தூரிகை வரையும் ஓவியங்கள்
பேசினால் அவன் தான் ஓவியன் !
திரையில் கூட பாத்திரங்கள்
நம்மோடு கலந்துவிட்டால் அது காவியமாகிறது, சேதுபடத்திற்கு பிறகு ஒரு நேர்த்தியாக, இயல்பை எடுத்தப்படம் இராமேஸ்வரம்.
இராமேஸ்வரம் படத்தை திரைப்படம் என்ற அளவு, இலக்கணத்தில் என்னால் விமர்சிக்க முடியாது, படம் தொடங்கிய நொடியில் இருந்து முடியும் வரை இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர்களின் முகாம்களில் நடப்பதை நேரடியாக பார்த்தது போன்று உணர்வு.
அகதிகளுக்கு காதல் உணர்வு வரலாமா ? ஏற்படும் காதலினால் வந்து தங்கி இருக்கும் இடத்தில் வலியையும் வேதனையும் மறந்துவிடலாமா ? அப்படி இந்திய மண்ணில், இங்குள்ள தமிழ் பெண்ணின் மேல் காதல் வந்தால் அதனை ஏற்பதற்கு எந்தவகையான தியாகங்களெல்லாம் தேவைப்படுகிறது என்பது தான் கதை.
ஜீவன் என்ற பெயரில் அகதியாக இராமேஸ்வரம் வந்திறங்கும் ஜீவா, கடைசிவரை ஜீவாவாக இல்லாமல் ஜீவனாகவே கதைக்கும் ஜீவனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரை துறத்தி துறத்தி காதலிக்கும் அழகிய பட்டாம் பூச்சியாகவும், நகைச்சுவைக்காவும் பாவனா கலக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி பாவனா அழகு பதுமையாகவே செய்திருக்கிறார். மலர் புகைப்பட போட்டிக்கும் பாவனாவின் பூவுனுடன் சேர்ந்த பட்டாம் பூச்சிபோலவே இருக்கிறார், அவரின் ஸ்டில் ஒன்றை கொடுக்கலாம் ( இங்கு எழுதியதில் இது மட்டுமே என் காமடி, அமீரகம் நண்பர்கள் படம் பார்க்க கிளம்பிடுவாங்க)
ஈழத்திலிருந்து வந்த ஒரு ஜோடி ஏழுவருடம் தங்களுக்குள் இருந்த காதலை மறந்து ஈழத்தை நினைத்தப்படி எரியும் ஈழத்தின் நினைவு தீயில் காதலை எரித்துக் கொண்டு திரும்பும் நாள் நோக்கி எண்ணிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் ஆகியவற்றை உணர்வாக வடித்திருக்கிறார்கள்.
படத்தில் ஈழத்தமிழர்கள் பாத்திரம் மேற்றிருப்பவர்கள் அனைவரும் உணர்வை தோய்த்துப் பேசி உணர்ச்சி காவியம் ஆக்கி இருக்கிறார்கள். மணிவண்ணன் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து உணர்வுக்குள் மறைந்து போகிறார்.
தமிழ்நாட்டுக்காரராக பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான குணச்சித்ர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பு பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்.
போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பாவனா ஜீவாவை காதலிப்பதை ஏற்கமுடியாம்ல் வில்லனாக மாறுகிறார். அவர் நடிப்பில் உச்சத்தில் அவரை பலரும் சபிக்கும் படி இயல்பாக, பார்வையாளர்களின் வில்லன் மீதான வெறுப்பை வரவழைக்கும் படி நன்றாகவே செய்திருக்கிறார்.
அகதி என்ற ஒரு சொல் தரும் வேதனையும், ஆதரவு கிடைக்கும் மண்ணில் நிகழும் ஒருசிலரின் துவேசங்களும் எப்படி உணர்வுகளைக் கொல்கிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம் பேசும் போது ஜீவனாக தெரியாமல் நடிகர் ஜீவாக ஈழத்தமிழரின் நலனில் அவரது பங்களிப்பு என்பதை படம் பார்பவர்களும் புரிந்து கொள்வர்.
கொடுப்பவரின் மகிழ்வை விட ஏற்பவர்களின் வலி எத்தகையது என்பதை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இசை என்.நிரு, அவர் ஈழமைந்தர் என்பதால் பாடல்களின் உணர்வையை சேர்த்து இசை அமைத்திருக்கிறார். 'எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா ? ' என்ற ஏக்கப்பாடல் மகிழ்ச்சியின் பின்னனியில் பாடப்பட்டாலும் அதிலுள்ள சோகம் மட்டுமே உணரமுடிகிறது. இயக்கம், கதை வசனம் எஸ் செல்வம், ஒவ்வொரு வசனமும் பேசுவது தத்துவமா ? உணர்வா ? இயல்பா ? சொல்லத் தெரியவில்லை. எல்லாம் ஒருங்கே சேர்ந்த உணர்வுவரிகள்.
ஜீவனின் (ஜீவா) ஒரு நிமிட நினைவில் ஈழத்தில் விமானங்கள் குண்டு மழைபொழியும் ஒரே ஒரு காட்சியே நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது, அதே சூழலில் இருப்பவர்களின் நிலை சொல்லவும் வேண்டுமா ?
ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் மற்றொரு திரைப்படம் போல் தான் தெரியும்.
இறுதி காட்சியில் ஜீவாவின் நடிப்பிற்கும், சண்டைக்காட்சிகளுக்கும் அவரை பலமுறை பாராட்டலாம், ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும் நடிகர்கள், அரசியல்வாதிகள், குறிப்பாக 'சோ' த்தனமானவர்கள் போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா ஆகியோர் இந்தப்படத்தில் தயக்கமின்றி நடித்தது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவை. அமையப்போகும் தமீழத்தில் தனக்கென ஒரு பெயரை ஜீவா பதித்துக் கொண்டார். வாழ்க வளர்க !
இராமே'ஸ்வரம்' படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
நண்பரே கோவி சுகமா?
இராமேஸ்வரம்- பற்றிய தங்களின் விமர்சனம் அருமை,
//ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். //
நான் கூட யோசித்திருந்தேன், போகலாமா?வேண்டாமா? என்று, உங்களின் இந்த வரிகளைக் கண்டதும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
//பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்//
நீங்கள் குறிப்பிடும் அவர் மலையாள நடிகர் லால் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்...
சரவணன்.
படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் உடனடியாகப் பார்கக்த் தூண்டுகிறது. இங்கு அப்படம் இணையவழியாக வந்துசேர ஒரு வாரம் ஆகிவிடும்.
//உங்கள் நண்பன்(சரா) said...
நண்பரே கோவி சுகமா?
இராமேஸ்வரம்- பற்றிய தங்களின் விமர்சனம் அருமை,
நான் கூட யோசித்திருந்தேன், போகலாமா?வேண்டாமா? என்று, உங்களின் இந்த வரிகளைக் கண்டதும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
நீங்கள் குறிப்பிடும் அவர் மலையாள நடிகர் லால் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்...
சரவணன்.
//
சரா,
கண்டிப்பாக பாருங்கள், போரடிக்கும் அம்சம் எதுவும் இல்லை.
மலையாள நடிகர் லால் ? பதிவில் அப்டேட் பண்ணிவிட்டேன். மிக்க நன்றி, பாராட்டுக்கும் சேர்த்து !
//ஜமாலன் said...
படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் உடனடியாகப் பார்கக்த் தூண்டுகிறது. இங்கு அப்படம் இணையவழியாக வந்துசேர ஒரு வாரம் ஆகிவிடும்.
//
ஜமாலன் சார்,
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், தவறவிட்டுவிடாதீர்கள்.
இதுவரை பார்க்க கிடைக்கவில்லை. உங்கள் விமர்சன்ம் அதிக ஆவலைத் தூண்டிவிட்டது. தமிழகத் தமிழர்களூக்கு எங்கள் செய்திகளைச் சொல்லும் படமாக அமைய வேண்டும். அதுதான் எனது பிரார்த்தனை.
"என்றமது இன்னல் தீர்ந்து பொய்யாகும்" என ஏங்கும் ஈழத்தமிழர்களூக்கு விடிவு விரைவில் கைவசமாக வேண்டும்.
பாராட்டுக்கள்
ஒரு ஈழத்தமிழன்
எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் தான் படம் பார்க்க விரும்புவேன்..நீங்க...வேற வேகமா படம் பார்த்து விமர்சனம் எழுதிவிட்டீர்கள்...எப்போ வீட்டிலே வராங்க..பொசுக்கு பொசுக்குன்னு படத்துக்கு போறீங்க...
நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால் இந்தப் படத்தை ரசிக்க முடியலைங்க...காரணம் இங்கேச் சொல்லியிருக்கேன் பாருங்க..
http://keethukottai.blogspot.com/2007/12/36.html
//தேவ் | Dev said...
நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால் இந்தப் படத்தை ரசிக்க முடியலைங்க...காரணம் இங்கேச் சொல்லியிருக்கேன் பாருங்க..
http://keethukottai.blogspot.com/2007/12/36.html
//
தேவ்,
அகதிகளின் நிலையைச் சொல்ல காதல் ஒரு களமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எனவே நான் இதை திரைப்படமாக அலசி ஆராயவில்லை. அதை கொஞ்சம் கமர்சியலாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு பிடித்திருந்தது.
கருத்துரையிடுக