பின்பற்றுபவர்கள்

18 டிசம்பர், 2007

உழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு ? நடிகர் சங்க கலை நிகழ்ச்சி !

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதிதிரட்டுவதற்காக சிங்கை - மலேசியாவில் 'தமிழ்சினிமாவின் '75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடத்துவதாக (தென் இந்திய ?)நடிகர் சங்கம் அறிவித்து அதன் படி சிங்கை மற்றும் மலேசிய வானொலிகளில் அறிவிப்புகள் செய்யப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று மலேசியா கோலாலம்பூரிலும் அடுத்த ஞாயிறு சிங்கையிலும் நடத்தப் போகிறார்களாம். இதைப்பற்றி பல்வேறு விமர்சனங்களை நக்கீரன் இதழில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மலேசியாவில் இந்தியர்கள் பல்வேறு போரரட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவது அங்கு பிரச்சனையே இல்லாதது போல் காட்டுவதற்கு உதவும் என்பது போல் எண்ணி மலேசியா அரசாங்கமும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

*****

எனது கருத்தாக.......
நடிகர் சங்கம் என்பது திரை உலகில் உள்ள பல்வேறு அமைப்பில் ஒன்று. மற்ற திரைக்கலைஞர்களான இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய பிரிவுகளை கலக்காமல் நடிகர்கள் மட்டும் பங்கு பெறும் 'தமிழ் சினிமாவின் 75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயர் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நடிகர்கள் மட்டுமே சினிமா துறை போன்று நினைத்துக் கொண்டு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். நலிந்த கலைஞர்களை நடிகர் சங்கம் கண்டுகொள்கிறார்களா ? என்பது பற்றி பெரிய அளவில் எவருக்குமே தெரியாது. மூன்றாண்டுகளுக்கு சின்னத்தம்பியில் குஷ்புவுக்கு இளைய அண்ணனாக நடித்தவர், வாய்ப்பு இழந்து கடைசியாக எவர் ஆதரவின்றி தனிமையில் செத்துப் போனார். கூடவே நடிக்கும் நடிகைகள் ஒரு சுற்று பெருத்துவிட்டாலோ, அவர்களின் அறிமுக படம் அல்லது இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலோ தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்களோ இல்லையோ நடிகள் புறக்கணிக்காமல் அக்கா அண்ணி அம்மா வேடத்துக்கு சிபாரிசு செய்கிறார்கள். இநத அளவில் தான் நடிகைகளுக்கு நடிகர் சங்கம் உதவுகிறது.

அதைவிட கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு படத்தில் நடிக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள் படம் ஊற்றிக் கொண்டதும்...வாங்கிய சம்பளத்தில் பைசா கூட தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுப்பதில்லை என்ற புகார் எப்போதும் இருக்கிறது. படம் வெற்றிபெற்றால் அதே தயாரிப்பாளரின் அடுத்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உயர்த்தி ஊதியம் கேட்பதுதான் நடிகர்களின் வழக்கம். வெற்றிபெற்றால் தன் முகத்துக்கும் நடிப்புக்கும் படம் ஓடுவதாக சொல்லும் நடிகர்கள் தோல்வி அடைந்தால் தாம் சரியான படத்தை தேர்வு செய்யவில்லை என்று மறைமுகமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் குறைசொல்லிவிடுவார்கள். இதை பெரிய நடிகர்கள் (சீனியர்) முதல் இன்று களம் இறங்கியிருக்கும் இளைய நடிகர்கள் ( ஜூனியர்) வரை சின்னத்திரையில் நேர்கானலின் போது சொல்வதைப்பார்கலாம்.

மூன்று படங்களில் நடித்த மிக இளைய நடிகர்கள் தவிர மற்ற அறிமுகமான எல்லா இளம் வயது நடிகர்களின் படத்திற்கான ஊதியம் ஒரு கோடி முதல் ஐந்து கோடிவரை மார்கெட் ரேட் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் வாங்கும் ஊதியத்தில் 5 விழுக்காடு நடிகர் சங்க நிதியாக அளித்தால் கூட ஐந்து மாடி குமரன் ஸ்டோர் அளவுக்கு பெரிய கட்டிடத்தை நடிகர் சங்கத்துக்காக கட்டமுடியும், அதைத்தவிர நலிந்த கலைஞர்களுக்கு மாத ஊதியமாக பத்து ஆயிரம் வரை கொடுக்க முடியும். இவர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு இலவச அண்ணதானம் நாள் தோறும் வழங்க முடியும். இவர்களால் காணாமல் போன இயக்குனர்களுக்கு லோ பட்ஜட் சின்னத்திரை மெகசீரியல் எடுக்க உதவி புரிய முடியும். நடிகர்கள் மனம் உவந்து தங்கள் நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுப்பது அவர்களின் விருப்பமாக இருக்கட்டும் யாருக்கும் எந்த பிணக்கும் இல்லை. ஆனால் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் இவர்கள் வெளிநாட்டில் திரட்டும் பணம் உண்மையிலேயே பணக்கார ரசிகர்களிடம் இருந்து வருகிறதா ?

சிங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் 80 விழுக்காடு வரை உடல் உழைப்பாளிகள், அதிகம் படிக்காதவர்கள் மாதமொன்றுக்கு அவர்களுக்கு ஊதியமாக இந்திய ரூபாய் மதிப்பில் 6,000 /- முதல் 10,000 /- வரை கிடைத்தால் அதுவே அதிகம், அதில் சாப்பாட்டு செலவு மற்றும் அன்றாட செலவுகள், ஏஜெண்டுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், குடும்பத்து அனுப்ப வேண்டியது அதைத்தவிர்த்து வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவு கேளிக்கைகள் என்ற அளவுக்கு அவர்களுக்கு செலவு உண்டு. அவர்களுக்கு பொழுது போக்கு சினிமா பார்ப்பது, இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்கு எப்போதாவது செல்வதுதான்.

கலைநிகழ்ச்சிக்கு விற்கப்படும் டிக்கெட்டின் மிகக் குறைந்த மதிப்பு சிங்கப்பூர் வெள்ளியில் S$50/- கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 1,400/- வரும். இந்த விலை ஒரு ஊழியரின் மூன்று நாள் நாள் ஊதியம். திரை அரங்கில் திரைப்படம் பார்க்க ஒரு டிக்கெட் விலை 10 வெள்ளிகள் ஆகும், அந்த வகையில் அவர்களின் பணம் ஏற்கனவே திரைத்துறைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. நடிக - நடிகர்களின் பட்டாளமே வருகிறது என்று கேள்விப்படும் வெளிநாட்டு ஊழியர்கள், 'இந்தியாவில் தான் இவர்களைப் பார்க்க முடியாது, இங்காவது நேரில் பார்கலாம்' என்ற ஆவல் வைத்திருப்ப்பார்கள் என்று அறிந்து அவர்களை குறிவைத்துதான் கட்டணங்களுடன் கூடிய திரை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கிறது. நிகழ்ச்சி அரங்கின் அளவை பார்க்கும் போது அவர்கள் வாங்கிய மிகக் குறைந்த விலை உள்ள டிக்கட்டுகளுக்கு கொடுக்கப்படும் இருக்கைகளுக்கான தூரத்தில் இருந்து பார்த்தால் நிகழ்ச்சிகளை சின்னத்திரையில் பார்பதைவிட மோசமாக இருக்கும். கொடுத்த காசுக்கு தூர தரிசனம் பெற்றுவிட்டு வருவார்கள். அதைத்தவிர நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது பொதுப்போக்குவரத்துக்கள் எதுவுமே இருக்காது, வாடகை வாகனங்களில் தான் திரும்பவேண்டும்.

ஏன் இதைகுறிப்பிடுகிறேன் என்றால் அதிக விலை உள்ள மற்ற டிக்கெட்டுகளெல்லாம் ஸ்பான்ஸர் சிப் வழியாக விற்றுமுடிந்துவிடும் அவை வெறும் 20 விழக்காடு மட்டுமே அவை பணக்கார வர்கம் பெற்றுக் கொள்ளும், மீதம் 80 விழுக்காடு டிக்கெட்டுகள் வெளிநாட்டு ஊழியர்களை நம்பித்தான் நடக்கிறது. அவர்களின் திரை மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடக்கும் சுரண்டல் என்று கூட சொல்லலாம்.

இப்படியெல்லாம் நடிகர்கள் நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்துக்கு பணம் ஈட்ட முயல்வது போல் மற்ற மற்ற தமிழர் பிரச்சனைகளுக்கு ஏன் நடிகர்கள் உதவவில்லை ? காவிரி திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த பெரிய நடிகரின் ஸ்டேட்மெண்ட் கூட செயல்வடிவம் பெறாமலே இருக்கிறது. இவர்கள் ஈட்டும் பணம் அனைத்தும் தமிழனின் வியர்வையில் விளைந்த தங்ககாசுகள் தானே.

சூப்பர் வரிசையில் இருக்கும் நடிகர்களில் மூன்று நடிகர்கள் தங்கள் ஒருபடத்தின் ஊதியத்தைக் கொடுத்தால் 10 கோடி பொருட் செலவில் கட்டிடத்தை கட்ட முடியும். அப்படி நினைக்காமல் வெளிநாட்டில் உழைக்கும் கட்டுமான ஊழியர்களின் வியர்வையை உறிஞ்சி கட்டமுடியும் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் நினைக்கிறர்கள் போல இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதுவரை நடிகர் - நடிகைகள் அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு இலவச நிகழ்ச்சி நடத்தி எப்போதாவது மகிழ்ச்சி அளித்திருந்தால் யாரும் இதுபற்றி பேசப்போவதோ விமர்சனம் செய்யப் போவதும் இல்லை.

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

எனக்கு அப்படி தோன்றவில்லை.தேவை இருப்பவர்கள் போய் பார்க்கட்டும்,யாரும் கட்டாயப்படுத்தவில்லை.இதெல்லாம் அவரவர் விருப்பம்.
பணம் இருப்பவர் எல்லோரும் போய் பார்பதில்லை.இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அவ்வளவு தான்.அளவுக்கு மீறி நக்கீரன் தோண்டிப்பார்பதாக தோன்றுகிறது.
நக்கீரன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//
வடுவூர் குமார் said...
எனக்கு அப்படி தோன்றவில்லை.தேவை இருப்பவர்கள் போய் பார்க்கட்டும்,யாரும் கட்டாயப்படுத்தவில்லை.இதெல்லாம் அவரவர் விருப்பம்.
பணம் இருப்பவர் எல்லோரும் போய் பார்பதில்லை.இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அவ்வளவு தான்.அளவுக்கு மீறி நக்கீரன் தோண்டிப்பார்பதாக தோன்றுகிறது.
நக்கீரன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
//

குமார்,
நீங்களும் நானும் தான் தேவை பட்டால் பார்ப்போம். ஆனால் இங்கு நடப்பது ஊழியர்களை குறிவைத்து டிக்கெட்டின் குறைந்த விலையே 50 வெள்ளிகலாம்.

Thekkikattan|தெகா சொன்னது…

கோவியாரே,

:-)) இத, அந்தத் துறையை சார்ந்தவர்கள் யாராவது படிப்பாங்களா??

பார்க்காமல் புறக்கணித்துவிட்டால் முடிந்தது வேலை... இவனுக மூஞ்சிய திரையில வைச்சுப் பார்க்கிறதே டூ மச், இதில இந்த நெரிசலில் வேறயா...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ARUMAIYANA PADHIVU.pUDU KONATHTHIL PAARKKAPPATTULLADHU.iDHAI AADHARITHTHU PINNOTTAM IDUVADHENRAL NEENDUKKONDE POGUM.ELLAM PANADHDHAI SURANDUM ADHIGARA VARKKAM. ELLATHTHURAIYILUM IRUKKIRADHU. THAMIZHAN THALAI EZHUTHTHU IDHU DHAN.

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல பதிவு, நல்லாதான் கேள்வி கேக்குறீங்க.

அந்த நிகழ்ச்சிய லோக்கல் டிவில காட்டறப்ப பாத்தா ஆகாதா நீங்க எதுக்கு போனீங்க மொதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க!!

suvanappiriyan சொன்னது…

//பார்க்காமல் புறக்கணித்துவிட்டால் முடிந்தது வேலை... இவனுக மூஞ்சிய திரையில வைச்சுப் பார்க்கிறதே டூ மச், இதில இந்த நெரிசலில் வேறயா...//

:-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்