பின்பற்றுபவர்கள்

8 டிசம்பர், 2007

நஒக - நண்பனின் தங்கை...

தேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது.

"என்னடா, ரொம்ப டென்சனாக இருக்கே..." - தேவாவின் தங்கை விமலா

"சும்மா இருடி, ஆபிஸில் ஒரே டென்சன்"

"சரி சரி...நான் என் வேலையைப் பார்க்கிறேன், மண்டை உடைஞ்சு ரத்தம் சொட்டறத்துக்குள்ள சாப்பிட வந்திடு...அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருக்காங்க"

"போடி வர்றேன்"

"உன் கூட சுற்றிக் கொண்டிருந்தானே உன் பிரண்டு எங்கேடா அவனைக் காணும் ?"

"அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்காம் நாளைக்கு வருவான்.."

"சரிடா...சீக்கிரம் சாப்பிட வந்துடு"

தேவாவுக்கும், விமலாவுக்கு 3 வயது வேறுபாடு, ஒருமையில் அழைத்துக் கொள்வதால் அண்ணன் தங்கை என்பதைத் தாண்டி நண்பர்கள் போல் பழகுகிறார்கள்.

தேவாவுக்கு வேறு பிரச்சனை, இரண்டு வருடமாக தேவாவும் ராஜூவும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர், காரணம் ஒரே அலுவலகம், ஒரே மாதிரியான அலுவல் அதற்கும் மேலாக இருவருக்கும் ஒரே 23 - 24 வயது. இது போதாதா ? கல்லூரி படிப்பிற்கு பிறகு கிடைத்த முக்கிய நட்பாக இருவருக்குமே நினைக்க ஆரம்பித்து, ஒன்றாகவே அவரவர் பைக்கில் வேலை நேரம் தவிர்த்து ஊர் சுற்றினர்.

அதுமட்டுமா ? இருவர் வீட்டுக்கு இருவரும் ஞாயிறுகளில் சென்று உரிமையுடன் ஒருவருக்கு இருக்கும் உணவை தின்று தீர்த்துவிடுவார்கள், அதையே காரணமாக வைத்து 'ஆண்டி, இவன் சாப்பாட்டை நான் சாப்பிட்டிவிட்டேன், இந்த பாவி சாபம் இடுவதற்குள் இவன் வயத்தை அடைக்கனும், சரவணபவன் வரைக்கும் போய்டு வந்துடுறோம்' என்று சொல்லி இருவரும் கிளம்புவார்கள், அப்பறம் இரவுதான் திரும்புவார்கள். ஞாயிறு வெளியில் செல்வதற்கு அவர்களுக்கென்றே எதாவது ஒரு உத்தியை பயன்படுத்திக் கொள்வார்கள்.

இதற்கும் மேல் இவர்கள் நட்பை விவரிக்க வேண்டுமென்றால் 'கண்ணதிரே தோன்றினால்' படத்தின் கரன், பிராசாந்த் இருவரின் பாத்திரங்களைத்தான் குறிப்பிட வேண்டும்.

அந்த படத்தில் வந்தது போலவே, கொஞ்சம் மாற்றாக

ராஜூவின் தங்கை வசந்தி மீது தேவாவுக்கு ஈர்ப்பு வந்துவிட்டது. சில சமயங்களில் அவளது குறுகுறு பார்வையும், இவனைக்கண்டால் வெட்கப்பட்டு பார்க்காதது போல் அவள் நடந்து கொள்வதும் மெல்ல மெல்ல அவள் பக்கம் இவன் மனம் சென்று கொண்டிருந்தது.

"டேய் தேவா, என் தங்கச்சி இருக்காளே சரியான லூசுடா, எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கிறாள் பாரு நல்லா சாப்பிடுவாள், நல்லா தூங்குவாள், எந்த வேலையும் செய்ய மாட்டாள் எல்லாத்தையும் அம்மாதான் செய்யனும்"

"எங்க வீட்டில் மட்டும் என்ன வாழுது, அங்கேயும் அதே கதைதான்..." சமாதானம் சொல்வான் தேவா

"இந்த வருசம் படிச்சு முடிந்ததும் கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதான், பொண்ணுங்களை நம்ப முடியாது யாரையாவது லவ் பண்ணி தொலைச்சு ... அவன் நல்லவனா கெட்டவனான்னு தெரியாமல் ...அப்பறம் கண்ணை கசக்கினால் என்ன செய்வது..."

"...ம் சரிதாண்டா..."

'நானே விரும்புகிறேன் என்று சொல்வதற்கு தேவாவுக்கு கூச்சமாகத்தான் இருந்தது, சொல்லலாம் ஆனால் அதற்கு முன் வசந்திக்கு என்னைப் பிடிகிறதா ன்னு தெரியனுமே' நினைத்துக் கொண்டிருந்தான்.

"தேவா...இன்னுமா சாப்பிட வரலை..."

"நீ சாப்பிட்டு எனக்கு எடுத்து வை டி..."

"சரிடா... சாப்பாடு ஆறுவதற்குள் வந்து சாப்பிட்டு தொலை..."

வசந்திக்கு காதலை சொல்லவேண்டுமே, எஸ்எம்எஸ். ம்ஹூம் பெரியவங்க யாரும் பக்கத்தில் இருந்து போனை எடுத்துட்டா காரியம் கெட்டுவிடும். வேற என்ன செய்யலாம், போன் பேசலாமா ? ம்கூம் மேட்டரை ஆரம்பிக்கும் போது தொண்டைக்குள் இருக்கும் குறல் வெளியே வராது, எத்தனை படத்தில் பார்த்திருக்கோம்...அசடு வழிஞ்சு அவமானமாகப் போனால்...முடிவாக ஒரு முடிவெடுத்தான்.

காதல் கடிதம் தான் ஒரே வழி, எழுதி ராஜூ வீட்டுக்கு போகும் போது, நைசாக அவள் கையிலோ, அவள் ஹேண்ட் பேக்கிலோ, புத்தகத்திலோ அவள் பார்க்கும் போது யாரும் இல்லாத போது சொருகிடவேண்டியதுதான். என்று துணிந்தவனாக..

'என்ன எழுதலாம் ? கவிதை, கடிதம் ?'

'கவிதையா ? பொண்ணுங்க பாதிபேருக்கு காதல் வராதிருப்பதற்கு கவிதைகள் தான் காரணம் !!!' கைவிட்டுவிட்டு கடிதமே எழுதலாம் என்று நினைத்தான்.

எப்படி எழுதுவது ?

"உன்னைக் கண்ட நாள் முதலாய் ...உன் மீது எனக்கு காதலும்.. ஈர்ப்பும் இருப்பது உண்மைதான், இருந்தாலும் நண்பனின் தங்கை ஆயிற்றே, நண்பனுக்கு துரோகம் அல்லவா ? என்று நினைத்தேன். காதல் பொதுவாக 1000 மைல்களுக்கு அப்பால் முகம் தெரியாதவர்களிடம் வருவது அல்ல... உடன் படித்த பெண், கூடவே வேலை செய்யும் பெண், நிதம் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்.... இப்படி தெரிந்த... சுற்றி உள்ளவர்களிடம் தான் வரும்... எனவே நண்பனின் தங்கையை காதலிக்கிறேன் என்று சொல்லும் என் காதல் தவறென்று நினைத்துவிடாதே...பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு... நான் நிச்சயம் தேவதாஸ் ஆகிவிடமாட்டேன்... அதே சமயத்தில் இந்த சூழலை மறக்க வேறு ஊருக்கு வேலைக்கு சென்றுவிடுவேன். நான் நல்லவன் தான் என்பதை உன் அண்ணன் அறிவான், அவனிடமே நேரிடையாக கேட்க முடியும்....ஆனால் அதற்கு முன் உனக்கு என் மீது விருப்பமா ? என்று தெரியவேண்டும்... நான் கேட்டு ... அவன் சரி என்று சொல்லி ... உனக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால் ? நன்றாக யோசனை செய்து நல்ல முடிவாக எனக்கு சொல்.

இப்படிக்கு,

மேலான அன்புடன்,

தேவா

நினைவில் இருப்பதை உடனே அழகான கையெழுத்தில் எழுதிவிடவேண்டுமே...

தங்கை விமலா இன்னும் மேலே பார்த்துக் கொண்டு யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம்...அந்த குட்டிச்சாத்தான் தான் பேப்பர் பேனாவெல்லாம் வைத்திருக்கும்.

அவள் அறைக்குச் சென்று வெள்ளைப் பேப்பரும், பேனாவும் எடுத்துவரச் சென்றான்.

அவள் படிக்கும் மேசை டிராயரைத் திறந்தான், ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்தான்

பின்னால் எதோ எழுதி இருந்தது, திருப்பிப் பார்த்தான்,

"உன் மீது எனக்கு காதலும் ஈர்ப்பு இருப்பது உண்மைதான், நண்பனின் தங்கை ஆயிற்றே, நண்பனுக்கு துரோகம் அல்லவா ?...."

இனம் புரியாத அதிர்ச்சி கலந்த வியப்பு... நடுக்கத்துடன் தொடர்ந்து படித்தான் ... மனசாட்சி போல் மனதில் நினைத்ததெல்லாம் அதில் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட அந்த கடிதம்.

மேலான அன்புடன்
ராஜூ

என்று முடிந்திருந்தது.

32 கருத்துகள்:

நக்கீரன் சொன்னது…

போட்டிக்கு நீங்களும் வந்திட்டீங்களா?
நமக்கு பொற்கிழி கிடைச்சமாதிரித்தான். சொக்கா நீ எங்கய்யா இருக்க?
கதை சூப்பர்........

பெரியசாமி சொன்னது…

நஒக - Super..

மங்களூர் சிவா சொன்னது…

//
'கவிதையா ? பொண்ணுங்க பாதிபேருக்கு காதல் வராதிருப்பதற்கு கவிதைகள் தான் காரணம் !!!'
//

ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டீங்க!!

கலக்கல் கதை!

SurveySan சொன்னது…

இது நல்லா இருக்கு :)

இன்னும் டைம் இருக்கு, அப்ப இன்னும் கதைகள் வருமா?
ஊத்தெடுக்குதா?

ஜெகதீசன் சொன்னது…

போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.

//
மேலான அன்புடன்
ராஜூ//
நான் ரசித்த வரிகள்... இந்த வரிகள் தான் பதிவின் ஹைலைட்...
:))

வடுவூர் குமார் சொன்னது…

Twist may be bit sharper.

கோவி.கண்ணன் சொன்னது…

//நக்கீரன் said...
போட்டிக்கு நீங்களும் வந்திட்டீங்களா?
நமக்கு பொற்கிழி கிடைச்சமாதிரித்தான். சொக்கா நீ எங்கய்யா இருக்க?
கதை சூப்பர்........
//

நக்கீரன்,

போட்டி எல்லோருக்கும் பொதுதான், வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு குதிங்க. நக்கீரர் தருமியான உங்கள் நிலையும் சூப்பர்.

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Periyasamy said...
நஒக - Super..
//

நன்றி ! நன்றி !! நன்றி !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டீங்க!!

கலக்கல் கதை!
//

மங்களூர் சிவா,

திருவாசகம் கடவுளுக்கு... இது காதலுக்கு !

காதலும் கடவுளும் ஒன்றுதானே.

மிக்க நன்றி !

RATHNESH சொன்னது…

LOVE YOUR SISTERS; NOT THEIR FRIENDS. LOVE YOUR FRIENDS; NOT THEIR SISTERS என்று எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்தது.

Divya சொன்னது…

கதை ரொம்ப நச்சுன்னு இருக்கு!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

\\'கவிதையா ? பொண்ணுங்க பாதிபேருக்கு காதல் வராதிருப்பதற்கு கவிதைகள் தான் காரணம் !!!'\\

இதுவும் 'நச்சென்று' இருக்கிறது!

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
LOVE YOUR SISTERS; NOT THEIR FRIENDS. LOVE YOUR FRIENDS; NOT THEIR SISTERS என்று எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்தது.
//

RATHNESH,

வாத்தியார் சொல்வது எல்லாமும் வேதவாக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. 'டேய் மச்சி' என்று பெயருக்கு கூப்பீடும் நண்பர் உறவு முறையாக மாறினால் தவறு இல்லை.

'என் தங்கச்சியை கண் கலங்காமல் பாத்துக்குவ இல்லே ?' என்று கேட்கவேண்டிய அவசியம் உண்மையான நண்பர்களிடம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

அனுபவம் எதுவும் இல்லிங்க. எல்லாம் கற்பனைதான்.
:)))

மங்களூர் சிவா சொன்னது…

//RATHNESH said...
LOVE YOUR SISTERS; NOT THEIR FRIENDS. LOVE YOUR FRIENDS; NOT THEIR SISTERS என்று எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்தது.
//

//
கோவி.கண்ணன் said...
வாத்தியார் சொல்வது எல்லாமும் வேதவாக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது.
//
'இதுவும் நச்சு'னு இருக்கு!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Divya said...
கதை ரொம்ப நச்சுன்னு இருக்கு!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

\\'கவிதையா ? பொண்ணுங்க பாதிபேருக்கு காதல் வராதிருப்பதற்கு கவிதைகள் தான் காரணம் !!!'\\

இதுவும் 'நச்சென்று' இருக்கிறது!
//

திவ்யா,
மிக்க மகிழ்ச்சி !!! நன்றி !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
இது நல்லா இருக்கு :)

இன்னும் டைம் இருக்கு, அப்ப இன்னும் கதைகள் வருமா?
ஊத்தெடுக்குதா?
//

சர்வேசா,
ஆசைதான், அப்பறம் தமிழ்மண வாசகர்கள் கதையை படித்துவிட்டு விட்டால் போதுமென்று புறமுதுகிட்டு ஓடிவிடக்கூடாதே என்ற நல்லணமும் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
வாத்தியார் சொல்வது எல்லாமும் வேதவாக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது.
//
'இதுவும் நச்சு'னு இருக்கு!!//

வாங்க சிவா,

கும்மி அடிக்க கூடாரம் போட்டு வெயிட்டிங் மாதிரி தெரியுது.
:))

மிக்க நன்றிகள்...கும்மிகள் வரவேற்கப்படுகின்றன.

மங்களூர் சிவா சொன்னது…

@கோவி கண்ணன்

நீங்க சொன்னதுக்கூ மேல ரத்னீஷ் சொன்னதையும் கோட் பன்னிதானே கமெண்ட் போட்டேன் அப்புறம் எப்படி இது கும்மியாகும்?

விளக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
@கோவி கண்ணன்

நீங்க சொன்னதுக்கூ மேல ரத்னீஷ் சொன்னதையும் கோட் பன்னிதானே கமெண்ட் போட்டேன் அப்புறம் எப்படி இது கும்மியாகும்?

விளக்கவும்
//

சிவா நோ டென்சன் ப்ளீஸ்...

அப்படித்தான் சொல்லாததைச் சொன்னதாக சொல்லி சீண்டனுமாம், அப்பதான் வந்து வந்து இண்ட்ரஸ்டாக பின்னூட்டம் போட்டு செல்வாங்களாம், டிபிசிடி தான் இதைச் சென்னார் என்று எப்படி நண்பரை நான் காட்டிக் கொடுக்க முடியும்.

:)))

ரத்னேஷ் சார்,

எங்க டாடி குதிறுக்குள்ள இல்லை. இங்கே சரியாக இருக்கா ?
:)

மங்களூர் சிவா சொன்னது…

ஓகே ஓகே கொத்ஸ் பட்டிமன்றம் தான் ஞாபகத்துக்கு வருது!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
ஓகே ஓகே கொத்ஸ் பட்டிமன்றம் தான் ஞாபகத்துக்கு வருது!!
//

இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லி ஓடி ஒளிபவர்களை மடக்கி பிடிக்க ஜெகதீசன் தலைமையில் தனிப்படையே இயங்குது, ஒழுங்கா அடுத்த பின்னூட்டத்தை போடுங்க.
:)

TBCD சொன்னது…

ஹலோ...

வீட்டுல அன்னி இல்லையின்னா, வம்பு வளர்க்க இப்படி ஆளாய் பறக்குறீங்களே...

என்னமோ நான் தான் உங்களுக்கு கும்மியடிக்கச் சொல்லி தந்த மாதிரி..

நீங்க ஒரு மூத்தப் பதிவர்...நினனவுயிருக்கட்டும்...

TBCD சொன்னது…

மேலே இது விட்டுப் போச்சி..

:)))))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
மேலே இது விட்டுப் போச்சி..

:)))))))))))))))))
//

வாங்க குழந்தை சாமி !

அப்படித்தானே கன்பியூச்சுடு சைல்டுன்னு சைலண்டாக சொல்லிக்கிறிங்க. இந்த பூனை மில்க் பவுடர் தான் சாப்பிடுமா ?

சிரிப்பான் விட்டுட்டிங்க அது புரியுது. நமக்குள்ள சிரிப்பான் தேவையில்லையே.

மணியன் சொன்னது…

சென்ற கதையில் ஏன் எனக் கேட்டிருந்தேன். இந்தப் பதிவில் பதில் கிடைத்தது.சிறப்பாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...
சென்ற கதையில் ஏன் எனக் கேட்டிருந்தேன். இந்தப் பதிவில் பதில் கிடைத்தது.சிறப்பாக இருக்கிறது.
//
மணியன் சார்,
தொடர்ந்து எனது எழுத்துக்களை படித்துவருகிறீர்கள், பாராட்டுகிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

RATHNESH சொன்னது…

// வாங்க குழந்தை சாமி !//

இது நல்லா இருக்கே!

MyFriend சொன்னது…

இப்படி ஒரு திருப்பத்தைதான் எதிர்ப்பார்த்தேன். ;-) நல்லா நச்ன்னு இருக்கு. :-)

SurveySan சொன்னது…

தினம் (almost) ஒரு நச் கதை எழுதி, திக்கு முக்காட வச்சுட்டீங்க. அதுக்கே ஒரு பரிசு தனியா கொடுக்கலாம். :)

இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)

btw,
ஈ.மெயில் வாக்கெடுப்பு நல்லா இருக்கா இல்ல நம்ம 'சாதா' கும்மாங்குத்து வாக்கு சிறந்ததா?

என்னோட தனிப்பட்ட கருத்து - போட்டி, பரிசுன்னு வர சர்வேக்களுக்கு ஈ.மெயில் உதவியுடன் கூடிய வாக்கெடுப்பும்; 'சாதா' கருத்துக் கணிப்புகளுக்கு 'சாதா' வாக்கெடுப்பும் சிறந்தது :)

உங்க கருத்த சொல்லுங்கோ ;)

ஜே கே | J K சொன்னது…

இந்த படிக்காம மிஸ் பண்ணிட்டேன்.

சூப்பரா இருக்கு.

Nithi சொன்னது…

கலக்கல் கதை,ரொம்ப நச்சுன்னு

Nithi சொன்னது…

இது வழக்கமான கதை தான்

குமரன் (Kumaran) சொன்னது…

இன்னும் சில நஒக படிச்ச பாதிப்பா இல்லை உங்களைப் பத்தி ஏற்கனவே தெரியும்ங்கறதா எது காரணம்ன்னு தெரியலை ஆனா இந்த முடிவை கதை ஆரம்பிச்சு நாலைஞ்சு வரி வர்றப்பவே எதிர்பார்த்தேன் கோவி. கண்ணன். :-) நல்லா இருக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்