பின்பற்றுபவர்கள்

3 டிசம்பர், 2007

நச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) !

"அப்பா....காலேஜில் இன்னிக்கு ஸ்பெசல் ப்ரோகராம்... முன்கூட்டியே போகனும்"

"போயேன்மா...எதாவது பங்க்ஸனா ? புடவை கட்டிட்டு வரச்சொன்னாங்களா ?"

"ஆமாம்பா ... பஸ்ஸில் போன லேட்டாகிவிடும்..."

"அதுக்கு ?"

"ஆபிஸ் போறப்போ... 4 ஆவது தெருவில் 'திருப்பம்' வருமே...அங்கே இறக்கிவிட்டு விட்டுடுங்க.."

"அப்பறம் எப்படி போவே ?..."

"அந்த பக்கம் காலேஜ் பஸ் போகும்...அதுல ஏறிக்குவேன்..."

"ம் சரிம்மா..."

சொன்னபடி 'திருப்பத்தில்' இறக்கிவிட்டு விட்டு மறைந்தார்

எதிரே... பஸ் நிறுத்ததில், பைக்கை உறுமலோடு நிறுத்திக் கொண்டு
சாலையை கடந்து புன்சிரிப்புடன், அவனை நோக்கிவரும்
இவளைப் பார்த்து கண்ணடித்தான் அவன்.

இவள் நெருங்கியதும்,

"சீக்கிரமாக கோவிலுக்கு போய்விட்டு, அப்பறம் ரிஜிஸ்தர் ஆபிசுக்கு போகனும்...6.00 - 7.30 முகூர்த்தம் முடிந்துவிடும்...மணி இப்போ 7.05 க்யுக் !!!"

அவன் சொன்னதும் பைக்கில் ஏறி உட்கார்ந்து அவனை இறுக பற்றிக் கொண்டாள் அவள் !

விர்ர்ர்ர்..... என்று எதிர்திசையில் பறந்தது பைக் !

மற்றொரு 'திருப்பத்தில்'

"டேய் கொஞ்சம் மெதுவா போடா... சாரி சிக்கிடப் போவுது... நம்ம கல்யாணத்துக்கு நாள் இருக்கு... ப்ரியாவுக்கும், சீனுவுக்கும் தானே கல்யாணம் நமக்கில்லையே ? " செல்லமாக அவன் இடுப்பை கிள்ளினால் அவள்.

அவன் கூச்சத்தில் நெளிய பைக்கும் சற்று நெளிந்தது

'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 15 பதிவர்களும்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

12 கருத்துகள்:

வீ. எம் சொன்னது…

Short and Sweet Kovi Kannan

SurveySan சொன்னது…

ready juteன உடனே டைப் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

டக்குனு ஒரு கதை வந்துடுச்சு;)

நல்லா இருக்கு.!

Unknown சொன்னது…

சின்ன திருப்பம் தான்னாலும் ரெண்டாவது திருப்பம் எதிர்பாராத திருப்பம் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//
வீ. எம் said...
Short and Sweet Kovi Kannan
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
ready juteன உடனே டைப் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

டக்குனு ஒரு கதை வந்துடுச்சு;)

நல்லா இருக்கு.!
//

சர்வேசன்,

தட்டச்சு செய்யும் போது கூட என்ன கதை என்று எனக்கே தெரியாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
சின்ன திருப்பம் தான்னாலும் ரெண்டாவது திருப்பம் எதிர்பாராத திருப்பம் :-)

10:47 PM, December 03, 2007
//


பாராட்டுக்கு நன்றி !

நான் கூட எதிர்பார்க்கல, பைக் வேகமாக போனதால சட்டென்று 'திருப்பம்' வந்தது தெரியல.
:)

ஜெகதீசன் சொன்னது…

கதை நச்சின்னு இருக்கு....
:))

TBCD சொன்னது…

நீங்கள் கதை எழுத தூண்டுதலாக இருந்த ஜெகதீசனையும், அவர் சிநேகிதி, பட்டு உடுத்திய சீனாக்காரியயைம் நான் இந்த நேரத்திலே, நினைத்துப் பார்க்கிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கதை நச்சின்னு இருக்கு....
:))
//

பாராட்டுக்கு நன்றி !
மேலே டிபிசிடி எதோ சொல்கிறார்.
உண்மையா ?

நட்பு தேடி சொன்னது…

It's not that great. A little confusion made me to read it again. When you say "அவன் சொன்னதும் பைக்கில் ஏறி உட்கார்ந்து அவனை இறுக பற்றிக் கொண்டாள் அவள் !

விர்ர்ர்ர்..... என்று எதிர்திசையில் பறந்தது பைக் !

மற்றொரு 'திருப்பத்தில் - makes the reader (may be just me) to think, there is another couple who are talking at the same moment but at different place. Twist is good, may be a little work needed. May be giving names to the character. (I know I am not a good writer, but I am a good critic).

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
நீங்கள் கதை எழுத தூண்டுதலாக இருந்த ஜெகதீசனையும், அவர் சிநேகிதி, பட்டு உடுத்திய சீனாக்காரியயைம் நான் இந்த நேரத்திலே, நினைத்துப் பார்க்கிறேன்..
//

உங்க ஆசையை ஜெகதீசன் நிறைவேற்றுவார் என்று நானும் நம்புகிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

//
TBCD said...
நீங்கள் கதை எழுத தூண்டுதலாக இருந்த ஜெகதீசனையும், அவர் சிநேகிதி, பட்டு உடுத்திய சீனாக்காரியயைம் நான் இந்த நேரத்திலே, நினைத்துப் பார்க்கிறேன்..
//

//
கோவி.கண்ணன் said...

உங்க ஆசையை ஜெகதீசன் நிறைவேற்றுவார் என்று நானும் நம்புகிறேன்.
//
இது கதைய விட ரொம்ப நச்சினு இருக்கே!!

ஜகதீசன் நம்பிக்கைய காப்பாத்தப்பா. சீக்கிரம் களத்துல இறங்குங்க!

செயல்புயல் ஆகுங்க!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்