மலரும் நினைவுகள் பற்றி எழுத எதாவது வயது நிர்ணயம் இருக்கிறதா ? மீண்டும் அந்த சூழல் அமையாது என்று நம்பினால் எந்த வயதில் கூட எழுதலாம். ஆரம்பம் வேண்டுமே, 'அப்ப நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்' சரியாக இருக்கா ? ஆரம்பம் கிடைத்துவிட்டது.
மாநகர வாசிகளை தவிர, நகர, கிராமவாசிகளுக்கு கிடைக்கும் அனுபவம் பல்வேறு கிராமிய கலைகளை கண்ணுற்றதுதான். அந்த வகையில் கரகம், குறவன் குறத்தி நடனம் போன்றவற்றை திருவிழக்களில் பார்த்தும், சைக்கிள் சுற்றியின் 15 - 20 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். குறவன் - குறத்தி நடனம் பற்றி பிரிதொரு நாள் எழுதுவேன் சுவையாக இருக்கும், இன்று 'சைக்கிள் சுற்றிகளின் கலை நிகழ்ச்சிகள் பற்றி எழுதுகிறேன்.
ஊருக்குள் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்கத்தினர் இருக்கும் இடங்களை அந்த கலைக்குழு தேர்ந்தெடுத்துக் கொள்வர் சுற்றிலும் 700 பேர்வரை தரையிலும், நின்று கொண்டிருக்கும் படி ஒரு சிறிய வட்டத்திற்குள் நடுவில் ஒரு மூங்கில் மரத்தை நட்டு ஒலிப்பெருக்கியை கட்டி இருப்பார்கள். ஒரு குழுவில் அதிகமாக 10 பேர் வரை இடம் பெறுவர். அதில் ஒருவர் சைக்கிளில் அந்த வட்டத்துக்குள் வளைய வலம் வருவார், எழுதப்படாத நிபந்தனையாக நிகழ்ச்சி நடக்கும் 10 நாட்களுக்கும் எந்த காரணத்தை விட்டும் சைக்கிளை விட்டு இறங்க மாட்டார், கலை நிகழ்ச்சி நடக்கும் நேரம் தவிர்த்து, உண்பதும் உறங்குவதும் சைக்கிளில் தான், பின் இரவு அந்த இடம் வழியாக செல்லும் போது பார்த்தால், சைக்கிளை படுக்க வைத்து அதன் மீது படுத்து இருப்பார். மற்ற மற்ற கடன்களுக்கெல்லாம் சைக்கிளில் தான் சென்று வருவாரா தெரியாது. ஆனால் டெடிகேசன் என்னும் அந்த உறுதி 10 நாட்களும் இருக்கும் அதாவது இரவு 7ல் இருந்து 12 வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கும், பகல் வேளையில் பார்த்தால் கூட, யாரும் அங்கில்லாத நேரத்திலும், சைக்கிளில் சுற்றுபவர் மட்டும் சைக்கிளில் வட்டமடித்துக் கொண்டிருப்பார். மழைபெய்தால் குடையுடன் சுற்றிக் கொண்டிருப்பார்.
மாலை ஏழுமணிக்கு கலைக்குழுவின் நடனங்கள் இருக்கும், பெரும்பாலும் சினிமா பாடல்களை போட்டு சினிமா பாடல்களின் அங்க அசைவில் நடனங்கள் இருக்கும், அந்தந்த பாடல்களுக்கு அந்த நடிகர் வந்த கெட்டப்புகளில் வேசமிட்டு வருவார்கள் ஆடுவார்கள், முகத்தில் ஓவராக மேக்கப் பார்பதற்கு படு தமாசாக இருக்கும், பெண்களாக திருநங்கைகள் ஆடுவார்கள். நான் பார்த்த காலங்களில் சிவாஜி நடித்த திரிசூலம் படத்தின் பாடல்களெல்லாம் ஒலிபரப்பட்டன. எம்ஜிஆர் வேசத்துக்கு விசில் பறக்கும். அங்கு வரும் கலைக்குழுக்களுக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உணவு பொருள்களையும், உணவையும் தந்து கவணிப்பர்.
இந்த நிகழ்ச்சி திறந்த வெளியில் நடப்பதால் பார்வையாளர் கட்டணங்கள் எதுவும் கிடையாது, இருந்தாலும் வயிற்றுப் பிழைப்புக்கு செய்வதால் 3 பாட்டுகள் இடைவெளியில் குடையை விரித்து தலைகீழாக பிடித்துக் கொண்டு சைக்கிள் சுற்றி ஒரு கையில் ஏந்திவருவார். ஒரு நாளைக்கு அந்த காலத்தில் 500 ரூபாய் வரை வசூல் ஆகும்.
ஒவ்வொரு நாளும் வேறுபடுத்திக் காட்ட மண்ணுக்குள் புதைந்து வெளியே வருவது, விசப்பாம்புகளை வைத்து வித்தை செய்வது போன்று செய்து காட்டுவார்கள், சைகிளில் சாகசம் செய்வார்கள், காரை முடியால் கட்டி இழுப்பார்கள், காரை நெஞ்சின் மீது ஏற்றிக் காட்டுவார்கள். ஒரு முறை கருநாகம் ஒன்றை வைத்து வித்தைக் காட்டும் போது பிடி தளர்ந்து பாம்பு நழுவி கூட்டத்திற்குள் புகுந்துவிட்டது, கூச்சல் காதை பிளக்க... பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று அப்பொழுதுதான் உணர்ந்தேன். அந்த ஒருகாரணத்திற்காக அன்று அவர் சைக்கிளை விட்டு தரையில் இறங்கி மிக வேகமாக செயல்பட்டு அந்த பாம்பை லாவகமாக பிடித்தார் அதன் பிறகு கீழே இறங்க நேரிட்டதற்காக மன்னிப்பும் கேட்டார், கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டு அவரை பாரட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறையும், பெரிய ஊராக இருந்தால் வேறு வேறு இடங்களில் 3 முறை வரை நடக்கும். கடந்த 15 ஆண்டுகளில் இப்பொழுது ஊருக்குள் இது போன்ற நிகழ்சிகள் நடப்பது இல்லை. கிட்டதட்ட அந்த கலை அழிந்துவிட்டு வேறு பிழைப்பை பார்கச் சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
**********
பிதாமகன் படத்தில் ஒரு பாட்டு சிம்ரனை ஆடவிட்டு படமாக்கி இருப்பார்கள், அதைப் பார்க்கும் போது மேற்கண்ட நினைவுகள் எனக்கு வரும். இன்றும் அந்த பாடலை சன் டிவியில் பார்த்தேன். பிதாமகன் படத்தில் எனக்கு பிடித்ததும் அந்த காட்சிதான். சினிமா நடிகைகள் மேல் எந்த அளவுக்கு கிராமத்து / நகரத்து மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இயக்குனர் பாலா நன்கு படம் ஆக்கி இருப்பார். அதில் திருப்புகழ் பாடியபடி ஒரிஜினல் ஐயர் ஒருவர் செய்யும் காமடி அலாதியானது. அவர் பெயர் 'சிம்ரன் ஐயராம்', மதுரை மினாட்சி கோவிலில் அர்சகராக இருக்கிறாராம். சிம்ரனின் ரசிகராம். அவரையே வைத்து அந்த காட்சியை படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர் பாலா. சிம்ரன் ஐயர் யார் என்று கேட்டால் அவரை கைக்காட்டும் அளவுக்கு அவர் புகழ் பரவி இருப்பதாக வார பத்திரிக்கைகளில் கூட எழுதி இருந்தார்கள். எனக்கும் சிம்ரன் பிடிக்கும். டிரெஸ்சிங் சென்ஸ், நடனம், நடிப்பு என அனைத்தையும் நன்றாக செய்வார்.
நீங்களும் ரசிக்கலாம், கேளுங்க !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
7 கருத்துகள்:
மேத்தா அவர்களின் ஒரு புதுக்கவிதை ஞாபகம் வருகிறது.
"கொஞ்ச நாட்களாகவே
எனக்குள் ஏதோ கோளாறு
ஓட்டலில் சர்வர்,
சாதா ஒன்று என்றால்
கீதா ஒன்று எனக்
கேட்கிறது எனக்கு.
நல்லா என்று யாரும் சொன்னால்
ஸ்டெல்லா என்று காதில் விழுகிறது . . . ."
என்கிற பாணியில் பலவரிகளுக்குப் பிறகு,
"நானும்
ஊருக்குப் போயிருக்கும்
மனைவியைத்
திரும்ப அழைத்து வர
வேணும்"
என்று முடியும் அக்கவிதை.
ரத்னேஷ்,
மு.மேத்தா மற்றும் நா.காமராசன் புதுக்கவிதைகளை விரும்பி படிப்பேன்.
நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் கவிதையும் சிக்சுவேசனுக்கு சரியாகத்தான் இருக்கிறது.
:)
இருந்தாலும் பதிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? புரியல்ல ...தனிமடலிலாவது விளக்குங்கள். :))
:))
சைக்கிள் கலைக்குழு வை சினிமாவில் பார்த்தது தான். ஆனால் நம் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா போது மற்ற ஆட்டங்கள் பாத்து இருக்கேன் (கரகம் ..) இப்ப அதுவும் இல்லாம சினிமா கலைநிகழ்ச்சிகள் தான் அதிகம்.
பிதாமகன் படத்தில் அந்த பாடல் மிகவும் அருமையாக அமைந்த பாடல் தான். விகடன்(??) தன் விமர்சனத்தில் கூறியது முதல் முறையாக சிம்ரனை தொப்புள் தெரியாமல் ஒரு பாடலுக்கு ஆட வைத்து இருக்கிறார்கள் என்று ;)
என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த இன்னும் மறக்கலயா? எனக்கும் இரண்டாம் ஆட்டம் சினிமா டூரிங் தியேட்டாகளில் மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகள் பிடிக்கும். இரண்டாம் ஆட்ட இடைவேளைகளில் திருவிழாவில் விற்கும் விலை குறைவான பாண்ட்ஸ் (டின் மட்டும் தான் பாண்ட்ஸ்) பவுடர் பூசி பளபள வென நடமாடும் கிராமத்தப் பொண்களின் அழகே தனிதான். இந்த வகை குறவன் குறத்தி ரெக்கார்ட் டான்ஸ்களில் ஒரு காலத்தில் தஞ்சை ஜரீணா என்ற பெண் ரொம்ப பிரபல்யம். குஷ்புவைவிட அழகாக இருப்பார். ஆணால் குள்ளமாக இருப்பார். நிற்க.
ரதணேஷ் சொல்கிறார் போய் உங்கள் மணைவியை அழைத்துவரும்படி. ஊர் ஞாபகம் என்று.
ரத்ணேஷ் என் மணைவி இங்குதான் இருக்கிறார். உடனே "சரிண்ணா என்றேன் ஜரீணா என்று காதில் விழுகிறது" என நினைத்துக் கொள்ளாதீர்கள்.
//ஜமாலன் said...
என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த இன்னும் மறக்கலயா? எனக்கும் இரண்டாம் ஆட்டம் சினிமா டூரிங் தியேட்டாகளில் மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகள் பிடிக்கும். இரண்டாம் ஆட்ட இடைவேளைகளில் திருவிழாவில் விற்கும் விலை குறைவான பாண்ட்ஸ் (டின் மட்டும் தான் பாண்ட்ஸ்) பவுடர் பூசி பளபள வென நடமாடும் கிராமத்தப் பொண்களின் அழகே தனிதான். இந்த வகை குறவன் குறத்தி ரெக்கார்ட் டான்ஸ்களில் ஒரு காலத்தில் தஞ்சை ஜரீணா என்ற பெண் ரொம்ப பிரபல்யம். குஷ்புவைவிட அழகாக இருப்பார். ஆணால் குள்ளமாக இருப்பார். நிற்க.
ரதணேஷ் சொல்கிறார் போய் உங்கள் மணைவியை அழைத்துவரும்படி. ஊர் ஞாபகம் என்று.
ரத்ணேஷ் என் மணைவி இங்குதான் இருக்கிறார். உடனே "சரிண்ணா என்றேன் ஜரீணா என்று காதில் விழுகிறது" என நினைத்துக் கொள்ளாதீர்கள்.
//
ஜமாலன்,
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து நான் 'ஆடிப்' போய்விட்டேன். அதாவது 'ஜரீனா' ஆட்டம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்களே அதைத்தான். இந்த பதிவு எழுதும் போது நினைவில் வந்த பெயர் அது என்றால் நம்புவீர்களா ?
இன்னும் கூட அந்த முகம், கடவாயில் வெற்றிலை பாக்கின் சிவப்பு தெரியும் அந்த முகம், பெரிசுகள் ஆர்வக்கோளாரால் பண நோட்டை ஜாக்கெட்டில் குத்தும் அந்த முகம், ஜரீனா முகம் இன்னும் கூட நினைவில் இருக்கிறது. ஜரினா நல்ல அழகுதான் ஒப்புக் கொள்கிறீர்களா ?
எங்க வீட்டில் கூட சின்ன வயசில் என்னை கிண்டல்செய்வாங்க, "பையன் ஜரீனா குறத்தி ஆட்டத்தைப்பார்க்க கிளம்பிட்டான், விடிஞ்சாதான் வருவான்".
ரெக்கார்ட் டான்சுகள் போல ஆபாசம் இருக்காது, அது ஒரு மாதிரியான கவர்ச்சி நடனம், ஜரினா எப்போதும் குறத்தி வேசம் தான் கட்டிக் கொண்டு வருவார். குறவன் - குறத்தி ஆட்டம் பற்றிய பதிவை எழுதும் போது எழுதுகிறேன்.
//நாகை சிவா said...
சைக்கிள் கலைக்குழு வை சினிமாவில் பார்த்தது தான். ஆனால் நம் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா போது மற்ற ஆட்டங்கள் பாத்து இருக்கேன் (கரகம் ..) இப்ப அதுவும் இல்லாம சினிமா கலைநிகழ்ச்சிகள் தான் அதிகம்.
பிதாமகன் படத்தில் அந்த பாடல் மிகவும் அருமையாக அமைந்த பாடல் தான். விகடன்(??) தன் விமர்சனத்தில் கூறியது முதல் முறையாக சிம்ரனை தொப்புள் தெரியாமல் ஒரு பாடலுக்கு ஆட வைத்து இருக்கிறார்கள் என்று ;)
//
சிவா,
சைக்கிள் கலைக்குழு நிகழ்ச்சி எங்கள் வெளிப்பாளையம் புளிய மரம் பகுதியிலும், கீரைக் கொல்லைத்தெருவிலும் நடக்கும், உங்கள் பகுதியில் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. இப்போதெல்லாம் ஆர்கெஸ்ட்ரா தான் நடத்துகிறார்கள்
கரெக்ட்டா புடிச்சார் பார்த்தீங்களா ஜமாலன் சார். (நேற்று முழுவதும் பதில் தர முடியாமல் இணைய இணைப்பு பிரச்னை தந்தும் நண்பர் மூலம் உங்களுக்கு விடை கிடைத்து விட்டதில் சந்தோஷம்).
கருத்துரையிடுக