"இந்த ஆட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்...இந்த தொழிற்சாலை இங்கு தேவையா ? அடுத்த மாநிலத்தால் கைவிடப்பட்ட மோசமான திட்டம். இந்த திட்டத்தினால் மக்களுக்கு பயனா ? ஒரு மண்ணாங்கட்டியின் பயன்கூட இல்லை..., இந்த திட்டத்தினால் மாசு ஏற்படும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும், நாடு சுடுகாடு ஆகிவிடும், இறுதியாக எச்சரிக்கிறேன்...இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், நான் தீக்குளிக்கவும் தயார்..."
பலத்த கைத்தட்டல் வானைப் பிளக்க, தனது உரையை முடித்துக் கொண்டார்... எதிர்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சங்கரபாண்டி (அரசியல் வாதிகளுக்கெல்லாம் டிவி சீரியல் மற்றும் திரைப்படத்தில் இந்த பெயரைத்தான் வைக்கிறார்கள்)
இரண்டு நாள் சென்று சங்கரபாண்டியின் கட்சி அலுவலகத்தில் உதவியாளர் எழப்புளி ஏகாம்பரம் (இழைப்புளியால எதிர்கட்சித் தலைவன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது மண்டையில் அடிச்சு இரத்தம் ஒழுக வைத்ததால் அந்த சிறப்பு பெயராம்) ஒரு கையால் வாய்பொத்தி பவ்யமாக குனிந்து.. சன்னமான குரலில்...
"அண்ணே உங்களை தாஜ் ஹோட்டலில் சந்திக்கனுமாம் அமைச்சர் கலிவரதன் சீக்ரட்டாக சொல்லி அனுப்பி இருக்கிறார்' என்று கிசுகிசுத்தார்
சங்கரபாண்டிக்கு உற்சாகம் பொங்க...
"எழப்புளி....ஒருமாதம் ஆச்சு அவரைப் நேரில் பார்த்து ...சரி அந்த அமீதா நடிகைக்கு ஏற்பாடு பண்ணி இரவு 10 மணிக்கு தாஜ்ஜில் ரூம் புக்பண்ணிட்டு ... கலிவரதன் அண்ணனை அங்கே வரச் சொல்லி சொல்லிவிடு"
********
ஹோட்டல் தாஜ் இரவு 9.00 மணிக்கு,
சிக்கன் மட்டன் இன்னும் பலவகை ஊர்வன அயிட்டங்கள் பொன்னிறமாக வறுபட்டு டேபிளை நிறைக்க, பொன்னிற திரவ கோப்பைகளில் ஐஸ்கட்டிகள் மிதக்க...சிக்கனைக் கடித்துக் கொண்டே குளறலான குரலில்
".... சங்கரபாண்டி...நீ எதிர்கட்சி ஆளுதான்...ஆனா எப்போதும் நம்ம ஆளு...என் ஆளு..."
" ....ம்...ம் கலியண்ணே...நாம பார்காத அரசியலா...எங்க கட்சி தலைவனுக்கே நான் தாண்ணே தலைவன்...என்கிட்டதான் அம்புட்டு சீக்ரெட்டும் இருக்கு..."
"சரிதான் சங்கரபாண்டி...எப்படி எப்படி...தீக்குளிக்கப் போறியா...?" வெடிச்சிரிப்பாக சிரித்தார் கலிவரதன்
"நீயே சத்தம் போட்டு காட்டிடாதே கலியண்ணே...நம்ம டீலு அது....மறந்துடாதே கமிசன்..."
"இங்க ஒரு பயலும் இல்ல...எப்படி...? திட்டத்த எதிர்கட்சி எதுர்க்கலைன்னா...சமூக ஆர்வலர்கள் போராடுவாங்க...முடங்கிடும்... நானே எதிர்கிறேன்...பத்து பர்சண்ட் கமிசனை வெட்டு...கண் துடைப்பாக எதிர்கிறேன்னு...சொன்னமாதிரியே நல்லாதான்யா நடிச்சே...சினிமாகாரன் தோத்தான் போய்யா..." மறுபடியும் வெடிச்சிரிப்பாக சிரித்தார்
"அண்ணே நீங்க தான்ணே தெறமசாளி ...சாராயக்கடையில் ஊறுகா வித்துட்டு இன்னிக்கு தொழில் துறை அமைச்சராக...."
"ஹஹ்ஹஹ் ஹா.....இதெல்லாம் படிப்படியான வளர்ச்சி தானே சங்கரபாண்டி...நாம ஒண்ணுகுள்ள ஒண்ணு... நாம ஒரே ஊரு... ஒரே சாதி...நம்பிக்கை பாசம் தானே ...நான் உன் சொந்தக்காரன் பேரிலும்...நீ என் சொந்தக்காரன் பெயரிலும் ஏகப்பட்டதை சுருட்டி வச்சிருக்கோம்..."
"சீக்கரம் முடிங்கண்ணே...அமீதா நமக்காக வெயிட்டிங்...அவ சினிமாவில் சிக்குனு ஆடும் போது பார்க்கிறதைவிட இன்னிக்கு ஆட்டத்தை நேரில பாருங்க..."
உட்கார்ந்தபடியே இடுப்பை குலுக்கிக் காட்டினார் சங்கரபாண்டி
"ஆட்டத்தை மட்டும் தனா ?" கலிவரதன் சொல்லி முடிக்கும் போது
இந்த முறை சங்கரபாண்டி இடிமுழக்கமாக சிரித்தார்...சிரிப்பு அடங்கும் முன்னே
நெஞ்சைப்பிடித்துக் கொண்டு...
"கலிவரதண்ணே....ஆ.... ஆ" அவ்வளவுதான் வாயைப் பிளந்து அப்படியே சாய்ந்துவிட, விழிகள் மேலே பார்க்க, சிக்கன் மசாலா உதட்டின் ஓரங்களில் காய ஆரம்பித்து
முதல் அட்டாக் வந்தது முன்பே அறிந்தவர் என்றாலும்...இன்று திணறிய மூச்சை சீராக்க பினாமி இதயம் ஒன்றைக் கூட அவர் இதுவரை வளைத்துப் போட வில்லை என்பதால் அவரின் ஒரிஜினல் இதயம் ஏக்கத்துடன் கடைசி துடிப்பை நிறுத்திக் கொண்டது
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
//சங்கரபாண்டி (அரசியல் வாதிகளுக்கெல்லாம் டிவி சீரியல் மற்றும் திரைப்படத்தில் இந்த பெயரைத்தான் வைக்கிறார்கள்//
அப்டீங்கறீங்க?
நேத்து நான் பார்த்த பழைய படத்தில் கதாநாயகன் பெயர் இது:-)
நமீதாவை இழிவுப் படுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட இந்த பதிவிற்கு என் கண்டனங்கள்..
:))
//
"இங்க ஒரு பயலும் இல்ல...எப்படி...? திட்டத்த எதிர்கட்சி எதுர்க்கலைன்னா...சமூக ஆர்வலர்கள் போராடுவாங்க...முடங்கிடும்... நானே எதிர்கிறேன்...பத்து பர்சண்ட் கமிசனை வெட்டு...கண் துடைப்பாக எதிர்கிறேன்னு...சொன்னமாதிரியே நல்லாதான்யா நடிச்சே...சினிமாகாரன் தோத்தான் போய்யா..." மறுபடியும் வெடிச்சிரிப்பாக சிரித்தார்
//
இந்த மாதிரி உண்மைகளை எல்லாம் சொல்லும்போது கடைசியா ஒரு டிஸ்கி போடனும்... "இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள்(யாருப்பா அங்க அப்ப அண்டாக்கள்ன்னு கேக்குறது..) அனைத்தும் கற்பனையே" அப்படின்னு...
:))))
//
சினிமாகாரன் தோத்தான் போய்யா...
//
அங்க இருக்குறவங்க எல்லாருமே சினிமாக்காரங்க தானே....
:)
சிந்தனைக்குறிய சிறுகதை...
வாழ்த்துக்கள்...
தலைப்பு மிகவும் பொருத்தம்...கதை நன்றாக இருக்கிறது..
//துளசி கோபால் said... அப்டீங்கறீங்க?
நேத்து நான் பார்த்த பழைய படத்தில் கதாநாயகன் பெயர் இது:-)//
அப்போ நல்ல பேருதான். கோலங்கள் தொடரில் கூட ஒரு அரசியல் வாதி அந்த பேரில் வர்றார்.
//TBCD said...
நமீதாவை இழிவுப் படுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட இந்த பதிவிற்கு என் கண்டனங்கள்..
//
என்ன சொல்றிங்க டிஸ்பி சாரி டிபிசிடி ஐய்யா...
நமீதாவுக்கு அமீதான்னு வேற பெயர் இருக்கிறதா ? உங்களுக்கு எப்படி தெரியும்?
//ஜெகதீசன் said... இந்த மாதிரி உண்மைகளை எல்லாம் சொல்லும்போது கடைசியா ஒரு டிஸ்கி போடனும்... "இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள்(யாருப்பா அங்க அப்ப அண்டாக்கள்ன்னு கேக்குறது..) அனைத்தும் கற்பனையே" அப்படின்னு...
:))))//
ஜெகா,
அடுத்த கதையில் எழுதிவிடுகிறேன், இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் அத்தனையும் கற்பனையே.
:))))
//மா.கலை அரசன் said...
சிந்தனைக்குறிய சிறுகதை...
வாழ்த்துக்கள்...
//
கலை,
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் !
//பாச மலர் said...
தலைப்பு மிகவும் பொருத்தம்...கதை நன்றாக இருக்கிறது..
//
பாச மலர்,
மிக்க மகிழ்ச்சி. திடீர் திருப்பம் இல்லாமல் இயல்பான திருப்பத்தில் சொல்ல முயன்றேன்.
உங்கள் கதையில்/உண்மையில் உள்ள கதாப்பாத்திரங்கள் யார் யார் என்று சொல்ல முடியுமா? அமைச்சர் கலிவரதன் என்று எழுதியுள்ளீர்கள். கலிவரதன் என்பவர் ஜனதா தளத்தை சேர்ந்தவர். அவர் அமைச்சராக இல்லை. உண்மையை போட்டு உடைங்களேன்.
அன்புடன் ஜோதிபாரதி
//
TBCD said...
நமீதாவை இழிவுப் படுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட இந்த பதிவிற்கு என் கண்டனங்கள்..
//
ரிப்பீட்டேய்ய்
//
கோவி.கண்ணன் said...
//TBCD said...
நமீதாவை இழிவுப் படுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட இந்த பதிவிற்கு என் கண்டனங்கள்..
//
என்ன சொல்றிங்க டிஸ்பி சாரி டிபிசிடி ஐய்யா...
நமீதாவுக்கு அமீதான்னு வேற பெயர் இருக்கிறதா ? உங்களுக்கு எப்படி தெரியும்?
//
அது எங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியும் மூனாவதா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?!?!?!!?
கருத்துரையிடுக